செவ்வாய், 21 ஜனவரி, 2020

எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்

எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்

இரண்டு தலைமுறைக்கு இசையில் நம்மைத் தாலாட்டிய எம்.எஸ்.வி-யின் இசைக்கு இன்னும் இருக்கிறார்கள் லட்சக்கணக்கான ரசிகர்கள். மனதைத் தொடும் மெல்லிசை மன்னரின் இசை வரலாற்றின் பெர்சனல் பக்கங்கள் இதோ.....

எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தது கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில். பிறந்த வருடம் 1928 ஜீன் 17.
அன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள், கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள் லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை!.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,200 படங்கள் மேல் இசை அமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட, 1951-ல் ஆரம்பித்து 1981 வரை 30 வருடங்கள் எம்.எஸ்.வி-யின் இசை ராஜ்யம் தான்!.
நடிக்கவும் ஆர்வம், `கண்ணகி’ படத்தில் நடிக்க ஆரம்பித்த எம்.எஸ்.வி, `காதல் மன்னன்,’ `காதலா.... காதலா’ உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். நகைச்சுவையில் கொடி கட்டுவார் எம்.எஸ்.வி.

இசையில் மகா பாண்டித்யம் பெற்ற எம்.எஸ்.வி.கல்விக்காக பள்ளிக்கூடம் பக்கமே கால் வைத்தது இல்லை!.
மெல்லிசை மன்னருக்கு கலைமாமணி, ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் கிடைத்தன. ஆனால், பேரதிர்ச்சி... தேசிய விருதோ, தமிழ்நாடு அரசு விருதோ இவருக்குக் கிடைக்கவில்லை!

குரு நீலகண்ட பாகவதரிடம் பயின்று கர்னாடகக் கச்சேரியை தனியாகச் செய்திருக்கிறார். குருவுக்குத் தட்சணை கொடுக்க இயலாமல், அவருக்குப் பணி விடை செய்து அந்தக் கடமையை நிறை வேற்றினார்!
இஷ்ட தெய்வம் முருகன், எந்தக் கணமும், பேச்சுக்கு நடுவிலும் உச்சரிக்கும் வார்த்தையும் `முருகா முருகா’தான்!
மிக அதிகமாக, பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி.திருலோசந்தர், கே.பாலசந்தர் என இந்த நான்கு டைரக்டர்களிடம் வேலை பார்த்திருக்கிறார், அது தமிழ் சினிமாவின் பொற்காலம்!

சொந்தக் குரலில் பாடுவதில் பெரும் பிரபலம் அடைந்தார் மெல்லிசை மன்னர். குறிப்பாக, உச்சஸ்தாயில் பாடின பாடல்கள் பெரும்புகழ் பெற்றவை,`பாசமலர்’ படத்தில் ஆரம்பித்தது இந்தப் பாட்டுக் கச்சேரி!
எம்.எஸ்.விஸ்வநாதன், இசையமைப்பாளர் ராமமூர்த்தியோடு இணைந்து 10 வருடங்களுக்கு மேல் கொடிகட்டிப் பறந்தார். அந்த நாட்களில் விஸ்வநாதன் –ராமமூர்த்தி இணை பெரிதாகப் பேசப்பட்டது. பிறகு, அவர்கள் பிரிந்தார்கள்!

மெல்லிசை மன்னர், சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்திருக்கிறார். இப்பவும் நடிகர்களுக்கு காபி,டீ கொடுத்த விவரங்களை நகைச்சுவைளோடு நண்பர்களிடம் சொல்லி மகிழ்வார்!
இளையராஜவோடு சேர்ந்து, `மெல்லத் திறந்தது கதவு’, `செந்தமிழ்ப் பாட்டு’, `செந்தமிழ் செல்வன்’, என மூன்று படங்களுக்கு இசை அமைந்தார். ஒரு காலத்தில் தனக்குப் போட்டியாளராகக் கருதப்பட்ட ராஜாவோடு சேர்ந்து அவர் இசை அமைத்ததே, அவரது விசால மனப்பான்மைக்கு அடையாளம்!

`புதிய பறவை’ படத்தில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக் கொண்டு `எங்கே நிம்மதி’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்தார். `பாகப்பிரிவினை’ படத்தில் `தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக் கொண்டு இசைக்கோர்ப்பு செய்தார்!
தன் குரு எஸ்.எம். சுப்பையா நாயுடு இருக்கும் போதே அவருக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்தி, பொற்கிழி அளித்தார். அவர் இறந்த பிறகு, அவரது கடைசிக் காலம் வரை தன் வீட்டிலேயே வைத்திருந்து இறுதிக் கடமைகள் செய்தார்!
1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவின் போது போர் முனைக்குச் சென்ற குழுவோடு போய், கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டிக் கொண்டு காயமுற்ற படை வீரர்களுக்குப் பாடினார். உடன் ஆடிக்காட்டியவர் சந்திரபாபு!

தமிழ்த் தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமை எம்.எஸ்.வி-க்கு சேர்கிறது. முதலில் பிறந்த ராகம் எனக் கருதப்படும் மோகனத்தில் இயல்பாக அமைந்த பாடலாக அது சிறப்புப் பெறுகிறது!
உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப்படுத்திய பெருமையும் இவருக்குத் தான். எகிப்திய இசையைப் `பட்டத்து ராணி’ பாடலும், பெர்சியன் இசையை `நினைத்தேன் வந்தாய் நூறு வயது’விலும், ஜப்பான் இசையைப் `பன்சாயி காதல் பறவை’களிலும், லத்தீன் இசையை `யார் அந்த நிலவிலும்’, ரஷ்ய இசையைக் `கண் போன போக்கிலே கால் போகலாமா’விலும், மெக்சிகன் இசையை `முத்தமிடும் நேரமெப்போ’ பாடலிலும் கொண்டு வந்தார்!

`நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம் பெற்ற `முத்தான முத்தல்லவோ’ பாடல் தான் 20 நிமிஷங்களில் இவர் இசைக்கோர்ப்பு செய்த பாடல், `நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல் உருவாகத் தான் இரண்டு மாதம் ஆனது!
இந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்திக் காட்டியவரும் எம்.எஸ்.வி.தான் சேலத்தில் நடைபெற்ற அந்த இசை நிகழ்ச்சி அந்த நாளில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது!
கொஞ்ச வருடங்களுக்கு முன்பு இதய ஆபரேஷன் செய்து கொண்டார். அதற்குப் பின்பு இன்னும் இளமை திரும்பி சுறுசுறுப்பாக இருக்கிறார்!
பியானோ, ஹார்மோனியம், கீ-போர்டு மூன்றையும் பிரமாதமாக வாசிப்பார். சற்று ஓய்வாக இருக்கும் பொழுதுகளில் வீட்டில் பியானோவின் இசை பெருகி நிரம்பி வழியும்!
சினிமா இசையில் இருந்து அதிகமாக ஒதுங்கி இருந்த எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் மெல்லிசை மன்னரின் இசைக்குக் கட்டுப்பட்டுப் பாடி இருக்கிறார்கள்!
வி.குமார், இளையராஜா, ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி இருக்கிறார். எம்.எஸ்.வி, தன் இசையறிவை பெரிதாக நினைத்துக் கொள்ளாதது பெரும் மனப்போக்கினால் நிகழ்ந்தது இது!

`அத்தான்..... என்னத்தான்....’ பாடலைக் கேட்டுவிட்டு, இந்த மாதிரி பாடலைப் பாட வாய்ப்பு கிடைத்தால், சென்னையிலேயே வந்து தங்கி விடுவேன்’ என்று ஒரு முறை மேடையில் லதா மங்கேஷ்கர் சொன்னார். கைதட்டலில் அதிரிந்தது அரங்கம்!

வெள்ளி, 17 ஜனவரி, 2020

திரும்பிப் பார்ப்போம் 2018 தமிழ் சினிமா : 100 தகவல்கள்


திரும்பிப் பார்ப்போம் 2018 தமிழ் சினிமா : 100 தகவல்கள்

தமிழ் சினிமாவுக்கு 2018ம் ஆண்டு எப்படி இருந்தது என்பதை 100 சுவாரஸ்ய தகவல்களுடன் இங்கு பகிர்ந்துள்ளோம். வாருங்கள் 2018 தமிழ் சினிமாவை திரும்பி பார்ப்போம்...

1. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ரிலீஸான படங்களின் எண்ணிக்கை 200ஐ கடந்த நிலையில், 2018ம் ஆண்டில் 181 படங்கள் மட்டுமே வ வெளிவந்துள்ளன.


2. தயாரிப்பாளர் சங்கம் படங்களை வெளியிட மறுத்து பிப்ரவரி 24 முதல் ஏப்ரல் 19 வரையில் எந்த புதுப் படங்களையும் வெளியிடவில்லை

3. சினிமா டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டது. அதனால், டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்தன.

4. தியேட்டர் கட்டணங்களுக்கு வரி விதிப்பு மாற்றம் செய்யப்பட்டதால் தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்பது இல்லாமல் போனது. ஆங்கிலப் பெயர்களில் படங்கள் வர ஆரம்பித்தன

5. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்த இரண்டு படங்கள் காலா, 2.0, ஒரே ஆண்டில் வெளிவந்தன.

6. கமல்ஹாசன் நடித்து இந்த ஆண்டில் 'விஸ்வரூபம் 2' படம் மட்டுமே வெளிவந்தது.

7. அஜித் நடித்து இந்த ஆண்டில் ஒரு படம் கூட வெளிவரவில்லை.
ரூ.250 கோடி வசூல்

8. விஜய் நடித்த 'சர்கார்' படம் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி 250 கோடியை வசூல் செய்தது.

9. தமிழ் சினிமாவில் அதிக செலவு செய்து எடுக்கப்பட்ட படமான 2.0 நவம்பர் 29ம் தேதி வெளியானது.
10. அதிகப் படங்களில் நடித்த நடிகர் விஜய் சேதுபதி, அவர் நடித்த 5 படங்கள் வெளியாகின.


11. அதிகப் படங்களில் நடித்த நடிகை வரலட்சுமி. அவர் நடித்த 5 படங்கள் வெளிவந்தன.

12. அதிகப் படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சிஎ ஸ். அவரது இசையில் 8 படங்கள் வெளிவந்தன.

13. இரண்டாம் பாகப் படங்கள் அதிகமாக வெளிவந்த ஆண்டு இது, மொத்தம் 8 இரண்டாம் பாகப் படங்கள் வெளிவந்தன.

14. ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் 2.0 படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

சாதனை

15. குலேபகாவலி படத்தில் இடம் பெற்ற 'குலேபா..' பாடல் 8 கோடிக்கும் அதிகமான பார்வைகளை யு டியூபில் பெற்று சாதனை படைத்தது.

16. சர்கார் டீசர் 14 லட்சம் லைக்குகளைப் பெற்று, யு டியுபில் அதிக லைக்குகளைப் பெற்ற டிசர் என்ற சாதனையைப் பெற்றது. அதிகப் பார்வையிலும் 3 கோடியே 59 லட்சம் பெற்று முதலிடத்தில் உள்ள டீசர் இதுதான்.

17. நடிகர் சிவகார்த்திகேயன் 'கனா' படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார்.

18. 'மேற்குத் தொடர்ச்சி' படம் மூலம் நடிகர் விஜய் சேதுபதியும் தயாரிப்பாளர் ஆனார்.

19. தமிழ்நாட்டில் அதிக வசூலைப் பெற்ற படங்களில் 'சர்கார்' படத்திற்கு முதலிடம்

20. 'பரியேறும் பெருமாள்' படம் மூலம் இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பாளர் ஆனார்.

21. உலக அளவில் அதிக வசூலைப் பெற்ற படங்களில் '2.0' படத்திற்கு முதலிடம்

22. நீண்ட இடைவெளிக்குப் பின் தனுஷ், யுவன் கூட்டணி சேர்ந்த படம் 'மாரி 2'. இப்படத்தில் தனுஷுக்காக இளையராஜா ஒரு பாடல் பாடியுள்ளார்.

23. ரகுமான் உறவினர் காஷிப் இந்த ஆண்டில் வெளிவந்த 'காற்றி மொழி' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம்

24. இந்த ஆண்டில் 2 பெண் இசையமைப்பாளர்கள் அறிமுகம் சிவாத்மிகா (ஆண்டனி), ஜனனி (பிரபா).

25. பெண் இயக்குனர்கள் கிருத்திகா உதயநிதி இயக்கிய காளி, பிஆர் விஜயலட்சுமி இயக்கிய 'அபியும் அனுவும்' இந்த ஆண்டில் வெளிவந்தன.

26. இந்த ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை இயக்கியவர்கள் இருவர் மட்டுமே. விஜய் (தியா, லட்சுமி), சந்தோஷ் ஜெயக்குமார் (இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த்).

டிவியில் நடிகர்கள்

27. நடிகர் விஷால், 'நாம் இருவர்', நடிகை ஸ்ருதிஹாசன், 'ஹலோ சகோ' மற்றும் நடிகை வரலட்சுமி 'உன்னை அறிந்தால்' நிகழ்ச்சிகள் மூலம் டிவியில் அறிமுகம்.

28. பாபி சிம்ஹா, பார்வதி உள்ளிட்ட பலர் திரைப்பிரபலங்கள் சினிமாவின் அடுத்தக்கட்டமான வெப்சீரிஸில் களமிறங்கினர்.

29. தமிழ்ப் படங்களில் நடித்த நடிகைகள் ஸ்ரேயா, பாவனா, இஷாரா, பிரியங்கா சோப்ரா, சுவாதி, சுஜா வருணி, நடிகர் அசோக், கதிர் இந்த ஆண்டில் திருமணம்

அறிமுகம்

30. 'பிரேமம்' படப் புகழ் நடிகை சாய் பல்லவி தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகம்

31. திரைத்துறையைச் சார்ந்த கலைஞர் கருணாநிதி, ஸ்ரீதேவி, சிவி ராஜேந்திரன், பாலகுமாரன் போன்ற பிரபலங்கள் மரணம் அடைந்தார்கள்.

32. நடிகர் தம்பி ராமையா, 'மணியார் குடும்பம்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம்

33. சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா 'கனா' படத்தின் மூலம் பாடகியாக அறிமுகம்

34. 'கபாலி' படத்தில் 'நெருப்புடா' பாடலை எழுதிய அருண் ராஜா காமராஜ் 'கனா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம்

35. மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் அப்பா கார்த்திக், மகன் கௌதம் முதல் முறையாக இணைந்து நடித்தனர்.

36. இசையமைப்பாளர் பரணி, 'ஒண்டிக்கட்ட' படம் மூலம் இயக்குனராக அறிமுகம்

37. சமந்தா நடித்த 'சீமராஜா, யு டர்ன்' ஆகிய படங்கள் ஒரே நாளில் (செப்டம்பர் 13) நாளில் வெளிவந்தன.

38. 'சாமி 2' படத்தில் 'புது மெட்ரோ ரயில்' பாடல் மூலம் கீர்த்தி சுரேஷ் பாடகியாக அறிமுகம்

39. அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு நடித்த இந்த ஆண்டின் ஒரே மல்டிஸ்டார் படம் மணிரத்னம் இயக்கிய 'செக்கச் சிவந்த வானம்'

40. தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொன்டா 'நோட்டா' படம் மூலம் தமிழில் அறிமுகம்

41. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்த முதல் படம் 'பியார் பிரேமா காதல்' வெளிவந்தது

42. பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளர் ரைசா வில்சன் 'பியார் பிரேமா காதல்' படம் மூலம் நாயகியாக அறிமுகம்

43. முதன்முறையாக கமல் தயாரிக்கும் கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார்.

44. அதிக கதாநாயகிகள் நடித்த படமாக 'காளி' படம் அமைந்தது. அந்தப் படத்தில் அஞ்சலி, ஷில்பா மஞ்சுநாத், சுனைனா, அம்ரிதா என நான்கு கதாநாயகிகள் நடித்தனர்

45. 'காலா' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ஹிந்தி நடிகை ஹுமா குரேஷி அறிமுகம்

46. நீண்ட இடைவெளிக்குப் பின் ஹிந்தி நடிகர் நானா படேகர் தமிழ்ப் படமான 'காலா' படத்தில் நடித்தார்

47. அரவிந்த்சாமி ஜோடியாக முதல் முறையாக 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் ஜோதிகா நடித்தார்.


48. நடிகர் விஷ்ணு விஷால் விவாகரத்து அறிவிப்பு

49. சமூக வலைத்தளங்களில் இந்த வருடத்திலும் அஜித், விஜய் ரசிகர்களின் மோதல் தொடர்கிறது

50. நீளமான தலைப்பு கொண்ட படமாக 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற படம் வெளியானது

51. தேதியைத் தலைப்பாகக் கொண்ட படங்களாக 'டிசம்பர் 13, 18-05-2009' ஆகிய படங்கள் வெளியானது

52. எண்களையும் தலைப்பாகக் கொண்ட படங்களாக '96, 2.0' ஆகிய படங்கள் வெளியாகின

53. இதற்கு முன் வெளிவந்த படங்களின் தலைப்புகளை வைத்து “சாவி, குலேபகாவலி, சரணாலயம், மதுரை வீரன், வீரா, காளி, டிக் டிக் டிக், அண்ணனுக்கு ஜே, ஜானி” ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன

54. 'கோலமாவு கோகிலா' படத்தின் 'கல்யாண வயசு' பாடல் மூலம் சிவகார்த்திகேயன் பாடல் ஆசிரியராகவும் அறிமுகம்

55. ஆங்கிலப் பெயர்களில் 'ஸ்கெட்ச், மெர்க்குரி, டார்ச்லைட், யு டர்ன், நோட்டா, ஜீனியஸ்” ஆகிய படங்கள் வெளிவந்தன.


56. 'மன்னர் வகையறா' படத்தின் மூலம் நடிகர் விமல் தயாரிப்பாளராக அறிமுகம்

57. 'ஜருகண்டி' படத்தின் மூலம் நடிகர் நிதின் சத்யா தயாரிப்பாளராக அறிமுகம்

58. நடன இயக்குனர் தினேஷ் 'ஒரு குப்பைக் கதை' படத்தில் நாயகனாக அறிமுகம்

59. நடிகை காயத்ரி, '96' படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்தார்

மீடு சர்ச்சை

60. மீ டூ சர்ச்சையை எழுப்பினார் பின்னணிப் பாடகி சின்மயி. வைரமுத்து மீது காரசாரமான புகார். அதைத்தொடர்ந்து நிறைய பேர் மீடூ புகாரில் சிக்கினர்.

61. வட சென்னை படத்தில் இடம் பெற்ற கெட்ட வார்த்தையால் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது

62. சந்தானம் நடித்து இந்த ஆண்டு ஒரு படம் கூட வெளிவரவில்லை

63. சர்கார் படத்தில் அரசின் இலவசங்களைக் கிண்டல் செய்ததாக இயக்குனர் ஏஆர் முருகதாஸ் மீது வழக்கு

64. சர்கார் பட கதை விவகாரம் குறித்து எழுத்தாளர் சங்கத் தலைவர் பாக்யராஜ் பகிரங்க குற்றச்சாட்டு, ராஜினாமா நடந்தேறி, மீண்டும் பதவியேற்பு
65. 'நரகாசூரன்' படத் தயாரிப்பு விவகாரத்தில் இயக்குனர் கவுதம் மேனன் மீது இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் புகார்


66. இயக்குனர் சுசீந்திரன் மீது ஒளிப்பதிவாளர், நடிகர் நட்ராஜ் சுப்பிரமணியம் குற்றச்சாட்டு

67. ஜெயலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க மூன்று இயக்குனர்கள் போட்டி. பெண் இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கும் ஜெயலலிதா படத்தில் ஜெயலலிதாவாக நடிகை நித்யா மேனன் நடிக்கிறார்

68. தம்பி கார்த்தி நாயகனாக ந டிக்க அண்ணன் சூர்யா தயாரித்த 'கடைக்குட்டி சிங்கம்' படம் வெளியானது

69. 2.0 படம் ஹிந்தியில் டப்பிங் ஆகி வெளியாகி 200 கோடியை வசூலித்தது

70. பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகை ரித்விகா தேர்வு செய்யப்பட்டார்

சவுதியில் தமிழ்படம்

71. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சவுதி அரேபியாவில் வெளியான முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை 'காலா' படம் பெற்றது

72. பிரியதர்ஷன் இயக்கத்தில் இளையராஜா இசையமைக்க பிரகாஷ்ராஜ் நடித்த 'சில சமயங்களில்' படம் தியேட்டர்களில் வெளியாகாமல் 'நெட்பிளிக்ஸ்-ல் வெளியானது

73. தெலுங்கு நடிகர் நாக சௌரியா 'தியா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்


74. ஒரே ஆண்டில் அறிமுகமாகி இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்த நாயகி என்ற பெருமையை ராஷி கண்ணா பெறுகிறார். அவர் நடித்து வெளிவந்த படங்கள் 'இமைக்கா நொடிகள், அ டங்க மறு'.

75. ஹிந்தி திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப்,'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக அறிமுகம்

76. மலையாள நடிகர் டொவினோ தாமஸ், தமிழில் 'அபியும் அனுவும்' படத்தில் நாயகனாக அறிமுகமாகி இரண்டாவது படமான 'மாரி 2'வில் வில்லனாகவும் நடித்தார்

77. அதிகப் படங்கள் வெளிவந்த மாதம் ஆகஸ்ட். மொத்தம் 27 படங்கள். குறைந்த படங்கள் வெளிவந்த மாதம் மார்ச், ஒரே ஒரு படம் வெளியானது.

78. அப்பா அர்ஜுன் இயக்க மகள் ஐஸ்வர்யா நடிக்க 'சொல்லிவிடவா' என்ற படம் வெளிவந்தது.

79. விஜய் சேதுபதியின் 25வது படம் 'சீதக்காதி' வெளிவந்தது

80. 100 நாள் ஓடிய படம் என 'இமைக்கா நொடிகள், கடைக்குட்டி சிங்கம், மன்னர் வகையறா, திருவிக பூங்கா' ஆகிய படங்கள் விளம்பரப்படுத்தப்பட்டன

81. “தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், கலகலப்பு 2, கோலமாவு கோகிலா, நாச்சியார், வனபத்ரகாளி, காலா, செக்கச் சிவந்த வானம், பரியேறும் பெருமாள், ராட்சசன், சர்கார், வட சென்னை, டிக் டிக் டிக், தமிழ்ப் படம் 2,” ஆகிய படங்கள் 50 நாட்களைக் கடந்த ஓடின.

82. திருமணத்திற்குப் பின்னும் நாயகியாக நடித்து வருகிறார் சமந்தா. அவர் நடித்து இந்த ஆண்டில் 'இரும்புத் திரை, சீமராஜா, யு டர்ன்' ஆகிய படங்கள் வெளிவந்தன.

83. தெலுங்கு நடிகர் நாகபாபு மகள் நிகரிகா, 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகம்

84. வாரிசு அறிமுகங்களில் நடிகர் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவி, டிக் டிக் டிக் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்



85. நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் தெலுங்கிலிருந்து டப்பிங் ஆனது. படம் தமிழில் எடுக்கப்படவில்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தமளித்தது.

86. காப்பிரைட், ராயல்டி விவகாரங்களில் இளையராஜாவைப் பற்றிய சர்ச்சை மீண்டும் எழுந்தது

87. செல்பி எடுக்க வந்தவரின் போனைத் தட்டி விட்டதால் நடிகர் சிவகுமார் மீது சமூக வலைத்தளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டனர்

88. கடந்த ஆண்டுகளில் முன்னணி நடிகைகளாக இருந்த லட்சுமி மேன், ஸ்ரீதிவ்யா, அனுஷ்கா, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்த படங்கள் ஒன்று கூட இந்த ஆண்டு வெளிவரவில்லை

89. தனுஷ் நடித்த ஆங்கிலம், மற்றும் பிரெஞ்ச் படமான 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் த பாகிர்' படம் வெளிவந்து, வரவேற்பைப் பெறாமல் போனது.

90. யு டியூபில் வெளியான மோஷன் போஸ்டர்களில் அதிக பார்வைகளைப் பெற்ற படம் என்ற சாதனையை 'விஸ்வாசம்' பெற்றது. ஒரு கோடியை நெருங்குகிறது அந்த போஸ்டரின் பார்வைகள்

91. அஜித்தின் விஸ்வாசம் படம் மூலம் முதன் முறையாக இசையமைத்துள்ளார் இமான்

92. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கிறார். வினோத் இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டில் வெளியாகும்

93. இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படம் ஆரம்பமாகி குறுகிய காலத்தில் நிறைவுற்றது. 2019 பொங்கலுக்கு இப்படம் வெளியாகிறது.

94. ஸ்டிரைக் நாட்கள் தவிர மற்ற அனைத்து வாரங்களிலும் புதிய படங்கள் வெளிவந்தன. ஒரே நாளில் அதிகமாக வந்த படங்கள் என்ற பெருமையை ஆகஸ்ட் 3ம் தேதி பெற்றது. அன்றைய தினம் 10 படங்கள் வெளிவந்தன.
95. ஹன்சிகா நடிக்கும் 50வது படமான மஹா போஸ்டரில், புகைப்பிடிப்பது, காவி உடை போன்ற காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.


96. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக இருந்த ஆர்.கே.சுரேஷ், உதயா, இருவரும் விஷால் மீதான அதிருப்தியில் பதவி விலகினர்.

97. தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிர்ப்பாளர்கள் பூட்டு, நீதிமன்றம் சென்று பூட்டைத் திறந்தார் சங்கத் தலைவர் விஷால்.

98. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கவுதம் மேனனுக்கு பதிலாக துணை தலைவராக பார்த்திபன் நியமனம்.

99. சிம்பு மீது 'வல்லவன்' படத் தயாரிப்பாளர் குற்றச்சாட்டு, அவரால் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து இன்னும் மீளவில்லை என படத் தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன் குற்றச்சாட்டு.

100. ஆண்டின் இறுதியில் ரஜினியின் பேட்ட படம் டிரைலர் ரிலீஸாகி, ரஜினி ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி இளமையான தோற்றத்திற்கு மாறி நடித்ததே காரணம்.
நன்றி தினமலர்.

வியாழன், 9 ஜனவரி, 2020

நடிகர் ஜெய்சங்கர்


#ஜெய்சங்கர்

ஜெய்சங்கர் (1938 - சூன் 3, 2000) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார்.

ஜெய்சங்கர்
Jaishankar.jpg
ஜெய்சங்கர்
பிறப்பு
சுப்பிரமணியம் சங்கர்
சூலை 12, 1938
சென்னை, இந்தியா
இறப்பு
சூன் 3, 2000 (அகவை 61)
சென்னை, இந்தியா
செயல்பட்ட
ஆண்டுகள்
1965-1998
வலைத்தளம்
http://www.jaishankar.in

(சி. ஐ. டி. வேடத்தில்) ஜெய்சங்கர்
திரைப்படங்கள் தொகு
பட்டதாரியான இவர், 1965-ல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்தார். ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான திரைப்படங்களின் விவரம் பார்க்க, ஜெய்சங்கர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

சக நடிகர்கள்

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் முதலியோர் நடித்த அதே கால கட்டத்தில் நடித்தாலும், இவருக்கென ரசிகர்கள் இருந்தார்கள். இவரது சமகால நடிகர்களான முத்துராமன், ரவிச்சந்திரன் போன்றோருடனும் இவர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிறகு, ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளையில் வில்லனாகப் புதிய பரிமாணத்தில் தோன்றி பாராட்டுக்களைப் பெற்றார். அதன்பிறகு, பல படங்களிலும் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பரிமளித்தார்.

ரசிகர்கள் அளித்த பட்டப் பெயர்கள் தொகு
ஜெய்சங்கர் சண்டைப் படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், குடும்பக்கதைகளிலும் அதிகம் நடித்து பெயர் வாங்கினார். பல திரைப்படங்களில் துப்பறிபவராகவும், காவலராகவும் வேடம் ஏற்று நடித்ததால் இவரை தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் எனவும் தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் எனவும் ரசிகர்கள் அழைத்தனர். இவர் பற்பல திரைப்படங்களில் குறைந்த இடைவெளிகளில் தொடர்ந்து நடித்ததால், இவரது படங்கள் வாரம் ஒன்றென வெளிவந்த வண்ணம் இருந்ததன் காரணமாக இவர் 'Friday hero' (வெள்ளிக்கிழமை நாயகர்) எனவும் அழைக்கப்பட்டார்.

பெற்ற விருதுகள்

கலைமாமணி விருது
மரணம் தொகு
2000-ஆம் ஆண்டு சூன் 3- ஆம் தேதி அன்று, சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில், தனது 62-ஆம் வயதில் ஜெய்சங்கர் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு பின்னர் இவரது மகன் டாக்டர் விஜய் சங்கர், தனது தந்தையின் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் துவங்கினார்.


அறிமுகமான வருடத்தில் நாலு ஹிட் தந்த ஜெய்சங்கர்; 3-வது படத்திலேயே ஜெயலலிதாவுடன் ஜோடி!
By செய்திப்பிரிவு
Published: 19 Nov, 19 02:46 pmModified: 19 Nov, 19 02:59 pm
 

வி.ராம்ஜி

முதல் படம் அறிமுகமான ஆண்டில், நான்கு படங்களில் நடித்தார் ஜெய்சங்கர். நான்கு படங்களுமே நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. மூன்றாவது படத்திலேயே ஜெய்சங்கரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்தார்கள். இதிலொரு சுவாரஸ்யம்... இருவருமே ஒரே வருடத்தில் அறிமுகமானார்கள். ஜெய்சங்கரின் முதல் படம் ‘இரவும் பகலும்’. சிட்டாடல் தயாரிக்க, ஜோஸப் தளியத் இயக்கத்தில் உருவான இந்தப் படம்தான் ஜெய்சங்கரின் முதல் படம். இதில் வசந்தா என்பவர் நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களும் செம ஹிட்டானது.

‘உள்ளத்தின் கதவுகள்’, ‘இரவும் வரும் பகலும் வரும்’, ‘இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான்’ என்று எல்லாப் பாடல்களுமே மக்களின் மனங்களில் இன்றைக்கும் தனியிடம் பிடித்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இதில், ‘இறந்தவனை சுமந்தவனும்’ பாடலை நடிகர் அசோகன் சொந்தக் குரலில் பாடியிருப்பார்.

இந்தப் படத்துக்கு கதை டி.என்.பாலு. பின்னாளில், டி.என்.பாலு இயக்கிய பல படங்களில் ஜெய்சங்கர்தான் நாயகன். இருவரும் அருமையான கூட்டணி என்று அப்போது திரையுலகில் பேசிக்கொண்டார்கள்.

1965-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி, பொங்கலன்று படம் வெளியானது. இதையடுத்து, இயக்குநர் கே.சங்கர் இயக்கத்தில், முத்துராமன், கே.ஆர்.விஜயா, நாகேஷ், மனோரமாவுடன் ஜெய்சங்கர் நடித்த ‘பஞ்சவர்ணக்கிளி’, மே 21-ம் தேதி வெளியானது. வித்தியாசமான, வில்லத்தனமான வேடத்தில் ஜெய்சங்கர் வெளுத்து வாங்கியிருப்பார். இந்தப் படமும் 100 நாட்களைக் கடந்து ஓடியது.

பிறகு, டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில், ‘நீ’ என்ற படத்தில் நடித்தார் ஜெய்சங்கர். இது அவருக்கு மூன்றாவது படம். இந்தப் படமும் காமெடி, செண்டிமெண்ட் கலந்துகட்டியிருந்ததால், வெற்றிப்படமாக அமைந்தது. ‘அடடா என்ன அழகு’, ‘வெள்ளிக்கிழமை’ என பாடல்கள் சிறப்பாகவே அமைந்திருந்தன.

இதன் பிறகுதான் ஜெய்சங்கருக்கு அப்படியொரு ஜாக்பாட் அடித்தது. பிரசித்திப் பெற்ற ஏவிஎம் நிறுவனம், இவரை நாயகனாக்கி ‘குழந்தையும் தெய்வமும்’ படத்தை நவம்பர் 19-ம் தேதி ரிலீஸ் செய்தது. இதில் ஜமுனா நடித்திருந்தார். ‘அன்புள்ள மான்விழியே’ பாட்டு ஒன்று போதாதா? இந்தப்படத்தின் தன்மையையும் வெற்றியையும் சொல்வதற்கு!

ஆக, அறிமுகமான ஆண்டில், ‘இரவும் பகலும்’, ‘பஞ்சவர்ணக்கிளி’, ‘நீ’, ‘குழந்தையும் தெய்வமும்’ என நான்கு படங்களில் நடித்தார். நான்கிலும் ஜெய்சங்கருக்கு நல்ல பெயர் கிடைத்தது.

இதே ஆண்டில்தான் ஜெயலலிதாவும் அறிமுகமானார். ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ முதல் படம். அடுத்து ‘ஆயிரத்தில் ஒருவன்’. செப்டம்பர் 10-ம் தேதி மீண்டும் எம்ஜிஆருடன் தேவர் பிலிம்ஸ் படமான ‘கன்னித்தாய்’ படத்தில் நடித்தார். முன்னதாக ஆகஸ்ட் 21-ம் தேதி, ஜெய்சங்கருடன் ‘நீ’ படத்தில் நடித்தார். ஆக, ஜெயலலிதாவும் இந்த வருடத்தில், அதாவது அறிமுகமான வருடத்தில், நான்கு படங்களில் நடித்தார்.

’நீ’ படத்தில் சுவாரஸ்யம். ஜெய்சங்கரும் ஜெயலலிதாவும் இந்தப் படத்தில்தான் முதன்முதலாக இணைந்து நடித்தார்கள். இன்னொரு சுவாரஸ்யம்... இருவருமே இதே வருடத்தில்தான் அறிமுகமானார்கள். ஜெய்சங்கருக்கு ‘இரவும் பகலும்’. ஜெயலலிதாவுக்கு ‘வெண்ணிற ஆடை’. கூடுதல் சுவாரஸ்யம்... ஜெய்சங்கருக்கு மட்டுமல்ல... ஜெயலலிதாவுக்கும் இது மூன்றாவது படம். 65-ம் ஆண்டு, ஏப்ரல் 14-ம் தேதி ‘வெண்ணிற ஆடை’ வெளியானது. ஜூலை 9-ம் தேதி எம்ஜிஆருடன் முதன்முதலாக இணைந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ வெளியானது. மூன்றாவதாக, ஆகஸ்ட் 21-ம் தேதி ‘நீ’ என்ற திரைப்படம் வெளியானது.

இன்னொரு கொசுறு சுவாரஸ்யம்... 65-ம் ஆண்டில் அறிமுகமான ஜெய்சங்கர் அதே வருடத்தில் நான்கு படங்களில் நடித்தார். அதேபோல், அதேவருடம் அறிமுகமான ஜெயலலிதாவும் அதே வருடத்தில் நான்கு படங்களில் நடித்தார்.

ஜெய்சங்கர், ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். ஜெய்சங்கர் மேடை நாடக நடிகராக இருந்து சினிமாத் துறைக்கு வந்தவர். அதனால் தனது அறிமுகத் திரைப்படத்திலேயே சிறப்பாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றவர். தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் எனவும் தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் எனவும் ரசிகர்களால் அழைக்கபட்ட இவர் பலதரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். ஜெய்சங்கர் அதிரடிக் கதாநாயகன், நகைச்சுவைக் கதாநாயகன் கதாபாத்திரம், குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லனாகவும் பல்வேறு வேடங்களில் 200 க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஜெய்சங்கர் நடித்த தமிழ் திரைப்படங்கள் வரிசை பின்வருமாறு: (இது முழுமையான பட்டியல் அல்ல.)

வருடம் திரைப்படம் குறிப்பு
1965 இரவும் பகலும்
1965 எங்க வீட்டுப் பெண்
1965 பஞ்சவர்ணக்கிளி
1965 குழந்தையும் தெய்வமும்
1965 ஒரு விரல்
1965 வல்லவனுக்கு வல்லவன்
1965 விளக்கேற்றியவள்
1966 கௌரி கல்யாணம்
1966 இரு வல்லவர்கள்
1966 காதல் படுத்தும் பாடு
1966 நாம் மூவர்
1966 வல்லவன் ஒருவன்
1966 யார் நீ
1967 காதலித்தால் போதுமா
1967 பட்டணத்தில் பூதம்
1967 சபாஷ் தம்பி
1967 ராஜா வீட்டுப் பிள்ளை
1967 பவானி
1968 பொம்மலாட்டம்
1968 நீலகிரி எக்ஸ்பிரஸ்
1968 நேர் வழி
1968 ஜீவனாம்சம்
1968 முத்துச்சிப்பி
1968 டீச்சரம்மா
1968 உயிரா மானமா
1968 அன்பு வழி
1968 சிரித்த முகம்
1969 அக்கா தங்கை
1969 அன்பளிப்பு
1969 அத்தைமகள்
1969 கன்னிப் பெண்
1969 மனசாட்சி
1969 மன்னிப்பு
1969 நான்கு கில்லாடிகள்
1969 நில் கவனி காதலி
1969 பெண்ணை வாழ விடுங்கள்
1969 பொண்ணு மாப்பிள்ளை
1969 பூவா தலையா
1969 ஆயிரம் பொய்
1970 சி.ஐ.டி.சங்கர்
1970 நிலவே நீ சாட்சி
1970 காலம் வெல்லும்
1970 கல்யாண ஊர்வலம்
1970 கண்ணன் வருவான்
1970 காதல் ஜோதி
1970 மாணவன்
1970 பெண் தெய்வம்
1970 வீட்டுக்கு வீடு
1970 எதிர் காலம்
1971 கெட்டிக்காரன்
1971 குலமா குணமா
1971 நான்கு சுவர்கள்
1971 புதிய வாழ்க்கை
1971 சூதாட்டம்
1971 தேன் கிண்ணம்
1971 வீட்டுக்கு ஒரு பிள்ளை
1971 அன்புக்கு ஒரு அண்ணன்
1971 தங்க கோபுரம்
1971 நூற்றுக்கு நூறு
1971 யானை வளர்த்த வானம்பாடி மகன்
1972 அவசர கல்யாணம்
1972 தெய்வ சங்கல்பம்
1972 கங்கா
1972 கண்ணம்மா
1972 கருந்தேள் கண்ணாயிரம்
1972 காதலிக்க வாங்க
1972 நவாப் நாற்காலி
1972 ராணி யார் குழந்தை
1972 உனக்கும் எனக்கும்
1972 வரவேற்பு
1972 ஆசீர்வாதம்
1972 பதிலுக்கு பதில்
1972 சவாலுக்கு சவால்
1972 டில்லி டு மெட்ராஸ்
1972 மாப்பிள்ளை அழைப்பு
1973 அம்மன் அருள்
1973 அன்புச் சகோதரர்கள்
1973 ஜக்கம்மா
1973 மல்லிகைப் பூ
1973 பொன்வண்டு
1973 பிரார்த்தனை
1973 சொந்தம்
1973 தலைப்பிரசவம்
1973 வாக்குறுதி
1973 வந்தாளே மகராசி
1973 வாயாடி
1973 விஜயா
1973 தெய்வக் குழந்தைகள்
1973 தெய்வாம்சம்
1974 அக்கரைப் பச்சை
1974 அத்தையா மாமியா
1974 கலியுகக் கண்ணன்
1974 கல்யாணமாம் கல்யாணம்
1974 பந்தாட்டம்
1974 பிராயசித்தம்
1974 ரோஷக்காரி
1974 திருடி
1974 உங்கள் விருப்பம்
1974 உன்னைத்தான் தம்பி
1974 வைரம்
1974 அப்பா அம்மா
1974 மகளுக்காக
1974 இதயம் பார்க்கிறது
1975 சினிமா பைத்தியம்
1975 எடுப்பார் கைப்பிள்ளை
1975 உங்க வீட்டு கல்யாணம்
1975 எங்க பாட்டன் சொத்து
1975 தாய் வீட்டு சீதனம்
1975 தொட்டதெல்லாம் பொன்னாகும்
1976 மேயர் மீனாட்சி
1976 மிட்டாய் மம்மி
1976 நீ ஒரு மகாராணி
1976 ஒரே தந்தை
1976 ஒரு கொடியில் இரு மலர்கள்
1976 பணக்கார பெண்
1976 துணிவே துணை
1976 வாயில்லா பூச்சி
1976 ஜஸ்டிஸ் கோபிநாத்
1976 மகராசி வாழ்க
1977 ஆசை மனைவி
1977 அன்று சிந்திய ரத்தம்
1977 காயத்ரி
1977 காலமடி காலம்
1977 மாமியார் வீடு
1977 நல்லதுக்கு காலமில்லை
1977 ஒருவனுக்கு ஒருத்தி
1977 பாலாபிஷேகம்
1977 ராசி நல்ல ராசி
1977 ரௌடி ராக்கம்மா
1977 சொந்தமடி நீ எனக்கு
1977 சக்ரவர்த்தி
1977 கியாஸ்லைட் மங்கம்மா
1977 நீ
1978 அவள் ஒரு அதிசயம்
1978 கங்கா யமுனா காவேரி
1978 இது எப்படி இருக்கு
1978 மக்கள் குரல்
1978 மேளதாளங்கள்
1978 முடிசூடா மன்னன்
1978 பஞ்சாமிர்தம்
1978 ராஜாவுக்கேத்த ராணி
1978 சக்கைப் போடு போடு ராஜா
1978 டாக்ஸி டிரைவர்
1978 உள்ளத்தில் குழந்தையடி
1978 வணக்கத்துக்குரிய காதலியே
1978 வண்டிக்காரன் மகன்
1978 வாழ நினைத்தால் வாழலாம்
1978 இளையராணி ராஜலட்சுமி
1979 ஆடு பாம்பே
1979 தைரியலட்சுமி
1979 கடமை நெஞ்சம்
1979 காமசாஸ்திரம்
1979 கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன
1979 குழந்தையைத் தேடி
1979 மகாலட்சுமி
1979 மாயாண்டி
1979 நான் ஒரு கை பார்க்கிறேன்
1979 நெஞ்சுக்கு நீதி
1979 ஒரே வானம் ஒரே பூமி
1980 ஜம்பு
1980 காலம் பதில் சொல்லும்
1980 முரட்டுக்காளை
1980 சரணம் ஐயப்பா
1981 அஞ்சாத நெஞ்சங்கள்
1981 எல்லாம் இன்பமயம்
1981 கர்ஜனை
1981 கன்னித்தீவு
1981 கீழ்வானம் சிவக்கும்
1981 குலக்கொழுந்து
1981 நீதி பிழைத்தது
1981 ரத்தத்தின் ரத்தம்
1981 சவால்
1982 அதிசய பிறவிகள்
1982 அஸ்திவாரம்
1982 ஆட்டோராஜா
1982 நன்றி மீண்டும் வருக
1982 ஓம் சக்தி
1982 ஒரு வாரிசு உருவாகிறது
1982 பட்டணத்து ராஜாக்கள்
1982 தாய் மூகாம்பிகை
1982 தனிக்காட்டு ராஜா
1982 தீர்ப்பு
1982 வாழ்வே மாயம்
1983 அபூர்வ சகோதரிகள்
1983 அடுத்த வாரிசு
1983 என் ஆசை உன்னோடு தான்
1983 என்னைப் பார் என் அழகைப் பார்
1983 இன்று நீ நாளை நான்
1983 கைவரிசை
1983 கண் சிவந்தால் மண் சிவக்கும்
1983 மலையூர் மம்பட்டியான்
1983 பாயும் புலி
1983 சட்டம்
1983 தாய் வீடு
1983 தம்பதிகள்
1983 தங்க மகன்
1983 துடிக்கும் கரங்கள்
1984 24 மணி நேரம்
1984 ஆலய தீபம்
1984 அம்மா இருக்கா
1984 சரித்திர நாயகன்
1984 எழுதாத சட்டங்கள்
1984 இது எங்க பூமி
1984 இரு மேதைகள்
1984 கடமை
1984 நீங்கள் கேட்டவை
1984 சட்டத்தை திருத்துங்கள்
1984 திருப்பம்
1984 வாழ்க்கை
1984 வீட்டுக்கு ஒரு கண்ணகி
1984 வெள்ளை புறா ஒன்று
1984 விதி
1984 எழுதாத சட்டங்கள்
1984 குடும்பம்
1985 ஆஷா
1985 அந்தஸ்து
1985 அர்த்தமுள்ள ஆசைகள்
1985 அவன்
1985 பந்தம்
1985 சாவி
1985 மூக்கணாங்கயிறு
1985 நேர்மை
1985 ஊஞ்சலாடும் உறவுகள்
1985 சமயபுரத்தாளே சாட்சி
1985 சிவப்பு நிலா
1985 வேலி
1985 யார்
1985 அதிசய மனிதன்
1985 படிக்காதவன்
1985 பிள்ளை நிலா
1985 பூவே பூச்சூடவா
1985 சாட்சி
1986 அன்னை என் தெய்வம்
1986 ஜோதி மலர்
1986 கைதியின் தீர்ப்பு
1986 கண்ணே கனியமுதே
1986 குங்கும பொட்டு
1986 மாவீரன்
1986 மச்சக்காரன்
1986 மருமகள்
1986 மீண்டும் பல்லவி
1986 முரட்டு கரங்கள்
1986 நானும் ஒரு தொழிலாளி
1986 நம்பினார் கெடுவதில்லை
1986 ஊமை விழிகள்
1986 ரசிகன் ஒரு ரசிகை
1986 ரேவதி
1986 சிவப்பு மலர்கள்
1986 பதில் சொல்வாள் பத்ரகாளி
1987 அஞ்சாத சிங்கம்
1987 கூலிக்காரன்
1987 இவர்கள் இந்தியர்கள்
1987 இவர்கள் வருங்காலத் தூண்கள்
1987 கதை கதையாம் காரணமாம்
1987 காதல் பரிசு
1987 பருவ ராகம்
1987 சொல்லுவதெல்லாம் உண்மை
1987 வைராக்கியம்
1987 வீர பாண்டியன்
1987 விலங்கு
1987 ஒரு தாயின் சபதம்
1988 என் ஜீவன் பாடுது
1988 இரண்டில் ஒன்று
1988 ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்
1988 தாய் பாசம்
1988 ஜாடிக்கேத்த மூடி
1989 திராவிடன்
1989 மாப்பிள்ளை
1989 நாளைய மனிதன்
1989 பொன்மன செல்வன்
1989 பொண்ணு பாக்க போறேன்
1989 பொறுத்தது போதும்
1989 தாய்நாடு
1989 அபூர்வ சகோதரர்கள்
1990 அம்மா பிள்ளை
1990 ஆரத்தி எடுங்கடி
1990 கல்யாண ராசி
1990 மௌனம் சம்மதம்
1990 பாலைவன பறவைகள்
1990 13-ம் நம்பர் வீடு
1991 தளபதி
1991 மில் தொழிலாளி
1991 நாட்டுக்கு ஒரு நல்லவன்
1991 நீ பாதி நான் பாதி
1991 சார் ஐ லவ் யூ
1991 வணக்கம் வாத்தியாரே
1991 ஆயுள் கைதி
1992 கஸ்தூரி மஞ்சள்
1992 நாடோடிப் பாட்டுக்காரன்
1992 நாளைய செய்தி
1992 நட்சத்திர நாயகன்
1992 சிங்கார வேலன்
1993 ஏர்போர்ட்
1993 துருவ நட்சத்திரம்
1993 கோகுலம்
1993 மின்மினி பூச்சிகள்
1993 முதல் பாடல்
1994 என் ராஜாங்கம்
1994 கண்மணி
1994 பிரியங்கா
1994 சிந்துநதிப் பூ
1994 வரவு எட்டணா செலவு பத்தணா
1995 அவள் போட்ட கோலம்
1995 சந்திரலேகா
1995 பாட்டு வாத்தியார்
1995 தாய் தங்கை பாசம்
1995 வாரார் சண்டியர்
1995 விஷ்ணு
1996 சுபாஷ்
1997 அருணாச்சலம்
1997 காலமெல்லாம் காத்திருப்பேன்
1997 காத்திருந்த காதல்
1998 புதுமைப்பித்தன்
1998 தர்மா
1998 இனி எல்லாம் சுகமே
1999 சின்ன ராஜா
1999 பூ வாசம்.


தர்பார் விமர்சனம்


தர்பார் விமர்சனம் 

கொடிகட்டிப் பறக்கும் போதை மருந்து கடத்தல் மாபியா கும்பலை வேட்டையாடும் போலீஸ் அதிகாரி என்பதே தர்பார் படத்தின் மூலக்கதையாக இருக்கிறது.

மும்பையில் போலீஸார் மீதான நம்பிக்கை மக்களிடையே குறைந்த சூழலால் அங்கு பணியாற்றும் போலீசார் வேலையை விட்டு செல்லும் மனநிலையில் இருக்கின்றனர். அப்போது, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்கும் ரஜினி மும்பை காவல் துறை ஆணையராக பொறுப்பேற்கிறார். இதனை அடுத்து, போதை மருந்து மாபியா கடத்திய பல பெண்களை அவர் காப்பாற்றுகிறார். மேலும், ஒரு அரசியல் பிரபலத்தின் மகனையும் காப்பாற்றுகிறார்.

போதை மருந்து மாபியாவின் கட்டுப்பாட்டில் இருந்த மும்பை நகரத்தை தனது கட்டுப்பாட்டில் ரஜினி கொண்டு வருகிறார். போதை மருந்து மாபியாவை ஒழித்துக்கட்ட நினைக்கும் ரஜினி, தொழிபதிபரின் மகனுக்கு இதில் தொடர்பு இருப்பதை கண்டறிந்து அவரை கைது செய்கிறார். எனினும், மகனை வெளியே கொண்டு வர தொழிலதிபர் பல வழிகளில் முயற்சிக்கிறார்.

பல தடைகளை சந்தித்த ரஜினி, அவரின் மகனை கொல்கிறார். இதன் பின்னரே, கதையில் கொஞ்சம் விறுவிறுப்பு ஏற்படுகிறது. கொல்லப்பட்டவரின் தந்தை உலகளவில் போதை மருந்து கடத்தல் செய்து வரும் தாதா சுனில் ஷெட்டியின் மகன் என பின்னர் தெரிய வருகிறது. தனது மகளைக் கொன்ற சுனில் ஷெட்டியை என்ன செய்தார் என்பது மீதிக்கதை.



படம் முழுக்க முழுக்க ரஜினியின் படமாகவே இருக்கிறது. தனக்கே உரித்தான ஸ்டைல், வசன உச்சரிப்பு என்று எனர்ஜிடிக் ஆக படம் முழுவதும் ரஜினி இருக்கிறார். காலா, பேட்ட என்று தொடர்ந்து வயதான கேரக்டரில் தோன்றிய ரஜினி, இந்தப்படத்தில் கொஞ்சம் இளமையான தோற்றத்தில் வருகிறார். இவருக்கு ஜோடியாக நடித்துள்ள நயன்தாராவுக்கு பெரிய அளவில் படத்தில் இடமில்லை. எனினும், ரஜினியின் மகளாக நடித்த நிவேதா தாமஸ் கவனிக்க வைக்கிறார்.

யோகிபாபுவின் காமெடி, அனிருத்தின் இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. கண்ணுல திமிரு பாட்டும், ரயில்வே ஸ்டேஷன் சண்டைக் காட்சிகளும் படத்தில் ரசிகர்கள் மிகவும் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும்? என்பதை படம் பார்ப்பவர்கள் கணிக்கும் வகையில் இருப்பது கதையின் பலவீனம். படத்தின் இரண்டாம் பாதி, ரசிகர்களை சோர்வடைய வைத்துள்ளது.

படத்தை காப்பாற்றுவது ரஜினியின் மாஸ் கேரக்டரும், அனிருத்தின் இசையும் என்றே படம் பார்த்தவர்கள் கூறும் கருத்தாக இருக்கிறது.
நன்றி நியூஸ் 18.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

சனி, 4 ஜனவரி, 2020

தமிழ்த் திரையில் மீனவர் வாழ்வு- புனைவும் புரட்டும் சில செய்திகள்



தமிழ்த் திரையில் மீனவர் வாழ்வு- புனைவும் புரட்டும் சில செய்திகள்

தமிழ்த் திரையில் மீனவர் வாழ்வு- புனைவும் புரட்டும் சில செய்திகள்

தரைமேல் பிறக்க வைத்தான்- எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான்.
கரைமேல் இருக்க வைத்தான்- பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான்.

என்ற பாடல் வரிகள் மீனவர் வாழ்வைப் பற்றிச் சிந்திக்கும் எவருக்கும் நினைவுக்கு வராமல் போகாது. ‘படகோட்டி’ எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்து மிகவும் பிரபலமாகவும், வெற்றிகரமாகவும் ஓடிய படம். இன்றைக்கும் மீனவர் வாழ்வின் அவலங்களை படகோட்டி அளவுக்கு(க்கூட) முன்வைத்த தமிழ்த் திரைப்படம் ஒன்றும் இல்லை அல்லது படகோட்டி ஃபார்முலாவை மீறிய தமிழ் (மீனவர்) திரைப்படம் ஒன்றுகூட இல்லை என்றே சொல்ல வேண்டிய நிலையுள்ளது.

படகோட்டிக்குப் பிறகு மீனவர் வாழ்வையும் கடற்கரைப் பிரதேசத்தையும் கதைக்களமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் கதை நிகழும் களமாக மீனவர் பகுதி அமைந்திருந்ததே தவிர கதையின் கரு காதல் அல்லது பழிக்குப் பழிவாங்கும் தமிழ்ச் சினிமாவின் அதே புளித்துபோன சரக்காகவே இருக்கிறது.

இவ்வாறான காதல் அல்லது குடும்ப உறவு பற்றிய சித்திரிப்பும் மீனவர்களின் வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டுவதாக இருப்பதில்லை. தமிழ்ச் சினிமாக்களில் ஏதோவொரு வகையில் மீனவர்களையும் அவர்களது வாழ்வையும் காட்சியாக்கியிருந்தவற்றை கணக்கிட்டுப் பார்த்தால் அவை விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளவிலேயே அமைந்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்திற்கும், அரசுக்கும், அரசியலாளர்களுக்கும் மீனவர் குறித்து எவ்வாறு ஒரு புரிதலும் அக்கறையும் இல்லையோ அவ்வாறே தமிழ்த்திரைத் துறையினர்க்கும் மீனவர் குறித்தும் அவர்களது வாழ்நிலை, பண்பாடு, தனித்தன்மை குறித்த எவ்விதப் புரிதலும், அக்கறையும் இல்லாமலிருக்கிறது என்பதையே இதுவரையிலான திரைப்பதிவுகளும் அல்லது புறக்கணிப்புகளும் சுட்டிக் காட்டுகின்றன.

கிராமமே இந்தியாவின் இதயம் என்று கூறிய மகாத்மாவின் கூற்றை அப்படியே பின்பற்றி கிராமப் புறத்தையே கதைக் களமாகவும், கிராமப்புறச்சாதிப் பண்பாட்டையும், நிலமானிய மதிப்பீடுகளையும், ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றை விண்ணளவு புகழ்ந்து போற்றும் திரைப்படங்களே தமிழ்ச் சினிமாவில் பெரும்பான்மையாகும். இந்நிலை இன்றளவும் தொடரும் அதே சமயம் அவற்றோடு உலக மயத்தின் தீவிரத்திற்குப்பின் நகர்ப்புறம் சார்ந்த பஃப், பிட்ஷா பண்பாடும் சரி பாதியளவு தமிழ்ச் சினிமாவைக் கைப்பற்றிக் கொண்டுவிட்டது.

ஆனால் தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட விளிம்பு நிலை மற்றும் சிறுபான்மையின மக்களும் அவர்களது வாழ்க்கையும் இன்றளவும் தமிழ்ச் சினிமாவில் தனக்குரிய பங்கைப் பெற முடியவில்லை. அவ்வாறு இவர்களது வாழ்வியலைக் காட்சியாகவும், இவர்களைக் கதாபாத்திரங்களாகவும் ஊறுகாயைப் போல் தொட்டுக் கொள்ளும் ஒரு சில திரைப்படங்களும் தமிழ்ச் சமூகத்தின் சமவெளிப் பார்வையிலிருந்து, மேலிருந்து கீழ்நோக்கும் மேட்டிமைத் தன்மையோடு அடித்தள மக்களை இழித்தும் பழித்தும் காட்சிப்படுத்துகிறது.

இந்தப்போக்கு 1931இல் தமிழ்ச் சினிமா பேசத் துவங்கியதிலிருந்து (முதல் பேசும் தமிழ் சினிமா - காளிதாஸ்) காணப்பட்டாலும் அவ்வப்போது ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களை கதாபாத்திரங்களாகக் கொண்டும் அரைகுறை யதார்த்தத்தோடும் சமரசவாத, சந்தர்ப்பவாதத் திரைப்படங்கள் இடையிடையே தலைகாட்டவே செய்தன. இந்தப் போக்கு 1960க்கும் 1990க்கும் இடைப்பட்ட காலத்தில் சற்றுக் கூடுதலாக இருந்தது. இந்த நிலை 1990க்குப் பிறகு மாறி மீனவர் உள்ளிட்ட அடித்தள மக்கள் மற்றும் மதச்சிறுபான்மையினர் தமிழ்த் திரையில் தேசத் துரோகிகளாகவும், அடியாட்களாகவும், வில்லன்களாகவும் காட்சிப்படுத்தும் போக்கு அதிகரித்தது.

1960, 70களில் உழைக்கும் மக்களை கதாநாயகர்களாகவும் பண்ணையாளர்களை வில்லன்களாகவும் காட்டியதற்கு நேர்மாறான நிலை 1990களில் துவங்குகிறது. அதேபோல் இசுலாமியரையும், கிறிஸ்தவரையும் அமைதி, சமாதானம் போன்றவற்றிற்கு உதாரணமாக காட்டிய தமிழ்ச் சினிமா அவர்களை கெட்டவர்களாக காட்டத் துவங்கியதும் 90களுக்குப் பிறகுதான்.

சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த பாவமன்னிப்பு (1961) திரைப்படத்தில் இசுலாமியர் கதாபாத்திரங்கள் நல்லவர்களாகவும் மேலெல்லாம் விபூதி, சந்தனம் பூசிப் பக்திப் பழமாக காட்சியளிக்கும் இந்து (எம்.ஆர்.ராதா) வில்லனாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையோடு இன்றைய தமிழ்த் திரைப்படங்களின் நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால் மதக் கண்ணோட்டத்தில் தமிழ்த் திரைத்துறை அடைந்துள்ள பாரதூரமான வேறுபாட்டைப் புரிந்து கொள்ள முடியும்.

இதே போக்கு 1990க்குப் பின் வந்த மீனவர் பற்றிய திரைப்பதிவுகளிலும் வெளிப்பட்டது. குறிப்பாக மீனவக்குப்பங்கள் பயங்கரமானவையாகவும், மீனவர்கள் முரடர்களாகவும், ரவுடிகளாகவும், அநாகரிகர்களாகவும், அடியாட்களாகவும் காட்சிப்படுத்தும் போக்கு மேலோங்கியது (தூத்துக்குடி, அட்டகாசம், விரும்புகிறேன், நாயகன், ஜித்தன், அரசு, தீபாவளி, 1977). இதுபோன்ற திரைப்படங்கள் ஓர் யதார்த்த உண்மையை வெளிக் காட்டுவதாகக்கூட நாம் புரிந்து கொள்ள முடியும். அதாவது இன்று கடலும் கரையும் மீனவரல்லாத பிற சமவெளி ஆதிக்க சாதியினரால் கைப்பற்றப்பட்டு மீன் பிடியல்லாத பிற வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையை உணர்த்துவதாகக்கூட நாம் புரிந்து கொள்ள முடியும்.

அடுத்து மீனவச் சாதியினரில் சிலர் அல்லது பலர் தாதாக்களாக, அடியாட்களாக மாறி உள்ளனர் என்றால் அதற்கு அரசு, ஆளும் வர்க்கமும் பொறுப்பேற்க வேண்டும். மீனவர்களுக்குச் சொந்தமான, பாரம்பரியமாக இருந்து வந்த கடலையும், கடற்கரைப் பிரதேசத்தையும் நவீன முதலாளிய அரசு பன்னாட்டு முதலாளியத்திற்கு தாரைவார்த்துக் கொடுக்க வேண்டி பல்வேறு புதிய சட்டதிட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் விதித்து மீனவர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் போது அவர்கள் மீன் பிடித்தொழிலை விடுத்து பிற சட்ட விரோத நடவடிக்கைகளில் இறங்குவது தவிர்க்க முடியாததாகிறது. இதற்கு பாரம்பரிய மீனவர்களில் பெரும்பாலோர் கல்வியறிவு பெறாதவர்களாகவும், பிற வாய்ப்பு வழங்கப்படாதவர்களாகவும் இருப்பதே காரணமாகும்.

அதாவது இன்றைய நவீன அரசின் காலனியமய விரிவாக்கமே இது போன்ற விளைவுகளை எல்லாம் ஏற்படுத்துகிறது எனலாம். தமிழகத்தின் கடற்கரை கன்னியாகுமரி துவங்கி சென்னை வரை மிக நீண்டதாக இருக்கிறது. இந்தக் கடற்கரையோரத்தில் தென் பகுதியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பான்மையான மீனவச் சாதியாக கிறிஸ்தவ பர(த)வர் என்பாரும் அடுத்துள்ள இராமநாதபுரம் புதுக்கோட்டை மாவட்டங்களில் கிறிஸ்தவ கடையர், கிரிஸ்த பரவர், கரையாளர், வலையா, படையாச்சிகள் என்போரும் வடக்கே செல்லச்செல்ல கிறிஸ்தவர்கள் சற்றுக் குறைந்து இந்து மீனவர்கள் அதிகமாகவும் காணப்படுகின்றனர். இவர்களோடு இசுலாமியர்களும் மீன்பிடித் தொழில், சங்கு குளித்தல் போன்ற தொழில்களில் கணிசமாக ஈடுபட்டு வருகின்றனர்.

16ஆம் நூற்றாண்டில் வணிகம் செய்ய இந்தியாவுக்கு வந்த போர்த்துக்கீசியரால் கடற்கரையோரங்களில் இருந்த மீனவர்கள் மதம் மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு மீனவர்கள் குறிப்பாக பரதவர், கடையர் மதம் மாறியதற்கான காரணம் என்ன என்பதும், தமிழகத்தில் மன்னர்களுக்கு நிகரான பொருளாதார வசதியோடு தமிழகத்தில் இருந்த வணிகர்களோடு சமமாக வணிகத்திலும், கடலோடிகளாகவும் விளங்கிய பரதவர்கள் பிற்காலத்தில் மிகவும் பின்னடைந்து போனது ஏன்? எவ்வாறு என்பதும் ஆய்வுக்குரியது.

சிலப்பதிகாரம் புகார் நகரை பட்டினம் பாக்கம் என்று பிரித்து அதில் வாழும் மக்கள் பிரிவு பற்றிக் கூறுமிடத்தில் பரதவர் குறித்தும் அவர்களது பொருளாதார வலிமை குறித்தும் மிகவும் சிலாகித்துக் கூறுகிறது. ஆனால் அன்று புகாரின் அழிவுக்குப்பின் அங்கிருந்து இடம் பெயர்ந்து செட்டிநாட்டுப் பகுதியில் (சிவகங்கை மாவட்டம் காரைக்குடிச் சுற்று வட்டாரம்) குடியேறிய நகரத்தார் என்று அழைக்கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களது புகழும், உலகமெல்லாம் பரவி வாழும், பொருளாதாரம் ஈட்டும் அவர்களது நிலையோடு பரதவர் வாழ்வை ஒப்பிட்டுப் பார்த்தால் ஏன் இந்த மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு?

முன்னாள் நிதியமைச்சர் இன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாம் மேலே கூறிய நகரத்தார் சமூகத்தில் பிறந்து வளர்ந்து செட்டிநாடு தந்த தங்கம் என்று போற்றப்படும் போது சிலப்பதிகார காலத்தில் இவர்களோடு ஒட்டி உறவாடிய பரதவர் மட்டும் மய்யப்படுத்தப்பட்ட அதிகாரத்திலிருந்து வெகு தூரத்தில், விளிம்பில் இயற்கையோடும், சமவெளி மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட செயற்கையோடும் போராடிக் கொண்டிருக்க நேர்ந்தது ஏன்? என்பதும் ஆய்வுக்குரியதாகும். ஆனால் அதற்கு இது இடமில்லை.

தமிழகத்தின் நீண்ட கடற்கரையோரம் வாழ்கின்ற பாரம்பரிய மீனவர்கள் இன்றைய சமூக, அரசியலில் அதிகாரம் செய்யும் சமவெளி வாழ்க்கை முறையிலிருந்து விலகிய தூரப்படுத்தப்பட்ட நீரும் நிலமும் சார்ந்த தனித்தன்மை வாய்ந்த வாழ்முறையைக் கொண்டவர்கள். அதேசமயம் இந்து மதச் சாதிப்பாகுபாடுகளை முற்றிலும் துறந்தவர்கள் என்றோ அல்லது தீண்டாமையைக் கைக்கொள்ளாதவர்கள் என்றோ, நிலமானிய அரசியல், பொருளாதாரப் பண்பாட்டைப் பேணாதவர் என்றோ கூறுவதற்கில்லை.

மீனவர் என்ற பதத்திற்குள் பல்வேறு சாதி மத வர்க்கப்பாகுபாடுகளும் ஏற்றத் தாழ்வுகளும் முரண்பாடுகளும் போராட்டங்களும் அதன் விளைவான மோதல்களும் சாதல்களும் உண்டு. இந்த முரண்பாடு, மோதல், சாதல்களுக்குள் நிலவும் அரசு, அரசியல்வாதிகள் தலையீடுகளும் அதன் பின்னே உள்நாட்டு ஆளும் வர்க்கம் துவங்கி பன்னாட்டு முதலாளியம் வரையிலானவர்களின் நலனும், பேராசைகளும் உண்டு. இவற்றைப் பற்றியெல்லாம் நமது தமிழ்ச் சினிமா வெளிப்படுத்தியிருக்கிறதா?

இதுவரை வெளிவந்த மீனவர் தொடர்பான காட்சிகளைக் கொண்ட தமிழ்த் திரைப்படங்களை வரிசைப்படுத்தினால், படகோட்டி (1964), திருவிளையாடல் (1965), அன்னை வேளாங்கன்னி (1971), ஆதிபராசக்தி (1971), மீனவ நண்பன் (1981), தியாகம் (1978), கடல் மீன்கள் (1981), அலைகள் ஓய்வதில்லை (1981), ஆனந்த ராகம் (1982), கடலோரக் கவிதைகள் (1986), சின்னவர் (1992), தாய்மொழி (1992), செம்பருத்தி (1992), கட்டுமரக்காரன் (1995), நிலாவே வா (1998), காதலுக்கு மரியாதை (1997), சிட்டிசன் (2001), கடல் பூக்கள் (2001), குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் (2009) என்று இந்தப் பட்டியல் நீள்கிறது.

இந்தப் பட்டியல் முழுமையானதல்ல. சில விடுபடல்கள் இருக்கலாம். குறிப்பாக கமலஹாசன் நடித்து தெலுங்கில் வந்து பிறகு மொழிமாற்றி தமிழுக்கு வந்த பாசவலையும் இயக்குநர் விஜயன் இயக்கி விஜயகாந்த் நடித்த தூரத்து இடி முழக்கமும் பிரதி கிடைக்காததன் காரணமாக இங்கு விரிவாக அதுபற்றி பேச முடியவில்லை. அதேபோல் மேலே நாம் பட்டியலிட்டுள்ள திரைப்படங்களில் குறிப்பிட்ட ஒரு சில மட்டுமே மீனவர் வாழ்வைப் பற்றிய படங்களாகும்.

சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல், தியாகம் இரண்டும் மீனவர் பற்றிய திரைப்படமல்ல. மீன்பிடி மற்றும் கடற்கரை தொடர்பான சில காட்சிகள் இடம் பெறுகின்றன அவ்வளவுதான். அதேபோல் ஆதிபராசக்தியில் இடம் பெறும் மறைந்த நடிகர் சுருளிராஜன் மனோரமா ஜோடி ஆடிப்பாடும் காட்சியும் ஆத்தாடி மாரியம்மா என்ற பாடலும் மிகவும் பிரபலமாக இருந்ததைத் தவிர அப்படத்தினை மீனவர் வாழ்வு பற்றிய திரைப்பட வகையில் அடக்க முடியாது.

அதைப்போலவே இயக்குநர் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை, கடலோரக்கவிதைகள் இரண்டும் கடல் கரையையும், கடலையும் அதிகம் காட்சியாகக் கொண்டிருந்தனவே தவிர மீனவர் பற்றிய திரைப்படங்கள் அல்ல. மேலும் அவை சில அபத்தமான, மோசமான காட்சிகளைக் கொண்டிருந்தன என்றும் கூறும்படியிருந்தது.

அலைகள் ஓய்வதில்லை (1981)யில் அப்பாவிக் கதாநாயகனாக பார்ப்பனரையும், வில்லனாக கிறிஸ்தவரையும் (நாயகியின் அண்ணன் டேவிட் பாத்திரம்) காட்டி இருப்பார். சாதி, தீண்டாமை பற்றிய தலைகீழான படம் இது. பொருளாதார, முரண்பாடு மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்ட திரைப்படம். இதே போக்கு 20 ஆண்டுகள் கழித்து பாரதிராஜா இயக்கிய கடல்பூக்கள் (2001) படத்திலும் தொடர்கிறது.

கருத்தையா (முரளி), கயல் (உமா), பீட்டர் (மனோஜ்), மரியம் (சிந்து) என்ற நான்கு முக்கிய பாத்திரங்களில் கருத்தையாவும் அவன் தங்கையும் மிகவும் உயர்ந்த பண்பு நலன்களுடனும் கடலையும், கிராமத்தையும் நேசிப்பவர்களாக, தியாகிகளாக, பொறுமைசாலிகளாக இருக்கின்றனர். மரியம், பீட்டர் அவர்களது அம்மா ஏமாற்றுபவர்களாக சுயநலம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இறுதியில் பீட்டர் கருத்தையாவிடம் மன்னிப்பு வேண்டுபவராக காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். கதை நிகழும் இடம் முட்டம் என்று கூறப்படுகிறது. முட்டத்தைக் கதைக்களமாகக் கொண்ட இவரது கடலோரக் கவிதை. மற்றும் கடல் பூக்கள் இரண்டிலுமே அபத்தக் காட்சிகள் பல உள்ளன.

கடலோரக் கவிதைகள் சத்யராஜ் (சின்னப்பதாஸ் பாத்திரம்) ரேகாவிடம் (ஜெனிஃபர் டீச்சர் பாத்திரம்) கடலுக்குள் மூழ்கி எடுத்து வந்து சங்கு ஒன்றை பரிசளிப்பார். அச்சங்கு தோல் நீக்கி சதை நீக்கி சுத்தம் செய்து பாலிஷ் செய்யப்பட்ட சங்காக இருக்கும். கடலுக்குள் மூழ்கி எடுத்து வரும் சில நிமிடங்களிலேயே இவ்வளவையும் செய்துவிட பாரதிராஜாவால் மட்டுமே இயலும். இதைப்போலவே கடல்பூக்களில் டைட்டில் காட்சியில் கடலோரத்தில் சிதறிக்கிடக்கும் (இவர்கள் போட்டு வைத்த) சங்கு, சோவி (சோளி)களில் பாலிஷ் செய்து முகுல் உடைத்த வெண் சங்குகளும் கிடக்கும். அவற்றில் சிலவற்றை பாரதிராஜா பொறுக்குவதாக காட்சி நகரும். (இதுபோல் சங்குகள் எல்லாம் கரையில் கிடைப்பதில்லை). கதையோட்டத்தின் நடுவே முரளி (கருத்தையா), பிரதிக்ஷா (உப்பிலி)யிடம் இடம் புரிச்சங்கைக் காட்டி இது வலம்புரிச்சங்கு என்று கூறி அதை அறுத்து வளையல் செய்வதாகக் கூறுவார்.

இவையெல்லாம் பாரதிராஜா மிக எளிதாக தவறிழைத்த இடங்களாகும். இதுதவிர இன்னும் ஆழமான குறைகளான மீனவர் மொழி, முட்டம் பகுதி சார்ந்த பண்பாட்டு வழமைகள், மீனவருக்கும் கடலுக்கும் இடையிலான உறவு, மீனவரது இயற்கை பற்றிய அறிவு, தொழில்நுட்பம் போன்ற எவ்வளவோ விசயங்கள் மற்ற எல்லா மீனவர் திரைப்படங்களிலும் காணப்படாதது போலவே பாரதிராஜா படத்திலும் காணப்படவில்லை.

மேலும் மீன் குழம்பு, கருவாட்டுக் குழம்பு, வலை, கட்டுமரம், வாலே, போலே என்ற விளித்தல் போன்றவை இருந்தால் அது மீனவர் பற்றிய திரைப்படம் என்ற தமிழ்ச் சினிமாவின் பொதுவான இலக்கணத்தை இயக்குநர் இமயம் பாரதிராஜாவாலும் கடக்க முடியவில்லை. கிராமப்புறத்தையும் மறவர் சாதிப் பெருமிதங்களையும் மிக நுணுக்கமாக காட்சிப்படுத்திய பாரதிராஜாவால் மீனவரது வாழ்க்கையை யதார்த்தப்பூர்வமாக காட்சிப்படுத்த முடியாமல் போனது தற்செயலானது அல்ல.

கமலஹாசன் இரு வேடங்களில் நடித்த கடல் மீன்கள் (1981) திரைப்படமும், சிவகுமார் நடித்த ஆனந்த ராகம் (1982) திரைப்படமும், அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியான மீனவர் திரைப்படங்களாகும்.

கடல் மீன்கள் ரோசம்மா ஜான் என்பவரது மூலக்கதையை அடிப்படையாகக் கொண்டு பஞ்சு அருணாசலம் திரைக்கதை வசனம் எழுதி ஜி.என்.ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும்.

கதைக்களம் எந்த ஊர் என்பது துல்லியமாக குறிப்பிடப் படவில்லை. திரைப்படத்தின் இரண்டு மூன்று காட்சிகளில் மண்டபம் மார்க்கெட் என்ற சொல்லாடல் வருகிறது. அது இராமநாதபுரம் மாவட்டம் மண்டபமா என்பது தெரியவில்லை.

செல்வம் (கமலஹாசன்) இந்து மீனவர். பாக்கியம் (சுஜாதா) அவரது முதல் மனைவி, இவர்களது மகன் ராஜன் (கமலஹாசன்). கதை ஒரு மீனவனது வாழ்வில் நிகழும் பல்வேறு சம்பவங்களின் கோர்வை என்று கூறலாம். நாட்டுப்படகு மீனவராக வாழ்க்கையைத் தொடங்கும் செல்வம் பின்பு ஆங்கிலேயர் உதவியுடன் விசைப்படகு (லாஞ்ச் உரிமையாளராகி பின்னாளில் விசைப்படகு உற்பத்தி நிறுவனத்தின் அதிபராக, செல்வவினாயகம் என்று அழைக்கப்படும் பெரிய மனிதராகவும் இவரது விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களுடைய வலைகளை அறுத்துவிடும்போது நட்ட ஈடு வழங்குபவராகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.

மற்றபடி வழக்கமான மசாலாப் படங்களில் காணப்படும் அடிதடி சண்டைக் காட்சிகள் ஆடல் பாடல், காதல், மோதல், பழிக்குப் பழி வாங்கும் போக்கு போன்ற அனைத்து அம்சங்களும் நிறைந்த படம். வழக்கமான மசாலாக் கதை நிகழும் களமாக மீனவர் வாழ்வும் கடலும் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தவிர மீனவர் வாழ்வு குறித்த எவ்வித சரியான புரிதலும் ஏற்பட இப்படம் உதவவில்லை. வேண்டுமானால் மீனவர் பற்றிய தவறான கற்பிதங்களை இப்படம் தோற்றுவித்திருக்கலாம். உதாரணத்திற்கு ஒன்று செல்வம் (கமல்) தனது நண்பர் பீட்டருக்கு (நாகேஷ்) மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது.

ஆனந்த ராகம் இப்படத்தின் கருவிலிருந்து சற்று வேறுபட்டது. இதில் காதல் மய்யமான இடத்தைப் பெறுகிறது. இதுவும் நாட்டுப் படகு மீனவர் வாழ்வை மய்யமாகக் கொண்டு நிகழும் கதைதான். ஆனால் நாட்டுப்படகு மீனவருக்குண்டான பிரத்யோக சிரமங்கள், தொழில் நெருக்கடிகள், அவலங்கள் போன்றவை காட்சிப் படுத்தப்படவில்லை. இதுவும் இந்து மீனவர்களை கதாபாத்திரங்களாகக் கொண்ட திரைப்படம்தான். கதை: தாமரைச் செந்தூர்பாண்டி, இயக்கம்: பரணி.

மீனவர் வாழ்வைப் பிரதிபலிக்காத மிக பலகீனமான பாத்திரத் தேர்வு, காட்சியமைப்புக் கொண்ட இத்திரைப் படத்தின் முடிவில் நாயகனும் (சிவகுமார்) நாயகி (ராதா)யும் இறந்து போகின்றனர். திரைப்படத்தின் பெரும்பகுதியை கள்ளுக் கடை காட்சிகள் ஆக்கிரமித்திருக்கின்றன. மீனவர் என்றாலே குடிகாரர்கள் என்று இயக்குநர் கருதியிருக்கலாம்.

1992இல் மூன்று மீனவத் திரைப்படங்கள் வெளி வந்துள்ளன. தாய்மொழி, சின்னவர், செம்பருத்தி. தாய்மொழி அ.செ.இப்ராகிம் இராவுத்தர் படம், வசனம் லியாகத் அலிகான், இயக்கம்: ஆர்.இளவரசன், கௌரவத் தோற்றத்தில் விஜயகாந்த் நடித்துள்ளார்.
கதாநாயகன் சரத்குமார் (ராஜசிம்மன்) நாயகி மோகினி (மேரி) வில்லன் மன்சூரலிகான் (மரியதாஸ்) மற்றும் கிறிஸ்தவ மக்கள். இப்படத்தில் விதவை மறுமணம், சாதி மத மறுப்புத் திருமணம் போன்றவை வலியுறுத்தப்பட்டுள்ளன. அதற்குத் தடையாக வரும் விசைப்படகு மீன்பிடி முதலாளி மரியதாஸ் தண்டிக்கப்படுவதே திரைப்படத்தின் கதை. இப்படத்திலும் நாட்டுப்படகு விசைப்படகு முரண்பாடு ஏழை பணக்காரன் முரண்பாடு போன்றவை பேசப்படுகிறது. ராஜசிம்மன் தனி ஒரு மனிதனாக நின்று மரியதாஸ் மற்றும் கிறிஸ்தவ மக்கள் அனைவரையும் எதிர்த்து சர்ச்சில் வைத்து மேரிக்குத் தாலி கட்டுவதோடு படம் முடிகிறது.

மதச் சிறுபான்மையினரை கெட்டவர்களாக சித்தரிக்கும் தமிழ்ச் சினிமாக்களின் துவக்ககால படங்களில் ஒன்றாக தாய்மொழியைக் கருதலாம். அ.செ.இப்ராகிம் ராவுத்தரும், லியாக்கத் அலியும் இணைந்து ராஜசிம்மனை கதாநாயகனாகவும் மரியதாஸ்-அய் வில்லனாகவும் ஆக்கியிருப்பது வேதனைதான்.

பின்னாளில் வந்த ரஜினியின் பாட்ஷா திரைப்படத்திற்கு இது முன்னோடி என்றுகூட கூறலாம். மாணிக்கமும் பாட்ஷாவும் சேர்ந்து (மாணிக்பாட்ஷா) வில்லன் ஆண்டனியை எதிர்ப்பதுதான் பாட்ஷாவின் மய்யம்.

ஓர் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய நாயக ஜோடியினர் இணைந்து இந்து வில்லனை எதிர்ப்பதான கதையையும் காட்சியமைப்பையும் கொண்ட ஓர் திரைப்படம் சம காலத்தில் ஏன் தமிழில் வரவில்லை என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அல்லது வந்தால் அத்திரைப்படத்தின் நிலை என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள். அதே சமயம் இசுலாமியரையும், கிறிஸ்தவரையும் கொடிய வில்லன்களாக காட்சிப்படுத்திய திரைப்படங்கள் (விஜயகாந்த், அர்ஜூன் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள்) வெகு சாதாரணமாக வந்து போனதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

செம்பருத்தி கோவைத்தம்பி தயாரிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் 1992இல் வெளிவந்த திரைப்படம். வசனம்: ஜான் அமிர்தராஜ், கதைக்களம்: கடலும் கடல் சார்ந்த பகுதி. ஆனால் ஊர் குறிப்பிடப்படவில்லை. இதுவும் இந்து மீனவர் பற்றிய கதைதான். இதிலும் நாட்டுப் படகு மீனவருக்கும் விசைப்படகு மீனவருக்குமிடையிலான முரண்பாடு பேசப்படுகிறது. பணக்கார வாலிபனுக்கும் (பிரசாந்த்) ஏழை மீனவக் குலப் பெண் (ரோஜா)வுக்கும் இடையிலான காதல் தான் கதையின் மய்யம். வர்க்க முரண்பாட்டைக் கடந்து காதலர்கள் சேர்வதே கதை. மற்றபடி புதிதாக ஒன்றுமில்லை.

இதே ஆண்டில் கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த பிரபு நடித்த சின்னவர் திரைப்படமும் இந்து நாட்டுப்படகு மீனவர் பற்றிய கதையை மையமாகக் கொண்டதே ஆகும். 1995இல் ஏ.ஜி. சுப்பிரமணியம் தயாரித்து பி.வாசு இயக்கத்தில் வெளிவந்தது கட்டுமரக்காரன். பிரபு (முத்தழகு) கதாநாயகன். வில்லன் ஆனந்தராஜ் (கிறிஸ்தவ முதலாளி). கேனத்தனமான பல்வேறு காட்சிகளைக் கொண்ட வழக்கமான மசாலாத் திரைப்படம் இது.

1998 இல் விஜய் நடித்து அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் தயாரித்து ஏ.வெங்கடேஷின் இயக்கத்தில் வெளிவந்த நிலாவே வா திரைப்படம் மிக ஆச்சர்யப்படுத்திய திரைப்படம். கதாநாயகப் பாத்திரம் ஓர் கிறிஸ்தவ மீனவர் - சிலுவை (விஜய்). கதை நிகழும் ஊர் சின்னக்காயல். மற்றபடி படம் வழக்கமான அபத்தங்கள் நிறைந்த குப்பைதான். கிறிஸ்தவ மீனவர்க்கும் ஓர் இந்துப் பெண்ணுக்கும் இடையிலான காதல்தான் கரு. காதலுக்குத் தடையாக வரும் மதத்துவேசம் விமர்ச்சிக்கப்பட்டு இறுதியில் காதலர் கூடுவதே கதை.

இதே விஜய் கதாநாயகனாக நடித்த காதலுக்கு மரியாதை (1997). திரைப்படத்தில் மீனவக் குப்பம் மற்றும் மீனவர்கள் நல்லவர்களாகவும் காதலுக்கு உதவும் உள்ளமும் அதற்காக எவரையும் எதிர்த்து நிற்கும் போர்க்குணமும் ஒற்றுமையும் கொண்டவர்களாக இயக்குநர் பாசிலால் முன்னிறுத்தப்பட்டிருந்தனர். அதே சமயம் இம்மீனவர்களும் கதாநாயகனும் இந்துக்களாகவும் நாயகியின் அண்ணன்கள் கோபக்கார கிறிஸ்தவர்களாகவும் அச்சமூட்டுபவர்களாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தனர்.

2001இல் அஜித் நடித்து ஷரவண சுப்பையா இயக்கத்தில் வெளிவந்த சிட்டிசன் திரைப்படம் அதிகார வர்க்கத்தால் ஒரு மீனவக் கிராமமும் மீனவர்களும் அழித்தொழிக்கப்படுவதை காட்சிப் படுத்தியிருந்தது. மீனவராக வரும் அஜித் இந்து மீனவராகவும் அவரது மகனாக வரும் அஜித். இசுலாமியராகவும், கிறிஸ்தவராகவும் வேடம் கொண்டு அதிகார வர்க்கத்தை பழிவாங்குவதே அல்லது தண்டிப்பதே கதை. மீனவர்களை அதிகார வர்க்கம் ஏய்ப்பதை சுட்டிக்காட்டிய திரைப்படம் மீனவர்களது பிற பிரத்யோக பிரச்சனைப்பாடுகளைப் பற்றிக் கூறவில்லை. மேலும் இது மீனவரது வாழ்வியலைப் பற்றிய திரைப்படமாக அமையாமல் அஜித்தின் ஹீரோ பிம்பத்தை கட்டியமைக்கும் நோக்கம் கொண்ட திரைப்படமாக அமைந்திருந்தது.

நாம் இதுவரை பார்த்து வந்த மீனவத் திரைப்படங்களின் கதை மற்றும் காட்சி அமைப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது மீண்டும் நாம் கட்டுரையின் துவக்கத்தில் கூறயவற்றையே உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

எம்.ஜி.ஆரின் படகோட்டியின் அளவுக்கு மீனவரின் பிரச்சினைப் பாடுகளை (தான் முன் வைக்கும் பிரச்சினைகளான: முதலாளிகள் தங்களது லாபத்திற்காக மீனவர்களைப் பிரித்து மோதவிடுகி றனர், இந்த மோதலும், ஒற்றுமையின்மையும் மீனவர் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிறது. எனவே மீனவர் ஒற்றுமையே இலட்சியம்) திரைப்படத்தின் துவக்கம் முதல் இறுதிக்காட்சி வரை பேசிய திரைப்படம் வேறு ஒன்றுமே இல்லை. ஓரளவாவது நெருங்கி வருவது அதே எம்.ஜி.ஆரது மீனவ நண்பன் திரைப்படம் மட்டுமே.

ஆனால் 1964க்கும் 1977க்கும் இடையே நடந்த மாறுதல்கள் மீனவ நண்பன் திரைப்படத்தில் வெளிப்படவே செய்வதோடு, பின்னாளில் வந்த மீனவத் திரைப்படங்களின் குறைபாடுகளுக்கான மூலங்களை நாம் மீனவ நண்பனிலேயே காண முடிகிறது.

படகோட்டி (1964) திரைப்படத்தின் கரு மீனவர் ஒற்றுமை ஆகும். ஒரே இனத்தைச் (சாதியை இனம் என்றே திரையில் எம்.ஜி.ஆர். கூறுகிறார்) சேர்ந்த திருக்கை மீன் குப்பம், சுறா மீன் குப்பம் இரண்டுக்கும் இடையே பாரம்பரியப் பகை நிலவுகிறது. திருக்கை மீன் குப்பத்திற்கு மாணிக்கம் (எம்.ஜி.ஆர்.) நாட்டாமை. சுறா மீன் குப்பத்திற்கு அலையப்பன் (ராமதாஸ்) நாட்டாமை. சுறா மீன் தலைவரின் மகள் முத்தழகி (சரோஜா தேவி) மாணிக்கத்தின் காதலி. இவ்விரு குப்பத்தினரையும் மோதவிட்டு அதற்காக அலையப்பனை கைக்குள் போட்டுக் கொண்டு அதன் மூலம் பொருளாதார அரசியல் லாபம் அடைந்துவரும் முதலாளி நீலமேகம் (நம்பியார்) அவரது அடியாள் கந்தப்பன் (அசோகன்) ஆகிய பாத்திரங்களை மய்யமாகக் கொண்டு கதை நகர்த்தப்படுகிறது.

நீலமேகம் மீன் வியாபாரியாக வருகிறார். மீனவர்கள் புயல் மழைக் காலத்தில் மீன் பிடிக்கச் செல்ல முடியாமல் பசி பட்டினியால் தவிக்கும்போது கடன் கொடுத்து ஒன்றுக்குப் பத்தாக எழுதி கைநாட்டு வாங்கி மீனவர்களை அடிமைகளாக வைத்து தான் நிர்ணயிக்கும் விலைக்கே மீன்களை மீனவர் தருமாறு செய்து அவர்களைச் சுரண்டுகிறார்.

படிப்பறிவும் விழிப்புணர்வும் இல்லாத மீனவர் மத்தியில் மாணிக்கம் மட்டுமே கல்வியறிவும் அரசியலறிவும் பெற்றவராக இருப்பதால் நீலமேகத்தை எதிர்த்தும் அவரது சுரண்டலை எதிர்த்தும் குரல் எழுப்புகிறார். ஆனால் இரு குப்பத்து மீனவர்களும் மீண்டும் மீண்டும் நீலமேகம் முதலாளியின் வலையில் விழுந்து மாணிக்கத்தை புறக்கணிக்கவும், தாக்கவும், பழிக்கவும் செய்கின்றனர். தனது தந்தை இறக்கும் தருவாயில் மீனவர் நலனுக்குப் பாடுபடுவதாக தனது தந்தைக்கு செய்து கொடுத்த உறுதி மொழியை காக்கவும், மக்கள் நலனுக்குப் பாடுபடும் தலைவர் அவர்களது அறியாமையின் காரணமான ஏச்சுப் பேச்சு இழித்தல் பழித்தல் போன்றவற்றை பொருட்படுத்தக்கூடாது என்ற கொள்கைப் பிடிப்பின் வழிநின்றும் இறுதி வரைப் போராடி வெற்றியும் பெறுகிறார்.

இந்த மய்யத்திற்கு துணையாகவே காதல் வருகிறது. 1964இல் எம்.ஜி.ஆர். சார்ந்திருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பார்வைக்கு ஏற்படவே மக்களின் எதிரி (மீனவர்களின் எதிரி)யான முதலாளியை சட்டப்படி தண்டிப்பதும், அரசிடம் கோரிக்கை வைத்துப் பலன்பெற்று முன்னேறுவது என்ற கருத்தாக்கமும் காட்சியாக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்ற கருத்தும் காட்சியுமே மீனவ நண்பனிலும் முன்வைக்கப்பட்டுள்ளது. 1977இல், தி.மு.க.வில் இருந்து வெளியேறி அ.தி.மு.க.வை நடத்திக் கொண்டிருந்த போதும் (திரையில் அ.தி.மு.க. கொடி, இரட்டை இலைச் சின்னம், கருப்பு சிவப்பு வெள்ளை போன்றவை காட்டப்படுவதோடு உதயகுமார் கொலையை நினைவூட்டும் காட்சியும் வசனமும் முன் வைக்கப்பட்டுள்ளன) மீனவ நண்பன் திரைப்படத்தின் மய்யமான பார்வை தனி மனிதர்களான முதலாளிகளை விமர்சிப்பது, திருத்துவது, திருந்தாதவர்களை அரசு, காவல் துறை மூலம் கைது செய்து தண்டிப்பது (அதுவும் திருந்துவதற்குத்தான்) பாதிக்கப்பட்ட மீனவர்களை அரசின் பொருளாதார உதவிகொண்டு காப்பது என்பதாகவே இருக்கிறது.

அரசு பற்றிய மார்க்சிய லெனினியப் பார்வையான அரசு (ஆளும்) வர்க்கத்தின் கருவி என்பதற்கு மாறான பார்வையைக் கொண்ட திராவிட இயக்கத்தின் அணுகு முறையே படகோட்டி, மீனவ நண்பன் இரண்டிலும் பின்பற்றப்படுவதை காண முடிகிறது. மேலும் பலாத்காரத்தை மக்கள் மேற்கொள்வதை எதிர்த்து, தடுப்பவராகவும், மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கையை மக்களுக்குப் போதிப்பவராகவும் எம்.ஜி.ஆர். தோன்றுகிறார். 70, 80களில் தமிழ்த் திரைப்படங்கள் சிலவற்றில் மக்கள் கிளர்ந்தெழுவது, முதலாளி, பண்ணையார் கொடுமைகளை எதிர்த்துத் தாக்குவது, கொலை செய்வது போன்ற போக்குகளுக்கு மாறாக எம்.ஜி.ஆரின் (சமூக) திரைப்படங்கள் தீயவர்களை அரசிடம் ஒப்படைப்பது என்பதில் கறாராக இருந்ததுடன், மக்கள் கிளர்ந்து எழுவது என்ற போக்கையும் மறுத்து மக்களுக்காக தனி ஒரு மனிதன் (தலைவன்) போராடி, சண்டையிட்டு, (அவர் எதிரிகளை நையப்புடைப்பது வன்முறையாகாது ஏனெனில் அவர் நோக்கம் திருத்துவதுதானே தவிர தண்டிப்பது அல்ல. சீமானின் ‘தம்பி’ எம்.ஜி.ஆரது மறு பிறப்புதான்) நன்மைகளைப் பெற்றுத் தருவான் எனும் ஹீரோயிசத்தையும் வளர்த்த அதே சமயம் அந்த தனிமனிதனை (தலைவனை) விட்டு மக்கள் பிரியாதிருப்பதையும், சூழ்ந்துகொண்டு கொண்டாடுவதையும், புகழ்வதையும் தனது படங்களில் காட்சியாக்கினார். அதாவது மக்களை முற்றிலும் புறக்கணித்து விடாமல் அவர்களது இடம் என்ன, எல்லை என்ன அல்லது செயல் என்னவாக இருக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக வரையறுத்து காட்சியாக முன் வைத்ததே அவரது பிற்கால அரசியல் செல்வாக்கின் அடித்தளமாக அமைந்தது எனலாம்.

ஆனால் 1977க்குப் பின் வந்த பிற நடிகர்கள் நடித்த மீனவர் பற்றிய திரைப்படங்கள் மக்களைப் பற்றி (மீனவர்களைப் பற்றி) கவலைப்படவில்லை. எனவே அவர்களைக் காட்சிப்படுத்துவதில் அக்கறையும் காட்டவில்லை. மீனவர் சமூகத்தைப் புறக்கணித்த தனிமனிதரின் (மீனவனின்) காதல், குடும்ப உறவு, உணர்வு போன்றவற்றையே கதையின் மய்யமாகக் கொண்டன. எம்.ஜி.ஆர். வழங்கிய செயலூக்கமற்ற மந்தைப் பாத்திரம் கூட பிற்காலப் படங்களில் மக்களுக்கு கிடைக்கவில்லை.

படகோட்டி திரைப்படம் முன் வைத்த வில்லன் நீலமேகம் அவர் வாயாலேயே தான் செம்படவர்களை விட உயர்ந்த சாதி, பணக்காரன் என்று ஒரு காட்சியில் கூறுவார். எனவே மீனவ இன (செம்படவர்)த்தின் எதிரியாக மீனவரல்லாத உயர் சாதி வியாபாரி ஆதிக்கம் செய்வதாகவும், சுரண்டுவதாகவும், கடலுக்குள் இறங்கி உயிரைப் பணயம் வைத்து மீனவர் பிடித்துவரும் மீனுக்கு கடலில் இறங்காத, கடலோடு தொடர்பில்லாத மனிதர்கள் விலை வைப்பதும் மீனவர் வயிற்றிலடிப்பதும் என்ற படகோட்டித் திரைப்படம் முன்வைத்த காட்சியானது இன்றைக்கும் தென் பகுதி மீனவர் வாழ்வின் யதார்த்தமாக இருப்பது படகோட்டித் திரைப்படத்தை சிறப்புடையதாக்குகிறது. இதன் காரணமாகத்தான் தென் மாவட்ட மீனவர்கள் படகோட்டித் திரைப்படம் காண இன்றும் குவிகிறார்களோ என்று தோன்றுகிறது.

அதேபோல் பிற்காலத் திரைப்படங்களில் காணப்படக்கூடிய மதத் துவேச, இந்து மதச் சார்வுப் போக்கு எம்.ஜி.ஆரது படகோட்டி மற்றும் மீனவ நண்பன் இரண்டிலும் காணப்படவில்லை. படகோட்டியில் நீலமேகமும் (நம்பியார்), மீனவ நண்பனில் ஆத்மநாபன் (வி.கே.ராமசாமி), அருண் (நம்பியார்) வில்லன்களாகக் காட்டப்பட்டுள்ளனர்.

கிறிஸ்தவர், இசுலாமியரில் முதலாளிகள், வியாபாரிகள் அல்லது மீனவர் நலனைப் பாதிப்பவர்கள் இருக்கவே செய்வர் அதனை திரைப்படத்தில் காட்சியாக்குவதில் தவறு ஏதும் இல்லை.

தமிழகத்தின் ஒரு பகுதியில் கிறிஸ்தவர் மீனவத் தொழிலாளியாக அல்லது வியாபாரி, முதலாளியாக இருப்பர். மற்றொரு பகுதியில் இசுலாமியர் அல்லது இந்து அதுபோல் இருப்பர். இது பகுதி சார்ந்தது. எப்பகுதியில் யார் மீனவர் நலனைப் பாதிக்கின்றனரோ அப்பகுதியில் அவர் எதிர்க்கப்படப் போகிறார். அவ்வாறே கதை நிகழும் களத்தை தெளிவாகச் சுட்டி அப்பகுதியின் உண்மை நிலையை தமிழ்ச் சினிமா படம் பிடித்துக் காட்டினால், இதுபோன்ற போக்கு அதாவது கதாநாயகர்கள் எல்லாம் இந்துப் பாத்திரங்களாகவும், வில்லன்கள் எல்லாம் மாற்று மதத்தினராகவும் அமையும் ஒருதலைப்போக்கு எழ வாய்ப்பில்லை. ஆனால் மீனவர் வாழ்வு பற்றிய சரியான புரிதல் ஏதுமில்லாத சமவெளி சார்ந்த வாழ்க்கைப் பின்புலம் கொண்டவர்கள் பெரும்பான்மையாக ஆதிக்கம் செய்யும் தமிழ் சினிமாவில் அவர்களால் முன் வைக்கப்படும் மீனவர் உள்ளிட்ட பிற விளிம்பு நிலை மக்கள் தொடர்பான காட்சிகள் அல்லது கருத்துகள் இதுபோல் புனைவாகவோ அல்லது புரட்டாகவோதான் இருக்கும். இன்றைக்கு தமிழ்ச் சினிமாத்துறை என்பதும் தமிழ்ச் சினிமா என்பதும் பல்வேறு உயர் மற்றும் இடை நிலைச் சாதியினர் கைப்பற்றி தத்தமது சாதிப் பெருமிதங்களையே கதையும் காட்சியுமாக்கி தமிழக மக்கள் மத்தியில் பரப்பி தங்களது சாதிய நலனை காத்தும் வளர்த்தும் வருகின்றனர். இவ்வாறான செயல்களினூடே தங்களது படங்களில், பிற ஒடுக்கப்பட்ட சாதி மக்களை தங்களது உளவியலில் படிந்து போயுள்ள சாதியாதிக்கப் படிமங்களிலிருந்து பாத்திரமாக்கி இழிவு செய்கின்றனர். இவர்களது திரைப்படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களது கதாபாத்திரங்கள் இடம் பெறுவதைவிட இடம் பெறாமல் புறக்கணிக்கப்படுவதே மேல் என்று எண்ணும்படியாக காட்சிகள் அமைந்திருக்கின்றன.

இத்தகைய சூழலில் தங்களைப் பற்றிய சரியான பதிவை புரிதலை தமிழ்ச் சினிமாவில் ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணுகிற ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலைச் சாதி கலைஞரும் தமிழ்ச் சினிமாவைக் கைப்பற்றுவது அல்லது தமிழ்ச் சினிமாவில் தமக்குரிய பங்கைப் பெறுவது என்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் மீனவர் பற்றிய சரியான பதிவு தமிழ்த் திரையில் காட்சியாக விரிய வேண்டுமானால் பாரம்பரிய மீனவச் சாதியில் பிறந்த மீனவ இளைஞர்கள் தமிழ்ச் சினிமாவில் நுழைந்து தமது இருப்பை உணர்த்துவதும், தமக்குரிய பங்கைப் பெறுவதும் உடனடி அவசியமாகும்.

இவ்விடத்தில் நமக்கு இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது. 80க்குப் பிறகு வந்த மீனவர் பற்றியத் திரைப்படங்களைவிட ஒப்பிட்டு ரீதியில் எம்.ஜி.ஆரது படகோட்டி பரவாயில்லை என்றால் அதற்கு என்ன காரணம்? மீனவர் சாதியில் பிறந்தவரா எம்.ஜி.ஆர். அல்லது படகோட்டியை இயக்கிய இயக்குநர் மீனவரா? படகோட்டி படத்தின் தயாரிப்பு: எஸ்.என்.வேலு மணி, மூலக்கதை: நன்னு(பி.பி.சந்திரா), வசனம்: டி.கே.கிருஷ்ணசாமி, திரைக்கதை, இயக்கம்: டி.பிரகாஷ் ராவ். இவர்களைப் பற்றிய விவரம் தெரியவில்லை. படகோட்டி திரைப்படத்தின் சிறப்பிற்குக் காரணம் அரசியல் பிரச்சாரக் கருவியாக திரைப்படத்தை பயன்படுத்தி மக்களை தம் பக்கம் ஈர்க்க விரும்பியது திராவிட இயக்கம். அந்த நோக்கத்தின் பொருட்டு மக்கள் பிரிவினரில் பலருடைய பிரச்சனைப் பாடுகளையும் பற்றி திரையில் பேசியதும், காட்சிப்படுத்தியதும் தான் என்று தோன்றுகிறது. இதற்கு பல கதை வசனகர்த்தாக்களும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் பயன்பட்டிருக்கின்றனர். இதேபோக்கு பொதுவுடைமை இயக்கம் சார்ந்தவர்களாலும் கூட முயற்சி செய்யப்பட்டதை திரைப்பட இயக்க வரலாறு கூறுகிறது.

பின்னாளில் எம்.ஜி.ஆர். தி.மு.கவிலிருந்து விலகிய பிறகு தனது அரசியல் (இமேஜ்) வளர்ச்சிக்கு திரைப்படத்தையே பயன்படுத்தினார் என்பதற்கான உதாரணங்களில் ஒன்றாகவே மீனவ நண்பன் திரைப்படம் இருக்கிறது. எம்.ஜி.ஆர். புகழ்பாடிய இயக்குநர்கள் பலரில் ஒருவராக ஸ்ரீதரும் மீனவ நண்பன் படத்தை கதை வசனம் எழுதி இயக்கியதன் மூலம் அடையாளம் காணப்படுகிறார்.

எம்.ஜி.ஆருடைய இந்த வழிமுறையைத்தான் விஜயகாந்த் போன்றோரும் பின்பற்றி தம்முடைய அரசியல் இமேஜ்ஜை வளர்த்துக் கொள்ள முயல்கின்றனர். ஆனால், ஒரு இயக்கத்தின் அரசியலை முன்னிறுத்துவதற்கும் தனி மனிதரை முன்னிறுத்தி துதி பாடுவதற்கும் இடையிலான வேறுபாடுதான் படகோட்டிக்கும் அதற்குப் பின் வந்த திரைப்படங்களுக்குமான வேறுபாடு. படகோட்டியில் இருந்து மீனவ நண்பன் பல்வேறு சமரசங்களையும், சந்தர்ப்பவாதச் சரிவுகளையும் கொண்டிருக்கிறது. படகோட்டியில் மீனவச் சாதியில் பிறந்த மீனவருக்கு அதே மீனவ இனத்தில் பிறந்த முத்தழகி ஜோடி. மீனவ நண்பனில் மீனவருக்கு நண்பர் மீனவ இனத்திற்கு வெளியே இருந்து வந்து உதவி புரிபவருக்கு மீனவரல்லாத மீனவர்களின் எதிரியான முதலாளியின் மகள் ஜோடி.

படகோட்டியில் இருந்த கடற்காட்சிகளுக்கு மாறாக மீனவ நண்பனில் லதாவுடன் காதல் புரிவதே மீன் பிடிக் காட்சியாக அமைக்கப்பட்டிருப்பது கேலிக் கூத்தாகும். பின்னாளில் வந்த படங்களில் இக்கேலிக்கூத்து இன்னும் அதிகமாகியது. மீனவர்கள் திரைச் சீலையைப் போல் பின்னணியில் அசைய கடற்கரையில் காதலர்கள் ஓடி ஆடிப்பாடும் அல்லது கதாநாயகன் வில்லனையும் அவனது அடியாட்களையும் அடித்துப் புரட்டும் களமாக கடலும் கரையும் மாறிப்போனது. பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்களில் கடலும் கரையும் சமவெளி மனிதர்களின் உல்லாச வெளியாக, உடற்பயிற்சி மைதானமாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது சங்க இலக்கியங்களிலேயே துவங்கி விடுகிறது. சிலப்பதிகார கானல் வரிப்பாடல்களே இதை உணர்த்துகின்றன. தசாவதாரத்தில் கமலஹாசன் இன்னும் ஒரு படி மேலே போய் சுனாமியையே நலன் பயக்கும் ஒன்றாக தனது சமவெளிப் பார்வையில் காட்சிப்படுத்தியதோடு சுனாமி பாதிப்பின் பின்புலத்தில் நாயக நாயகியின் காதல் மலரும் காட்சியையும் வைத்திருந்தது மீனவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் செயலாகும்.
கடல் பற்றிய மீனவனின் உணர்வை ஒரு சமவெளி மனிதன் பெறுவது குதிரைக் கொம்போ என்று நினைக்கும்படியாகவே இவர்களது செயல்பாடுகள் இருக்கிறது. சமவெளியின் தளங்களில் எவ்வித உரிமையும் அற்ற மீனவ மக்கள் தங்களுக்குச் சொந்தமான கடல் பிரதேசத்திலிருந்து அப்புறப்படுத்தப்படும் யதார்த்த நிலவரமே திரையிலும் கடற்கரைக்காட்சியில் முன்னணியிலிருந்து பின்னணிக்கு மீனவர்கள் தள்ளப்பட்டதாக பிரதிபலிக்கிறது. இதுவே தமிழ்ச்சினிமாவின் சமகால மீனவர் பற்றிய பதிவாகும்.

2009இல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மகன் சரண் தயாரிப்பில் இராஜமோகன் இயக்கத்தில் வெளிவந்துள்ள மீனவர் பற்றிய திரைப்படமான குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் மீனவர்களது சமகால பொரளாதார அரசியல், தொழில் நெருக்கடிகள் போன்றவற்றைப் பற்றியெல்லாம் நேரிடையாகப் பேசாமல் மீனவச் சமூகத்து இளைஞர்களது காதல், குடி, கொண்டாட்டம், மற்றும் மீனவர்களுக்கிடையிலான சாதியப் பிளவுகள் போன்றவற்றை காதலினூடே காட்சியாக உணர்த்திச் செல்கிறது. வழக்கமான காதல் திரைப்படங்களில் காணப்படும் இளைஞர் இளைஞிகளது பொருளாதார வருவாயின் ஆதாரங்களைப் பற்றிய இருட்டடிப்பது போலவே குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் திரைப்படத்தின் மீனவக் குடும்பங்களின் பொருளாதார நிலை பற்றிய எவ்விதப் பதிவும் இல்லை.

இப்படமும் கடலையும் கடற்கரையையும் துவக்கக் காட்சியிலிருந்து இறுதிக் காட்சிவரை கொண்டிருந்தும் கூட மீனவர்களது வாழ்வியலைக் கூறும் படம் என்று கூற முடியாதவாறு பல்வேறு தடைகளைக் கொண்டிருக்கிறது. அதே சமயம் இதுவரையிலான மீனவர் பற்றிய தமிழ்ச் சினிமாக்களை விட செய்நேர்த்தி, பாத்திரத் தேர்வு, தோற்றம், ஆடை அணிகலனில் நுணுக்கம், நடிகர்கள் அல்லாத அப்பகுதி சார்ந்த மனிதர்களையே திரையில் நடமாட விட்டும், புகழ்பெற்ற அல்லது முன்பே திரையில் தோன்றி மக்களுக்கு அறிமுகமான நடிகர்களை முற்றிலும் தவிர்த்து அனைவரும் புதுமுகங்களாகவே தேர்வு செய்து பார்வையாளர்களுக்கு, பாத்திரங்கள் மட்டுமே கண்முன் நிற்கும்படியாகச் செய்ததன் மூலம் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தது போன்றவற்றால் தனது தனித்தன்மையை குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் திரைப்படமும் அதன் இயக்குநர் இராஜமோகனும் அழுத்தமாகப் பதிவு செய்கின்றனர்.

எவ்வளவுதான் மீனவர்களது பிரச்சினைகளைப் பேசினாலும் படகோட்டி எம்.ஜி.ஆர். படம், குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் மீனவர்களது அடிப்படைப் பிரச்சினைகளைப் பேசாவிட்டாலும் மீனவர் இளைஞனின் காதலை அதி முக்கியத்துவம் கொடுத்துப் பேசினாலும் இது மீனவர் படம் என்று கூறும் அளவிற்கு நாம் மேற்கூறிய விசயங்கள் வற்புறுத்துகின்றன. இதுதான் சமீப காலமாக வந்து கொண்டிருக்கின்ற புதிய தலைமுறை இயக்குநர்களின் பலம் பலகீனமாக இருக்கிறது. காட்சியமைப்பு யதார்த்தமாக, பலமாக இருக்கிறது. ஆனால் 60, 70களில் இருந்த (அரசியல்) கருத்தியல் அழுத்தம் தற்போது இல்லை. அது பலகீனம். ஒரு சிலர் மட்டும் விதிவிலக்கு. இவர்கள் அரசியல் உணர்வோடு அடித்தள மக்கள் பற்றியதும் அவர்களது வாழ்வியல் பிரச்சனைகள் பற்றியதுமான திரைப்படங்களை காட்சியாக்கி தமிழக மக்களுக்கு வழங்குவார்களானால் அதுவே ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுடைய சினிமாவாக இருப்பதோடு தமிழ்ச் சமூகப்பொது உளவியலைச் சற்று அசைத்தும் பார்க்கும்.
நன்றி - உயிர்மெய் சிறப்புமலர்.

Posted by -
#மதியழகி மகேந்திரன்,

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*