தூக்குதுரை' வரலாறு தெரியுமா?
நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டியில் வாழ்ந்த ஜமீன்தார்கள் தங்கள் அரண்மனையின் பின்புறம் மகாதேவர் கோவில் என்ற கோவிலை கட்டி தினமும் வணங்கி வந்தனர். இந்த மகாதேவர் கோவிலில் உள்ள ஒரு தூணில் தூக்குதுரை என்ற பெரியசாமி தேவர் சிலை வடக்கு நோக்கி உள்ளது. முறுக்கிய மீசை, மிடுக்கான தோற்றம், தீர்க்கமான கண்கள், தலைப்பாகையுடன் காட்சியளிக்கும் இவர், சிங்கம்பட்டி ஜமீனின் 24வது பட்டம் ஆவார். இவர் சிறைபிடிக்கப்பட்டிருந்த தனது நண்பனைக் காக்க ஜெயில் வார்டனைக் கொலை செய்த குற்றத்துக்காக ஆங்கிலேய அரசால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர். கடந்த 17.10.1884ஆம் ஆண்டு தூக்கில் உயிர்நீத்த இவர் சிங்கம்பட்டி ஜமீன் வாரிசுகளில் சிறப்பானவர் என்பதால் இவருக்கு இந்த சிற்ப மரியாதை இந்த கோவிலில் செய்யப்பட்டது.
இதுவரை தூக்குதுரை என்றால் யார் என்றே பலருக்கு தெரியாமல் இருந்த நிலையில் தற்போது இந்த பெயர் கூகுளில் வைரலாகி இவருடைய வரலாறை அனைவரும் அறிந்து வருகின்றனர். 'விஸ்வாசம்' படத்தின் கதையும் இந்த நிஜ தூக்குதுரை கதையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக