ஞாயிறு, 3 டிசம்பர், 2017

“பத்மாவதி”யாக தீபிகா படுகோன்...! வரலாற்றில் வாள் சுழற்றிய பத்மாவதி யார்? #Padmavati



“பத்மாவதி”யாக தீபிகா படுகோன்...! வரலாற்றில் வாள் சுழற்றிய பத்மாவதி யார்? #Padmavati

பா லிவுட்டின் லேட்டஸ் வைரல், நடிகை தீபிகா படுகோன் நடித்து வெளியாக இருக்கும் ’பத்மாவதி’ திரைப்படம்.

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்ஜய் லீலா பன்சாலி இயக்கும் இந்தத் திரைப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ நவராத்திரியின் தொடக்க நாளில் வெளியானது. ஆரம்பம் முதலே இந்தப் படம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கிறது. ராணி பத்மாவதியின் சரித்திரத்தைத் திரித்து தவறாக எடுப்பதாக படப்பிடிப்பு தளத்தை ஒரு குழுவினர் முற்றுகை இட்டனர். ராணி பத்மாவதி வாழ்க்கையில் அப்படி என்ன சுவாரஸ்யம் இருக்கிறது என்று வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினோம்.
ராணி பத்மாவதி பற்றிய குறிப்பு, கி.பி. 1540-ம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு கவிதையில் முதன்முறையாகப் பதிவாகியிருக்கிறது. சூஃபி கவிஞரான முகமது ஜயசி (Muhammed Jayasi) என்பவரால் எழுதப்பட்ட இந்தக் கவிதை, 'அவதி' என்ற மொழியில் இருந்தது. அதன்படி... 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ராணி பத்மாவதி. அப்போதைய சிங்கள அரசாங்கத்தின் (இலங்கை) இளவரசி அவர். பேரழகும் பெரும் வீரமும் அவரிடம் இருந்தது. அன்றைய ராஜ்புட் பேரரசரான ரத்தன் சிங், சுயம்வரம் முறையில் பத்மாவதியை மணந்துகொண்டார். அதன்பிறகு, அவர் ரத்தன் சிங்கின் இரண்டாவது மனைவியாக, சித்தூர் அரசவைக்கு மகாராணியாகத் திகழ்ந்தார். பத்மாவதி ஒரு பேசும் கிளியை வளர்ந்தார். அந்தக் கிளியின்மூலம், பத்மாவதியின் பேரழகை கேள்விப்பட்டு அவரைக் காணும் பேராவல் கொண்டார், டெல்லி பேரரசர்களின் ஒருவரான அலாவுதீன் கில்ஜி (Alauddin Khilji).
சித்தூருக்கு படையெடுத்த கில்ஜி, மகாராணி பத்மாவதியை சந்தித்தாலே போதும் என்று அரசன் ரத்தன் சிங்கிடம் தெரிவிக்கிறார். பத்மாவதியைப் பார்த்த நொடியில் அவரை அடையும் முனைப்பில், ரத்தன் சிங்கை கைதுசெய்து டெல்லிக்கு அடிமையாக அழைத்துச் சென்றார். ராணி பத்மாவதி கணவனை மீட்கும் வைராக்கியத்துடன், டெல்லிக்குப் படையெடுத்தார். அலாவுதீன் கில்ஜியுடன் போரிட்டு கணவனை மீட்டார்.

'ஒரு பெண் தன்னைத் தோற்கடித்துவிட்டாளே' என்ற கோபத்தில் சித்தூரை அழிக்கும் நோக்கத்துடன் மீண்டும் பெரும் படையுடன் கிளம்புகிறார் அலாவுதீன் கில்ஜி. அத்தகைய பெரும் படையுடன் தன்னால் போரிடமுடியாது என்று புரிந்துகொண்டார் ராணி பத்மாவதி. தனது ஊரிலுள்ள பெண்களைத் திரட்டிக்கொண்டு ஒட்டுமொத்தமாக தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். ஏனென்றால், அந்தப் போரில் தோற்றால், சித்தூர் பெண்களுடன் தானும் அடிமையாக சிறையில் அடைக்கப்படுவோம் என நினைத்தார். எனவே, இப்படி ஒரு துணிச்சலான முடிவு எடுத்தாராம். படையுடன் அலாவுதீன் கில்ஜி சித்தூருக்கு வந்து பார்த்தபோது, அங்கே ஒரு பெண்ணும் இல்லை என்கிறது வரலாறு.
இவ்வாறு இக்கட்டான நேரத்தில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட ராணி பத்மாவதியை ராஜஸ்தானில் ஒரு தரப்பினர் தெய்வமாக வணங்குகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, ராணி பத்மாவதி யின் வாழ்க்கை வரலாறே, முகமது ஜயசி எழுதிய கற்பனை கவிதை என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ராணி பத்மாவதி என்பவர் நிஜமா கற்பனை கதாபாத்திரமா என்பது இன்றும் கேள்விக்குறியே. இருப்பினும், இந்தக் கதையைத் திரைவடிவில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலாக இருக்கின்றனர்.
மேலும், அவரின் வரலாற்றுக் கதையில் நடிக்கும் தீபிகா படுகோனைவுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது. நன்றி விகடன்.

: ராணி பத்மாவதி
“பத்மாவதி”யாக தீபிகா படுகோன்...! வரலாற்றில் வாள் சுழற்றிய பத்மாவதி யார்? #Padmavati
தீபிகா படுகோன் நடிக்கும் பத்மாவதி படமே இப்ப ஹாட் டாபிக் ராணி பத்மாவதி வாழ்க்கையில் அப்படி என்ன சுவாரசியம் இருக்கிறது என்று வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினோம்.


சீருடையுடன் களமிறங்கத் தயாரான பயிற்சியாளர்கள்.. இந்திய அணி டிக்ளேர் செய்ய நிர்பந்திக்கப்பட்டதா?
சிறுமி ஹாசினி... தாய் சரளா.. தொடரும் கொலைகள்: போலீஸ் கூறும் விளக்கம் இதுதான்!
சென்னைக்கு மிக அருகில் இப்படியொரு அழகான தீவு இருக்குனு தெரியுமா? #ChennaiTravel
பணம் கொடுக்கும் வைரல் வீடியோ: என்ன சொல்கிறார் எம்.எல்.ஏ கனகராஜ்?
இந்தியாவின் சமூக வளர்ச்சிக்கு முன்மாதிரி தமிழகம்தான், குஜராத் அல்ல!



40 ஆண்டுகளுக்கு முன்பே ராணி பத்மினியாக தமிழில் வெளியான `பத்மாவதி'

ராணி பத்மினி குறித்த சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி திரைப்படம், வட
இந்தியாவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தாலும், 1963ல் தமிழில் இதே பின்னணி கதையோடு
வெளிவந்த `சித்தூர் ராணி பத்மினி'
திரைப்படம், சிறிய சலசலப்பைக்கூட ஏற்படுத்தவில்லை.
ராஜஸ்தானின் ராணி பத்மினியின் கதை இந்தியா முழுவதும் பிரபலமான ஒன்று என்றாலும் அதுவரை அந்தக் கதை தமிழில் வெளியாகியிருக்கவில்லை என்பதால், அந்தக் கதையை படமாக எடுக்க முடிவுசெய்தார் உமா பிக்சர்ஸின் ஆர்.எம். ராமநாதன். படத்தை சித்ரபு நாராயணமூர்த்தி இயக்கினார். கதை, திரைக்கதையை ஸ்ரீதரும் இளங்கோவனும் எழுதினர்.
'தென்னிந்திய நடிகர்களின் போர்க் குணமும், மண்டியிடும் வட இந்திய நடிகர்களும்'
பத்மாவதி திரைப்பட பிரச்சனையின் முழுப் பின்னணி
சிவாஜி கணேசன், வைஜெயந்திமாலா, எம்.என். நம்பியார், டி.எஸ். பாலையா, கே.ஏ. தங்கவேலு என அந்த காலகட்டத்தில் முன்னணியில் இருந்த நடிகர்கள் பலரும் படத்தில் இருந்தனர். 1963 பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி சித்தூர் ராணி பத்மினி வெளியானது.
ராணி பத்மினி மீது தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி கொண்டிருந்த ஆசையே இந்தப் படத்தின் கதை. அந்த காலகட்டத்தில் அன்னிய ஆண்கள் முன்பாக பெண்கள் தோன்றுவது வழக்கமில்லையென்பதால், ராணி எப்போதும் பர்தாவுடனேயே இருப்பார்.


ஒரு கட்டத்தில் ராணியை தான் பார்க்காவிட்டால், ராஜ்ஜியத்தையே அழித்துவிடப் போவதாக அலாவுதீன் கில்ஜி மிரட்ட, ஒரு ஏற்பாட்டுக்கு வருகிறார் ராணா. அதாவது ராணியின் பிம்பம் தண்ணீரில் பிரதிபலிக்கும்: அந்த பிம்பத்தை கண்ணாடியில் பிரதிபலிக்கச் செய்து கில்ஜி பார்த்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் அலாவுதீனைக் கொல்வதற்கும் ராணா திட்டமிடுவார். ஆனால், மற்றொருவருக்கு முகத்தைக் காண்பிப்பதில் ராணிக்கு விருப்பமில்லை. பல்லாக்கில் அவரைத் தூக்கி செல்லும்போது, தீயில் விழுந்து உயிர் துறக்கிறார் ராணி பத்மினி.
இதில் ராணாவாக சிவாஜி கணேசனும் ராணி பத்மினியாக வைஜெயந்திமாலாவும் அலாவுதீன் கில்ஜியாக எம்.என். நம்பியாரும் நடித்திருந்தார்கள். வைஜெயந்திமாலா சிறப்பாக நடனம் ஆடுவார் என்பதால் படத்தில் பல நாட்டியக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார்.
யார் இந்த பத்மாவதி? ஏன் இவ்வளவு சர்ச்சை? 10 முக்கிய தகவல்கள்
"தீபிகாவின் உடலைவிட உயிருக்கு மதிப்பளிக்கிறேன்" - கமல்
ஆனால், எதிர்பாராதவிதமாக இந்தப் படம் வெற்றி பெறவில்லை. சிவாஜி கணேசன், வைஜெயந்திமாலா போன்ற பெரிய நடிகர்கள் நடித்திருந்தும் ரசிகர்கள் இந்தப் படத்தை வரவேற்கவில்லை.
"இந்தப் படம் வந்ததே பலருக்கும் மறந்துபோய்விட்டது. யாருடைய நடிப்பும் மிகச் சிறப்பாக இருந்ததாகச் சொல்ல முடியாது. பாடல்களும் எடுபடவில்லை" என்று நினைவுகூர்கிறார் சென்னையைச் சேர்ந்த சினிமா வரலாற்றாசிரியரான ராண்டார் கை.
அந்த காலகட்டத்தில் இந்தியாவில் வேறெங்கும் ராணி பத்மினி குறித்து திரைப்படங்கள் வந்ததாகத் தெரியவில்லை என்கிறார் அவர்.
இந்தப் படம் சர்ச்சையை அல்ல, சிறிய சலசலப்பைக்கூட தமிழ்நாட்டில் ஏற்படுத்தவில்லை.
"1960களில் இந்து - முஸ்லிம் பிரிவினை என்பதே தென்னிந்தியாவில் பெரிதாகக் கிடையாது. அதுவும் ஒரு சினிமாவை வைத்தெல்லாம் இம்மாதிரியான மத ரீதியான சர்ச்சைகள் அப்போது ஏற்பட்டதில்லை" என்கிறார் எழுத்தாளரும் சினிமா வரலாற்றாசிரியருமான தியடோர் பாஸ்கரன்.
எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி படத்தில் "எல்லோருக்கும் இடம்கொடுக்கும் அல்லாவே, எமாந்திட்டா போட்டிருவாங்க குல்லாவே" என்று சந்திரபாபு பாடுவதைப் போல இடம்பெற்றிருக்கும் பாடலைச் சுட்டிக்காட்டும் தியடோர் பாஸ்கரன், இப்போது அப்படி ஒரு பாடல் எந்தப் படத்திலும் இடம்பெற முடியாது என்கிறார்.
அந்த காலகட்டத்தில் செட்டியார், பிராமணர்கள் போன்ற சமூகத்தினரை தமிழ் சினிமாவில் தொடர்ந்து விமர்சித்துவந்தனர். அது பெரிய பிரச்சனையாக இல்லை என்கிறார் அவர்.
ஆனால், அதை கதையுடன் தற்போது ஹிந்தியில் தயாரிக்கப்பட்டுள்ள பத்மாவதி திரைப்படத்தின் கதைக்கு குறிப்பிட்ட பிரிவினர் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதால், அப் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்துக்கு, குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் தடை விதித்திருக்கின்றன.

அன்று சூர்ப்பனகைக்கு நடந்தது... இன்று தீபிகா படுகோனுக்கு நடக்கும்... ராஜ்புத் கார்னி சேவா அமைப்பு மிரட்டல்!


பத்மாவதி திரைப்படம் வெளியிடப்பட்டால், ராமாயணத்தில் லக்ஷமணன், சூர்ப்பனகைக்கு என்ன செய்தானோ அதை நான், தீபிகா படுகோனுக்கு செய்வேன் இது சத்தியம் என்று ராஜ்புத் கார்னி சேவா அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
வரலாற்று திரைப்படமான பத்மாவதி திரைப்படத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. பத்மாவதி திரைப்படத்தை பாலிவுட்டின் பிரபல திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ளார். ராஜஸ்தானின் சித்தூர் அரசி பத்மாவதி குறித்த வரலாற்று படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படம் தங்களை தவறாக சித்தரிப்பதாக கூறி ராஜ்புத் கார்னி சேவா என்கிற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜெய்ப்பூரில் நடந்த படப்பிடிபிப்பின்போது, உள்நுழைந்த எதிர்ப்பாளர்கள் ஷூட்டிங்கிற்காக போட்டிருந்த செட்டுகளை உடைத்தும் பணியாளர்களைத் தாக்கியும் உள்ளனர். படப்பிடிப்பு உபகரணங்களையும் அவர்கள் சேதப்படுத்தினர். இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியும் அந்த தாக்குதலில் காயமடைந்தார்.
பத்மாவதி படத்தன் போஸ்டர் வெளியீட்டின்போதும் தீவைத்துக் கொளுத்தி தங்கள் எதிர்ப்புகளைக் காட்டினர். மேலும் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் படம் வெளியானால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் இயக்குநருக்கு மிரட்டல் வந்தது.
படத்தின் டீசர் அண்மையில் ராஜ்ஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஆகாஷ் மாலில் வெளியிட திட்டமிட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக டீசர் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், ராஜ்புத் கார்னி சேனா அமைப்பைச் சேர்ந்த மகிபால் சிங் மக்ரானே என்பவர் வீடியோ ஒன்றில், ராஜ்புத் வம்சத்தை சேர்ந்தவர்கள் வீரமானவர்கள், பெண்களைத் தேவையில்லாமல் சீண்டமாட்டார்கள். இந்த படம் வெளியானால் ராமாயணத்தில் லக்ஷமணன், சூர்ப்பனகைக்கு என்ன செய்தானோ அதை நான், தீபிகா படுகோனுக்கு செய்வேன் இது சத்தியம் என்று மிரட்டில் விடுத்துள்ளார்.
இந்த படம் வெளியிடப்பட்டால், மாநிலத்தில் பெரும் போராட்டம் வெடிக்கும். எங்கள் முன்னோர்களின் வரலாறு களங்கமற்றது. அதை யாராவது களங்கப்படுத்த நினைத்தால் அவர்களின் ரத்தம் கொண்டே அந்த களங்கத்தைத் துடைப்போம் என்றும் அந்த வீடியோவில் கூறியுள்ளார். பத்மாவதி படத்துக்கு எதிராக ராஜஸ்தான் மட்டுமன்றி மகாராஷ்ட்ரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட், குஜராத், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக