ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

ராய் லட்சுமியை இயக்கும் எஸ்.ஜே. சூர்யாவின் உதவியாளர்!

ராய் லட்சுமியை இயக்கும் எஸ்.ஜே. சூர்யாவின் உதவியாளர்!

ராய் லட்சுமி அடுத்ததாக சிண்ட்ரலா திரைப்படட்தில் நடிக்கிறார்.
ஹாலிவுட்டின் மிகப்புகழ்பெற்ற கற்பனை கதாப்பாத்திரம் சிண்ட்ரலா. இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க சரியான நடிகை தமிழில் யார் உள்ளார்கள் என யோசித்தால் அந்த அழகிய கதாப்பாத்திரத்திற்கு சிலர் மனதில் தோன்றலாம்.
ஆனால், அந்த யோசனையை ஓரமாக வைத்துவிட்டு நீங்கள் ராய் லட்சுமியை சிண்ட்ரலாவாக நினைத்துக்கொள்ளுங்கள் எனக் கூறுகிறார் இயக்குனர் வினோ வெங்கடேஷ்.

இசை திரைப்படதில் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர், இப்போது ஹாரர், த்ரில்லர், ம்யூசிகல், ஃபேண்டசி என எல்லா வகைகளையும் ஒன்றினைத்து சிண்ட்ரலா என்ற திரைப்படத்தை இயக்குகிறார்.
இதில் நடிகை, ராய் லட்சுமி நகர்புற கிதார் கலைஞியாக நடிக்கிறார்.
ராய் லட்சுமிக்கு யாரும் ஜோடி இல்லையாம். படத்தின் கதை சென்னை நகரிலும் ஒரு காட்டுக்குள்ளும் நடப்பதாக திட்டமிட்டுள்ளனராம். அதனால் சென்னை, ஊட்டி மற்றும் வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

த்ரிஷா, ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், நயன்தாரா, மனிஷா யாதவ் ஆகியோரிடம் இயக்குனர் கதை சொல்லி சில காரணங்களால் அவர்கள் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். இறுதியாக ராய் லட்சுமியை சிண்ட்ரலாவாக்க முடிவு செய்துவிட்டார்.
மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக