ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

மகள்களைப் பெற்ற அன்பு அப்பாக்களுக்கு பாடல்களின் சமர்ப்பணம்- உலக மகள்கள் தினம் இன்று!


மகள்களைப் பெற்ற அன்பு அப்பாக்களுக்கு பாடல்களின் சமர்ப்பணம்- உலக மகள்கள் தினம் இன்று!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் மகள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. உலக அளவில் 28-ம் தேதியும் இது கொண்டாடப்படுகிறது. பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் நேற்று மகள்கள் தினமாகும். இந்த ஆண்டு மட்டும் செப்டம்பர் மாதத்தில் 5 ஞாயிற்றுக் கிழமைகள் வருகின்றன. அதனால் 4-வது ஞாயிற்றுக் கிழமையைக் கணக்கில் கொண்டு மகள்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

மகள்கள்.... எப்போதுமே ஆண் குழந்தைகளை விட அப்பாக்களுக்கு பிடித்தது பெண் குழந்தைகள்தான்... அதிலும், அம்மா திட்டினாலும் பெண் குழந்தைகளை அப்பாக்கள் எப்போதுமே விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள்.

மகள்களும் அப்படித்தான் பிறப்பது ஓரிடம்... திருமணத்திற்குப் பின்னர் மிச்ச வாழ்க்கை மற்றொரிடம் என்று இருந்தாலும் இரண்டு குடும்பங்களையும் ஒரு சேர நேசிக்கும் மனம் படைத்தவர்கள் பெண்கள்.

அப்படிப்பட்ட மகள்களை கொண்டாடும் தினம்தான் இன்று... "உலக மகள்கள் தினம்"... பெண் குழந்தைகளின் பெருமையை எடுத்துரைக்கும் சில பாடல்கள் இங்கே உங்களுக்காக படித்து ரசிக்க...

 ஆனந்த யாழை மீட்டுகிறாயடி:

ஆனந்த யாழை மீட்டுகிறாயடி:
'மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று' என்று முத்தத்திற்கு அழகான அர்த்தம் சொன்னவர் இயக்குனர் ராம். அவருடைய 'தங்க மீன்கள்' திரைப்படம் அப்பாவிற்கும், மகளுக்குமான ஆத்மார்த்தமான அன்பின் வெளிப்பாடாக அனைவரையும் கரைய வைத்தது. 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' என்ற அப்படத்தின் பாடல் மகள்களை நேசிக்கும் பல அப்பாக்களின் செல்போன் ரிங்க்டோன் இன்றும் என்று சொன்னால் மிகையாகது.

 ஆரிரோ ஆராரிரரோ இது தந்தையின் தாலாட்டு:
ஆரிரோ ஆராரிரரோ இது தந்தையின் தாலாட்டு:
'தெய்வத்திருமகள்' விக்ரமிற்கு எத்தனையோ படங்கள் பெருமையைத் தேடிக் கொடுத்திருந்தாலும் அவரை முழுமையான நடிகராக உணர வைத்த படம்.. மனநிலை குன்றிய பாசமான தந்தைக்கும், வெண்ணிலா போலவே ஜொலிக்கும் அழகான குழந்தையான 'நிலா' என்ற மகளுக்கும் இடையேயான பாசப்பிணைப்பினை எடுத்துக் காட்டிய படம்... இந்தப் படத்தில் பாடல்களை விட அவர்களுக்கு இடையேயான பாசம் இழையோடும் போது வெளிப்படும் பின்னணி இசையே அனைவரையும் கவர்ந்திழுத்தது.


 உனக்கென்ன வேணும் சொல்லு என் மகளே:

உனக்கென்ன வேணும் சொல்லு என் மகளே:
அனோஷ்கா என்ற பெண் குழந்தையின் அப்பாவான நடிகர் அஜித், திரையிலும் அன்பான அப்பாவாக ஜொலித்த திரைப்படம் 'என்னை அறிந்தால்'. அந்தப் படத்தில் சொந்த மகளாக இல்லாவிட்டாலும் அவ்வளவு அன்பான பாசத்தினைப் பொழியும் அப்பாவாக அவர் வாழ்ந்திருப்பார். 'உனக்கென்ன வேணும் சொல்லு' எல்லா மகள்களின் காதுகளிலும் ரீங்காரமாக ஒலிக்கும் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

 பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா:
பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா:
பிரகாஷ் ராஜூம், திரிஷாவும் உண்மையிலேயே ஒரு அப்பா, மகள் இருந்தால் எப்படி நண்பர்கள் போல் இருக்க வேண்டும் என்பதைச் சொன்ன ஆழமான திரைப்படம் 'அபியும் நானும்'... மகளுக்காக இரவெல்லாம் படிக்கும் தந்தை, காதலித்தவனையே மனம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் மகளுக்காக ஏற்றுக் கொள்ளும் பாத்திரத்தினை சரிவர செய்திருப்பார் பிரகாஷ்ராஜ். 'வா வா என் தேவதையே' என்ற பாடல் பெண் குழந்தையின் வளர்ச்சியையும் அதைக் கண்டு அப்பாவின் பூரிப்பையும் ஒரு சேர பதிவு செய்திருக்கும்..

 அன்பு மகள்களுக்கான தினம்:

அன்பு மகள்களுக்கான தினம்:
சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் முக்கால்வாசி அப்பா-மகள் பாசம் இதைவிட 1000 மடங்கு மேல்தான்... எல்லா மகள்களுக்கும், மகள்களைப் பெற்ற தந்தைகளுக்கும் இனிய மகள்கள் தின வாழ்த்துக்கள்....
Thanks one India.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக