புதன், 3 ஏப்ரல், 2019

இயக்குநர் மகேந்திரன் வாழ்க்கை பற்றிய ஒரு பதிவு


இயக்குநர் மகேந்திரன் வாழ்க்கை பற்றிய ஒரு பதிவு

*இயக்குனர் மகேந்திரன் 1939 ஆம் ஆண்டு இளையான்குடியில் பிறந்தவர். தந்தை ஜோசப் செல்லையா ஆசிரியராக பணிபுரிந்தவர். தாயார் மனோன்மணி, கம்பவுண்டராக பணிபுரிந்தவர். இவருக்கு அலெக்ஸாண்டர் என பெயர் வைத்தனர்.*

*இளையான்குடியில் பள்ளிப்படிப்பை முடித்த மகேந்திரன், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் "இண்டர்மீடியட்'' படித்தார். அதன் பிறகு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் "பி.ஏ'' பொருளாதாரம் படித்தார்.*

*1958-ம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழா நடந்தது. அந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். விழாவில் எம்.ஜி.ஆர். முன்னிலையில் மகேந்திரன் பேசினார்.*

*"நம் கல்லூரியில் பலர் காதலிக்கிறார்கள். பின்னர் ஊராரிடம் அவமானப்படுகிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் சினிமாவில் காதலியோடு பாடுகிறார். ஊரே ரசிக்கிறது'' என்று பெசினார்.*

*இதை ரசித்து கேட்ட எம்.ஜி.ஆர், "நல்ல பேச்சு, நல்ல கருத்து, நகைச்சுவை உணர்ச்சியுடன் கூடிய விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்க தகுந்தவர், வாழ்க'' என்று எழுதி கையெழுத்திட்டு மகேந்திரனிடம் கொடுத்தார். கல்லூரியில் படிக்கும் போதே கையெழுத்து பத்திரிகை ஒன்றை மகேந்திரன் நடத்தினார். கல்லூரி நாடகங்களிலும் அவர் பங்கு கொள்வார்.*

*சட்டக் கல்லூரியில் படிக்க சென்னை வந்தவர், இனமுழக்கம் பத்திரிகையில் உதவி ஆசிரியர் வேலைக்கு சேர்ந்தார். அதில் சினிமா விமர்சனமும் எழுதினார்.*

*"இன்பக்கனவு'' நாடகத்தில் நடித்தபோது கால் எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆர், பூரண குணம் அடைந்து மீண்டும் நடிக்கப் போவது பற்றி அறிவிக்க, பத்திரிகையாளர்கள் கூட்டத்தை கூட்டினார்.*

*அந்தக் கூட்டத்துக்கு மகேந்திரன் சென்றுருந்தார். அவரைப் பார்த்த எம்.ஜி.ஆர், "நீங்கள் அழகப்பா கல்லூரி மாணவர்தானே'' என்று கேட்டார். மகேந்திரன், "ஆமாம்'' என்றார்.*

*"நாளை என்னை வீட்டில் வந்து பாருங்கள். உங்களுக்கு நல்ல வேலை தருகிறேன்'' என்றார், எம்.ஜி.ஆர்.*

*மறுநாள் காலை மகேந்திரன், ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் இருந்த எம்.ஜி.ஆர். வீட்டுக்கு சென்றார். மகேந்திரனுக்கு தன் வீட்டு மாடியில் தனி இடம் ஒதுக்கிக் கொடுத்து கல்கியின் "பொன்னியின் செல்வன்'' நாவலை திரைக்கதை எழுதச் சோன்னர் எம்.ஜி.ஆர்.*

*பொன்னியின் செல்வனை படமாக்கும் திட்டம் தள்ளிப் போனதால் தனது நாடக மன்றத்துக்காக ஒரு நாடகத்தை எழுதித் தரும்படி மகேந்திரனிடம் கூறினார் எம்.ஜி.ஆர்.*

*"அனாதைகள்'' என்ற நாடகத்தை எழுதித் தந்தார் மகேந்திரன். அந்த நாடகத்தை "வாழ்வே வா'' என்ற பெயரில் படமாக்க முடிவு செய்து கதாநாயகியாக சவித்திரியையும் ஒப்பந்தம் செய்தார். பைனான்சியர் இறந்ததால் படம் பாதியில் நின்றுவிட்டது.*

*இந்த நிலையில் தான் நடித்த "காஞ்சித் தலைவன்'' படத்தில் இயக்குனர் காசிலிங்கத்திடம் உதவி இயக்குனராக மகேந்திரனை எம்.ஜி.ஆர். சேர்த்துவிட்டார்.*

*1966-ம்ஆண்டு "நாம் மூவர்'' படத்திற்கு மகேந்திரன் கதை எழுதினார். படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து அதே தயாரிப்பில் வெளியான "சபாஷ் தம்பி'', "பணக்காரப்பிள்ளை'' ஆகிய படங்களுக்கு மகேந்திரன் கதை எழுதினார். சிவாஜி கணேசன் நடித்த "நிறைகுடம்'' படத்திற்கும் கதை எழுதினார்.*

*"நிறைகுடம்'' படம் நிறைவடைந்ததும், "துக்ளக்'' பத்திரிகையில் சினிமா விமர்சனம் எழுதி வந்தார். அங்கு "சோ''வை பார்க்க வந்த நடிகர் செந்தாமரையும், சிவாஜி நாடக மன்ற இயக்குனருமான எஸ்.ஏ.கண்ணனும்  மகேந்திரனிடம் ஒரு நாடகம் எழுதித்தரும்படி கேட்டனர்.*

*மிகவும் கண்டிப்பான போலீஸ் அதிகாரிக்கு ஒரு அயோக்கியன் மகனாக இருக்கிறான் என்று தொடங்கி கதையை சொன்னார் மகேந்திரன். உடனே அதை நாடகமாக எழுதித்தரும்படி செந்தாமரை கேட்டுக்கொண்டார்.*

*"இரண்டில் ஒன்று'' என்ற பெயரில் ஐந்து நாட்களில் நாடகத்தை எழுதி முடித்தார், மகேந்திரன். அந்த நாடகம் அரங்கேற்றமானது. எஸ்.பி.சவுத்ரி வேடத்தில் செந்தாமரை நடித்தார்.*
       
*நாடகத்தை பார்க்க வந்த சிவாஜி, "சிவாஜி நாடக மன்றம் மூலம் இந்த நாடகத்தை நடத்தலாம், அதில் எஸ்.பி.சவுத்ரியாக நான் நடிக்கிறேன்'' என்று கூறினார். "இரண்டில் ஒன்று'' என்ற பெயர் "தங்கப்பதக்கம்'' என்று மாற்றப்பட்டது. சிவாஜிகணேசன், எஸ்.பி.சவுத்ரியாக நடிக்க, மியுசிக் அகாடமியில் நாடகம் அரங்கேற்றப்பட்டது.  100-வது நாளாக நாடகம் நடந்தபோது, மகேந்திரனுக்கு சிவாஜிகணேசன் மோதிரம் அணிவித்தார்.*

*"தங்கப்பதக்கம்'' நாடகத்தை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக எடுத்தது. கதை-வசனம் மகேந்திரனுடையது. பி.மாதவன் டைரக்ட் செய்தார்.*

*எஸ்.பி.சவுத்ரி வேடத்தில் சிவாஜி வாழ்ந்து காட்டினார். படம் மகத்தான வெற்றி பெற்றது. இந்தப்படம் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது.*

*அதனைத் தொடர்ந்து "திருடி'' என்ற படத்திற்கு கதையும், "மோகம் முப்பது வருஷம்'' படத்திற்கு திரைக்கதை வசனமும் எழுதினார் மகேந்திரன்.*

*ஆடுபுலி ஆட்டம், வாழ்ந்து காட்டுகிறேன், வாழ்வு என் பக்கம், ரிஷிமூலம், தையல்காரன், காளி, அவளுக்கு ஆயிரம் கண்கள், சக்கரவர்த்தி, சொந்தமடி சொந்தம், நம்பிக்கை நட்சத்திரம் ஆகிய படங்களுக்கு கதை, வசனமும், நாங்கள், அழகிய பூவே ஆகிய படங்களுக்கு திரைக்கதை வசனமும், பருவமழை, பகலில் ஒரு இரவு, கள்ளழகர், கங்கா, ஹிட்லர் உமாநாத், சேலஞ்ச் ராமு (தெலுங்கு), தொட்டதெல்லாம் பொன்னாகும் (தெலுங்கு) ஆகிய படங்களுக்கு கதையும் எழுதினார், மகேந்திரன்.*

*இந்த நிலையில் ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார் மகேந்திரனுக்கு ஒரு படம் இயக்க வாய்ப்பு கொடுத்தார். அண்ணன், தங்கை சென்டிமெண்டை மையமாக வைத்து, உமா சந்திரன் எழுதிய நாவல் "முள்ளும் மலரும்.'' அதன் திரைக்கதை, வசனம், எழுதி இயக்கினார் மகேந்திரன்.*

*படத்தில் அண்ணனாக ரஜினிகாந்த், தங்கையாக ஷோபா நடித்தனர். முக்கிய வேடத்தில் சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி நடித்தனர். இளையராஜா இசையமைக்க பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்தார்.*

*"முள்ளும் மலரும்'' மெகா ஹிட் படமாக அமைந்தது. கதை-வசன கர்த்தாவாக இருந்த மகேந்திரன், இந்த ஒரே படத்தின் மூலம் மிகச்சிறந்த இயக்குனர் என்று புகழ் பெற்றார்.*

*புதுமைப்பித்தன் எழுதிய "சிற்றன்னை'' என்கிற குறுநாவலை "உதிரிப்பூக்கள்.'' படமாக இயக்கினார். சிறந்த கலைப்படைப்பாக பாராட்டுகளை குவித்த "உதிரிப்பூக்கள்'', வசூலையும் அள்ளிக் குவித்தது. படம் 25 வாரங்கள் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது.*

*"உதிரிப்பூக்கள்'' படத்தைத் தொடர்ந்து, மகேந்திரன் திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்ட் செய்த படம் "பூட்டாத பூட்டுக்கள்.''. அதன் பிறகு மோகன் -சுகாசினி அறிமுகமான "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' பட்த்கை இயக்கினார். 12-12-1980-ல் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது. சென்னையில், தொடர்ந்து ஒரு வருடம் ஓடியது.*

*"நெஞ்சத்தைக் கிள்ளாதே'' 1980-ம் ஆண்டின் சிறந்த மாநில மொழித் திரைப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது அசோக்குமாருக்கும், சிறந்த ஒலிப்பதிவாளருக்கான தேசிய விருது "பிரசாத்'' ஸ்டூடியோ எஸ்.ராமநாதனுக்கும் கிடைத்தது.*

*1982-ல் மாஸ்கோவில் நடந்த இந்திய கலாசார விழாவிலும், "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படம் திரையிடப்பட்டது. ரஷியா அரசாங்கம் இந்த படத்தை வாங்கி அந்த நாட்டின் தியேட்டர்களில் திரையிட்டது.*

*தொடர்ந்து மெட்டி, நண்டு, கண்ணுக்கு மை எழுது, அழகிய கண்ணே, ஊர் பஞ்சாயத்து, கைகொடுக்கும் கை ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார் மகேந்திரன்.*

*ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்து 1980ல் வெளியான "ஜானி.'' படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு கை கொடுக்கும் கை பட்த்தை எடுத்தார்.*

*தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் நிதி உதவியில் "சாசனம்'' என்ற படம், மகேந்திரனின், இயக்கத்தில் உருவானது. செட்டிநாட்டு கலாசாரத்தை பிரதிபலிக்கும் இந்தப் படத்தில் அரவிந்தசாமி, கவுதமி, ரஞ்சிதா, ஆகியோர் நடித்திருந்தனர்.*

*நல்ல சினிமாவிற்கு என்னை அர்ப்பணிப்பதே என்றைக்கும் எனது சாசனமாக இருக்கும் என்று சொல்லும் இயக்குனர் மகேந்திரனின் மனைவி பெயர் ஜாஸ்மின். இவர்களது மகன் ஜான். இவர் விஜய் நடித்த "சச்சின்'' படத்தை இயக்கியவர். டிம்பிள், அனுரீட்டா என்ற 2 மகள்கள் உள்ளனர்.*

*பள்ளி, கல்லூரி காலங்களில் ஒட்டப் பந்தய்ங்களில் கலந்து கொண்டார். சீனியர் விளையாட்டு வீரராக ஜொலித்த எல்.மகேந்திரனால் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரையே தனக்கு சூட்டிக் கொண்டார் மகேந்திரன்.*

*"மெட்டி'', "நண்டு'', "எனக்கு நானே எழுதிக்கொண்டது'' முதலான புத்தகங்களை மகேந்திரன் எழுதி உள்ளார். "உதிரிப்பூக்கள்'' திரைக்கதை-வசனம், புத்தகமாக வெளிவந்துள்ளது.*

*2016 - ஆம் ஆண்டு விஜய் நடித்த தெறி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மகேந்திரன் தொடர்ந்து, நிமிர், மிஸ்டர் சந்திரமவுலி, சீதக்காதி, பேட்ட, பூமராங் ஆகிய தமிழ்ப் படங்களிலும் கட்டமராயுடு என்கிற தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார்.*

*கடிகாரம் மற்றும் தங்க நகைகள் அணியும் வழக்கம் இல்லை,  மிக எளிமை விரும்பி!*

*கதை-வசனம் எழுதி, இயக்கும் படங்களின் முக்கியமான வேடத்துக்கு 'லட்சுமி’ என்று பெயர் சூட்டுவார். 'தங்கப்பதக்கம்’ செளத்ரியின் மனைவி, 'உதிரிப்பூக்களில்’ அஸ்வினி பெயர் லட்சுமிதான்*

*நடிகர்   செந்தாமரையின் பெயர் தான் லட்சுமி!*

*தனது வாழ்க்கையின் நன்றிக்கு உரியவர்களாக எம்.ஜி.ஆர், சிவாஜி, சின்னப்பா தேவர்,  சோ ஆகியவர்களைக் குறிப்பிடுவார். 'என்னை இது வரையில் நடத்தி வந்தது என் மனைவி ஜாஸ்மின் ‘ என நெகிழ்ச்சியோடு குறிப்பிடுவார்!*

*அவர் இயக்கிய 12 படங்களில் அவருக்கே பிடித்தது 'உதிரிப்பூக்கள்’, 'பிழைகள் குறைந்த படம்’ என்பார் சிரித்துக்கொண்டே

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

மகேந்திரன் எழுதி இயக்கிய கதை, வசனம் எழுதிய படங்கள்.


மகேந்திரன் எழுதி இயக்கிய கதை, வசனம் எழுதிய படங்கள்.

மகேந்திரன் இயக்கிய முதல்படம் முள்ளும் மலரும். ரஜினிகாந்த், சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி, ஷோபா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரஜினிக்கு சினிமாவில் திருப்புமுனை தந்த படமாகவும் அமைந்ததோடு மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிற்கு பாலுமகேந்திரா என்ற அற்புதமான ஒளிப்பதிவாளரையும் அறிமுகப்படுத்திய பெருமை மகேந்திரனைச் சேரும்.

மகேந்திரன் கதை, வசனம் எழுதிய படங்கள்:

01. நாம் மூவர் - கதை
02. சபாஷ் தம்பி - கதை
03. பணக்காரப்பிள்ளை - கதை
04. நிறை குடம் - கதை
05. திருடி - கதை
06. மோகம் முப்பது வருஷம் - கதை, வசனம்
07. ஆடு புலி ஆட்டம் - கதை, வசனம்
08. வாழ்ந்து காட்டுகிறேன் - கதை, வசனம்
09. வாழ்வு என் பக்கம் - கதை, வசனம்
10. ரிஷிமூலம் - கதை, வசனம்
11. தையல்காரன் - கதை, வசனம்
12. காளி - கதை, வசனம்
13. பருவமழை - வசனம்
14. பகலில் ஒரு இரவு - வசனம்
15. அவளுக்கு ஆயிரம் கண்கள் - கதை, வசனம்
16. கள்ளழகர் - வசனம்
17. சக்கரவர்த்தி - கதை, வசனம்
18. கங்கா - கதை
19. ஹிட்லர் உமாநாத் - கதை
20. நாங்கள் - திரைக்கதை வசனம்
21. சேலஞ் ராமுடு (தெலுங்கு) - கதை
22. தொட்டதெல்லாம் பொன்னாகும் (தெலுங்கு) - கதை
23. சொந்தமடி நீ எனக்கு - கதை, வசனம்
24. அழகிய பூவே - திரைக்கதை, வசனம்
25. நம்பிக்கை நட்சத்திரம் - கதை, வசனம்

மகேந்திரன் எழுதி இயக்கிய படங்கள்:

01. முள்ளும் மலரும்
02. உதிரிப் பூக்கள்
03. பூட்டாத பூட்டுக்கள்
04. ஜானி
05. நெஞ்சத்தைக் கிள்ளாதே
06. மெட்டி
07. நண்டு
08. கண்ணுக்கு மை எழுது
09. அழகிய கண்ணே
10. ஊர்ப்பஞ்சாயத்து
11. கை கொடுக்கும் கை
12. சாசனம்

Thanks.dinamalar

இந்திய சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர் மற்றும் தெறி பட நடிகர் மகேந்திரன் மரணம், அதிர்ச்சியில் திரையுலகம்

இந்திய சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர் மற்றும் தெறி பட நடிகர் மகேந்திரன் மரணம், அதிர்ச்சியில் திரையுலகம்.


மகேந்திரன் (பிறப்பு: சூலை 25, 1939 இறப்பு: ஏப்ரல் 2, 2019)[1] புகழ் வாய்ந்த தமிழ்த் திரை இயக்குநர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ஜெ. அலெக்சாண்டர். மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், அழகுணர்ச்சி மிகு காட்சியமைப்புகளுக்காகவும் இவரது திரைப்படங்கள் புகழ் பெற்றவை.

ஜே. மகேந்திரன்
J Mahendran at Veena S Balachander Felicitation.jpg
2016 ஆம் ஆண்டு மகேந்திரன்
பிறப்பு
ஜே. அலெக்சாண்டர்
சூலை 25, 1939
இளையான்குடி, தமிழ்நாடு,
இறப்பு
2 ஏப்ரல் 2019 (அகவை 79)
பணி
திரைப்பட இயக்குநர், திரைக்கதையாளர், வசனகர்த்தா, நடிகர்
செயல்பட்ட
ஆண்டுகள்
1966 – 2006, 2016 - 2019
பிள்ளைகள்
ஜான் மகேந்திரன்
Learn moreஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.
மகேந்திரன், புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு, உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். இது தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க திரைகதை, வசனம் போன்றவற்றை எழுதிவைத்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் இதனை திரைப்படமாக்க முடியாமல் போனது.[2]

திரைப் படைப்புகள்
தொகு
1978: முள்ளும் மலரும்
1979: உதிரிப்பூக்கள்
1980: பூட்டாத பூட்டுகள்
1980: ஜானி
1980: நெஞ்சத்தை கிள்ளாதே
1981: நண்டு
1982: மெட்டி
1982: அழகிய கண்ணே
1984: கை கொடுக்கும் கை
1986: கண்ணுக்கு மை எழுது
1992: ஊர்ப் பஞ்சாயத்து
2006: சாசனம்
இதர படைப்புகள்
தொகு
அர்த்தம் (தொலைக்காட்சி நாடகம்)
காட்டுப்பூக்கள் (தொலைக்காட்சி நாடகம்
கதை/வசனம்/திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்
தொகு
தங்கப்பதக்கம் - கதைவசனம்
நாம் மூவர் - கதை
சபாஷ் தம்பி - கதை
பணக்காரப் பிள்ளை - கதை
நிறைகுடம் - கதை
திருடி - கதை
மோகம் முப்பது வருஷம் - திரைக்கதை வசனம்
ஆடு புலி ஆட்டம் - கதை வசனம்
வாழ்ந்து காட்டுகிறேன் - கதை வசனம்
வாழ்வு என் பக்கம் - கதை வசனம்
ரிஷிமூலம் - கதை வசனம்
தையல்காரன் - கதை வசனம்
காளி - கதை வசனம்
பருவமழை -வசனம்
பகலில் ஒரு இரவு -வசனம்
அவளுக்கு ஆயிரம் கண்கள் - கதை வசனம்
கள்ளழகர் -வசனம்
சக்கரவர்த்தி - கதை வசனம்
கங்கா - கதை
ஹிட்லர் உமாநாத் - கதை
நாங்கள் - திரைக்கதை வசனம்
challenge ramudu (தெலுங்கு) - கதை
தொட்டதெல்லாம் பொன்னாகும் (தெலுங்கு) -கதை
சொந்தமடி நீ எனக்கு -கதை வசனம்
அழகிய பூவே - திரைக்கதை வசனம்
நம்பிக்கை நட்சத்திரம் -கதை வசனம்
சுவையான தகவல்கள்
தொகு
திரைப்பட இயக்குநராவதற்கு முன், பிறர் இயக்கிய திரைப்படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை எழுதி வந்தார்.
இனமுழக்கம், துக்ளக் போன்ற இதழ்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
மகேந்திரன் சினிமாவும் நானும் என்னும் நூலினை எழுதியுள்ளார். இது 2004ஆம் ஆண்டு வெளியானது.
திரையுலகில் ஒரு இடம் பெற முயற்சித்துக் கொண்டிருந்த நாட்களில், எம்.ஜி.ஆர். தமக்கு மாதச் சம்பளம் அளித்து கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்கு திரைக்கதை எழுதுமாறு பணித்ததாகவும், அதைத் தாம் பூர்த்தி செய்யவில்லை எனினும், எம்.ஜி.ஆர். அதைப் பற்றி ஏதும் கேட்காமலேயே தொடர்ந்து பண உதவி செய்து வந்ததாகவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார். எனினும், எம்.ஜி.ஆரின் எந்தப் படத்திற்கும் இவர் வசனமோ திரைக்கதையோ எழுதியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிவாஜி கணேசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். ரஜினியை வைத்து மூன்று படங்கள் இயக்கியுள்ளார். இவரது படங்களில் அதிகம் நடித்த நட்சத்திரம் அவரே.
மகேந்திரனின் முதல் படம் துவங்கி, அநேகமாக அவரது பல படங்களில் சரத்பாபு இடம் பெற்றார்.
கன்னட நடிகை அஸ்வினியை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் மகேந்திரன். படம்: உதிரிப் பூக்கள். பேபி அஞ்சுவும் மகேந்திரனின் அறிமுகமே.
கமலஹாசனின் தமையன் சாருஹாசனை திரைக்கு உதிரிப் பூக்கள் படத்தின் வாயிலாக அறிமுகம் செய்தவர் மகேந்திரன். மிகச் சிறந்த நடிப்பை வழங்கிய சாருஹாசன், பின்னர் ஒருகன்னடப் படத்திற்காக மிகச் சிறந்த நடிகருக்கான அனைத்திந்திய விருதினைப் பெற்றார்.
விஜயனை அறிமுகம் செய்தது இயக்குனர் பாரதிராஜா எனினும், அவருக்கு மறக்க இயலாத ஒரு வேடத்தை உதிரிப் பூக்களில் அளித்து, திரையுலகில் அவரைக் கதாநாயகனாக உயர்த்தியவர் மகேந்திரன். இதைத் தொடர்ந்து, பல படங்களில் விஜயன் கதாநாயகனாக நடித்தார்.
மகேந்திரனின் மிகச் சிறப்பான அறிமுகம் சுஹாசினி. நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தில் தனது நடிப்பாற்றலுக்காக எதிர்பார்க்கப்பட்ட தேசிய விருதை சுஹாசினி இழந்தார். (பின்னர் சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சிந்து பைரவி திரைப்படத்திற்காக இவ்விருதினை அவர் பெற்றார்.)
தாம் முதலில் இயக்கிய முள்ளும் மலரும் திரைப்படத்தில் தாம் நடிக்கவில்லை என்றாலும், அதில் ஒளிப்பதிவாளராக பாலு மகேந்திரா பணி புரிய மிகவும் உதவியவர் கமலஹாசன் என்றும் மகேந்திரன் குறிப்பிட்டதுண்டு. ஆயினும், மகேந்திரன் இயக்கத்தில் கமல் நடித்ததில்லை.
இவர் சமீபத்தில் தெறி படத்தில் வில்லனாக நடித்துள்ளார்