திங்கள், 26 டிசம்பர், 2016

நடிகர் அஜித் பற்றிய அறிய தகவலகள் !

நடிகர் அஜித்  பற்றிய அறிய தகவலகள் !

தமிழ் திரையுலகில் அஜித்தை பற்றி முன்னனி கதாநாயகிகள் கூறியது . .
1. #நயன்தாரா - தமிழ் சினிமாவிலே அஜித்தான் ஹேண்ட்சம்
2. #த்ரிஷா - நான் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்தவர்
3. #நஸ்ரியா - அவர்படத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்தால் போதும்
4. #லட்சுமிமேனன் - அவர் கூட நடிச்சா சம்பளமே வேண்டாம்
5. #பிந்து_மாதவி - கண்ணத்துள ஒரே ஒரு முத்தம் கொடுக்கனும்
6. #டாப்ஸி- ரஜினியை விட அஜித்தான் பிடிக்கும்
7. #ஓவியா - அவருக்கு முத்தம் கொடுக்க என் ஆசை
8. #லட்சுமிராய் - என் சிறந்த நண்பர்
9. #குஷ்பு - ஹாலிவுட் ஸ்டைலில் தமிழ் நடிகர் அஜித்
10. #தமன்னா - அவர்கூட நடிச்சது பெருமையா இருக்கு . . . .
Etc. . .
இது போல் எந்த ஒரு கதாநாயகியாவது உங்கள் தலைவனை பற்றி பேசியதுண்டா .. தமிழின் ஒரே ஆணழகன் அஜித் டா..
தைரியம் இருந்தால் இவரைபோல் முடிக்கு டை அடிக்காமல் மேக்கப் போடாமால் நடிக்கசொல் உன் தலைவனை நீ புகைபடத்தில் கூட பார்க்கமாட்டாய் . .
What's your favorite Ajith movie ?
1. 2015 - என்னை அறிந்தால்(55)
2. 2014 - வீரம் (54)
3. 2013 - ஆரம்பம் (53)
4. 2013 - இங்கிலிஷ் விங்கிலிஷ்.(52)
5. 2012 - பில்லா 2 (51)
6. 2011 - மங்காத்தா (50)
7. 2010 - அசல் (49)
8. 2008 - ஏகன் (48)
9. 2007 - பில்லா (47)
10. 2007 கிரீடம் சக்திவேல் (46)
11. 2007 ஆழ்வார் (45)
12. 2006 வரலாறு (44)
13. 2006 திருப்பதி (43)
14. 2006 பரமசிவன் (42)
15. 2005 ஜீ (41)
16. 2004 ஜனா (40)
17. 2004 அட்டகாசம் (39)
18. 2003 என்னை தாலாட்டவருவாளா (38)
19. 2003 ஆஞ்சநேயா (37)
20. 2002 வில்லன் (36)
21. 2002 ரெட் (35)
22. 2002 ராஜா (34)
23. 2001 பூவெல்லாம் உன் வாசம்(33)
24. 2001 தீனா (32)
25. 2001 அசோகா (31)
26. 2001 சிட்டிசன் (30)
27. 2000 முகவரி (29)
28. 2000 கண்டுகொண்டேன்
(28)
29. கண்டுகொண்டேன் (27)
30. 2000உன்னை கொடு என்னை தருவேன்(26)
31. 1999 நீ வருவாய் என (25)
32. 1999 தொடரும் (24)
33. 1999 உன்னை தேடி (23)
34. 1999 ஆனந்த பூங்காற்றே (22)
35. 1999 அமர்க்களம்(மனைவி ஷாலினியுடன்) (21)
36. 1999 வாலி (20)
37. 1998 காதல் மன்னன் (19)
38. 1998 உன்னிடத்தில்என்னை கொடுத்தேன் (18)
39. 1998 உயிரோடு உயிராக (17)
40. 1998 அவள் வருவாளா (16)
41. 1997 ரெட்டை ஜடை வயசு (15)
42. 1997 ராசி (14)
43. 1997 பகைவன் (13)
44. 1997 நேசம் (12)
45. 1997 உல்லாசம் (11)
46. 1996 வான்மதி (10)
47. 1996 மைனர் மாப்பிள்ளை (9)
48. 1996 கல்லூரி வாசல் (8)
49. 1996 காதல் கோட்டை (7)
50. 1995 ராஜாவின் பார்வையினில்6)
51. 1995 ஆசை (5)
52. 1994 பாசமலர்கள் (4)
53. 1994 பவித்ரா (3)
54. 1993 அமராவதி (2)
55. 1992 பிரம்மபுஸ்தகம்தெலுங்கு(அறிமுகம
1. அஜீத்தின் பூர்வீகம் பாலக்காடு. தந்தை
சுப்ரமணியம் தாய் மோகினிக்கு 1971-ம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி மகனாக பிறந்தவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்.
2. இரண்டு சகோதரர்கள். அண்ணன் அனுப், தம்பி அனில்.
3. ஆந்திரத்தில் பிறந்தாலும் சென்னை எழும்பூர் அசன் மேல்நிலை பள்ளியில் பத்தாவது வரை படித்தவர்.
4. இன்றும் சில இரவுகளில் காரில் பள்ளிக்கூடம் அருகில் வந்து பழைய நினைவுகளில் அஜீத் மூழ்குவது வழக்கம்.
5. என்பீல்டு கம்பெனியில் வேலைப்பார்த்தவர் பிறகு துணிகளை ஏற்றுவதி செய்யும் நிறுவனத்தில் சேர்ந்து விட்டார்.
6. அடுத்தக்கட்டமாக மாடலிங் துறையில் ஈடுபட்டார்.
7. தன்னுடைய 20-வது வயதில் நடித்த தெலுக்கு படத்தின் டைரக்டர் இறந்து விட படம் பாதியிலேயே நின்று போனது.
8. மே மாதம் பட வாய்ப்பு கை நழுவி போனபோது ஊடகத் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா இயக்குனர் செல்வாவிடம் அஜீத் புகைப்படத்தை காட்ட ‘அமராவதி’ படத்தின் நாயகனாகி விட்டார்.
9. அஜீத்தின் முதல் சம்பளத்தில் வாங்கிய பைக் இன்றும் பத்திரமாக அவரிடம் இருக்கிறது.
10. அஜீத்திற்கு ரேஸ் பழக்கம் எப்படி ஏற்பட்டதெனில் அவர் வேலைப் பார்த்த நிறுவனத்தின் முதலாளி சென்னை சோழவரம் ரேஸ்களில் கலந்துக் கொள்வாராம். அவரைப் பார்த்து தான் அஜீத்திற்கு பைக் ரேஸ் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
11. அமராவதி படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே விபத்தில் சிக்கி முதுகுத் தண்டு வடத்தில் பாதிக்கப்பட்டு மீண்டார்.
12. ’பெடரேஷன் மோட்டார்ஸ் ஆப் இந்தியா’ போட்டியில் கலந்துக் கொண்டு 5-வது இடத்தை பிடித்தார்.
13. ஆசை படம் இவரின் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
14. அஜீத் எம்மதமும் சம்மதம் என்ற பாலிசியை உடையவர்.
15. அதை குறிக்கும் விதமாக வீட்டு சுவற்றில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மத சின்னங்களுடன் கல் பதிக்கப்பட்டிருக்கும்.
16. அஜீத் ஒருவரை பார்த்து விட்டால் அவர்களை அப்சர்வ் பண்ணுவதில் கில்லாடி.
17. அவர் வீட்டில் பால்ய கால நிகழ்வுகளின் புகைப்படங்களை மாட்டி வைத்துள்ளார்.
18. அதைப்பற்றி தனது மகள் அநெளஷ்காவுக்கு அடிக்கடி சொல்வதுண்டு அஜீத்.
19. அஜீத்திற்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்று புகைப்பட கிளிக்
20. அஜீத் வீட்டில் சிறிய விளையாட்டு அரங்கு உள்ளது.
21. தன்னுடைய நண்பர்களுக்கு ஹெல்மெட் அணிய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவார்.
22. இயக்குனர் – நடிகர்களின் திறமைகளை வெளிப்படையாக பாராட்டுவார்.
23. இவரால் சமீபத்தில் வெளிப்படையாக பாராட்டப்பட்டவர் அட்டகத்தி தினேஷ்.
24. வெளிப்புற படப் பிடிப்பு என்றால் ஐதராபாத் இடம்பெற்றிருக்கும். ராமொஜி ராவ் திரைப்பட நகரத்தின் மீது அவருக்கு ஒரு காதல். பிறந்த மண் ஆயிற்றே.
25. இவரின் அண்மைக்கால சேகரிப்பு ஆத்திச்சூடி.. ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது.
26. ஆத்திச்சூடியை பற்றிய விழிப்புணர்வு இல்லையே என்ற வருத்தம் அஜீத்திற்கு உண்டு,
27. தன்னுடைய பிறந்த நாளை பசுமைக் திரு நாளாக கொண்டாட சொல்வார்.
28. ஒவ்வொருவரும் மரக் கன்றுகள் நட வேண்டும் என்பது அவருடைய விருப்பம்.
29. மனைவி ஷாலினியிடம் ஒவ்வொரு முறை போனில் பேசும் போதும் ஐ லவ் யூ சொல்வது வழக்கம்.
30. அஜீத்தை ஷாலினி பேபி என்று தான் செல்லமாக அழைப்பார்.
31. நண்பர்களை தேடிச் சென்று மணிக்கணக்கில் பேசுவார்.
32. நடிகர் ஜெய்சங்கரின் மகன் டாக்டர் விஜய் சங்கர் அஜீத்தின் நெருங்கிய நணபர்
33. ஞாபகசக்தி அதிகமுடையவர்.
34. தெரிந்தவர் என்றால் கைகுலுக்கி பேசுவார். மிகவும் தெரிந்தவரென்றால் தோல் மீது கைபோட்டு பேசுவார்.
35. துப்பாக்கி சுடுவதில் தேர்ந்தவர். சுயபாதுகாப்புக்காக பாயிண்ட் 32 ரக துப்பாக்கி வைத்திருக்கிறார்.
36. தனது உதவியாளர்கலுடன் இரவு 7 மணிக்கு மேல் பேச வேண்டிய நிலை ஏற்பட்டால் உங்களுடன் பேசலாமா?....நேரம் கிடைக்குமா? என்ற குறுஞ்செய்தி அனுப்பி பதில் கிடைத்த பிறகே பேசுவார்.
37. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சமையலறையில் காணலாம். பிரியாணி ஸ்பெஷலிஸ்ட்.
38. வீட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு சீருடை மட்டுமல்ல. அவர்கள் வசிப்பதற்காக வீடுகளும் கொடுக்கிறார்.
39. அஜீத்திடம் வேலை பார்ப்பவர்கள் 14 பேர். தனது வீட்டுத் தளம் போலவே அவர்களின் வீட்டுத் தளமும் இருக்க வேண்டும் என சொல்லி இருக்கிறார்.
40. அஜீத்திடம் ஐந்து பைக்குகள் உண்டு. நீண்ட தொலைவு பயணத்துக்காக வாங்கியதில் தான் பெங்களூர், மும்பை என பயணம் செய்தார்.
41. அஜீத் தனிப்பட்ட சலுகை எதையும் விரும்புவதில்லை. விமான நிலையம் என்றாலும் சரி வாக்குச்சாவடியாக இருந்தாலும் சரி வரிசையில் தான் நிற்பார்
42. பட்டதாரி இல்லை என்றாலும் ஆங்கிலம், இந்தி, பிரெஞ் தெரியும்.
43. ஒரு நாட்டின் குடிமகனுக்கு அரசியல் பற்றி என்ன தெரிய வேண்டுமோ அது அஜீத்திற்கு தெரியும்...

சனி, 17 டிசம்பர், 2016

இசைஞானியுடன் ஜெயச்சாவும், கடசிங்காரியும்!

இசைஞானியுடன் ஜெயச்சாவும், கடசிங்காரியும்!

திரு.ஜெயச்சா சிங்காரம் இசைஞானியுடன் 'அன்னக்கிளி' தொடங்கி இப்போது வரை 20க்கும் மேல் உள்ள இசைக்கருவிகளை
வாசிக்கும் இசை கலைஞர். இவரது முழுப்பெயர் ஜெயச்சந்திரன் இவரது தந்தை திரு.சிங்காரம் அவர்கள், ஜெயச்சா அவர்கள் தனது
12 வது வயதில் ஜால்ரா, சலங்கை போன்ற இசைக்கருவிகளை தமிழ்திரைக்கு வாசித்திருக்கிறார், 1970களில் இவர் கற்றுக்கொண்ட இசைக்கருவி கிட்டார்..  ஆனால் கடசிங்காரி வாசிப்பதில் இவருக்கு நிகர் இவரே, கடசிங்காரிக்கு கிராக்கி அதிகரிக்கவே, இதை வாசிக்க ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதின் காரணமாகவே இதை தேர்வு செய்து கொண்டார்.

'நெஞ்சத்தை கிள்ளாதே' படத்தில் "பருவமே புதிய பாடல்" பாடலுக்கு தொடையில் தாளம் வாசித்தவர் இருவர், அந்த இருவரில் இவர் ஒருவர்

அது சரி, கடம் என்றால் இசைக்கருவி, அது என்ன கட சிங்காரி?

கடசிங்காரியை வடிவமைத்தது இவரது தந்தை சிங்காரம் அவர்கள். கடத்தின் மேல் ஒரு மேளத்தை வைத்து அதில் எழும்பும் இசையானது கடத்தின் உள்ளே சென்று வெளியே வரும், பொதுவாகவே இசைக்கருவிகளின் நடுப்பகுதியில் பொட்டுவைப்பது வழக்கம், அதன் மைய பகுதியில்
பொட்டுவைத்ததன் காரணமாக இந்த இசைக்கருவியை பெண்பால் பெயர் வைத்து "கடசிங்காரி" என்று பெயர் சூட்டினார்கள்.

கடசிங்காரியை பொருத்தவரை தாலாட்டு பாடல்களுக்கும், கிராமிய பாடலுக்கும் மட்டுமே பயன்படுத்தினார்கள் அன்றைய இசையமப்பாளர்களான ராமனாத அய்யர், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் இடம்பெற்ற "மாட்டு வண்டிய பூட்டிக்கிட்டு" பாடலுக்கும், கே.வி மகாதேவன் அவர்கள்கா ட்டுக்குள்ளே திருவிழா போன்ற பாடலுக்கும் பயன்படுத்தினார்கள்.

இவர்களுக்குன் பின் இசைஞானியின் ஆளுமையின் கீழ் வந்தது இந்த கடசிங்காரி. இசைஞானி தாலாட்டு பாடலுக்கு மட்டுமல்ல கிராமியம், மேற்கத்திய முறையிலும் கடசிங்காரியை பயன்படுத்தினார். இளையராஜாவை பொருத்தவரை 'அன்னக்கிளி' முதல் இப்போது வரை இந்த கருவியுடன் காதல் தொடர்கிறது...

அப்படி ராஜாவின் இசையின் கடசிங்காரி இடம்பெற்ற சில பாடலை தொடுக்கிறேன்...

'கிழக்கு வாசல்' படத்தில் இடம்பெற்ற "பச்சமல பூவு"
'நாயகன்' படத்தில் இடம்பெற்ற "தென்பாண்டி சீமையிலே"

'சகலகலா வல்லவன்' படத்தில் இடம்பெற்ற கட்டவண்டி கட்டவண்டி

'முதல் மரியாதை படத்தில் இடம்பெற்ற "ராசாவே உன்ன நம்பி"

'மண்வாசனை' படத்தில் இடம்பெற்ற "பொத்தி வச்ச மல்லிக மொட்டு"
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...

இது மட்டுமல்ல பின்னணி இசைக்கும் இந்த கருவியை அபாராமாக பயன்படுத்தியவர் இசைஞானி மட்டுமே.

இதில் கூடுதலான விஷயம் என்னவென்றால் 'நாயகன்' படத்தின் காட்சிகளும், கதாபாத்திரங்களும் 1960 காலகட்டத்தை தழுவி எடுத்த திரைப்படம் என்பதால் அந்த காலக்கட்டத்திற்கு ஏற்ப இசைக்கருவிகளை வைத்து இசையமைத்தார் இசைஞானி.

இசைஞானியுடன் ஜெயச்சாவும், கடசிங்காரியும்!

இசைஞானியுடன் ஜெயச்சாவும், கடசிங்காரியும்!

திரு.ஜெயச்சா சிங்காரம் இசைஞானியுடன் 'அன்னக்கிளி' தொடங்கி இப்போது வரை 20க்கும் மேல் உள்ள இசைக்கருவிகளை
வாசிக்கும் இசை கலைஞர். இவரது முழுப்பெயர் ஜெயச்சந்திரன் இவரது தந்தை திரு.சிங்காரம் அவர்கள், ஜெயச்சா அவர்கள் தனது
12 வது வயதில் ஜால்ரா, சலங்கை போன்ற இசைக்கருவிகளை தமிழ்திரைக்கு வாசித்திருக்கிறார், 1970களில் இவர் கற்றுக்கொண்ட இசைக்கருவி கிட்டார்..  ஆனால் கடசிங்காரி வாசிப்பதில் இவருக்கு நிகர் இவரே, கடசிங்காரிக்கு கிராக்கி அதிகரிக்கவே, இதை வாசிக்க ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதின் காரணமாகவே இதை தேர்வு செய்து கொண்டார்.

'நெஞ்சத்தை கிள்ளாதே' படத்தில் "பருவமே புதிய பாடல்" பாடலுக்கு தொடையில் தாளம் வாசித்தவர் இருவர், அந்த இருவரில் இவர் ஒருவர்

அது சரி, கடம் என்றால் இசைக்கருவி, அது என்ன கட சிங்காரி?

கடசிங்காரியை வடிவமைத்தது இவரது தந்தை சிங்காரம் அவர்கள். கடத்தின் மேல் ஒரு மேளத்தை வைத்து அதில் எழும்பும் இசையானது கடத்தின் உள்ளே சென்று வெளியே வரும், பொதுவாகவே இசைக்கருவிகளின் நடுப்பகுதியில் பொட்டுவைப்பது வழக்கம், அதன் மைய பகுதியில்
பொட்டுவைத்ததன் காரணமாக இந்த இசைக்கருவியை பெண்பால் பெயர் வைத்து "கடசிங்காரி" என்று பெயர் சூட்டினார்கள்.

கடசிங்காரியை பொருத்தவரை தாலாட்டு பாடல்களுக்கும், கிராமிய பாடலுக்கும் மட்டுமே பயன்படுத்தினார்கள் அன்றைய இசையமப்பாளர்களான ராமனாத அய்யர், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் இடம்பெற்ற "மாட்டு வண்டிய பூட்டிக்கிட்டு" பாடலுக்கும், கே.வி மகாதேவன் அவர்கள்கா ட்டுக்குள்ளே திருவிழா போன்ற பாடலுக்கும் பயன்படுத்தினார்கள்.

இவர்களுக்குன் பின் இசைஞானியின் ஆளுமையின் கீழ் வந்தது இந்த கடசிங்காரி. இசைஞானி தாலாட்டு பாடலுக்கு மட்டுமல்ல கிராமியம், மேற்கத்திய முறையிலும் கடசிங்காரியை பயன்படுத்தினார். இளையராஜாவை பொருத்தவரை 'அன்னக்கிளி' முதல் இப்போது வரை இந்த கருவியுடன் காதல் தொடர்கிறது...

அப்படி ராஜாவின் இசையின் கடசிங்காரி இடம்பெற்ற சில பாடலை தொடுக்கிறேன்...

'கிழக்கு வாசல்' படத்தில் இடம்பெற்ற "பச்சமல பூவு"
'நாயகன்' படத்தில் இடம்பெற்ற "தென்பாண்டி சீமையிலே"

'சகலகலா வல்லவன்' படத்தில் இடம்பெற்ற கட்டவண்டி கட்டவண்டி

'முதல் மரியாதை படத்தில் இடம்பெற்ற "ராசாவே உன்ன நம்பி"

'மண்வாசனை' படத்தில் இடம்பெற்ற "பொத்தி வச்ச மல்லிக மொட்டு"
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...

இது மட்டுமல்ல பின்னணி இசைக்கும் இந்த கருவியை அபாராமாக பயன்படுத்தியவர் இசைஞானி மட்டுமே.

இதில் கூடுதலான விஷயம் என்னவென்றால் 'நாயகன்' படத்தின் காட்சிகளும், கதாபாத்திரங்களும் 1960 காலகட்டத்தை தழுவி எடுத்த திரைப்படம் என்பதால் அந்த காலக்கட்டத்திற்கு ஏற்ப இசைக்கருவிகளை வைத்து இசையமைத்தார் இசைஞானி.

திங்கள், 28 நவம்பர், 2016

உலகின் மிகச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா!

உலகின் மிகச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா!

உலகின் மிகச் சிறந்த 25 இசையமைப்பாளர்களில் (Music Composers) ஒருவராக இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே.

டேஸ்ட்ஆப் இந்தியா என்ற பிரபல இணையதளத்தில் வெளியாகியுள்ள அந்த 25 கம்போஸர்கள் பட்டியல் இது.

25. ஆலன் சில்வெஸ்ட்ரி (ஃபாரஸ்ட் கம்ப், பேக் டு த ஃப்யூச்சர், தி அவெஞ்சர்ஸ் படங்களின் இசையமைப்பாளர்)

24. வாஞ்சலிஸ் (ப்ளேட் ரன்னர், சேரியட்ஸ் ஆப் பையர் போன்ற பிரிட்டிஷ் படங்களின் இசையமைப்பாளர்)

23. ஜேம்ஸ் நியூட்டன் – ஹோவர்ட் (எட்டு முறை ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். தி ப்யூஜிடிவ், மை பெஸ்ட் ப்ரண்ட்ஸ் வெட்டிங், வெர்டிகல் லிமிட், தி சிக்ஸ்த் சென்ஸ் போன்றவை இவர் இசையில் வந்தவை)

22. பிலிப் க்ளாஸ் (இவர் இசையமைத்த மிஷிமா : எ லைப் இன் போர் சேப்டர்ஸ் இன்றும் சிறந்த இசையாகப் போற்றப்படுகிறது. க்வாட்ஸி பட வரிசைகளுக்கு இசையமைத்தவர்)

21.டேனி எல்ப்மேன் (பிரபல ஹாலிவுட் இயக்குநர் டிம் பர்ட்டனுடன் இணைந்து பல வெற்றிப் படங்கள் தந்தவர். குறிப்பாக பேட்மேன் வரிசைப் படங்கள்)

20.தாமஸ் நியூமேன் (ரோட் டு பெர்டிஷன், பைன்டிங் நெமோ போன்ற படங்களுக்கு இசை அமைத்தவர். இவர் தந்தை ஆல்ப்ரெட் நியூமேன், சகோதரர் டேவிட் நியூமேன், உறவினர் ராண்டி நியூமேன் அனைவருமே புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள்)

19.ஹோவர்ட் ஷோர் (லார்ட் ஆப் தி ரிங்க்ஸின் மூன்று பாகங்களுக்கும் இசை தந்தவர். மூன்று ஆஸ்கர்கள் பெற்றவர்)

18.எல்மர் பெர்ன்ஸ்டீன் (தி மேக்னிபிஷியன்ட் செவன், டென் கமான்ட்மெண்ட்ஸ், தி கிரேட் எஸ்கேப் போன்ற படங்கள் இவர் இசையமைத்தவைதான்)

17.டிமிட்ரி டியோம்கின் (ரெட் ரிவர், ஹை நூன், மிஸ்டர் ஸ்மித் கோஸ் டு வாஷிங்டன் போன்ற படங்களின் இசையமைப்பாளர்)

16.ஜார்ஜஸ் டெலெரெ (தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சீஸர் விருது பெற்ற முதல் இசையமைப்பாளர். ஜீன் லாக் கோடர்ட்டின் கண்டெம்ப் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர்.)

15.ஜேம்ஸ் ஹார்னர் (இவரது டைட்டானிக் பட இசையை யார்தான் மறக்க முடியும். பிரேவ் ஹார்ட்டும் இவர் படம்தான்)

14.ஜோ ஹிசைசி (பிரபல இயக்குநர் தகாஷி கிடனோவின் பெரும்பாலான படங்களுக்கு இசை இவர்தான். வேல்லி ஆப் தி விண்ட் படத்தின் இசையமைப்பாளர்)

13.ஹான்ஸ் ஜிம்மர் (க்ளாடியேட்டர், பைரேட்ஸ் ஆப் தி கர்ரீபியன் போன்ற மெகா படங்களின் இசையமைப்பாளர் ஜிம்மர். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்குக்குப் பிடித்த இசையமைப்பாளர். )

12.ஜான் பேர்ரி (பழைய ஜேம்ஸ்பாண்ட் படங்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜான் பேர்ரி. அவுட் ஆப் ஆப்ரிக்கா படத்துக்காக ஆஸ்கர் பெற்றவர்)

11.மௌரிஸ் ஜார் (லாரன்ஸ் ஆப் அரேபியா, கோஸ்ட், விட்னஸ் போன்ற படங்களுக்கு மறக்க முடியாத இசை தந்தவர்)

10.ஜெர்ரி கோல்ட்ஸ்மித் (ஏலியன்ஸ், ப்ளானட் ஆப் தி ஏப்ஸ், டோட்டல் ரீகால் போன்ற மெகா ஹிட் படங்களின் இசையமைப்பாளர்.)

9.இளையராஜா (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 970 படங்கள், 4500க்கும் மேற்பட்ட பாடல்கள், 28 தனி இசை ஆல்பங்கள், ஏராளமான சர்வதேச மேடை நிகழ்ச்சிகள் நடத்தியவர்… ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயித்த இசைக்குச் சொந்தக்காரர்.. பின்னணி இசையால் படத்தைப் பேச வைத்தவர். Music Composer என்ற வார்த்தைக்கு அர்த்தம் தந்த இசையமைப்பாளர்!)

8.ஆலன் மென்கின் (6 ஆண்டுகளில் 8 ஆஸ்கர்களை வாங்கியவர். டிஸ்னி நிறுவனப் படங்களில் பணியாற்றியவர். தி லயன் கிங் இவர் இசையமைத்த படம்தான்)

7.மைக்கேல் ரெக்ரான்ட் (க்ளின்ட் ஈஸ்ட்வுட், ராபர்ட் ஆல்ட்மேன் போன்ற புகழ்பெற்ற இயக்குநர்களுடன் பணிபுந்தவர். தி தாமஸ் க்ரோனின் அஃபையர்ஸ் படத்தின் இசையமைப்பாளர்.)

6.டோரு டகேமிட்சு (ஜப்பானின் முக்கிய இசையமைப்பாளர். பிரபல இயக்குநர்கள் ஹிரோஷி தெஷிகாரா, நகிஷா ஒஷிமா போன்றவர்களின் படங்களுக்கு இசை தந்தவர்)

5.நினோ ரோட்டா (தி காட்பாதர் படங்களுக்கு இசை தந்தவர்)

4.பெர்னார்ட் ஹர்மான் (சைக்கோ, வெர்டிகோ உள்ளிட்ட ஹிட்ச்காக் படங்களின் இசையமைப்பாளர்)

3.ஜான் வில்லியம்ஸ் (சூப்பர் மேன், ஸ்டார் வார்ஸ், ஈடி, ஜூராஸிக் பார்க் படங்களின் இசையமைப்பாளர்)

2.மேக்ஸ் ஸ்டெய்னர் (காஸாப்ளாங்கா, கான் வித் த விண்ட் படங்களின் இசையமைப்பாளர்)

1.என்னியோ மொர்ரிக்கோன் (கில் பில், இங்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் படங்களுக்கு இசையமைத்தவர்)

புதன், 16 நவம்பர், 2016

பாடகி வாணி ஜெயராம்.

பாடகி வாணி ஜெயராம்.

வானவில்லின் வண்ணங்களை, ஏழு ஸ்வரங்களின் வாயிலாக தன் குரலில் கொண்டுவந்து, அவரது பாடல்களை கேட்போரது செவிகளில் தேன் வடியச் செய்த பாடகி வாணி ஜெயராம். குயிலைப் போன்ற குரல் வளம் கொண்டவர்களைப் பற்றி ஒரு சொலவடை உண்டு. இறைவனுக்கு போன ஜென்மத்தில் தேனாபிஷேகம் செய்திருப்பார்களோ என்று. இவரது கம்பீரமான குரலைக் கேட்கும்போது அது உண்மையாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. கம்பீரம் மட்டுமல்ல, கனிவு, குழைவு, எத்தனையோ உணர்ச்சிகளை உள்ளடக்கிய குரல் இவருடைய செந்தூரக் குரல். பொதுவாக நடனத்தில், நடன அசைவுகளில் நவரசத்தை வெளிப்படுத்துவார்கள். இவரது வெண்கலக் குரல் எண்ணிலடங்கா ரசங்களை காட்டக் கூடியது.

இவரது குரல்தான் அதிசயக் குரல் என்றால், தமிழில் அட்சர சுத்தமாகப் பேசத் தெரிந்த ஒரு பாடகி, தமிழகத்தில் வேலூரில் பிறந்த ஒரு பாடகி, தமிழ் இசை உலகில் ஒரு நல்ல இடத்தில், நிறைய பாட வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றதும் ஒரு அதிசயம்தான். தமிழகத்தில் பிறந்தாலும், இந்திய இசைத் துறையையே ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார் இந்த குரலழகி, இசையழகி வாணி ஜெயராம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்ற தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது, மொத்தம் பதினான்கு மொழிகளில் பாடியிருக்கிறார் இந்த குரலோவியம். எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழியின் வார்த்தைகளை கொஞ்சம் கூட அதன் அர்த்தம் மாறாமல் தெளிவாக பாடுவதில் வாணி ஜெயராம் வல்லவர்.

திரைப்படம் : தீர்க்க சுமங்கலி
பாடியவர் : வாணி ஜெயராம்
பாடல் : மல்லிகை என் மன்னன் மயங்கும்

எத்தனையோ மலர்களிங்கே மண்ணிலிருந்தாலும் மல்லிகைக்கென்று ஒரு மகத்தான இடம் மங்கையரிடம் மட்டுமில்லை,  ஆடவரின் உள்ளங்களிலும் உண்டு!  வெள்ளை நிறத்தில் மொட்டாகக் கூடிச் சரமாய்த் தொடுக்கப்பட்டுப் பின் மெல்ல மெல்ல இதழ் விரித்து மணம்தனைப் பரப்பி மனதையும் மயக்கும் மலரன்றோ? மஞ்சமென்றதும் மல்லிகைதான் முதலில் நினைவுக்குள் தோன்றும்! மங்கையரின் கூந்தலில் பெரும்பாலும் இடம் பெறுகின்ற மலர் – மல்லிகை!  எனவேதான் ‘தீர்க்கசுமங்கலி’ திரைப்படத்தில் ‘புன்னகை அரசி’ கே.ஆர்.விஜயா அவர்கள் நடிப்பில் உருவான பாடலிலே..
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ

கவிஞர் வாலி வரைந்தளித்த பாட்டு!  திருமதி. வாணி ஜெயராம் அவர்களின் நாதலயஸ்வரம் கலந்த குரலில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் மென்மையான இசையில் இதயங்களை ஈர்க்கும் பாடல்!  மயக்கும்  பாடல்!  மல்லின்கையின் மயக்கம் இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் கூட வருகிறதே!  கவிஞரின் பொற்காலக் கூட்டணியில் விளைந்த அற்புத முத்துக்களில் இதுவும் ஒன்று!  ஏ சி திருலோகசந்தர் அவர்களின் இயக்கத்தில் உருவான மறக்க முடியாத பாடல்!

அபூர்வ ராகங்கள் படத்தில் இடம் பெற்ற ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல் என்று தொடங்கும் பாடல் இவரது குரல் வளத்திற்கு தீனி போட்ட பாடல். இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும், என்றும் எனக்காக நீ அழலாம், இயற்கையில் நடக்கும், நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் என்ற வாழ்வியலை நமக்குப் பட்டவர்த்தனமாக உணர்த்தும் பாடல் வரிகள். வாழ்வின் சந்து, பொந்து, இண்டு, இடுக்கு என எல்லா விஷயங்களையும் தன் பாடல்களில் கொண்டு வந்த கருத்துப் பெட்டகம் கண்ணதாசன் இயற்றிய பாடல் அல்லவா இது. அதனால்தான் இறைவன் தன் பக்கத்தில் சீக்கிரமே அழைத்து வைத்துக் கொண்டார் போல. இவற்றையெல்லாம் தாண்டி M.S.V. அவர்களின் இசைமழை, ஸ்ரீ வித்யா அவர்களின், தனது கண்களிலேயே நவரசங்களையும்
கொட்டி நடிக்கும் திறம் பெற்ற அவரது தேர்ந்த நடிப்பு என, இவை அனைத்தும் சேர்ந்த கூட்டணி இந்தப் பாடலை உலகம் உள்ளவரை அழியாமல் வைத்திருக்கும்.

வாணி அவர்களுக்கு முதல் தேசிய விருதினை பெற்று தந்த பாடல் இது

படம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன்
பாடல நானே நானா
இசை: இளையராஜா
பாடியவர்: வானி ஜெயராம்
வரிகள்: வாலி

வாணி ஜெயராம் குரலில் மற்றுமொரு சுகமான பாடல்

பாடல் : என்னுள்ளே எங்கோ

பெண்ணின் ஏக்கத்தை பிரதிபலித்த பல பாடல்களை இசைஞானி அள்ளித் தந்திருக்கிறார் என்று நிறைய தடவை பார்த்து பூரித்து போய் இருக்கிறோம்.
கள்ளத்தனம் புரிய மனம் திண்டாடுகிறது..அலைபாய்கிறது. தவறை துணிந்து செய்துவிடு என்று இவளின் உள் மனசு தூண்டுகிறது. பஞ்சும் நெருப்பும் அருகில் இருந்தால் சிக்கென்று பற்றிக்கொள்வது போல, இவளின் காமத்தால் கொளுந்து விட்டு எரியும் நெருப்பிற்கு மிக அருகாமையில் அவளின் கள்ளக் காதலன் இருக்கிறான். கணவனோ, பரிதாபமாக எங்கோ இருக்கிறான்.

இது தாங்க situation.

விரசமாகவும் இருக்கக்கூடாது, சரசமும் சகதியாக ஓடக்கூடாது. இந்தக் காதலில் காமம் தான் இருக்கிறதே தவிர, காதல் இல்லை. உடலின் சூடும், ஹார்மோன்களின் ஆதிக்கமும் பரவச நிலைக்கு அழைத்துச் செல்லும் அந்த சஸ்பென்ஸ் உணர்ச்சியை, ஒரு வித eeriness உடன் சொல்லவும் கொஞ்சம் நஞ்சம் அல்ல, செமத்தியாக இளையராஜா  மெனக்கெட்டிருப்பார் போலும். அதனால் நமக்கு கிடைத்ததோ, காலம் முழுக்க கேட்டு ரசிக்க என்று ஒரு அற்புத பாடல்.

பாலைவனச் சோலை படத்தில் வரும் மேகமே மேகமே என்று தொடங்கும் பாடலில், சங்கர் கணேஷ் அவர்களின் இசை விளையாட்டும், வாணி ஜெயராம் அவர்களின் கூர்மையான குரலமைப்பும், வைரமுத்து அவர்களின் வார்த்தை ஜாலங்களும், உதாரணமாக தினம் கனவு, எனதுணவு, நிலம் புதிது, விதை பழுது, எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும், அது எதற்கோ? என்ற கொக்கியில் முடியும் பாடல் வரிகள், அனைத்தும் ஒன்றிணைந்த இசைச் சித்திரம், இந்த பாடல். வட இந்திய இசையின் சாயலைக் கொண்ட பாடல் இது.

இந்தப் படத்தில்தான் கவிஞர் வைரமுத்து முதன்முதலாக எல்லா பாடல்களையுமே எழுதியிருக்கிறார்.
முரண் என்ற இலக்கிய உத்தியை இப்பாடல் முழுவதும் தவளவிட்டுள்ளார்.
மரணத்தின் பிடியில் தன் வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கும் ஒருத்தி காதலநிடம் தன் சோகத்தை
வார்த்தைகளிலும், சுகத்தை ராகத்திலும் எடுத்துறைக்கிறாள்.
தந்தியில்லா வீணை சுகம் தருமோ?
புயல் வரும் நேரத்தில் பூவுக்கு சுயவரமோ?
என்ற வரிகள் அழுத்தமும்,ஆழமும் நிரைந்தவை.
நடிகர் திலகம் சிவாஜி இப்பாடலை ஆயிரம் முரை கேட்டு கேட்டு அழுதிருக்கிராராம்!
எப்போது கேட்டாலும் இனிக்கும் ஒரு கஜல் வடிவம். சோகம் இழையொடும் குரலில் ”எனக்கொரு
மலர்மாலை நீ வாங்க வேண்டும்,அது எதற்க்கோ?” என கேட்கும் வரிகள் கொஞ்சம் கணமானவை.
எப்போதெல்லாம் மனம் கணமாகிறதோ அப்போதெல்லாம் கேட்க தூண்டும் பாடல்.வைரமுத்துவின் ஆழமான
வரிகள் மேலும் அழகை

படம் "நெஞ்சமெல்லாம் நீயே" (1983). பாடல் "யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது?.." சங்கர் கணேஷ் இசையமைப்பில் வாணி பாடிய பாடல்.

இன்னும் கூட நிறைய பேர் இது ராஜாவின் பாடல் என்று நம்பிக்கொண்டிருப்பார்கள். இதன் இசைக்கோர்வை அப்படி. பாடல் முழுவதுமே பயன்படுத்தியிருக்கும் வயலின், சீரான நடையில் தபேலா எல்லாவற்றிலும் ராஜாவின் சாயல் இருக்கும். தமிழில் வாணிக்கு நிறைய பாடல் கொடுத்து, அவரை முழுமையாக பயன்படுத்திக்கொண்டவர்கள் சங்கர்-கணேஷ்.

வாணியின் ஹிந்துஸ்தானித் திறமை முழுவதையும் வெளிக்கொணரும் பொருட்டு அவருக்கென்றே பாடல் அமைப்பார்கள். எல்லாப்பாடல்களின் இடையிலும் ஒரு ஆலாபனை. இந்தப்பாடலின் சரணத்தின் கூட முதல் வரி முடிந்து ஒரு ஆலாபனைக்கு பின் அடுத்த வரி துவங்கும்.
நன்றி வாட்ஸ்ஆப்வானொலி