பாடகி வாணி ஜெயராம்.
வானவில்லின் வண்ணங்களை, ஏழு ஸ்வரங்களின் வாயிலாக தன் குரலில் கொண்டுவந்து, அவரது பாடல்களை கேட்போரது செவிகளில் தேன் வடியச் செய்த பாடகி வாணி ஜெயராம். குயிலைப் போன்ற குரல் வளம் கொண்டவர்களைப் பற்றி ஒரு சொலவடை உண்டு. இறைவனுக்கு போன ஜென்மத்தில் தேனாபிஷேகம் செய்திருப்பார்களோ என்று. இவரது கம்பீரமான குரலைக் கேட்கும்போது அது உண்மையாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. கம்பீரம் மட்டுமல்ல, கனிவு, குழைவு, எத்தனையோ உணர்ச்சிகளை உள்ளடக்கிய குரல் இவருடைய செந்தூரக் குரல். பொதுவாக நடனத்தில், நடன அசைவுகளில் நவரசத்தை வெளிப்படுத்துவார்கள். இவரது வெண்கலக் குரல் எண்ணிலடங்கா ரசங்களை காட்டக் கூடியது.
இவரது குரல்தான் அதிசயக் குரல் என்றால், தமிழில் அட்சர சுத்தமாகப் பேசத் தெரிந்த ஒரு பாடகி, தமிழகத்தில் வேலூரில் பிறந்த ஒரு பாடகி, தமிழ் இசை உலகில் ஒரு நல்ல இடத்தில், நிறைய பாட வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றதும் ஒரு அதிசயம்தான். தமிழகத்தில் பிறந்தாலும், இந்திய இசைத் துறையையே ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார் இந்த குரலழகி, இசையழகி வாணி ஜெயராம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்ற தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது, மொத்தம் பதினான்கு மொழிகளில் பாடியிருக்கிறார் இந்த குரலோவியம். எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழியின் வார்த்தைகளை கொஞ்சம் கூட அதன் அர்த்தம் மாறாமல் தெளிவாக பாடுவதில் வாணி ஜெயராம் வல்லவர்.
திரைப்படம் : தீர்க்க சுமங்கலி
பாடியவர் : வாணி ஜெயராம்
பாடல் : மல்லிகை என் மன்னன் மயங்கும்
எத்தனையோ மலர்களிங்கே மண்ணிலிருந்தாலும் மல்லிகைக்கென்று ஒரு மகத்தான இடம் மங்கையரிடம் மட்டுமில்லை, ஆடவரின் உள்ளங்களிலும் உண்டு! வெள்ளை நிறத்தில் மொட்டாகக் கூடிச் சரமாய்த் தொடுக்கப்பட்டுப் பின் மெல்ல மெல்ல இதழ் விரித்து மணம்தனைப் பரப்பி மனதையும் மயக்கும் மலரன்றோ? மஞ்சமென்றதும் மல்லிகைதான் முதலில் நினைவுக்குள் தோன்றும்! மங்கையரின் கூந்தலில் பெரும்பாலும் இடம் பெறுகின்ற மலர் – மல்லிகை! எனவேதான் ‘தீர்க்கசுமங்கலி’ திரைப்படத்தில் ‘புன்னகை அரசி’ கே.ஆர்.விஜயா அவர்கள் நடிப்பில் உருவான பாடலிலே..
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
கவிஞர் வாலி வரைந்தளித்த பாட்டு! திருமதி. வாணி ஜெயராம் அவர்களின் நாதலயஸ்வரம் கலந்த குரலில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் மென்மையான இசையில் இதயங்களை ஈர்க்கும் பாடல்! மயக்கும் பாடல்! மல்லின்கையின் மயக்கம் இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் கூட வருகிறதே! கவிஞரின் பொற்காலக் கூட்டணியில் விளைந்த அற்புத முத்துக்களில் இதுவும் ஒன்று! ஏ சி திருலோகசந்தர் அவர்களின் இயக்கத்தில் உருவான மறக்க முடியாத பாடல்!
அபூர்வ ராகங்கள் படத்தில் இடம் பெற்ற ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல் என்று தொடங்கும் பாடல் இவரது குரல் வளத்திற்கு தீனி போட்ட பாடல். இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும், என்றும் எனக்காக நீ அழலாம், இயற்கையில் நடக்கும், நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் என்ற வாழ்வியலை நமக்குப் பட்டவர்த்தனமாக உணர்த்தும் பாடல் வரிகள். வாழ்வின் சந்து, பொந்து, இண்டு, இடுக்கு என எல்லா விஷயங்களையும் தன் பாடல்களில் கொண்டு வந்த கருத்துப் பெட்டகம் கண்ணதாசன் இயற்றிய பாடல் அல்லவா இது. அதனால்தான் இறைவன் தன் பக்கத்தில் சீக்கிரமே அழைத்து வைத்துக் கொண்டார் போல. இவற்றையெல்லாம் தாண்டி M.S.V. அவர்களின் இசைமழை, ஸ்ரீ வித்யா அவர்களின், தனது கண்களிலேயே நவரசங்களையும்
கொட்டி நடிக்கும் திறம் பெற்ற அவரது தேர்ந்த நடிப்பு என, இவை அனைத்தும் சேர்ந்த கூட்டணி இந்தப் பாடலை உலகம் உள்ளவரை அழியாமல் வைத்திருக்கும்.
வாணி அவர்களுக்கு முதல் தேசிய விருதினை பெற்று தந்த பாடல் இது
படம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன்
பாடல நானே நானா
இசை: இளையராஜா
பாடியவர்: வானி ஜெயராம்
வரிகள்: வாலி
வாணி ஜெயராம் குரலில் மற்றுமொரு சுகமான பாடல்
பாடல் : என்னுள்ளே எங்கோ
பெண்ணின் ஏக்கத்தை பிரதிபலித்த பல பாடல்களை இசைஞானி அள்ளித் தந்திருக்கிறார் என்று நிறைய தடவை பார்த்து பூரித்து போய் இருக்கிறோம்.
கள்ளத்தனம் புரிய மனம் திண்டாடுகிறது..அலைபாய்கிறது. தவறை துணிந்து செய்துவிடு என்று இவளின் உள் மனசு தூண்டுகிறது. பஞ்சும் நெருப்பும் அருகில் இருந்தால் சிக்கென்று பற்றிக்கொள்வது போல, இவளின் காமத்தால் கொளுந்து விட்டு எரியும் நெருப்பிற்கு மிக அருகாமையில் அவளின் கள்ளக் காதலன் இருக்கிறான். கணவனோ, பரிதாபமாக எங்கோ இருக்கிறான்.
இது தாங்க situation.
விரசமாகவும் இருக்கக்கூடாது, சரசமும் சகதியாக ஓடக்கூடாது. இந்தக் காதலில் காமம் தான் இருக்கிறதே தவிர, காதல் இல்லை. உடலின் சூடும், ஹார்மோன்களின் ஆதிக்கமும் பரவச நிலைக்கு அழைத்துச் செல்லும் அந்த சஸ்பென்ஸ் உணர்ச்சியை, ஒரு வித eeriness உடன் சொல்லவும் கொஞ்சம் நஞ்சம் அல்ல, செமத்தியாக இளையராஜா மெனக்கெட்டிருப்பார் போலும். அதனால் நமக்கு கிடைத்ததோ, காலம் முழுக்க கேட்டு ரசிக்க என்று ஒரு அற்புத பாடல்.
பாலைவனச் சோலை படத்தில் வரும் மேகமே மேகமே என்று தொடங்கும் பாடலில், சங்கர் கணேஷ் அவர்களின் இசை விளையாட்டும், வாணி ஜெயராம் அவர்களின் கூர்மையான குரலமைப்பும், வைரமுத்து அவர்களின் வார்த்தை ஜாலங்களும், உதாரணமாக தினம் கனவு, எனதுணவு, நிலம் புதிது, விதை பழுது, எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும், அது எதற்கோ? என்ற கொக்கியில் முடியும் பாடல் வரிகள், அனைத்தும் ஒன்றிணைந்த இசைச் சித்திரம், இந்த பாடல். வட இந்திய இசையின் சாயலைக் கொண்ட பாடல் இது.
இந்தப் படத்தில்தான் கவிஞர் வைரமுத்து முதன்முதலாக எல்லா பாடல்களையுமே எழுதியிருக்கிறார்.
முரண் என்ற இலக்கிய உத்தியை இப்பாடல் முழுவதும் தவளவிட்டுள்ளார்.
மரணத்தின் பிடியில் தன் வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கும் ஒருத்தி காதலநிடம் தன் சோகத்தை
வார்த்தைகளிலும், சுகத்தை ராகத்திலும் எடுத்துறைக்கிறாள்.
தந்தியில்லா வீணை சுகம் தருமோ?
புயல் வரும் நேரத்தில் பூவுக்கு சுயவரமோ?
என்ற வரிகள் அழுத்தமும்,ஆழமும் நிரைந்தவை.
நடிகர் திலகம் சிவாஜி இப்பாடலை ஆயிரம் முரை கேட்டு கேட்டு அழுதிருக்கிராராம்!
எப்போது கேட்டாலும் இனிக்கும் ஒரு கஜல் வடிவம். சோகம் இழையொடும் குரலில் ”எனக்கொரு
மலர்மாலை நீ வாங்க வேண்டும்,அது எதற்க்கோ?” என கேட்கும் வரிகள் கொஞ்சம் கணமானவை.
எப்போதெல்லாம் மனம் கணமாகிறதோ அப்போதெல்லாம் கேட்க தூண்டும் பாடல்.வைரமுத்துவின் ஆழமான
வரிகள் மேலும் அழகை
படம் "நெஞ்சமெல்லாம் நீயே" (1983). பாடல் "யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது?.." சங்கர் கணேஷ் இசையமைப்பில் வாணி பாடிய பாடல்.
இன்னும் கூட நிறைய பேர் இது ராஜாவின் பாடல் என்று நம்பிக்கொண்டிருப்பார்கள். இதன் இசைக்கோர்வை அப்படி. பாடல் முழுவதுமே பயன்படுத்தியிருக்கும் வயலின், சீரான நடையில் தபேலா எல்லாவற்றிலும் ராஜாவின் சாயல் இருக்கும். தமிழில் வாணிக்கு நிறைய பாடல் கொடுத்து, அவரை முழுமையாக பயன்படுத்திக்கொண்டவர்கள் சங்கர்-கணேஷ்.
வாணியின் ஹிந்துஸ்தானித் திறமை முழுவதையும் வெளிக்கொணரும் பொருட்டு அவருக்கென்றே பாடல் அமைப்பார்கள். எல்லாப்பாடல்களின் இடையிலும் ஒரு ஆலாபனை. இந்தப்பாடலின் சரணத்தின் கூட முதல் வரி முடிந்து ஒரு ஆலாபனைக்கு பின் அடுத்த வரி துவங்கும்.
நன்றி வாட்ஸ்ஆப்வானொலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக