ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

ஒரு சில நடிகர்களே விவரம் தெரிந்த வயதிலிருந்து கடைசி மூச்சு வரை நடிகர்களாகவே இருந்தார்கள்



ஒரு சில நடிகர்களே விவரம் தெரிந்த வயதிலிருந்து கடைசி மூச்சு வரை நடிகர்களாகவே இருந்தார்கள்

ஒரு சில நடிகர்களே விவரம் தெரிந்த வயதிலிருந்து கடைசி மூச்சு வரை நடிகர்களாகவே இருந்தார்கள். அவ்விஷயத்தில் எம்.ஆர் ராதா முன்னோடி, கமலஹாசனுக்கும் அந்த வாய்ப்பு இருந்தது, அவரே கெடுத்துகொண்டார்.

நடிகைகளில் அப்படி வாழ்ந்த ஒரே நடிகை  ஶ்ரீதேவி, அதில் சந்தேமே இல்லை, கிட்டதட்ட 4 வயதில் நடிக்க வந்தவர். மிக சிறியவயதிலே வந்த நடிகை அவர்தான். மழலை நட்சத்திரம் , குழந்தை நட்சட்திரம் போன்ற நடிகையாக இருந்தேதான் அவரால் படிக்கவும் முடிந்தது , அதுவும் அதிகமில்லை


அவரின் குழப்பமான குடும்ப சூழலில் அவருக்கு வேறு தெரிவும் இருக்கவில்லை

பாலசந்தரும், பாரதிராஜாவும் அவரின் திறமையினை வெளிச்சம் கொடுத்து காட்டினர். தமிழக சினிமா வரலாறை புரட்டி போட்ட 16 வயதினிலே வரும்பொழுது  ஶ்ரீதேவி வயது வெறும் 15

முழு புடவையினை அவர் தளைய சுற்றி, நெற்றி பொட்டும் தலைநிறைய பூவும், நீண்ட முடியுமாக வந்தபொழுது எந்த மானிடரும் அவரை திரும்பி பார்க்காமல் செல்ல முடியாது , தெய்வங்களே திரும்பும் காட்சி அது

தொடர்ந்து பாலசந்தரின் மூன்று முடிச்சு முதல் பல படங்களில் பின்னி எடுத்தார். 1980ல் கிரிக்கெட்டை கபில் ஆள, தமிழகத்தை ராமசந்திரன் ஆள , தமிழ் சினிமா உலகின் தனிபெரும் ராணியாக வலம் வந்தார்  ஶ்ரீதேவி


எல்லா நடிகர்களும் அவரோடு நடிக்க துடித்தனர், சிவாஜி கணேசனே வந்து நின்றார், இதையெல்லாம் ராமசந்திரன் பார்த்து பல்லை கடித்துகொண்டிருந்தார் காரணம் அவர் முதல்வராக இருந்து தொலைத்ததால் அரசியலில் மட்டும் அவர் நடிக்க முடிந்தது

பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை அவரை கொண்டாட வைத்தது, அந்த தன்னிலை மறைந்த குழந்தை மனம் கொண்ட குமரியாக அசத்தியிருந்தார். நிச்சயம் அப்படத்தில் கொண்டாடபட்டிருக்க வேண்டியது  ஶ்ரீதேவி நடிப்பு, ஆனால் ஆணாதிக்க சினிமா உலகம் கமலஹாசனையே கொண்டாடிற்று, அதில் ஜனகராஜ் நடித்திருந்தாலும் நன்றாகத்தான் வந்திருக்கும்

மூன்றாம் பிறை படத்தின் வெற்றியே  ஶ்ரீதேவியிடம்தான் அடங்கி இருந்தது


கிராமத்து பெண், அல்ட்ரா மாடர்ன் பெண், காதலில் உருகும் பெண், பாசமான அன்னை, பணக்கார திமிர் என எல்லா வேடங்களிலும் இன்றுள்ள நடிகைகளுக்கு முன்னோடி அவர், குறிப்பாக ரம்யா கிருஷ்ணனுக்கு

இன்றும் 1980 படங்களை கவனியுங்கள், பிரியா, வாழ்வே மாயம், மூன்று முடிச்சு, குரு என எதுவாகவும் இருக்கட்டும், நடிப்பில் அட்டகாசமாக கமலுக்கு சவால் விடுவார்  ஶ்ரீதேவி, கமல் மீது ஆயிரம் சர்ச்சை இருந்தாலும் அவர் சிறந்த நடிகர் என்பது மறுக்கமுடியாது

மழைக்கால மேகம் ஒன்று பாடலை கவனித்தால் கமலஹாசனின் நடனம்  ஶ்ரீதேவி முன்னால் திணறுவது தெரியும், அவ்வளவு நளினான நடனம்  ஶ்ரீதேவியுடையது

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது பாடலில், போட்டியாக தொடங்கும் பாடலில் கடைசியில் கமல் காதல் சொன்னதும் ஆயிரம் முகபாவங்களை நொடியில் காட்டும்  ஶ்ரீதேவி அசரவைத்திருந்தார்

மீண்டும் கோகிலா போன்ற படங்களில் அப்படியே பிராமண பெண் வேடத்தில் பொருந்திய  ஶ்ரீதேவி, ராணுவ வீரனின் தாழ்த்தபட்ட பெண்ணாக அசத்தவும் தவறவில்லை

மூன்று முடிச்சு படத்தில் ரஜினியின் வில்லத்தனத்திற்கு சவால்விட்டு நடித்த  ஶ்ரீதேவி, குறிப்பாக சித்திடா.. உனக்கு சித்தி என தெனாவெட்டாக கடந்து செல்லு  ஶ்ரீதேவி , ரஜினியின் கெத்தான நடிப்பை தூக்கி விழுங்கியவராக தெரிந்தார்

தமிழக நடிகர்கள் புகழ்பெற்றால் அடுத்து முதல்வர் கனவு வரும் , நடிகைகளுக்கு இன்று குஷ்பு போல வாய்ப்பு உண்டு என்றாலும் அன்று அப்படி அல்ல, அடுத்தகட்ட கனவு பாலிவுட்டாக இருக்கும்


பாலிவுட் பயங்கரமான சவால் நிறைந்தது, யார் வெல்வார் சறுக்குவார் என தெரியாது, தமிழில் வாய்ப்பு மறுக்கபட்ட ஹேமா மாலினியும், வித்யா பாலனும் அங்கு இந்தி அறிமுகமாகவே வென்றார்கள்

ஆனால் தமிழ் நடிகையாக ஜொலித்து, பின் மும்பை சென்று தனக்கென தனி இடம் பிடித்த ஒரே நடிகை  ஶ்ரீதேவி. கமலஹாசனாலும் மும்பையில் தாக்கு பிடிக்க முடியவில்லை, சகலகலா வல்லவன் என்பதெல்லாம் த்மிழக முட்டு சந்திற்குள்தான்

அங்கேயே ஜொலித்தார்  ஶ்ரீதேவி. அது என்ன சாபமோ தெரியவில்லை சினிமா நட்சத்திரம் எனும் பெயர் நடிகைகளுக்கு முக்காலமும் பொருந்த கூடியது

தன்னில் எரிந்து வெகு தொலைவில் இருக்கும் நமக்கு வைரமாக தெரியும் வானத்து நட்சத்திரம் தனக்குள் பல்லாயிரம் டிகிரி செல்சியஸில் கொதிக்கின்றது

நடிகைகளும் அப்படியே, திரைவானில் மின்னினாலும் அதன் இன்னொரு கருப்புபக்கம் அவர்களை தீரா சோகத்திலும் , ஆழா துயரத்தில் நிரப்பியும் வைத்துவிடுகின்றது


பெண் அழகாய் பிறப்பதும் பெரும் சாபம் , அழகுடன் எந்த தொழிலில் இறங்கினாலும் ஆபத்து அதுவும் சினிமாவில் இறங்கினால் பேராபத்து என்பதை உணர்ந்தவர்களில் அந்த நட்சத்திரங்களும் உண்டு, ஆனால் விழுந்தால் எளிதில் வெளிவரமுடியா மாய உலகமும் அதுவே

அதில் சிலர் தற்கொலை செய்கின்றனர், சிலர் முழுக்கு போட்டு ஓடுகின்றனர், குஷ்பு போன்ற தைரியசாலிகள் வென்று நிற்கின்றனர்

சாவித்திரி போன்றோர் குடியில் நிம்மதி தேடினர்,  ஶ்ரீதேவியும் அதில் விழுந்தார். பம்பாய் கலாச்சாரத்தில் அதுவன்றி நிலைக்க முடியாது என்பதும் வேறு விஷயம்

குடி அவரின் உருவத்தை மாற்றியது, கொஞ்சம் இடைவேளைக்கு பின் அவர் நடிக்க வந்தபொழுது அவர் உருவமே மாறிற்று, புலி போன்ற சமீபத்திய படங்களில் அது தெரியலாம்

 ஶ்ரீதேவிக்கான இடம் கிட்டதட்ட அப்படியே இருந்தது ஆச்சரியமானது, அவர் திரும்ப தெற்கே நடிக்க வந்ததும் ஆளாளுக்கு வரவேற்றார்கள், பாகுபலியில் கூட ரம்யா கிருஷ்ணன் வேடத்தில் முதலில் பேசபட்டவர் அவர்தான்

சமீபகாலமாக குடி அதிகரித்தது என்றார்கள், நேற்று துபாய்கு சென்ற நிகழ்விலும் குடி அதிகம் என்கின்றன செய்திகள், அவர் மரணமடைந்து கூட அது மரணமா? மயக்கமா? என்ற குழப்பம் நீடிக்கும் அளவிற்கு நிலமை சென்றிருக்கின்றது


அதே நட்சத்திர சாபம்

1970களில் வளர்ந்தவர்களுக்கு அக்குழந்தை  ஶ்ரீதேவி மறக்க முடியாதவர், 1980களில் வளர்ந்தவர்களுக்கு  ஶ்ரீதேவி "கனவு கன்னி", இப்பொழுது வந்த விங்கிஸ், மாம் படம் பார்த்தவர்களுக்கு அவர் கனவு அம்மா

ஒரு நடிகையின் வெற்றி என்பது இதுதான், முழுக்க முழுக்க தன் வாழ்வினை சினிமா நடிப்பிற்கே அர்பணித்த ஒரே நடிகை இந்தியாவில் அவர்தான், இன்னொருவரை சொல்லவேண்டுமானால் மனோரமாவினை சொல்லலாம் ஆனால் அவர் 13 வயதிற்கு மேல்தான் நாடகத்திற்கு வந்தார் என்கின்றார்கள்.

மயிலு.. எனும் பெயருக்கு ஏற்றார் போல, சினிமாவில் மயிலாகவே ஜொலித்த அந்த  ஶ்ரீதேவி இனி இல்லை

ஶ்ரீவித்யா போலவே 50களிலே அவர் வாழ்வு முற்றுபெற்றாயிற்று,  ஶ்ரீதேவிக்கு சவால் விடும் நடிகையாக வந்த அந்த ஷோபாவினை போல இளம் வயதில் மரிக்கவில்லை என்றாலும் 53 வயது என்பது சாக கூடிய வயது அல்ல‌

ஆனால் ஷோபா விட்டுசென்ற வெற்றிடமே  ஶ்ரீதேவியினை ஜொலிக்க வைத்தது என்பதும் இன்னொரு விஷயம், அவர் இருந்திருந்தால்  ஶ்ரீதேவி நிச்சயம் வளர்ந்திருக்க முடியாது


மறக்க கூடியவரா  ஶ்ரீதேவி?

1980கள் தமிழ்திரையில் பொற்காலம். இளையராஜா, பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா ,மகேந்திரன் என ஒரு கூட்டம் அற்புதமான காவியங்களை கொடுக்க தொடங்கியிருந்தது, தன் கடைசிகாலத்தில் அணையும் ஜொதி பிரகாசமாக எரிவது போல கண்ணதாசனும் ஜொலித்தார்

இதில் எந்த கலைஞனை எடுத்தாலும்  ஶ்ரீதேவி முகம் வராமல் போகாது

பாரதிராஜாவின் "பதினாறு வயதினிலே" " சிகப்பு ரோஜாக்கள் அகட்டும், பாலசந்தரின் "மூன்று முடிச்சு" ஆகட்டும், மகேந்திரனின் "ஜாணி" ஆகட்டும் ,எஸ்.பி முத்துராமனின் "பிரியா" ஆகட்டும்  ஶ்ரீதேவி தவிர்க்க முடியாதவர்

பாலுமகேந்திராவின் "மூன்றாம் பிறை" தவிர்க்க முடியாதபடம்

இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடலில் எல்லாம், ஜென்ஸி, ஜாணகி குரலில் எல்லாம்  ஶ்ரீதேவி முகம் தெரிந்துகொண்டே இருக்கும்

 ஶ்ரீதேவி  என்றவுடன் அவரின் முகங்களில் முதலில் தெரிவது செந்தூர பூவே.. என்ற பாடலும், என் வானிலே ஒரே வெண்ணிலா எனும் அந்த பாடலுமே

அந்த  ஶ்ரீதேவி மறைந்துவிட்டார் என்றவுடன் பெரும் அதிர்ச்சி தாக்கிவிட்டுத்தான் செல்கின்றது, நேற்றுதான் அவரின் மாம் படம் பார்க்க முடிந்தது. மனுஷி தாயின் போரட்டம் எனும் அக்கதையில் அப்படி வாழ்ந்திருந்தார்


மயிலு என்பது போலவே மருண்ட பார்வையும், அகவும் வித்தியாசனான குரலும், அழகு நடையும், முகத்தை அட்டகாசமாக மயில் கழுத்து போலவே வெட்டும் அந்த ஶ்ரீதேவி இனி இல்லை

சாவித்திரி, ஶ்ரீவித்யா, கண்ணதாசன் போன்ற ஜாம்பவான்கள் விடைபெற்ற 50 வயதுகளிலே அவரும் சென்றுவிட்டார்.

கவியரசன் கண்ணதாசன் வார்த்தை பலிதம் நிறைந்தவர் , தன் கடைசிபாடலான அந்த பாடலை இந்த ஶ்ரீதேவிக்காகத்தான் எழுதினார்

அப்பாடலின் வரிகளை விட அஞ்சலி ஏதுமில்லை, அதை பாடியே அவரை நிரந்தரமாக‌ உறங்க வைக்கலாம்

"கண்ணே கலைமானே.." என தொடங்கும் அந்த பாடலின் ஆரீராரோ ஓ ஆராரிரோ என்ற வரிகளுடன் அவர் உறங்கட்டும்

பாலகியாக வந்து பருவவயதில் போராடி மும்பையில் வென்று அதில் நிலைக்க போணி கபூரையும் மணந்து பெரும் போராட்டமாகவே சென்ற அவரின் வாழ்வில் இருந்து அவர் விடைபெற்றார்,


தன் தீரா சோகங்களை மதுவுடன் மட்டுமே பகிந்துகொண்ட அவருக்கு தன் கசப்புகளை மறக்க‌ அந்த கசப்பான பானத்தை அருந்தும் அவசியம் இனி இல்லை

சினிமா கேமராவற்கும், பத்திரிகையாளர்களுக்கும் வலுகட்டாயமாக தன் முகத்தில்  சிரிப்பினை கொடுத்த ஶ்ரீதேவி, மனம் நிறைந்து தனக்கான சிரிப்பினை கொடுத்திருந்தால் எப்படி இருந்திருகும்?

கடைசி வரை அதனை கொடுக்க அவருக்கு காலம் வழிவிடவே இல்லை, அடுத்த பிறவியிலாவது அது அவருக்கு கிடைக்கட்டும்

போய்வாருங்கள் ஶ்ரீதேவி, அடுத்த பிறவியிலாவது அரிதாரம் பூசி, கேமராவிற்காய் சிரித்து, அதற்காவே வாழ்ந்து, மனதை கல்லாக்கி மனம் வெறுத்து வாழ்ந்து , அந்த உலகின் கருப்பு பக்கங்களில் மதுவுடன் மட்டும் உங்கள் கண்ணீரை பகிரும் சோக வாழ்வு வேண்டாம்


யாருக்கும் தெரியாமல் இந்த உலகின் ஏதோ ஒரு மூலையில் நீங்கள் விரும்பிய அமைதியான வாழ்வினை ரசித்து , உண்மையாக சிரித்து வாழுங்கள்.

இந்திய திரையுலகிலே முத்திரை பதித்த அந்த மாபெரும் நடிகைக்கு, தமிழக மயிலுக்கு ஆழ்ந்த அஞ்சலி

"ஏதோ தெய்வம் சதி செய்தது
 பேதை போல விதி செய்தது"

என்ற கண்ணதாசனின் வரிகள், காதோரம் ஒலித்து மனதை கனக்க செய்து, சில துளி கண்ணீரையும் சிந்த வைக்கும் நேரமிது.

சனி, 24 பிப்ரவரி, 2018

நடிகை ஸ்ரீதேவி #Acteress Sridevi


நடிகை ஸ்ரீதேவி #Acteress Sreedevi

ஸ்ரீதேவி இந்திய திரைபடத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார்.1967 ஆம் ஆண்டு ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் பிரபலமான இவர், இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தன்னுடைய நடிப்புத் திறமையினால் அனைவருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்த ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி கீழே காண்போம்.


பிறப்பு:
ஸ்ரீதேவி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் விருதுநகர் மாவட்டதிலுள்ள சிவகாசியில் ஆகஸ்ட் 13, 1963 ஆம் ஆண்டு பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை:
ஸ்ரீதேவி தனது தந்தையை “லம்ஹே” திரைப்பட படப்பிடிப்பின் போதும் மற்றும் தாயை “ஜூடாய்” படப்பிடிப்பின்போதும் இழந்தார். அவருடைய பெற்றோர்களை இளம் பருவத்திலேயே இழந்ததால், சமுதாயத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கவேண்டியதாயிற்று. 1986 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் ஸ்ரீதேவியையும், பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியையும் இணைத்து ஒரு சில வதந்திகள் பரவியது. ஆனால், மிதுன் சக்ரவர்த்தி அவரது மனைவி யோகிதா பாலியை விவாகரத்து செய்யவில்லை என்ற முடிவுக்கு வரவே அந்த பிரச்சனையும் அத்துடன் மறைந்தும்போனது. பின்னர், ஜூன் 2, 1996 ஆம் ஆண்டு ஸ்ரீதேவிக்கும், திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருக்கும் திருமணம் நடைபெற்றது. ஸ்ரீதேவிக்கு, ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவருடைய திருமணத்திற்கு பிறகு, அவருடைய மைத்துனனான(கணவனுடன் பிறந்த) அனில் கபூருடன் நிறைய படங்கள் நடித்துள்ளார்.


திரைப்பட வாழ்க்கை:
தமிழ் நாட்டில் பிறந்து இந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்கிய ஸ்ரீதேவி,1967-ல் ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.கதாநாயகியாக இவர் நடித்த முதல் திரைப்படம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1976ல் வெளிவந்த ‘மூன்று முடிச்சு’.ஆரம்ப காலத்தில் கமலஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்களுடன் பல திரைப்படங்களில் நடித்த இவர், பின்னர் மலையாளத் திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். ‘ஆலிங்கனம்’, ‘குட்டவும் சிக்க்ஷையும்’, ‘ஆத்யபாடம்’, ‘ஆ நிமிஷம்’ போன்றவை ஸ்ரீதேவியின் சிறந்த மலையாளத் திரைப்படங்கள் ஆகும்.


இந்தி திரை உலகில் ஸ்ரீதேவி:
1978 ஆம் ஆண்டு ஸ்ரீதேவிஇந்தி திரைப்படங்களில் அறிமுகமானார். ஆனால், இவர் நடித்த முதல் இந்தி திரைப்படமான “சோல்வா சாவன்” துரதிருஷ்டவசமாக வெற்றி பெறவில்லை. பின்னர், இவருடைய இரண்டாவது படமான “ஹிம்மத்வாலா” ஒரு பெரும் வெற்றியை தேடித்தந்ததோடு மட்டுமல்லாமல், இந்தி திரைப்படஉலகில் ஒரு நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றுத்தந்தது. அதன் பிறகு, அவருடைய “சத்மா” திரைப்படம் பெரும் புகழையும், பாராட்டுகளையும் தேடித்தந்தது.1980ஆம் ஆண்டு காலகட்டங்களில், இவர் ஒரு சிறந்த நடிகையென்று அனைவராலும் பாராட்டப்பெற்றார்.பின்னர், “சாந்தினி” திரைப்படம் பெரும் வெற்றியை தேடித்தந்தது மட்டுமல்லாமல், கோலிவுட்டில் அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் இவரும் ஒருவரென்ற அந்தஸ்தையும் தந்தது.

பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய மூன்றாம் பிறை:
பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1983ஆம் ஆண்டு வெளிவந்த “மூன்றாம் பிறை” திரைப்படம், திரைப்பட உலகில் பல சாதனைகளைப்பெற்றது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் கமலுடன் மனநிலை பாதித்த ஒரு பெண்ணாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி, அனைவரையும் வியக்கவைத்தது மட்டுமல்லாமல், திரைப்பட உலகில் ஒரு புதிய பரிணாமத்தையும் ஏற்படுத்தியது எனவும் கூறலாம்.

திருமண வாழ்க்கைக்குப் பிறகு:
போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவைவிட்டு விலகியிருந்த ஸ்ரீதேவி, ஆறு ஆண்டுகள் கழித்து ஒன்றிரண்டு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். பின்னர் 14 ஆண்டுகளுக்கு பிறகு “இங்கிலீஷ் விங்கிலிஷ்” திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படத் துறையில் கால்பதித்தார். இப்படம் தமிழிலும், இந்தியிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டு 2012 ஆம் அண்டு அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது. பிறகு தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.


பத்மஸ்ரீ விருது:
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிபடுத்திய ஸ்ரீதேவிக்கு,2013 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று மத்திய அரசால் “பத்மஸ்ரீ” விருது வழங்கப்பட்டது.
விருதுகள்:
‘பிலிம்பேர் விருது (தெற்கு)’–‘மீண்டும் கோகிலா’ என்ற தமிழ் படத்திற்காக வழங்கப்பட்டது.
சிறந்த நடிகைக்கான ‘பிலிம்பேர் விருது’,“சால்பாஸ்” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
சிறந்த நடிகைக்கான ‘பிலிம்பேர் விருது’,“லம்ஹே” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
‘பிலிம்பேர் விருது’,“க்ஷன க்ஷனம்” என்ற தெலுங்கு படத்திற்காக வழங்கப்பட்டது.
மற்ற விருதுகள்:
‘நந்தி விருது’,“க்ஷன க்ஷனம்” என்ற தெலுங்கு படத்திற்காகவழங்கப்பட்டது.
“MAMI விருது” இந்தி சினிமாவில் இவருடைய சிறந்த பங்களிப்பிற்காகவழங்கப்பட்டது.
“வம்சி ஆர்ட்ஸ் தியேட்டர் இன்டர்நேஷனல்”மூலமாக ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ கிடைத்தது.
‘டொராண்டோ’ சிறந்த நடிகைக்கான விருதினை“தேவராகம்” படத்திற்காக வழங்கியது.


ஸ்ரீதேவியின் முக்கிய படைப்புகள்:
தமிழ்:
நம் நாடு (1969)
குமார சம்பவம் (1969)
மூன்று முடிச்சு (1976)
காயத்ரி (1977)
கவிக்குயில் (1977)
மனிதரில் இத்தனை நிறங்களா (1978)
முடிசூடா மன்னன் (1978)
பைலட் பிரேம்நாத் (1978)
மூன்றாம் பிறை (1983)
மலையாளம்:
குமார சம்பவம் (1969), முதல் மலையாள திரைப்படம்.
ஸ்வப்னங்கள் (1970)
பூம்பட்டா (1971)
தீர்த யாத்ரா (1972)
ஆசீர்வாதம் (1976)
அந்தர்தனம் (1977)
வேளாம்பல் (1977)
அவளுடே ராவுகள் (1978)
அம்மே நாராயணா (1984)
தேவராகம் (1996)
தெலுங்கு
பங்காறக்க (1977)
எற்ற குலாபிழு (1978) (சிகப்பு ரோஜாக்கள்(தமிழ்) டப்பிங்)
கார்திகா தீபம் (1979)
வேட்டகாடு (1979)
அத்தகாடு (1980)
சுட்டளுன்னாரு ஜாகர்த்த (1980)
தேவ்டு இட்ச்சினா கொடுக்கு(1980)
கரான தொங்க (1980)
கக்க்ஷா (1980)
மாமா அல்லுல்லா சவால் (1980)
இந்தி (பாலிவுட்)
ஹிம்மத்தவாலா (1983)
ஜஸ்டிஸ் சௌத்ரி (1983)
கலாக்கார் (1983)
சத்மா (1983)
இன்கிலாப் (1984)
ஜாக் உட்டா இன்சான் (1984)
நயா கதம் (1984)
மக்சத் (1984)
தோபா (1984)
பலிதான் (1985)
மாஸ்டர்ஜி (1985)
சர்ஃபரோஷ் (1985)
பகவான் தாதா (1986)
தர்ம அதிகாரி (1986)
நகினா (1986)
ஜான்பாஸ் (1986)(cameo)
கர்ம (1986)
சுஹாகன் (1986)
ஔலாத் (1987)
மிஸ்டர் இந்தியா (1987)
சால்பாஸ் (1989)
சாந்தினி (1989)
பந்ஜாரன் (1991)





ஸ்ரீதேவி
இலக்மி ஃபேசன் வீக் 2010இல் ஸ்ரீதேவி
பிறப்பு ஆகத்து 13 , 1963
மீனம்பட்டிகிராமம் சிவகாசி , தமிழ்நாடு, இந்தியா
இறப்பு 24 பெப்ரவரி 2018 (அகவை 54)
துபாய் , ஐக்கிய அரபு அமீரகம்
இறப்பிற்கான
காரணம் இதய நிறுத்தம்
பணி நடிகர் , தயாரிப்பாளர்
செயல்பட்ட
ஆண்டுகள்
1967–2018
வாழ்க்கைத்
துணை
போனி கபூர் (1996-இறப்பு வரை)
பிள்ளைகள் ஜானவி மற்றும் குஷி







நடித்துள்ள திரைப்படங்கள்

தமிழ்த் திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் ஏற்ற வேடம் குறிப்புகள்
1967 கந்தன் கருணை (திரைப்படம்)
1969 நம் நாடு கிங்
1969 துணைவன்
1970 அகத்தியர்
1970 பெண் தெய்வம்
1971 பாபு
1971 யானை வளர்த்த வானம்பாடி மகன்
1972 என்ன கனிமுத்து
1972 மலை நாட்டு மங்கை
1972 வசந்த அறைகள்
1973 நண்பன்
1973 தெய்வ குழந்தைகள்
1973 பிரார்த்தனை
1973 பாரத விலாஸ்
1974 திருமாங்கல்யம்
1974 திருடி
1974 எங்கள் குல தெய்வம்
1974 அவளுக்கு நிகர் வேல்
1976 தசாவதாரம்
1976 மூன்று முடிச்சு செல்வி
1977 காயத்ரி காயத்ரி
1977 கவிக்குயில் ராதா
1977 16 வயதினிலே மயில்
1977 Sayndhadamma Sayndhadu கவுரி
1978 இளைய ராணி ராஜலட்சுமி
1978 யமுனா கங்கா காவேரி
1978 டாக்ஸி டிரைவர்
1978 வணக்கத்திற்குரிய காதலியே
1978 இது எப்புடி இருக்கு
1978 Machanai Partheengala
1978 Manidharil ithanai Nirangala
1978 Mudisooda மன்னன் தோற்றம்
1978 பைலட் பிரேம்நாத்
1978 சிகப்பு ரோஜாக்கள் சாரதா
1978 ஆண்கள் பிரியா
1978 கண்ணன் ஒரு கைக்குழந்தை ' '
1978 ராஜாவுக்கேத்த ராணி
1978 சக்கபோடு போடு ராஜா
1979 Arumbugal
1979 தர்ம யுத்தம் சித்ரா
1979 கல்யாண ராமன் செண்பகம்
1979 Galil 'ஒரு ஒர் ' ' சிந்து
1979 Kavariman
1979 நீலா மலர்கள் ஜோதி
1979 நான் ஒரு கை பார்க்கிறேன் ' '
1979 பட்டாக்கத்தி பைரவி தீபா
1979 சிகப்புக்கல் மூக்குத்தி
1979 லட்சுமி லட்சுமி
1979 தாயில்லாமல் நான் இல்லை புவனா
1980 குரு
1980 ஜானி அர்ச்சனா
1980 வறுமையின் நிறம் சிவப்பு தேவி
1980 விஸ்வரூபம்
1981 பால நாகம்மா பாலா
1981 தெய்வ திருமணங்கள்
1981 சங்கர்லால் ஹேமா
1981 மீண்டும் கோகிலா கோகிலா
1981 ராணுவ வீரன்
1982 மூன்றாம் பிறை பாக்கியலட்சுமி/ விஜயா / விஜி
1982 தேவியின் திருவிளையாடல்
1982 தனிக்காட்டு ராஜா வாணி
1982 போக்கிரி ராஜா வனஜா
1982 வாழ்வே மாயம் தேவி
1982 வஞ்சம்
1983 அடுத்த வாரிசு வள்ளி / ராதா
1983 சந்திப்பு கீதா
1985 மீனாட்சியின் திருவிளையாடல்
1986 நான் அடிமை இல்லை பிரியா
2012 இங்கிலீஷ் விங்கிலிஷ் சசி
2015 புலி ராணி யுவராணி

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

நாச்சியார் விமர்சனம்



நாச்சியார் விமர்சனம்

நடிகர்கள்: ஜோதிகா, ஜிவி பிரகாஷ், இவானா, தமிழ் குமரன், ராக்லைன் வெங்கடேஷ்
ஒளிப்பதிவு: ஈஸ்வர்
இசை : இளையராஜா
தயாரிப்பு: பி ஸ்டுடியோஸ் & இயான் ஸ்டுடியோஸ்
இயக்கம்: பாலா
எளிய மனிதர்கள், காக்கிச் சட்டைகள், ஒரு புறம் மனித மிருகங்கள், இன்னொரு பக்கம் மனிதாபிமானிகள், போகிற போக்கில் முகத்தில் அறைந்து செல்லும் யதார்த்தங்கள் என வாழ்வின் பல கூறுகளை பாலாவின் பெரும்பாலான படங்களில் பார்க்கலாம். ஒரு சில படங்களில் இவற்றுக்கு இடையே வன்முறை மிகுந்திருக்கும்... நாச்சியாரும் இந்த வரையறையிலிருந்து தப்பவில்லை. பாலாவிடமிருந்து அவரது பாணியில், ஆனால் கொஞ்சம் அவசரமாக வந்திருக்கும் படம், நாச்சியார்.
உதவி ஆணையர்கள் ஜோதிகாவும் ராக்லைன் வெங்கடேஷும் 'ஒரு மைனர் ரேப் கேஸை'க் கையாள நேர்கிறது. கேஸில் தொடர்புடைய ஜிவி பிரகாஷ் - இவானா இருவருமே காதலர்கள். பதின்ம வயதின் எல்லையில் நிற்பவர்கள், விளிம்பு நிலை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பதினாறே வயதில் இவானா கருவுற்றிருக்கிறாள். வழக்கை விசாரிக்கும்போதுதான். அந்தக் கருவுக்கு யார் காரணம் என்பது தெரிகிறது. அவனைக் கண்டுபிடித்து என்ன செய்கிறார் நாச்சியார் என்பதுதான் மீதி.
சின்ன கதைதான். கிட்டத்தட்ட பார்த்த கதையும் கூட. அதை பாலா தன் பாணியில், எளிய மனிதர்களின் ஈரமிக்க வாழ்க்கைப் பின்னணியில் தந்திருக்கிறார்.
வழக்கமான பாலா படங்களை விட இந்தப் படத்தின் நீளம் குறைவு.
வசனங்களில் வழக்கமான பாலாத்தனம். சில இடங்களில் நறுக்குத் தெறிக்கும் நக்கல், நய்யாண்டி. குறிப்பாக அடிக்கடி பிறக்கும் புதிய இந்தியா குறித்த பாலாவின் க்ளைமாக்ஸ் வசனம்.
பணம், பதவி, அந்தஸ்து, சமூக கவுரவம் பார்க்கும் ஒரு நடுத்தர அல்லது உயர் நடுத்தர வர்க்கத்தினனுக்கும், விளிம்பு நிலை மனிதனுக்குமுள்ள மனிதாபிமானத்தை, காதலை மிக சிம்பிளாக, ஆனால் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் பாலா, ஜிவி பாத்திரம் மூலம்.
ஜோதிகாவுக்கு நேர்மையும் மனிதாபிமானமும் துணிச்சலும் நிறைந்த ஐபிஎஸ் அதிகாரி வேடம். அவர் 'பிய்த்து உதறியிருக்கிறார்' என்றெல்லாம் சொல்வது 'சிவாஜிக்கு நன்றாக நடிக்கத் தெரியும்' என்பதைப் போல வழக்கமான க்ளீஷே. சுருக்கமாக, மறுவரவில் ஜோதிகாவின் பெயர் சொல்லும் வேடம் இந்த நாச்சியார்.


ஜிவி பிரகாஷுக்கு நியாயமாக இதுதான் முதல் படம். அவர் இனி அப்படித்தான் சொல்லிக் கொள்ள வேண்டும். காத்து பாத்திரமாகவே மாறியிருக்கிறார். இனி த்ரிஷா இல்லனா நயன்தாரா வர்ஜின் பாய் மாதிரி வேடங்கள் செய்தால் அவரைத் தேடி வந்து அடிப்பார்கள் ரசிகர்கள். அந்த அளவுக்கு முற்றிலும் வேறு ஜிவி பிரகாஷ். நல்ல முயற்சி, மாற்றம். அதைச் செய்ய பாலாவால்தான் முடியும்.
இவானா மிக அருமையாகச் செய்திருக்கிறார். புதுமுகம் என்றெல்லாம் யாரும் சொல்லிவிட முடியாது. காட்டு மலர் போல அத்தனை எளிமை, புத்தம் புதிய முகம், தேர்ந்த நடிப்பு. குறிப்பாக ஜோதிகா விசாரணையில் அந்தப் பெண் காட்டும் பாவம்... மனசை என்னமோ பண்ணுகிறுது.
போலீஸ் அதிகாரியாக வரும் ராக்லைன் வெங்கடேஷ் மிக இயல்பாகச் செய்திருக்கிறார். இன்னுமொரு தேர்ந்த குணச்சித்திர, வில்லன் தயார்.
மற்ற பாத்திரங்களில் வரும் யாருமே சோடை போகவில்லை. இன்னும் அறியாத ஒரு உலகம், வாழ்வியலை இவர்கள் மூலம் பாலா காட்டியிருக்கிறார். அந்த சமையல் காண்ட்ராக்டர் ஒரு சாம்பிள்.
படத்தின் மைனஸ், தொலைக்காட்சித் தொடர் போன்ற ஒரு உணர்வைத் தரும் இழுவைத்தனம். குறிப்பாக அந்த பாய் வீட்டு கல்யாணத்தை இத்தனை விலாவாரியாக ஒரே இடத்தில் இழுத்துக் கொண்டிருப்பதில் அலுப்பு.
பாலா படம் என்றாலே எதையாவது வெட்டி எறிய வேண்டும், கடித்துத் துப்ப வேண்டும் என்பது நியதி போலிருக்கிறது. அதை இந்தப் படத்திலும் செவ்வனே செய்திருக்கிறார் பாலா.
இளையராஜாவின் இசை ஆர்ப்பாட்டமில்லாமல், தேவையான இடத்தில் மட்டும் உணர்வுகளை கதறவிடுகிறது. குறிப்பாக ஜிவி - இவானா காதல் மற்றும் க்ளைமாக்ஸில். ஒரே ஒரு பாடல்தான் என்றாலும், அபார இனிமை. ஆனால் அதைக் கூட முழுமையாக வைக்கவில்லை பாலா என்பதுதான் குறை.
ஈஸ்வரின் ஒளிப்பதிவில் சென்னையின் மறுபக்கம், சட்ட - காவல் துறையின் இயல்புத் தன்மை கச்சிதமாக படமாக்கப்பட்டுள்ளது. சதீஷ் சூர்யா எடிட்டிங்கில் இன்னும் சில காட்சிகளுக்கு பாலாவுடன் போராடி கத்தரி போட்டிருக்கலாம்.
ஆனால் ஒரு இடைவெளிக்குப் பிறகு பாலாவிடமிருந்து ஒரு பாஸிடிவ் க்ளைமாக்ஸ் படம் என்பதே பெரிய ஆறுதல்தான். ஆனால் இன்னும் எதிர்ப்பார்த்தோம் என்பதையும் மறுப்பதற்கில்லை. நன்றி ஒன் இந்தியா.

திங்கள், 5 பிப்ரவரி, 2018

இளையராஜா பாடிய பாடல்களின் தொகுப்பு



இளையராஜா பாடிய பாடல்களின் தொகுப்பு

இளையராஜா தனி பாடல்கள்
1 16 வயதினிலே - சோளம் வ்தக்கையிலே
2 ஆண்பாவம் - காதல் கசக்குதையா
3 ஆண்பாவம் - வந்தனம் வந்தனம்
4 ஆனந்தக்கும்மி - திண்டாடுதே ரெண்டு கிளியே
5 ஆவாரம் பூ - அலேலம் பாடி
6 ஆயிரம் வாசல் இதையம் - மனதார காதலித்தால் (துனுக்கு)
7 அக்னி நட்சத்திரம் - இராஜா ராஜாதி
8 அஜந்தா - எங்கே இருந்தாய்
9 அலைகள் ஓய்வதில்லை - தரிசனம் கிடைக்காதா
10 அம்மன் கோவில் திருவிழா - மாஞ்சோலை கிளியிருக்கு
11 அம்மன் கோவில் திருவிழா - நான் சொன்னால் கேளம்மா
12 அம்மன் கோவில் திருவிழா - தெய்வம் தந்த
13 அன்பே சங்கீதா - அடி ஆத்தா ஆத்தா
14 அன்பு கட்டளை - எங்கே சென்றாலும்
15 அன்பு கட்டளை - ஒரு கூடின் கிளிகள்தான்
16 அண்ணன் - கன்மனிக்கு வாழ்த்து பாடும்
17 அரண்மனைக்கிளி - என் தாயெனும் கோயில
18 அரண்மனைக்கிளி - இராமர நெனக்கும்
19 அதர்மம் - ஒரு பக்கம் நியாயம்
20 அது ஒரு கணா காலம் - காட்டுவழி கால்நடையா
21 அவதாரம் - சந்திரறும் சூரியரும்
22 அவதாரம் - ஒரு குண்டுமல்லி குலுங்குதடி
23 அழகர்மலை - கருகமனி கருகமனி
24 அழகர்மலை - உலகம் இப்போ எங்கோ
25 அழகி - உன்குத்தமா என்குத்தமா
26 பகவதி புரம் ரயில்வே கேட் - வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும்
27 பரணி - தேனா ஓடும் ஓடகரையில்
28 பரதன் - அழகே அமுதே பூந்தென்ற்ல்
29 பரதன் - நல்வீனை நாதம்
30 பாரதி - நின்னைச்சரன் அடைந்தேன்
31 சக்களத்தி - என்ன பாட்டு பாட
32 சக்களத்தி - வாடை வாட்டுது
33 சின்னக்கவுண்டர் - அந்த வானத்தபோல
34 சின்னக்கவுண்டர் - கண்ணுபடபோகுதையா
35 சின்னக்கவுண்டர் - சொல்லால் அடிச்ச சுந்தரி
36 சின்ன ஜமீன் - நான் யாரு எனக்கேதும்
37 சின்ன குயில் பாடுது - சின்னகுயில் ஒரு பாட்டு
38 சின்னத்தாயி - நான் ஏரிக்கரை மேலிருந்து
39 சின்ன வீடு - ஜாக்கிரதை ஜாக்கிரதை
40 சிட்டுக்குருவி - நீரோட ஆள காத்தோடும்
41 சிட்டுக்குருவி - பாரனஜனம் ஆடுதடி
42 தெய்வவாக்கு - இந்த அம்மனுக்கு எந்த
43 தேசியகீதம் - அம்மா நீயும்
44 தேசியகீதம் - அன்னல் காந்தி
45 தேசியகீதம் - ஏழபாழ
46 தேசியகீதம் - நன்பா நன்பா
47 தர்மா - இருகண்கள் போதாதே
48 தர்மா - இருகண்கள் போதாதே (சோகம்)
49 தர்மம் வெல்லும் - பூவோடு காற்றுவந்து
50 ஈரவிழி காவியங்கள் - பழைய சோகங்கல்
51 ஈரவிழி காவியங்கள் - தென்றல்டை தோரணங்கள்
52 எல்லமே என் ராசாதான் - வீனைக்கு வீனைகுங்சு
53 என் அருகே நீ இருந்தாள் - நிலவே நீவரவேண்டும்
54 என் பொம்முக்குடி அம்மாவுக்கு - காலெல்ளாம் நோகுதடி
55 என் பொம்முக்குடி அம்மாவுக்கு - கண்ணே நவமனியே
56 என் ஜீவன் பாடுது - எங்கிருந்தோ அழைக்கும்
57 என் மனவானில் - உன்னைத்தேடி வெண்ணிலா
58 என் ராசாவின் மனசிலே - குயில் பாட்டு வந்த்தென்ன
59 என் ராசாவின் மனசிலே - பென்மனசு ஆழமுன்னு
60 என் ராசாவின் மனசிலே - சோளபசுங்கிளியே
61 என் உயிர் கண்ணம்மா - பூம்பாரையில் பொட்டு
62 எனக்காக காத்திரு - ஊட்டி மலைக்காட்டில்
63 எங்க ஊரு காவக்காரன் - எங்க ஊரு காவகாரா
64 எங்க ஊரு மாப்பிள்ளை - வலது காலை எடுத்து
65 எங்க ஊரு பாட்டுக்காரன் - எங்க ஊரு பாட்டுகாரா
66 என்னப்பெத்த ராசா - எல்லோருக்கும் நல்லவனக
67 என்னப்பெத்த ராசா - பெத்தமனசு சுத்த்திலும்
68 என்னை விட்டு போகாதே - எலூம்பாலே கூடுகட்டி
69 என்னை விட்டு போகாதே - பொண்ணப்போல ஆத்தா
70 எதிர் காற்று - சாமியாரா போணவனுக்கு
71 ஏழை ஜாதி - இந்த வீடு நாமக்கு
72 கீதாஞ்சாலி - துள்ளி எழுந்த்து பாட்டு
73 குணா - அப்பனென்ரும் அம்மை
74 ஐ ல்வ் இந்தியா - பாசம் வைத்த முல்லை
75 இங்கேயும் ஒரு கங்கை - பரமசிவன் தலையில்
76 இரண்டில் ஒண்ரு - நாரினில் பூ தொடுத்து
77 இரவு பூக்கள் - இந்த பூவுக்கொரு
78 இதயகோயில் - இதையம் ஒரு கோவில்
79 இதயம் - பொட்டு வைத்த ஒரு
80 ஜப்பானில் கல்யாணராமன் - காதால் உன் லீலையா
81 காக்கை சிறகினிலே - பாடித்திரிந்த எந்தன்
82 காதல் சாதி - என்ன மரந்தாலும்
83 காத்திருக்க நேரமில்லை - கஸ்தூரி மானே மானே
84 காவலுக்கு கெட்டிக்காரன் - காவலுக்கு கெட்டிகாரன்
85 கடலோர கவிதைகள் - தாஸ் தாஸ் சின்ன்ப்பதாஸ்
86 கைவீசம்மா கைவீசு - கைவீசம்மா கைவீசு
87 கைராசிக்காரன் - ஊமைமேகமே
88 கலிகாலம் - காலம் கலிகாலம் தான்
89 கண்ணா உன்னை தேடுகிரேன் - ஊருரங்கும் நேரத்தில்
90 கண்ணாத்தாள் - மாலை வெயில் அழகி
91 கண்ணுக்கொரு வண்ணக்கிளி - கானம்தான் காற்றோடு
92 கண்ணுக்கொரு வண்ணக்கிளி - யார் அழுது யார்
93 கண்ணுக்கு மைஎழுது - பூவே நீ நானாகவும்
94 கண்ணுக்கு மைஎழுது - சோகங்கள் கீதங்களோ
95 கரகாட்டகாரன் பாட்டாலே - புத்தி சொன்னா
96 கரகாட்டகாரி - என்ன பெத்த ஆத்தா
97 கரையெல்லாம் செண்பக்ப்பூ - காடல்லாம் பிச்சிப்பூவூ
98 கரிமேடு கருவாயன் - அட கதைகேலு கதை
99 கரிசக்காட்டுப்பூவே - வானம் பார்த்த கரிசக்காடு
100 கட்டபஞ்சாயத்து - தலைவன் ஒருத்தன்
101 கிழக்கு வாசல் - வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி
102 கிழக்கும் மேற்க்கும் - என்னேட உலகம் வேறு
103 கிழக்கும் மேற்க்கும் - கூட பொறந்த சொந்தமே
104 கிழக்கும் மேற்க்கும் - ஒரு கதிரிக்கா ஒத்த
105 கோடை மழை - துப்பாக்கி கையிலேடுத்து
106 கொக்கரக்கோ - கண் பாரும் தேவி
107 கோயில் காளை - தாய் உண்டு தந்தை உண்டு
108 கிருஷ்ணன் வந்தான் - மாடிழுத்த வண்டியெல்லாம்
109 கும்பக்கரை தங்கையா - என்னை ஒருவன் பாட
110 கும்பகோணம் கோபலு - என்ன ஜென்மம்
111 கும்பகோணம் கோபலு - ஒரு நந்தவனக்குயில்
112 கும்மிபாட்டு - பூங்குயிலே
113 குட்டி தங்கச்சி தங்கச்சி
114 மாயாபஜார் - ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரன்
115 மாயக்கண்ணாடி - காசு கையில் இல்லாட்டா
116 மாயக்கண்ணாடி - காதல் இன்று இப்போது
117 மகுடி - கரட்டோரம் மூங்கில் காடு
118 மைக்கேல் மதன காமராஜன் - கதை கேலு கதை கேலு
119 மலையூர் மம்பட்டியான் - காட்டுவழி போர பொண்ணு
120 மனைவி ரெடி - சினிமா பாத்து
121 மனைவி ரெடி - உண்ணை விடால்
122 மந்திரப்புன்னகை - காலிப்பெருங்காய டப்பா
123 மருதுபாண்டி - சிங்கார செல்வங்களே
124 மீண்டும் பராசக்தி - காட்டுக்குள்ள காளியம்மா
125 முள்ளும் மலரும் - மானினமே வண்ணப்பூ
126 முரட்டு கரங்கள் - காவலுக்கு சாமி உண்டு
127 முதல் மரியாதை - ஏ களியிருக்கு
128 முதல் வசந்தம் - ஆறும் அது ஆழமிள்ல
129 நான் கடவுள் - ஒரு காற்றில்’
130 நான் சிகப்பு மனிதன் - எல்லோருமே திருடங்கதான்
131 நான் சொன்னதே சட்டம் - கொலைகள் செய்தாள்
132 நாங்கள் - பாரடி குயில்
133 நானும் ஒரு இந்தியன் - சின்ன சின்ன புது
134 நாயகன் - தென்பாண்டி சீமையிலே
135 நல்ல நாள் - நல்ல நாள்
136 நந்தலாலா - மெல்ல ஊர்ந்து ஊர்ந்து
137 நந்தலாலா - தாலாட்டுக்கேட்க்க
138 நீ சிரித்தாள் தீபாவளி - பாசம் என்னும்
139 நீதானா அந்தகுயில் - கோட்டையில் குயிலிருக்கு
140 நிலவே முகம் காட்டு - தன்னந்தனியாக ஒரு
141 நினைவுசின்னம் - சிங்காரச்சீமையிலே
142 ஊரெல்லாம் உன் பாட்டு - ஊரெல்லாம் உன் பாட்டு
143 ஒரே ஒரு கிராமத்திளே - படிச்சது என்னத்த
144 ஒரே ஒரு கிராமத்திளே - வந்ந்துருச்சு வந்துருச்சு
145 பாண்டி நாட்டு தங்கம் - பாண்டி நாட்டுத்தங்கம்
146 பாட்டுக்கொரு தலைவன் - எல்லோருடைய வாழ்க்கையிளும்
147 படிச்ச புள்ள - பூங்காற்றே இனி போதும்
148 பகல் நிலவு - மைனா மைனா மாமன்
149 பகலில் பவுர்ணமி - மனமே அவன் வழும்
150 பணக்காரன் - மரத்த வச்சவன் தண்ணி
151 பணக்காரன் - உள்ளுக்குள்ள சக்கரவர்தி
152 பெரிய வீட்டு பண்னைக்காரன் - வந்தாரை வாழவைக்கும்
153 பெரியம்மா - இவள் தானே பெண்மனி
154 பெரியம்மா - புகழ் தானே
155 பிள்ளை பாசம் - விடிந்ததா பொழுது விடிந்ததா
156 பிதாமகன் - யாரது யாரது
157 பொங்கி வரும் காவேரி - இந்த ராசாவ
158 பொண்ணு ஊருக்கு புதுசு - ஒரு மஞ்சக்குருவி
159 பொண்ணு ஊருக்கு புதுசு - வீட்டுக்கு ஒரு மகன
160 பொண்ணு வீட்டுக்காரன் - நந்தவனக்குயிலே
161 பொண்ணுக்கேத்த புருஷ்ன் - ஜாதிமத பேதமின்றி
162 பொண்ணுமனி - ஹைய் வஞ்சிக்கொடி
163 பூவிலங்கு - ஆத்தாடி பாவாடை
164 பூமணி - எம்பாட்டு எம்பாட்டு
165 பூஞ்சோலை - காணக்குயிலே கண்ணுரக்கம்
166 பூந்தோட்ட காவல்காரன் - காவல்காரா காவல்காரா காடு
167 பூந்தோட்டம் - இனிய மலர்கள் மலரும்
168 பூந்தோட்டம் - வானத்தில் இருந்து
169 பூந்தோட்டம் - வானத்து தாரகையோ
170 பொறுத்தது போதும் - ஆராரோ பாடவந்தேனே
171 பிரியங்கா - நியாபகம் இல்லையோ
172 புண்ணியவதி - அடி பானிஞ்சா
173 புதிய ராகம் - மல்லிகை மாலைகட்டி
174 புதிய சுவரங்கள் - ஓ.. வானமுள்ள காளம்
175 புது நெல்லு புது நாத்து - பரணி பரணி பாடிவரும்
176 புது நெல்லு புது நாத்து - சலங்கை சத்தம்
177 புதுமைப்பெண் - கன்னியில சிக்கதையா
178 ராஜ கோபுரம் - ஞானத்தங்கமே
179 ரமணா - ஊருக்கொரு கச்சியும்
180 ருசி கண்ட பூனை - அன்புமுகம் தந்தசுகம்
181 சகல கலா வல்லவன் - அம்மன் கோயில் கிழக்காலே
182 சக்கரை தேவன் - நல்ல வெள்ளிக்கிழமையிலே
183 செம்பருத்தி - கடலிலேஎழும்புர அலைகல
184 செண்பகமே செண்பக்மே - வெளுத்து கட்டிக்கடா
185 செந்தூரம் - சின்னம்ணிக்காக்
186 சேது - வார்த்தை தவறி
187 சார் ஐ லவ் யு - உதிக்கின்ற செங்கதிர்
188 சிறையில் சில ராகங்கள் - ஏழு சுவரம் சேர்ந்து
189 சிவா - வெள்ளிக்கிழமை
190 சொல்ல மறந்த கதை - அம்மா சொன்னா
191 சொல்ல மறந்த கதை - ஜக்கம்மா
192 சொல்ல மறந்த கதை - பணம்மட்டும் வாழ்க்கையா
193 சொல்ல துடிக்குது மனசு - வாயக்கட்டி வயித்த
194 தாலாட்டு கேக்குதம்மா - அம்மா எனும் வார்த்தைதான்
195 தாலாட்டு பாடவா - சொந்தம் என்று வந்தவளே
196 தாய் மொழி - மதுரவீரன் சாமி
197 தலைமுறை - என்னபெத்த ராசா
198 தலையனை மந்திரம் - வானம்பாடி
199 தம்பிக்கு ஒரு பாட்டு - தாய் என்றும் தந்தை
200 தனம் - கட்டிலுக்கு மட்டும் தானா
201 தேடி வந்த ராசா - ராசாவை தேடிவந்த
202 தென்றல் சுடும் - கண்ணம்மா கண்ணம்மா
203 தெம்மாங்கு பாட்டுகாரண் - சின்ன சின்ன வார்த்தையிலே
204 திருநெல்வேலி - சாதி எனும் கொடுமை
205 திருப்புமுனை - அம்மான்னா சும்மா இல்லடா
206 திருப்புர சுந்தரி - ஓடம் ஒண்று காற்றில்
207 தொடரும் - சேர்ந்துவாழும் நேரம்
208 தூங்காதே தம்பி தூங்காதே - நானாக நானில்லை தாயே
209 துருவ நட்சத்திரம் - பெத்துப் போட்ட்தாரோ
210 துருவ நட்சத்திரம் - தாலி என்பதிங்கே
211 உள்ளே வெளியே - ஆரிராரோ பாடும் உள்ளம்
212 உன்னை நான் சந்தித்தேன் - தாலாட்டு மாரிப்போணதே
213 உன்னை சொல்லி குற்றமில்லை - கெட்டும் பட்டணம் போய்
214 உதயகீதம் - உதயகீதம் பாடுவேன்
215 உதிரிப்பூக்கள் - ஏ.. இந்த பூங்காத்து தாலாட்ட
216 உயர்ந்த உள்ளம் - எங்கே என் ஜீவனே
217 வால்மீகி - அச்சடிச்ச காச
218 வால்மீகி - என்னடா பாண்டி
219 வாழ்க்கை - மானமே நீ
220 வீர்தாலாட்டு - கதபோலத் தோணும் இது
221 வெள்ளையதேவன் - ஏத்திவச்ச குத்து விளக்கு
222 வெற்றிப்படிகள் - உன்னை காக்கும் தாய் போல்
223 விடிஞ்சா கல்யாணம் - காலம் மழைக்கலம் இளையராஜா மற்றும் குழுவினர்
224 ஆண்டான் அடிமை - உந்தன் ராஜியதில் யாரும்
225 அறுவடை நாள் - ஒரு காவியம் அரங்கேரும்
226 சின்ன குயில் பாடுது - அப்பாவுக்கு பையன் வந்து
227 சின்ன ராமசாமி பெரிய ராமசாமி - அத்திரிபாச்சா கத்திரிகோலு
228 தெய்வவாக்கு - கத்துதடி ராக்கோலி
229 தேவன் - ஓ.. இந்த ஏழை கீதம்
230 தேவன் - தாலாட்டும் காத்தே
231 என் உயிர் தோழன் - தம்பி நீ நிமுந்து பாரடா
232 இது எங்கள் நீதி - நீதி இது எங்கள்
233 காதலுக்கு மரியாதை - என்னை தாலாட்ட
234 காமராஜ் - ஊருக்கு உழைத்தவன்
235 கண்ணாத்தாள் - அம்மன் புகழைப்பாட
236 கரகாட்டகாரன் - நந்தவனத்தில் வந்த
237 கருவேலம் பூக்கள் - ஏலே அட என்னலே
238 கவரிமான் - உள்ளங்கள் இன்பத்தில்
239 கேளடி கண்மனி - என்ன பாடுவது
240 மாயக்கண்ணாடி - ஏலே எங்கே வந்தே
241 மைடியர் மார்த்தாண்டன் - மைடியர் மார்த்தாண்டா
242 ஒரு நாள் ஒரு கணவு - காற்றில் வரும் கீதமே
243 பிக்பாகெட் - வேளை வேளை
244 பொண்டட்டி தேவை - யாரடி நான் தேடும்
245 பொண்ணு ஊருக்கு புதுசு - ஓரம்போ ஓரம்போ
246 பொண்ணுக்கேத்த புருஷ்ன் - ஜாதிமத பேதமின்றி
247 புலன்விசாரனை - இது தான் இதுக்குத்தன்
248 புதுப்பட்டி பொண்ணுத்தாயி - அழகான நம்ம பாண்டி நாட்டில்
249 சக்கரை பந்தல் - வேதம் ஓங்க
250 சேது - எங்கே செல்லும் இந்த பாதை
251 தென்பாண்டி சிங்கம் - வருகுதையா மறவர் படை
252 வா வா வச்ந்தமே - இந்த காதல் வந்து
253 வள்ளி - என்ன என்ன கனவு

இளையராஜா ஜானகி ஜோடி பாடல்கள்
254 அலைகள் ஓய்வதில்லை - வாழ்வெள்லாம்
255 ஆட்டோ ராஜா - சங்கத்தில் பாட்த கவிதை
256 அவதாரம் - அரிதாரத்த பூசிக்கொள்ல
257 பரதன் - புன்னகைல் மின்சாரம்
258 தெய்வவாக்கு - வள்ளி வள்ளி என் வந்தன்
259 தர்மபத்தினி - நான் தேடும் செவ்வந்திப்பூ இது
260 எல்லமே என் ராசாதான் - ஒரு சந்தன காட்டுக்குள்லே
261 என் அருகே நீ இருந்தாள் - இந்திரசுந்தரியே சொந்தம்
262 ஏழுமலையான் மகிமை - எந்த ஜென்ம மும்
263 ஏழுமலையான் மகிமை - கலிவரதா
264 இங்கேயும் ஒரு கங்கை - அன்னத்த நெனச்சேன்
265 கடலோர கவிதைகள் - அடி ஆத்தாடி இந்த
266 கடவுள் அமைத்த மேடை - ஏய் தண்ணி நானும்
267 கல்லுக்குள் ஈரம் - சிறு பொண்மனி அசையும்
268 கண்மனி - நேற்று வந்த காற்று
269 கரையெல்லாம் செண்பக்ப்பூ - ஏரியில எலந்தமரம்
270 கழுகு - பொண்ணோவிம் க்ண்டெனம்மா
271 மலையூர் மம்பட்டியான் - சின்னப்பொண்ணு சேலை
272 மனைவி ரெடி - ஜான்பிள்ளை ஆனாலும்
273 மெட்டி - மெட்டி ஒளி காற்றோடு
274 முந்தானை முடிச்சு - வெளக்கு வச்ச நேரத்துல
275 நாடேடி பாட்டுக்காரன் - ஆகாய தாமரை
276 நாடேடி தென்றல் - ஒரு கணம் ஒரு யுகமாக
277 ஊரு விட்டு ஊரு வந்து - சொர்கமே என்றாலும்
278 பகல் நிலவு - பூமாலையே தோள்சேரவா
279 பிரியங்கா - நியாபகம் இல்லையோ
280 புதுப்பாட்டு - நேத்து ஒருத்தர ஒருத்தர
281 சாமி போட்ட முடிச்சு - மாதுழங்கனியே நல்ல மலர்
282 தை பொங்கள் - கண்மலர்லளின் அழைப்பிதழ்
283 உறுதி மொழி - அமுதூரும் தேன் பிரையே
284 வண்ண வண்ண பூக்கள் - கண்ணம்மா காதலெணும்
285 அவதாரம் - தென்றல் வந்து தீண்டும் இளையராஜா சித்ரா ஜோடி பாடல்கள்
286 அந்தப்புரம் - அழகே உன்முகம் பாராமல்
287 அறுவடை நாள் - தேவனின் கோவில் மூடிய
288 எங்க ஊரு மாப்பிள்ளை - என் காவிரியே கண்ணீர்
289 கீதாஞ்சாலி - மலரே பேசு மொனமொழி
290 கீதாஞ்சாலி - ஒரு ஜீவன் அழைத்த்து
291 கீதாஞ்சாலி - ஒரு ஜீவன் அழைத்த்து (சோ)
292 கிராமத்து மின்னல் - ரெட்டைகிளி சுத்திவந்த
293 கிராமத்து மின்னல் - வட்டு எடுத்த சோத்த
294 இதயகோயில் - ஊரோரமா ஆத்துப்பக்கம்
295 கண்களின் வார்த்தை - ஸ்ரீராமனே உன்னை சீதை
296 கரகாட்டகாரன் - இந்த மான்
297 தாய்க்கொரு தாலாட்டு - காதலா காதலா
298 தங்கமான ராசா - கண்ணே என் கார்முகிலே
299 வீர்தாலாட்டு - ஆலப்பிறந்த மகராசா
300 என் உயிர் தோழன் - மச்சி மன்னாரு
301 முதல் மரியாதை - அந்த நிலாவத்தான்
302 புண்ணியவதி - ஒரு ஆலம்பூவு அத்திப்பூவ
303 தங்க மாமா - வான்வெளியில் வண்ணப்பறவை இளையராஜா பி.சுசிலா ஜோடி பாடல்கள்
304 கிருஷ்ணன் வந்தான் - தனியாக படுத்து
305 லக்‌ஷ்மி - தென்னமரத்துல் தென்றல்
306 நீதியின் மறுபக்கம் - பொட்டிக்கடையிள
307 பொங்கி வரும் காவேரி - மன்னவன் பாடும்
308 பாடாத தேனீக்கள் - ஆதி அந்தம் இளையராஜா சைலஜா ஜோடி பாடல்கள்
309 எல்லாம் இன்பமயம் - ஒன்னும் ஒன்னும்
310 மனிப்பூர் மாமியார் - ரசிகனே என் அருகில் வா
311 பொண்ணு ஊருக்கு புதுசு - சாமக்கோழி கூவுதம்மா
312 பொண்ணு ஊருக்கு புதுசு - உனக்கேன தானேஇன்நேரமா
313 வீர்தாலாட்டு - அம்மன் கோயில் வாசலிலே இளையராஜா சுஜாத்தா ஜோடி பாடல்கள்
314 அண்ணன் - ஆலமரத்து குயிலே குயிலே
315 அண்ணன் - வயசுப்புள்ள வயசுப்புள்ள
316 காதல் கவிதை - ஏ..கொஞ்சிப் பேசி கோவம்
317 கவலைப்படாதே சகோதரா - திருஓனத்திருநாளும் வந்தல்லோ
318 பூமணி - தோல்மேல தோல்மேல
319 ஆணழகன் - நில்லாத வெண்ணிலா - இளையராஜா & உமாரமணன்
320 பகவதி புரம் ரயில்வே கேட் - செவ்வரலி தோட்ட்த்துல - இளையராஜா & உமாரமணன்
321 பாட்டு பாடவா - நில் நில் நில் பதில் - இளையராஜா & உமாரமணன்
322 வைதேகி காத்திருந்தாள் - மேகங் கருக்கையிலே - இளையராஜா, உமாரமணன் & குழுவினர்
323 ஈரவிழி காவியங்கள் - என் கானம் இன்று அரங்கேரும் - இளையராஜா & ஜென்சி
324 பகலில் ஒரு இரவு - தோட்டம் கொண்ட ராசாவே - இளையராஜா & ஜென்சி
325 அலைகள் ஓய்வதில்லை - காதல் ஓவியம் பாடும் - இளையராஜா, ஜென்சி & குழுவினர்
326 நாயகன் - நிலா அது வானத்து - இளையராஜா & சசிரேக்கா
327 அலைகள் ஓய்வதில்லை - விழியில் விழுந்து - இளையராஜா, சசிரேக்கா & குழுவினர்
328 இளையராஜாவின் ரசிகை - மலைச்செவ்வானம் - இளையராஜா & சொர்ணலதா
329 என் ராசாவின் மனசிலே - குயில் பாட்டு வந்த்தென்ன (சே) - இளையராஜா & சொர்ணலதா
330 கண்களும் கவிபாடுதே - மாலைநிலா - இளையராஜா & மஞ்சரி
331 மாது - கேட்க்கலியோ நெஞ்சின் - இளையராஜா & மஞ்சரி
332 சிறையில் சில ராகங்கள் - கல்லுடைக்க ஆளில்லாம - இளையராஜா & சுனந்தா
333 தாலாட்டு - எனக்கென ஒருவரும் - இளையராஜா & சுனந்தா
334 அஜந்தா - யாரும் தொத ஒன்ரை - இளையராஜா & ஸ்ரேயா கோசல்
335 பாரதி - நின்னைச்சரன் அடைந்தேன் - இளையராஜா & பாம்பே ஜெயஸ்ரீ
336 தேவதை - நாள்தோரும் எந்தன்கண்னிள் - இளையராஜா & கவிதா கிருஷ்ணமூர்த்தி
337 புதுப்பாட்டு - எங்க ஊரு காதலபத்தி - இளையராஜா & ஆஷா போன்ஸ்லே
338 ரமணா - வானவில்லே வானவில்லே - இளையராஜா & சாதனா சர்கம்
339 செந்தூரம் - உன் பக்கத்தில ஒரு - இளையராஜா & மாலா
340 தனம் - கூத்து ஒன்னு கூத்து - இளையராஜா & பெஜி
341 தெம்மாங்கு பாட்டுகாரண் - என் ஜீவன் தானே உந்தன் - இளையராஜா & பவதாரிணி
342 வால்மீகி - ஒளிதரும் சூரியனே - இளையராஜா & பேலா ஷிண்டி
343 நாங்கள் - நம்ம பாசு தேவதாசு - இளையராஜா & மலேசியா வாசுதேவன்
344 பாசப்பறவைகள் - மாப்புள மாப்புள - இளையராஜா & மலேசியா வாசுதேவன்
345 புது புது அர்த்தங்கள் - அழகான மனைவி அன்பான - இளையராஜா & மலேசியா வாசுதேவன்
346 உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் - முந்தி முந்தி நாயகரே - இளையராஜா & மலேசியா வாசுதேவன்
347 வாழ்க வளர்க - ஈசுவரனே ஈசுவரனே - இளையராஜா, மலேசியா வாசுதேவன் & குழுவினர்
348 நிலவே முகம் காட்டு - பூங்காத்து - இளையராஜா & எஸ். பி. பாலசுப்பிரமணியம்
349 பாட்டு பாடவா - வழிவிடு வழிவிடு - இளையராஜா & எஸ். பி. பாலசுப்பிரமணியம்
350 புது புது அர்த்தங்கள் - எடுத்து நான்விடவா - இளையராஜா & எஸ். பி. பாலசுப்பிரமணியம்
351 உடன் பிறப்பு - சோழர் குழ - இளையராஜா & எஸ். பி. பாலசுப்பிரமணியம்
352 கீதாஞ்சாலி - கிளியே கிளியே என் - இளையராஜா & கங்கை அமரன்
353 தீர்த்தகாரையினிலே - உசாரையா உசாரு - இளையராஜா & கங்கை அமரன்
354 நானே ராஜா நானேமந்திரி - தாய் அவளின் திருத்தாள் பனிந்தே - இளையராஜா, கங்கை அமரன் & குழுவின்ர்
355 திருநெல்வேலி - திருநெல்வேலி சீமையிலே - இளையராஜா & மனோ
356 பாரதி - நல்லதோர் வீனை - இளையராஜா, மனோ & குழுவின்ர்
357 தேவர் மகன் - போற்ற்ப்பாடடி பொண்ணே - இளையராஜா, மனோ & குழுவின்ர்
358 இரட்டை ரோஜா - பொம்பளங்க கையில் - இளையராஜா & அருன்மொழி
359 காதலுக்கு மரியாதை - ஐயா வீடு தொறந்து தான் - இளையராஜா & அருன்மொழி
360 ஆனந்தராகம் - கடலோரம் கடலோரம் - இளையராஜா & கே.ஜே. ஏசுதாஸ் & குழுவினர்
361 இன்னிசை மழை - மங்கை நீ மாங்கனி - இளையராஜா & எஸ். என். சுரேந்தர்
362 கண்னி ராசி - சோறுன்னா சட்டி - இளையராஜா, தீபன்சக்கரவர்த்தி & குழுவினர்
363 நந்தலாலா - ஒரு வாண்டு கூட்டம் - இளையராஜா & யத்தீஸ்வர்
364 நிலவே முகம் காட்டு - தென்றலை கண்டுகொள்ளம்மா - இளையராஜா & ஹரிஹரன்
365 தலைமுறை -எங்க மகராணிக்கு - இளையராஜா & ஸ்ரீநிவாஷ்
366 அலைகள் ஓய்வதில்லை - வாடி என் கப்பகிழங்கே - இளையராஜா, கங்கை அமரன், ஜென்சி & குழுவின்ர்
367 பரணி - நடு ராத்திரியில் சுத்துதடி - இளையராஜா, சங்கர் மஹாதேவன், சொர்ணலதா & குழுவினர்
368 எங்க ஊரு காவக்காரன் - சிறுவனி தண்ணிகுடிச்சு -இளையராஜா, சைலஜா & சுனந்தா
369 கோபுரங்கள் சாய்வதில்லை - பூவாடை காற்று - இளையராஜா, கிருஷ்ணசந்தர், ஜானகி & குழுவினர்
370 இதயம் - ஏப்ரல் மேயிலே - இளையராஜா, தீபன்சக்கரவர்த்தி, எஸ். என். சுரேந்தர் & குழுவினர்
371 காதல் கவிதை - தகத்தோம் - இளையராஜா, அருன்மொழி & சொர்ணலதா
372 கல்லுக்குள் ஈரம் - தோப்பில் ஒரு நாடகம் - இளையராஜா, மலேசியா வாசுதேவன், ஜானகி & குழுவினர்
373 கண்ணா உன்னை தேடுகிரேன் - கொங்சும் குயில் பாட்டு - இளையராஜா, ஹரினி & அணுராதா ஸ்ரீராம்
374 கவலைப்படாதே சகோதரா - ஈஸ்வர அல்லா - இளையராஜா, மனோ & யுகேந்திரன்
375 கிருஷ்ணன் வந்தான் - அண்ணே அண்ணே - இளையராஜா, மனோ & பி. சுசிலா
376 மனம் விரும்புதே உன்னை - காட்டுகுயில் காட்டை - இளையராஜா, ஹரிஹரன், பவதாரிணி & குழுவினர்
377 நாடேடி தென்றல் - மணியே மணிக்குயிலே - இளையராஜா, மனோ & ஜானகி
378 ஒரு நாள் ஒரு கணவு - காற்றில் வரும் கீதமே - இளையராஜா, ஹரிஹரன், பவதாரிணி, ஸ்ரேயா கோசல் & சாதனா சர்கம்
379 பகல் நிலவு - நீ அப்போது பாத்தபுள்ளை - இளையராஜா, மலேசியா வாசுதேவன், சைலஜா & குழுவினர்
380 புண்ணியவதி - ஒனக்கொருத்தி பொறந்துருக்கா - இளையராஜா & எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுனித்தா & குழுவினர்
381 ராஜா கையவச்சா - மருதாணி அரச்சேனே - இளையராஜா, மனோ & ஜானகி
382 ராசய்யா - திண்டுக்கல்லு திண்டுக்கல்லு - இளையராஜா, அருன்மொழி, மின்மினி & குழுவினர்
383 ரமணா - வானவில்லின் பேரைமாற்றவா - இளையராஜா, ஹரிஹரன், & சாதனா சர்கம்
384 தாய் மூகாம்பிகை - ஜனனி ஜனனி - இளையராஜா, தீபன்சக்கரவர்த்தி, எஸ். என். சுரேந்தர் & குழுவினர்
385 தாய்க்கொரு தாலாட்டு - அலையில மிதந்த்து - இளையராஜா, மலேசியா வாசுதேவன், பி. சுசிலா & குழுவினர்
386 திருநெல்வேலி - இனி நாளும் திருநாள் தான் - இளையராஜா, அருன்மொழி & சொர்ணலதா
387 வெள்ளை ரோஜா - நாகூரு பக்கத்தில - இளையராஜா, மலேசியா வாசுதேவன், சைலஜா & குழுவினர்
388 விருமாண்டி - கர்ப்பகரகம் விட்டு - இளையராஜா, கமலஹாசன், கார்த்திக், திப்பு & குழுவின்ர்

“மணிரத்னம் முதல் கார்த்திக் சுப்புராஜ் வரை... டாப் இயக்குநர்கள் கையில் என்னென்ன படங்கள்..!” #TopDirectorsNext



“மணிரத்னம் முதல் கார்த்திக் சுப்புராஜ் வரை... டாப் இயக்குநர்கள் கையில் என்னென்ன படங்கள்..!” #TopDirectorsNext

2017, பல அறிமுக இயக்குநர்கள் ஜொலித்த வருடம். தமிழ் சினிமாவின் ஆரோக்கியமான வருடம் என்றே சொல்லலாம். அதேபோல் இந்த வருடமும் பல அறிமுக இயக்குநர்கள் நல்ல படைப்புகளுடன் வருவார்கள் என்ற நம்பிக்கை ஒருபுறம் இருக்க, டாப் இயக்குநர்கள் எல்லாம் இந்த வருடம் என்ன ப்ளானில் இருக்கிறார்கள் எனப் பார்க்கலாம்.

மணிரத்னம்:


‘காற்று வெளியிடை’ படத்திற்கு அடுத்து, தான் இயக்கப் போகும் படத்தின் அறிவிப்பை வெளியிட்டு நமக்கெல்லாம் ஷாக் கொடுத்தார் மணிரத்னம். படத்தோட அறிவிப்பில் என்ன ஷாக் என்று யோசிக்காதீர்கள். அறிவிப்பில் ஷாக்கில்லை, ஆக்டர்ஸ் லிஸ்ட்டைப் பார்த்தால்தான் ஷாக். சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அரவிந்த் சாமி, ஃபஹத் ஃபாசில், ஐஷ்வர்யா ராஜேஷ் எனப் படு பயங்கரமான காஸ்டிங்கோடு வந்திருக்கிறார் மணிரத்னம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகும் இந்தப் படம்தான் மணி ரத்னத்தின் இந்த வருட ப்ளான்.

ஷங்கர்:



‘2.0’ படத்தில் இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரமாக இருக்கும் ஷங்கர், ஏப்ரலில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்கிறார். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து இயக்கும் ‘இந்தியன் - 2’ பட வேலைகளில் இறங்கவிருக்கிறார். சென்ற வருடம் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்திருக்கும் கமலுக்கு ‘இந்தியன் - 2’ மிக முக்கியமான படமாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதனாலேயே இந்தப் படத்திற்காக ஷங்கர் அதிகம் மெனக்கெடுவார் என எதிர்பார்க்கலாம்.

ஏ.ஆர்.முருகதாஸ்:


‘மெர்சல்’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் அவரது 62-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வந்ததுமே இணையம் பரபரப்பானது. ‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்களுக்குப் பிறகு விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைவதால் இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. கீர்த்தி சுரேஷ், ஏ.ஆர்.ரஹ்மான் என இந்தப் படக்குழுவில் ஒவ்வொரு பிரபலங்களாக இணைந்து வருகிறார்கள். தீபாவளிக்குப் படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு பரபரப்புடன் வேலை செய்துவருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

செல்வராகவன்:


‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்கும் புதிய படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு நாயகிகளாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்கள். செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜாவின் மேஜிக்கல் காம்போ இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்தையும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது படக்குழு. எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படமும் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. இந்த வருடம் செல்வராகவனின் இரண்டு படங்கள் ரிலீஸாகும் என எதிர்பார்க்கலாம்.

பாலா:


ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் இந்த மாதம் ரிலீஸாகவிருக்கும் ‘நாச்சியார்’ படத்தைத் தொடர்ந்து, அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்கான ‘வர்மா’ படத்தை இயக்கவிருக்கிறார் பாலா. நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தின் வேலைகளில்தான் பாலா தற்போது தீவிரமாக இருக்கிறார். நாயகன் ரோலுக்கு துருவ் தயாராகிவரும் இந்த இடைவெளியில், படத்தின் ஹீரோயின் செலக்‌ஷன் நடந்து வருகிறது. தெலுங்கில் செம ஹிட்டடித்த இந்தப் படத்தை, பாலாவின் இயக்கத்தில் பார்க்கத் தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

கெளதம் வாசுதேவ் மேனன்:


தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ என இரண்டு படங்களின் வேலைகளையும் ஒரே நேரத்தில் பார்த்துவருகிறார் கெளதம். இரண்டு படங்களுமே முடியும் தருவாயில் இருப்பதால், இந்த வருடம் இவ்விரண்டு படங்கள் போக தனது புதிய படத்தின் அறிவிப்பையும் கெளதம் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அருண் விஜய்யின் 25-வது படத்தை கெளதம் மேனன்தான் இயக்கவிருக்கிறார் என்கிற தகவலும் வருகிறது.

வெற்றிமாறன்:


‘விசாரணை’ படத்திற்குப் பிறகு தனது கனவுப் படமான ‘வடசென்னை'யைக் கையில் எடுத்திருக்கிறார் வெற்றிமாறன். தனுஷ், அமீர், ஆண்ட்ரியா, ஐஷ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் வடசென்னை பட வேலைகளில்தான் தற்போது வெற்றிமாறன் இருக்கிறார். ‘ஆடுகளம்' படத்திற்குப் பிறகு தனுஷ் - வெற்றிமாறன் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தப் படத்தின் ரிசல்ட்டைப் பார்த்துவிட்டு, ‘வடசென்னை’ படத்தின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகத்தின் வேலைகளும் ஆரம்பிக்கப்படும் என்கிறார் வெற்றிமாறன்.

ஹரி:


‘சிங்கம் 3’ படத்திற்குப் பிறகு இயக்குநர் ஹரியும், ‘ஸ்கெட்ச்’ படத்திற்குப் பிறகு விக்ரமும் இணையும் படம் ‘சாமி ஸ்கொயர்’. ‘சிங்கம்’ படத்தைத் தொடர்ந்து ‘சிங்கம் 2, 3’ எனத் தொடர்ச்சியாகப் படங்கள் இயக்கிய ஹரி, எப்போது ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பார் என்கிற கேள்வி பலரிடமும் இருந்தது. அதற்கு விடையாக ‘இருமுகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ‘சாமி 2’ படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் ஹரி. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கில்தான் ஓடி, ஓடி வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார் ஹரி.

ரஞ்சித்:


‘கபாலி’ பட வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினியோடு ஸ்டைலா, கெத்தா காலாவில் கைகோத்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். மும்பை மற்றும் சென்னையில் படு வேகமாக நடந்த படப்பிடிப்பு, தற்போது முடிவடைந்து எடிட்டிங் பணியில் இருக்கிறது. ‘2.0’ படத்தின் ரிலீஸுக்குப் பிறகு இந்தப் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். ‘கபாலி’யைப் போல் ‘காலா’வையும் ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் கொடுக்க வேண்டும் என வேலை செய்துவருகிறார் பா.ரஞ்சித்.

சிவா:


‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களுக்குப் பிறகு அஜித்தை வைத்து நான்காவதாக ‘விசுவாசம்’ படத்தை இயக்கவுள்ளார் சிவா. ‘விவேகம்’ படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றதால் இந்தப் படத்தை ஹிட்டாக்க வேண்டும் என ஃப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார் சிவா.

சுந்தர் சி:


ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா, சிவா மற்றும் பல நட்சத்திரங்களை வைத்து சுந்தர்.சி இயக்கியிருக்கும் ‘கலகலப்பு -2’, இந்த மாதம் வெளியாகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘சங்கமித்ரா’ பட வேலைகளைக் கையில் எடுக்கவுள்ளார் சுந்தர்.சி.

லிங்குசாமி:


விஷால், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நடிப்பில் ‘சண்டகோழி - 2’ படத்தை இயக்கிவருகிறார் லிங்குசாமி. பரபரப்பாகப் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், இந்த வருடம் படத்தை வெளியிடும் எண்ணத்தில் இருக்கிறார் விஷால். விஷாலின் நடிப்பில் ‘இரும்புத்திரை’ ரிலீஸுக்கு ரெடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்புராஜ்:


பிரபுதேவா நடிப்பில் வசனங்களே இல்லாமல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் ‘மெர்குரி’. இந்தப் படத்தில் சனத், தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இந்த வருடம் தனது அடுத்த படத்தின் அறிவிப்பையும் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.