திங்கள், 14 நவம்பர், 2016

மின்மினி ...

மின்மினி ...

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள். பாடகி மின்மினி விஷயத்திலும் அப்படித்தான் அமைந்திருக்கின்றது. இசைஞானி இளையராஜாவின் "மீரா"திரைப்படத்தின் மூலம் தமிழில் பாடகியாக வந்த அவருக்கு, அந்த ஆரம்ப காலத்தில் நிறையைப் பாடல்களைக் கொடுத்து வாய்ப்பளித்திருக்கின்றார் ராஜா. மலையாள தேசத்துக் குரல்களின் மீது ஏனோ ராஜாவுக்குத் தீராக் காதல். சுஜாதா, சித்ரா, சுனந்தா, செர்ணலதா (இவர் எம்.எஸ்.வி இசையில் தான் அறிமுகமானார் ஆனால் ராஜா கொடுத்த பாடல்களால் கிடைத்த புகழை இங்கே சொல்லவா வேண்டும்), என்று நீளும பட்டியலில் மின்மினியும் இணைந்து கொண்டார். ரோஸில்லி என்ற இயற்பெயர் கொண்ட

மினி ஜோசப் என்ற பெயரிலேயே வலம்வந்திருக்கின்றார் இது தமிழ்த்திரையுலகுக்கு வரமுன்னர். மினி ஐ மின்மினி என்று பெயர் சூட்டியதும் ராஜாவே தான்.

படம்: அரண்மனை கிளி  (1993)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், மனோ, மின்மினி
பாடல்வரிகள்: வாலி

அந்த நிலவொளியில் குளித்து தம் நேசத்தைப் பகிர்ந்து கொள்ளும் காதலர்களாக அருண்மொழி, மின்மினி குரல்கள் இணைய, இன்னோர்புறம் தன் மண வாழ்வின் கசப்பைப் பகிரும் சோக ராகத்தை மீட்டுகிறார் மலேசியா வாசுதேவன். இவ்விதம் ஒரே பாடலில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து கட்டிக் கொடுத்த பாடல்

இந்த பாடலில் ராஜ்கிரணுக்கான குரலாக மலேசியா வாசுதேவன் குரல் ஒலித்தாலும் அது காட்சிக்கு அவதூறு விளைவிக்கால் அடக்கமாக இருக்கும்.

ஜோடிக்குரல்களிலிருந்து மலேசியா வாசுதேவனின் தனிக்குரலுக்கு நகரும்போது இணைப்பாக வரும் அந்தப் புல்லாங்குழல் ஒலியை நிறுத்தப் புள்ளியிலிருந்து கேட்கும் போது புல்லரிக்கும்.

திரை இசையில் பலவகையான பாடல்களை பாடிய மின்மினி கர்னாடக ராகங்களில் அமைந்த சில பாடல்களையும் சிறப்பாக பாடியிருக்கிறார். ஆனால் அவர் இசை கற்றதேயில்லை! சாஸ்திரீய இசையை விடுங்கள், ச ரி க ம எனத்தொடங்கும் ஸ்வரங்களையே அவர் ஒருபோதும் கற்றுக்கொண்டதில்லை! ஸ்வரஸ்தானங்கள் எதுவுமே தெரியாமல்தான் ராகங்களில் அமைந்த பாடல்களை எந்த பிழையுமின்றி சிறப்பாகப் பாடியிருக்கிறார். மலையாளத்தில் வந்த பல பாடல்களுடன் தமிழில், இளையராஜாவின் இசையில் தேவர்மகன் படத்தில் இடம்பெற்ற ‘மணமகளே மணமகளே’ (ராகம்: சுத்த சாவேரி), ’மாசறு பொண்ணே வருக’ (ராகம்: மாயாமாளவகௌள) போன்றவை உதாரணங்கள். இன்றும் எந்தவொரு செவ்விசை கிருதியையோ கீர்த்தனையையோ பாட மின்மினிக்குத் தெரியாது. ஒரு ராகத்தைக்கூட அடையாளம் காணவும் அவரால் முடியாது!

இன்றும் "தேவர் மகன் " படத்தின் ரேவதி திருமணமாகி கமல் வீட்டின் உள்ளே நுழையும்போது சோக பின்னணியில்(கமல் கெளதமியை காதலித்திருப்பார் ) மங்களம் கமழ "மணமகளே மணமகளே " என்று கேட்கும்போது மனதின் ஆழத்தில் அத்தனை ஏக்கமாக இருக்கும்.. (பாடிய இருவரில் மின்மினி இசை உலகத்தில் இல்லை.. ஸ்வர்ணலதா வோ இந்த உலகத்திலேயே இல்லை ) ..

தேவர் மகன் படத்தில் இருந்து மணமகளே பாடல்
படம்: அரண்மனை கிளி  (1993)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், மனோ, மின்மினி
பாடல்வரிகள்: வாலி

அந்த நிலவொளியில் குளித்து தம் நேசத்தைப் பகிர்ந்து கொள்ளும் காதலர்களாக அருண்மொழி, மின்மினி குரல்கள் இணைய, இன்னோர்புறம் தன் மண வாழ்வின் கசப்பைப் பகிரும் சோக ராகத்தை மீட்டுகிறார் மலேசியா வாசுதேவன். இவ்விதம் ஒரே பாடலில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து கட்டிக் கொடுத்த பாடல்

இந்த பாடலில் ராஜ்கிரணுக்கான குரலாக மலேசியா வாசுதேவன் குரல் ஒலித்தாலும் அது காட்சிக்கு அவதூறு விளைவிக்கால் அடக்கமாக இருக்கும்.

ஜோடிக்குரல்களிலிருந்து மலேசியா வாசுதேவனின் தனிக்குரலுக்கு நகரும்போது இணைப்பாக வரும் அந்தப் புல்லாங்குழல் ஒலியை நிறுத்தப் புள்ளியிலிருந்து கேட்கும் போது புல்லரிக்கும்.

படம் : எங்க தம்பி
பாடல்:மலையோரம் மாங்குருவி
இசை : இளையராஜா

பிரபலமடையும் முன்பு ஒருமுறை எஸ். ஜானகிக்காக ஒரு பக்திப்பாடலின் ஒலித்தட்த்தில் (Track) பாடுவதற்க்காக மலையாள இசையமைப்பாளர் வித்யாதரன் மின்மினியை அழைத்தார். மெட்டைச் சொல்லித்தரும் முன் கர்னாடக இசை தெரியுமா என்று கேட்டார். ’இல்லை’ என்று சொன்னதும் கோபமடைந்த அவர் செவ்வியல் இசை முறையாகத் தெரிந்த பாடகி வேண்டும் என்று சொன்னதன் பின்பும் எதுவுமே தெரியாத ஒருத்தியை அழைத்து வந்தமைக்காக தன் உதவியாளனை திட்டிவிட்டு, மின்மினியிடம் உடனடியாக வெளியேறுமாறு சொன்னார். ஆனால் அங்கிருந்த இசைக் கலைஞர்கள் மின்மினியின் திறமையை ஏர்கனவே தெரிந்து வைத்திருந்தவர்கள். அவர்கள் வித்யாதரனிடம் எடுத்து சொல்லி கடைசியில் ஒரு ஒத்திகைக்கு அவரை சம்மதிக்க வைத்தார்கள். மின்மினி பாடிக்கேட்டபோது அவருக்கு கர்னாடக இசை தெரியாது என்பது பொய் என்று சொன்னார் அந்த இசையமைப்பாளர்.

இப்படியாக தன் பெயரில் ஒளிந்திருக்கும் அந்த மின்மினிப் பூச்சியைப் போல் அற்புதமாக ஒளிர்ந்து, விரைவாக நம் கவனத்தைக் கவர்ந்து, பின்னர் வந்ததைவிட வேகமாக காணாமல்போன மின்மினியின் கலையும் வாழ்வும் ஒரு புனைகதையப் போல் விசித்திரமானது.

" ரோஜா " படம் வெளிவந்த போது இவ்வுலகமே திரும்பி பார்த்த இருவரில் முதலாமவர் "மின்மினி".. இரண்டவதாகதான் "A .R .ரகுமான்" என்ற இளம்புயல்... அந்த அளவுக்கு மின்மினி பாடிய "சின்ன சின்ன ஆசை" பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது....

மின்மினியின் எளிமையான இனியகுரல் ஜானகியின் இளம்பிராயத்து குரலாக தொணியதாலோ என்னவோ மின்மினி இளையராஜாவின் ஆஸ்தான பாடகியாக மாறினார்.. மின்மிநியுடன் அதே சம காலத்தில் இசையுலகதுக்கு அறிமுகமானவர் ஸ்வர்ணலதா .. அனால் இளையராஜா & ரஹ்மான் இருவராலும் பெரிதும் ஆராதிக்கபட்டவர் முதலில் "மின்மினி" தான்.

சின்ன சின்ன ஆசை " பாடியதற்காக மின்மினிக்கு! தமிழக அரசின் விருது, சிங்கப்பூர் அரசின் விருது, ஃபிலிம்ஃபேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது போன்ற எண்னற்ற விருதுகள் வந்து குவிந்தன....

ஆனால் அவரின் இசை சகாப்தம் சில நூறு பாடல்களிலேயே முடிந்து போன கொடுமை தான் அந்த "சின்ன சின்ன ஆசை" யா..

பாடல் : அன்பே வா
படம் : ஏழைஜாதி

இடைவிடாமல் மேடை நிகழ்ச்சிகளிலும் பக்திப்பாடல் பதிவுகளிலும் பங்கேற்று கொண்டேயிருந்தார். 1993ன் கடைசியில் ஒருநாள் இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடந்த, தமிழ் திரை உலகின் பல பிரபலங்கள் பங்கேற்ற ஒரு தமிழ் திரை நட்சத்திர இரவின் மேடைநிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருக்கும்போது திடீரென்று மின்மினியின் குரல் வெளிவராமல் முற்றிலுமாக நின்றுபோனது. தொடர்ந்து பலமாதங்கள் அவரால் பேசவே முடியவில்லை.
ஏறத்தாழ எஸ். ஜானகியின் குரலின் தன்மைகள் உடையதுதான் மின்மினியின் குரலுமே. சின்னவயதிலிருந்தே தனக்கே தெரியாமல் தொடர்ந்து பாடுவதன் வழியாக கட்டமைக்கப்பட்டும் குரல் அது. இயல்பாக கிடைத்திருக்கும் குரலுக்கு இருக்கும் எதிர்ப்பு சக்தி இத்தகைய குரல்களூக்கு இருக்காது எனப்படுகிறது. பல வருடங்கள் ஓய்வே இல்லாமல், இடைவிடாமல் பாடிவந்ததனால் குரல் தந்துக்களின்மேல் ஏற்பட்ட அளவுக்கதிகமான அழுத்தம் ஒருநாளில் ஒரேய டியாக வெளிவந்ததாகக்கூட இருக்கலாம். தொடர்ந்த சிகிச்சையின் காரணமாக மீண்டும் பேசவும் ஒரளவுக்கு பாடவும் முடிந்தது. ஆனால் மின்மினியின் குரலிலும் பாடும்முறையிலும் இருந்துவந்த பழைய அந்த சிறப்பு காணாமலாகி விட்டிருந்தது.
பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த காலத்தில் ஜாய் என்கிற கீபார்ட் இசைக் கலைஞருடன் மின்மினியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. பாடமுடியாமல் மன உளைச்சலின் ஆழங்களுக்கு சென்றுகொண்டிருந்த மின்மினியை அவர் மணம்புரிந்தார். மின்மினியை வரவழைத்து ஒவ்வொரு வார்த்தையாக, வரியாக பாடவைத்து பாடல்களை பதிவு செய்யவும்கூட முன்வந்தார்கள் அவரது பாட்டை விரும்பிய இசையமைப்பாளர்கள். ஆனால் சரியாக பாடமுடியாத காரணத்தால் கொஞ்சம் கொஞ்சமாக பாடுவதிலிருந்து விலகிக்கொண்டார் மின்மினி. இருந்த அனைத்தையும் சிகிட்சைக்காக செலவிட்டார். வருடங்கள் கடந்தோடின. தன்னால் மீண்டும் பாடமுடியும் என்ற நம்பிக்கை திரும்பி வந்தபோது அவரைக் கூப்பிட யாருமே இருக்கவில்லை.
எல்லாவற்றையும் இழந்த மின்மினி சென்னையில் வாழ வழியில்லாமல் கேரளத்துக்கு திரும்பி இப்பொழுது பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று பதின்பருவத்தை எட்டிய இரு குழந்தைகளுடனும் தன் கணவருடனும் கொச்சியில் வாழ்ந்து ஒரு இசைப்பள்ளியை நடத்தி வருகிறார். தனது குரலின் சிக்கல்கள் முற்றிலுமாக மாறிவிட்டது என்றும் தன்னால் இப்பொழுது பழையபடி பாட முடியும் என்றும் அவர் சொல்லுகிறார். ஆனால் இன்றைக்கு அவரை பாடுவதற்க்கு அழைக்க யாருமே முன்வருவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக