வியாழன், 7 நவம்பர், 2019

பிக்பாஸ்' கமல்ஹாசனைத் தெரியும்... 70'களில் இருந்த கமல்ஹாசன் எப்படிப்பட்டவர் தெரியுமா?!


பிக்பாஸ்' கமல்ஹாசனைத் தெரியும்... 70'களில் இருந்த கமல்ஹாசன் எப்படிப்பட்டவர் தெரியுமா?!  #Nostalgia
 

#கமல்ஹாசன்
இந்தத் தலைமுறைக்கு கமல்ஹாசன் எப்படி அறிமுகமாகிறார் என்பதே என்னைப்போன்ற கமல்ஹாசன் ரசிகர்களுக்கு ஷாக்கிங்காக இருக்கிறது. ஒரு அப்பா தன்னுடைய மகனுக்கு, ``பிக்பாஸ்ல வருவார்ல அவர்தான் கமல்ஹாசன்'' என அறிமுகப்படுத்துவதைப் பார்த்தபோது கொஞ்சம் திகைப்பாகத்தான் இருந்தது.

உலக நாயகனாக நடிப்பின் உச்சத்தில் இருக்கும் இந்த கமல்ஹாசனை எவ்வளவு பிடிக்குமோ அதே அளவுக்கு 70-களில் இருந்த கமல்ஹாசனை எனக்கு ரொம்பவே பிடிக்கும். 1980-கள், தொண்ணூறுகள், இரண்டாயிரத்திலெல்லாம், அவரின் படைப்புகள் தொடர்ந்து மெருகேறிக்கொண்டே வந்திருக்கின்றன. ஆனால், என்னை இன்றும் வசீகரிப்பது என்னவோ, அந்த எழுபதுகளின் கமல்தான்.


70-களின் கமலுக்கு அதிகபட்ச வயதே 25 தான். ஆனால், அந்த வயதில் கமல் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட அனுபவங்கள்தான் அவரை இன்றுவரை செலுத்திக்கொண்டே இருக்கிறது.

கமல் கதாநாயகனாக அடியெடுத்து வைத்தபோது, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் இருவருமே தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களாக இருந்தார்கள். எம்.ஜி.ஆர் 1972-ல் அ.தி.மு.க-வை தொடங்கிவிட்டதால், குறைவான படங்களிலேயே நடித்துக்கொண்டிருந்தார். சிவாஜி, ஆண்டுக்கு ஐந்து முதல் ஏழு படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். ஜெமினி கணேசன், தன் நாயகத்தன்மையை இழந்திருந்தார். ரவிச்சந்திரன், முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார் என இரண்டாம் வரிசை நாயகர்களின் படங்கள்தான் அப்போது வெளியாகிக்கொண்டிருந்தன.


அந்தச் சமயத்தில்தான், புதுப்புனலென பொங்கிப் பிரவாகமெடுத்தார் கமல்ஹாசன். அவ்வளவு இளமையான நாயகன், தனித்தன்மையான நடிப்புத்திறனுடன்கூடியவர் தமிழ்சினிமாவுக்கே புதிது. அதற்கு முன் நாயகர்களாக வந்தவர்கள் எல்லாம் நாடகப் பின்புலத்திலிருந்து வந்தவர்கள். நன்கு நடனம் ஆடக்கூடிய, சிறப்பாக முக பாவங்களை வெளிப்படுத்தக்கூடிய நாயகனாக அப்போதைய இயக்குநர்களுக்குக் கிடைத்தார் கமல்ஹாசன்.


70-களின் முற்பகுதி வரை தமிழ் சினிமாவின் கதைக்களம் பெரும்பாலும் புராணக் கதைகள், காதல் கதைகள். குடும்பச் சிக்கல் கதைகள், பழிவாங்கும் ஆக்‌ஷன் கதைகள் என்றே இருந்தன. மகேந்திரன், பாரதிராஜா, பாலுமகேந்திரா போன்றோரின் வருகைக்குப் பின்னரே அவரவர் வாழ்வியல் அனுபவங்களைப் பிரதிபலிக்கும் கதைகள் தமிழ்த்திரையில் உருவாகத் தொடங்கின. இந்த நேரத்தில், கமல்ஹாசன் மலையாளத் திரைத்துறையிலும் குறிப்பிடத்தக்க நட்சத்திரமாக மாறத் தொடங்கினார்.

தமிழ்சினிமாவில் வர்த்தக ரீதியாக கமலின் படங்கள் வெற்றி பெற்றாலும், அவருக்கு அது திருப்தி அளிக்கவில்லை. அப்போது இருந்த நாயகப் பஞ்சத்துக்கும், கமர்ஷியல் இயக்குநர், தயாரிப்பாளர்களின் பழக்கத்துக்கும் அவர் தொடர்ந்து வணிக ரீதியான படங்களிலேயே இயங்கியிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. அவருக்குள் இருந்த தேடல் அவரை அதிலிருந்து அவரை வெளியே வரத் தூண்டியது.

அப்போதைய மலையாளத் திரையுலகத்தை உன்னிப்பாகக் கவனித்தார் கமல். தகழி சிவசங்கரன் பிள்ளை, எம்.டி. வாசுதேவன் நாயர் அவர்களின் நாவல்கள் திரைப்படமாவதைக் கண்டார். இங்கும் அதுபோன்ற மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தார்.

எனவே, மகேந்திரன், ஆர்.சி.சக்தி, ருத்ரய்யா போன்றோரின் படங்களுக்கு ஆதரவளித்தார். சுஜாதாவின் `கரையெல்லாம் செண்பகப்பூ', புஷ்பா தங்கதுரையின் `ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது', உமா சந்திரனின் `முள்ளும் மலரும்' என நாவல்கள் திரைப்படமாவதை ஆதரித்தார். அதுவே, புது கதைக்களங்கள் உருவாகும் வழி என்று அறிந்திருந்தார். அதனால்தான், ரா.கி. ரங்கராஜன் போன்றோரைக்கூட உங்களுக்கான களம் இப்போது திறந்திருக்கிறது, ஆட வாருங்கள் என்று அழைத்தார். ஆனால் அவரோ, 15 ஆண்டுகள் கழித்து `மகாநதி'க்குத்தான் வந்தார்.

கமலின் ஆழ்வார்பேட்டை வீடு, உதவி இயக்குநர்கள், கதாசிரியர்கள் விவாதிக்கும் இடமாக அப்போது இருந்தது. பெரிய தயாரிப்பு நிறுவனங்களின் கதை இலாகா போல வழக்கமான கதைகளை எப்படி மீண்டும் சுவாரஸ்யமாகக் கொடுப்பது என்று யோசிக்காமல், நாவல்களை எப்படி திரைக்கதையாக மாற்றுவது என விவாதிக்கும் இடமாக அது இருந்தது. தன் நடிப்புக்குத் தீனி போடும் வேடங்கள் உருவாக, வலுவான கதாசிரியர்கள் தமிழ்த்திரையில் வேண்டுமென்பது கமலின் எண்ணமாக இருந்தது.

இத்தனை யோசனை, இத்தனை முன்னேற்பாடுகள், அவற்றை சாத்தியமாக்கியது எல்லாம் அவரின் 25 வயதுக்குள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் நல்ல திரைப்படங்களைக் கொடுத்த நடிகராக அவர் தன் 25 வயதிற்குள்ளேயே அறியப்பட்டிருந்தார்.


தனக்கான இரையை தானே தேடிக்கொள்ளும் சிங்கமாகவே அவர் அப்போது வலம் வந்தார். இத்தனைக்கும் அவர், ஏதும் யோசிக்காமலேயேஹ களம் கொடுக்க கே.பாலசந்தர் தயாராக இருந்தார். அவரின் உடலமைப்பு, முக லட்சணம் கண்டு, அவருக்கு வாய்ப்பளிக்க பல தயாரிப்பாளர்கள் இருந்தார்கள். தாங்கள் மனதில் நினைப்பதைத் திரையில் பிரதிபலிக்கக்கூடியவன் இவன்தான், இவனுக்காக கதை பண்ணலாம் என்று விருப்பம் கொண்ட பாரதிராஜா, பாலுமகேந்திரா இருந்தார்கள். மலையாள இயக்குநர்கள் காத்திருந்தார்கள். ஆனால், கமல்ஹாசன் எளிதாக இதில் நடித்துவிட்டுப்போகாமல், இத்தனையையும் மீறி புது கதைக்களங்கள் உருவாகத் தன்னையும் பலரையும் தயார்ப்படுத்திக்கொண்டிருந்தார்.

இப்போது, மூன்று நாள்கள் ஒரு படம் ஓடுவதற்கு, ஓராண்டு வரை முன்னோட்டம் கொடுக்கப்படுகிறது. நாயகன் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுவது தொடங்கி, முக்கிய ஆட்களை ஒப்பந்தம் செய்வது வரை விளம்பரப்படுத்தப்படுகிறது. பின்னர் டீஸர், சிங்கிள், இசை வெளியீட்டு விழா, டிரெய்லர் எனத் தொடர்ந்து இப்படி ஒரு படம் வரப்போகிறது என விளம்பரம் வந்து கொண்டே இருக்கின்றன. பெரும்பாலான ரசிகர்கள் அந்தப் படத்தின் தகவல்களுடன் தயாராக இருக்கிறார்கள். எல்லாம் படம் வெளியான மூன்றே நாள்கள்தான். பின்னர் அப்படம், அதுபற்றி எந்தவித ஆக்கபூர்வமான விவாதங்களையும் ஏற்படுத்தாமல் மறைந்து விடுகிறது.


ஆனால் எழுபதுகளில், ஒரு படம் வெளியாகும்போது வரும் விளம்பர சுவரொட்டி மூலமே அப்படி ஒரு படம் வருகிறது என்பதே பெரும்பாலானோர்க்குத் தெரியவரும். அப்படி வெளியான படங்களே இன்றுவரை பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

`'16 வயதினிலே', `சிகப்பு ரோஜாக்கள்', `மரோசரித்ரா', `அவள் அப்படித்தான்', `கோகிலா', `மன்மத லீலை' என 40 ஆண்டுகள் கழித்தும் பேசப்படும் பல படங்களை அவர், 70-களில் கொடுத்திருக்கிறார்.

கமலின் எண்பதுகளின் படங்கள், தொண்ணூறுகளின் படங்கள், 2000-ங்களின் படங்களோடு ஒப்பிட்டால், கமலின் 70-கள் சாதாரணமாகத் தெரியக்கூடும். ஆனால், அவருக்குள் ஒரு தேடலை விதைத்தது அந்த 70-கள்தான். அடுத்த 40 ஆண்டுகள் வெற்றிகரமாக இயங்குவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்ததும் 70-கள்தான்.

உலக நாயகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
Thanks Vikatan
#kamalhasan #kamal #HBDKAMAL #Hbd_kamal 

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

அப்பா – மகள் பாசம் சொல்லும் 5 தமிழ் படங்கள் (5 Tamil Movies about Father – Daughter Relationship)


அப்பா – மகள் பாசம் சொல்லும் 5 தமிழ் படங்கள் (5 Tamil Movies about Father – Daughter Relationship)

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் மகள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. உலக அளவில் 28-ம் தேதியும் இது கொண்டாடப்படுகிறது. பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் நேற்று மகள்கள் தினமாகும். இந்த ஆண்டு மட்டும் செப்டம்பர் மாதத்தில் 5 ஞாயிற்றுக் கிழமைகள் வருகின்றன. அதனால் 4-வது ஞாயிற்றுக் கிழமையைக் கணக்கில் கொண்டு மகள்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

திரைப்படங்கள்!

அப்பா – மகள் என்றாலே அதீத பாசம்தானே! ஊரே பேசும் இந்தப் பாசத்தை, திரைப்படங்கள் பேசாதா?! பேசியிருக்கின்றன, சில படங்கள் மக்கள் மனதை வென்றுள்ளது, சில படங்கள் வசூல் சாதனைகளையும் செய்துள்ளது

தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்கள் அம்மா – மகன் பாசத்தை சொல்லும் படங்களாகவே அமைந்திருக்கின்றன. ஆனால் வெகு சில படங்கள் மட்டுமே தகப்பன் – மகள் இடையிலான பாசப்பிணைப்பை படமாக்கியுள்ளன. அதிலும் சமீபத்தில் ‘தல’ அஜித்குமார் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் அப்பாக்கள் – மகள்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதேபோல ஒரு சில படங்கள் மட்டும் காலத்திற்கும் நின்றுபேசும் அளவிற்கு இருக்கின்றன.

அப்பா – மகள் பாசம் சொல்லும் 5 தமிழ் படங்கள் (5 Tamil Movies about Father – Daughter Relationship)
அப்பா – மகள் பாசம் சொல்லும் அற்புதமான திரைப்படங்களுள் 5-ஐ மட்டும் இங்கே வரிசைப் படுத்தியிருக்கிறோம். இந்த தரவரிசையானது அதிகம்பேர் பார்த்த, அனைவருக்கும் பிடித்த, சமீபத்திய திரைப்படங்களை மட்டுமே உள்ளடக்கியது. ஏதாவது படங்கள் அல்லது குறிப்பிட்ட அம்சங்கள் விடுபட்டிருந்தாலோ, பின்வரும் படங்களில் உங்களுக்கு பிடித்தவற்றையோ கமெண்டில் சொல்லுங்கள்.


5) தெறி (Theri)
ஒரு காவல்துறை உயரதிகாரி, தனது மகளை எதிரிகளிடமிருந்து காப்பதற்காகவும், மகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டும், தனது பெயரை மாற்றி வேறொரு இடத்தில் வாழ்ந்துவருவார். இப்படத்தில் ‘தளபதி’ விஜயின் மகளாக, நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருப்பார். நைனிகா மற்றும் விஜயுடனான காட்சிகள் அனைத்தும், ஒரு தந்தை மகளின் பாசத்தை அப்படியே படமாக்கியிருப்பார் இயக்குனர் அட்லீ!

ஈனா மீனா டீக்கா என்றொரு பாடல் இடம்பெறும், இப்பாடல் பெரும்பாலும் அனைவராலும் விரும்பப்பட்ட ஒரு பாடல். காட்சியாக்கப்பட்ட விதமும், விஜயின் நடன அமைப்புகளும் மிக அழகாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்பட்ட பாடலாக இது அமைந்தது.

அழகான கதையில், அப்பா-மகள் பாசமென, நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட இப்படத்தை குழந்தைகள், ரசிகர்கள் குடும்பமாக கொண்டாடினர். இதுவொரு நல்ல வெற்றிப்படமும் கூட.


4) தங்க மீன்கள் (Thanga Meengal)
மிடில் கிளாஸ் தந்தையாக இயக்குனர் ராமும், தனது ஆசைகள் நிறைவேறாத சராசரி பெண் குழந்தையாக சாதனாவும் பிரித்து மேய்ந்திருப்பார்கள். இந்த திரைப்படம் மிடில்கிளாஸ் அப்பா-மகள் பாசப்போராட்டங்களை மிக அழகாக எடுத்துச் சொல்லும். படத்தின் பல காட்சிகள் பார்ப்பவர் கண்களை குளமாக்கிவிடும்.

மிகவும் உணர்வுப்பூர்வமான, உருக்கமான கதையை எளிமையாக படமாக்கியிருப்பார், ராம்! யுவான்ஷாங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் கொள்ளையழகு. அதிலும் ஆனந்த யாழை மீட்டுகிறாள் என்ற பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இப்பாடல், அவ்வளவு அழகான மற்றும் உருக்கமான பாடல். இப்படத்தின் எல்லாப் பாடல்களுமே மிக அருமையாக இருக்கும்.

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும், முத்தம் காமத்தில் சேராதென்று! என்றொரு வரி ‘தங்க மீன்கள்’ படத்தில் இடம்பெற்றிருக்கும். மிகவும் உண்மையான மற்றும் உருக்கமான வரியிது. பெரும்பாலான தந்தைகளால் இதை உணரமுடிந்திருக்கும்.


3) தெய்வத்திருமகள்! (Deiva Thirumagal)
மனவளர்ச்சி குறைந்த விக்ரமின் மனைவி, குழந்தை பிறந்தவுடன் இறந்துபோக, அந்தக் குழந்தையை விக்ரமே வளர்க்கிறார். இதைத் தெரிந்துகொண்ட அவரது மனைவியின் குடும்பத்தினர் அவரிடமிருந்து குழந்தையைப் பிரித்துச் செல்கின்றனர். அதன் பின், நீதிமன்றம் மூலம் போராடி, விக்ரம் குழந்தையை மீட்பார் என்பதாகப் படம் முடியும்.

மனவளர்ச்சி குறைந்த நிலையிலும் குழந்தைக்காக போராடும் காட்சிகளிலும், என்னசெய்வதென்று தெரியாமல் தடுமாறும் காட்சிகளிலும், படம் பார்ப்பவர் கண்களை வியர்க்கவைத்துவிடுவார் விக்ரம். குறிப்பாக, கிளைமேக்ஸ் கோர்ட் காட்சிகளை கண்கள் கலங்காமல் பார்க்கவே முடியாது. குழந்தை நிலா கேரக்டரில் ‘பேபி’ சாரா மிக அழகாக நடித்திருப்பார். பெண் குழந்தை இந்த அப்பாவுக்கு தாயாகவே இருக்கும். ஒவ்வொரு காட்சியமைப்பும் மிக நேர்த்தியாக இருக்கும். மிக அற்புதமான காட்சிகளால் அனைவரையும் ஈர்த்திருப்பார் இயக்குனர். பாடல்கள் அனைத்தும் பிரமாதம். குறிப்பாக கத சொல்லப்போறேன் பாடல், குட்டீசை மிகவும் ஈர்த்தவொன்று. மற்றொரு பாடலை ‘சீயான்’ விக்ரமே பாடியிருப்பார்.

2) அபியும் நானும்! (Abhiyum Naanum)
அபியும் நானும் 2008-ல் வெளியான தமிழ்த் திரைப்படம். ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் திரிஷா, பிரகாஷ் ராஜ் மகளாக முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். சிறப்புத் தோற்றதில் பிரித்திவிராஜ் நடித்திருப்பார். தந்தை மகள் இருவருக்குமிடையிலான பாசப்பிணைப்பிணை கதைக்கருவாகக் கொண்டதுதான் இத்திரைப்படமே!


                         abhiyum naanum movie

குழந்தையிலிருந்து பாசமாக வளர்த்த மகள், வேறொருவரைக் காதலிப்பதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், மகளிடம் எதிர்ப்பும் தெரிவிக்காமல், அன்பான அப்பாவாக பிரகாஷ் ராஜ் அசத்தியிருப்பார். திரிஷாவும் போட்டிபோட்டுக்கொண்டு கலக்கியிருப்பார். நல்ல காமெடிக் காட்சிகளும், மனதை நெகிழவைக்கும் செண்டிமெண்ட் காட்சிகளும் இப்படத்தில் நிறையவே இருக்கும்.

மனதை வருடும் பாடல்கள் தான் இப்படத்தின் மிகப்பெரிய சிறப்பே. ‘வா வா என் தேவதையே’ என்ற பாடலும், படமாக்கப்பட்ட விதமும் அனைத்து வயது அப்பாக்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாகவே இருக்குமென்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது. அனைத்து தரப்பினருக்குமான இப்படம் நல்ல வியாபார வெற்றியையும் பெற்றது. ஜூன் 16-ஆம் தேதி அப்பாக்கள் தினமென்பதால், இப்படத்தை மீண்டுமொருமுறை பார்க்கலாம்.

viswasam movie thala nayan

1) விஸ்வாசம்!(Viswasam)

விஸ்வாசம் படத்தை பார்த்தவர்கள் அழாமல் இருந்திருக்க மாட்டார்கள் அல்லது யாரும் பார்க்காமல் இருந்திருக்க மாட்டார்கள். என்ற அளவில் பெரும்பாலான அனைவராலும் விரும்பப்பட்ட திரைப்படமிது! திடமாக இருந்து, எதற்கும் அழாத பல அப்பாக்களையே, விஸ்வாசம் திரைப்படம் விழுந்து விழுந்து, கதறி கதறி அழவைத்தது. அப்பா-மகள் பாசத்தை திடமாக உணரவைத்தது.

காதலித்துத் திருமணம் செய்த மனைவி(நயன்தாரா), சில சூழ்நிலைக்காரணங்களால் பிரிந்துவிட, உடைந்துபோகிறார் நாயகன்(‘தல’ அஜித்). பிரியும்போது தன்னுடனேயே குழந்தையையும் எடுத்துச்செல்கிறார் நாயகி. மனைவி, குழந்தையின் வளர்ச்சியை தூரத்திலிருந்தே பார்க்கிறார் தல. சொந்தங்களின் உந்துதலின் பேரில், மனைவி மற்றும் குழந்தைகளைத் தேடிச்செல்கிறார். அதேசமயம், தனது மகளின் உயிருக்கே ஆபத்திருப்பதை உணர்கிறார். இந்த ஆபத்துகளை முறியடித்து, எப்படி மனைவி மற்றும் குழந்தையுடன் ஒன்றுசேர்கிறார் என்பதே விஸ்வாசம்!

பாசக்கார அப்பாவாக ‘தல’ அஜித் மிரட்டியிருப்பார். கெத்தான அம்மாவாக நயன்தாராவும் தன் பங்கிற்கு பட்டையைக் கிளப்பியிருப்பார். ‘கண்ணான கண்ணே’ பாடலை கண்களில் ஒற்றிக்கொள்ளலாம். இன்றளவிலும் நிறைய அப்பாக்களின் காலர் டியூனாக இப்பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. யூடியூப்பில் ரெக்கார்டுகள் செய்கிறது.

குடும்பம் குடும்பமாக, கூட்டம் கூட்டமாக அலைகடலென திரையரங்குகளில் குவிந்தனர் மக்கள். மாபெரும் வெற்றிபெற்று, வசூல் சாதனைகளை நிகழ்த்தி, மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றது! இந்த நேரத்தில் அப்பா-மகள்கள் சார்பாக, இப்படியொரு சிறப்பான படத்தை இயக்கிய சிவா அவர்களுக்கும், இதில் நடித்த ‘தல’ அஜித் உள்ளிட்ட நடிகர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஜூன் 16 – அப்பாக்கள் தினம்

அப்பாக்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். தனது குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் அயராது உழைப்பவர். ஜூன் 16-ஆம் தேதி அப்பாக்கள் தினம், அதுவும் ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. குடும்பமாக சேர்ந்து அசத்தலாம் தானே?! நேரம் கிடைத்தால் இந்த நாளில், மேற்சொன்ன படங்களை பார்க்க முயற்சி செய்யுங்கள். அப்பாக்களை கொண்டாடுங்கள்.
Thanks BabyDestination.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

மகள்களைப் பெற்ற அன்பு அப்பாக்களுக்கு பாடல்களின் சமர்ப்பணம்- உலக மகள்கள் தினம் இன்று!


மகள்களைப் பெற்ற அன்பு அப்பாக்களுக்கு பாடல்களின் சமர்ப்பணம்- உலக மகள்கள் தினம் இன்று!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் மகள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. உலக அளவில் 28-ம் தேதியும் இது கொண்டாடப்படுகிறது. பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் நேற்று மகள்கள் தினமாகும். இந்த ஆண்டு மட்டும் செப்டம்பர் மாதத்தில் 5 ஞாயிற்றுக் கிழமைகள் வருகின்றன. அதனால் 4-வது ஞாயிற்றுக் கிழமையைக் கணக்கில் கொண்டு மகள்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

மகள்கள்.... எப்போதுமே ஆண் குழந்தைகளை விட அப்பாக்களுக்கு பிடித்தது பெண் குழந்தைகள்தான்... அதிலும், அம்மா திட்டினாலும் பெண் குழந்தைகளை அப்பாக்கள் எப்போதுமே விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள்.

மகள்களும் அப்படித்தான் பிறப்பது ஓரிடம்... திருமணத்திற்குப் பின்னர் மிச்ச வாழ்க்கை மற்றொரிடம் என்று இருந்தாலும் இரண்டு குடும்பங்களையும் ஒரு சேர நேசிக்கும் மனம் படைத்தவர்கள் பெண்கள்.

அப்படிப்பட்ட மகள்களை கொண்டாடும் தினம்தான் இன்று... "உலக மகள்கள் தினம்"... பெண் குழந்தைகளின் பெருமையை எடுத்துரைக்கும் சில பாடல்கள் இங்கே உங்களுக்காக படித்து ரசிக்க...

 ஆனந்த யாழை மீட்டுகிறாயடி:

ஆனந்த யாழை மீட்டுகிறாயடி:
'மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று' என்று முத்தத்திற்கு அழகான அர்த்தம் சொன்னவர் இயக்குனர் ராம். அவருடைய 'தங்க மீன்கள்' திரைப்படம் அப்பாவிற்கும், மகளுக்குமான ஆத்மார்த்தமான அன்பின் வெளிப்பாடாக அனைவரையும் கரைய வைத்தது. 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' என்ற அப்படத்தின் பாடல் மகள்களை நேசிக்கும் பல அப்பாக்களின் செல்போன் ரிங்க்டோன் இன்றும் என்று சொன்னால் மிகையாகது.

 ஆரிரோ ஆராரிரரோ இது தந்தையின் தாலாட்டு:
ஆரிரோ ஆராரிரரோ இது தந்தையின் தாலாட்டு:
'தெய்வத்திருமகள்' விக்ரமிற்கு எத்தனையோ படங்கள் பெருமையைத் தேடிக் கொடுத்திருந்தாலும் அவரை முழுமையான நடிகராக உணர வைத்த படம்.. மனநிலை குன்றிய பாசமான தந்தைக்கும், வெண்ணிலா போலவே ஜொலிக்கும் அழகான குழந்தையான 'நிலா' என்ற மகளுக்கும் இடையேயான பாசப்பிணைப்பினை எடுத்துக் காட்டிய படம்... இந்தப் படத்தில் பாடல்களை விட அவர்களுக்கு இடையேயான பாசம் இழையோடும் போது வெளிப்படும் பின்னணி இசையே அனைவரையும் கவர்ந்திழுத்தது.


 உனக்கென்ன வேணும் சொல்லு என் மகளே:

உனக்கென்ன வேணும் சொல்லு என் மகளே:
அனோஷ்கா என்ற பெண் குழந்தையின் அப்பாவான நடிகர் அஜித், திரையிலும் அன்பான அப்பாவாக ஜொலித்த திரைப்படம் 'என்னை அறிந்தால்'. அந்தப் படத்தில் சொந்த மகளாக இல்லாவிட்டாலும் அவ்வளவு அன்பான பாசத்தினைப் பொழியும் அப்பாவாக அவர் வாழ்ந்திருப்பார். 'உனக்கென்ன வேணும் சொல்லு' எல்லா மகள்களின் காதுகளிலும் ரீங்காரமாக ஒலிக்கும் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

 பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா:
பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா:
பிரகாஷ் ராஜூம், திரிஷாவும் உண்மையிலேயே ஒரு அப்பா, மகள் இருந்தால் எப்படி நண்பர்கள் போல் இருக்க வேண்டும் என்பதைச் சொன்ன ஆழமான திரைப்படம் 'அபியும் நானும்'... மகளுக்காக இரவெல்லாம் படிக்கும் தந்தை, காதலித்தவனையே மனம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் மகளுக்காக ஏற்றுக் கொள்ளும் பாத்திரத்தினை சரிவர செய்திருப்பார் பிரகாஷ்ராஜ். 'வா வா என் தேவதையே' என்ற பாடல் பெண் குழந்தையின் வளர்ச்சியையும் அதைக் கண்டு அப்பாவின் பூரிப்பையும் ஒரு சேர பதிவு செய்திருக்கும்..

 அன்பு மகள்களுக்கான தினம்:

அன்பு மகள்களுக்கான தினம்:
சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் முக்கால்வாசி அப்பா-மகள் பாசம் இதைவிட 1000 மடங்கு மேல்தான்... எல்லா மகள்களுக்கும், மகள்களைப் பெற்ற தந்தைகளுக்கும் இனிய மகள்கள் தின வாழ்த்துக்கள்....
Thanks one India.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

சனி, 3 ஆகஸ்ட், 2019

இருமுகன் இப்போ இருபத்தைந்து முகன் – கமலை முந்தும் விக்ரம்


இருமுகன் இப்போ இருபத்தைந்து முகன் – கமலை முந்தும் விக்ரம்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளங்களையும், கதாப்பாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பவர் விக்ரம். அப்படி அடுத்து இவர் நடிக்க இருக்கும் படத்தில் மிகப்பெரிய ஒரு சாதனையை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


விக்ரம் நடிப்பில் தற்போது “கடாரம் கொண்டான்” திரைப்படம் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த “துருவ நட்சத்திரம்” விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இமைக்கா நொடிகள் பட இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் தனது அடுத்த படத்தை நடிக்க இருக்கிறார் விக்ரம்.

இந்த திரைப்படத்தில் விக்ரம் 25 வகையான கதாப்பாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில் இதுவரை யாரும் ஒரே படத்தில் 25 கதாப்பாத்திரங்களில் நடித்தது கிடையாது. இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் உலகில் ஒரே படத்தில் அதிக கதாப்பாத்திரங்களில் நடித்த புதிய சாதனையை விக்ரம் செய்வார்.

தமிழ் சினிமாவில் முதன்முதலில் ஒரே படத்தில் அதிக கதாப்பாத்திரங்களில் நடித்த பெருமை சிவாஜிகணேசன் அவர்களையே சேரும். நவராத்திரி படத்தில் ஒன்பது கதாப்பாத்திரங்களாக நடித்ததன் மூலம் அவர் இந்த சாதனையை செய்தார். அதற்கு பிறகு தசாவதாரம் படத்தின் மூலம் கமல்ஹாசன் 10 அவதாரங்களை எடுத்து அந்த சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 30 ஜூலை, 2019

நட்பின் பெருமை சொல்லும் தமிழ் திரைப்படங்கள்


 நட்பின் பெருமை சொல்லும் தமிழ் திரைப்படங்கள்

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மா, அப்பா, அண்ணன் ,தங்கை போன்ற உறவுகளை தேர்வு செய்யும் உரிமை நமக்கு இல்லை. அது ஆண்டவன் நமக்கு இயற்கையாக கொடுத்த உறவுகள். ஆனால் 'நண்பன்' என்ற உறவுமுறை நாமே தேர்வு செய்யும் வகையில் அமைந்த உறவு. பெற்றோர்களிடம், உடன் பிறந்தவர்களிடம், உறவினர்களிடம் கூற முடியாத சில விஷயங்களை கூட நண்பர்களிடம் கலந்து ஆலோசிக்கலாம். உறவுகள் உபத்திரம் செய்த பல வரலாறு உண்டு. ஆனால் உண்மையான நண்பன் கைவிட்டதாக ஒருசிறு எடுத்துக்காட்டு கூட இருக்காது. அப்படியே இருந்தாலும் அதில் போலியான நட்புதான் இருந்திருக்கும்

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் நட்பை போற்றும் வகையில் கருப்பு வெள்ளை முதல் டிஜிட்டல் காலம் வரை பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. எம்ஜிஆர் சிவாஜி காலம் முதல் நட்பு நாயகன் என்று அழைக்கப்படும் சசிகுமார் வரை நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்கள் ஏராளம். அவற்றில் ஒருசிலவற்றை தற்போது பார்ப்போம்

கூண்டுக்கிளி எம்.ஜி.ஆர்-சிவாஜி நட்பு:
MGR-Sivaji
1954ஆம் ஆண்டு டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் எம்ஜிஆர்-சிவாஜி இணைந்து நடித்த ஒரே படம். இந்த படத்தில் எம்ஜிஆர், சிவாஜி இருவரும் நல்ல நண்பர்களாக இருப்பார்கள். பின்னர் சிவாஜி காதலித்த பெண்ணை எம்ஜிஆர் திருமணம் செய்து கொள்வார். அதனால் ஆத்திரப்படும் சிவாஜி, எம்ஜிஆரை ஒரு சூழ்நிலையில் சிறைக்கு செல்லும்படி செய்து, பின்னர் அவருடைய மனைவியை அடைய நினைப்பார். இந்த போராட்டத்தில் கடைசியில் எம்ஜிஆர் ஜெயில் இருந்து ரிலீஸ் ஆகி சிவாஜியிடம் இருந்து தனது மனைவியை காப்பாற்றுவார். முதலில் சில காட்சிகளில் நண்பர்களாக நடிக்கும்போது நிஜத்தில் நண்பர்களான எம்ஜிஆர்-சிவாஜி தங்களது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.

நினைத்தாலே இனிக்கும்: கமல்-ரஜினி:
Rajini-Kamal
கமல், ரஜினி இருவரும் இணைந்து நடித்த பல படங்களில் இதுவும் ஒன்று. கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஒரு இசைக்குழுவில் கமல், ரஜினி உள்பட ஐந்து பேர் நண்பர்களாக இருப்பார்கள். சிங்கப்பூருக்கு இசை நிகழ்ச்சிக்கு செல்லும் இந்த நண்பர்களின் ஜாலியான அரட்டை, கமலின் காதல், ரஜினியின் காமெடி என படம் முழுவதும் கலகலப்பாக சிரிக்க வைக்கும் படம். இன்று வரை சிறந்த நண்பர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் கமல்-ரஜினி இணைந்து நடித்த கடைசி தமிழ் படம் இதுதான்.

தளபதி, ரஜினி-மம்முட்டி:
Rajini-Mammooty
நட்பை கூட கற்பை போல எண்ணுவேன் என்ற வரிகள் தான் இந்த படத்தின் ஆணிவேர். துரியோதனன் - கர்ணன் நட்பை ஞாபகப்படுத்தும் அளவிற்கு ரஜினி-மம்முட்டி கேரக்டர்களை மணிரத்னம் உருவாக்கியிருப்பார். தன்னை பெற்ற தாயே நண்பரிடம் இருந்து பிரிந்து வந்துவிடு என்று அழைத்தும் நட்புக்காக உயிரையே கொடுக்க துணியும் கேரக்டரான சூர்யா என்ற கேரக்டரில் ரஜினி நடித்திருப்பார். மம்முட்டியும் தேவா என்ற கேரக்டரில் நட்பின் பெருமையை உணர்த்துவதோடு, இறுதியில் நண்பனுக்காக உயிரையும் கொடுப்பார்

புது வசந்தம்: ஆண்-பெண் தூய்மையான நட்பு:
Pudhu Vasantham
விக்ரமன் இயக்கத்தில் முரளி, ஆனந்த்பாபு, சித்தாரா உள்பட பலர் நடித்த இந்த படம் நட்பின் பெருமையை மிக ஆழமாக உணர்த்திய படம். ஆண்களுடன் ஒரு பெண் சாதாரண நட்பாக பழக முடியாது, அதில் காதல் கலந்துவிடும் என்று உறுதியாக நம்பப்பட்ட 90களில், அதை உடைக்கும் வகையில் வெளிவந்து வெற்றி பெற்ற படம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் சித்தாரா பேசும் வசனங்களுக்கு கிடைத்த கைதட்டலே இதற்கு சான்று

ஃப்ரெண்ட்ஸ்: விஜய்-சூர்யா:
Friends
நேருக்கு நேர்' படத்திற்கு பின் மீண்டும் விஜய், சூர்யா இணைந்து நடித்த இந்த படத்தில் இருவரும் உயிருக்குயிரான நண்பர்களாக நடித்திருப்பார்கள். தேவயானி கேரக்டரால் இருவரின் நட்பில் ஒரு சிறு விரிசல் ஏற்பட்டாலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் உண்மையான நட்பின் பெருமையை உணர வைக்கும் வகையில் இருவரது கேரக்டர்களும் அமைக்கப்பட்டிருக்கும்

சிநேகியே, ஜோதிகா-ஷர்பானி முகர்ஜி:
Snehithiye
பொதுவாக ஆண்கள் நட்பு அளவிற்கு பெண்களின் நட்பு நீடித்து இருக்காது என்று சொல்வார்கள். இந்த படத்தில் அப்படி ஒரு வசனமே தபு பேசுவது போல் இருக்கும். ஆனால் பெண்களுக்கு இடையிலும் ஆழ்ந்த நட்பு இருக்கும் என்பதை ஜோதிகா, ஷர்பானி முகர்ஜி கேரக்டர் மூலம் இயக்குனர் பிரியதர்ஷன் உணர்த்தியிருப்பார்.

சுப்பிரமணியபுரம், சசிகுமார்-ஜெய்:
Sasikumar-Jai
நட்பு திரைப்படம் என்றால் கூப்பிடு சசிகுமாரை என்ற நிலையை உருவாக்கிய படம்தான் இது. ஜாலியாக ஊரை சுற்றி கொண்டிருக்கும் நண்பர்களுக்கு சிலர் சூழ்ச்சியால் உருவாகும் சோதனைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள், பணத்துக்காக நண்பனையே காட்டி கொடுக்கும் கேரக்டர்கள் என படம் முழுவதும் நட்பின் அடிப்படையிலேயே இந்த படம் அமைந்திருக்கும்

நண்பன், விஜய்-ஜீவா:
Nanban
ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த இந்த படமும் நட்பின் பெருமையை உணர்த்திய படங்களில் ஒன்று. இப்படி ஒரு நண்பன் நமக்கு இல்லையே என்று ஏங்க வைக்கும் அளவுக்கு விஜய்யின் பாரிவேந்தன் கேரக்டர் இந்த படத்தில் அமைந்திருக்கும். நண்பர்களுக்கு உண்மையான தேவை என்பதை விளங்க வைக்கும் அளவுக்கு இந்த கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கும்.

கண்ணெதிரே தோன்றினாள், பிரசாந்த்-கரண்:
Prashanth-Karan
நண்பனுக்காக காதலையே விட்டுக்கொடுக்கும் ஒரு அற்புதமான கேரக்டரில் பிரசாந்த் நடித்திருப்பார். நண்பன் கரணின் தங்கை என்று தெரியாமல் சிம்ரனுடன் காதல் கொள்ளும் பிரசாந்த், அவர் நண்பனின் தங்கை என்று தெரிய வருவதும் ஏற்கனவே ஒரு நண்பரால்தான் தங்கையை இழந்த கரண், தன்னால் சிம்ரனையும் இழந்துவிட கூடாது என்று காதலை தியாகம் செய்ய துணியும் கேரக்டரை பிரசாந்த் அழகாக செய்திருப்பார். அதேபோல் நண்பனுக்காக கிளைமாக்ஸில் பரிந்து பேசும் சின்னிஜெயந்த் பேசும் உணர்ச்சிகரமான வசனமும் இந்த படத்தின் ஹைலைட்

பிதாமகன், விக்ரம்-சூர்யா:
Vikram-Suriya
மன நிலை பாதிக்கப்பட்ட விக்ரம் கேரக்டருக்கும் சின்ன சின்ன திருட்டுகள் செய்யும் சூர்யாவின் கேரக்டருக்கும் ஏற்பட்ட வித்தியாசமான நட்பை இயக்குனர் பாலா உணர்த்தியிருப்பார். விக்ரமுக்கு அதிக வசனங்கள் இல்லாமல் தேசிய விருதை பெற்று தந்த இந்த படத்தின் இறுதிக்காட்சியில் நண்பன் சூர்யாவின் மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்கும் கேரக்டரில் விக்ரம் மிக அபாரமாக நடித்திருப்பார்

இதேபோல் அண்ணாமலை, 'காதல் தேசம்', பிரியமான தோழி', '5 ஸ்டார்', 'பாஸ் என்கிற பாஸ்கரன், 'நாடோடிகள்', சென்னை 600028', 'சரோஜா' போன்ற பல படங்களில் நட்பின் பெருமையை ஜாலியாகவும் சீரியஸாகவும் சொல்லப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks-indiaglitz

செவ்வாய், 25 ஜூன், 2019

#HBD_MSV


ஒரு நாளைக்கு நூறு முறை காதில் பேசும் தெய்வம்..

தற்கொலை முடிவில் மகனை தள்ளிவிட்டு பின்னர் மாண்டுபோகலாம் என்று செயல்பட்ட தாயிடம், ‘’மொதல்ல குளத்துல நீ குதி.. ஒருவேளை என்னை தள்ளின பின்னாடி நீ குதிக்கலைன்னா?’’

– இப்படி கேட்டு உயிர்பிழைத்த சிறுவன்தான், கோடானு கோடி மக்களின் காதுகளில் இன்றைக்கும் அமிர்தமாக பாய்ந்துகொண்டிருக்கிறார்.

மளையாள மண்ணில் பிறந்த அவர்தான், இன் றைக்கு தமிழர்களி்d; நாட்டுப்பண்ணாக திகழும், நீராரும் கடலுடுத்த நிலமடந்தை என்று தொடங்கும் பாடலுக்கு இசையமைத்து உதடுகளில் இனிமையாக ஒலிக்கச் செய்தவர்..

இசை-எம்எஸ் விஸ்வநாதன் என்ற ஒற்றைவரியை புதுப்பட போஸ்டர்களில் பார்க்கும்போதே மனதில் அவ்வளவு குதூகலம் பிறக்கும்..

காரணம், எளிமையான மெல்லிசை..எம்எஸ்வி யின் பாடல்களை கேட்க மேதாவித்தனமெல்லாம் தேவையில்லை..

பாவமன்னிப்பு படத்தின் எல்லோரும் கொண்டாடு வோம் அல்லாவின் பேரை சொல்லி, பாடலை, ஒரு சாமான்யன்கூட சாப்பாட்டுத்தட்டை தட்டியபடியே நேர்த்தியாக இசையை கோர்த்துவிடமுடியும்..

இவ்வளவு வெகுஜன ஈர்ப்பு இசையில் இருந்ததற்கு காரணம், எம்எஸ்வி என்ற மனிதன் வாழ்வில், கடைசி உயர்மூச்சுவரை கூடவே இருந்த பாமரத்த னமும், கள்ளம் கபடமில்லா குழந்தைத்தனமும் தான்.

1930களில் சிறுவனாக இருந்தவருக்கு நடிப்பும் இசையுமே மிகப்பெரிய வாழ்க்கை லட்சியமாக துடித்துக்கொண்டிருந்தது. இதற்காக பல இடங்களில் எடுபிடி செய்யவும் அவர் தயங்கியதே இல்லை..

1940களில் சினிமாவில் தலைகாட்டும் வாய்ப்பு கிடைத்தாலும், அவையெல்லாம் மின்னல் வேகத் தில் கடக்கும் வேதனையான தோன்றல்களே..

ஏதோ ஒரு தருணத்தில், நடிப்பை பின்னுக்கு தள்ளி வைத்துவிட்டு ஆர்மோனியம் மூலம் இசையை உரசிப்பார்க்கும் எண்ணம் வந்துவிட்டது.

இன்றைக்கு ஆஸ்கார் விருது வென்ற ஏஆர் ரஹ் மான் எப்படி ஒரு காலத்தில் சின்ன சின்ன இசைக் குழுக்களில்லாம் வாசித்து தள்ளினாரோ, அதைப் போல் 1940களில் எம்எஸ்வி வாசிக்காத இசைக் குழுக்களும் இசையமைப்பாளர்களுமே கிடையாது.

எஸ்வி வெங்கட்ராமன். எஸ்எம் சுப்பையா நாயுடு, சிஆர் சுப்பாராமன் என ஒரு பட்டியலே உண்டு. எல்லாருக்குமே தெரிந்த ஒரு விஷயம், விஸ்வ நாதன் திறமையான பையன்..நிச்சயம் ஒரு நாள் அவன் கொடி தமிழ்சினிமாவில் பறக்கத்தான் போகிறது என்பது.

ஏனென்றால் உதவியாளர் என்ற முறையில் எம்எஸ்வி போட்ட டியூன்களில் பல தடவை ஜாம்பவான் இசையமைப்பாளர்களுக்கு பெரும் புகழையும் விளம்பரத்தையும் தேடித்தந்துள்ளது.

என்டிஆர் பானுமதி நடித்து 1953ல் வெளிவந்த சண்டிராணி படம் என்றைக்கும் பேசப்படும் என்றால், அதற்கு முக்கியமான விஷயம், அதில் இடம்பெற்ற ‘’வான் மீதிலே இன்பத்தேன் மாரி பெய்யுதே’’ என்ற பாடல். இசை குருநாதர் சிஆர் சுப்பாராமன் பெயரில் இருந்தாலும் டியூன் போட்டது விஸ்வநாதன்தான்.

இந்த பாடல் சாமான்யர்களை கவர்ந்தது பெரிய விஷயமல்ல.. பெரிய பெரிய இசையமைப்பார்களே சொக்கிப்போனார்கள் என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.

அதிலும் நம்ம இசைஞானி இளையராஜா, இந்த பாடலின் தீவிர அடிமை.. எம்எஸ்வியோடு பின்னா ளில் இணைந்து பணியாற்றிய மெல்லத் திறந்தது கதவு படத்தில் , வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே என்று பாடலுக்கு வேண்டிவிரும்பி மறுவடிவம் கொடுக்கவைத்தவர் இளையராஜா.

குருநாதர் சி.ஆர்.சுப்பராமனிடம் எம்எஸ்வி போட்ட சில டியூன்களின் மகிமை பின்னாளில் எப்போது தெரியவந்தது என்றால் குருநாதர் மறைந்து, அவரின் படங்களை எம்எஸ்வி முடித்துக்கொடுத்தபோது தான்..

தெலுங்கு ஜாம்பவான் நடிகர் நாகேஸ்வர்ராவ் வாழ்வில் எவரெஸ்ட் சிகரம்போல இன்றைக்கும் இருக்கும் தேவதாஸ் பாடல்களும் இப்படித்தான் எம்எஸ்வியால் காவியங்களாக வழங்கப்பட்டன.

எம்எஸ்வியின் திறமையை தெரிந்து அவருக்கு முதலில் வாய்ப்பளித்தவர் கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன்தான்.. நடிகர் திலகம் சிவாஜியின் இரண் டாவது படமான பணம் படத்தை என்எஸ்கே தயாரித்து இயக்கினார்.

இந்த படத்தில் விஸ்வநாதனையும் சிஆர் சுப்பரா மனிடம் வயலினிஸ்ட்டாக பணியாற்றிய டி.கே ராமமூர்த்தியையும் இணைத்து விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற இரட்டையரை உருவாக்கினர்.

இந்த நேரத்தில் ஜெனோவா படத்திற்கு இசைய மைக்க எம்எஸ்விக்கு வாய்ப்பு கிடைத்தது.. ஆனால் படத்தின் ஹீரோ ஏற்றுக்கொள்ளவில்லை. ஜூபிடர் பிக்ஸ்சர் சில் ஆபிஸ் பாயாக இருந்தவர் என் படத்துக்கு இசைய மைப்பதா என்று கேள்வி கேட்டார். அவர் வேறு யாருமல்ல சாட்சாத் எம்ஜிஆர்தான்.

இத்தனைக்கும் எம்எஸ்வியின் குருநாதர் சி.ஆர்.சுப்ப ராமனுக்கும் எம்ஜிஆருக்கும் இடையே ஒரு சிறிய வரலாறு உண்டு.

1947ல் எம்ஜிஆர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்தாலும் அதன்பின்னர் வெளி வந்த. ரத்னமாலா, பைத்தியக்காரன், அபிமன்யு, மோகினி ராஜமுக்தி, ரத்னகுமார் ஆகிய படங்களில் அவர் இரண்டாது ஹீரோதான். இவை அனைத்துக் குமே சிஆர் சுப்பராமன்தான் இசை.

இந்த காலகட்டங்களில்தான் எம்எஸ்வி என்ற இளை ஞர் எம்ஜிஆரின் பார்வையில் ஆபிஸ்பாயாக தெரிந்தி ருக்கிறார்.கடைசியில் ஜெனோவா படத்தில் அரை குறையாக எம்ஜிஆர் சம்மதிக்க விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைக்கின்றனர்.

இப்படி பணம்-ஜெனோவா என ஒரே நேரத்தில் இருபெரும் திலகங்களுடன் எம்எஸ்வியின் பயணம் ஆரம்பமானது..

1955ல் வெளியான எம்ஜிஆரின் படமான குலேபகா வலி, மாஸ் ஹிட்.. எம்எஸ்வி ராமமூர்த்தி போட்ட பாடல்கள் அத்தனையும் தியேட்டர்களுக்கு திரும்பத் திரும்ப வரவழைக்கிற ரகமாக அமைந்து போய்விட்டது..

1956ல் எம்கே.ராதா நடித்த பாசவலையும் விஸ்வ நாதன் ராமமூர்த்தி பாடல்களுக்காகவே தறிகெட்டு ஒடிய படம்.. அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை..’’ ‘’ உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் உலகத்துக்கெதுதான் சொந்தமடா’’ ‘’லொள்லொள் லொள்’’ என பத்து பாடல்கள்.

சிவாஜி நடித்த புதையல் படத்தின் ‘’விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’’ கண்ணதாசன் தயாரித்த மாலையிட்ட மங்கையின் ‘’ஆடை கட்டிவந்த நிலவோ’ போன்ற பாடல்கள் 1950களின் இறுதி கட்டத்தை விஸ்வநாதன் ராமமூர்த்தி வசம் ஒப்படைத்துக்கொண்டிருந்தன.

எம்எஸ்வி வாழ்க்கையில் வேகமான ஒட்டத்திற்கு நிரந்தரமாய் களம் அமைத்தவர் இயக்குநர் ஏ.பீம்சிங்… இவரது பதிபக்தி படத்தில் சிவாஜியும் ஜெமினியும் இணைய, இசைக்காக எம்எஸ்வியும் சேர்ந்தார்.

அதன்பிறகு பாகப்பிரிவினை, பாசமலர் பாலும் பழமும், பாவ மன்னிப்பு, பார் மகளே பார், பச்சை விளக்கு என படங்கள் வரிசையெடுத்தன..

தாழையாம் பூ முடிச்சி தடம் பார்த்து நடை நடந்து..

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்..

மலர்ந்தும் மலராத பாதி மலர்போல

காலங்களில் அவள் வசந்தம்.. என தமிழ் திரையுலகில் ராமமூர்த்தியோடு சேர்ந்து காலத்தால் அழிக்க முடியாத காவியங்களாய் கொடுத்தார் எம்எஸ்வி..

இன்னொரு பக்கம் எம்ஜிஆருடன் மன்னாதி மன்னனில், அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா என்று ஜெட் வேகத்தில் விறுவிறுவென மேலே ஏறியது..

பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா,

1970களில் இன்னும் அதகளம்..  பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பாடலெல்லாம்.. பக்கா லோக்கல் மாஸ்..

நினைத்தாலே இனிக்கும் பில்லா போன்ற படங்களெல்லாம் இளையராஜா என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள் இன்றும் நிறைய பேர்..
.

#HBD_MSV

பிக் பாஸ் தமிழ் 3வது சீசன் போட்டியாளர்களின் முழு விபரங்கள்


பிக் பாஸ் தமிழ் 3வது சீசன் போட்டியாளர்களின் முழு விபரங்கள்

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் 3வது சீசன் நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. பிக்பாஸில் பங்கேற்கும் போட்டியாளர்களின் முழு விபரங்களை இங்கு காண்போம்.

பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி விட்டது. நேற்று முதல் பிக்பாஸ் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. பிகபாஸ் 3 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள். இன்றைக்கு எபிஸோட் தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறது.

முதல் போட்டியாளராக உள்ளே நாம் சொன்னபடியே நடிகை செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு உள்ளே வந்துள்ளார்.கடந்த இரண்டு முறையும் பட்டிதொட்டியெங்கும் பரவிய பிக்பாஸ் இப்போது மூன்றாவது சீசனுகுள் நுழைந்திருக்கிறது. சூர்யா, நயந்தாரா, ஆகிய இருவரில் ஒருவர் தொகுத்து வழங்குவார்கள் என எதிர்பார்க்கபப்ட்ட நிலையில் கமலே இந்த சீசனையும் தொகுத்து வழங்க வருகிறார்.

பிக் பாஸ் தமிழ் 3வது சீசனில் செய்தி வாசிப்பாளர், நடிகை, நடிகர், மாடல் என பல்வேறு வித்தியாசமான துறைகள் மற்றும் குணாதிசயத்துடன் இருக்கும் நபர்கள் போட்டியாளராக பங்கேற்கின்றனர்.
இதனால் இதுவரை பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியை விட மேலும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


பாத்திமா பாபு

முதல் போட்டியாளர் பாத்திமா பாபு டீவியில் செய்தி வாசிப்பாளராக தன் வாழ்க்கையை தொடங்கியவர். பின் பால்சந்தர் மூலம் திரைப்படங்களில் அறிமுகமானார் கல்கி படம் தான் இவரது அறிமுகம். தொடர்ந்து நிறைய திரைப்படங்கள் நடித்தார். கமல்ஹாஸனுடன் ஆளவந்தான் திரைப்படத்தில் நடித்துள்ளார். தமிழ் உச்சரிப்புக்கு பெயர் போனவர். அதிமுக கட்சியில் இணைந்து கட்சிப்பணி ஆற்றியவர்.

பாத்திமா பாபுவை வித்யொயாசமான முறையில் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து கமல்ஹாசன் வரவேற்றார்.


லொஸ்லியா

இலங்கையைச் சேர்ந்தவர். அங்கு செய்தி வாசிப்பாளராக இருக்க கூடியவர். படிப்பை முடித்தவுடனே மீடியாவில் சேர்ந்தார்.

இவர் குடும்பம் இலங்கையின் போர்ச் சூழல்களில் சிக்கித் தவித்த குடும்பம். இவரது தந்தை வெளிநாட்டுக்கு சென்று சம்பாதித்தன் மூலம் இவர் குடுமபத்தை காப்பாற்ரியவர். தன் தந்தை மீது அதீத பாசம் கொண்டவர் லாஸ்லியா. இவர் இலங்கைத்தமிழ் உச்சரிப்பு அட்டகாசமாக இருக்கும். வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தமிழ் நாட்டு டீவி ஷோவில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை.


சாக்‌ஷி அகர்வால்

பிக்பாஸ் மூன்றாவது போட்டியாளர். இவர் சென்னைப் பெண். இவர் பெங்களுரில் மாடலாக பணியாற்றி பின் சினிமாவுக்குள் நுழைந்தார். கன்னட படமொன்றில் அறிமுகமான அவர் பின் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். கன்னடம், மலையாளம்,தமிழ் என மூன்று மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் பணியாற்றி வந்தார். நிறைய விளம்பர படங்களிலும் மாடலிங்கிலும் கலக்கி வந்தார். சென்னையில் செட்டிலான இவர் ரஜினியின் காலா திரைப்படத்தில் ரஜினி மருமகளாக நடித்து புகழ் பெற்றார். தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக அறிமுகாமாகியுள்ளார்.


மதுமிதா

பிகபாஸ் போட்டியாளராக களமிறங்கியுள்ள மதுமிதா தமிழ் சினிமா காமெடி நடிகை. ஒரு கல் ஒரு காண்ணாடி படத்தில் அறிமுகமாகி புகழ் பெற்றவர். சந்தானத்தின் சிபாரிசின் பேரில் தான் இவர் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை தொடர்ந்து பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமார படத்தில் இவர் நடிப்பு பேசப்பட்டது. இவரது ஸ்லாங் இவரை தனித்து தெரிய வைக்க கூடியது. தமிழ் சினிமாவில் திறமையான காமெடி நடிகைகள் இல்லை என்ற குறையை போக்கியவர். இப்போது பிக்பாஸில் களமிறங்கியுள்ளார்.


கவின்

டீவித்தொடர்களில் ஹிரோவாக நடித்து புகழ் பெற்றவர். விஜய் டீவித் தொடரான சரவணன் மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்து புகழ் பெற்றவர். சரவணனாக இவர் நடிப்பு கிராமங்களிலும் இவருக்கான ரசிகர்களை உருவாக்கியது. பெண் ரசிகைகள் இவருக்கு அதிகம். டீவித் தொடர்கள் மூலம் புகழ் பெற்ற பின் சினிமாவில் “நட்புண்ணா என்னன்னு தெரியுமா” படம் மூலம் ஹிரோவானார். இப்படம் மூன்று வருடங்கள் தயாரிப்பு பிரச்சனைகளில் சிக்கி மிகச் சமீபத்தில் ரிலீஸ் ஆனது.

“நட்புண்ணா என்னன்னு தெரியுமா” படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. நேற்று அவருக்கு பிறந்த நாள் பிறந்த நாளில் முதல் ஆண் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.


அபிராமி வெங்கடாச்சலம்

ஒரு மாடல், விளம்பரங்கள் மூலம் இந்தியா முழுதும் தெரிந்த முகமாக புகழ் பெற்றவர். தமிழில் களவு திரைப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக அறிமுகமானார். சினிமாவில் குறுகிய காலத்தில் நல்ல திரைப்படங்களில் வாய்ப்பு பெற்றவர்.

தல அஜித் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். தற்போது 6வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழந்துள்ளார்


சரவணன்

தமிழ் சினிமா 80களில் கதாநாயகன். அப்போதைய காலகட்டத்தில் கார்த்திக், பிரபு , ராமராஜனுடன் போட்டிபோட்ட கதாநாயகர்களில் ஒருத்தர் சரவணன். இடையில் பல காலமாக காணாமல் போயிருந்த அவர் இயக்குநர் பாலா இயக்கிய நந்தா திரைப்படத்தில் வில்லனாக ஒரு சிறு வேடத்தில் நடித்தார். பின் அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தில் கார்த்திக்கு மாமாவாக நடித்ததன் மூலம் பட்டிதொட்டிங்கும் பிரபலமானார். மீண்டும் சினிமாவில் பிஸியாகி பல படங்களில் கேரக்டர் ரோல்களில் வலம் வந்தார். தற்போது பிக்பாஸில் ஒரு போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.


வனிதா விஜயகுமார்

நடிகர் விஜய்குமார குடும்பத்து தகராறு பெண். மாணிக்கம் படத்தில் ராஜ்கிரன் ஜோடியாக ஹிரோயினாக அறிமுகமானவர். நடிப்பு வாய்ப்பு சரியாக அமையாததால் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலானவர்.
தொடர்ந்து இவரது கல்யாண வாழ்வு மற்றும் விஜய்குமார் குடும்பத்துடனும் பிரச்சனைகளில் சிக்கி பத்திரிக்கைகளில் வலம் வந்து கொண்டே இருந்தார். நடிகர் விஜயகுமாருடன் சொத்துப் பிரச்சனைகளில் போலிஸ் கோர்ட் என பெரும் பிர்ச்சனைகளிலும் சர்ச்சைகளிலும் சிக்கியவர். விஜயகுமார் கமலுக்கு நெருங்கிய நண்பர் என்ற வகையில் இவர் மிக முக்கிய போட்டியாளராக உள்ளார்.

சேரன்

பிக்பாஸின் மற்றொரு போட்டியாளராக களமிறங்கியுள்ளார். அறிமுகம் தேவையற்ற தமிழக பிரபலம் சேரன். சேரன் இந்தப்போட்டியில் கலந்து கொள்வது பலருக்கு ஆச்சர்யமே !.
சேரன் பாரதிக் கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குநர். ஆட்டோகிராப் படம் மூலம் நடிகராக மாறினார். தேசிய விருது பெற்ற படங்களை இயக்கியவர். நல்ல தரமான படங்கள் மட்டுமல்லாது ஆனால் அதை மக்கள் ரசிக்கும்படியும் எடுத்தவர். திருட்டு விசிடி எதிராக ஒரு அமைப்பை ஆரம்பித்தார். அதில் அவருக்கு ஏற்பட்ட வீழ்ச்சி அவரை பட இயக்கத்திலிருந்து தள்ளி வைத்தது. சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தில் விஷாலுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டார்.


ஷெரீன்

ஷெரீன் கன்னட மாடல். படிப்பிற்குப் பின் 16 வயதில் மாடலான இவர் அதே வருடத்தில் துருவா எனும் கன்னட படத்தில் அறிமுகமானார். அதே வருடத்தில் தமிழில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானார். தனுஷ், செல்வராகவனுக்கு திருப்புமுனையாக அமைந்த துள்ளுவதோ இளமை திரைப்படம் ஷெரினுக்கும் மிக முக்கியமான படமாக அமைந்தது.
தமிழ் ,கன்னடம் , மலையாளம் என பல மொழிகளிலும் எண்ணற்ற படங்களில் ஹிரோயினாக நடித்துள்ளார். படங்களில் வாய்ப்பு குறைந்த பின் நடிப்பிற்கு முழுதாக முழுக்கு போட்டிருந்தவர் தற்போது பிக் பாஸ் மூலம் மீண்டும் லைம் லைட்டுக்குள் வந்துள்ளார்.

மோகன் வைத்தியா

கர்னாடக பாடகர், இசைக் கலைஞர், வீணைக்கலைஞர். நாடக மேடைகளில் நடிக்க கூடியவர். டீவித் தொடர்களிலும் சினிமாக்களிலும் நடித்திருக்கிறார். புகழ்பெற்ற பாடகர் ராஜேஷ் வைத்தியாவின் சகோதரர் இவர். தொலைக்காட்சி தொடர்களில் காமெடி செய்து புகழ் பெற்றவர். அதிக அறிமுகமற்ற முகம் ஆனால் திறமை மிகுந்த ஒருவர் பிக் பஸுக்குள் நுழைந்துள்ளார். 60 வயதில் கலந்து கொள்ளும் ஒரே போட்டியாளர் இவர்


தர்ஷன் தியாகராஜா

தமிழக அறிமுகமில்லாத புதிய முகம். சாஃப்ட் வேர் துறையில் இருந்தவர் மாடலிங்கில் நுழைந்து, பல துன்பங்களுக்கு பிறகு முன்னணிக்கு வந்தவர். கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் வெளிச்ச முகம் ஏதுமற்ற போட்டியாளர் இவர்தான். ஏழ்மையான குடுமபத்திலிருந்து வந்து சினிமா ஆசையில் ஹிரோவாக ஆசைப்பட்டவர். தற்போது பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்து உள் நுழைந்திருக்கிறார்.


சாண்டி

நடன இயக்குநர். விஜய் டீவி ஜோடி நம்பர் ஒன் உட்பட டீவி நடனப்போட்டிகளில் நடன இயக்குநராக பணியாற்றி புகழ் பெற்றவர். பிக் பாஸில் ஏற்கனவே கலந்து கொண்ட காஜலுடன் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். நடன இயக்குநராக சினிமாவில் அறிமுகமானவர். ரஜினிக்கு காலா படத்தில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். கமலை மேடையில் ஆடவைத்து பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து ஷோக்களில் காமெடி செய்துள்ளார். தற்போது அவரே இந்த பிக் பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.


முகேன் ராவ்

மலேஷியன் பாடகர். மலேஷியாவில் பிறந்து வளர்ந்தவர். சுதந்திரப்பாடகராக பல ஆல்பங்களில் பாடியுள்ளார். யூடுயூப் வீடியோக்கள் இவரை புகழுக்கு அழைத்து சென்றது. தொடர்ந்து பாடலகள் எழுதி பாடி ஆலபங்கள் வெளியிட்டார். சிறிய ஏழ்மை குடும்பத்தில் பிறந்து ஒரு நல்ல இடத்தை தன் திறமையால் பெற்றவர். வெளிநாட்டில் இருந்து தமிழ் ஷோ ஒன்றில் கலந்து கொள்ளும் இரண்டாவது நபர். தமிழ் மக்களுக்கு அதிக பரிச்சியம் அற்றவர். தற்போது பிக் பாஸ் மூலம் அடியெடுத்து வைக்கிறார்.


ரேஷ்மா

டீவி சீரியல்கள் மூலமாக புகழ் பெற்றவர் ரேஷ்மா. இவர் மாடலாகவும் இருந்துள்ளார். சினிமாக்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இவர் நடித்த புஷ்பா கதாப்பாத்திரம் மிகப்பெரிய அளவில் இவரை பிரப்லப்படுத்தியது. காமெடி நடிகர் யோகிபாபுவுடன் இவருக்கு காத்லென்று ஒரு செய்தி பரவியது. செய்தியை மறுத்தவர். எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என குண்டை போட்டார். மீண்டும் கிசுகிசு பரவிய நிலையில் இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.

ஞாயிறு, 2 ஜூன், 2019

இசைராஜா


பெரிய அளவுல எழுதமுடியலைனாலும்.. சுருக்கமாய்..

முதல் படமான அன்னக்கிளிக்காக முதன் முதலாய் ரெக்கார்டிங்கிற்கு அமரும்போதே பவர் கட்..

ஆனால் அபசகுனத்தையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு அன்னக்கிளி பாடல்களை படு ஹிட்டாக்கி 1976ல் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கச் செய்தார்..

ஜி.ராமநாதன், எஸ்எம் சுப்பையா நாயுடு கேவி மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி போன்றோர் கோலேச்சிய இசை உலகில் தனியாக தனக்கென பாணியை கடைபிடித்தால்தான் சாதிக்க முடியும் என்பதை தெளிவாகவே புரிந்துகொண்டார்..

களத்தில் உள்ள எம்எஸ்வியை மீறி முன்னுக்கு வர வேண்டும் என, எழுபதுகளின் இறுதிகளில் போராடிய போது போட்ட பாடல்கள்,. அவற்றில் பறந்த மண்வாசனை, அப்பப்பா அத்தனையும் வியக்கத் தக்கவை..

அதனால்தான், இயக்குநர்கள் தேவராஜ்-மோகன் தொடர்ந்து கொடுத்த வாய்ப்பை அவர் தவறவிட வேயில்லை

நான் பேசவந்தேன் ( பாலூட்டி வளர்த்த கிளி),
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் ( உறவாடும் நெஞ்சம்), கண்ணன் ஒரு கை குழந்தை (பத்ரகாளி) என மிரட்சியான ஹிட் பாடல்களை கொடுக்க முடிந்தது

இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின் ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது..என்ன ஒரு மாஜிக்.. ஆயிரம் தடவைக்கு மேல் கேட்டிருந் தாலும். இன்றைக்கும் தினம் இரண்டு தடவையாவது...

சோளம் வெதைக்கையிலே...
ஆயிரம் மலர்களே மலருங்கள்,
நினைவோ ஒரு பறவை..விரிக்கும் அதன் சிறகை...
ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி....
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு.
அந்தப்புரத்தில் ஒரு மகராணி...
தென்னை மரத்துலு தென்றலடிக்குது (அவரின் முதல் டூயட்)
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்..என பின்னிபெடலெடுத்தார்....

பாடலுக்கான இசையை தாண்டி பின்னணி இசையி லும் கலக்கினால் இன்னும் உச்சம் தொடலாம் என்பது 1980களின் துவக்கத்தில் புரிந்துவிட்டது. அதனால்தான் அந்த ஏரியாவிலும் அதிகமாக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

பக்கா கமர்சியல் படமான கமலின்  காக்கிச்சட்டையில் பின்னணி இசை பல இடங்களில் அதகளம் செய்யும்.. டைட்டிலியே தனி கச்சேரி செய்திருப்பார்..பிணத்தை விமானத்தில் கடத்திக்கொண்டு வந்து விமான நிலையத்திலிருந்து காரில் ஏறுகிற வரை விறுவிறுப் பான காட்சிகளின், எடிட்டிங்கிற்கு பின்னணி இசை  அவ்வளவு சவால் விட்டிருக்கும்.. படத்தின் போக்கில் தான் அதன் வீரியம் புரியம்..

முதல் மரியாதை, நாயகன், தளபதி போன்ற படங்களை போட்டுவிட்டு பக்கத்து அறையில் படுத்துக்கொண்டு இசையை மட்டும் காதில் கேட்டால் அப்படியொரு அலாதியான சுகம் கிடைக்கும்.. படம் முழுக்க இசையை அருவியாக ஓடவிட்டிருப்பார்..

திரையிசையில் தாம் மட்டுந்தான் என ஒரு நிலை உருவானபோது...80 களின் மத்தியில் தென்றலே என்னைத்தொடு. வைதேகி காத்திருந்தாள், ஆண்பாவம்..உதயகீதம். காக்கிச்சட்டை, புன்னகை மன்னன், மௌனராகம் நாயகன் என அவரின் இசை, அப்போது தொடர்ந்து தாக்கிய சுனாமிகளே

கோவைத்தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ்சில் மோகன் கதாநாயகனாக மைக் பிடித்துக்கொண்டு நின்றால் மட்டும் போதும். பாடல்களை போட்டு ஹிட்டாக்கி வெள்ளிக்காசுகளை மூட்டை மூட்டையாக கொட்டவைத்த வரலாறெல்லாம் வியப்பானவை..

டவுசர், மாடு, குடிசை வீடு காமாச்சி, மீனாச்சி என ஏதாவது இரண்டு மூன்று பெண் கேரக்டர்கள். ஹீரோவாக  ராமராஜன்.. அப்புறம் ஒரே தேவை . இவரின் இசை..எல்லாமே பாட்டுக்காக ஓடி வசூலை வாரி வாரி குவித்து கோடம்பாக்கத்தையே வியக்க வைத்ததையெல்லாம் விவரிக்க தனி புத்தகமே போடணும்..

நம்மைப் பொருத்தவரை அவரின் முதல் பத்தாண்டுகள் இன்றளவும் வியப்பாகவே உள்ளது..

ஒரே நாள் உனை நான் ( இளமை ஊஞ்சலாடுகிறது)
நானே நானா யாரோ..(அழகே உன்னை ஆராதிக்கிறேன்)
தென்னை மரத்துல தென்றல் அடிக்குது (லட்சுமி)
சின்னப்பொன்னுசேலை (மலையூர் மம்பட்டியான்)
பூமாலையே தோள் ( பகல் நிலவு)
ராஜா கைய வெச்சா (அபூர்வ சகோதர்கள்)
சுந்தரி கண்ணால் ஒரு சேதி ( தளபதி)
ஆனந்த தேன் காற்று..(மணிப்பூர் மாமியார் படம் வரவில்லை)
பூங்காற்று திரும்புமா ( முதல் மரியாதை)

1980 களின் துவக்கத்தில் பூஜை போடப்பட்ட
மணிப்பூர் மாமியார் படத்தில் ஒரு பாடல்..
ரசிகனே என் அருகில் வா என அவரே பாடி கலக்கிய பாடல் அது.. அதில் கடைசியாக இப்படி வரும்..

''தெரிந்ததை நான் கொடுக்கிறேன்
தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து
இதயங்கள் சில எதிர்க்கலாம்
எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம்.
நான் காணும் உள்ளங்கள்
நல் வாழ்த்து சொல்லுங்கள்
நாளும் நாளும் இன்பம் இன்பம்.''

76 வது பிறந்த நாள் காணும் இசைஞானி இளையராஜா நீடுடி வாழ வாழ்த்துவோம்...

 மீள் பதிவு

புதன், 15 மே, 2019

நெஞ்சை வருடும் ராக தேவன்.. இன்று அன்னக்கிளி வெளியான தினம்! மே 14.



43 வருடங்கள் கடந்தும் நெஞ்சை வருடும் ராக தேவன்.. இன்று அன்னக்கிளி வெளியான தினம்! மே 14.

#அன்னக்கிளி! கலர்படங்கள் பெருமளவு தலைதூக்கி, அதில் வெகுஜனங்கள் நாட்டம் கொண்டிருந்த நேரம் அது. அப்போது சாதாரண கறுப்பு-வெள்ளையில் அன்னக்கிளி 1976-ல் வெளியாகி அனைத்து தரப்பினரையும் பேச வைத்ததற்கு முக்கிய காரணகர்த்தா இசைஞானி இளையராஜாதான். முதல் படத்திலேயே காட்டாற்று வெள்ளம்போல் தெறித்துக் கொண்டு வந்து, மக்களின் நாடி நரம்புகளில் கலந்துவிட்டார் இளையராஜா. அவரது இசையமைப்பில் அன்னக்கிளி திரைப்பாடல் முதல்முதலாக வெளியான நாள்தான் இன்று! தமிழகத்தில் ஒரு மூலையில் உள்ள பண்ணைப்புரம் கிராமத்திலிருந்து, கிளம்பிய தென்றல், மெல்ல மெல்ல தவழ்ந்து, அன்னக்கிளியில் புயலென நுழைந்து… இன்று 2 தலைமுறைகளுக்கு மேல் இசை உலகை ஆண்டு கொண்டிருக்கிறது! எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் கணேஷ் போன்றோர் இசைஉலகில் கோலோச்சிய நேரம் அது. இசையமைப்பாளர்கள் அறிமுகமாவதும் வெகு அரிதான ஒன்றாக இருந்தது. அப்படியே அறிமுகமானாலும் சிறிது காலத்தில் மத்தாய்ப்பாய் தோன்றி மறைந்து போவர். ஆனால் இசையமைப்பாளராக அறிமுகமான உடனேயே சமகால இசையமைப்பாளர்களான குமார், வேதா, ஆகியோர்களை பின்னுக்கு தள்ளி எவராலும் தொட முடியாத உயரத்தில் போய் சம்மனம் போட்டு உட்கார்ந்து கொண்டார் இளையராஜா. அதற்கு காரணம், இசைக்கருவிகளை அவர் கையாளும் முறையும், இசை ஆளுமையையும், தன் அண்ணன் பாவலரின் பாடல்களை கேட்ட கேள்விஞானத்தால் பெற்ற இசை ஞானமும்தான்! அதனால்தான் இன்று இசை கடவுளாக அவர் உருமாறி நிற்க முடிந்திருக்கிறது! நன்றிக்குரிய பஞ்சு அருணாசலம் முதலில் இந்த பாராட்டுக்கள் எல்லாம் மறைந்த தயாரிப்பாளரும், பாடலாசிரியருமான பஞ்சு அருணாசலத்துக்குதான் போய் சேர வேண்டும். அதுதான் நியாயமும், தர்மமும் கூட. இளையராஜாவின் திறமையை கண்டறிந்து அதனை தக்க சமயத்தில் உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை பஞ்சு அருணாசலத்துக்குத்தான் உரியது. இளையராஜாவை அறிமுகப்படுத்தக் கூடாது என்று பலதரப்பட்ட எதிர்ப்புகள் பஞ்சு அருணாசலத்துக்கு வந்து சேர்ந்தன. “புது பையன் நமக்கு தேவையில்லை, ஆளைப்பார்த்தால் ஒழுங்கா மியூசிக் போடற ஆளா தெரியலயே, எதுக்கு புதுமுயற்சியில இறங்கிட்டு, வேற ஆளை பாக்கலாம்” என்று எதிர்ப்புகளை கணைகள் பஞ்சு அருணாசலத்தை துளைத்தெடுத்தன. ஒருகட்டத்தில் அவரே, மனதை மாற்றக்கூடிய நிலைக்கும் தள்ளப்பட்டார். கடைசியில், ‘திறமையில் நம்பிக்கை’ என்ற ஒன்றினில் உறுதியாக இருந்து, எதிர்ப்புகளுக்கு மத்தியில் இசையமைப்பாளராக இளையராஜாவை அறிமுகப்படுத்தினார் பஞ்சு அருணாசலம். அதற்கான நன்றியை அவருக்கு பல தருணங்களில் இளையராஜா நா தழுதழுக்க வெளிப்படுத்தியிருக்கிறார். சகுனம்! தடங்கல்! இடையூறு! ஆரம்பத்தில் அண்ணன் பாவலர் வரதராசன் மெல்லிசைக்குழுவில் பாடிக் கொண்டிருந்த இளையராஜா, பின்னர் பல்வேறு நடிகர்களின் நாடகங்களுக்கும் இசையமைக்க, நண்பர் செல்வராஜ் மூலம் பஞ்சுவிடம் அறிமுகம் கிடைக்கப் பெற்றது. அப்போது வந்த வாய்ப்பே அன்னக்கிளி. முதன்முதலில் ரிக்கார்டிங் செய்யப்பட்ட பாடல் அன்னக்கிளி உன்னத்தேடுதே என்பது. இதனை லதா மங்கேஷ்கரை வைத்து பாட வைப்பதாக முடிவெடுத்து, அது சில காரணங்களுக்காக முடியாமல் போகவே எஸ்.ஜானகியை வைத்து பாட முடிவு செய்யப்பட்டு, ஒரு திருமண மண்டபத்தில் பாடலுக்கான ஒத்திகையும் பார்க்கப்பட்டதாம். பின்னர் ஏவிஎம்-இல் பாடல் பதிவாக்கம் தொடங்கப்பட, சில நிமிடங்களிலேயே கரண்ட் கட் ஆகிவிட… “நல்ல சகுனம்” என்று அங்கிருந்தவர் சிலர் கிண்டல் அடிக்க… இது இளையராஜா காதில் அப்பட்டமாக விழ… முதன்முதலாக இசையமைக்கும்போது இப்படி விளக்குகள் அணைந்துவிட்டதே என்ற வேதனை இளையராஜாவுக்கு மனம் முழுக வேதனை அப்பி, ஒரு ஓரமாய் போய் இடிந்து உட்கார்ந்து விட்டார். ராஜாவை தேற்றிய ஜானகி! ஆனால் எஸ்.ஜானகிதான் இளையராஜாவை தேற்றியிருக்கிறார். “தம்பி… இதெல்லாம் சகஜம்ப்பா. கரண்ட் போறதுனால ஒன்னும் கிடையாது, சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பார்” என்று சொல்லியிருக்கிறார். சிறிது நேரத்தில் கரண்ட் வந்த பிறகும் இளையராஜாவுக்கு அதிலிருந்து மீளவில்லை. இதனால் தான் பாடிய அன்னக்கிளி உன்ன தேடுதே பாட்டை தானே முன்னின்று ஆர்க்கெஸ்ட்ராவை ஒருங்கிணைத்தார் (Conduct) ஜானகியே. அவரது மேற்பார்வையில்தான் அந்த முழு பாடல் பதிவு செய்யப்பட்டது. இதையெல்லாம் ஒரு ஓரமாகவே வாடிய முகத்துடன் அமர்ந்து கவனித்து கொண்டிருந்தார். இளையராஜா. பதிவு செய்யப்பட்ட பாடலை கேட்கலாம் என்று ரெக்கார்டை அழுத்தினார். அனைவருமே ஆர்வம், பாடல் எப்படி வந்திருக்க போகிறதோ என்று இளையராஜா உட்பட. ஆனால் ஆச்சரியம்…. ஒரு சத்தமும் வரவில்லை. ரெக்கார்ட் செய்ததே பதிவாகவில்லை. இப்போது ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் வெடித்து சத்தம்போட்டு கதறி அழுதார் இளையராஜா. ஜானகிக்கே ஒரு மாதிரி போய்விட்டது. அனைவருமே ஒன்றும் புரியாமல் முழித்தார்கள். முதலில் அறிமுகமாக எதிர்ப்பு, இரண்டாவது கரண்ட் கட், மூன்றாவதாக பதிவு செய்யப்பட்டது இல்லாமலிருந்தது… என அனைத்தும் ராஜாவை புரட்டி போட்டது. 4-வது முறை முயற்சியில்தான் பாடல் மீண்டும் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. பட்டைய கிளப்பிய பாடல்கள் படம் வெளியானது. அனைத்து பாடல்களுமே பட்டைய கிளப்பியது. எம்ஜிஆர், சிவாஜி பாடல்களுடன் இந்தி பாடல்களான ஆராதனா, பாபி போன்ற படங்களின் பாடல்களை மொழியும், அர்த்தமும் தெரியாமல் தமிழக மக்கள் முனகிக்கொண்டிருந்த நேரம். ஆனால் அன்னக்கிளி வருகைக்கு பின்னர், வடநாட்டு பாடல்கள் என்ன வெளிவந்திருக்கின்றன, அப்போதைய ஹிட் என்ன என்றே மக்களுக்கு தெரியாமல் போயிற்று. அதை தெரிந்து கொள்ளவும் அவர்களுக்கு நாட்டமில்லாமல் போயிற்று. அந்த அளவுக்கு கட்டிபோட்டது ராஜாவின் முதல் பட ராகங்கள். அதுமட்டுமல்ல, வடநாட்டு இசைக்கலைஞர்களான ஆர்.பர்மன், நௌஷத் அலி, லதா மங்கேஷ்கர் போன்றோரும் தமிழகத்தை திரும்பி பார்த்து அதிசயத்து புருவங்களை உயர்த்தினர் ராஜாவின் இசையை கேட்டு! ரத்த நாளங்களில் கலந்த ராஜா அன்னக்கிளி பாடல்களை கேட்கும்போது தமிழக மக்களுக்கு ஏதோ ஒரு புது உணர்வு தென்பட்டது. யாரோ புது இசையமைப்பாளர் தனக்காகவே, தன் மனதுக்கு பிடித்தவாறே இசையமைத்தது போல உள்ளதாக ஒவ்வொருவரும் உணர்ந்தார்கள். இலங்கை வானொலியில் பாடல் ஒலிபரப்பும்போது “இசை- இளையராஜா” என்று பாடலை ஒலிபரப்பும் முன் சொல்வார்கள். பல காலம் இளையராஜாவை பாக்க முடியாதவர்களுக்கு எல்லாம் கூட இசை-இளையராஜா என்பது மனனமாகி போன ஒன்றாக இருந்தது.அன்னக்கிளி பட பாடல்களுக்கு இளையராஜா என்ன கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார், எந்தவித உணர்வில் பாடகர்களை பாடவைத்திருக்கிறார், இதையெல்லாம் யாரும் அறிந்துகொள்ள முயலவும் இல்லை, ஆராயவும் இல்லை. அவர்கள் உணர்ந்ததெல்லாம் ஆழ்மனதில் ஊடுருவி ரத்த நாளங்களில் கலந்துவிட்ட பாடல்களையும், அதன் இனிமையையும்தான். மணவிழாவை அலங்கரித்த பாடல் திருமண விழாக்களில், வாராயென் தோழி வாராயோ, மணமகளே மருமகளே வா வா என்ற 60’களின் பாடல்களே பிரதானமாக ஒலிபெருக்கிகளில் இடம் பெற்றிருந்தன. ஆனால் சுத்தச் சம்பா பச்சரிசி குத்தத்தான் வேணும்… பாடல் திருமண வீடுகளில் முதலிடத்தை பிடித்தது. திருமண வீட்டு பந்தங்களை துள்ளி குதித்து ஆட்டம் போட வைத்தது. வைபவத்தின் உற்சாகத்தை மேலும் கூட்டி குதூகலமூட்டியது. உலக்கையில் நெல் குத்தும் உஸ் உஸ் சத்தத்துடன், முல்லை வெள்ளி போல அன்னமும், வெள்ளி நூலாக இடியாப்பமும், பஞ்சு பஞ்சாக பணியாரமும், என கிராமிய உணவுகள் மூக்கை துளைத்து சென்றன. காதலர்களின் காதல் வரிகள் அதிலும் அன்னக்கிளி உன்ன தேடுதே என்ற ஜானகியின் பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. பெண்ணின் ஏக்கம், நாள்கணக்கில் தனக்கு உரியவனுக்காக காத்திருக்கும் தவிப்பு, உறங்காத நினைவுகள், நீண்டு கொண்டிருக்கும் தனிமை கொடுமை… இவை அனைத்தையுமே வெளிப்படுத்தும் பாங்காக அமைந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், அப்போதைய ரோமியோக்களுக்கு பிடித்த பாடலாக இருந்துள்ளது. காதலிக்கும் இளைஞர்கள் பெரும்பாலும் தங்கள் காதல் கடிதங்களில் பயன்படுத்தும் முக்கிய வரிகளாக அன்னக்கிளி உன்னை தேடுதே என்ற வரிகள் தலையாய இடம் பிடித்திருந்தது.லாலி லாலி லலோ… என்று ஜானகியின் குரலில் ஆரம்பிக்கும்போதே உடல் சிலிர்த்துப் போனது. இடையில் குயிலும், புல்லாங்குழலும் போட்டி போடு சத்தம் எழுப்ப, தபேலா உருட்டலுடன் அழுத்தமான கேள்விய கேட்டு சென்றது மச்சான பாத்தீங்களா என்று!! இதில் இடையே திடீரென்று உருமியும் பறையும் நுழைந்து தாளம் போட வைத்தன. பொதுவாக இழவு வீடுகளிலேதான் இந்த இசைக்கருவிகள் இசைக்கப்படும் என விமர்சனங்களும் வரத்தான் செய்தாலும், அத்தனையும் சுக்குநூறாக நொறுக்கிப் போட்டது ஒட்டுமொத்த பாடலும்! இந்த பாடல் திரையிசையின் போக்கையே தன் பக்கம் இழுத்தது. திரைப்பட பாடல்களில் ஒரு புது அத்தியாயத்தை சேர்த்தது. அன்னக்கிளி என்றதும் மச்சான பாத்தீங்களா என்ற பாடல் வரிகள் நம் மனதில் தானாக எழும் அளவிற்கு தமிழ் சினிமாவையே கட்டிப்போட்டது! உணர்ச்சிபெருக்கில் ராஜா சொந்தமில்லை, பந்தமில்லை… பி.சுசிலாவின் பாடல் ஒட்டுமொத்த சோகத்தின் பிம்பம்… அதுவரை மனதில் தேக்கி வைத்திருந்த அத்தனை சோகங்களும் வெடித்து சிதறி கதறி கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. இந்த பாடல்கள் வெளியான தினத்திலிருந்தே நாடி நரம்புகளில் கலந்துவிட்டார். படம் வெளியாகி ஒருவாரம் கழித்து இளையராஜா, சென்னை மெரினாவில் வாக்கிங் சென்றிருக்கிறார். அப்போது அன்னக்கிளி பாடல்கள் உப்புக்காற்றில் தவழ்ந்து வந்ததை கண்டு விக்கித்து நின்றார் ராஜா. இவ்வளவு தூரம் பாடல் சென்றடையும் என்று எதிர்பார்க்கவில்லை உணர்ச்சிப் பெருக்கில் சந்தோஷப்பட்டிருக்கிறார். பொதுவாக நம் தமிழ் மக்கள், காதல், இனிமை, ஏக்கம், தவிப்பு, தாய்மை, இயற்கை, சோகம், பக்தி என போன்ற உணர்வுகளில் பின்னிப் பிணைந்தவர்கள். அதனால்தான் தங்களது வாழ்வில், ஏதாவது ஒரு இளையராஜா பாடலுடன், ஏதாவது ஒரு உணர்வுடன் தொடர்புடையதாக பந்தம் தொடர்ந்து நீண்டு கொண்டிருக்கிறது. தமிழகத்தில் எண்ணற்ற பிரிவுகள், பிளவுகள், சாதிகள் கொட்டி கிடந்தாலும் இளையராஜா என்று வந்துவிட்டால் அனைத்துமே சமநிலையாகிவிடுகிறது! அனைத்து தரப்பினரையும் ஒன்று சேர்க்கும் இணைப்பு புள்ளிதான் இளையராஜா. இன்னும் எளிமையாக சொல்லப்போனால் “வேற்றுமையில் ஒற்றுமை”யை இளையராஜா பாட்டின்மூலம் காணலாம்-உணரலாம். இசைதாயின் திருமகன் பாலவர் வரதராஜனுடன் இணைந்து இளையராஜா, தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் கச்சேரி செய்ய நேரும்போது, பாமர மக்களின் உணர்வுகளையும், எண்ணங்களையும் நாடி பிடித்து பார்க்காமலே நேரடியாக மனதில் உள்வாங்கியிருந்தார். அதனால்தான், அவற்றினை தன் பாடல்களில் பிரதிபலிக்க செய்ய முடிந்தது. உச்சிவெயிலில் கொண்டு போய் மண்டைய காய நம்மை நிறுத்தினாலும், பிரச்சனைகள் வெடித்து எரிச்சலின் உச்சத்தில் தகித்து கிடந்தாலும்… இளையராஜாவின் ஒரு பாட்டு கேட்டால் போதும். அனைத்துமே கரைந்து உருகி மெழுகாய் வழிந்து ஓடிவிடும் என்பது நிதர்சனம். இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இசையின் பெருமகனை… இசையை மீட்டுருவாக்கம் செய்து காலத்தின் கையில் வழங்கியவனை… அதிசயங்களே அதிசயித்து பார்த்து கொண்டிருக்கின்றன! அதனால்தான் அன்னக்கிளி பட பாடல் பதிவாகி இன்றோடு 43 வருடங்கள் கடந்தும் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். எத்தனையோ தருணங்களில் எத்தனையோ மனித மனங்களின் காயங்களுக்கு இளையராஜாவின் பாடல்கள் மருந்தாகின… மருந்தாகி கொண்டிருக்கின்றன.. இனியும் இனிய மருந்தாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!

#புகைப்படம்
மச்சான பாத்திங்களா பாடல் கம்போசிங் போது எடுத்தது.

வெள்ளி, 10 மே, 2019

6 வருடங்களுக்கு முன்பு - 11-05-1973 அன்று வெளியான மக்கள் திலகம், புரட்சித் தலைவரின் #உலகம்சுற்றும்வாலிபன் படத்துக்கு ஆனந்த விகடனின் விமர்சனம்.


46 வருடங்களுக்கு முன்பு -
11-05-1973 அன்று வெளியான மக்கள் திலகம், புரட்சித்
தலைவரின் #உலகம்சுற்றும்வாலிபன்
படத்துக்கு ஆனந்த விகடனின் விமர்சனம்.
====================

பிரமாண்டமான வெளிநாட்டுப் படங்களைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு ஓர் ஏக்கம் வரும்.

"இப்படிப் பிரமிக்கவைக்கும் வெளிப்புறக்காட்சி அமைப்புகளுடனும், தொழில் நுணுக்கத்துடனும் தமிழிலும் படம் வராதா?' என்று.

அந்த ஏக்கத்தைத் தீர்ப்பதற்குக் கம்பீரமாக வெளி வந்திருக்கிறான் "உலகம் சுற்றும் வாலிபன்"

பயங்கர இடி, மின்னல்களுக்கு மத்தியில்
ஓர் இளம் விஞ்ஞானி (எம்.ஜி.ஆர்.) ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் முதல் காட்சியிலிருந்து இறுதிக்காட்சி வரை
நம்மை ஒரு புது உலகத்துக்கே அழைத்துச் சென்று, நிமிடத்துக்கு நிமிடம் கண்ணைக் கவரும் வெளிப்புறக்காட்சிகளால் பிரமிக்க வைக்கிறார் தயாரிப்பாளரும் டைரக்டருமான எம்ஜிஆர்.

மகத்தான படங்களைத் தந்து புகழ்பெற்ற
ஸெஸில் பி டெமிலியின் முழுச்சாயலை எம்ஜிஆரிடம் கண்டு பெருமைப்படுகிறோம்.

படத்தின் பெரும்பகுதி கதை நிகழும் கிழக்காசிய நாடுகளான சிங்கப்பூர்,
மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான் இவற்றிலேயே படமாக்கப் பட்டிருக்கிறது.

அதுவே நமக்கு ஒரு புது அனுபவமாக இருக்கிறது. தமிழில் இப்படிப் பெரிய
அளவில் அயல்நாட்டு வெளிப்புறக் காட்சிகள் அமைந்திருப்பது இதுவே முதல் படம்.

"பேராசை பிடித்திருக்கிறது" என்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால்,
இந்தப் படத்தில் உபயோகிக்கப் பட்டிருக்கும் காமிராவைத் தான் சொல்லவேண்டும்.

அப்படி ஒரு தாகத்துடனும் வேகத்துடனும்               கிழக்காசிய நாடுகளின் அழகுகளையெல்லாம் ஒன்று விடாமல் வாரி வாரித் தன்னுள் அடக்கிக் கொண்ட இருக்கிறது. அந்தக் காட்சிகள் வெள்ளித்திரையில் வண்ண வண்ணமாக விரியும்போது, அந்த அழகுக் கொள்ளையில் நாம் மெய்சிலிர்த்துப் போகிறோம்.

சந்திரகலாவும் எம்.ஜி. ஆரும் காரில் போகும்போதும், படகில் டூயட் பாடிக்கொண்டு இருக்கும்போதும், அவர்களுக்கு மேலாகப் பறக்கும் விமானத்தைக் கூடப் புத்தி சாலித்தனத்துடன் அழகாகப் படமாக்கிப் பிரமிக்க வைத்திருக்கிறார்கள்.

வாலிபன் - இல்லை, வாலிபர்கள். (எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம்) சந்திக்கும் பெண்கள் நால்வர். சந்திரகலா, மஞ்சுளா, லதா, தாய்லாந்து நடிகையான மேட்டா ரூங்ராத்.

தன் கள்ளமற்ற சிரிப்பு ஒன்றினாலேயே நம் மனத்தை வசீகரித்துக் கொள்பவர் தாய்லாந்து நடிகையான மேட்டா ரூங்ராத். அவருக்கு ஒரு சபாஷ்.

சந்திரகலாதான் மற்றவர்களுள் அதிக வாய்ப்புள்ள கதாநாயகி. அடக்கமும் உணர்ச்சியும் நிறைந்த நடிப்பு அவரிடமிருந்து வெளிப்படுகிறது. அவருக்கு ஒரு சபாஷ்.

லதாவுக்கு அழகான முகம். அவருடைய கச்சிதமான உடலமைப்புக்கு எடுப்பாக
ஆடை அணிவித்து முதல் படத்திலேயே
அவரை ரசிகர்களின் நெஞ்சில் பதிய வைத்திருக்கிறார்கள். புதிய நடிகை என்ற சாயல் துளிக்கூட இல்லாத இயற்கையான நடிப்பு. லதாவுக்கு ஒரு சபாஷ்.

மூத்த எம்ஜிஆரின் காதலியாக வரும் மஞ்சுளாவுக்கு கண்ணீர் வடிக்கவும்
சந்தர்ப்பம் கொடுத் திருக்கிறார்கள்.
அவருடைய நடிப்பைவிட, அசோகனால் கற்பழிக்க முயலப்படும் காட்சியில் அவர் துடிக்கும் துடிப்பு ரசிகர்களை அதிகமாகக் கவருகிறது. 'தோரஹா' கெட்டது போங்கள்.

பிரதான வில்லன் அசோகன் தான் என்றாலும், நம் பிரியத்தைச் சம்பாதித்துக்கொள்கிற வில்லன் நம்பியார்தான். அவருடைய பல்லழகே அழகு! எம்ஜிஆர் எறிந்த பெட்டியை எடுத்துக் கொள்வதற்கு அவர் நப்பாசையுடன் தயங்கித் தயங்கி விழிப்பது சுவையூட்டும் காட்சி.

வெகு நாட்களுக்குப் பின் பழைய நாகேஷைப் பார்க்கிறோம். பல காட்சிகளில் அவர் வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறார். தாய்லாந்துப் பாணியில் குச்சிகளால் சாப்பிட முடியாமல் அவர் தவிக்கும் தவிப்பு 'ஓஹோ' என்று சிரிக்க வைக் கிறது. அவருக்கு ஒரு சபாஷ்!

வெளிப்புறக்காட்சிகளையும் உட்புறக் காட்சிகளையும் பேதம் கண்டுபிடிக்க முடியாதபடி இணைத்து, படத்துக்குக் கம்பீர வடிவம் தந்திருப்பது பெரிய சிறப்பு. அதற்குத் துணையாக, பிரமிக்கத்தக்க வெளிப்புறக் காட்சிகளுக்கு ஈடு கொடுக்கும்படி பொருத்தமாக உட்புறக் காட்சிகளை அமைத்திருக்கும் (உதாரணம்: புத்தர் கோயில்) ஆர்ட் டைரக்டர் அங்கமுத்துவுக்கு ஒரு சபாஷ்.

எக்ஸ்போ 70' காட்சிகளை, அங்கு நேரில் சென்றவர்கள் கூட இப்படித் தேர்ந்தெடுத்து ரசனையுடன் பார்த்திருப்பார்களா? என்று சந்தேகப்படும்படி அற்புதமாகப் படமாக்கியிருக் கிறார்கள்.

அதே போல, தண்ணீருக்குள் எம்ஜிஆர் - லதா சம்பந்தப்பட்ட பாலே காட்சியும், சறுக்கு விளையாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் க்ளைமாக்ஸ் காட்சியும்கூட மறக்க முடியாதவை. இப்படி காமிராவை அற்புதமாக இயக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் ராமமூர்த்திக்கு ஒரு சபாஷ்!

படம் வெளியாகுமுன்னே
பிரபலமாகிவிட்டவை,
இந்தப் படத்தின் பாடல்கள்.

'சிரித்து வாழ வேண்டும்'
 'பச்சைக்கிளி முத்துச்சரம்' பாடல்கள்
எத்தனை தரம் கேட்டாலும் அலுக்காதவை. பாடல்களுக்கான இசையமைப்பையும் மிஞ்சி நிற்கிறது ரீ-ரிக்கார்டிங்! மெல்லிசை மன்னர் விசுவநாதனுக்கு ஒரு சபாஷ்!

ஏற்கெனவே 'நாடோடி மன்னன்', 'அடிமைப் பெண்' போன்ற மகத்தான படங்களைத் தயாரித்தவர் தான் எம்ஜிஆர்.

ஆனால், அவற்றை யெல்லாம் மிஞ்சி இப்படத்தின் மூலம் இதுவரை யாருமே
எட்டாத உயரத்துக்கு எழுந்து நிற்கிறார் அவர்.

 தமிழ்த்திரையுலகமே, ஏன் இந்தியத் திரையுலகமே பெருமைப்படத்தக்க தனிப் பெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கும் எம்ஜிஆருக்கு எத்தனை 'சபாஷ்' வேண்டுமானாலும் போடலாம்.

புதன், 3 ஏப்ரல், 2019

இயக்குநர் மகேந்திரன் வாழ்க்கை பற்றிய ஒரு பதிவு


இயக்குநர் மகேந்திரன் வாழ்க்கை பற்றிய ஒரு பதிவு

*இயக்குனர் மகேந்திரன் 1939 ஆம் ஆண்டு இளையான்குடியில் பிறந்தவர். தந்தை ஜோசப் செல்லையா ஆசிரியராக பணிபுரிந்தவர். தாயார் மனோன்மணி, கம்பவுண்டராக பணிபுரிந்தவர். இவருக்கு அலெக்ஸாண்டர் என பெயர் வைத்தனர்.*

*இளையான்குடியில் பள்ளிப்படிப்பை முடித்த மகேந்திரன், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் "இண்டர்மீடியட்'' படித்தார். அதன் பிறகு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் "பி.ஏ'' பொருளாதாரம் படித்தார்.*

*1958-ம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழா நடந்தது. அந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். விழாவில் எம்.ஜி.ஆர். முன்னிலையில் மகேந்திரன் பேசினார்.*

*"நம் கல்லூரியில் பலர் காதலிக்கிறார்கள். பின்னர் ஊராரிடம் அவமானப்படுகிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் சினிமாவில் காதலியோடு பாடுகிறார். ஊரே ரசிக்கிறது'' என்று பெசினார்.*

*இதை ரசித்து கேட்ட எம்.ஜி.ஆர், "நல்ல பேச்சு, நல்ல கருத்து, நகைச்சுவை உணர்ச்சியுடன் கூடிய விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்க தகுந்தவர், வாழ்க'' என்று எழுதி கையெழுத்திட்டு மகேந்திரனிடம் கொடுத்தார். கல்லூரியில் படிக்கும் போதே கையெழுத்து பத்திரிகை ஒன்றை மகேந்திரன் நடத்தினார். கல்லூரி நாடகங்களிலும் அவர் பங்கு கொள்வார்.*

*சட்டக் கல்லூரியில் படிக்க சென்னை வந்தவர், இனமுழக்கம் பத்திரிகையில் உதவி ஆசிரியர் வேலைக்கு சேர்ந்தார். அதில் சினிமா விமர்சனமும் எழுதினார்.*

*"இன்பக்கனவு'' நாடகத்தில் நடித்தபோது கால் எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆர், பூரண குணம் அடைந்து மீண்டும் நடிக்கப் போவது பற்றி அறிவிக்க, பத்திரிகையாளர்கள் கூட்டத்தை கூட்டினார்.*

*அந்தக் கூட்டத்துக்கு மகேந்திரன் சென்றுருந்தார். அவரைப் பார்த்த எம்.ஜி.ஆர், "நீங்கள் அழகப்பா கல்லூரி மாணவர்தானே'' என்று கேட்டார். மகேந்திரன், "ஆமாம்'' என்றார்.*

*"நாளை என்னை வீட்டில் வந்து பாருங்கள். உங்களுக்கு நல்ல வேலை தருகிறேன்'' என்றார், எம்.ஜி.ஆர்.*

*மறுநாள் காலை மகேந்திரன், ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் இருந்த எம்.ஜி.ஆர். வீட்டுக்கு சென்றார். மகேந்திரனுக்கு தன் வீட்டு மாடியில் தனி இடம் ஒதுக்கிக் கொடுத்து கல்கியின் "பொன்னியின் செல்வன்'' நாவலை திரைக்கதை எழுதச் சோன்னர் எம்.ஜி.ஆர்.*

*பொன்னியின் செல்வனை படமாக்கும் திட்டம் தள்ளிப் போனதால் தனது நாடக மன்றத்துக்காக ஒரு நாடகத்தை எழுதித் தரும்படி மகேந்திரனிடம் கூறினார் எம்.ஜி.ஆர்.*

*"அனாதைகள்'' என்ற நாடகத்தை எழுதித் தந்தார் மகேந்திரன். அந்த நாடகத்தை "வாழ்வே வா'' என்ற பெயரில் படமாக்க முடிவு செய்து கதாநாயகியாக சவித்திரியையும் ஒப்பந்தம் செய்தார். பைனான்சியர் இறந்ததால் படம் பாதியில் நின்றுவிட்டது.*

*இந்த நிலையில் தான் நடித்த "காஞ்சித் தலைவன்'' படத்தில் இயக்குனர் காசிலிங்கத்திடம் உதவி இயக்குனராக மகேந்திரனை எம்.ஜி.ஆர். சேர்த்துவிட்டார்.*

*1966-ம்ஆண்டு "நாம் மூவர்'' படத்திற்கு மகேந்திரன் கதை எழுதினார். படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து அதே தயாரிப்பில் வெளியான "சபாஷ் தம்பி'', "பணக்காரப்பிள்ளை'' ஆகிய படங்களுக்கு மகேந்திரன் கதை எழுதினார். சிவாஜி கணேசன் நடித்த "நிறைகுடம்'' படத்திற்கும் கதை எழுதினார்.*

*"நிறைகுடம்'' படம் நிறைவடைந்ததும், "துக்ளக்'' பத்திரிகையில் சினிமா விமர்சனம் எழுதி வந்தார். அங்கு "சோ''வை பார்க்க வந்த நடிகர் செந்தாமரையும், சிவாஜி நாடக மன்ற இயக்குனருமான எஸ்.ஏ.கண்ணனும்  மகேந்திரனிடம் ஒரு நாடகம் எழுதித்தரும்படி கேட்டனர்.*

*மிகவும் கண்டிப்பான போலீஸ் அதிகாரிக்கு ஒரு அயோக்கியன் மகனாக இருக்கிறான் என்று தொடங்கி கதையை சொன்னார் மகேந்திரன். உடனே அதை நாடகமாக எழுதித்தரும்படி செந்தாமரை கேட்டுக்கொண்டார்.*

*"இரண்டில் ஒன்று'' என்ற பெயரில் ஐந்து நாட்களில் நாடகத்தை எழுதி முடித்தார், மகேந்திரன். அந்த நாடகம் அரங்கேற்றமானது. எஸ்.பி.சவுத்ரி வேடத்தில் செந்தாமரை நடித்தார்.*
       
*நாடகத்தை பார்க்க வந்த சிவாஜி, "சிவாஜி நாடக மன்றம் மூலம் இந்த நாடகத்தை நடத்தலாம், அதில் எஸ்.பி.சவுத்ரியாக நான் நடிக்கிறேன்'' என்று கூறினார். "இரண்டில் ஒன்று'' என்ற பெயர் "தங்கப்பதக்கம்'' என்று மாற்றப்பட்டது. சிவாஜிகணேசன், எஸ்.பி.சவுத்ரியாக நடிக்க, மியுசிக் அகாடமியில் நாடகம் அரங்கேற்றப்பட்டது.  100-வது நாளாக நாடகம் நடந்தபோது, மகேந்திரனுக்கு சிவாஜிகணேசன் மோதிரம் அணிவித்தார்.*

*"தங்கப்பதக்கம்'' நாடகத்தை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக எடுத்தது. கதை-வசனம் மகேந்திரனுடையது. பி.மாதவன் டைரக்ட் செய்தார்.*

*எஸ்.பி.சவுத்ரி வேடத்தில் சிவாஜி வாழ்ந்து காட்டினார். படம் மகத்தான வெற்றி பெற்றது. இந்தப்படம் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது.*

*அதனைத் தொடர்ந்து "திருடி'' என்ற படத்திற்கு கதையும், "மோகம் முப்பது வருஷம்'' படத்திற்கு திரைக்கதை வசனமும் எழுதினார் மகேந்திரன்.*

*ஆடுபுலி ஆட்டம், வாழ்ந்து காட்டுகிறேன், வாழ்வு என் பக்கம், ரிஷிமூலம், தையல்காரன், காளி, அவளுக்கு ஆயிரம் கண்கள், சக்கரவர்த்தி, சொந்தமடி சொந்தம், நம்பிக்கை நட்சத்திரம் ஆகிய படங்களுக்கு கதை, வசனமும், நாங்கள், அழகிய பூவே ஆகிய படங்களுக்கு திரைக்கதை வசனமும், பருவமழை, பகலில் ஒரு இரவு, கள்ளழகர், கங்கா, ஹிட்லர் உமாநாத், சேலஞ்ச் ராமு (தெலுங்கு), தொட்டதெல்லாம் பொன்னாகும் (தெலுங்கு) ஆகிய படங்களுக்கு கதையும் எழுதினார், மகேந்திரன்.*

*இந்த நிலையில் ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார் மகேந்திரனுக்கு ஒரு படம் இயக்க வாய்ப்பு கொடுத்தார். அண்ணன், தங்கை சென்டிமெண்டை மையமாக வைத்து, உமா சந்திரன் எழுதிய நாவல் "முள்ளும் மலரும்.'' அதன் திரைக்கதை, வசனம், எழுதி இயக்கினார் மகேந்திரன்.*

*படத்தில் அண்ணனாக ரஜினிகாந்த், தங்கையாக ஷோபா நடித்தனர். முக்கிய வேடத்தில் சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி நடித்தனர். இளையராஜா இசையமைக்க பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்தார்.*

*"முள்ளும் மலரும்'' மெகா ஹிட் படமாக அமைந்தது. கதை-வசன கர்த்தாவாக இருந்த மகேந்திரன், இந்த ஒரே படத்தின் மூலம் மிகச்சிறந்த இயக்குனர் என்று புகழ் பெற்றார்.*

*புதுமைப்பித்தன் எழுதிய "சிற்றன்னை'' என்கிற குறுநாவலை "உதிரிப்பூக்கள்.'' படமாக இயக்கினார். சிறந்த கலைப்படைப்பாக பாராட்டுகளை குவித்த "உதிரிப்பூக்கள்'', வசூலையும் அள்ளிக் குவித்தது. படம் 25 வாரங்கள் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது.*

*"உதிரிப்பூக்கள்'' படத்தைத் தொடர்ந்து, மகேந்திரன் திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்ட் செய்த படம் "பூட்டாத பூட்டுக்கள்.''. அதன் பிறகு மோகன் -சுகாசினி அறிமுகமான "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' பட்த்கை இயக்கினார். 12-12-1980-ல் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது. சென்னையில், தொடர்ந்து ஒரு வருடம் ஓடியது.*

*"நெஞ்சத்தைக் கிள்ளாதே'' 1980-ம் ஆண்டின் சிறந்த மாநில மொழித் திரைப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது அசோக்குமாருக்கும், சிறந்த ஒலிப்பதிவாளருக்கான தேசிய விருது "பிரசாத்'' ஸ்டூடியோ எஸ்.ராமநாதனுக்கும் கிடைத்தது.*

*1982-ல் மாஸ்கோவில் நடந்த இந்திய கலாசார விழாவிலும், "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படம் திரையிடப்பட்டது. ரஷியா அரசாங்கம் இந்த படத்தை வாங்கி அந்த நாட்டின் தியேட்டர்களில் திரையிட்டது.*

*தொடர்ந்து மெட்டி, நண்டு, கண்ணுக்கு மை எழுது, அழகிய கண்ணே, ஊர் பஞ்சாயத்து, கைகொடுக்கும் கை ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார் மகேந்திரன்.*

*ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்து 1980ல் வெளியான "ஜானி.'' படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு கை கொடுக்கும் கை பட்த்தை எடுத்தார்.*

*தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் நிதி உதவியில் "சாசனம்'' என்ற படம், மகேந்திரனின், இயக்கத்தில் உருவானது. செட்டிநாட்டு கலாசாரத்தை பிரதிபலிக்கும் இந்தப் படத்தில் அரவிந்தசாமி, கவுதமி, ரஞ்சிதா, ஆகியோர் நடித்திருந்தனர்.*

*நல்ல சினிமாவிற்கு என்னை அர்ப்பணிப்பதே என்றைக்கும் எனது சாசனமாக இருக்கும் என்று சொல்லும் இயக்குனர் மகேந்திரனின் மனைவி பெயர் ஜாஸ்மின். இவர்களது மகன் ஜான். இவர் விஜய் நடித்த "சச்சின்'' படத்தை இயக்கியவர். டிம்பிள், அனுரீட்டா என்ற 2 மகள்கள் உள்ளனர்.*

*பள்ளி, கல்லூரி காலங்களில் ஒட்டப் பந்தய்ங்களில் கலந்து கொண்டார். சீனியர் விளையாட்டு வீரராக ஜொலித்த எல்.மகேந்திரனால் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரையே தனக்கு சூட்டிக் கொண்டார் மகேந்திரன்.*

*"மெட்டி'', "நண்டு'', "எனக்கு நானே எழுதிக்கொண்டது'' முதலான புத்தகங்களை மகேந்திரன் எழுதி உள்ளார். "உதிரிப்பூக்கள்'' திரைக்கதை-வசனம், புத்தகமாக வெளிவந்துள்ளது.*

*2016 - ஆம் ஆண்டு விஜய் நடித்த தெறி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மகேந்திரன் தொடர்ந்து, நிமிர், மிஸ்டர் சந்திரமவுலி, சீதக்காதி, பேட்ட, பூமராங் ஆகிய தமிழ்ப் படங்களிலும் கட்டமராயுடு என்கிற தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார்.*

*கடிகாரம் மற்றும் தங்க நகைகள் அணியும் வழக்கம் இல்லை,  மிக எளிமை விரும்பி!*

*கதை-வசனம் எழுதி, இயக்கும் படங்களின் முக்கியமான வேடத்துக்கு 'லட்சுமி’ என்று பெயர் சூட்டுவார். 'தங்கப்பதக்கம்’ செளத்ரியின் மனைவி, 'உதிரிப்பூக்களில்’ அஸ்வினி பெயர் லட்சுமிதான்*

*நடிகர்   செந்தாமரையின் பெயர் தான் லட்சுமி!*

*தனது வாழ்க்கையின் நன்றிக்கு உரியவர்களாக எம்.ஜி.ஆர், சிவாஜி, சின்னப்பா தேவர்,  சோ ஆகியவர்களைக் குறிப்பிடுவார். 'என்னை இது வரையில் நடத்தி வந்தது என் மனைவி ஜாஸ்மின் ‘ என நெகிழ்ச்சியோடு குறிப்பிடுவார்!*

*அவர் இயக்கிய 12 படங்களில் அவருக்கே பிடித்தது 'உதிரிப்பூக்கள்’, 'பிழைகள் குறைந்த படம்’ என்பார் சிரித்துக்கொண்டே

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

மகேந்திரன் எழுதி இயக்கிய கதை, வசனம் எழுதிய படங்கள்.


மகேந்திரன் எழுதி இயக்கிய கதை, வசனம் எழுதிய படங்கள்.

மகேந்திரன் இயக்கிய முதல்படம் முள்ளும் மலரும். ரஜினிகாந்த், சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி, ஷோபா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரஜினிக்கு சினிமாவில் திருப்புமுனை தந்த படமாகவும் அமைந்ததோடு மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிற்கு பாலுமகேந்திரா என்ற அற்புதமான ஒளிப்பதிவாளரையும் அறிமுகப்படுத்திய பெருமை மகேந்திரனைச் சேரும்.

மகேந்திரன் கதை, வசனம் எழுதிய படங்கள்:

01. நாம் மூவர் - கதை
02. சபாஷ் தம்பி - கதை
03. பணக்காரப்பிள்ளை - கதை
04. நிறை குடம் - கதை
05. திருடி - கதை
06. மோகம் முப்பது வருஷம் - கதை, வசனம்
07. ஆடு புலி ஆட்டம் - கதை, வசனம்
08. வாழ்ந்து காட்டுகிறேன் - கதை, வசனம்
09. வாழ்வு என் பக்கம் - கதை, வசனம்
10. ரிஷிமூலம் - கதை, வசனம்
11. தையல்காரன் - கதை, வசனம்
12. காளி - கதை, வசனம்
13. பருவமழை - வசனம்
14. பகலில் ஒரு இரவு - வசனம்
15. அவளுக்கு ஆயிரம் கண்கள் - கதை, வசனம்
16. கள்ளழகர் - வசனம்
17. சக்கரவர்த்தி - கதை, வசனம்
18. கங்கா - கதை
19. ஹிட்லர் உமாநாத் - கதை
20. நாங்கள் - திரைக்கதை வசனம்
21. சேலஞ் ராமுடு (தெலுங்கு) - கதை
22. தொட்டதெல்லாம் பொன்னாகும் (தெலுங்கு) - கதை
23. சொந்தமடி நீ எனக்கு - கதை, வசனம்
24. அழகிய பூவே - திரைக்கதை, வசனம்
25. நம்பிக்கை நட்சத்திரம் - கதை, வசனம்

மகேந்திரன் எழுதி இயக்கிய படங்கள்:

01. முள்ளும் மலரும்
02. உதிரிப் பூக்கள்
03. பூட்டாத பூட்டுக்கள்
04. ஜானி
05. நெஞ்சத்தைக் கிள்ளாதே
06. மெட்டி
07. நண்டு
08. கண்ணுக்கு மை எழுது
09. அழகிய கண்ணே
10. ஊர்ப்பஞ்சாயத்து
11. கை கொடுக்கும் கை
12. சாசனம்

Thanks.dinamalar

இந்திய சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர் மற்றும் தெறி பட நடிகர் மகேந்திரன் மரணம், அதிர்ச்சியில் திரையுலகம்

இந்திய சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர் மற்றும் தெறி பட நடிகர் மகேந்திரன் மரணம், அதிர்ச்சியில் திரையுலகம்.


மகேந்திரன் (பிறப்பு: சூலை 25, 1939 இறப்பு: ஏப்ரல் 2, 2019)[1] புகழ் வாய்ந்த தமிழ்த் திரை இயக்குநர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ஜெ. அலெக்சாண்டர். மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், அழகுணர்ச்சி மிகு காட்சியமைப்புகளுக்காகவும் இவரது திரைப்படங்கள் புகழ் பெற்றவை.

ஜே. மகேந்திரன்
J Mahendran at Veena S Balachander Felicitation.jpg
2016 ஆம் ஆண்டு மகேந்திரன்
பிறப்பு
ஜே. அலெக்சாண்டர்
சூலை 25, 1939
இளையான்குடி, தமிழ்நாடு,
இறப்பு
2 ஏப்ரல் 2019 (அகவை 79)
பணி
திரைப்பட இயக்குநர், திரைக்கதையாளர், வசனகர்த்தா, நடிகர்
செயல்பட்ட
ஆண்டுகள்
1966 – 2006, 2016 - 2019
பிள்ளைகள்
ஜான் மகேந்திரன்
Learn moreஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.
மகேந்திரன், புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு, உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். இது தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க திரைகதை, வசனம் போன்றவற்றை எழுதிவைத்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் இதனை திரைப்படமாக்க முடியாமல் போனது.[2]

திரைப் படைப்புகள்
தொகு
1978: முள்ளும் மலரும்
1979: உதிரிப்பூக்கள்
1980: பூட்டாத பூட்டுகள்
1980: ஜானி
1980: நெஞ்சத்தை கிள்ளாதே
1981: நண்டு
1982: மெட்டி
1982: அழகிய கண்ணே
1984: கை கொடுக்கும் கை
1986: கண்ணுக்கு மை எழுது
1992: ஊர்ப் பஞ்சாயத்து
2006: சாசனம்
இதர படைப்புகள்
தொகு
அர்த்தம் (தொலைக்காட்சி நாடகம்)
காட்டுப்பூக்கள் (தொலைக்காட்சி நாடகம்
கதை/வசனம்/திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்
தொகு
தங்கப்பதக்கம் - கதைவசனம்
நாம் மூவர் - கதை
சபாஷ் தம்பி - கதை
பணக்காரப் பிள்ளை - கதை
நிறைகுடம் - கதை
திருடி - கதை
மோகம் முப்பது வருஷம் - திரைக்கதை வசனம்
ஆடு புலி ஆட்டம் - கதை வசனம்
வாழ்ந்து காட்டுகிறேன் - கதை வசனம்
வாழ்வு என் பக்கம் - கதை வசனம்
ரிஷிமூலம் - கதை வசனம்
தையல்காரன் - கதை வசனம்
காளி - கதை வசனம்
பருவமழை -வசனம்
பகலில் ஒரு இரவு -வசனம்
அவளுக்கு ஆயிரம் கண்கள் - கதை வசனம்
கள்ளழகர் -வசனம்
சக்கரவர்த்தி - கதை வசனம்
கங்கா - கதை
ஹிட்லர் உமாநாத் - கதை
நாங்கள் - திரைக்கதை வசனம்
challenge ramudu (தெலுங்கு) - கதை
தொட்டதெல்லாம் பொன்னாகும் (தெலுங்கு) -கதை
சொந்தமடி நீ எனக்கு -கதை வசனம்
அழகிய பூவே - திரைக்கதை வசனம்
நம்பிக்கை நட்சத்திரம் -கதை வசனம்
சுவையான தகவல்கள்
தொகு
திரைப்பட இயக்குநராவதற்கு முன், பிறர் இயக்கிய திரைப்படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை எழுதி வந்தார்.
இனமுழக்கம், துக்ளக் போன்ற இதழ்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
மகேந்திரன் சினிமாவும் நானும் என்னும் நூலினை எழுதியுள்ளார். இது 2004ஆம் ஆண்டு வெளியானது.
திரையுலகில் ஒரு இடம் பெற முயற்சித்துக் கொண்டிருந்த நாட்களில், எம்.ஜி.ஆர். தமக்கு மாதச் சம்பளம் அளித்து கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்கு திரைக்கதை எழுதுமாறு பணித்ததாகவும், அதைத் தாம் பூர்த்தி செய்யவில்லை எனினும், எம்.ஜி.ஆர். அதைப் பற்றி ஏதும் கேட்காமலேயே தொடர்ந்து பண உதவி செய்து வந்ததாகவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார். எனினும், எம்.ஜி.ஆரின் எந்தப் படத்திற்கும் இவர் வசனமோ திரைக்கதையோ எழுதியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிவாஜி கணேசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். ரஜினியை வைத்து மூன்று படங்கள் இயக்கியுள்ளார். இவரது படங்களில் அதிகம் நடித்த நட்சத்திரம் அவரே.
மகேந்திரனின் முதல் படம் துவங்கி, அநேகமாக அவரது பல படங்களில் சரத்பாபு இடம் பெற்றார்.
கன்னட நடிகை அஸ்வினியை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் மகேந்திரன். படம்: உதிரிப் பூக்கள். பேபி அஞ்சுவும் மகேந்திரனின் அறிமுகமே.
கமலஹாசனின் தமையன் சாருஹாசனை திரைக்கு உதிரிப் பூக்கள் படத்தின் வாயிலாக அறிமுகம் செய்தவர் மகேந்திரன். மிகச் சிறந்த நடிப்பை வழங்கிய சாருஹாசன், பின்னர் ஒருகன்னடப் படத்திற்காக மிகச் சிறந்த நடிகருக்கான அனைத்திந்திய விருதினைப் பெற்றார்.
விஜயனை அறிமுகம் செய்தது இயக்குனர் பாரதிராஜா எனினும், அவருக்கு மறக்க இயலாத ஒரு வேடத்தை உதிரிப் பூக்களில் அளித்து, திரையுலகில் அவரைக் கதாநாயகனாக உயர்த்தியவர் மகேந்திரன். இதைத் தொடர்ந்து, பல படங்களில் விஜயன் கதாநாயகனாக நடித்தார்.
மகேந்திரனின் மிகச் சிறப்பான அறிமுகம் சுஹாசினி. நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தில் தனது நடிப்பாற்றலுக்காக எதிர்பார்க்கப்பட்ட தேசிய விருதை சுஹாசினி இழந்தார். (பின்னர் சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சிந்து பைரவி திரைப்படத்திற்காக இவ்விருதினை அவர் பெற்றார்.)
தாம் முதலில் இயக்கிய முள்ளும் மலரும் திரைப்படத்தில் தாம் நடிக்கவில்லை என்றாலும், அதில் ஒளிப்பதிவாளராக பாலு மகேந்திரா பணி புரிய மிகவும் உதவியவர் கமலஹாசன் என்றும் மகேந்திரன் குறிப்பிட்டதுண்டு. ஆயினும், மகேந்திரன் இயக்கத்தில் கமல் நடித்ததில்லை.
இவர் சமீபத்தில் தெறி படத்தில் வில்லனாக நடித்துள்ளார்

திங்கள், 7 ஜனவரி, 2019

2018 ஆம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் :


2018 ஆம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் :


*_💥சிறந்த படம் – மேற்குத் தொடர்ச்சி மலை_*

*_💥இயக்குநர் – மாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள்)_*

*_💥நடிகர் – தனுஷ் (வடசென்னை, மாரி 2)_*

*_💥நடிகை – த்ரிஷா (96)_*

*_💥இசையமைப்பாளர் – சந்தோஷ் நாராயணன் (வடசென்னை, பரியேறும் பெருமாள், காலா)_*

*_💥வில்லன் – நானா படேகர் (காலா)_*

*_💥வில்லி – வரலட்சுமி (சண்டக்கோழி 2, சர்கார்)_*

*_💥குணச்சித்திர நடிகர் – அமீர் (வடசென்னை)_*

*_💥குணச்சித்திர நடிகை – ஈஸ்வரி ராவ் (காலா)_*

*_💥நகைச்சுவை நடிகர் – யோகி பாபு (கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள்)_*

*_💥நகைச்சுவை நடிகை – ரேவதி (குலேபகாவலி)_*

*_💥அறிமுக இயக்குநர் – லெனின் பாரதி (மேற்குத் தொடர்ச்சி மலை)_*

*_💥அறிமுக நடிகர் – ஆதித்யா பாஸ்கர் (96)_*

*_💥அறிமுக நடிகை – ரைஸா வில்சன் (பியார் பிரேமா காதல்)_*

*_💥குழந்தை நட்சத்திரம் – தித்யா பாண்டே (லக்ஷ்மி)_*

*_💥ஒளிப்பதிவு – நீரவ் ஷா (2.0)_*

*_💥படத்தொகுப்பு – ஷான் லோகேஷ் (ராட்சசன்)_*

*_💥கதை – மாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள்)_*

*_💥திரைக்கதை – வெற்றி மாறன் (வடசென்னை)_*

*_💥வசனம் – பா.இரஞ்சித், மகிழ்நன் பா.ம, ஆதவன் தீட்சண்யா (காலா)_*

*_💥பின்னணிப் பாடகர் – அந்தோணி தாசன் (சொடக்கு மேல..)_*

*_💥பின்னணிப் பாடகி – சின்மயி (96)_*

*_💥தயாரிப்பு – மேற்குத் தொடர்ச்சி மலை (விஜய்சேதுபதி புரொடக்‌ஷன்ஸ்)_*

*_💥படக்குழு – 96_*

*💥பொழுதுபோக்குத் திரைப்படம் – கடைக்குட்டி சிங்கம்_*

மேலே பறிக்கப்பட்டது 2018 ஆனந்த விகடன் சினிமா விருதுகள் பட்டியல்.