புதன், 29 நவம்பர், 2017

கலைவாணரின் மனிதநேயத்தை போற்றி வளர்த்த மதுரம் எனும் மங்கை



!! மாமனிதர் கலைவாணர் !!

NSK பிறந்த நாள் நவம்பர் 29.

*கலைவாணரின் மனிதநேயத்தை போற்றி வளர்த்த மதுரம் எனும் மங்கை*

விதிப்பயனால் சத்தியவான் இறந்து விடுவான் என்று தெரிந்தும் அவனை மணக்க முடிவெடுத்தவள் புராண காலத்து சாவித்திரி. விதியின்படி அந்த நாளில் பாம்பு தீண்ட பரிதாபமாக இறந்தான் சத்தியவான். விதியை நொந்து  சும்மா இருந்தவிடாமல் எமலோகம்வரை சென்று தன் கணவனின் உயிரை மீட்டதாக நீள்கிறது சத்தியவான்- சாவித்திரி கதை.

நவீன காலத்திலும் சாவித்திரி போன்று துாக்குக்கயிற்றில் தொங்க விருந்த தன் கணவனின் உயிரை லண்டன் பிரிவியு கவுன்சில் வரை சென்று மீட்டார் ஒரு நவீன சாவித்திரி.

40 களில் நிஜமாய் நிகழ்ந்த இந்த கதையின் நாயகி டி.ஏ .மதுரம். கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணனின் துணைவியார். இன்று அவரது நினைவு நாள்...

எல்லா ஆண்களின் வெற்றிகளுக்குப்பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பார்கள். அப்படி கலைவாணர் என்ற கலைமேதை பெற்ற வெற்றிகளுக்கெல்லாம் திரையிலும் நிஜத்திலும் பின்னால் இருந்தவர் டி.ஏ மதுரம்...

இறக்கும் தருவாயிலும் மகளின் திருமணத்திற்கு  உதவி கேட்டுவந்த பெரியவருக்கு தன் படுக்கையில் இருந்த வெள்ளி கூஜாவை கொடுத்த வள்ளல் கலைவாணர்.. சம்பாதித்ததையெல்லாம் மக்களுக்கு கொடுத்து வாழ்ந்த அந்த கலைமேதைக்கு எல்லாமுமமாக இருந்தவர் டி.ஏ மதுரம்...

திருவரங்கத்தை சொந்த ஊரான கொண்ட டி.ஏ மதுரம் சினிமாவிற்கு ரத்னாவளி திரைப்படம் மூலம் அறிமுகமானார். ரத்னாவளி திரைப்படத்தில் அவரது காஞ்சனமாலை என்ற அவரது கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்ததால் பிரபல இயக்குனர் ராஜா சாண்டோ, தான் அடுத்து இயக்கவிருந்த படத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்தார். அவருக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் கலைவாணர் என்று பின்னாளில் புகழ்பெற்ற என்.எஸ் கிருஷ்ணன்...


திருச்சியில் நாடகம் நடத்தச் சென்றிருந்த என்.எஸ்.கிருஷ்ணனுக்கு தனக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகையான டி.ஏ.மதுரத்தின் வீடு அங்கு இருப்பதாக தகவல் போனது. அவரை சந்திக்க விரும்பினார் கிருஷ்ணன்.
அது தான் என்.எஸ்.கிருஷ்ணன்- மதுரம் ஜோடியின் முதல் சந்திப்பு.

முதல் சந்திப்பிலேயே என்.எஸ்.கிருஷ்ணனின் துடுக்கான பேச்சும் செயலும் ஏனோ மதுரம் குடும்பத்திற்கு கிருஷ்ணன் மீது வெறுப்பை தந்தது. அவருடன் மதுரம் நடிக்க அவர்கள் விரும்பவில்லை. மதுரத்தின் நிலையும் அது தான். இருப்பினும் முன்தொகை பெற்றுக்கொண்டதால் வேறுவழியின்றி படப்பிடிப்புக்குழுவுடன் புனே புறப்பட்டார் மதுரம்.. எதிர்பாராதவை நடந்தேறுவது தான் வாழ்வின் சுவாரஷ்யம். ஆம் எரிச்சலுடன் புனே பயணமான மதுரம் திரும்பிவரும்போது திருமதி என்.எஸ். கிருஷ்ணனாக திரும்பிவந்தார்..

மோதல் காதலில் முடிய காரணம் புனே ரயில் பயணம். ஆம் படப்பிடிப்பிற்காக புனே செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்த கலைஞர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களின் வழிச்செலவுக்கு பணம் தரவேண்டிய தயாரிப்பு நிர்வாகி ரயில் புறப்படும்வரை வரவில்லை. ரயில் புறப்பட்டது. எல்லோரும் பதை பதைக்க கிருஷ்ணன் மட்டும் சாவகாசமாக இருந்தார்...

முதல் நாள் பயணத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் சக நடிகர்களுக்கு தன் சொந்த செலவில்  எந்த குறையுமின்றி பார்த்துக்கொண்டார். இரண்டாம் நாள் பயணத்திற்கு போதிய பணம் இல்லை. மதுரத்திடம் வந்து நின்றார் உதவி கேட்டு..

வெறுப்பாக தம்மிடம் இருந்த பணத்தை தந்தாலும் பின்னர் மதுரம் யோசனையில் ஆழ்ந்தார். 'தயாரிப்பு நிர்வாகியின் மீது கோபம் கொண்டு பயணத்தை ரத்து செய்யவுமில்லை. அதே சமயம் பணம் இல்லையென்று தமக்கு மட்டும் வழி செய்து கொண்டு ஒதுங்கி விடவில்லை...

அனைவருக்கும் ஒரு குறையுமின்றி பார்த்துக்கொண்ட
'கலைவாணரின் குணம் ஆச்சர்யத்தை தந்தது அவருக்கு. படத்தின் தயாரிப்பாளருக்கு கூட இல்லாத அக்கறை ஒரு சாதாரண நடிகரான இவருக்கு மட்டும் ஏன் என தன் மனதை போட்டு குடைந்து கொண்டிருந்தார். அதற்கு புனேவில் விடை கிடைத்து..

புனேவை அடைந்த பின் மீண்டும் உதவிக்காக மதுரம் இருந்த அறைக்கதவை தட்டினார் என்.எஸ்.கிருஷ்ணன்..

எரிச்சலான மதுரத்திடம் மெதுவான குரலில் சொன்னார் என்.எஸ்.கிருஷ்ணன், ”இத பாரு மதுரம், நாம சாதாரண நாடக நடிகருங்க... ஏதோ தவறுனால கடைசி நிமிடத்துல தயாரிப்பு நிர்வாகி பணம் கொடுக்க தவறிட்டாங்க...

எப்படியும் கிடைக்கப்போகுது. அதுக்காக பழிவாங்க நினைச்சு நம்ம எதிர்காலத்தையும் கெடுத்துக்க கூடாது.. வந்திருக்கிற பலபேரு இனிமே தான் சினிமா வாழ்க்கையை துவக்கப் போகிறவங்க... சின்ன கோபத்துல அவங்க எதிர்காலத்தை பாழாக்கிடக்கூடாது. அவங்க யார்ட்டயும் துளி காசும் கிடையாது...

பெரும் தொகை போட்டு படம் எடுக்கிற தயாரிப்பாளருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடாது.. அதனால நம்ம செலவுகளை ரெண்டு நாளைக்கு நாம பார்த்துக்கிட்டா பின்னாடி அது நமக்கு கிடைச்சிடப் போகுது. இருக்கிற நாம இல்லாதவங்களுக்கு கொடுக்கறது தான் இந்த நேரத்துல முக்கியம்” என்றார். நெகிழ்ந்து போனார் மதுரம்...

'இப்படி ஒரு குணமுள்ள ஆளா' என அடுத்த நொடி தன்னிடம் இருந்த நகைகளையெல்லாம் கழற்றி கொடுத்தார் என்.எஸ்.கிருஷ்ணன்...

என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் நகைகளை கழற்றிக்கொடுத்த மதுரத்தின் மீது ஒரு அன்பு பிறந்திருந்தது.. இரண்டொரு நாளில் என்.எஸ்.கிருஷ்ணன் துாதராக மதுரம் இருந்த அறையின் கதவை தட்டினார் ஒரு நடிகர்..

'கிருஷ்ணன் உங்களை மணக்க விரும்புகிறார்' என்றார். தீவிர சிந்தனைக்குப் பின் தலையாட்டினார் மதுரம். படம் முடிந்த தருவாயில் இயக்குனர் ராஜா சாண்டோவின் தலைமையில் புனேவிலேயே மதுரம் கழுத்தில் தாலி கட்டினார் என்.எஸ்.கிருஷ்ணன்...

கலைவாணரும் மதுரம் அம்மையாரும் இணைந்து நடித்த முதல் படமாக வசந்தசேனா வெளி வந்தது. 1936 ல் வெளியான இந்த திரைப்படத்திலிருந்து சுமார் 1957 வரை 120 படங்கள் என்.எஸ் கிருஷ்ணன்  மதுரம் ஜோடி திரையுலகில் நகைச்சுவையில் கொடி கட்டிப் பறந்தது...

உலகத் திரைப்பட வரலாற்றில் கூட இல்லாத அளவுக்கு ஆண்- பெண் என நகைச்சுவையில் கொடி கட்டிப்பறந்த முதல் ஜோடி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்- டி.ஏ மதுரம் ஜோடி தான்...

தியாகராஜ பாகவதர் நடித்த வெற்றிப்படமான அம்பிகாபதியின் வெற்றிக்குப்பின் கலைவாணர் மதுரம் ஜோடியின் திரையுலகின் உச்சியைத்தொட்டனர். வெறும் திரைப்பட நடிகையாக மட்டுமே இல்லாமல் பாடல் நடனம் இசை ஞானம் என பன்முகத் திறமை கொண்டவர் மதுரம் அம்மையார்..

திரையுலகில் இணைந்து நடித்து திரைப்படங்களின் வெற்றிக்கு காரணமானது போலவே, தனிப்பட்ட வாழ்விலும் தன் கணவரின் வள்ளல் குணத்திற்கு ஒத்துழைப்பு தந்து அவரது புகழ்வாழ்விற்கு காரணமாக விளங்கினார் மதுரம் அம்மையார்.

தி.நகர் வெங்கட்ராரமையர் வீடும் ராயப்பேட்டை இல்லமும் ஏழை எளியவர்கள், திரையுலக பிரபலங்கள் என அப்போது எந்நேரமும் பசியாற்றிக்கொண்டிருக்க காரணம் மதுரம். இருவரும் இணைந்து ஈட்டிய சம்பாத்தியங்கள் கணவரால் வள்ளல் குணத்தால் அள்ளிக்கொடுக்கப்பட்டபோதெல்லாம் எந்த மறுப்புமின்றி தானும் அதை பின்பற்றிய பெருந்தகை மதுரம்..

 கலைவாணர் மதுரம் தம்பதி கலையுலகில் பாராட்டும்படியான வாழ்வு வாழ்ந்தனர். ஒருவருக்கொருவர் அபரிதமானஅன்பு கொண்டிருந்தனர்.  அந்த அன்பை தெரியப்படுத்த ஒரு மோசமான சம்பவம் நடந்தது அவரது வாழ்வில்.

1944 ல் கலைவாணர் வாழ்வில் சோதனையான ஆண்டாக அமைந்த போது அதை மதுரம் எதிர்கொண்ட விதம் அவரது தன்னம்பிக்கை மற்றும் கலைவாணர் மீதான பெரும் அன்பை வெளிப்படுத்தியது. எதிர்பாராதவிதமாக அந்த ஆண்டு கலைவாணர், தமிழ்த்திரையுலகின் சூப்பர்ஸ்டார் தியாகராஜபாகவதர் மற்றும் பக்ஷிராஜா ஸ்டுடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். தமிழ்த்திரையுலகம் அதிர்ச்சியில் உறைந்தது...

அக்காலத்தில் திரையுலக பிரபலங்களை இந்துநேசன் என்ற தம் பத்திரிக்கையில் பரபரப்பாக எழுதியவர் லட்சுமி காந்தன்...

அதில் அவருக்கு வருமானம் கிடைத்துக்கொண்டிருந்தது. எந்த பிரபலங்களும் லட்சுமிகாந்தன் பேனா முனையிலிருந்து தப்பவில்லை..

இந்நிலையில் சென்னை வேப்பேரியில் நடுத்தெருவில் கத்தியில் குத்தப்பட்ட லட்சுமிகாந்தன் அடுத்த 2 தினங்களில் மரணமடைந்தார். கொலை முயற்சி, கொலை வழக்கானது. இந்த வழக்கில்தான் மேற்சொன்ன 3 பிரபலங்களும் சதி செய்ததாக கைதானார்கள்.

ஸ்ரீராமுலு நாயுடு வழக்கின் ஆரம்ப நிலையிலேயே போதிய ஆதாரங்களுடன் விடுவிப்பு மனு போட்டு வழக்கலிருந்து விடுபட்டார். ஆனால் தியாகராஜபாகவதர் மற்றும் கலைவாணர் இருவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டன.. பரபரப்பாக நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு 1945 ஆம் ஆண்டு மே மாதம் 3 ந்தேதி வெளியானது..

தியாகராஜபாகவதர் மற்றும் கலைவாணர் இருவரையும் குற்றவாளிகள் என சொன்ன சென்னை செசன்ஸ் நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியது...

கலையுலகம் கலங்கி நின்றது.  பெரியார், அண்ணா உள்ளிட்ட பல்துறை பிரபலங்களும் கலைவாணரை மீட்க வழி தெரியாமல் திகைத்து நின்றனர். அடுத்த சில நாட்களில் போடப்பட்ட அப்பீல் மனுவும் தள்ளுபடி ஆக நம்பிக்கை இழந்து நின்றது கலைவாணர் குடும்பம்..

அவ்வளவு தான் இருவரது வாழ்வும் என பேசப்பட்ட நிலையில் மதுரம் அம்மையார் சோர்ந்து விடவில்லை..

கணவனை மீட்டே தீருவது என முடிவெடுத்தார். கலைவாணர் மேல் பற்றுக்கொண்ட அனைவரையும் சந்தித்து ஆதரவு கோரினார். ஒற்றைப் பெண்மணியாய் சட்டப்போராட்டம் நடத்த தயாரானார்..

24 மணி நேரமும் கணவனை மீட்கும் முயற்சியிலேயே அந்த நாட்களை கழித்தார். கணவரை மீட்கும் முயற்சியில் தன் சொத்துக்களை இழக்கவும் உறுதியாக இருந்தார். வழக்கு லண்டன் பிரிவியு கவுன்சிலுக்கு அப்பீல் மறுவிசாரணைக்கு சென்றது. கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு விபரங்களில் உள்ள முரண்பாடுகள் பிரிவியு கவுன்சில் முன்பு எடுத்து வைக்கப்பட்டன..

நீதிபதிகளின் சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்பட்டன. 1947 ஏப்ரல் 25 ந்தேதி லண்டன் பிரிவியு கவுன்சில் முந்தைய தீர்ப்பை ரத்து செய்து பாகவதர் கலைவாணர் இருவரையும் விடுதலை செய்தது. திரையுலகம் விழாக்கோலம் கண்டது..

விடுதலையான கலைவாணருக்கு சென்னை கடற்கரையில் வரவேற்பு கூட்டம் நடந்தது.. கூட்டத்திற்கு தலைமை தாங்கிப்பேசிய அறிஞர் அண்ணா, “ கலைவாணரை வரவேற்கும் கூட்டம் என்றாலும் உண்மையில் தன் கணவரை மீட்க கடைசி வரை கண்துஞ்சாது போராடிய மதுரம் அம்மையாரை பாராட்டும் கூட்டம்தான் இது. கலைவாணர் சிறை மீண்டதில் மதுரம் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்” என்று புகழ்ந்துரைத்தார்...

உண்மை தான்... கலைவாணர் சிறை சென்ற நாளிலிருந்து மதுரம் அடைந்த துயரங்கள் அத்தகையது. எடுத்த முயற்சிகள் அளப்பரியது. கலைவாணர் சிறையிலிருந்த போது கலைவாணரின் விட்டுச்சென்ற நாடக பணிகளையும் அவர் கைவிடாமல் செயல்படச்செய்தார். சிறையில் இருந்து மீண்ட கலைவாணர் மீண்டும் திரைப்படங்களில் தலைகாட்டத்துவங்கினார்.

கலைவாணரின் சிறை மீட்பு முயற்சிக்கு நிதி சேர்க்க பைத்தியக்காரன் என்றொரு படத்தை தயாரித்தார். இதில் எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ( சிறையில் இருந்து வந்த பின் கலைவாணரும் நடித்து சில காட்சிகள் இதில் சேர்க்கப்பட்டன.)
கலைவாணர் மதுரம் தம்பதிக்கு 1944 ல் ஒரு பெண் குழந்தை பிறந்து சில மாதங்களில் இறந்தது..

குழந்தையில்லாத குறையில் முடங்கி விடாமல் கலைவாணருக்கு மற்ற மனைவிகளின் மூலம் பிறந்த குழந்தைகளை தம் பிள்ளைகள் போல கண்ணும் கருத்துமாக வளர்த்தார் மதுரம். அண்ணாவின் கதை வசனத்தில் நல்லதம்பி என்ற படத்தை தயாரிக்க கலைவாணர் முன்வந்த போது  ஒரு சுவாரஷ்யம் நிகழ்ந்தது. கலைவாணர் மனைவி மதுரம் மீது கொண்ட அன்பிற்கு இந்த சம்பவம் உதாரணம்...

புரட்சிகரமான எழுத்தாளரான விளங்கிய அண்ணாவின் கதை வசனத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் ஒரு படம் தயாரித்தார் கலைவாணர். படத்தின் கதை முற்போக்குத்தனமானது.

பிற்போக்குத்தனங்களை உடைத்தெறியும் வகையில் எழுதப்பட்டடிருந்தது. கதையில் நாயகன் புரட்சிகளை செய்யும் வாலிபன் என்பதால் அக்கதாபாத்திரத்தில் நடித்த கதாபாத்திரத்திற்கு ஜோடியாக  புதுமுகம் போடலாம் என இயக்குனர்கள் தெரிவித்தனர். அதைக்கேட்ட மதுரம் மற்றும் கலைவாணரின் முகம் இருண்டு விட்டது. குறிப்பாக கலைவாணர் முகம் வாடியது. இந்த கதை தங்களை பிரிப்பதாக அவர்கள் கருதினர்..

கலைவாணரின் வாடிய முகத்தை கண்ட அண்ணா கதையில் ஒரு கிளைக்கதையை அவர்களுக்காகவே உருவாக்கினார்.

கதாநாயகி ஜமீன்தாரான கதாநாயனை விரும்புகிறாள். ஆனால் கதாநாயகன் அவளை விரும்பாமல் ஜமீன்தார் அலுவலகத்தில் பணியாற்றும் சாதாரண ஏழையை விரும்புகிறான். அந்த ஏழை வேறு யாருமல்ல; டி.ஏ மதுரம்! கலைவாணர் மதுரம் மீது கொண்ட அன்புக்கு இது சான்று.

பின்னாளில் தன் மனைவி மீது கொண்ட அன்புக்கு அடையாளமாக தான் பிறந்த ஊரான நாகர்கோவிலில் மதுரபவனம் என்ற பெரிய அரண்மனை போன்ற வீட்டை கட்டினார்...

பின்னாளில் கலைவாணர் ஈட்டிய சொத்துக்கள் அவரது வள்ளல்குணத்தால் கரைந்தபோதிலும் மதுரம் அம்மையார் அதை தடுத்ததில்லை. கணவரின் குன்றாத புகழுக்கு அவர் இறுதிவரை துணையிருந்தார்.

திரையுலகில் கலைவாணர் மீது பற்றுக்கொண்ட அத்தனை பிரபலங்களும் மதுரம் மீதும் அதே அன்பை செலுத்தியவர்கள். 1959 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவினால் சென்னை பொது மருத்துவமனையில் உயிர் நீத்தார் கலைவாணர்...

கலைவாணரின் காலத்திற்குப் பின் வெளியுலகிலிருந்து தன்னை முடக்கிக்கொண்டு பிள்ளைகளை வளரப்பதில் காலத்தை செலவிட்டார் மதுரம். கலைவாணரின் பிள்ளைகள் இன்று கடல் கடந்தும் சிறப்புடன் வாழ மதுரம் அம்மையார் முக்கிய காரணம்...

கலைவாணரின் புகழைப்போற்றி வளர்த்த மதுரம் அம்மையார் 1974 ஆம் ஆண்டு மே 23 ந்தேதி மறைந்தார். கலைவாணரின் புகழ் பேசப்படுகிறவரை மதுரம் அம்மையாரின் புகழும் நிலைத்திருக்கும்...

80 s நடிகர்,நடிகைகளின் சந்திப்பு 2017

80 s நடிகர்,நடிகைகளின் சந்திப்பு 2017





வியாழன், 16 நவம்பர், 2017

தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள்!

தமிழ் சினிமா வீணாக்கிய அழகிகள்!



தமிழ் சினிமாவுல எத்தனையோ நடிகைங்க வந்து போறாங்க, சிலபேருதான் 3- 4 வருசமாவது தாக்குபிடிக்கிறாங்க. அதுலயும் சிலபேருதான் டாப்புக்கு வர்ராங்க. அம்பிகா, ராதா, ரூபினி, கவுதமி, குஷ்பூ, சுகன்யா, மீனா, சிம்ரன், ஜோதிகா இவங்கள்லாம் (எவளையாவது விட்டிருந்தேன்னா எடுத்துக்கொடுங்கப்பா), வெவ்வேறு காலகட்டங்கள்ல டாப்ல இருந்தாங்க. நெறையப்பேரு டாப்புக்கே வரலன்னாக்கூட சொல்லிக்கிறபடியா நிறையப் படங்கள் நடிச்சாங்க. ஆன்ன நம்ம தமிழ் சினிமா வரலாறப் பார்த்தா (வரலாறு முக்கியம் அமைச்சரே!) சில நடிகைகளக் காரணமே இல்லாம நம்மாளுங்க புறக்கணிச்சிருக்கானுங்க. அப்புடி ஒரு லிஸ்ட்டுதான் இது.




இது அனிதா, சாமுராய் படத்துல விக்ரமோட ஜோடியா நடிச்சா. படத்துல ரொம்ப அழகா இருப்பா, அதுலயும் 'ஆகாயச்சூரியனை ஒற்றைச் சடையில் ஏந்தியவள்...'பாட்டுல அனிதாவ நாள்முழுக்கப் பாத்துக்கிட்டே இருக்கலாம். கொள்ளை அழகு. ஏனோ தெரியல, நம்ம காட்டானுங்களுக்கு அனிதாவோட அருமை தெரியாமப் போச்சு.



இது சாக்க்ஷி, இவளப் பத்தி நெறையப் பேருக்குத் தெரிஞ்சு இருக்கும்னு நெனக்கிறேன். இவளோட உடல்வாகு இருக்கே அதுக்கே கோடி கோடியா குடுக்கலாம் அவ்வளவு அற்புதமான உடலமைப்பு! ஆனா பாவம் புள்ளைக்கு நடிப்பே சுத்தமா வரல, பேரழகிங்கறதால மன்னிச்சு விட்ருக்கலாம். பாருங்க நம்ம பேரிக்கா தலையனுங்க இவளையும் ஓரங்கட்டிடானுங்க



இந்தப்புள்ள பேரு கீர்த்தி ரெட்டி, கொஞ்சம் பழைய ஆளுங்களுக்கு இவளோட கீர்த்தி பத்தி தெரிஞ்சிருக்கும். சும்மா சொல்லக்கூடாது, பேரழகின்னா அது இவதான். இவளோட முகவாக்கு இருக்கே அதுக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாதுங்க. இன்னிக்கி நம்ம லிஸ்ட்ல உள்ள பிகருங்கள்ல டாப்னா அது இவதான். நடிப்பையும் குறை சொல்ல முடியாது. உடல் அழகிலும் இவ பெரிய பேரழகி. நந்தினின்னு ஒரு படம் வந்துச்சு, அதுல ஸ்விம்சூட்ல வந்து கலக்கியிருப்பா, அப்புறம் பிரபுதேவாகூட ஒரு படம் வந்துச்சு நினைவிருக்கு வரைன்னு, நல்லாத்தான் இருந்தா. அல்டிமேட் பிகர்னா அது இவதான். கோணித்தலையனுங்க இவளையும் கண்டுக்காது விட்டுட்டானுங்கன்னா பாருங்களேன். தமிழ் சினிமா சரித்திரத்துல நமக்கெல்லாம் பேரிழப்புன்னா அது இதுதான்!



இது ஹீரா, எல்லாருக்கும் தெரிஞ்ச பிகரு. இதயம் படத்துல இவ சேலைகட்டி நடந்து வர்ர நளினத்த பாத்து இப்படி ஒருத்தி கிடைக்க மாட்டாளான்னு ஏங்காத ஆளே தமிழ்நாட்ல இருக்க முடியாது. சின்னப் பசங்கள்லாம் உடனே இதயம் படத்த DVDல பாருங்க இல்ல பெரிசுகள்ட்ட கேட்டுப் பாருங்க. தமிழ் நடிகைகளப் பொறுத்த வரைக்கும் கிளாஸ் பிகர் அப்படின்னா அது இவதான். இவ கணிசமான படங்கள்ல நடிச்சா, ரொம்பக் கவர்ச்சியாக் கூட நடிச்சா, ஆனா இதயம் படமே இதயத்துல நிக்கிரதாலே மத்தத எல்லாம் திரும்பிக்கூட பாக்க முடியல. இதயம் மாதிரி திரும்ப ஒரு படத்துல கூட இவள நம்ம டாஸ்மாக் வாயனுங்க யாருமே காட்டல, அதனால இவளையும் இந்த லிஸ்ட்டுக்கு கொண்டுவந்துட்டேன். நம்ம தறுதல அயோக்கியன் இவளையும் கொஞ்ச சீரழிச்சான். அந்தக் கதையெல்லாம் இப்போ எதுக்கு?



இவ கஸ்தூரி, சொல்லவே வேண்டியதில்ல, இவள எதுக்கு இந்த லிஸ்ட்ல போட்ருக்கேன்னு சில பேருக்கு டவுட் வரலாம், என்னப் பொறுத்த வரைக்கும், கஸ்தூரியோட முழுப் பரிமாணத்தையும் யாருமே சரியாக் காட்டல, உங்களுக்குத் தெரியுமா, கஸ்தூரி மிஸ்.மெட்ராஸ் பட்டம் வாங்கின ஒரு புரபசனல் மாடல்னு? இவளோட உடல்வாகு இவளுக்குக் கெடச்ச ஒரு வரப்பிரசாதம். இத்தன வருஷத்துலயும் ஒரு இஞ்ச் சேஞ்ச் கூடத் தெரியல. இவளும் கேடுகெட்ட படத்துலயெல்லாம் நடிச்சிருக்கா (மிஸ்.மெட்ராஸ்னே ஒரு படம், பிட்டுப்படம் ரேஞ்சுக்கு வந்துச்சு, தெலுங்குல எடுத்தது, தமிழ்ல டப்பிங் பண்ணி, ரிலீஸ் பண்ணாங்க, அதுவும், பறங்கிமலை ஜோதி, ஓடியன் மணி மாதிரி தியேட்டர்கள்ல), இவளையும் தமிழ் சினிமா முழுமையா பயன்படுத்திக்கல, இன்னும் குத்தாட்டம் ஆடுவதற்கு ரெடியாத்தான் இருக்கா, ஆனா பன்னாடைங்க விடமாட்டேங்கிரானுங்க.இப்போ நூற்றுக்கு நூறுன்னு ஒரு படத்துல நடிக்கிறான்னு கேள்விப்பட்டேன்! நம்ம பறக்கும்படைகிட்ட சொல்லி இப்போ இவ என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்னு கண்டுபிடிக்க சொல்லனும்!


டைப் பண்றதாவது ஈஸியா இருக்கும் போல, இந்தப் புள்ளைங்களுக்கு டீசன்ட்டா ஆளுக்கொரு படம் தேடி எடுக்குறதுக்குள்ள தாவு தீர்ந்திடுச்சுப்பா! அதுலயும் ஹீராவுக்கும், கஸ்தூரிக்கும் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன்!(படங்க நல்லா இல்லைன்னா மெயில்ல அனுப்புறேன், எல்லாம் விவகாரமா இருக்கு!)

இப்போதைக்கு இவ்வளவு போதும், என்ன உங்க கைவசம் ஏதாவது லிஸ்ட் இருக்கா? போட்டுத் தாளிச்சு உடுங்க!

நன்றி ஸ்டாட் மியூசிக்.

செவ்வாய், 7 நவம்பர், 2017

கமலின் 63 ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த சுவாரஸ்யமான 63 தகவல்கள் .



கமலின் 63 ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த சுவாரஸ்யமான 63 தகவல்கள் இங்கே.

1. பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த டி. சீனிவாசனுக்கும், ராஜலட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் கமலஹாசன்.
2. இவருடன் பிறந்தவர்கள் சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி. இவர்களில் கமல்தான் கடைக்குட்டி.
3. கமல் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா.
பண மதிப்பிழப்பு: 'ஒரு தரைவிரிப்பு குண்டுவீச்சு'
`முழு தோல்வியடைந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை!'
4. களத்தூர் கண்ணம்மா படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றவர் கமல்.
5. கமல் களத்தூர் கண்ணம்மாவில் நடிக்க காரணமாக இருந்தவர் அவரது குடும்ப மருத்துவர். அவர்தான் துறுதுறு என்று இருந்த கமலை ஏவி. மெய்யப்ப செட்டியாரிடம் அறிமுகபடுத்தியவர்.
நடிகர் கமல் பிறந்தநாளான இன்று, கமலின் பிரத்யேக செயலி அறிமுக விழா.. பிபிசி தமிழின் நேரலை #maiamwhistle #KH

நடிகர் கமல் பிறந்தநாளான இன்று, கமலின் பிரத்யேக செயலி அறிமுக விழா.. பிபிசி தமிழின் நேரலை #maiamwhistle #KH
Posted by BBC Tamil on Monday, 6 November 2017
6. அதன் பின் குழந்தை நட்சத்திரமாக கமல் பார்த்தால் பசி தீரும், பாத காணிக்கை, வாணம்பாடி, ஆனந்த ஜோதி உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக கமல் நடித்தார்.
7. குழந்தை நட்சத்திரமாக அப்போதைய முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேஷனுடன் கமல் நடித்துள்ளார்.
8. கமலுக்கு திருப்புமுனையாக அமைந்தது 1973-ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் திரைப்படம்தான்.
9. நடிப்பு பற்றி அனைத்து அடிப்படை நுணுக்கங்களையும் கமல் கற்றது அவ்வை டி. சண்முகத்திடம் தான்.
10. கமல் கதாநாயகனாக உருவெடுத்தது ஒரு மலையாள படம் மூலம் தான். அந்த திரைப்படத்தின் பெயர் கன்னியாகுமரி. அந்த படம் வெளியான ஆண்டு 1974.
"இன்னுமா சொல்லணும்... நான் வருவேனா மாட்டேனான்னு" : கமலஹாசன்
தீவிரவாதிகள் ஆதரவாளர் என்ற நிலைக்கு கமல் உயர்ந்துவிட்டார்: எச் ராஜா
11. 1970 களில் கமல் ரஜினியுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். அவை நினைத்தாலே இனிக்கும், 16 வயதினிலே, அவர்கள், இளமை ஊஞ்சலாடுகிறது. இவை அனைத்தும் வெற்றி படங்கள்.
12. நினைத்தாலே இனிக்கும் படம்தான் கமலும் ரஜினியும் இணைந்து நடித்த கடைசிப் படம்.
13. கமல் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகியது அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலமாகதான். கே. பாலசந்தர் இந்த திரைப்படத்தை இயக்கினார். இப்படத்திற்காக, கமலுக்கு ஃபிலிம்பேர் விருது கிடைத்தது.
14. ராஜபார்வை திரைப்படம் வெற்றிபடமாக அமையாவிட்டாலும், கமலுக்கு பரவலான பாராட்டையும், விருதுகளையும் பெற்றுதந்தது இந்த திரைப்படம்.
15. எண்பதுகளில் கமல் இந்தி திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். இந்த காலகட்டங்களில்தான் ஏக் துஜே கே லியே, சாகர், ராஜ் திலக் ஆகிய படங்களில் நடித்தார். இவை வெற்றிபடங்களாகவும் அமைந்தன.
16. நட்புக்கு எப்போதும் மரியாதை கொடுப்பவர் கமல். அதற்கு ஓர் உதாரணம், கமலின் தந்தை சீனிவாசனின் உடல் தகனத்திற்காக வைக்கப்பட்டு இருக்க, உடலை சுற்றி சந்திரஹாசன், சாருஹாசன், கமல் ஆகியோர் நிற்கிறார்கள். சிதையின் அருகில் இருந்த ஆர்.சி.சக்தி, ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா இருவரையும் கமல், `அண்ணா... நீங்களும் வாங்க` என்று கொள்ளி வைக்க அழைக்கிறார். இருவரும் நெகிழ்ந்து விட்டார்கள்.
17. ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய முதல் இந்திய நடிகர் கமலஹாசன்.
18. கமலுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா.
19. ஃபிலிம் ஃபேர் விருதை 18 முறைக்கும் மேல் வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமலஹாசன்தான். இனி எனக்கு விருது தராதீர்கள் புதிய இளைஞர்களுக்கு தாருங்கள் என்று ஃபிலிம் ஃபேருக்கு கமல் கடிதம் எழுதியதால், இந்த எண்ணிக்கை இத்தோடு நின்றது.
20. ஒரே வருடத்தில் ஐந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர் கமலஹாசன். இந்த சாதனை இதுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை. அந்த படங்கள் வாழ்வே மாயம்; மூன்றாம் பிறை; சனம் தேரி கஸம்; சகலகலா வல்லவன்; ஹே தோ கமல் ஹோகயா
கெஜ்ரிவாலிடம் கமல்ஹாசன் அரசியல் ஆலோசனை
இந்தியன் 2 - மீண்டும் இணையும் கமல், ஷங்கர் கூட்டணி
21. எண்பதுகளின் மத்தியில் `மய்யம்` என்ற இலக்கிய இதழை சிறிது காலம் நடத்தினார் கமல்.
22. மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார் கமல்.
23. தொடக்கத்தில் சிவாலயா என்ற நடனக் குழுவை நடத்தினார் கமல்.
24. தமிழ் சினிமாவின் மூன்று முக்கிய ஆளுமைகளுக்கு நடன மாஸ்டராக இருந்திருக்கிறார் கமல். அவர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, மற்றும் ஜெயலலிதா. எம்.ஜி.ஆருக்கு `நான் ஏன் பிறந்தேன்`, சிவாஜிக்கு `சவாலே சமாளி`, ஜெயலலிதாவுக்கு `அன்புத்தங்கை`.
25. தன் உடலை தானம் செய்திருக்கிறார் கமல். தமிழ் திரை உலகத்தில் இதில் முன்மாதிரி இவர்தான்.
26. கமலின் விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏஷியன் இண்டர்நேஷனல் விருதுகள் தரப்பட்டுள்ளது.
27. எட்டு முறை மாநில அரசின் விருதை பெற்று இருக்கிறார் கமல். அதுபோல இரண்டு முறை ஆந்திர அரசின் விருதையும் பெற்று இருக்கிறார்.
28. கமல் இதுவரை ஐந்து மொழிகளில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.
29. கமலின் ஆத்மார்த்தமான நண்பராக இருந்தவர் மறைந்த அனந்து.
30. கமல் இப்போது அரசியல் பேசவில்லை எண்பதுகளிலேயே பேசி இருக்கிறார். இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது, தமிழகத்தில் பேரணி நடத்தியவர் கமல்.
31. கமல் குடும்பத்தில் இருந்து மட்டும் மூன்று பேர் தேசிய விருது பெற்றிருக்கிறார்கள். அவர்கள் கமல், சாருஹாசன் மற்றும் சுஹாசினி.
32. கமலுக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்து 2005-ம் ஆண்டு கெளரவித்தது சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம்.
33. கமலின் அற்புதமான நடிப்புதிறமைக்காக 1990-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதுபோல, 2014-ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
34. கமல் முதன்முதலில் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றது மலையாளபடமான கன்னியாகுமரி திரைப்படத்திற்காக.
35. தமிழில் முதல் ஃபிலிம்ஃபேர் விருது வாங்கித் தந்தப் படம் அபூர்வராகங்கள்.
"இந்து தீவிரவாதம் இல்லையென இனியும் சொல்ல முடியாது"
''கமல் முரசொலி மேடையேறியது தற்காப்பு; ரஜினி கீழே அமர்ந்தது தன்மானம்''
36. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஃபிரஞ்ச் ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடியவர் கமல்.
37. தன் திரைப்படங்களுக்காக அதிக பிரச்னைகளை சந்தித்தவர் கமல். இதில் நகைமுரன் என்ன்வென்றால், பிரச்னையை சந்தித்த இவருடைய படங்கள் விருமாண்டி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், விஸ்வரூபம் அனைத்தும் மெகா ஹிட்.
38. உங்களது படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது? என்று கேட்டால், நான் நடிக்கப் போகும் அடுத்த படம் என்பார் கமல்.
39. பாலுமகேந்திரா மற்றும் பாரதிராஜா ஆகிய இரண்டு திரை ஆளுமைகளின் முதல் பட நாயகன் கமலஹாசன்தான். பாலுமகேந்திராவின் முதல் படம் கன்னடத்தில் வெளிவந்த கோகிலா. பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே.
40. கமல் பல்வேறு சமூக பிரச்னைகள் குறித்து எழுதி ஒரு கட்டுரை தொகுப்பை வெளியிட்டார். அந்த தொகுப்பின் பெயர் `தேடி தீர்ப்போம் வா`.
41. ரஜினிக்கு பிடித்தபடமான `முள்ளும் மலரும்` வெளியாவதற்கு காரணமாக இருந்தவர் கமல். அந்த படத்திற்கு பொருளாதார உதவிகளை செய்திருக்கிறார்.
42. இதயம் பேசுகிறது வார இதழில் கமல் `தாயம்` என்ற தொடர்கதையை எழுதினார். இந்த தொடர்கதைதான் பின்பு ஆளவந்தான் திரைப்படமாக உருமாறியது.
43. மெட்ராஸ் பாஷையை சரளமாக பேச கூடியவர் கமலஹாசன். மெட்ராஸ் பாஷைக்கு கமலின் குரு லூஸ் மோகன்.
44. சினிமா சென்டிமென்ட்களில் சிறிதும் நம்பிக்கையற்றவர் கமல். ஹே ராம் படத்தின் முதல் வசனமே, "சாகேத்ராம்... திஸ் இஸ் பேக் அப் டைம்". `பேக் அப்` என்ற வார்த்தையை முதல் வசனமாக வைப்பது சினிமாவில் கெட்ட சகுனமாக பார்க்கப்படும்.
45. கமலின் நற்பணி இயக்கத்தினர், இதுவரை 10,000-க்கும் அதிகமான ஜோடி கண்களை தானம் செய்திருக்கிறார்கள்.
46. முட்டையில் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெள்ளைக்கருவில் மிளகுப்பொடி தூவிச் சாப்பிடுவது கமலுக்கு பிடித்தமான உணவு. கமல், பிளாக் டீ பிரியரும் கூட.
47. முறையாக நாட்டியம் பயின்று அரங்கேற்றம் செய்தவர் கமல். மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபையில் அவரின் நாட்டிய அரங்கேற்றம் நடந்தது.
48. உள்ளூர் அரசியல் மட்டும் அல்ல, உலக அரசியலை விரல் நுனியில் வைத்திருப்பவர் கமல்.
49. கமல் தனது வீட்டில் மிகப்பெரிய வீடியோ லைப்ரரியை வைத்திருக்கிறார். அதில் உலக சினிமா தொடங்கி உள்ளூர் சினிமா வரை அனைத்து மொழி திரைப்படங்களும் உள்ளன.
50. கமல் உற்சாகமான மூடில் இருந்தால், தான் எழுதிய கவிதை லயத்தோடு நண்பர்களுக்கு பாடிகாட்டுவார்.
51. கமலுக்கு பிடித்தமான தலைவர் காந்தியடிகள்.
52. கமல் கோலிவுட் என்ற வார்த்தையை உச்சரிக்கமாட்டார். எப்போதும் `தமிழ் திரையுலகம்' என்று அழுத்தி உச்சரிப்பதே கமலின் வழக்கம்.
53. கமல் முதன் முதலில் தொடங்கிய திரைப்பட நிறுவனத்தின் பெயர் ஹாசன் பிரதர்ஸ். இந்த நிறுவனத்தின் சார்பில் ராஜபார்வை திரைப்படத்தை தயாரித்தார். பின் அந்த நிறுவனத்தின் பெயரில் படங்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டு, ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் என்ற பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார்.
54. தசாவதாரம் திரைப்படத்தில் பத்து வேடங்களில் நடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் கமல்.
55. தற்போது ஆனந்த விகடனில் கமல் எழுதி வரும் `என்னுள் மையம் கொண்ட புயல்` என்ற தொடர் பல சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.
56. கமல் திரைப்படங்கள் பார்ப்பதைவிட அதிக நேரம் புத்தகம் படிப்பதில்தான் செலவிடுவார். அதுபோல, திரைப்பட தொழிற்நுட்பங்களை விரல் நுனியில் வைத்திருப்பார் கமல்.
57. இப்போது உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமலின் ஆரம்பகால அடைமொழி காதல் இளவரசன்.
58. டைம் இதழ் வெளியிட்ட உலகின் சிறந்த நூறு திரைப்படங்கள் பட்டியலில் நாயகன் திரைப்படமும் ஒன்று.
59. பாலசந்தர் கமலுக்கு எழுதும் கடிதங்கள் எல்லாம், "மை டியர் ராஸ்கல்" என்று தொடங்கும்.
60. ஆர்.எஸ்.மனோகரின் இலங்கேஸ்வரன் நாடகத்தைப் திரைப்படமாக மாற்றும் விருப்பம் கமலுக்கு உள்ளது.
"அந்தரங்க உரிமை" தீர்ப்புக்கு ராகுல் முதல் கமல் வரை வரவேற்பு
"கமலின் அரசியல் பிரவேசம்.. அமைச்சர்களின் அச்சமே"
61. பாலச்சந்தரை அப்பா என்றும், பாரதிராஜவை அண்ணன் என்றும் கமல் அழைப்பார்.
62. கடந்த ஓராண்டாக சமூக ஊடகங்களில், குறிப்பாக ட்வீட்டரில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் கமல்.
63. ட்வீட்டரில் 2.9 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை வைத்திருக்கிறார் கமல்.