சினிமா தகவல்கள்
திரை வெளி.
இணையத்தில் அதிகம் விவாதிக்கபடும் விஷயம் தமிழ் சினிமா. குறிப்பாக திரையிசைப்பாடல்கள் குறித்து எண்ணிக்கையற்ற பதிவுகள் காணப்படுகின்றன. அது போலவே கடந்த கால தமிழ்சினிமா குறித்த அறியப்படாத தகவல்கள், நினைவலைகள் ஆங்காங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இதில் பல வல்லுனர்கள் இருக்கிறார்கள். இந்த செய்திகளும் கதைகளும் ஒருவகையான வாய்மொழி வரலாறு.
தமிழ் சினிமாவின் நடிகர்கள், நடிகைகள் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் வெளியாகமால் போன திரைப்படங்கள் குறித்த வாய்மொழிகதைகள், வேடிக்கைகள் மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் இதுவரை முழுமையாக தொகுக்கபடவில்லை.
நண்பர்கள் சந்திப்பிலும், சில மின்னஞ்சல்கள் மூலமாக கடந்தகால சினிமா பற்றிய நினைவுகளை நானும் நிறைய அறிந்திருக்கிறேன். இன்று இணையத்தின் நவீன தொழில்நுட்பம் காரணமாக காணக்கிடைக்காத நிறைய வீடியோ பதிவுகள் எளிதில் கிடைக்கின்றன. அதே போல அரிய பாடல்களை கேட்பதும் எளிதாகிவிட்டிருக்கிறது.
சமீபத்தில் என் கண்ணில் பட்ட சில சுவாரஸ்யமான சினிமா தகவல்கள், பதிவுகள் மற்றும் ஆடியோ வீடியோ பதிவுகள் இவை
**
எம்.ஜி.ஆரின் வெளிவராத திரைப்பாடல்
எம்.ஜி.ஆர் நடித்து வெளிவராத படம் எல்லைக்காவலன். 1960களில் இப்படத்திற்காக படமாக்கபட்ட பாடல் ஒன்றை யூடியூப்பில் தற்செயலாகக் காண நேர்ந்தது. அந்தப் படம் குறித்த தகவல்கள் எதையும் அறியமுடியவில்லை. அது எல்லைக்காவலன் படப்பாடல் தானா என்பது கூட உறுதியாக தெரியவில்லை.
http://www.youtube.com/srimgrmovies
**
சந்திரபாபு
நடிகர் சந்திரபாபு பற்றிய இக்கட்டுரையில் அவர் சினிமாவிற்கு வருவதற்குப் பட்டபாடுகள் அவரது வாழ்க்கைவரலாறு துல்லியமாக விவரிக்கபட்டிருக்கின்றன. சந்திரபாபுவை ஜெயகாந்தன் சந்தித்த சம்பங்களை ஒரு எழுத்தாளனின் சினிமா உலக அனுபவங்கள் என்ற புத்தகத்தில் ஜேகே சிறப்பாக எழுதியிருப்பார். இந்தக் கட்டுரை ஜேகேயை மறுபடியும் வாசிக்கும்படியாக தூண்டியது.
http://www.southside.in/24/The-ageony-and-ecstasy-of-being-Chandrababu/
**
இளையராஜாவும் அக்கமாதேவியும்
அக்கம்மா தேவி கன்னடத்தில் மிக பிரபலமான கவிஞர். 12ம் நூற்றாண்டை சேர்ந்தவர். அவரது பாடல்கள் சிவனை பாடுகின்றவை. ஒருவகையில் நம் காரைக்கால் அம்மையாரோடு ஒப்பிடக்கூடியவை. அக்கா ஈசனை தன் துணையாக ஏற்றுக் கொண்டு வாழ்ந்த பெண் துறவி. அவள் மீது ஆசைகொண்ட மன்னன் அவளை அடைய முயற்சிக்கிறான். அவளோ இது ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கபட்ட உடல் என்கிறாள். ஆசைமீறி அவள் புடவைளை அவிழ்த்து நிர்வாணப்படுத்துகிறான். அந்த ஆத்திரத்தில் நிர்வாண கோலமாகவே நடந்து திரிய துவங்குகிறாள்.அக்கமாதேவி . அவளது வசன கவிதைகள் ரௌத்திரமானவை.
அக்கமாதேவி பற்றிய ஆவணப்படம் ஒன்றினை மதுஸ்ரீ தத்தா இயக்கியிருக்கிறார். அதற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். 2000 வெளியான அந்த படம் இப்போது டிவிடியாக விற்பனைக்கு கிடைக்கின்றது.
மிக அற்புதமான இசை என்று அமெரிக்க நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். டிவிடியின் விலை 500 ரூபாய். அதை வாங்குவதற்கான முகவரி மற்றும் இணையதளம்.
Magic Lantern Foundation J 1881 Basement, Chittaranjan Park, New Delhi 110019
Ph: +91 11 41605239, 26273244 http://www.magiclanternfoundation.org/
**
அவள் அப்படித்தான்
எனக்கு பிடித்த தமிழ்படங்களில் ஒன்று அவள் அப்படித்தான். தொலைக்காட்சியில் இதுவரை பத்து தடவைக்கும் மேலாகப் பார்த்திருப்பேன். ருத்ரையாவின் இயக்கத்தில் சிறப்பான ஒளிப்பதிவு, இசை மிகையற்ற நடிப்பு வசனம் என்று நிறைய சிறப்பம்சங்கள் கொண்ட படம். இப் படத்தின் வசனகர்த்தா வண்ணநிலவன் மூலமாக அவள் அப்படித்தான் குறித்து நிறைய கேட்டு அறிந்திருக்கிறேன். என்னுடைய உலகசினிமா புத்தகத்தை ருத்ரையாவிற்கு சமர்பணம் செய்திருக்கிறேன்.
இப்படம் குறித்து தன் பார்வைகளை பகிர்ந்து கொள்கிறார் சுரேஷ். எம்பி3 வடிவத்தில் உள்ள இந்த உரை கேட்க சுவராஸ்யமாகவே உள்ளது.
http://podbazaar.com/view/144115188075856529
**
கே. பாலசந்தர் நேர்காணல்
அகிரா குரசேவா படத்திற்கும் கேபாலசந்தருக்கும் என்ன சம்பந்தம். ஏன் அடுர் கோபாலகிருஷ்ணன் போல கேபி படம் எடுப்பதில்லை இப்படியான கேள்விகளுக்கு கேபி அளித்த நேர்காணல்.வழக்கமான கேள்விபதில்களில் இருந்து மாறுபட்ட சிறிய நேர்காணல் இது
http://passionforcinema.com/k-balachander-in-discussion/
**
கண்ணதாசன் பாடல்கள்
கண்ணதாசன் திரைப்படங்களுக்கு பாடல் எழுதிய அனுபவங்கள் குறித்து விரிவான அலசல்கள், நினைவிலிருந்த சம்பங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
http://www.tfmpage.com/my/lyricist/kannadasan_raj.html
**
மணிரத்னம்
இருவர் திரைப்படம் குறித்த இந்த கட்டுரைகளும் அவசியம் வாசிக்கப்பட வேண்டியது. குறிப்பாக இருவர் பின்ணணி இசைபற்றிய இந்த பதிவு ரஹ்மானின் மேற்கத்திய இசைத்திறத்தினை நுட்பமாக வெளிப்படுத்துகிறது. பரத்வாஜ் ரங்கன் தமிழ் சினிமா பற்றி நேர்த்தியான கட்டுரைகளை எழுதி வருபவர்.
http://tfmmagazine.mayyam.com/nov06/?t=8307
http://www.india-seminar.com/2004/535/535%20baradwaj%20rangan.htm
**
பூட்டாத பூட்டுகள்
இயக்குனர் மகேந்திரன் படங்களில் எளதில் காணக்கிடைக்காத படம் பூட்டாத பூட்டுகள். நாவலாசிரியர் பொன்னிலனின் கதையை மகேந்திரன் படமாக்கியிருந்தார். இளையராஜாவின் சிறந்த பாடல்கள் படத்தினை இப்போதும் நினைவில் வைத்திருக்கிறது. ஆனந்தம் ஆனந்தம் என்ற பாடலின் வீடியோ பதிவு இது.
http://www.youtube.com/watch?v=KD6I4NgjS5k
**
இறுதி காட்சிகள்
தமிழ்படங்களின் திரைக்கதையில் ஆரம்ப காட்சி , இடைவேளை, கிளைமாக்ஸ் என்று மூன்று முக்கிய புள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு படத்தின் போது இந்த மூன்று காட்சிகள் பற்றியும் நாள்கணக்கில் விவாதம் நடைபெறும். எனக்கு விருப்பமான இரண்டு படங்களின் இறுதிகாட்சிகள். இந்த இரண்டிலும் பின்ணணி இசை எந்த அளவு படத்தின் ஜீவனாக இருக்க முடியும் என்பதற்கான உதாரணங்கள். ஒன்று
முள்ளம் மலரும் படத்தின் இறுதி காட்சி
http://www.youtube.com/watch?v=1R-eX6jJmyk
ஜானி படத்தின் இறுதி காட்சி
http://www.youtube.com/watch?v=LOxmBwaRQdI&
**
சலீல் சௌத்ரியின் தமிழிசை பாடல்கள்
சலீல்சௌத்ரியின் இசையில் கரும்பு என்ற படத்தில் இடம்பெற்ற திங்கள் மாலை வெங்குடையான் என்ற சிலப்பதிகாரப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. சலீல்தாவின் செம்மீன் பாடல்கள் காலம் கடந்து நிற்கும் காவிய இசைதன்மை கொண்டவை. அவர் தமிழில் இசையமைத்த பாடல்கள் இங்கே கேட்க கிடைக்கின்றன
http://www.salilda.com/filmsongs/other/tamil/karumbu.asp
**
இசை முகங்கள்.
பிரபலமான திரையிசை பாடகர்கள் பாடகிகள் குரலை அறிந்த அளவு அவர்களின் முகங்களை நாம் அறிந்திருப்பதில்லை. இந்த வலைப்பக்கத்தில் இந்தியாவின் முக்கிய பாடகர்கள் பாடகிகள் பற்றி புகைப்படங்களுடன் குறிப்புகள் காணப்படுகின்றன.
http://www.aneetaa.com/music.html
**
இசை அசலும் நகலும்
திரையிசை பாடல்களில் எந்தெந்த இசையமைப்பாளர்கள் எந்த பாடல்களில் யாருடைய இசையை நகல் எடுத்துள்ளார்கள். எந்த இசை அசலானது. எப்படி இந்த நகல்கள் உருமாறின என்பதை பற்றிய ஒப்பிட்டு தகவல்கள்.
http://itwofs.com/
நன்றி -எஸ் .ராமகிருஷ்ணான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக