சிவாஜிக்கு வாய்ப்பளித்தது பெருமாள் முதலியார் என்றால் சிவாஜிக்கு வாழ்வளித்தது M.R. ராதா – அரிய தகவல்
*நடிகர் திலகம் சிவாஜியின் முதல் திரைக்காவியம் பராசக்தி…*
இந்த திரைப்படத்தில் கலைஞர் கருணாநிதி வசனத்தை தீப்பொறி பறக்க பேசி திறம்பட நடித்தவர் சிவாஜி கணேசன்.
அறிமுகமான ஒரே திரைப்பட த்திலேயே உச்சத்திற்கு சென்ற இரண்டாவது நடிகர் என்ற பெருமை யை இவர் பெற்றுள்ளார்.
சிவாஜிகணேசனின் நடிப்பாற்றலை கண்டுவியந்து பாராட்டிய பெருமாள்முதலியார் தனது பராசக்தி படத்தில் அவரையே கதாநாயகனாக நடிக்க வாய்ப்புக் கொடுத்தார்.
படப்பிடிப்பு தொடங்கி நல்லமுறையி ல் சென்றுகொண்டிருந்த வேளையில் ஒருநாள் பெருமாள் முதலியாரிடம், சிவாஜியை நீக்கி விட்டு வேறு ஒரு நடிகரை போட்டு எடுங்க அப்போதுதான் உங்கள் படம் வெற்றிபெறும் இல்லையெ ன்றால் உங்க படம் பெட்டியில் தூங்கும் என்று சொல்லியிருக்கார் திரு. ஏ.வி.எம். (AVM) அவர்கள்.
இதுகுறித்து பெருமாள் முதலியார்… நடிகவேள் எம்.ஆர். ராதாவிடம் சொல்லியிருக்கிறார்.
அப்போது எம்.ஆர். ராதா அவர்கள் (M.R. Radha) பெருமாள் முதலியாரிடம்,
“எந்தப்பய கணேசன் மாதிரி நடிக்க இருக்கான்? நாடகத்திலேயே நடிச்ச வனுக்குத் தான் சினிமாவிலே நடிக்கத் தெரியும்.
அதனாலே இவனையே (சிவாஜியையே) வெச்சு எடுங்க… இல்லைன்னா படம் டப்பாவாகப் போகும்” என்று கூறியுள்ளாராம்.
நடிகவேள் எம்.ஆர். ராதா கொடுத்த நம்பிக்கையின் பேரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து முழுத் திரைப்படத்தையும் எடுத்து முடித்தார். பெருமாள் முதலியார்.
அந்த திரைப்படம் ஹிமாலய சாதனை படைத்தது. சிவாஜியும் உச்சத்திற்கு சென்றார்.
*கொஞ்சம்*
*நினைத்து பாருங்கள்.*
அன்று M.R. ராதா அவர்கள் மட்டும், சிவாஜிக்கு ஆதரவாக பெருமாள் முதலியாரிடம் பேசி யிருக்காவிட்டால் இன்று நமக்கு இந்துசமய புராணகால சித்தர் முதல் எதார்த்தவாதிகளான சாமானியன் வரைக்குமானவர்களின் வாழ்க்கை நிதர்சனங்களை வரைவு ஓவியமாய் வழங்கிய நடிகர்திலகம் என்ற ஒப்பற்ற திரைச்சிங்கம், சிம்மக்குரலோன், கலைத்தாயின் தவப்புதல்வன், கலையுலக பல்கலைக்கழகம், உணர்ச்சிகளின் ஊற்று, சரித்திரத்தை சித்திரமாக படைத்த சிவாஜிகணேசன் நமக்கு கிடைத்திருப்பாரா?
*இப்போது சொல்லுங்கள் சிவாஜிக்கு வாய்ப்பளித்தது பெருமாள் முதலியார் என்றால் சிவாஜிக்கு வாழ்வளித்தது எம். ஆர். ராதா தானே!!*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக