அந்த விசயத்துல என்னை எத்தனை பேர் ஏமாத்திருக்காங்க தெரியுமா? வருத்தத்தில் புலம்பும் நடிகை கஸ்தூரி.!
பண விவகாரத்தில் தன்னை பலரும் ஏமாற்றியுள்ளதாக நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகை கஸ்தூரி சமூக வலைதளத்தில் எப்பொழுதும் மனதில்பட்டதை பேசிக்கொண்டு ஆக்டிவாக இருப்பவர். மேலும் அவர் டிவிட்டரில் சமூகம், சினிமா, அரசியல் சார்ந்த பல விசயங்களுக்கு எதிராகவும்,ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார்.
அதுமட்டுமின்றி அரசியலில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும் துணிச்சலாக கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்.அதனால் அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது உண்டு.
மேலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் அவர் பங்கேற்று தைரியமாக பேசி வருகிறார்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் காஞ்சிபுரம் சிலை மோசடி விவகாரம் குறித்து அரசு துறைகள் என்றாலே லஞ்சம், மோசடி திருட்டு என்பது வாடிக்கையாகி விட்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.
நான் வரி ஏய்ச்சதில்லை;என்னை பலர் காசு விஷயத்துல ஏய்ச்சிருக்காங்க ! பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுக்கிட்டதுதான் அதிகம் ! காட்டுறாங்களே, வெயிலு மழையில கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசில மூணு ரூபா சம்பளம், அதுபோல தான் !— Kasturi Shankar (@KasthuriShankar)
அதற்கு ரசிகர் ஒருவர் நீங்கள் நடித்து வாங்கிய ஊதியத்துக்கு உரிய வருமான வரி செலுத்தியிருக்கீங்களா?’ என அவரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு அவர் 'நான் வரி ஏய்ச்சதில்லை, என்னை பலர் காசு விஷயத்துல ஏய்ச்சிருக்காங்க! பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுக்கிட்டதுதான் அதிகம்! ’தமிழ்படம் 2’வில் காட்டுவது போல் மழையில் கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசியில மூணு ரூபா சம்பளம், அது போல தான்!' என பதிலளித்துள்ளார் .
இதையடுத்து ரசிகர்கள் பலரும் , அவருக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக