வியாழன், 30 மார்ச், 2017

எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களின்.–25



எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களின்.–25

எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் பிறந்தது கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்த வருடம் 1928 ஜீன் 17.

1. அன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள், கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள் லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை !.

2. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,200 படங்கள் மேல் இசை அமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட, 1951-ல் ஆரம்பித்து 1981 வரை 30 வருடங்கள் எம்.எஸ்.வி-யின் இசை ராஜ்யம்தான் !.

3. நடிக்கவும் ஆர்வம், `கண்ணகி’ படத்தில் நடிக்க ஆரம்பித்த எம்.எஸ்.வி, `காதல் மன்னன்’, `காதலா…. காதலா’ உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். நகைச்சுவையில் கொடி கட்டுவார் எம்.எஸ்.வி !.

4. இசையில் மகா பாண்டித்யம் பெற்ற எம்.எஸ்.வி. கல்விக்காக பள்ளிக்கூடம் பக்கமே கால் வைத்தது இல்லை !.

5. மெல்லிசை மன்னருக்கு கலைமாமணி, ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் கிடைத்தன. ஆனால், பேரதிர்ச்சி… தேசிய விருதோ, தமிழ்நாடு அரசு விருதோ இவருக்குக் கிடைக்கவில்லை ! (வருவான் வடிவேலன் படத்துக்காக சிறந்த இசை அமைப்பாளர் விருதை தமிழக அரசிடம் பெற்றார் என்று சாரதா சொல்கிறார்.)

6. குரு நீலகண்ட பாகவதரிடம் பயின்று கர்னாடக கச்சேரியை தனியாகச் செய்திருக்கிறார். குருவுக்குத் தட்சணை கொடுக்க இயலாமல், அவருக்குப் பணி விடை செய்து அந்தக் கடமையை நிறைவேற்றினார் !

7. இஷ்ட தெய்வம் முருகன், எந்தக் கணமும், பேச்சுக்கு நடுவிலும் உச்சரிக்கும் வார்த்தையும் `முருகா முருகா’தான் !
மிக அதிகமாக, பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி.திருலோசந்தர், கே.பாலசந்தர் என இந்த நான்கு டைரக்டர்களிடம் வேலை பார்த்திருக்கிறார், அது தமிழ் சினிமாவின் பொற்காலம் !

8. சொந்தக் குரலில் பாடுவதில் பெரும் பிரபலம் அடைந்தார் மெல்லிசை மன்னர். குறிப்பாக, உச்ச ஸ்தாயியில் பாடின பாடல்கள் பெரும் புகழ் பெற்றவை,`பாசமலர்’ படத்தில் ஆரம்பித்தது இந்தப் பாட்டுக் கச்சேரி !

9. எம்.எஸ். விஸ்வநாதன், இசையமைப்பாளர் ராமமூர்த்தியோடு இணைந்து 10 வருடங்களுக்கு மேல் கொடி கட்டிப் பறந்தார். அந்த நாட்களில் விஸ்வநாதன்–ராமமூர்த்தி இணை பெரிதாகப் பேசப்பட்டது. பிறகு, அவர்கள் பிரிந்தார்கள் !

10. மெல்லிசை மன்னர், சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்திருக்கிறார். இப்பவும் நடிகர்களுக்கு காபி,டீ கொடுத்த விவரங்களை நகைச்சுவைளோடு நண்பர்களிடம் சொல்லி மகிழ்வார் !
11. இளையராஜாவோடு சேர்ந்து, `மெல்லத் திறந்தது கதவு’, `செந்தமிழ்ப் பாட்டு’, `செந்தமிழ் செல்வன்’, என மூன்று படங்களுக்கு இசை அமைந்தார். ஒரு காலத்தில் தனக்குப் போட்டியாளராகக் கருதப்பட்ட இளையராஜாவோடு சேர்ந்து அவர் இசை அமைத்ததே, அவரது விசால மனப்பான்மைக்கு அடையாளம் !

12. புதிய பறவை’ படத்தில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக் கொண்டு `எங்கே நிம்மதி’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்தார். `பாகப்பிரிவினை’ படத்தில் `தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக்கொண்டு இசைக் கோர்ப்பு செய்தார் !

13. தன் குரு எஸ்.எம். சுப்பையா நாயுடு இருக்கும்போதே அவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி, பொற்கிழி அளித்தார். , அவரது கடைசிக் காலம் வரை தன் வீட்டிலேயே வைத்திருந்து இறுதிக் கடமைகள் செய்தார் !

14. 1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவின்போது போர் முனைக்குச் சென்ற குழுவோடு போய், கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டிக்கொண்டு காயமுற்ற படை வீரர்களுக்குப் பாடினார். உடன் ஆடிக் காட்டியவர் சந்திரபாபு !

15. தமிழ்த் தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமை எம்.எஸ்.வி-க்கு சேர்கிறது. முதலில் பிறந்த ராகம் எனக் கருதப்படும் மோகனத்தில் இயல்பாக அமைந்த பாடலாக அது சிறப்புப் பெறுகிறது !

16. உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப்படுத்திய பெருமையும் இவருக்குத்தான். எகிப்திய இசையைப் `பட்டத்து ராணி’ பாடலும், பெர்சியன் இசையை `நினைத்தேன் வந்தாய் நூறு வயது’விலும், ஜப்பான் இசையைப் `பன்சாயி காதல் பறவைகளிலும்’, லத்தீன் இசையை `யார் அந்த நிலவிலும்’, ரஷ்ய இசையைக் `கண் போன போக்கிலே கால் போகலாமா’விலும், மெக்சிகன் இசையை `முத்தமிடும் நேரமெப்போ’ பாடலிலும் கொண்டு வந்தார் !

17. `நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம் பெற்ற `முத்தான முத்தல்லவோ’ பாடல்தான் 20 நிமிஷங்களில் இவர் இசைக்கோர்ப்பு செய்த பாடல், `நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல் உருவாகத்தான் இரண்டு மாதம் ஆனது !

18. இந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்திக் காட்டியவரும் எம்.எஸ்.வி.தான். சேலத்தில் நடைபெற்ற அந்த இசை நிகழ்ச்சி அந்த நாளில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது !

19. கொஞ்ச வருடங்களுக்கு முன்பு இதய ஆபரேஷன் செய்து கொண்டார். அதற்குப் பின்பு இன்னும் இளமை திரும்பி சுறுசுறுப்பாக இருக்கிறார் !

20. பியானோ, ஹார்மோனியம், கீ-போர்டு மூன்றையும் பிரமாதமாக வாசிப்பார். சற்று ஓய்வாக இருக்கும் பொழுதுகளில் வீட்டில் பியானோவின் இசை பெருகி நிரம்பி வழியும் !

21. சினிமா இசையில் இருந்து அதிகமாக ஒதுங்கி இருந்த எம்.எல். வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் மெல்லிசை மன்னரின் இசைக்குக் கட்டுப்பட்டுப் பாடி இருக்கிறார்கள் !

22. வி. குமார், இளையராஜா, ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி இருக்கிறார். எம்எஸ்வி, தன் இசையறிவை பெரிதாக நினைத்துக் கொள்ளாத பெரும் மனப்போக்கினால் நிகழ்ந்தது இது !

23. `அத்தான்….. என்னத்தான்….’ பாடலைக் கேட்டுவிட்டு, இந்த மாதிரி பாடலைப் பாட வாய்ப்பு கிடைத்தால், சென்னையிலேயே வந்து தங்கிவிடுவேன்’ என்று ஒரு முறை மேடையில் லதா மங்கேஷ்கர் சொன்னார். கைதட்டலில் அதிர்ந்தது அரங்கம் !

24. எம்எஸ்வி இசையமைத்த மொத்தப்படங்களின் எண்ணிக்கை 518. இவற்றுள் ராமமூர்த்தியுடன் சேர்ந்து இசையமைத்த படங்கள் 88, இளையராஜாவுடன் சேர்ந்து இசையமைத்தவை 4 , தனித்து இசையமைத்த படங்கள் 426.

25. சங்கர் கணேஷ், இளையராஜா, ஜி.கே.வெங்கடேஷ், ஆர்.கோவர்த்தனம், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இவருடைய உதவியாளர்களாகப் பணியாற்றியவர்களே.
வருவான் வடிவேலன் படத்துக்கு இசையமைத்ததற்காக தமிழக அரசு இவருக்கு (1978-க்கான சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கி விட்டது ).

திங்கள், 27 மார்ச், 2017

“அடியுங்கள் அவன் மூஞ்சியில் .... குத்துங்கள் அவன் முகத்தில்..”




“அடியுங்கள் அவன் மூஞ்சியில் .... குத்துங்கள் அவன் முகத்தில்..”

இப்படிச்  சொன்னது எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் அப்பா..!
 அவர் அடிக்கச் சொன்னது ... தன் மகன்  எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தைத்தான் ...!
ஏன் இப்படிச் சொன்னார்..?
.
சுமார் 36 ஆண்டுகளுக்கு முந்தைய பிளாஷ்பேக் இது...!
.
# ஒரு நாள்...இயக்குனர் கே.விஸ்வநாத்தும் ,இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனும் எஸ்.பி.பி.யின் வீட்டுக்குப் போய் , எஸ்.பி.பி.யின் அப்பாவிடம் “சங்கராபரணம்” கதையை சொல்லி இருக்கிறார்கள் ...
அப்புறம்...?

எஸ்.பி.பி.யே சொல்கிறார் :
“கதையைக் கேட்டு விட்டு இம்ப்ரஸ்ஸாகிவிட்ட எனது தந்தை, ‘முதல்ல உங்க படத்துக்கான பாடல்களை பாடிவிட்டு, பிறகு இவனை வேறு பாடல் பதிவுக்கு போகச் சொல்லுங்கள்..’ என்றார்.

‘இந்தப் படத்துல இவன் ஒழுங்கா பாடலைன்னு சொன்னா, இவன் கன்னத்தில் அறைந்து பாட வையுங்கள். கேட்கவில்லை என்றால் மூஞ்சியில் குத்தி பாட வையுங்கள்..இப்படி ஒரு வாய்ப்பு இவனுக்கு கிடைக்குமா..?’ என்றார் என் அப்பா.”
.
# அப்பா இப்படிச் சொல்லி விட்டாரே என்று வருத்தப்பட்டார் எஸ்.பி.பி. !

ஆனால்....முகத்தில் அடித்தாலும் சரி..., மூஞ்சியில் குத்தினாலும் சரி...
நான் பாட மாட்டேன் என்று உறுதியாக சொல்லி விட்டார் ...!
.
ஒரு நாளைக்கு நான்கு , ஐந்து ரிக்கார்டிங்குகள் என்று பிஸியாக , பிரபலமாக இருந்த எஸ்.பி.பி. சங்கராபரணத்தை மறுக்க காரணம் :
“எனக்கு சாஸ்திரிய சங்கீதம் தெரியாது. அந்தப் பயிற்சி எடுக்காதவன் நான். எனவே என்னால் பாட முடியாது.. தயவு செய்து விட்ருங்க”
.
விடவில்லை இயக்குனரும் , இசையமைப்பாளரும்...!
திரும்ப திரும்ப வற்புறுத்தி "சங்கராபரணம்" பாடல்களை எஸ்.பி.பியை பாட வைத்து விட்டார்கள்..!
அப்புறம் என்ன..?
.
1979 இல் வெளிவந்த சங்கராபரணம் சரித்திர வெற்றி படைக்க ..எங்கெங்கும் ஒலித்தது எஸ் பி பாலசுப்பிரமண்யம் குரல்..!

“தொரகு நா இதுவன்ட்டி சேவா.”....                                 ” மானசசஞ்சரரே..” ..
” ராகம் தானம் பல்லவி”.....
இப்படி எல்லா திசைகளிலும் எஸ்.பி.பி.குரல்தான் ஒலித்தது..!
.
ஒரே நாளில் உலக அளவில் பிரபலமானார் எஸ்.பி.பி...!
.
# “அடியுங்கள் அவன் மூஞ்சியில்” என்று அன்று சொன்ன எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் அப்பா ,
இப்போது தன் மகனை கட்டி அணைத்து  முத்தமிட கண்டிப்பாக ஆசைப்பட்டிருப்பார்..!
.
ஆனால் ..எஸ்.பி.பி.மட்டும் அல்ல...எந்த மகனும் அறிய மாட்டார்கள்
தந்தையின் ஆழ்மன அன்பையும்..பாசத்தையும்....!
.
# இதைப் படிக்கும்போது நண்பர் ஒருவரின் பதிவு நினைவுக்கு வந்தது :

“உறங்கும் குழந்தை அறியாது
கண்டிப்பான அப்பா கொடுக்கும்
ரகசிய முத்தம்!”

வியாழன், 23 மார்ச், 2017

தயாரிப்பாளர்களுக்கு இளையராஜா வாங்கிக் கொடுத்த 28 லட்சம்!!!



தயாரிப்பாளர்களுக்கு இளையராஜா வாங்கிக் கொடுத்த 28 லட்சம்!!!

இசையமைப்பாளர் இளையராஜா, பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இடையேயான பிரச்சனை கடந்த சில நாட்களாகவே திரையுலகில்  மட்டுமல்லாது, ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. இளையராஜா, தன் பாடல்களைப் பாடக் கூடாது என எஸ்பிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தியது.திரையுலகத்தில் உள்ள சில இயக்குனர்களே கூட இளையராஜாவை விமர்சித்துப் பேசியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பணம் போட்ட தயாரிப்பாளர்களுக்குத்தான் பாடல்களுக்கான ராயல்டி போக வேண்டும் என்று காப்புரிமை சட்டம் பற்றிய புரிதல் இல்லாமல் பேசினார்கள். அதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் முகப்புத்தகத்தில் அதையே எழுதி வந்தார்கள். ஆனால், இளையராஜா தயாரிப்பாளர்களுக்காக முன்னெடுத்துச் சென்ற பல விஷயங்களை அவர்கள் மறந்து போய் பேசினார்கள்.2015ம் ஆண்டு தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என்று இளையராஜா அறிவித்தபின், தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் அவர் பேசினார். அப்போது தனக்குச் சேர வேண்டிய ராயல்டி தொகை மட்டும் சுமார் 100 கோடி இருப்பதாகவும், அவை வசூலானால் அதில் பாதித் தொகையான 50 கோடி ரூபாயை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு கொடுப்பதாகவும் கூறினார். அதைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கமும் அவருடன் சேர்ந்து நடவடிக்கைகளில் இறங்கியது. ஆறு மாதங்களுக்கு முன்பு அப்படிக் கிடைத்த ராயல்டி தொகையான சுமார் 28 லட்ச ரூபாயை இளையராஜா தயாரிப்பளார்களுக்கு அளித்துள்ளார். இது பற்றிய விவரத்தை தற்போதைய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நேற்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் ராதாகிருஷ்ணன் அணிக்கு ஆதரவு தெரிவித்து நடந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.“70 ஆண்டு கால திரையுலக வரலாற்றிலே எம்எஸ்வி, கேவி மகாதேவன், இளையராஜா ஆகியோரின் லட்சக்கணக்கான பாடல்களை விற்பனை செய்து வந்த எச்எம்வி நிறுவனத்தின் மீது நாங்கள் வழக்கு போட்டிருக்கிறோம். அதே போல 'எக்கோ' சுப்பிரமணியத்தின் மீதும் வழக்குத் தொடுத்துள்ளோம். தயாரிப்பாளர்களுக்குச் சேர வேண்டிய பங்குத் தொகை 50 சதவீதம் என இளையராஜா சார் அறிவிப்பு செய்து, வழக்குத் தொடர்ந்ததற்கான நீதிமன்றக் கட்டணத்தையும் கூட அவர் சொந்தப் பணத்திலேயே செலுத்தியிருக்கிறார். அந்த வழக்கில் நாங்கள் வெற்றி பெறுவோம், இளையராஜாவும் வெற்றி பெறுவார். அப்படி வெற்றி பெறும் போது அவர் சொன்னபடி சங்கத்துக்கு 50 கோடி தருவார். அது எந்தெந்தத் தயாரிப்பாளர்களுக்குப் போய்ச் சேர வேண்டுமோ, போய்ச் சேரும். ஆறு மாதங்களுக்கு முன்பு கூட 28 லட்ச ரூபாய் இளையராஜா மூலமாக வசூல் செய்து அதைத் தயாரிப்பாளர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தோம்,” என்றார் தற்போதைய தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் கலைப்புலி எஸ்.தாணு. தயாரிப்பாளர்களுக்காகப் பாதித் தொகை தருவேன் என்று அறிவித்து, அதையும் பெற்றுத் தந்து, தொடர்ந்து ராயல்டி தொகைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் இளையராஜாவின் முயற்சிகளைப் புரிந்து கொள்ளாமல் சிலர் தவறாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என தயாரிப்பாளர்கள் தரப்பிலும் தெரிவிக்கிறார்கள்.எஸ்.பி. பாலசுப்ரமணியம், இளையராஜா அனுப்பிய நோட்டீஸை முகப்புத்தகத்தில் போட்டது தவறு. அதே சமயம், அந்தப் பதிவில், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம், ராயல்டி தொகை வாங்கித் தருகிறேன் எனச் சொல்லி, அதை வாங்கிக் கொடுத்தால் சம்பந்தப்பட்டத் தயாரிப்பாளர்களுக்கும் அதன் மூலம் குறிப்பிட்டத் தொகை கிடைத்திருக்கும்.தயாரிப்பாளர் சங்கமே இளையராஜாவைப் பற்றியும் அவருடைய முயற்சிகளையும் அறிவித்துள்ள நிலையில், அவர் மீது தேவையில்லாத விமர்சனங்களை மற்றவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என இளையராஜா ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

புதன், 22 மார்ச், 2017

இளையராஜா அன்று வைரமுத்துவுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினாராம் அதற்கு வைரமுத்துவின் பதில்.



இளையராஜா அன்று வைரமுத்துவுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினாராம் அதற்கு வைரமுத்துவின் பதில்.

இசை ஞானியே!

என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.

என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!

உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.

கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.

மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன் நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.

திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்.

மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்.

பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்.

நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான்.

ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.

பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன் தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஆர்மோனியமாகவே நேசிக்கிறேன்.

நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம்.

என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய்.

உன்னை நானும் பார்க்கிறேன்.

தூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது.

வார்த்தை துடிக்கிறது;

வைராக்கியம் தடுக்கிறது;

வந்துவிட்டேன்.

அன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை.

உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்.

ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்.

இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்.

என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.

நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.

ஒரு கணம் திகைத்தேன்.

வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.

பிறகு நிதானமாய் சிந்தித்தேன்.

நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன.

சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்.

நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்.

உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை நினைத்தேன்.

‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.

அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது.

---

எனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது.

இருக்காதே என்று நினைக்கிறேன்.

பிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன்.

உன் அறிக்கைதான்.

ஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தேதான்.

படித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன்.

உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்!

உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்!

காரணமே இல்லையே.

இது இருதயத்திற்கு ஆகாதே.

---

நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்.

ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.

இப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய்.

---

நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!

இப்போது சொல்கிறேன்.

உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.

ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.

---

உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள்.

உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்.

நான் கொதித்தேன்.

"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச் சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.

மறுகணம் யோசித்து, வார்த்தைகளில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, "போங்கள்" என்றேன்.

நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை.

இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.

---

நீயும் நானும் சேர வேண்டுமாம்.

சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.

உனக்கு ஞாபகமிருக்கிறதா?

‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.

மழை வந்தது.

நின்று விட்டேன்.

என்னை நீ பிடித்து விட்டாய்.

அப்போது சேர்ந்து விட்டோம்.

ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.

இப்போது முடியுமா?

இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?

புதன், 15 மார்ச், 2017

விஐய் நடித்த திரைப்படங்கள்...



Vijay Movies

1992 - Naaliya theerpu {1}
1993 - Senthoora Paandi {2}
1994 - Rasigan {3}
1995 - Rajavin parvaiyile {4}
1995 - Deva {5}
1995 - Vishnu {6}
1995 - Chandralekha {7}
1996 - Coimbatore mapulai {8}
1996 - Poove unakaga {9}
1996 - Vasantha vasal {10}
1996 - Maanbumigu manavan {11}
1996 - Selva {12}
1997 - Kaalemellam kaathuiruppen {13}
1997 - Love today {14}
1997 - Once more {15}
1997 - Nerrukku Ner {16}
1997 - kadhalukku mariyadhai {17}
1997 - Ninaithen vandhai {18}
1998 - Priyamudan {19}
1998 - Nilaave Vaa {20}
1999 - Thulladha manamum thullum {21}
1999 - Endrendrum Kadhal {22}
1999 - Nenjinile {23}
1999 - Minsara kanna {24}
2000 - Kannukul nilavu {25}
2000 - Kushi {26}
2000 - Priyamaanavale {27}
2001 - Friends {28}
2001 - Badri {29}
2001 - Shajahan {30}
2002 - Thamizhan {31}
2002 - Youth {32}
2002 - Bhagavathi {33}
2003 - Vaseegara {34}
2003 - Puthuiya Geethai {35}
2003 - Thirumalai {36}
2004 - Udhaya {37}
2004 - Gilli {38}
2004 - Madhurai {39}
2005 - Thirupaachi {40}
2005 - Sachien {41}
2005 - Sukran {42}
2005 - Sivagasi {43}
2006 - Aadhi {44}
2007 - Pokkiri {45}
2007 - Azhagiya Tamil magan {46}
2008 - Kuruvi {47}
2009 - Villu {48}
2009 - Vettaikaaran {49}
2010 - Sura {50}
2011 - Kaavalan {51}
2011 - Velayudham {52}
2012 - Nanban {53}
2012 - Thuppakki {54}
2013 - Thalaiva {55}
2014 - Jilla {56}
2014 - kaththi{57}
2015- puli{58}
2016-THERI{59}
2017-Bhairava{60}
            

திங்கள், 13 மார்ச், 2017

தனது படத்தில் நடிக்க வந்த நடிகைகளை திருமணம் பண்ணிய இயக்குநர்கள்!

தனது படத்தில் நடிக்க வந்த நடிகைகளை திருமணம் பண்ணிய இயக்குநர்கள்!

நடிகர்களும், நடிகைகளும் ஒன்றாக ஊர் சுற்றுவது, திருமணம் செய்து கொள்வது என்பது ஆச்சரியப்படத்தக்க விஷயம் இல்லை. இதற்கு அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பல படங்களை நடிப்பது காரணமாக இருக்கும். ஆனால் நடிகைகளும், இயக்குநர்களும் திருமணம் செய்து கொண்டால், பலருக்கும் எப்படி, எப்போதிருந்து என பல கேள்விகள் எழும். இப்படி நடிகைகளும், இயக்குநர்களும் ஜோடியானவர்கள் பல.

அதில் பலருக்கு தெரிந்தது பாக்யராஜ்-பூர்ணிமா, குஷ்பு-சுந்தர்.சி, அமலா பால்-விஜய், சீதா-பார்த்திபன், தேவயாணி-ராஜகுமரன் போன்றோர் தான். ஆனால் இன்னும் பலர் உள்ளனர். இங்கு அப்படி தன் படத்தில் நடித்த நடிகைகளை திருமணம் செய்து கொண்ட இயக்குநர்களை தற்போது காணலாம்.

....