செவ்வாய், 19 டிசம்பர், 2017

பி.எஸ்.சசிரேகா




பி.எஸ்.சசிரேகா

எழுபதுகளின் தொடக்கத்தில் அறிமுகமாகி தொண்ணூறுகளின் முற்பகுதி வரை தமிழ்த் திரையுலகில் ஏறக்குறைய இருபது ஆண்டுகள் பின்னணி பாடும் வாய்ப்புகளைப் பெற்றவர் பி.எஸ்.சசிரேகா.தீவிர இசை ரசிகர்கள் தாண்டி அத்துனை பெரிதாய் அறியப்படாத பின்னணிப் பாடகியான இவரின் பாடல்களைப் பற்றிச் சொன்னால் இதுவரை இவரைக் குறித்து அறியாதோருக்கு நிச்சயமாக வியப்பாக இருக்கும்.

சிறுமியாக இருந்த போதே, கேட்கிற பாடல்களை அப்படியே திரும்பப் பாடும் இவரின் கேள்வி ஞானத்தை வியந்த பலரும் ’சினிமாவில் பாட முயற்சிக்கலாம், அத்தனை அழகான குரல் வளம்’ என தொடர்ந்து ஊக்கப்படுத்த பதின்மத்தின் தொடக்கத்தில் இருந்த போதே, திரைப்பாடல் பாடுகிற வாய்ப்புத் தேடி பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்தவர்.

முறையான சங்கீதப் பயிற்சி இல்லாத ஒருவர் பின்னணி பாடும் வாய்ப்புப் பெறுவதென்பது எழுதுகளில் எல்லாம் யோசித்திரவே முடியாத விஷயம். அந்த அளவிற்கு பர்பெக்ஷனிஸ்ட் இசையமைப்பாளர்கள் உலவிய நேரம். இப்போதுள்ளது போல இலகுவான மெட்டமைப்புகளோ, டிராக்கில் பாடுவதோ, சுமாராக பாடினாலும் பூசி மெழுகி அழகாக்கிக் காட்டும் சாஃப்ட்வேர் சாகசங்களோ இல்லாத காலக் கட்டத்தில் கேள்வி ஞானத்தால் பாடுகிற திறமையைக் கொண்டு திரையுலகில் நுழைந்து வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார் என்கிற இடத்தில் பி.எஸ்.சசிரேகாவின் திறமையை நாம் உள்வாங்கிக் கொண்டு இந்தக் கட்டுரையை தொடரலாம்.

1973 ல் ஜி.கே.வெங்கடேஷ் அவர்களின் இசையமைப்பில் வெளியான பொண்ணுக்கு தங்க மனசு படத்தில் ‘தஞ்சாவூரு சீமையில’ என்ற பாடலை சீர்காழி கோவிந்தராஜன், ஜானகி ஆகியோருடன் இணைந்து பாடும் வாய்ப்பினைப் பெற்று தனது திரையிசைப் பயணத்தைத் தொடங்கியவருக்கு, அடுத்து அபூர்வ ராகங்கள் படத்தில் எம்.எஸ்.வியின் இசையில் வாணி ஜெயராமுடன் இணைந்து பாடிய ‘கேள்வியின் நாயகனே’ பாடல் எழுபதுகளின் முற்பாதியில் சொல்லிக் கொள்கிறார் போல அமைந்த பாடல். கர்னாட்டிக் இசையில் முறையான பயிற்சி பெற்ற வாணி ஜெயராமுடன் கர்னாட்டிக் இசையின் ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடலொன்றில் சசிரேகா மோதுவதே அவரின் திறமையை பறைசாற்றுவது போல இருக்கும். இப்பாடலை பொறுத்தவரை வாணி ஜெயராம் டாமினேட்டிங் செய்திருப்பார். ஆனாலும் கேள்வி ஞானத்தை மட்டுமே வைத்து அந்த அளவிற்கு போட்டியை கடுமையாக்கிய வகையில் சசிரேகா வியப்பிற்குரியவராகவே தெரிவார்.

1997ல் வெளிவந்த இன்று போல் என்றும் வாழ்க படத்தில் டி.எம்.எஸ்,பி.சுசீலா ஆகியோருடன் இணைந்து பாடிய ‘வெல்கம் ஹீரோ’,1978 ல் ‘ஒரு வீடு ஒரு உலகம்’ படத்தில் டி.எல்.மகாராஜனுடன் இணைந்து பாடிய ‘ரதிதேவி சன்னதியில் ரகசிய பூஜை’ ஆகியவை எம்.எஸ்.வியின் இசையில் சசிரேகாவின் பேர் சொல்லும் பாடல்கள். இந்தப் பாடல்களில் பி.சுசீலாவின் பாடும் முறையினை பிரதியெடுத்தார்போல பாடியிருப்பதையும், சில இடங்களில் சுசீலாவின் குரல் போலவே ஒலிப்பதையும் சசிரேகாவின் குரலில் கவனிக்கலாம்.சசிரேகாவின் ஆரம்ப கால குரலில் இப்படி சுசீலாவின் சாயல் நிறையவே தென்படும்.
 

எழுபதுகளின் பிற்பகுதியில் ராஜாவின் திரைப்பயணம் தொடங்கிய பிறகு சசிரேகாவிற்கு  நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின. சசிரேகா  அறிமுகமான ’பொண்ணுக்கு தங்க மனசு’படத்தின் பாடல் கூட ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராக இருந்த போது ராஜாவின் கை வண்ணத்தில் உருவான பாடல் என்று வாசித்த நினைவு. அவ்வகையில் நோக்க சசிரேகாவின் திறமை மீது ‘பொண்ணுக்கு தங்க மனசு’ காலத்திலிருந்தே ராஜாவிற்கு நம்பிக்கை இருந்திருக்க வேண்டும். அதன் வெளிப்பாடாகவே எழுதுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் ராஜா சசிரேகாவிற்கு வழங்கியிய வாய்ப்புகளைப் பார்க்கத் தோன்றுகிறது. அவற்றில் வட்டத்திற்குள் சதுரம் படத்தில் ஜானகியுடன் இணைந்து பாடிய ‘இதோ இதோ என் நெஞ்சிலே, காயத்ரி படத்தின் ‘வாழ்வே மாயமா, நல்லதொரு குடும்பம் படத்தின் ‘செவ்வானமே பொன்மேகமே’, லட்சுமி படத்தின் ‘மேளம் கொட்ட நேரம் வரும்’, ஒரு கிராமத்து அத்தியாயம் படத்தின் ‘பூவே இது பூஜைக் காலமே’ ஆகிய பாடல்கள் ராஜாவின் ஆரம்பகால இசையில் சசிரேகாவிற்கு அமைந்த ஹிட் பாடல்கள்.

பி.எஸ்.சசிரேகாவின் குரலை சட்டென அடையாளம் காணுவதில் சிரமம் இருக்கும். சுசீலா,ஜானகி,ஜென்சி மற்றும் எஸ்.பி.ஷைலஜா ஆகிய நால்வரின் குரலின் சாயலையும் கொண்டிருக்கும் ஒரு வித்யாசமான குரல்வளம் சசிரேகாவிற்கு. எனினும் அதைத்தாண்டிய ஒரு தனித்துவமான அடையாளமும் அதில் இருக்கும். ’ங்’,’ஞ்’,’ந்’ மற்றும் ‘ம’வரிசை என மெல்லினம் கலந்த சொற்களில் சசிரேகாவின் குரல் தனித்து அடையாளப்படும். இந்த மெல்லின சொற்கள் உச்சரிப்பின்படி பார்க்கும் போது தொண்ணூறுகளின் மின்மினியையும் சசிரேகாவோடு ஒப்பிடலாம். மின்மினிக்கும் சசிரேகாவிற்கும் குரலின் சாயலில் ஒற்றுமை இருக்காது. ஆனால் மின்மினியின் குரல் தனித்து அடையாளப்படுவதும் மெல்லின சொற்களின் போது உண்டாகும் அழகிய ஒலியில்தான். அவ்வகையில் இவ்விருவரின் குரலையும் ஒப்பிட்டு ஒரு சிந்தனை உள்ளோடும்.

சசிரேகாவிற்கு பிறகு பாட வந்தவர் எஸ்.பி.ஷைலஜா என்றாலும் ஷைலஜாவின் குரலை அடையாளம் தெரிந்து வைத்திருப்போருக்கு சசிரேகாவின் சில பாடல்களும் ஷைலஜாவினுடையதோ என குழப்பவும் செய்யும். காயத்ரி படத்தின் ‘வாழ்வே மாயமா’பாடல்கூட அப்படி ஒரு குழப்பத்தை உண்டு பண்ணும். இவ்விரு குரலிற்கும் இருக்கும் மெல்லிய வேறுபாட்டை பிரித்தறிய கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் ‘எம் புருஷந்தான் எனக்கு மட்டும்தான்’பாடல் உதவி புரியும். இவ்விருவரும் இணைந்து பாடியிருக்கும் இப்பாடல் சட்டென கேட்க ஒரே ஆள் பாடுவது போலவே ஒலிக்கும்.சற்றே கூர்ந்து கவனித்தால் ஷைலஜாவின் குரலைவிட சசிரேகாவின் குரல் Base தன்மை கூடுதலாக இருப்பது பிடிபடும். போலவே மெல்லின சொற்களின் உச்சரிப்பிலும் சசிரேகா தனித்துத் தெரிவதையும் அடையாளம் காணலாம்.சங்கர் கணேஷின் இசையமைப்பில் கானலுக்குக் கரையேது என்கிற படத்தில் இவ்விருவரும் இணைந்து பாடியிருக்கும் ‘ஒனக்கொரு புருஷன் வருவானா’என்கிற பாடலில் இவ்விரு குரலும் தனித்தனியே அடையாளப்படும் அளவிற்கு பதிவாகியிருக்கும். சங்கர் கணேஷின் இசையில் ‘ஒரு குடும்பத்தின் கதை’ படத்தில் ‘மலைச்சாரலில் இளம் பூங்குயில்’ பாடலில் ஒலித்த சசிரேகாவின் ஹம்மிங்கையும் இந்த இடத்தில் நினைவுப்படுத்துவதன் வழி எழுபதுகளின் மையத்தில் ஹம்மிங்கில் சசிரேகாவிற்கென்று ஓர் இடம் இருந்ததையும் பதிவு செய்ய தோன்றுகிறது.

மேற் சொன்ன பாடல்கள் பிரபலமானவை எனினும் எண்பதுகளின் ராஜாவின் பாடல்கள் வழி சசிரேகாவைப் பற்றி சொல்லும் போதே சசிரேகாவினைக் குறித்த ஆச்சர்யங்கள் உள்வாங்கக் கிடைக்கும். அப்படி ஓர் ஆச்சர்யத்தை அலைகள் ஓய்வதில்லை படத்தின் ‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்தே உறவே’ பாடல் நிச்சயம் கொடுக்கும். மிகச் சிறிய இப்பாடல் விதவிதமான மாடுலேஷன்களை சசிரேகாவின் குரல் தரிசிக்கக் கொடுக்கும். வேகமான தாளக்கட்டில் சொற்களை அடுக்கிக் கொண்டே குதூகலமாகப் பாடிக்கொண்டு போகிற போதும், தனன நனன நனன என ஜதி சொல்லி தத்தி தத்திப் பாடுகிற போதும் கேட்போரின் நெஞ்சத்தில் மகிழ்ச்சியை பரவவிடும் அக்குரல் பாடலின் இறுதியில் சோகமாக வெளிப்படும் போதும் நம்மையும் சோகத்தில் தள்ளும்.மென் சோகத்தை இயல்பிலேயே கொண்டிருக்கும் சசிரேகாவின் குரல் இந்தப் பாடலில் இறுதியில் இந்த மெட்டிற்கு அத்துனை வலிமை சேர்த்திருக்கும். பின்னணி இசையில்லாமல் ‘ கல்வி கற்க நாளை செல்ல அண்ணன் ஆணையிட்டார்’ என்கிற போது அவரின் குரலில் வெளிப்படும் எக்ஸ்பிரஷன் இவர் கேள்வி ஞானத்தால் பாடுகிறவர் என்பதை நம்பவே முடியாத படி இருக்கும். ஜென்சியின் குரலோடு ஒப்பிட்ட விஷயத்திற்கு இப்பாடலை ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.

இதே படத்தில் ‘தோத்திரம் பாடியே போற்றிடுவேன்’ என்கிற பிரார்த்தனைப் பாடலில் கோரஸோடு பாடிக்கொண்டே வந்து சட்டென தனித்து ‘தியாகமான தேவ அன்பே’ என்கிற இடத்தில் ஜென்சியின் சாயலை சசிரேகாவின் குரல் வாரி வழங்குவதை கவனிக்கலாம்.ஆனாலும் அது சட்டென தோன்றும் ஓர் ஒலிப்பிழையே, இருவரின் குரலின் அடையாளங்களும் பழகிவிட்ட பிறகு இந்த ஒலி மயக்கம் நிகழாது.

எண்பதுகளில் ராஜாவிடம் பி.எஸ்.சசிரேகா பாடிய அட்டகாசமான பாடல்கள் வரிசையில் எப்போதும் தனியிடம் பிடிக்கும் பாடல் ஒரு ஓடை நதியாகிறது படத்தின் ‘தென்றல் என்னை முத்தமிட்டது’பாடல். கே.ஜே.ஜேசுதாஸ், பி.ஜெயச்சந்திரன்,தீபன் சக்கரவர்த்தி,எஸ்.என்.சுரேந்தர் என அதிராத குரல் வளம் கொண்டோருடன் டூயட் பாடுகிற போது சசிரேகாவின் குரல் மிக நேர்த்தியான ஜோடிக்குரலாய் மின்னும். இந்த வரிசையில் இப்பாடலில் கிருஷ்ண சந்தரின் குரலோடு இணைந்து ஒலிக்கும் சசிரேகாவின் குரல் அற்புதத்தை நிகழ்த்தியிருக்கும். ராஜாவின் இசையில் சசிரேகா பாடிய மற்ற எந்தப் பாடலையும் விட இந்தப் பாடல் சசிரேகாவின் குரலின் தனித்துவத்தையும் , திறமையையும் பிரமாதமாக வெளிக்கொணர்ந்த பாடலாக எனக்குப் படும்.


1983யில் வெளிவந்த எத்தனை கோணம் எத்தனை பார்வை படத்தில் தீபன் சக்கரவர்த்தியுடன் இணைந்து பாடிய ‘விதைத்த விதை தளிர்த்து’ பாடல் பெரிய அளவில் ஹிட் ஆகாத பாடல் எனினும் ராஜாவின் ஆர்க்கஸ்ட்ரேஷன் சிறப்பாக அமைந்த இப்பாடலில் இந்த ஜோடிக்குரல் ஆங்காங்கே சிந்திச் செல்லும் ஹம்மிங் போர்ஷன்கள் அதிராத குரல் வளம் கொண்டோருடன் சசிரேகாவின் குரல் எத்துனை அழகுடன் மிளிரும் என்பதற்கு சான்றான ஒரு பாடல்.

 இதே காலகட்டத்தில் ராஜாவின் இசையில் சசிரேகாவின் குரல் அழகுடன் வெளிப்பட்ட இன்னொரு பாடல் பகவதிபுரம் ரயில்வே கேட் படத்தின் ‘தென்றல் காற்றும் அன்புப் பாட்டும்’என்கிற தனிப்பாடல். மெல்லிய சோகம் கலந்து பயணிக்கும் இப்பாடலை ஜென்சியின் ‘தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல், எஸ்.பி.ஷைலஜாவின் ‘சோலைக்குயிலே காலைக் கதிரே’ வகைமையில் வைத்து சிலாகிக்க வேண்டிய பாடல்.

எண்பதுகளின் தொடக்கத்தில் இப்படியான அற்புதமான பாடல்களை ராஜா வழங்கியிருந்தாலும் அதன் பிறகு 1987ல் வேலைக்காரன் படத்தின் ‘எனக்குத் தா உன் உயிரை எனக்குத் தா’ போல ஒன்றோ இரண்டோ பாடல்களைத்தான் கொடுத்திருந்தார். ஆனாலும் சசிரேகா என்னும் பாடகியின் திரைப்பயணத்தில் பெரிய இடைவெளி நிகழாத வகையில் எண்பதுகளில் பீக்கில் இருந்த டி.ஆரின் இசையில் பாடுகிற வாய்ப்பினையும் பெற ஆரம்பித்தார் சசிரேகா. டி.ஆரின் இசையிலும் சொற்ப எண்ணிக்கையிலான பாடல்களையே அவர் பாடியிருப்பினும் மிகவும் அட்டகாசமான பாடல்களாக அவை அமைந்திருந்தன.

தங்கைக்கோர் கீதம் படத்தின் ‘இது ராத்திரி நேரம் அம்மம்மா அம்மம்மா’ பாடலில் எஸ்.பி.பியின் விரக சேட்டையை அத்துனை எளிதில் மறக்க இயலுமா?. அப்பாடலில் ‘என்னங்க ம்ஹூம் என்னங்க’ என்று சரசமாடி  சசிரேகாவும் போட்டி போட்டுக்கொண்டு ரசிக்க வைத்திருப்பார்.இதே படத்தின் ‘பகலென்றும் இரவென்றும்’டி.ஆரின் அற்புத கம்போசிஷன்களில் ஒன்று. இப்பாடலில் ‘நீ பௌர்ணமி என் காதலி’போல யார் சாயலும் தொனிக்காத தனித்துவமான டி.ஆரின் பாடல் வரிகளை எஸ்.பி.பி கையாள்கிற அழகே பெரிய சுவாரஸ்யத்திற்குரியது. மெலடியாக பயணிக்கும் அந்த மெட்டில் ‘ஜிலு ஜிலு ஓடையிலே செவ்வந்தி ஆடையிலே’ என்று சசிரேகா எண்ட்ரி கொடுக்கையில் அப்படியே அள்ளிக்கொண்டு போவார்.அத்துனை அழகான குரலாக வெளிப்படும் அந்த ‘ஜிலு ஜிலு ஓடையிலே’ வரியில் சசிரேகாவின் குரல்.

டி.ஆரின் இசையில் மிகச் சிறந்த மெலடிகளாக நினைவு கூறத் தகுந்த பாடல்கள் வரிசையில் முன் வரிசையில் அமரும் தகுதியுடைய பாடல்களான உயிருள்ள வரை உஷாவின் ‘இந்திர லோகத்து சுந்தரி’மற்றும் உறவைக் காத்த கிளியின் ‘எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி’இரண்டும் டி.ஆரின் இசையில் சசிரேகாவிற்குக் கிடைத்த பொன்னான வாய்ப்புகள்.குறிப்பாக ‘இந்திர லோகத்து சுந்தரி’பாடலின் தொடக்கத்தில் வரும் ‘ஏலே லம்பரோ ஏலே லம்பரோ ஹோய்’என்று தொடங்கும் சசிரேகாவின் குரலை ரசிக்காத திரையிசை ரசிகர்களே இருக்க இயலாது. என் தங்கை கல்யாணியின் ‘போட்டானே மூணு முடிச்சித்தான்’ என்ற சோகப்பாடலும் டி.ஆரின் இசையில் சசிரேகா பாடியவற்றில் குறிப்பிடத் தகுந்த பாடல்.

எம்.எஸ்.வி, இளையராஜா உட்பட அன்றைய முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையிலும் இப்படியான ஹிட் பாடல்கள்  பாடும் வாய்ப்பினைப் பெற்றிருந்தாலும் அவை மிக அரிதாக அங்கொன்றும் இங்கொன்றும் என கிட்டிய வாய்ப்புகளாகவே இருந்ததால் சசிரேகாவின் பாடல்கள் நினைவில் நின்ற அளவிற்கு அவரின் பெயர் ரசிகர்களிடம் அத்தனை ரெஜிஸ்ட்டர் ஆகியிராத ஒரு நிலையே இருந்தது. அந்தச் சூழலில்தான் எண்பதுகளின் மையத்தில் இசையமைப்பாளர்கள் மனோஜ் - கியானின் வருகை தமிழ்த்திரையில் நிகழ்ந்தது. அதன் பிறகே பி.எஸ்.சசிரேகா என்கிற பெயர் தினமும் வானொலிகளில் ஒலிக்கப் பெறுகிற பெயராக மாறியது என்றால் மிகையில்லை. அதுவரை எந்த இசையமைப்பாளருக்கும் ஆஸ்தான பாடகி என்கிற அந்தஸ்த்தை அடைந்திராத சசிரேகா, மனோஜ் - கியானின் ஆஸ்தான பாடகி என்கிற அளவிற்கு அவர்களின் இசையில் தொடர் வாய்ப்புகளைப் பெற்று ஹிட் மேல் ஹிட்டாக கொடுக்க ஆரம்பித்தார். குறிப்பாக ஆபாவாணன் திரைக்கதை அமைப்பில் வந்த அநேக படங்களில் இவரின் குரல் பிரதான இடத்தைப் பிடித்தது.

ஊமை விழிகள் படத்தின் 'மாமரத்து பூவெடுத்து', 'ராத்திரி நேரத்து பூஜையில்', 'கண்மணி நில்லு காரணம் சொல்லு' என ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட ஜானர்களில் தனது வெர்சட்டாலிட்டியை மனோஜ் கியானின் இசை வழி நிரூபித்து பிரகாசிக்க ஆரம்பித்த சசிரேகா, தொடர்ந்து உழவன் மகன் படத்திலும் 'உன்னை தினம் தேடும் தலைவன்', 'சொல்லித் தரவா' ,'ஏறா மலைதனிலே குறிஞ்சிப் பூவு' என மூன்று கலக்கலான பாடல்களைப் பாடும் வாய்ப்பினைப் பெற்று கலக்கியிருந்தார். இவற்றில் டி.எம்.எஸ் உடன் பாடிய 'உன்னை தினம் தேடும் தலைவன்' பாடலில் 'துணிவிருந்தால் பாட முடியும்' என்று மேற்கத்திய சாயலில் ஒலிக்கிற சசிரேகாவின் குரல் ஆச்சர்யப்படுத்தும். இதே படத்தின் 'ஏறா மலைதனிலே' பாடலில் 'வரகுச் சம்பா கெடைக்கலே ஓ ஓ ஓ' என்கிற வரியில் இறுதியில் 'ஓ ஓ ஓ' என்கிற போது சசிரேகா பாடும் தொனி அத்துனை வசீகரமாக இருக்கும். இப்படியெல்லாம் வித்தியாசமான இசைக்குறிப்புகள் அமைகிற இடத்தில் ஒரு பாடகரிடமோ பாடகியிடமோ வெளிப்படுகிற தனித்தன்மைகளில்தான் ஒரு பாடகனுக்கோ பாடகிக்கோ ரசிகன் ஆகி விடுகிற ரசவாதம் நிகழ்வதாக என்னளவில் ஓர் எண்ணம் உண்டு.

மனோஜ் - கியானின் இசையில் சூப்பர் டூப்பர் ஹிட்டான ஆல்பம் செந்தூரப் பூவே. இப்படத்தில் 'செந்தூரப் பூவே இங்கு தேன் சிந்த வா' , 'ஆத்துக்குள்ள ஏலேலோ அத்தி மரம்' , ' யாரு அடிச்சா சொல்லி அழு' ,'முத்துமணி பல்லாக்கு' என சசிரேகாவின் குரலே மொத்த ஆல்பத்திலும் பிரதானமாக அமைந்திருந்தது. இப்படம் ரிலீஸான போது ஆரம்பப் பள்ளிச் சிறுவன் நான். முதன் முதலில் பிரமாண்டம் என்கிற விஷயத்தை திரையில் பார்த்து வியந்த இந்தப் படத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிக்கு எதிரே இருக்கும் நீர் பரப்பில் நீராடியபடி 'செந்தூரப் பூவே' என்று நிரோஷா பாடுகிற போது அந்தத் தியேட்டர் எங்கும் ஒலித்த கணீர் ஒலி இப்பவும் உணர முடிகிறது. அந்தப் படத்தில் கிளைமேக்ஸில் ரயிலைப் பிடித்துவிட விஜயகாந்த் ஓடி வருகிற காட்சியும், இந்த செந்தூரப் பூவே பாடலில் ஒலித்த கணீர் குரலுமே அப்படத்தினை ஒட்டிய நாஸ்ட்டால்ஜியாவில் சட்டென நினைவில் வருபவையாக இருக்கின்றன. இதே படத்தின் 'ஆத்துக்குள்ள ஏலேலோ' பாடலில் 'சேத்துக்குள்ள ஏலேலோ செம்பகப் பூ' என்று பாடுகிற சசிரேகாவின் குரலைக் கவனித்தால் அவருக்கென்று ஒரு தனித்த ஐடெண்ட்டிடியை இந்தக் காலகட்டத்தில் அந்தக் குரல் தகவமைத்துக் கொண்டுவிட்ட அம்சத்தைக் கவனிக்கலாம்.

மனோஜ் - கியான் இருவரும் மனோஜ் சரண், கியான் வர்மா என தனித்தனியே பிரிந்த பிறகும் இருவரின் இசையிலும் பாடுகிற வாய்ப்புகளையும் சசிரேகா பெற்றுக்கொண்டிருந்தார். கியான் வர்மாவின் இசையில் இணைந்த கைகள் படத்தின் ’இது என்ன முதலிரவா’, சத்தியவாக்கு படத்தின் ’வா மாமா ஒண்ணு தா மாமா’ ஆகியவை கியான் வர்மாவின் இசையில் சசிரேகா பாடிய குறிப்பிடத் தகுந்த பாடல்கள்.

1992ல் வெளிவந்த ’அண்ணன் என்னடா தம்பி என்னடா’ படத்தில் கியான் வர்மா சசிரேகாவிற்கு மூன்று பிரமாதமான மெலடிகளை வழங்கியிருந்தார். ‘ஆச மேல ஆச வச்சி’ என்ற விரகதாப டூயட், கும்மி வகை மெட்டில் கதை சொல்லுவதைப் போல அமைந்த ’நான் என்ன சொல்ல’ மற்றும் ‘சின்ன சின்னமணி’ என்ற தாலாட்டு வகை பாடல் என மூன்றும் மிகப் பிரமாதமான மெட்டமைப்பாக, கேட்டதும் ஈர்க்கும் வகையில் அமைந்தும் இந்தப் படம் பெரிய ரீச் ஆகாததால் பெரிதாக அடையாளம் காணப்படாமல் போன நல்ல பாடல்கள்.

இந்தப் படத்தின் ‘ஆச மேல ஆச வச்ச மச்சான்’ பாடலை சசிரேகாவுடன் இணைந்து பாடியிருப்பது பாடகர் ஹரிஹரன். ரோஜாவின் ’தமிழா தமிழா’விற்குப் பிறகு பம்பாயின் ’உயிரே உயிரே’ விலேயே கவனித்த ஹரிஹரனிடம் இடையில் இப்படி ஒரு தெம்மாங்கு மெட்டு வந்திருப்பது அநேகருக்குத் தெரியாத விஷயம். நாட்டுப்புற சாயலில் ‘மாரியம்மே தேரு’ என்று ஹரிஹரன் உச்சரிப்பதிலேயே வித்யாசமான அழகினைக் கொண்டிருக்கும் இப்பாடல். ரோஜாவும், அண்ணன் என்னடா தம்பி என்னடாவும் 1992 ல் ஒரு சில மாதங்கள் இடைவெளியில் வெளியானவை. இப்பாடலைக் கேட்கிற போது இதில் ஒலிக்கிற ஹரிஹரன் குரலின் இளமைத் தன்மையை ஒப்பு நோக்க தமிழில் ஹரிஹரனுக்கு இதுகூட முதல் பாடலாக இருந்திருக்கலாம் என்கிற ஓர் ஐயமும் உண்டு.

இதே படத்தின் ‘சின்ன சின்னமணி’பாடலின் வழியாக இன்னொரு சுவாரஸ்யமும் நினைவில் எட்டிப்பார்க்கிறது. பல பின்னணிப் பாடகிகளின் குரலின் சாயலை தரிசிக்கக் கொடுக்கும் தன்மை கொண்ட சசிரேகாவின் குரலினை பிரித்து அடையாளம் கண்டுவிட்ட பிறகும் ஒரே ஒரு பின்னணிப் பாடகியின் குரலோடு இப்பவும் மிகச் சரியாகப் பிரித்து அடையாளம் காண முடியா நிலை நீடிக்கிறது. கிட்டத்தட்ட சசிரேகாவின் குரலை குளோன் செய்தது போல ஒலிக்கும் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்  பின்னணிப் பாடகி வித்யா.

சசிரேகாவிற்கு வாய்ப்புகளை வழங்கியது போல வித்யாவிற்கும் சொல்லிக்கொள்கிறார் போன்ற பாடல்களை வழங்கியிருக்கிறார்கள் மனோஜ்-கியான். மேற்சொன்ன இவ்விரு குரல்களின் அடையாளக் குழப்பத்தை உணர வித்யாவின் குரலில் வந்த உரிமை கீதம் படத்தின் ‘மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்’மற்றும் உழவன் மகனின் ‘செம்மறி ஆடே செம்மறி ஆடே’ சிறந்த உதாரணங்கள். இணைந்த கைகள் படத்தின் ‘மலையோரம் குயில் கூவக் கேட்டேன்’ மற்றும் ‘சின்னப்பூவே சின்னப்பூவே கோபம் கொள்ளாதே’ஆகிய பாடல்களில் ஒலிப்பதும் வித்யாவின் குரலே.

இப்படி ஒரு குழப்பத்தினை உண்டு பண்ணும் இக்குரல்களை வைத்து கியான் வர்மா கொடுத்த ஃபீமேல் டூயட்தான் இந்தச் ‘சின்ன சின்னமணி’ பாடல். இருவர் பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னாலுமே நம்ப முடியாத ஒரு பாடல் இது. இப்படி ஒரே பாடலில் இக்குரல்களை ஒலிக்கக் கேட்கையில் ‘மீசை வச்சா சந்திரன், மீசையில்லாட்டி இந்திரன்’வகையில் கவனித்த வேறுபாடு எஸ்.பி.ஷைலஜாத்தனம் தூக்கலாக அதாவது கீச் தன்மை அதிகமாக தென்பட்டால் வித்யா, போல்டாக ஒலித்தால் சசிரேகா என்று ஒரு மெல்லிய வித்தியாசம் உணரக் கிடைத்தது.சசிரேகாவின் குரல் எந்தக் குரல்களில் சாயல்களையெல்லாம் கொண்டிருந்ததோ கிட்டத்தட்ட அந்தக் குரல்கள் அநேகருடனும் இணைந்து பாடியிருக்கும் ஒரு விஷயமும் ஒரு சுவாரஸ்யத்திற்காக இந்த இடத்தில் நினைவு கூறத் தோன்றுகிறது.

மனோஜ் சரணின் இசையில் ஊழியன் படத்தில் ‘எல்லோருக்கும் நல்லவன்’ என்ற பாடலில் எஸ்.பி.பி பெரும்பகுதியை கையாள சசிரேகாவும், மின்மினியும் ஆளுக்கொரு சரணத்தில் இரண்டு வரிகளில் எட்டிப் பார்ப்பார்கள். மெல்லின சொற்களின் உச்சரிப்புகள் வழி சசிரேகாவையும் மின்மினியையும் ஒப்புமைப்படுத்திய விஷயத்தை ஒப்பிட்டுப் பார்க்க இப்பாடலைக் கேட்கலாம். (மனோஜ் சரண் பின்னாளில் மனோஜ் பட்நாகர் என்ற பெயரில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தது நினைவிருக்கலாம்).

1985 ல் சிவாஜி – பிரபு இணைந்து நடித்த வெளிவந்த ’நாம் இருவர்’ படத்தில் கங்கை அமரன் இசையில் பி.ஜெயச்சந்திரனுடன் இணைந்து பாடிய அழகிய மெலடியான ‘திருவிழா திருவிழா இளமையின் தலைமையில் ஒரு விழா’, 1986ல் எம்.எஸ்.வியின் இசையில் வெளிவந்த ’கண்ணே கனியமுதே’ படத்தில் கே.ஜே.ஏசுதாசுடன் பாடிய ‘நின்னையே ரதியென்று’ மற்றும் ராமராஜன் நடிப்பில் உருவான ‘காவலன்’ படத்தில் ராஜேஷ் கண்ணாவின் இசையில் மலேசியா வாசுதேவனுடன் இணைந்து எரோட்டிக் ஃபீலில் புகுந்து விளையாடிய ‘அள்ளி அள்ளி தெளிக்குதே மழதான் மழதான்’ ஆகியவை சசிரேகாவின் குரலில் வந்த கவனிக்கத் தகுந்த பாடல்கள்.

சித்தார்த்தா என்ற அறிமுக இசையமைப்பாளரின் இசையில் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் வெளியான முற்றுகை திரைப்படத்தில் இவர் பாடிய 'கன்னி மனம் ஒண்ணு இங்கே கலங்கி நிக்குது தந்தானே' பாடலை அன்றைய தொண்ணூறுகளின் இசையமைப்பாளர்கள் கவனித்திருந்தால் இன்னும் பல பாடல்கள் அக்குரலில் தொண்ணூறுகளிலும் கிடைத்திருக்கும். அத்தனை இளமையோடும் தனித்துவமான அடையாளத்தோடும்  இப்பாடலில் ஒலித்திருக்கும சசிரேகாவின் குரல். ஆபாவாணன் திரைக்கதையிலான படம் என்பதால் செண்டிமெண்டாக சசிரேகாவின் குரலை அவர் இப்படத்திற்கு பரிந்துரை செய்திருப்பாரோ என்று கூட ஓர் எண்ணம் இப்பாடல் குறித்த நினைவுடன் எட்டிப் பார்க்கும்.

மனோஜ், கியான் இருவரின் வாய்ப்புகள் தமிழில் குறைந்த பிறகு சசிரேகாவிற்குமான வாய்ப்புகளும் குறைந்துவிட்டிருந்த நிலையில் கிட்டத்தட்ட அவரை மறந்தே விட்ட சூழலில் 1993 ல் கிழக்குச் சீமையிலே படத்தில் ‘மானூத்து மந்தையில’பாடலினைப் பாடும் வாய்ப்பினை ரஹ்மான் சசிரேகாவிற்குக் கொடுத்திருந்தார். என் நினைவின்படி அதுவே திரையில் பாடிய அவரின் இதுவரைக்குமான கடைசி பாடல். மிக சிறிய வயதிலேயே பாடல் பாட வந்த இவர், தனது வயது முப்பதுகளில் இருந்த போதே வாய்ப்பின்றி போனது சோகம்.

சசிரேகா, பின்னணி பாடிய காலத்திலும் பெரிய அளவில் பிஸியான பாடகி என்கிற இடத்தில் இல்லாததால் திரைத்துறையில் இயங்கிய அதே நேரத்தில் மெல்லிசை குழுக்களிலும் நட்சத்திரப் பாடகியாக பாடிக்கொண்டிருந்தார். அவரின் வருமானத்திற்கு உதவி புரிந்தது இந்த மேடை பாடகி அவதாரம்தான் என்றால் மிகையில்லை. சில வருடங்களுக்கு முன், கலைஞர் தொலைக்காட்சியில் வானம்பாடி என்னும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியின் நடுவரான எஸ்.பி.பி சசிரேகாவிடம் ”இப்போது பாடுகிறவர்களை ஒப்பிட உன் திறமைக்கு குறைந்த பட்சம் இன்னும் ஐநூறு பாடல்களாவது கிடைத்திருக்கணும்” என்றார். இதைக் கேட்டதும் “உங்களிடமிருந்து வந்த இந்த வார்த்தைகள் போதும் அண்ணா, பெரிய விருது வாங்கிய சந்தோஷம்” என்று சிரித்தார். ஆனாலும் அந்த சிரிப்பில் வேதனையே மேலோங்கியிருந்தது.

தற்போது, ஏசுவின் புகழ் பரப்பும் தொலைக்காட்சிகளில் சசிரேகாவை அடிக்கடி காணலாம். இப்பவும்கூட அதே குரல்வளத்தோடு பாடிக்கொண்டிருக்கிறார். இன்றைய ட்ரெண்டிற்கு இவரால் பாட இயலுமா தெரியாது, ஆனாலும் இமான் போன்ற இசையமைப்பாளர்களின் எண்பது பாணி பாடல்களில் இவரை பயன்படுத்தலாம், இன்றைய சூழலில் வித்யாசமான குரலாக அடையாளப்படுவதற்காக வாய்ப்புகளை இப்பவும் இவரின் குரல் கொண்டிருக்கிறது.

செவ்வாய், 12 டிசம்பர், 2017

ரஜினி ஸ்டைல்: 67,சுவாரஸ்ய தகவல்கள்..



ரஜினி ஸ்டைல்: 67,சுவாரஸ்ய தகவல்கள்..

*12/12/2017- இன்று, நடிகர் ரஜினிகாந்தின் 68-ஆவது பிறந்தநாள் அவர் குறித்த சுவாரஸ்யமான 67 தகவல்கள் இவை..!*

1. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1950 ஆம் ஆண்டு 12-ஆம் தேதியன்று பிறந்த ரஜினிகாந்த், கருப்பு வெள்ளை, கலர், 3டி, மோஷன் கேப்ச்சரிங் போன்ற அனைத்து வகை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்ட திரைப்படங்களிலும் நடித்த முதல் இந்திய நடிகர் ஆவார்.

2. திரைப்பட வாய்ப்புகளுக்காக தனது 26-ஆவது வயதில் ரஜினிகாந்த் சென்னை வந்தார்.

3. ரஜினியின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட்.

4. 22 ஆண்டுகளுக்கு முன், சென்னையில் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு வீடு திரும்பிய மூன்று ரசிகர்கள் விபத்தில் உயிரிழந்தனர். அதிலிருந்து ரஜினி தனது பிறந்தநாளை சென்னையில் கொண்டாடுவதில்லை.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

5. ஐந்தாவது வயதில் தனது தாயை இழந்த ரஜினி, ஆரம்ப காலத்தில், கர்நாடகாவில் பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார்.

6. அவரது தாய் மொழி மராத்தியாக இருந்தாலும், இதுவரை ஒரு மராத்தி படத்திலும் ரஜினிகாந்த் நடித்ததில்லை.

7. திரைத்துறையில் நுழைவதற்கு முன், கன்னடத்தில் பல்வேறு நாடக நிகழ்ச்சிகளில் ரஜினி நடித்துள்ளார்.

8. போதிய பண வசதி இல்லாததால் நடிப்பு பயில முடியாமல் இருந்த ரஜினியை, மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூடில் சேர்த்து உதவி செய்தவர் அவரது நெருங்கிய நண்பர் பஹதூர்.

9. நாடக நிகழ்ச்சி ஒன்றில் முதல்முறையாக ரஜினியை பார்த்த இயக்குனர் கே.பாலச்சந்தர் "அபூர்வ ராகங்கள்"(1975) படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் அவரை நடிக்க வைத்தார்.

10. அபூர்வ ராகங்கள் படத்திற்கான நடிகர்கள் தேர்வில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், சிவாஜி கணேசனை போல நடித்து காண்பித்தார். அதனை பார்த்த கே.பாலச்சந்தர் ரஜினியை தமிழ் கற்றுக் கொள்ளும்படி கூறினார்.

11. கே.பாலச்சந்தர்தான் தன்னுடைய வழிகாட்டி என அடிக்கடி கூறுவார் ரஜினி. எனினும், அவரது பாணி மற்றும் சினிமா வாழ்க்கையை மாற்றியமைத்தது இயக்குனர் எஸ்.பி. முத்துராமன்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

12." நிம்மதியாக ஒரு கண்டக்டராக இருந்த சிவாஜி ராவை, நீங்கதானே ரஜினிகாந்தாக ஆக்கினீங்க? திடீர்னு வந்த புகழ் போதையைத் தாங்கிக்கக் கூடிய சக்தி எனக்கில்லை சார்'' என்று தேம்பித் தேம்பி ஒரு குழந்தையைபோல் ரஜினி அழுததாக ஒருமுறை கே.பி குறிப்பிட்டிருந்தார்.

13. எஸ்.பி. முத்துராமனின் இயக்கத்தில் 25 படங்களில் நடித்துள்ளார் ரஜினி.

14. "ரஜினி வைரம் என்றால், நானும் கே.பியும் அவனை மிளிரச் செய்தோம். கே.பி வைரத்தை கண்டுபிடித்தார். நான் அதனை மெருகேற்றினேன்", என்று கூறியிருக்கிறார் எஸ்.பி.முத்துராமன்.

15. கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஏழு படங்கள் ரஜினி நடித்துள்ளார்.
கமல், ரஜினி, சீமான், ஸ்டாலின் பற்றி என்ன சொல்கிறார் பிரகாஷ் ராஜ்?
அரசியலுக்கு வர ரஜினி அவசரம் காட்டாதது ஏன்?
.
16 ."கே.பாலச்சந்தர் எனக்கு வழிகாட்டி மட்டுமல்ல. அவர் என் தந்தை போல" என ஒருமுறை ரஜினி கூறியிருந்தார்.

17 ."என்னை திருத்தவும் கண்டிக்கவும் உரிமையுள்ள ஒரே இயக்குநர் நீங்கதான்" என்றும் கே.பியிடம் ரஜினி கூறினார்.

18. அபூர்வ ராகங்கள் வெளியான அடுத்த ஆண்டே, கன்னடத்தில் 'கத சங்கமா' என்ற படத்தில் அவர் நடித்தார்.

19. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, வங்காளம் மற்றும் ஆங்கில மொழிப் படங்களில் ரஜினி நடித்துள்ளார்.

20. ரஜினி ஆங்கில மொழியில் நடித்த முதல் மற்றும் ஒரே படம் "ப்ளட்ஸ்டோன்" 1988 ஆம் ஆண்டு வெளியானது.

21. "அவர்கள்", "மூன்று முடிச்சு", "16 வயதினிலே" படங்களில் தொடர்ந்து வில்லனாக நடித்த ரஜினி, அப்போதே மக்கள் மனதில் இடம்பிடிக்கத் தொடங்கினார்.

22. கமலும் ரஜினியும் ஒன்றாக இணைந்து 12 படங்களில் நடித்துள்ளனர். அதில் 9 தமிழ் படங்கள், 2 தெலுங்கு மற்றும் ஒரு இந்தி மொழிப்படம் ஆகும்.

23. இருவரும் இணைந்து நடித்த கடைசி படம் "நினைத்தாலே இனிக்கும்"

24. முதன் முதலில் முழு கதாநாயகனாக ரஜினிகாந்த் அறிமுகமாகிய திரைப்படம் பாஸ்கர் இயக்கிய "பைரவி"(1978).

25. பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த பல கதாப்பாத்திரங்களை தமிழில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

26. ஸ்டைல், நடை, உடை பாவனைகளிலேயே தீவிர ரசிகர் கூட்டத்தைப் ரஜினி பெற்றார்.

27. "ஆறிலிருந்து அறுபது வரை"(1979), "ஜானி"(1980) போன்ற திரைப்படங்கள் ரஜினியின் நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்திய திரைப்படங்கள் என அப்போது கருதப்பட்டது.

28. நடிகைகள் ஸ்ரீபிரியா மற்றும் ஸ்ரீதேவியுடன் இணைந்து அதிக படங்கள் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.

29. கே.பாலச்சந்தரின் தயாரிப்பு நிறுவனம் முதன் முதலாக தயாரித்து, எஸ்.பி. முத்துராமன் இயக்கிய "நெற்றிக்கண்"(1981) திரைப்படம், ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

30. இவர் முதன்முதலாக மூன்று வேடங்களில் நடித்த திரைப்படம் "மூன்று முகம்"(1982).

31 ."நல்லவனுக்கு நல்லவன்" திரைப்படத்திற்கு முதன் முதலில் 'ஃபிலிம்ஃபேர்' விருது பெற்றார் ரஜினி.

32. ரஜினி திரைக்கதை எழுதி, நடித்த "வள்ளி" திரைப்படம் 1993ல் வெளியானது.

33. 90களில் வெளிவந்த தளபதி, மன்னன், அண்ணாமலை, உழைப்பாளி, வீரா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா போன்ற படங்கள் வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றிப் படங்களாக கருதப்பட்டது.

34. "மன்னன்" படத்தில் 'அடிக்குது குளிரு' என்ற பாடல்தான் ரஜினி சினிமாவில் பாடிய முதல் பாடல்.

35. ''ரஜினி ஸ்டைலை யாராலும் செய்ய முடியாது அது மிகவும் கடினம்'' என்று இந்தி நடிகர் ஷாருக்கான் ஒருமுறை கூறியிருக்கிறார்.

36. "நா ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி", "பேர கேட்டாலே சும்மா அதிருதுல" போன்ற ரஜினியின் பன்ச் டயலாக்குகள் தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளில் இன்றும் எதிரொலிக்கின்றன.

37. 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தார்.

38. "அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கடவுளாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது" என்று அப்போது கூறியிருந்தார் ரஜினி.

39. 1996லிருந்து, ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு தமிழ்நாட்டு மக்களிடையே தொடர்ந்து இருந்து வருகிறது.

40. 2008ல் தனி கட்சி ஆரம்பித்த ரஜினி ரசிகர்கள், அவரை அரசியலுக்கு வரும்படி வற்புறுத்த, ரஜினி அதனை மறுத்துவிட்டார்.

41. தமிழகத்துக்கு காவிரி நீர் தர மறுத்த கர்நாடகாவின் முடிவை எதிர்த்து 2002 ஆம் ஆண்டு ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார் ரஜினி.

42. இவர் நடித்து இங்கு சூப்பர் டூப்பர் ஹிட்டான "முத்து" திரைப்படம் ஜப்பானில் வெளியாக, அங்கு ஏராளமான ரசிகர்களை பெற்றார் ரஜினி.

43. ரஜினிகாந்தின் 100-ஆவது படம் ஸ்ரீ ராகவேந்திரர். 90 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பில் ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் யாரும் புகை பிடிக்கவில்லை, அசைவ உணவு எடுத்துக்கொள்ளாமல் விரதம் இருந்தனர்.

44. "அன்புள்ள ரஜினிகாந்த்" படத்தில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, அவருக்கு ஜோடியாக "எஜமான்" படத்தில் நடித்திருந்தார்.

45. 2002 ஆம் ஆண்டு வெளியான "பாபா" திரைப்படம் வணிக ரீதியாக பெரும் தோல்வி அடைய, தனது சொந்த பணத்தை விநியோகஸ்தர்களுக்கு அளித்து அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டினார் ரஜினிகாந்த்.

46. ஒவ்வொரு படம் முடிந்த பின்னும், இமய மலைக்கு செல்வதை வழக்கமாக அவர் கொண்டுள்ளார். அங்கு அவருக்கு மன அமைதி கிடைப்பதாகவும் பல முறை குறிப்பிட்டுள்ளார்.

47. இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் எளிமையான வாழ்க்கை முறையை கொண்டுள்ளார் ரஜினி

48. கேமரா மேன், லைட் மேன் யாராக இருந்தாலும் ஒரே அளவிலான மரியாதையை அவர் தருவார் என திரைப்படத்துறையினர் பலரும் கூறியுள்ளனர்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

49. அறிவியல், ஆண்மீகம், அரசியல் சார்ந்த புத்தகங்களை அதிகளவில் படிப்பார் ரஜினி.

50. அவருடைய பழைய உடைகள், புகைப்படங்கள், கார் ஆகியவற்றை இன்றும் பொக்கிஷமாக அவர் வைத்திருக்கிறார்.

51. புகழ்பெற்ற ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ரஜினிக்கென தனி தங்கும் அரை ஒன்று உள்ளது. அங்கு படப்பிடிப்பு இருந்தால் அவர் அங்குதான் தங்குவார்.

52. இந்திய அரசின் மிக உயரிய 'பத்ம பூஷன்', 'பத்ம விபூஷன்' ஆகிய விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
கடும் பனிப்பொழிவால் பிரிட்டனில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (புகைப்படத் தொகுப்பு)
வெள்ளம் சூழ்ந்த கிராமம்: டிராக்டரில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

53. ரஜினியை "அதிக செல்வாக்கு மிக்க இந்தியர்" என 2010 ஆம் ஆண்டு 'ஃபோர்ப்ஸ் இந்தியா' இதழ் குறிப்பிட்டது.

54. கடந்த 1990களின் துவக்கம். தளபதி படம் வெளியான சமயத்தில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் ரஜினியை வருங்கால முதல்வராகக் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அவரது அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.

55. படப்பிடிப்பிற்கு ஒருபோதும் காலதாமதமாக ரஜினி வரமாட்டார் என அவருடன் நடித்த பலர் கூறியுள்ளனர்.

56. படப்பிடிப்பிற்கோ அல்லது வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லவோ தன் காரை தானே ஓட்டிச்செல்ல விரும்புபவர் ரஜினி.

57. 2010ல் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த "எந்திரன்" திரைப்படம், இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படங்களில் ஒன்று.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

58. எந்திரன் திரைப்படத்தின் வணிக ரீதியான வெற்றிக் குறித்து அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம் மாணவர்களுக்கு பாடமாக கற்றுக் கொடுக்கப்பட்டது.

59. இதே போல ஆறாம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாட திட்டத்திலும் ரஜினியின் வாழ்க்கை குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது.

60. 1992ல் வெளிவந்த அண்ணாமலை திரைப்படத்தில் "என் பாட்டுக்கு என் வேலைய செஞ்சிக்கிட்டு ஒரு வழில நான் போய்க்கிட்டிருக்கேன். என்னை வம்புக்கிழுக்காதீங்க. வம்புக்கிழுத்தா நான் சொன்னதையும் செய்வேன்.. சொல்லாததையும் செய்வேன்" என்ற வசனம் இடம்பெற்றது. இது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

61. பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான் ஆகியோர் ரஜினியின் ரசிகர்கள் ஆவர்.

62. ரஜினியை பாராட்டி தனது "சென்னை எக்ஸ்பிரஸ்" படத்தில் "லுங்கி டான்ஸ் " என்ற பாடலை வைத்து அதற்கு நடனமாடியுள்ளார் ஷாருக்கான்.

63. 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தின் போது தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ரஜினி ரத்து செய்தார்.

64. ரஜினிகாந்த் 2014ல் ட்விட்டர் கணக்கு தொடங்கிய முதல் நாளிலேயே அவரை இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்தனர். தற்போது 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவரை ட்விட்டரில் தொடர்கின்றனர்.

65. தற்போது எந்திரன் 2.0, காலா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

66. 2017ல் ரஜினி அரசியலில் நுழைவார் என அவரது சகோதரர் சத்திய நாராயண ராவ் தெரிவித்திருந்தார்.

67. ஆனால் சமீபத்தில், "அரசியலுக்கு வர இப்போது அவசரம் இல்லை" என்று ரஜினி கூறிவிட்டார்.

அன்புள்ள ரஜினிகாந்த் 68 வது பிறந்தநாள் டிசம்பர் 12/2017.


அன்புள்ள ரஜினிகாந்த் 68 வது பிறந்தநாள் டிசம்பர் 12/2017.

*‘உங்க நட்சத்திரம் என்ன?’ மீனாட்சியம்மன் கோயில் குருக்களுக்கு ரஜினியின் பதில் !

நடிகர் திலகம் சிவாஜியின் 200-வது திரைப்படம் 'திரிசூலம்' வெற்றிவிழா மதுரையில் நடந்தது. அப்போது ரஜினியும் விழாவுக்கு போயிருந்தார். மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடப் போனார். ரஜினியின் அருகில்வந்த அர்ச்சகர் 'உங்களோட நட்சத்திரம் என்ன?' என்று கேட்க, மலங்க மலங்க விழித்து 'தெரியாது சாமீ' என்று பதில் சொல்லி இருக்கிறார். உண்மையில் ரஜினியின் நட்சத்திரம் 'சூப்பர் ஸ்டார்...' என்பது இப்போதுதான் தெரிகிறது என்று ரஜினிபற்றி பெருமையாகச் சொல்வார்கள்.

* 1975-ம் ஆண்டு 'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தில் ஒப்பந்தமானார். அப்போது ரஜினியுடன் பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்த நண்பர் விட்டல் வீடு சென்னை மியூஸிக் அகாடமி பின்புறம் உள்ள  புதுப்பேட்டை தெருவில் இருந்தது. அங்கேதான் ரஜினி வசித்துவந்தார். அந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி அன்று விட்டலின் தாயார் அறுசுவை உணவை சமைத்து ரஜினிக்கு மகிழ்ச்சியுடன் பரிமாறினார்.

* 1982-ம் ஆண்டுமுதல் தனது பிறந்தநாளில் ரசிகர்களை சந்தித்து மகிழ்ச்சியாகக் கொண்டாடி வந்தார். அதன்பின் வருடா வருடம் தன் வீட்டுக்கு வரும் ரசிகர்களின் வாழ்த்துகளையும், அன்பையும் ஏற்றுக்கொண்டு வந்தார். சென்னை அல்லது வெளியூரில் இருக்கும் ரசிகர்களும் எப்போது டிசம்பர் 12-ம் தேதி வருமென்று காலண்டரையே கண்கொட்டாது பார்த்துக்கொண்டு இருந்தனர், இப்போதும் இருக்கின்றனர்.

* 1988-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி போயஸ்கார்டனில் பிறந்தநாள் விழா பிரமாதமாக கொண்டாடப்பட்டது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு முன் ஏற்பாடுகள் பிரமாதமாக செய்யப்பட்டன. ரஜினி வீட்டுக்கு வரும் ரசிகர்கள் வரிசையாக வருவதற்கு சவுக்கு கட்டைகளை கட்டிவைத்து ராணுவக் கட்டுப்பாட்டோடு ரசிகர்மன்ற நிர்வாகிகள் செயல்பட்டனர். ஒவ்வொரு ரசிகருடனும் போட்டோ எடுத்துக்கொண்டு அவர்களுக்கு தன் கையால் ஸ்வீட் - காரம் கொடுத்து வழியனுப்பி வைத்தார். ஆனால், சென்னைக்கு வந்து ரஜினியை சந்தித்துவிட்டு  சேலத்துக்கு திரும்பியபோது சாலை விபத்தில் சிக்கி இரண்டு  ரசிகர்கள் உயிரிழந்தனர். தனது ரசிகர்கள் இறந்த துயரமான  சம்பவம் ரஜினியின் மனசுக்குள் காயத்தை ஏற்படுத்தின. அதன்பின் தனது பிறந்தநாளன்று ரசிகர்களை சந்திப்பதை தவிர்க்க ஆரம்பித்தார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12-ம்தேதி அன்று தினசரி பத்திரிகைகளில் 'நான் பிறந்தநாள் அன்று சென்னையில் இல்லை, ரசிகர்கள் என்னைத்தேடிவந்து ஏமாற வேண்டாம்' என்று விளம்பரம் கொடுத்து வந்தார்.

* 1990-ம் ஆண்டு 'தர்மதுரை' படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்தது. ரஜினி பிறந்தநாள் அன்று படப்பிடிப்பில் இருந்ததால் அவருக்கே தெரியாமல் தயாரிப்பாளரும், டைரக்டரும் சேர்ந்து பிறந்தநாள் கேக் வரவழைத்து யூனிட்டில் கொண்டாடினர், ரஜினியும் மறுக்க முடியாமல் கலந்துகொண்டார். 'தர்மதுரை' படப்பிடிப்பு ராஜமுந்திரியில் நடந்ததுபோது அங்கே டைரக்டர் ராஜசேகர் ரஜினி பிறந்தநாளை படயூனிட்டோடு கொண்டாடினார்.

* 1998-ம் ஆண்டு 'படையப்பா' படப்பிடிப்பு  சென்னை ஏவி.எம்.ஸ்டுடியோவில் நடந்தது. தன்னுடன் நடித்த ரம்யாகிருஷ்ணன், செளந்தர்யா, மற்றும் 'படையப்பா' படத்தின்  யூனிட்டோடு டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் ரஜினி பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது ரஜினியைத்தேடி ஏவி.எம்.ஸ்டுடியோவுக்கு வந்த விஜய் ரஜினிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்திவிட்டு மகிழ்ச்சியோடு புறப்பட்டுச் சென்றார்.

* 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரஜினி நடித்த 'சந்திரமுகி' திரைப்படம் வெளியானது. அந்த வருடம் டிசம்பர் 12-ம் தேதி அன்றைக்கு சென்னையில் இல்லை. தனது ஆன்மிக நண்பர்கள் குழுவோடு ரிஷிகேஷ் பறந்துவிட்டார். அங்கே இருக்கும் ஆசிரமங்களுக்குச் சென்று தனது பிறந்தநாளை ஆன்மிக உணர்வோடு கொண்டாடினார்.  

* 2007-ம் ஆண்டு பிறந்தநாள் அன்று தனது நண்பர்கள் விட்டல், சுதாகர் ஆகியோருடன் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்குப் போனார். கிரிவலப் பாதையில் கால்வாசி தூரம்கூட சென்று இருக்கமாட்டார் அதற்குள் கூட்டம் மொய்த்துக்கொண்டதால் திடீரென காரில் புறப்பட்டு சென்னைக்கு திரும்பிவிட்டார்.  

* 2010-ம் ஆண்டு ரஜினிக்கு 60-வது பிறந்தநாள் விழா முக்கியமான உறவினர்களையும், திரையுலகில் தனது உயர்வுக்கு காரணமான குறிப்பிட்ட பிரபலங்களை போயஸ் கார்டன் வீட்டுக்கு வரவழைத்து சஷ்டியப்தபூர்த்தி விழாவை சிம்பிளாகக் கொண்டாடினார். அதன்பின் ரஜினி உடல்நிலை  பாதிக்கப்பட்டது சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக சென்றார். பெரும் ஆபத்தில் இருந்து மீண்ட ரஜினி தனது  பிறந்தநாளை '12-12-12' என்று 2012-ம் ஆண்டு கொண்டாடினார். 29 ஆண்டுகளுக்குப் பிறகு தனது வீட்டு வாசலில் வெண்பட்டு வேஷ்டி, பட்டுச்சட்டை சகிதமாக  ரசிகர்களையும், மீடியாக்களையும் சந்தித்தார். அப்போது 'சார் உங்களுக்கு மூன்று பிறப்பு ஒன்று பெங்களூருவில் சிவாஜிராவ், அடுத்து சென்னையில் ரஜினிகாந்த், இன்னொன்று சிங்கப்பூரில் மறுபிறப்பு உண்மையா?' என்று கேள்வி கேட்டேன் ' எஸ் தேங்யூ தேங்யூ...' என்று பதிலளித்தார்.

* 2011- ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஏவி.எம்.ஸ்டுடியோவில் பிரமாதமாக மேக்கப் போட்டுக்கொண்டு  'ராணா' படப்பிடிப்பில் கலந்து கொண்டார், ரஜினி. அப்போது திடீரென ஷூட்டிங்கில் மயக்கம் போட்டு விழுந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பின் உடல்நிலை மோசமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்தகட்டமாக மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள எலிசெபத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்தபோது உலகெங்கும் உள்ள ரசிகர்கள் செய்த வேண்டுதல்களைப் பார்த்து கண்கலங்கினார், ரஜினி

* 2012 -ம் ஆண்டு ரஜினி சிங்கப்பூர் சிகிச்சைக்குப் பிறகு மறுபிறவி கண்ட ஆண்டு. உண்மையில் 12-12-12 பிறந்தநாள் விழாவை பிரமாண்டமாகக் கொண்டாட திட்டமிட்டிருந்தனர்.  டிசம்பர் 11-ம் தேதி அன்று ரஜினியின் நெஞ்சுக்கு நெருக்கமான நண்பர் காந்தி திடீரென இறந்துபோனது ரஜினியின் இதயத்தில் ரணவலியை ஏற்படுத்திவிட்டது. மறுநாள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த நிறைய நிகழ்ச்சிகளை ரத்துசெய்தார். அன்பான ரசிகர்களின் வேண்டுகோளுக்காக சென்னை ஒய்.எம்.சி.ஏவில் நடந்த பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு ரசிகர்கள் மேல் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்திப் பேசினார். அதன்பின் அடுத்தடுத்து பிறந்தநாள் வந்தபோது போயஸ்கார்டன் தேடிவரும் ரசிகர்களை ஏமாற்றாமல், மறக்காமல் சந்தித்து வருகிறார். சிவாஜி 3டியும் அன்றுதான் ரிலீஸ்...

* 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரஜினி, அவரது நண்பர்கள், விட்டல், நாகராஜராவ் உடன் விமானத்தில் புறப்பட்டு நாசிக் சென்றார். அர்த்த கும்பமேளா என்பது ஆறுவருடங்களுக்கு ஒரு தடவை நடக்கும், பூரண கும்பமேளா பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும். மகா கும்பமேளா 144 வருடங்களுக்கு ஒருமுறை வரக்கூடிய சிறப்பான திருவிழா. தனது பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி அன்று காவியுடை அணிந்துகொண்டு மகா கும்பமேளா திருநாளில் ரஜினி புனித நீராடினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஷீரடி சென்று சாய்பாபாவை வழிபட்டுவிட்டு மும்பையில் இருந்து சென்னைக்குத் திரும்பினார்.

* 2015-ம் ஆண்டு 'கபாலி' படத்தில் நடித்துக்கொண்டு இருந்தார். பெரும்பாலான படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது. அதன்பின்  டிசம்பர் மாதத்தில் மலேசியாவில் எடுக்கவேண்டிய ஒருசில காட்சிகளை கோவாவில் படமாக்கினார், ரஞ்சித். ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி அன்றைக்கு ரஜினிக்கே தெரியாமல் பிரமாண்டமான பிறந்தநாள் கேக்கை கொண்டுவந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் உற்சாகமாக பிறந்தநாள் நிகழ்ச்சியை கொண்டாடினார்கள்.

* 2016 -ம் ஆண்டு ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ம்தேதி அன்றைக்கு போயஸ் கார்டன் வீட்டில் இல்லை. ரஜினி எப்போதும் 'என்னுடைய பிறந்தநாள் அன்று நான் யாரையும் சந்திப்பது இல்லை. எங்கேயாவது தனியாக ஒரு இடத்துக்குச் சென்று விடுவேன் அங்கே அமர்ந்து இந்தப் பிறவியை நான் ஏன் எடுத்தேன்? என்ன செய்துகொண்டு இருக்கிறேன் என்று என்னை நானே தனிமையில் கேள்வி கேட்டுக்  கொள்வேன்' என்று அடிக்கடி சொல்வார். அதுபோல சென்னை கேளம்பாக்கத்தில் இருக்கும் அவரது பண்ணை வீட்டுக்குச் சென்று தனியாக இருந்தார்.

* 2017-ம் ஆண்டு இந்த டிசம்பர் மாசம் ரஜினி வாழ்விலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் மாவட்டங்களில் இருக்கும் ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார். அப்போது  'போருக்கு தயாராவீர்' என்று அரசியலுக்கு அச்சாரம் போட்டுப் பேசினார், ரஜினி.

அடுத்து  நவம்பர் மாதம் சந்திக்கலாம் என்று பேசப்பட்டது, தமிழ்நாட்டில் பெருமழை கொட்டித்தீர்த்ததால் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இந்த டிசம்பர் 12-ம் தேதி பிறந்தநாள் அன்று சென்னையில் ரஜினி இருக்க மாட்டார் என்று சொல்கிறார்கள்.  டிசம்பர் 20-ம் தேதிக்குப் பிறகு போட்டோ எடுக்காமல் இருக்கும் ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்துக்கு வரவழைத்து சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ளத் திட்டமிட்டு இருக்கிறார். மே மாதம் ரசிகர்கள் மத்தியில் 'போருக்கு தயாராவீர்' என்று சொன்ன ரஜினி, விரைவில் போருக்கான நாளை அறிவிக்க இருக்கிறார்.

*இதுவரை எந்த பிறந்தநாளிலும் இல்லாத எதிர்பார்ப்பு இப்போது ரசிகர்கள் மத்தியில் தாறுமாறாக எகிறிக்கிடக்கிறது என்பது என்னவோ நூறு விழுக்காடு உண்மை.*

ரஜினி மனம் கவரும் 25 சுவாரசியத் தகவல்கள்





ரஜினி  மனம் கவரும் 25 சுவாரசியத் தகவல்கள்

எவ்வளவு பெரிய திரை நட்சத்திரமாக இருந்தாலும், ரசிகர்கள் மனங்களில் கொஞ்ச காலத்திற்குத்தான் மின்ன முடியும்.  ஆனால் திரையுலகில் கால் பதித்த காலம் தொட்டு, இன்றுவரை , ஏறத்தாழ 40 ஆண்டு காலம் துருவ நட்சத்திரமாக மின்னிக்கொண்டிருப்பவர் ....சூப்பர் ஸ்டார்  ரஜினி மட்டுமே!இன்று  67 வது  வயதில் அடியெடுத்துவைக்கும் ரஜினியைப் பற்றிய சில சுவாரசியத் தகவல்கள் இங்கே;


1. பிறந்தநாள்
கொண்டாட்டத்தை தவிர்க்கும் ரஜினிரஜினி  பிறந்தநாள் என்பது  அவரது ரசிகர்களைப் பொறுத்தவரை தீபாவளியே. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக  ரஜினி தனது பிறந்தநாளை வெளிப்படையாகக் கொண்டாடியதில்லை.  22 ஆண்டுகளுக்கு முன்பு, ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு சென்னையில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மூன்று ரசிகர்கள் விபத்தில் சிக்கி   உயிரிழந்தனர். அந்த துயர  சம்பவத்திற்கு பிறகு  பொதுவெளியில்  தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டார் ரஜினி.


2. எல்லா இடங்களிலும் எவர் க்ரீன் டிமாண்ட்ரஜினியின் செல்வாக்கு மாநிலம், தேச எல்லைகளைக் கடந்தது. எல்லா இடங்களிலும் இவருக்கு எவர் க்ரீன் டிமாண்ட் உண்டு.   ஜாக்கி சானுக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் ஆசிய நடிகர் ரஜினிதான்.


 3. பின்தொடரும்  பெரும் படைரஜினி ட்விட்டரில் இணைந்த முதல் நாளிலேயே, 1.5 லட்சம் பேர் இவரை பின்தொடர ஆரம்பித்தனர்.  ஒரு  இந்திய நடிகரை ட்விட்டரில் இணைந்த முதல் நாளில் இவ்வளவு பேர் பின்தொடர்ந்தனர் என்றால் அது ரஜினி  மட்டும்தான்!



4. அனைத்து வகை படங்களிலும் பங்கேற்ற நடிகர்இந்தியாவில், கருப்பு வெள்ளை, கலர், 3டி, மோஷன் கேப்ச்சரிங் போன்ற அனைத்து வகையிலான படங்களிலும் நடித்த முதல் மற்றும் ஒரே நடிகர் என்ற பெருமை  ரஜினிக்கு மட்டுமே உண்டு.


5. இயக்குநர் சிகரத்தின் தீர்க்கதரிசனம்இயக்குநர் சிகரம் பாலசந்தரிடம் ரஜினி  முதன்முதலில் நடித்துக்காட்டியது கன்னட நாடகத்தில் இருந்து ஒரு பகுதியைத்தான். ’’நன்றாக தமிழ்பேச கற்றுக்கொள்’’ என்று சொன்ன பாலசந்தர் ரஜினியை ஒப்பந்தம் செய்தது ‘அபூர்வ ராகங்கள்’ படத்திற்கு மட்டுமல்ல.. ‘மூன்று முடிச்சு’, ‘அவள் ஒரு தொடர்கதை’ (தெலுங்கு) என மூன்று படங்களுக்கும் சேர்த்துதான். ஒரு நடிகனாக இவர் தேறிவிடுவார் என மூன்று படங்களுக்கும் சேர்த்து ஒப்பந்தம் செய்தது பாலசந்தரின் தீர்க்கதரிசனம்.


6. மஞ்சுளாவுடனும் ஜோடி போட்ட ரஜினி1962ல் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படம் பதினைந்து வருடம் கழித்து கன்னடத்தில் ரீமேக் செய்யப்படபோது அதில் ஹீரோவாக நடித்தார் ரஜினி. இதில் ரஜினிக்கு ஜோடி மஞ்சுளா. இந்தப்படம் பின்னர் தமிழில் ‘குறிஞ்சி மலர்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு  வெளியானது.


7. தேங்காய் சீனிவாசன் வேடத்தில் ரஜினிமுத்துராமன் நடித்த ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டபோது தமிழில் தேங்காய் சீனிவாசன் நடித்த கதாபாத்திரத்திற்கு கன்னடத்தில் நடித்தவர் நம்ம சூப்பர் ஸ்டார்தான். இதில் நடித்தபோது ரீடேக் இல்லாமல் எல்லா ஷாட்டுகளையும் ஒரே டேக்கில் ஓ.கே. வாங்கினாராம் ரஜினி!


8. முதல் கறுப்பு வெள்ளை சினிமாஸ்கோப்பில் சூப்பர்ஸ்டார்தென்னிந்தியாவில் முதன் முதலில் கறுப்பு வெள்ளையில் சினிமாஸ்கோப்பில் எடுக்கப்பட்ட படம் ‘ஒந்து பிரேமட கதே’ என்கிற கன்னடப்படம். இதில் கதாநாயகனாக நடித்தவர் ரஜினி!


9. ரஜினி வாயசைத்த முதல் பாடல்‘மூன்று முடிச்சு’ திரைப்படத்தில் ‘‘மண வினைகள் யாருடனோ? மாயவனின் விதிவலைகள்…’’ பாடல்தான் ரஜினி வாயசைத்த முதல் திரையிசைப் பாடல். ரஜினியின் முதல் திரைப்படமான ‘அபூர்வராகங்கள்’ திரைப்படத்திற்கு இசையமைத்திருந்த எம்.எஸ்.விஸ்வநாதன்தான் ரஜினியின் முதல் வாயசைவிற்கு இசையும் குரலும் கொடுத்தவர். .


10. நடிகர்திலகத்துடன் மட்டும் சேர்ந்து நடித்த ரஜினிமக்கள்திலகம் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு ரஜினிக்கு கிடைக்கவில்லை. ஆனால் நடிகர்திலகத்துடன் சேர்ந்து ‘ஜஸ்டிஸ் கோபிநாத்’, ‘நான் வாழவைப்பேன்’, ‘நட்சத்திரம்’, ‘படிக்காதவன்’, ‘உருவங்கள் மாறலாம்’, ‘விடுதலை’, ‘படையப்பா’ என ஆறு படங்களில் நடித்துள்ளார்.


11.     50 வது படத்தில் என்.டி ராமாராவுடன்ஆந்திர சூப்பர்ஸ்டாரும்,  மறைந்த முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவுடன் இணைந்து ரஜினி நடித்த ஒரே படம் ‘டைகர்’. இது ரஜினியின் ஐம்பதாவது படம் என்பது இன்னுமொரு சிறப்பு.


12. ரஜினி, ரஜினியாகவே நடித்த படங்கள்‘அன்புள்ள ரஜினிகாந்த்’, ‘அக்னி சாட்சி’, ‘நட்சத்திரம்’, ‘நன்றி மீண்டும் வருக’, ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘யார்’ ஆகிய படங்களில் நடிகர் ரஜினியாகவே நடித்திருக்கிறார் ரஜினி. .


13. ஹிந்தியிலும் கலக்கிய மூன்றுமுகம்1982ல் ரஜினி மூன்று வேடங்களில் நடித்த சூப்பர்ஹிட் படமான ‘மூன்று முகம்’, 1984ல் ஹிந்தியில் ‘ஜான் ஜானி ஜனார்தன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அங்கேயும் ரஜினிதான் ஹீரோவாக நடித்தார்.


14. தலைவர்  படத்தில் இளைய தளபதி29 வருடங்களுக்கு முன்பு எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்‌ஷனில் ரஜினி நடித்து வெளியான ‘நான் சிவப்பு மனிதன்’ படத்தில் சிறுவனாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இளைய தளபதி விஜய். .


15. அமிதாப்,கமலுடன் இணைந்து கலக்கிய ரஜினிதிரையுலக ஜாம்பவான்களான ரஜினி, கமல், அமிதாப் மூன்றுபேரும் இணைந்து நடித்தது ஒரே ஒரு ஹிந்திப்படத்தில் தான். படத்தின் பெயர் ‘கிராஃப்தார்’. இதில் இன்ஸ்பெக்டர் வேடத்தில்  ரஜினி நடித்திருந்தார். அமிதாப்பின் சகோதரராக நடித்திருந்தார் கமல்.


16. ரித்திக் ரோஷனை களமிறக்கிய ரஜினி1986ல் ரஜினி ஹீரோவாக நடித்த ஹிந்திப்படம் ‘பகவான் தாதா’. இந்தப் படத்தில் ரஜினியின் வளர்ப்பு மகனாக நடித்த சிறுவன்தான் இன்று 300கோடிகளுக்கு மேல் வசூலித்து கலக்கிக் கொண்டிருக்கும் ‘க்ரிஷ் -3’ படத்தின் ஹீரோவான ரித்திக் ரோஷன்.


17.முதல் 70 எம்.எம் திரைப்படத்தில் ரஜினி.தமிழ் சினிமாவில் அகன்றதிரை எனப்படும் 70 எம்.எம்-ல் திரையிடப்பட்ட முதல் படம் ரஜினி நடித்த ‘மாவீரன்’. இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் ரஜினிதான். ஒருவகையில் இதுதான் அவரது முதல் தயாரிப்பும்கூட. கமலின் ‘புன்னகை மன்னனும்’ இந்தப் படமும் ஒரே சமயத்தில் தீபாவளி தினத்தன்று வெளியாகின. .


18. ஆங்கிலப் படத்தில் அசத்திய சூப்பர்ஸ்டார்1988ல் ரஜினி ‘பிளட் ஸ்டோன்’ என்ற ஆங்கிலப் படத்தில் நடித்தார். பாலிவுட் நடிகர்களுக்குக் கூட கிடைக்காத இந்த அரிய வாய்ப்பு ரஜினியை தேடி வந்தது அவரது ஸ்டைலுக்காகத்தான். இந்தப் படத்தில் அவர் பேசிய ‘மணி மணி மணி’ என்ற வசனத்தை அஜித், தான் நடித்த ‘மங்காத்தா’ படத்தில் கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் பேசியிருந்தார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்!


19. வெற்றிநாயகன் ரஜினி‘எந்திரன்’ வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை ரஜினியின் புதிய படம் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் 1977 முதல் 1979 வரை 48 திரைப்படங்களில் நடித்துள்ளார் ரஜினி. குறிப்பாக 1980ல் 20 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார், அவற்றில் பெரும்பாலானவை நூறு நாட்கள் தாண்டி ஓடிய படங்கள்.


20. மாதம் ஒரு திரைப்படம்1988-ல் ஒவ்வொரு மாத இடைவெளியில் ரஜினியின் படங்கள் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தின. ‘தர்மத்தின் தலைவன்’ (24.9.88), ‘பிளட் ஸ்டோன்’ (7.10.88), ‘கொடி பறக்குது’ (8.11.88) ஆகிய படங்கள் இதற்கு உதாராணம். .


21. மணிவண்ணனுக்கு அரிதாரம் பூசச் செய்த ரஜினி‘கொடி பறக்குது’ படத்தில் ரஜினிக்கு சவால் விடுகிற மாதிரியான ஒரு வில்லனை பாரதிராஜா தேடிக்கொண்டிருந்தபோது “எதுக்கு பாரதி வெளியில அலைஞ்சுட்டு இருக்கீங்க? அதான் நம்ம மணிவண்ணன் இருக்காரே… அவரையே வில்லன் ஆக்கிடுங்க”ன்னு சொல்லி, அவரை ஒரு நடிகனாக அரிதாரம் பூச வைத்தது ரஜினிதான்.


22. மணிவண்ணன் தந்த முதல் மரியாதைமணிவண்ணனின் மகள் திருமணத்துக்கு அவரது குருவான பாரதிராஜா வந்திருந்து மணமக்களை வாழ்த்தினாலும், மாப்பிள்ளை கையில் தாலி எடுத்துக் கொடுத்தவர் ரஜினிதான். இத்தனைக்கும் மணிவண்ணனின் திருமணத்தை நடத்தி வைத்தது பாரதிராஜாதான். ஆனாலும் தன் குருநாதரைவிட ஒருபடி மேலாக ரஜினியை மரியாதையான ஸ்தானத்தில் வைத்து நட்பு பாராட்டினார் மணிவண்ணன்.


23.    25 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் நடித்த நடிகர்1986ல் ‘பகவான் தாதா’ என்ற ஹிந்திப் படத்தில் ரஜினியுடன் நடித்திருந்த டேனி டென்சொங்போ தான் 25 வருடம் கழித்து ‘எந்திரன்’ படத்தில் புரஃபெஸர் போராவாக மீண்டும் ரஜினியுடன் நடித்தார். .


24. வங்காள மொழி படத்தில் ரஜினி ‘பாக்ய தேவதா’ என்ற வங்காள மொழிப் படத்திலும் நடித்திருக்கிறார் ரஜினி. மிதுன் சக்கரவர்த்தி ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை இயக்கிவர் நம் தமிழ் சினிமா டான்ஸ் மாஸ்டர் ரகுராம்தான்.


25.  பணத்துக்கு கடைசி இடம்தரும் அபூர்வ மனிதர்ரஜினி வளர்ந்து ‘சூப்பர்ஸ்டார்’ ஆன காலகட்டத்தில் செலக்டிவான படங்களில் மட்டுமே நடிக்க ஆரம்பித்தார். அதற்கு காரணமாக மூன்று விஷயங்களை வரிசைப்படுத்தினார். முதலாவது தயாரிப்பு நிறுவனத்தின் தரம், இரண்டாவதாக கதை, மூன்றாவது (தான்) பணம். அளவான படங்களில் நடித்ததுபோக மீதம் இருந்த நேரத்தைத்தான் ஹிந்திப்படங்களுக்கு ஒதுக்கினார்.

ஹேப்பி பெர்த் டே ரஜினி!

திங்கள், 11 டிசம்பர், 2017

‘ரஜினி’ 67 தகவல்கள்


ரஜினி 67  தகவல்கள்

தனது அலுவலகத்திற்கு வந்து தன்னை சந்திக்கச் சொன்ன பாலசந்தரிடம் முதன்முதலில் நடித்துக்காட்டியது கன்னட நாடகத்தில் இருந்து ஒரு பகுதியைத்தான். நன்றாக தமிழ்பேச கற்றுக்கொள் என்று சொன்ன பாலசந்தர் ரஜினியை ஒப்பந்தம் செய்தது ‘அபூர்வ ராகங்கள்’ படத்திற்கு மட்டுமல்ல.. ‘மூன்று முடிச்சு’, ‘அவள் ஒரு தொடர்கதை’ (தெலுங்கு) என மூன்று படங்களுக்கும் சேர்த்து தான். ஒரு நடிகனாக இவர் தேறிவிடுவார் என மூன்று படங்களுக்கும் சேர்த்து ஒப்பந்தம் செய்தது பாலசந்தரின் தீர்க்கதரிசனம்.
கே.பாலசந்தர் இயக்கத்தில் தமிழில் வெளியான ‘அவள் ஒரு தொடர்கதை’ படம் தெலுங்கில் ‘அந்துலேனி கதா’ என்ற பெயரில் தயாரானபோது, தமிழில் ஜெய்கணேஷ் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் ரஜினி நடித்தார். இந்தப் படத்தில் ரஜினியின் சகோதரியாக நடித்தவர் யார் தெரியுமா? அவருடன் பல படங்களில் ஜோடியாக நடித்த ஸ்ரீப்ரியாதான்!



ரஜினியும் சிவகுமாரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்தபோதும்கூட இருவரும் இணைந்து ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘கவிக்குயில்’ என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளனர். இதில் ‘கவிக்குயில்’ படத்தில் சிவகுமாரின் காதலியாகவும், ரஜினியின் தங்கையாகவும் நடித்திருந்தவர் ஸ்ரீதேவி!
1962ல் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படம் பதினைந்து வருடம் கழித்து கன்னடத்தில் ரீமேக் செய்யப்படபோது அதில் ஹீரோவாக நடித்தார் ரஜினி. இதில் ரஜினிக்கு ஜோடி மஞ்சுளா. இந்தப்படம் பின்னர் தமிழில் ‘குறிஞ்சி மலர்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியானது.
முத்துராமன் நடித்த ‘மயங்குகிறாள் ஒரு மாது’ படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டபோது தமிழில் தேங்காய் சீனிவாசன் நடித்த கதாபாத்திரத்திற்கு கன்னடத்தில் நடித்தவர் நம்ம சூப்பர் ஸ்டார்தான். இதில் நடித்தபோது ரீடேக் இல்லாமல் எல்லா ஷாட்டுகளையும் ஒரே டேக்கில் ஓ.கே. வாங்கினாராம் ரஜினி!
மலையாளத்தில் ‘அலாவுதீனும் அல்புத விளக்கும்’, ‘கர்ஜனம்’ என இரண்டு படங்களில் நேரடியாக நடித்துள்ளார் ரஜினி. ஒருபக்கம் பார்த்தால் இவை இரண்டுமே தமிழ், மற்றும் மலையாளம் என ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட இரு மொழிப் படங்கள்தானே தவிர, மலையாளத்திற்கென்றே தனியாக எடுக்கப்படவில்லை.


தென்னிந்தியாவில் முதன் முதலில் கறுப்பு வெள்ளையில் சினிமாஸ்கோப்பில் எடுக்கப்பட்ட படம் ‘ஒந்து பிரேமட கதே’ என்கிற கன்னடப்படம். இதில் கதாநாயகனாக நடித்தவர் ரஜினி!
தெலுங்கில் முதன் முதலில் ரஜினி ஹீரோவாக நடித்த படம் ‘சிலகம்மா செப்பிண்டி’. இந்தப்படம் பின்னர் பாலசந்தர் டைரக்ஷனில் தமிழில் ‘நிழல் நிஜமாகிறது’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டபோது அதில் ஹீரோவாக நடித்தவர் கமல்.
‘மூன்று முடிச்சு’ திரைப்படத்தில் ‘‘மண வினைகள் யாருடனோ? மாயவனின் விதிவலைகள்…’’ பாடல்தான் ரஜினி வாயசைத்த முதல் திரையிசைப் பாடல். ரஜினியின் முதல் திரைப்படமான ‘அபூர்வராகங்கள்’ திரைப்படத்திற்கு இசையமைத்திருந்த எம்.எஸ்.விஸ்வநாதன் தான் ரஜினியின் முதல் வாயசைவிற்கு இசையும் குரலும் கொடுத்தவர்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு ரஜினிக்கு கிடைக்கவில்லை. ஆனால் நடிகர் திலகத்துடன் சேர்ந்து ‘ஜஸ்டிஸ் கோபிநாத்’, ‘நான் வாழவைப்பேன்’, ‘நட்சத்திரம்’, ‘படிக்காதவன்’, ‘உருவங்கள் மாறலாம்’, ‘விடுதலை’, ‘படையப்பா’ என ஆறு படங்களில் நடித்துள்ளார்.
‘காதல்மன்னன்’ ஜெமினியுடன் இணைந்து ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ படத்தில் மட்டுமே நடித்துள்ளார் ரஜினி.
ஆந்திர சூப்பர்ஸ்டாரும் மறைந்த முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவுடன் இணைந்து ரஜினி நடித்த ஒரே படம் ‘டைகர்’. இது ரஜினியின் ஐம்பதாவது படம் என்பது இன்னுமொரு சிறப்பு.
‘அன்புள்ள ரஜினிகாந்த்’, ‘அக்னி சாட்சி’, ‘நட்சத்திரம்’, ‘நன்றி மீண்டும் வருக’, ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘யார்’ ஆகிய படங்களில் நடிகர் ரஜினியாகவே நடித்திருக்கிறார் ரஜினி.
1984ல் தியாகராஜன் நடித்த ‘மலையூர் மம்பட்டியான்’ படம் ஹிந்தியில் ‘கங்குவா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. தியாகராஜன் வேடத்தில் ரஜினி நடிக்க இந்தப் படத்தை ரஜினியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான ராஜசேகர் இயக்கினார். தமிழிலும் இவர்தான் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் கமலின் மனைவி சரிகாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
1982ல் ரஜினி மூன்று வேடங்களில் நடித்த சூப்பர்ஹிட் படமான ‘மூன்று முகம்’, 1984ல் ஹிந்தியில் ‘ஜான் ஜானி ஜனார்தன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அங்கேயும் ரஜினிதான் ஹீரோவாக நடித்தார்.
29 வருடங்களுக்கு முன்பு எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்ஷனில் ரஜினி நடித்து வெளியான ‘நான் சிவப்பு மனிதன்’ படத்தில் சிறுவனாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இளைய தளபதி விஜய்.
ஜாம்பவான்களான ரஜினி, கமல், அமிதாப் மூன்றுபேரும் இணைந்து நடித்தது ஒரே ஒரு ஹிந்திப்படத்தில் தான். படத்தின் பெயர் ‘கிராஃப்தார்’. இதில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அமிதாப்பும் ரஜினியும் நடித்திருந்தனர். அமிதாப்பின் சகோதரராக நடித்திருந்தார் கமல்.


1986ல் ரஜினி ஹீரோவாக நடித்த ஹிந்திப்படம் ‘பகவான் தாதா’. இந்தப் படத்தில் ரஜினியின் (வளர்ப்பு) மகனாக நடித்த சிறுவன்தான் இன்று 300கோடிகளுக்கு மேல் வசூலித்து கலக்கிக் கொண்டிருக்கும் ‘க்ரிஷ் -3’ படத்தின் ஹீரோவான ரித்திக் ரோஷன்.
ரித்திக் ரோஷனின் தந்தையும் ‘க்ரிஷ்’ படங்களை இயக்கியவருமான ராகேஷ் ரோஷன் எண்பதுகளில் ஹிந்தியில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். ரஜினி ஹிந்தியில் தொடர்ந்து நடித்த காலகட்டத்தில் அவருடன் இணைந்து அதிகப்படங்களில் நடித்தவர் என்ற பெருமை ராகேஷ் ரோஷனுக்கு உண்டு.
தமிழ் சினிமாவில் அகன்றதிரை எனப்படும் 70 எம்.எம்-ல் திரையிடப்பட்ட முதல் படம் ரஜினி நடித்த ‘மாவீரன்’. இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் ரஜினிதான். ஒருவகையில் இதுதான் அவரது முதல் தயாரிப்பும்கூட. கமலின் ‘புன்னகை மன்னனும்’ இந்தப் படமும் ஒரே தேதியில் தீபாவளி தினத்தன்று வெளியாகின.
1988ல் ரஜினி ‘பிளட் ஸ்டோன்’ என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்தார். பாலிவுட் நடிகர்களுக்குக் கூட கிடைக்காத இந்த அரிய வாய்ப்பு ரஜினியை தேடி வந்தது. அவரது ஸ்டைலுக்காகத்தான். இந்தப் படத்தில் அவர் பேசிய ‘மணி மணி மணி’ என்ற வசனத்தை அஜீத், தான் நடித்த ‘மங்காத்தா’ படத்தில் கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் பேசியிருந்தார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்!
‘எந்திரன்’ வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை ரஜினியின் புதிய படம் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் 1977 முதல் 1979 வரை 48 திரைப்படங்களில் நடித்துள்ளார் ரஜினி. குறிப்பாக 1980ல் 20 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார், அவற்றில் பெரும்பாலானவை நூறு நாட்கள் தாண்டி ஓடிய படங்கள்.
1988-ல் ஒவ்வொரு மாத இடைவெளியில் ரஜினியின் படங்கள் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தின. ‘தர்மத்தின் தலைவன்’ (24.9.88), ‘பிளட் ஸ்டோன்’ (7.10.88), ‘கொடி பறக்குது’ (8.11.88) ஆகிய படங்கள் இதற்கு உதாராணம்.
‘கொடி பறக்குது’ படத்தில் ரஜினிக்கு சவால் விடுகிற மாதிரியான ஒரு வில்லனை பாரதிராஜா தேடிக்கொண்டிருந்தபோது “எதுக்கு பாரதி வெளியில அலைஞ்சுட்டு இருக்கீங்க? அதான் நம்ம மணிவண்ணன் இருக்காரே… அவரையே வில்லன் ஆக்கிடுங்க”ன்னு சொல்லி, அவரை ஒரு நடிகனாக அரிதாரம் பூச வைத்தது ரஜினிதான்.


மணிவண்ணனின் மகள் திருமணத்துக்கு அவரது குருவான பாரதிராஜா வந்திருந்து மணமக்களை வாழ்த்தினாலும், மாப்பிள்ளை கையில் தாலி எடுத்துக் கொடுத்தவர் ரஜினிதான். இத்தனைக்கும் மணிவண்ணனின் திருமணத்தை நடத்தி வைத்தது பாரதிராஜாதான். ஆனாலும் தன் குருநாதரைவிட ஒருபடி மேலாக ரஜினியை மரியாதையான ஸ்தானத்தில் வைத்து நட்பு பாராட்டினார் மணிவண்ணன்.
இந்தியாவில் முதன்முதலில் அனிமேஷன் கேரக்டர்களை பயன்படுத்திய படத்திலும் ரஜினிதான் ஹீரோ. அந்தப்படம் ‘ராஜா சின்ன ரோஜா’.
50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள நகைச்சுவை நடிகர் மனோபாலா ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கியிருக்கிறார். அது ‘ஊர்க்காவலன்’. அதேபோல் குடும்பப்பாங்கான படங்களை இயக்கிவந்த, அதிலும் குறிப்பாக மோகன், விஜயகாந்த் ஆகியோரின் ஃபேவரைட் இயக்குனரான ஆர்.சுந்தர்ராஜனும் ரஜினியை வைத்து ‘ராஜாதிராஜா’ படத்தை இயக்கியுள்ளார்.


2003ல் வெளியான ‘பாபா’ படத்தில் ரஜினியுடன் (ஜோடியாக) நடித்தார் மனிஷா கொய்ராலா. ‘பம்பாய்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான மனிஷா, 1993லேயே ‘இன்சானியத் கே தேவதா’ என்ற ஹிந்திப் படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.
1986ல் ‘பகவான் தாதா’ என்ற ஹிந்திப் படத்தில் ரஜினியுடன் நடித்திருந்த டேனி டென்சொங்போ தான் 25 வருடம் கழித்து ‘எந்திரன்’ படத்தில் புரஃபெஸர் போராவாக மீண்டும் ரஜினியுடன் நடித்தார்.
பாலிவுட்டின் ‘எவர்கிரீன் ஸ்டார்’ ஆமீர்கான் ரஜினியுடன் ஹிந்தியில் இணைந்து நடித்த ஒரே படம் ‘ஆட்டன்க் ஹி ஆட்டன்க்’.
‘பாக்ய தேவதா’ என்ற வங்காள மொழிப் படத்திலும் நடித்திருக்கிறார் ரஜினி. மிதுன் சக்கரவர்த்தி ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை இயக்கிவர் நம் தமிழ் சினிமா டான்ஸ் மாஸ்டர் ரகுராம்தான்.
ரஜினி வளர்ந்து ‘சூப்பர்ஸ்டார்’ ஆன காலகட்டத்தில் செலக்டிவான படங்களில் மட்டுமே நடிக்க ஆரம்பித்தார். அதற்கு காரணமாக மூன்று விஷயங்களை வரிசைப்படுத்தினார். முதலாவது தயாரிப்பு நிறுவனத்தின் தரம், இரண்டாவதாக கதை, மூன்றாவது (தான்) பணம். அளவான படங்களில் நடித்ததுபோக மீதம் இருந்த நேரத்தைத்தான் ஹிந்திப்படங்களுக்கு ஒதுக்கினார்.
ரஜினி நடித்த ஹிந்திப் படங்களில் பெரும்பாலானவை இரண்டு அல்லது மூன்று ஹீரோக்களுடன் சேர்ந்துதான். தமிழில் சூப்பர்ஸ்டாராக நடித்துக்கொண்டே ஹிந்தியில் ஏன் இப்படி இரண்டு, மூன்று பேரில் ஒருவராக நடிக்கிறீர்கள் என கேட்டபோது, “ஹிந்தியில் அமிதாப் பச்சன் ஒருவருக்குத்தான் (அந்த சமயத்தில்) தனி ஹீரோவா நடிச்சா டிஸ்ட்ரிபியூட்டர் வர்றாங்க. மத்தவங்க படம்னா கூட நடிக்கிறது யாருன்னு கேட்குறாங்க.. இதுதான் காரணம்” என்றாராம்.

‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்துக்குப் பின்னர்தான் ரஜினிக்கு ரசிகர் மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
ரஜினி நடித்த ‘சிவா’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதே நேரத்தில் வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படம் சூப்பர் ஹிட். இதுபற்றி ரஜினியிடம் “நீங்கள் அபூர்வ சகோதரர்கள் ரிலீஸ் சமயத்தில் ‘சிவா’ படத்தை வெளியிட்டிருக்க வேண்டாமே என கேட்டபோது “நல்ல படம் எப்போது வந்தாலும் ஓடும்” என்று பதில் சொன்னார் ரஜினி.
படப்பிடிப்பு தளத்திற்கு குறித்த நேரத்திற்கு முன்னரே வரும் பழக்கத்தை நடிகர் திலகத்திடம் இருந்து கற்றுக்கொண்ட ரஜினி, படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்குவது, அதில் குளறுபடி வராமல் பார்த்துக்கொள்வது ஆகியவற்றை சிவகுமாரிடம் இருந்து கற்றுக்கொண்டதாக அவரே கூறியிருக்கிறார்.
“அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு, அகம், புறம், தூய்மையோடு தனி அறையில் அமர்ந்து தியானம் செய்து பாருங்கள். உடல் பொலிவும், அழகும் பெறுவதை கண்கூடாகக் காணலாம்” என்பது எல்லோருக்கும் ரஜினி கூறும் ‘ஹெல்த் டிப்ஸ்’.
ரஜினிக்கு மிகவும் பிடித்த நாளாக கருதுவது ராகவேந்திரருக்கு உகந்த நாளான வியாழக்கிழமையைத்தான். ‘அபூர்வ ராகங்கள்’ படப்பிடிப்பு திங்களன்றே துவங்குவதாக கூறப்பட்டதும் ‘முதன்முதலாக கேமரா முன் நிற்கப் போகிறோம். அது ராகவேந்திரருக்கு உகந்த நாளான வியாழனன்று இருக்கக் கூடாதா?’ என்று மனதிற்குள் கேட்டு ஏங்கினார். ஆனால் திங்களன்று படப்பிடிப்பு ரத்தானதால் செவ்வாயன்று அழைப்பு வந்தது. அன்று முழுவதும் படப்பிடிப்பு நடந்தாலும் பாலசந்தர் ரஜினியை அழைக்கவே இல்லை. புதன் அன்று ‘‘இடைவேளைக்குப் பின்புதான் உங்கள் காட்சி வரும். அதனால் பிற்பகல் ஒரு மணிக்கு மேல் வாருங்கள்’’ என்று கூறியிருந்தார்கள். ஆனால் புதனன்று ஒரு மணிக்குப் பிறகு கடுமையான மழை பிடித்துக் கொண்டுவிட்டதால் படப்பிடிப்பு கேன்சலானது.. வியாழனன்று சரியாக காலை பத்து மணிக்கு பாலசந்தர் அழைக்க, ரஜினி கேமரா முன் நின்றார். ஆக ராகவேந்திரரின் வியாழன் ரஜினிக்கும் உகந்த நாளானது.
திரையுலகிலுள்ள பெரும்பாலான ஐயப்ப பக்தர்களுக்கு குருசாமியாக இருந்து வழிகாட்டியவர் எம்.என்.நம்பியார்தான். அப்படித்தான் முதன்முதலாக 1978ல் அவர் தலைமையில் சபரிமலைக்குச் சென்றார் ரஜினி. அப்போது அவருடன் நடிகர்கள் முத்துராமன், ஸ்ரீகாந்த், கன்னட ‘சூப்பர்ஸ்டார்’ ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன் ஆகியோரும் போனார்கள். 1984ல் ரஜினிகாந்த் சபரிமலை சென்றபோது, அந்த முறை அமிதாப்பச்சனும் கலந்து கொண்டார். இதுவரை ஒன்பது முறை சபரிமலைக்குச் சென்று வந்திருக்கிறார் ரஜினி!
‘பதினாறு வயதினிலே’ படத்திற்காக பாரதிராஜா ரஜினியை அணுகியபோது சம்பளமாக ஐந்தாயிரம் ரூபாய் கேட்டாராம். “குறைந்த பட்ஜெட் படமென்பதால் கொஞ்சம் குறைக்கச் சொல்லிக் கேட்கவே மூவாயிரம் ரூபாய்க்கு இறங்கினார் ரஜினி. நாங்கள் ரூ.2500 என்று பேசி அவரைச் சம்மதிக்க வைத்தோம். படத்தில் கமல்ஹாசனுக்கு 11 நாட்கள் வேலை என்றால், ரஜினிக்கு வேலை ஐந்தே நாட்கள்தான்” என சமீபத்தில் நடந்த ‘பதினாறு வயதினிலே’ படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு அறிமுக விழாவில் பேசினார் பாரதிராஜா.
நடிகர் சங்கத் தலைவர் என்று மட்டுமே இல்லாமல் தன்னைப்போல எந்த பின்னணியும் இல்லாமல் கடுமையாக உழைத்து முன்னேறியவர் என்பதாலும் விஜயகாந்த் மீது ரஜினிக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்தது. விஜயகாந்த் நடித்த ‘அம்மன் கோவில் கிழக்காலே’ படத்தின் வெள்ளி விழாவில் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கியதும், ‘நினைவே ஒரு சங்கீதம்’ படத்தின் ஆடியோ கேசட்டை வெளியிட்டதும் ரஜினிதான்.
ரஜினி கன்னடத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அங்கு நடித்தது என்னவோ வெறும் பத்து படங்களில் தான். 1981க்குப்பின் அவர் கன்னடத்தில் நடிக்கவில்லை.

திரைப்படக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது பணப்பற்றாக்குறை வரும்போது கல்லூரி முதல்வர் ராஜாராமிடம் அனுமதி பெற்று ஒரு மாதம் பெங்களூர் சென்று கண்டக்டர் வேலை செய்து மொத்தமாகப் பணம் திரட்டி வருவார் ரஜினி. கல்லூரி முதல்வர் ராஜாராமும் ரஜினியின் நிலையறிந்து பண விஷயத்தில் கெடுபிடி செய்யாமல் அன்புடன் பல வழிகளிலும் உதவியிருக்கிறார்.
ரஜினியும் சிரஞ்சீவியும் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்து வாய்ப்பு தேடும் காலத்தில் இருந்தே நண்பர்கள். இருவரும் இணைந்து ‘ராணுவ வீரன்’, ‘மாப்பிள்ளை’, ‘காளி’ (தெலுங்கு) என மூன்று படங்களில் நடித்துள்ளனர். ‘காளி’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரானது. இதில் இரண்டு மொழிகளிலும் ரஜினியே ஹீரோவாக நடிக்க, தமிழில் ரஜினியின் நண்பராக விஜயகுமாரும் தெலுங்கில் சிரஞ்சீவியும் நடித்தனர். தமிழில் வெளியான ‘அவர்கள்’ படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டபோது அங்கே ரஜினி கேரக்டரில் நடித்தார் சிரஞ்சீவி.
‘வள்ளி’ படத்தின் பிற்பகுதியில் முதல் அமைச்சராக நடித்த அசோக், ரஜினியின் திரைப்பட கல்லூரி நண்பர். அசோக் அடிக்கடி ரஜினியிடம் “நான் ஹீரோவானா நீதாண்டா வில்லன்” என்று கூற, “சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் வில்லனாத்தாண்டா நடிப்பேன்” என்பாராம் ரஜினி. “என்ன இருந்தாலும் ஹீரோ ஹீரோதான்.. வில்லன் வில்லன்தான்” என்று அசோக் சொல்லும் போது “நீ எத்தனை நாளைக்கு ஹீரோவா நடிப்பே? இளமை இருக்கிற வரையில்தானே. ஆனா நான் வயசானா கூட வில்லனா நடிக்க முடியும்’’ என்று இருவரும் ஒருவருக்கொருவர் சவால் விட்டுக் கொள்வார்களாம். ஆனால் காலத்தின் மகிமை வயதானாலும் ரஜினி கதாநாயகனாகவே நடித்துக்கொண்டிருக்கிறார்.
நடத்துனராக வேலை பார்த்தபோது பஸ்சில் சில சமயம் ரஜினி விசித்திரமான வேலைகள் செய்வார். ஆங்கில வார்த்தையே கலக்காமல் தூய கன்னடத்தில் பயணிகள் இறங்குமிடத்தைக் குறிப்பிடுவார். ‘மெஜஸ்டிக் சர்க்கிள்’ என்றால் ‘மெஜஸ்டிக் வட்டம்’ என்பார். ‘காந்திஜி ரோடு’ என்றால் ‘காந்திஜி ரஸ்தே’ என்று சொல்லி பயணிகளை வெகுவாகக் கவர்ந்துவிடுவாராம்.


நடிக்க ஆரம்பித்த புதிதில் ரஜினிகாந்துடன் படப்பிடிப்புக்கு உதவியாளனாக ஒரு சிறுவனும் வருவான். ரஜினிக்கு சிகரெட், நெருப்புப் பெட்டி இவற்றைக் கொடுப்பது போன்ற வேலைகள் தான் அவனுக்கு. சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டதும் நெருப்புப் பெட்டியை ரஜினி தூக்கித்தான் போடுவார். அதை அவன் கீழே விழாமல் பிடித்துக் கொள்வான். அவன் எப்போதும் விழிப்போடு இருக்கிறானா என்று அறியவே ரஜினி அப்படிச் செய்வாராம்.
ரஜினி நடித்த ‘படிக்காதவன்’ ஹிந்தியில் வெளிவந்த ‘குதார்’ படத்தின் தழுவலாகும். அதில் இல்லாத சோகப் பாடல் ஒன்றை தமிழில் இணைக்க முடிவு செய்தபோது அதற்காக பாடல் பதிவானது. ஆனால் ரஜினி, ‘‘ஏற்கெனவே படத்தின் நீளம் 17 ஆயிரம் அடி வளர்ந்திருக்கிறது. இன்னும் தேவையா?’’ என்று கேட்டாரம். ஆனால் இயக்குனர் ராஜசேகரும் பிடி கொடுக்காமல் விடாப்பிடியாக “எனக்காக இரண்டு நாள் இரவு கால்ஷீட் கொடுங்க போதும்’’ என்று வற்புறுத்தி நடிக்க வைத்தாராம்.. ரிலீஸான பின் தியேட்டரில் படம் பார்த்த ரஜினி, அந்தப்பாடலுக்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு இயக்குனரின் தீர்க்கதரிசனத்தை பாராட்டினாராம். அந்தப் பாடல்தான் “ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன்…’’.
1979-ல் ரஜினிக்கு அவரது உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டபோது, நெருக்கமான நட்பில் இருந்தவர்கள்கூட அந்த நேரத்தில் ரஜினிக்கு உதவாமல் ஒதுங்கிப் போனார்கள். ‘கடவுள்கூட ரஜினிக்கு உதவமாட்டார்’ என்று சொல்லப்பட்ட நேரத்தில் அவரிடம் அன்பு காட்டி ஆதரித்தவர் திருமதி ரெஜினா வின்சென்ட். ரஜினியின் அகராதியில் ‘அம்மா’, ‘மம்மி’ என்றால் அது ரெஜினா வின்சென்ட் மட்டுமே. ‘தர்மயுத்தம்’ படப்பிடிப்பு சென்னையில் ரெஜினாவின் வீட்டில் நடந்தபோது, ரெஜினா காட்டிய பாசத்தால்தான் மன அழுத்தத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டெழுந்தார். அன்னையை இழந்து தாய்ப்பாசம் அறியாமல் வளர்ந்த ரஜினி அவரைத் தாயாகவே தத்து எடுத்துக் கொண்டார். ரஜினிக்குத் திருப்பதியில் திருமணம் நடந்தபோது உடன் இருந்த முக்கியமானவர்களில் ரெஜினாவும் ஒருவர்.


‘சுட்டாது உன்னாரு ஜாக்ரதா’ (சொந்தக்காரங்க இருக்காங்க ஜாக்கிரதை) என்று தெலுங்கில் கிருஷ்ணா இரட்டை வேடத்தில் நடித்த படத்தை ஏவிஎம் சரவணன் தமிழில் ரஜினியை வைத்து ரீமேக் செய்ய விரும்பினார். ஆனால் அதற்கு முன்பே அந்தப் படத்தைப் பார்த்திருந்த ரஜினி அந்த தெலுங்குப்படத் தயாரிப்பாளரே தமிழில் தன்னை நடிக்கச் செய்ய விரும்பியபோது ரஜினிக்குப் படம் பிடிக்காததால், நடிக்க மறுத்தும் விட்டிருந்தார். ஆனால் சரவணனின் வற்புறுத்தல் காரணமாக அதன் ரீமேக்கில் நடிக்க அரைமனதாக சம்மதித்தார் ரஜினி. ஆனால், அப்படம் தமிழில் வெளியானபோது இவ்வளவு பெரிய வெற்றிபெறும் என ரஜினியே எதிர்பார்க்கவில்லை. அந்தப் படம்தான் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘போக்கிரி ராஜா’
‘சூப்பர்ஸ்டார்’ அந்தஸ்தை எட்டிய பின்னும் ரஜினி ஸ்கூட்டரிலேயே வருவதும் போவதுமாக இருந்தார். ஒருமுறை அப்படி வந்தபோது கீழே விழுந்து அடிபட்டுவிட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் ரஜியினிடம் ஸ்கூட்டர் ஓட்டுவதை விட்டுவிடுமாறு சொல்லியிருக்கிறார். ‘‘சும்மா ஜாலிக்காகத்தான்’’ என்று கூறிய ரஜினியிடம், ‘‘அவரது குடும்பம், அவரை நம்பி லட்சங்களை முடக்கியுள்ள தயாரிப்பாளர்கள் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டாவது ஸ்கூட்டர் ஓட்டுவதை விட்டுவிடுங்கள்’’ என்று மீண்டும் வற்புறுத்த அன்றிலிருந்து காரில் பயணிக்க ஆரம்பித்தார் ரஜினி.
‘மனிதன்’ படம் துவங்குவதற்கு முன் ரஜினி தனக்கு ஊதியமாக இவ்வளவு தொகை வேண்டுமென்று கேட்க, அது நியாயமானதாகப் பட்டதால் சரியென்று ஒப்புக்கொண்டார் ஏவிஎம் சரவணன். அதன்பின் சில நாட்களுக்குப் பிறகு சரவணனை சந்தித்த ரஜினி, ‘‘நான் உங்களிடம் ‘மனிதன்’ படத்திற்கு எனது சம்பளம் பற்றிப் பேசினேன். இதே தொகையை நான் வேறு இரு நிறுவனங்களுக்குச் சொன்னபோது அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் அவர்கள் என்ன சம்பளம் சொன்னார்களோ, அதே தொகையைத் தந்து விடுங்கள் போதும்’’ என்று தன் சம்பளத்தைக் குறைக்கும்படி கேட்டுக் கொண்டாராம் ரஜினி. அதுதான் சூப்பர்ஸ்டார்!
குறுகிய காலத்திற்குள் ரஜினியின் 25 படங்களை இயக்கிய சாதனைக்குரியவர் எஸ்.பி.முத்துராமன். ‘ப்ரியா’ படத்தில் படகு சேசிங் காட்சி ஒன்றை ‘க்ளோஸ் அப்’பில் ரஜினியை வைத்து படமாக்கி, மற்றதெல்லாம் டூப்பை வைத்து எடுத்துவிட நினைத்தார்களாம். ஆனால் அதற்கு ஒத்துக்கொள்ளாத ரஜினி, ‘நானே நடிப்பேன்’ என்று கூறியிருக்கிறார். அத்துடன் படகு ஓட்டவும் தெரியாத, நீச்சலும் தெரியாத ரஜினி ஒரு மணி நேரத்தில் படகு ஓட்டக் கற்றுக்கொண்டு அந்தக் கட்சியில் நடித்தார்.


ரஜினியின் சினிமா வாழ்க்கையில் அவரது நூறாவது படமான ‘ராகவேந்திரர்’ ஒரு மைல்கல். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மனமார பாராட்டியதோடு, மறுநாள் மதுரையிலிருந்து டிரங்கால் மூலம் உத்தரவு போட்டு படத்திற்கு வரிவிலக்கும் அளித்தார்.
ரஜினி நடித்த ஒரு படத்தின் வெற்றி விழாவில் அவரைப் பாராட்டிப் பேசிய ‘சிலம்பொலிச் செல்வர்’ ம.பொ.சி, ரஜினியின் வேகம் பற்றிக் குறிப்பிட்டு ‘‘எனக்கு அவர் பேசும் வசனங்கள் புரியவில்லை. ஆனால் என் பேரன்களோ, ‘எங்களுக்குப் புரிகிறது. உங்களுக்குப் புரியாவிட்டால் என்ன?’ என்று என்னோடு சண்டைக்கு வந்து விட்டார்கள்’’ என்று நகைச்சுவையோடு கூறினார்.
ரஜினிகாந்த்தின் அதிகபட்ச படங்களுக்கு வசனமெழுதியவர் பஞ்சு அருணாசலம். அது மட்டுமின்றி ரஜினி மாறுபட்ட வேடங்களில் நடித்த ‘கவிக்குயில்’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ ஆகிய படங்களெல்லாம் இவர் தயாரித்தவையே.
மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘ப்ரியா’, ‘காயத்ரி’ ஆகிய நாவல்கள் படமானபோது அதில் ஹீரோவாக நடித்தார் ரஜினி. மேலும் ரஜினியின் ‘சிவாஜி’ மற்றும் ‘எந்திரன்’ படங்களிலும் சுஜாதாவின் பங்களிப்பு அதிகம்.
ரஜினிக்கு அப்போதெல்லாம் இளநீர் அருந்துவதென்றால் மிகவும் இஷ்டம். யூனிட் ஆட்களிடம் இளநீர் வாங்கித் தரச் சொல்லுவார். ஆனால் யாரும் அவரைப் பொருட்படுத்தமாட்டார்கள். அதனால் தன்னிடமுள்ள பணத்தைக் கொடுத்து இளநீர் வாங்கி வரச் செய்து அருந்துவார். இப்படி ரஜினிக்கு இளநீர் வாங்கித் தர மறுக்கும் யூனிட்டிலுள்ளவர்களைக் கண்ட தயாரிப்பு நிர்வாகி ஒருவர் அவர்களிடம், ‘‘இப்படி அவரை நீங்க இளக்காரமா நினைக்கிறீங்க. அவர் ஒரு நாள் பெரிய நடிகராக வரப்போறாரு பாருங்க’’ என்று ஆதரவாகப் பேசியிருக்கிறார். நல்லவங்க வாக்கு பலிக்கும் என்பது ரஜினி விஷயத்தில் உண்மையாகி விட்டது!


‘ஜானி’ படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடம். இதில் கேமரா உதவியாளராக சுஹாசினி இருந்தார். அந்த நேரத்தில்தான் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’யில் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டும் இருந்தார் அவர். அதில் ஒரு பகுதி முடித்துவிட்டு மீண்டும் ‘ஜானி’யில் வேலை செய்ய வந்துவிடுவார். அப்போது ரஜினி, ‘‘சுஹாசினி நடிகையாயிட்டாங்க. அவரை கனமான லைட்டுகளை தூக்கச் சொல்லாதீங்க! பார்த்து நடந்துக்குங்க…’’ என்று யூனிட்டிலுள்ளவர்களிடம் மரியாதையாகச் சொல்வதுபோல் பேசி கலாட்டா செய்வாராம்.
சொந்தமாக படம் எடுத்து அதில் நஷ்டப்பட்டு துவண்டுபோயிருந்த வி.கே.ராமசாமி உட்பட மொத்தம் தனக்கு வேண்டிய எட்டு பேர்களை, ஒரு ரூபாய் கூட வாங்காமல் பங்குதாரர்களாக சேர்த்து ஆரம்பிக்கப்பட்ட படம் தான் ‘அருணாச்சலம்’. அதில் கிடைத்த லாபத்தை அனைவருக்கும் பிரித்துக் கொடுத்ததோடு அதில் நடித்த வி.கே.ராமசாமிக்கு தனியாக மிகப்பெரிய சம்பளமும் கொடுத்தார் ரஜினி. வி.கே.ராமசாமி தன் எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் நிம்மதியாக கழிக்க அந்தப்பணம் ரொம்பவே உதவியது.
ரஜினி நடித்த ஒரே ஆங்கிலத் திரைப்படமான ‘பிளட்ஸ்டோன்’ திரைப்படத்துக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா தான். ரஜினி தனது திரைவாழ்வில் பாடிய ஒரே பாடலான ‘‘அடிக்குது குளிரு…’’ பாடலை ‘மன்னன்’ திரைப்படத்தில் பாடவைத்ததும் அவர்தான்.. ‘பணக்காரனி’ல் இடம்பெற்ற ‘‘உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி…’’ பாடல்தான் ரஜினிக்காக இளையராஜா பாடிய முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜாவுடன் ஏற்பட்ட பிரிவுக்கு பின்னர் ரஜினி, இசையமைப்பாளர் சந்திரபோஸ் கூட்டணியில் உருவாகிய ‘மனிதன்’, ‘ராஜா சின்ன ரோஜா’ திரைப்படங்கள்தான் வைரமுத்துவுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. இரண்டு திரைப்படங்களிலும் அனைத்து பாடல்களையும் வைரமுத்துவே எழுத, அனைத்துப் பாடல்களும் சூப்பர்ஹிட்டானது. குறிப்பாக ‘ராஜா சின்ன ரோஜா’வில் ‘‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா…’’ பாடல் ரசிகர்களின் மிகப்பெரும் அபிமானம் பெற்ற பாடலாக அமைந்தது.
ரஜினி படங்களில் ஓப்பனிங் பாடலை பாடும் ஆஸ்தான பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். தமிழ் சினிமாவில் அதிக பாடல்களைப் பாடிய இந்த ஜாம்பவான்தான் ரஜினிக்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார் என்பது சிறப்பு. ஒரு இசையமைப்பாளராகவும் வலம்வந்த எஸ்.பி.பிதான், ரஜினி நடித்த ‘துடிக்கும் கரங்கள்’ படத்திற்கு இசையமைத்தவர் என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.

ஹிந்தியில் அமிதாப் நடித்த 12 படங்களின் தமிழ் ரீமேக்கில் நடித்திருக்கிறார் ரஜினி. அதில் மெகாஹிட் படங்களான ‘பில்லா’, ‘தீ’, ‘படிக்காதவன்’, ‘பாட்ஷா(அவுட்லைன் மட்டும்)’ ஆகியவை இப்படி உருவானவைதான்.
திரைப்படக் கல்லூரியில் ரஜினி படித்துக் கொண்டிருந்தபோது அங்கே சிறப்பு வகுப்பு எடுக்கவந்த இயக்குனர் கே.பாலசந்தரிடம் கேட்ட முதல் கேள்வி, “நடிப்பைத் தவிர நடிகர்களிடம் நீங்கள் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்பதுதான். அதற்கு பாலசந்தர் பளிச் என்று பதில் சொன்னார், “நடிகர்கள் திரைப்படத்துக்கு வெளியே நடிக்கக்கூடாது”. இது நடந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து 1993ல் தினத்தந்திக்கு ரஜினி அளித்த நட்சத்திர பேட்டியில் நீங்கள் சிலசமயம் வெளியே வரும்போது ஷேவிங் கூட செய்யாமல் முகத்தில் வெள்ளை தாடி தெரிகிறமாதிரி வர்றீங்களே ஏன்? என கேட்கப்பட்ட கேள்விக்கு ரஜினி அளித்த பதில், “நடிகர்கள் படத்துலதான் நடிக்கணும்.. படத்துக்கு வெளியே நடிக்கக்கூடாது”

வியாழன், 7 டிசம்பர், 2017

இசைஞானி புதுமைகள் 28 !



இசைஞானி புதுமைகள் 28 !

1. ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டு பயணமோ, அழகான லொகேஷன்களோ, வார அல்லது மாதக்கணக்கில் நேரமோ இளையராஜாவுக்குத்
தேவைப்பட்டதில்லை. தென்றல் வந்து தீண்டும்போது... என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக் கொண்டது வெறும் அரை மணி நேரம்தான்.

2. இளையராஜா வெறும் அரைநாளில் மொத்த ரீரிகார்டிங்கையும் செய்துமுடித்த படம் ''நூறுவாது நாள்"

3. சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான ரீரிகார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம்.. மூன்றே நாளில் வெறும் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களை கொண்டு அந்த படத்திற்கு இசை சேர்க்கப்பட்டது

4. எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை 'பக்கா' நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு.

5. அமிர்தவர்ஷினி என்ற மழையை வரவழைப்பதற்கான தனித்துவமுடைய ராகத்தை ஒரு கோடைப்பொழுதின் பிற்பகலில் "தூங்காத விழிகள்
ரெண்டு" பாடலை அமைத்து மழையையும் வரவழைத்தவர் இசைஞானி

6. பாடலின் மெட்டும் அதற்கான 100% orchestration ஐயும் ஒருவரே செய்யும்போது கிடைக்கும் அத்தனை முழுமை! அத்தோடு ஒவ்வொரு வாத்தியத்தையும் வித்தியாசமாய் கையாளும் ஆளுமை மற்றும் பாங்கு, அதுவும் மற்றவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக்
காட்டுகிறது

7. இசைஞானி தான் முதல்மிறையாக ரீதிகௌளை என்ற ராகத்தை சினிமாவில் பயன்படுத்தினார் ."கவிக்குயில்" என்னும் படத்தில் "சின்ன
கண்ணன் அழைக்கிறான்" என்ற பாடல்தான் அது.

8. Counterpoint என்ற யுக்தியை சர்வதேச இசையின் நுட்பங்களை இசைஞானி சிட்டுக்குருவி படத்தில் இடம்பெற்ற "என் கண்மணி" என்ற பாடலில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்.

9. இந்தியத் திரை இசையில் காயத்ரி என்ற படத்தில்தான் முதன் முதலாக இசைஞானி "எலெக்ட்ரிக் பியானோ" உபயோகபடுத்தினார்.

10. இசைஞானி செஞ்சுருட்டி ராகத்தில் இசையமைத்த ஒரே பாடல் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு.

11. உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் முயற்சி செய்திருக்கவே முடியாத விஷயம்., ஓர் இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து,
பாடல் வரிகள் எழுதப்பட்டு, படமாக்கப்பட்டு, அந்த சவுண்ட் ட்ராக்கை அப்படியே நீக்கிவிட்டு, அந்தக் காட்சியை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, உதட்டசைவு, உடலசைவு, காட்சித்தேவை அனைத்துக்கும் பொருத்தமாக புதிய இசையை எழுதி வியப்பின் உச்சிக்கு நம்மை அழைத்து சென்றவர் இசைஞானி ( ஹேராம் )

12. முன்பெல்லாம் பின்னணி இசைச்சேர்ப்பில் ஒரு ரீல் திரையிட்டு காண்பித்ததும் இயக்குனரோ மற்றவர்களோ இசையமைப்பாளரிடம் வந்து அமர்ந்து அந்த படத்தில் வந்ததுபோல போடுங்கள், இந்த படத்தில் வந்தது போல போடுங்கள் என்றெல்லாம் சொல்லிப் பின் இசைச்சேர்ப்பு முடிந்து, அது சரியில்லாமல் மறுபடி இசையமைப்பாளரே வேறு மாதிரி இசை சேர்ப்பார். ஆனால் இளையராஜாவிடம் அப்படி இல்லை. ஒரு ரீல்
திரையில் பார்த்தால் போதும் உடனே இசைக்குறிப்புகளை எழுத ஆரம்பித்து விடுவார். அதை வாசித்தாலே போதும். இப்படி வேண்டாம்,
வேறுமாதிரி போடுங்கள் என்று சொல்வதற்கான வாய்ப்பே இருக்காது.

13. இந்தியாவில் அல்ல ஆசியாவிலே முதன் முறையாக சிம்பொனி இசை அமைத்தவர் இசைஞானி, சிம்போனி கம்போஸ் பண்ண குறைஞ்சது
ஆறு மாசமாவது ஆகும். வெறும் 13 நாளில் மற்ற கம்போஸர்களை மிரள செய்தவர் இசைஞானி.

14. விசிலில் டியூன் அமைத்து அதை ஒலினாடாவில் பதிவு செய்து பின்பு பாடகரை வைத்து பாடிய பாடல் "காதலின் தீபம் ஒன்று".

15. படத்தின் கதையை கேட்காமல் பாடலுக்கான சூழ்நிலைகளை மட்டும் கேட்டு இசையமைத்த ஒரே படம், "கரகாட்டக்காரன்".

16. வசனமே இல்லாத காட்சியில் கூட, அந்த காட்சியை இசையால், மௌனத்தால் செழுமைபடுத்தி பார்வையாளர்களுக்கு கொண்டு போய்
சேர்க்க முடியும் என்பது ராஜாவிற்கு நன்றாக தெரியும். அதில் ராஜா கிரேட். இரண்டு பேர் மௌனமாக இருக்கும் காட்சியாக இருந்தால் கூட, அவர்களின் மன உணர்வுகளை கூட புரியாதவர்களுக்கும் புரிய வைத்துவிடுவார் ராஜா. அந்த அற்புதமான ஆற்றல் இளையராஜாவிற்கு உண்டு. இந்திய சினிமாவில் பின்னணி இசையில் நம்பர் ஒன் ஜீனியஸ் இளையராஜா.

17. ராஜா சார் ரீ-ரெக்கார்டிங் பண்றதுக்கு முன்னாடி ஒரு முறைக்கு இரண்டு முறை படத்தை பார்ப்பார், மூன்றாவது முறை படம் திரையில் ஆரம்பிக்கும்போது நோட்ஸ் எழுத ஆரம்பிச்சிடுவார், அவர் ஆரம்பிச்சு முடிக்கும்போது படம் கரெக்டா முடியும். அந்த அளவுக்கு எந்த இசையமைபாளராலும் நோட்ஸ் எழுத முடியாது.

18. இந்தியாவிலேயே பின்னணி இசை கேசட்டாக வந்து ஹிட்டான ஒரே படம் ‘பிள்ளை நிலா’

19. பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடலுக்கு தொடையில் தட்டி தாளத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுத்தவர் இசைஞானி

20. இந்தியாவில் முதல் முறையாக சிறந்த பிண்ணனி இசைக்கான விருதை வாங்கியவர் இசைஞானி ( பழசிராஜா )

21. இசைஞானி முதன் முதலாக 'ஸ்டீரியோ'' முறையில் பாடல்களை பதிவு செய்த படம் பிரியா.

22. 137 வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்ட பாடல் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி"

23. இசைஞானியின் பாடலுக்காக கதை எழுதிய வெற்றிக்கண்ட படங்கள் "வைதேகி காத்திருந்தால்", "அரண்மனைக்கிளி".

24. இந்தியாவுக்கு கம்ப்யூட்டர் இசையை அறிமுகப்படுத்தியவர் இசைஞானி ( புன்னகை மன்னன் )

25. “பஞ்சமுகி” என்றொரு ராகம் நமது ராகதேவனால் இயற்றப்பட்டுள்ளது.. ஆனால் இதுவரை அவர் இந்த ராகத்தினை எந்த பாடலிலும் பயன்படுத்தாமல் ரகசியமாக வைத்துள்ளார்..

26. பொதுவாக 2 அல்லது 3 நாட்களிகல் படத்திற்கான இசையமைப்பை முடித்துவிடுவார் ராஜா, ஆனால் அதிகபட்சமாக, அதாவது 24 நாள் பின்னணி இசைகோர்ப்புக்காக எடுத்துக்கொண்ட படம் ( காலாபாணி ) தமிழில் ( சிறைச்சாலை )

27. முன்பெல்லாம் கிட்டார், தபேலாக் கலைஞர்கள் உதவியுடன் ஆர்மோனியத்தை இசைத்து டியூன் உருவாக்குவார். அதற்கு பிறகு ஆர்மோனியத்தில் வாசித்துப் பார்ப்பதில்லை, கண்களை மூடிச் சிந்திப்பார், இசை வடிவங்கள் அவர் மூளையில் இருந்து புறப்படும். அவற்றை அப்படியே இசைக் குறிப்புகளாக எழுதிவிடுவார். ஆர்மோனியம் இல்லாமல் இசை அமைக்கும் இந்த ஆற்றல், இந்திய சினிமா இசை
அமைப்பாளர்களில் இவரிடத்தில் மட்டுமே இருக்கிறது என்பது பிரமிப்பான உண்மை.

28. ராஜா இசை வித்தகர் மட்டுமல்ல... அற்புதமான கவிஞர். காவியக் கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை தனது 'குரு' என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி.

திங்கள், 4 டிசம்பர், 2017

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத அறிய விஷயங்கள்!!


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத அறிய விஷயங்கள்!!


ஜெயலலிதா அவர்கள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மாண்டியா நகரத்தில் ஜெயராம் மற்றும் வேதவல்லி என்னும் தம்பதியினருக்கு மகளாக பிறந்தார். இவரது தந்தை மைசூர் ராஜாங்கத்தில் மருத்துவராய் பணிபுரிந்து வந்தார்.
ஜெயலலிதா அவர்களின் இரண்டாவது வயதில் அவரது தந்தை இறந்து விட்டார். அவர் இறந்த பிறகு ஜெயலலிதாவின் தாய் பெங்களூர் நகரத்திற்கு குடிபெயர்ந்து சென்றார்.
பின்பு இவரது தாய் வேதவல்லி சென்னை மாகாணம் சென்று தமிழ் திரை உலகில் சந்தியா என்னும் பெயரில் நடிகையாக நடித்து வந்தார். சிறு வயது முதலே படிப்பில் சிறந்து விளங்கினார் ஜெயலலிதா அவர்கள். மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை பெற்றுள்ளார்.
ஆரம்ப காலத்தில் இவருக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்ற போதும் இவரது தாயின் தூண்டுதலினால் திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார்.
இவர் 1970 மற்றும் 80-களில் நடித்த பெரும்பாலான படங்கள் வெள்ளி விழா படங்கள் என்பது குறிப்பிடத்தக்கவை.திரையில் மாபெரும் நடிகையாக ஜொலித்த ஜெயலலிதா அவர்கள் பின்னாளில் எம்.ஜி.ஆர். அவர்களின் துணையினால் அரசியலிலும் நுழைந்தார்.
திரையில் மட்டுமில்லாது அரசியலும் பல சாதனைகள் புரிந்து பெருந்தலைவராக உருவெடுத்தார் ஜெயலலிதா. இங்கு அவரை பற்றிய நீங்கள் அறியாத சில அறிய தகவல்கள் பற்றி கூறப்பட்டுள்ளது…
இயற்பெயர் 
ஜெயலலிதா அவர்களின் அவரது தாய் தந்தை வைத்த இயற்பெயர் கோமளவல்லி ஆகும்.
பரதநாட்டியம்
தனது 3 வது வயதிலிருந்தே பரதநாட்டியம் கற்றுகொண்டார் ஜெயலலிதா.
நடிப்புத்துறை
ஜெயலலிதாவிற்கு ஆரம்பத்தில் நடிப்பில் நாட்டம் இல்லை. அவரது அம்மா நடிகை சந்தியா அவர்களின் தூண்டுதலினால் தான் நடிப்பு துறையினுள் வந்தார் ஜெயலலிதா.
படிப்பில் சுட்டி
சிறுவயது முதலே படிப்பில் சுட்டியாக இருந்த ஜெயலலிதா அவர்கள், அவரது மெட்ரிக்குலேஷன் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார்.
முதல் திரைப்படம் 
இவர் நடித்த முதல் திரைப்படமே ‘வயது வந்தோருக்கான’ படமாக அமைந்தது. இதில் அவர் இளம் விதவை பெண்ணாக நடித்ததாக கூறப்படுகிறது.
ஸ்லீவ்லெஸ் உடை 
முதன் முதலில் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து நடித்த தமிழ் நடிகை ஜெயலலிதா தான்.
எம்.ஜி.ஆர். 
புகழ்பெற்ற நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆர். உடன் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதா அவர்களை அரசியலுக்கு அழைத்து வந்ததே எம்.ஜி. ஆர், தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கில திறன் 
ஆங்கில புத்தகங்களை வாசிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர் ஜெயலலிதா. எப்போது பயணம் மேற்கொள்ளும் போதும் நிறைய புத்தகங்களை தன்னுடன் எடுத்து செல்வார்.
எழுத்தாளர்
தமிழில் நன்கு எழுதும் திறன் கொண்டவர் ஜெயலலிதா. “தாய்” தமிழ் வார இதழில் தொடர்ந்து எழுதி வந்தார்.
சில்வர் ஜுபிலி
நாயகி தமிழ் நடிகைகளில் அதிக வெள்ளி விழா படங்களில் (80) நடித்த நடிகை எனும் சாதனைக்கு சொந்தக்காரர் ஜெயலலிதா. இவர் தெலுங்கில் நடித்த 28 படங்களுள் வெள்ளி விழா படங்கள். இவர் நடித்த ஒரே இந்தி படமும் (Izzat) வெற்றி படம் என்பது குறிப்பிடத்தக்கது.
உதவும் கரங்கள்
ஜெயலலிதா கல்விக்கு உதவுவதில் சிறந்தவர். இவர் உதவி செய்து படித்த மாணவர் ஒருவர் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த போதிலும், மேலும் படிக்க முடியாத சூழ்நிலையில் இருந்தார். மீண்டும் அவருக்கு உதவி செய்து பொறியியல் படிக்க வைத்து, இப்போது அவர் பில்லியன் டாலர்களில் லாபம் சம்பாதித்து வரும் ஒரு பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
பாடகி
இதுவரை ஜெயலலிதா 10 பாடல்களை பாடியுள்ளார். அதில் அதிகபட்சமாக எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையமைப்பில் 5 பாடல்களை பாடியுள்ளார்.