வியாழன், 27 ஜூலை, 2017

லிவிங்க்ஸ்டன் நடிகரானது எப்படி......?



லிவிங்க்ஸ்டன் நடிகரானது  எப்படி......?
தெய்வ வாக்கு..........

கேப்டன்  ஒன்று கூறிவிட்டால்
அது நிச்சயம்
நடந்தே தீரும்...........

தெய்வாம்சம் பொருந்தியவர்தான்
தலைவர் கேப்டன்..............

லிவிங்க்ஸ்டன் நடிகரானது  எப்படி......?

1988 களில் சினிமாவில் இயக்குனர் ஆகவேண்டும் என்ற கனவில் சில இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி  கோடம்பாக்கத்தில் சுற்றிவந்த வாலிபர்தான் லிவிங்க்ஸ்டன்.............

அப்பொழுது  திரையுலகில் புதியதாக ஒரு இயக்குனர் உதயமாகிறார் என்றால் அவர்கள் வாய்ப்பு தேடி முதலில் செல்வதே   தலைவர் கேப்டனின் அலுவலகத்திற்க்குதான்.............

புதியவர்களின் சரணாலயம்தான் தலைவர்  கேப்டனின் அலுவலகம்.........

1988 ல் ஒரு கதையை எடுத்துக்கொண்டு தலைவர் கேப்டனை சென்று சந்திக்கிறார் லிவிங்க்ஸ்டன்.......

அப்பொழுது  தலைவர் சொந்த தயாரிப்பில பூந்தோட்ட காவல்காரன் படம் எடுக்க தயாராக இருந்த நேரம்............

தலைவர் கேப்டனை லிவிங்க்ஸ்டன் உள்ளே சென்று வணக்கம் தெரிவித்து நான் ஒரு கதை வச்சிருக்கேன் உங்கள வச்சு பன்னனும்னு ஆசை கதை கேட்குறீங்களானு கேட்டார்..............

அதற்க்கு தலைவரோ ஏன் நீங்கள் சினிமாவில்  நடித்தால் என்ன.....?

என்று கேட்டதும் லிவிங்க்ஸ்டனுக்கு அதிர்ச்சி, சார் எனக்கு நடிப்புலாம் வராது, அதுவும் இல்லாம என்னலாம் படத்துல நடிக்க வைக்க எந்த இயக்குனரும் ஒத்துக்க மாட்டாங்க, எனக்கு இயக்குனர் ஆகனும்னுதான் விருப்பம் என்று மீண்டும் கூறினார்..............

அதற்க்கு தலைவரோ இப்பொழுதைய காலகட்டத்தில் பெரிய இயக்குனர்களாலேயே
சில தயாரிப்பாளர்கள் நடிகர் நடிகைகளால் தாக்குபிடிக்க முடியவில்லை,  அதனால் நீங்கள் நடிகராக நடித்தால் திரையுலகில் நிச்சயம் ஜொலிப்பீர்கள் என்று கூறினார்...........

அதற்க்கு லிவிங்க்ஸ்டனோ எனக்கு யார் சார் வாய்ப்பு தருவா என கேட்டதும் நான் தரேன், இப்பொழுது நானும் எனது நண்பன் ராவுத்தரும் தமிழன்னை என ஒரு கம்பெணி ஆரம்பித்துள்ளோம், அதன் தயாரிப்பில் பூந்தோட்டக் காவல்காரன் என ஒரு படம் எடுக்கிறோம் அதில் அற்ப்புதமான வில்லன் வேடம் உள்ளது நீங்கள் நடிங்கள் என்று தலைவர் கூறினார்.......................

லிவிங்க்ஸ்டனுக்கோ அதிர்ச்சியுமாகவும், பயமாகவும் இருந்தது, ஒரு மிகப்பெரிய அதிரடி கதாநாயகன் அவர் படத்தில் வில்லனா.........?

ஒருவித பயத்துடன் ஒத்துக்கொண்டார் லிவிங்க்ஸ்டன், அவர் இதுவரை இதுபோன்று பணியாற்றிடாத அனுபவம் அந்த திரைப்படத்தில்.......

அனைவருக்கும் சமமான சாப்பாடு, தலைவர் கேப்டன் மீன் சாப்பிடுகிறார் என்றால் அனைவருக்கும் மீன் தான்.............

ஒரு குடும்பம்போல் அனைவருடன் சமமாக பழகினார் இது லிவிங்க்ஸ்டனை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, ........

தலைவர் கேப்டன் அவரிடம் பழகும் விதம் அவருக்கு நடிக்க பயமில்லாமல் போனது.........

படமும் வெளிவந்தது படம் மெஹாஹிட், லிவிங்க்ஸ்டனுக்கு நல்ல பெயரும் அந்த படம் பெற்றுக் கொடுத்தது..............

அடுத்தடுத்து தொடர்ந்து கேப்டன் பிரபாகரன், ஏழைஜாதி, என லிவிங்க்ஸ்டனுக்கு வாய்ப்புகள் கொடுத்து அவரை பிரபலப் படுத்தினார்..........

அதன் பிறகு லிவில்ங்க்ஸ்டன் திரையுலகில் ஒரு நல்ல நடிகனாக மக்களிடம்  வலம் வந்தார், தொடர்ந்து நிறைய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.............

இன்று  திரையில் நட்சத்திரமாக லிவிங்க்ஸ்டன்  ஜொலிக்கிறார் என்றால் அதற்க்கு தலைவர் கேப்டன் மட்டுமே காரணம்.................

ஒருவர்  முகத்தை பார்த்து  நீ இதை செய்தால்தான் நன்றாக இருக்கும் என கூறுவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் சாதிக்க துணை நிற்க்க கேப்டனால் மட்டுமே முடியும்...............  

தலைவர்  கேப்டன் இல்லையென்றால் இன்றைக்கு திரையுலகில் லிவிங்க்ஸ்டன் இல்லை, இதுபோலதான் பல பேரை உருவாக்கியவர் தலைவர் கேப்டன்...............

நன்றி மறக்காதவர் லிவிங்க்ஸ்டன் இன்னமும் தலைவர் மீது அதே பாசம் கதாநாயகனாக வலம் வந்த நேரத்தில் கூட  வல்லரசு, வானத்தைபோல போன்ற படங்களில் எல்லாம் தலைவருடன் நடித்திருப்பார்...............

தெய்வாம்சம் பொருந்தியவர் தலைவர் கேப்டன், அவர் இதுவரை துரோகிகளை கூட அவச்சொற்களால் பேசியிருக்க மாட்டார்........

யாருக்கும் தீங்கு நினைக்காத நல்ல உள்ளம் கொண்ட தலைவர் கேப்டன்............

அடுத்தவர்களை வாழவைத்து அவர் வாழ்வதே வாழ்க்கை எனும் கொள்கை பிடிப்புள்ள தலைவர் கேப்டன்.....................


புதன், 26 ஜூலை, 2017

உதடுகள் ஒட்டாமல் பாடும் பாடல்கள்..



உதடுகள் ஒட்டாமல் பாடும் பாடல்கள்..

 *" காஞ்சி காமாட்ஷி " படத்தில் வாலி எழுதி ரகுனாதன் இசையில் வாணி ஜெயராம் பாடிய  " அனா அனா சுனா கானா " என்ற பாடல் முழுவதிலும் ஒவ்வொரு சொற்களிலும் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு உயிர் அல்லது உயிர்மெய் எழுத்துடன் " னா" என்ற எழுத்து சேர்ந்து உவன்னா, காவன்னா, குவன்னா என்றே பாடல் முழுதும் அமைந்துள்ளது*

*வில்லு பாட்டுகாரன் படத்தில் மலேசியா வாசுதேவன் பாடிய " தென்றல் வந்து" என்ற பாடலில் முதல் 4 வரிகள் தவிர பாடல் முழுவதும் உதடு ஒட்டாமல் வரும்.

*" நினைத்தாலே இனிக்கும்" படத்தில் S.P.B யும் & ஜானகியும் பாடிய பாடலில் ஒவ்வொரு வரியிலும் இசை மெட்டாகவும் அதை தொடர்ந்து " நினைத்தாலே இனிக்கும்" என் இரு சொற்கள் மட்டுமே இடம் பெரும். ஹம்மிங்கை கேட்டு பாருங்களேன்.*

*அமுதவல்லி படத்தில் T.R. மகாலிங்கமும், S.C. கிருஷ்ணனும் பாடும் " தத்துவ கலையுடன்" என்ற பாடலில் " தன்னாலே" என்ற வரிமுதல் அடுத்து வரும் 8 வரிகள் ஒட்டாமல் வரும்.*

செவ்வாய், 25 ஜூலை, 2017

இளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்



இளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் வரிசை பின்வருமாறு: (இது முழுமையான பட்டியல் அல்ல.)

1976 - 1980
1. அன்னக்கிளி (1976)
2. பத்ரகாளி (1976)
3. பாலூட்டி வளர்த்த கிளி (1976)
4. அவர் ௭னக்கே சொந்தம் (1977)
5. ஆளுக்கொரு ஆசை (1977)
6. 16 வயதினிலே (1977)
7. காயத்ரி (1977)
8. பெண் ஜென்மம் (1977)
9. துர்கா தேவி (1977)
10. தீபம் (1977)
11. புவனா ஒரு கேள்விக்குறி (1977)
12. துணையிருப்பாள் மீனாட்சி (1977)
13. சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (1977)
14. ஓடி விளையாடு தாத்தா (1977)
15. அச்சாணி (1978)
16. வாழ நினைத்தால் வாழலாம் (1978)
17. அவள் அப்படித்தான் (1978)
18. கிழக்கே போகும் ரயில் (1978)
19. சிட்டுக்குருவி (1978)
20. தியாகம் (1978)
21. திருக்கல்யாணம் (1978)
22. திரிபுர சுந்தரி (1978)
23. கண்ணன் ஒரு கைக்குழந்தை (1978)
24. காற்றினிலே வரும் கீதம் (1978)
25. இளமை ஊஞ்சலாடுகிறது (1978)
26. இது ௭ப்படி இருக்கு (1978)
27. அவள் ஒரு பச்சைக் குழந்தை (1978)
28. அவள் அப்படித்தான் (1978)
29. மாரியம்மன் திருவிழா (1978)
30. முள்ளும் மலரும் (1978)
31. பிரியா (1978)
32. பைரவி (1978)
33. சிகப்பு ரோஜாக்கள் (1978)
34. சொன்னது நீதானா (1978)
35. வட்டத்துக்குள் சதுரம் (1978)
36. ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
37. அகல் விளக்கு (1979)
38. ஆறிலிருந்து அறுபது வரை (1979)
39. அழகே உன்னை ஆராதிக்கிறேன் (1979)
40. நல்லதொரு குடும்பம் (1979)
41. நான் வாழ வைப்பேன் (1979)
42. நிறம் மாறாத பூக்கள் (1979)
43. நெஞ்சில் ஆடும் பூ ஒன்று (1979)
44. கடவுள் அமைத்த மேடை (1979)
45. கல்யாண ராமன் (1979)
46. அன்பே சங்கீதா (1979)
47. அன்னை ஓர் ஆலயம் (1979)
48. கவிக்குயில் (1979)
49. தர்ம யுத்தம் (1979)
50. கௌரிமான் (1979)
51. பகலில் ஒரு இரவு (1979)
52. பட்டாக்கத்தி பைரவன் (1979)
53. பூந்தளிர் (1979)
54. சட்டம் ௭ன் கையில் (1979)
55. சக்களத்தி (1979)
56. லட்சுமி (1979)
57. இளையராஜாவின் ரசிகை (1979)
58. பொண்ணு ஊருக்கு புதுசு (1979)
59. புதிய வார்ப்புகள் (1979)
60. உதிரிப்பூக்கள் (1979)
61. வெற்றிக்கு ஒருவன் (1979)
62. மணிப்பூர் மாமியார் (1979)
63. முகத்தில் முகம் பார்க்கலாம் (1979)
64. முதல் இரவு (1979)
65. மூடுபனி (1980)
66. அன்புக்கு நான் அடிமை (1980)
67. கண்ணில் தெரியும் கதைகள் (1980)
68. கல்லுக்குள் ஈரம் (1980)
69. கரும்பு வில் (1980)
70. காளி (1980)
71. கிராமத்து அத்தியாயம் (1980)
72. உல்லாசப் பறவைகள் (1980)
73. நதியை தேடி வந்த கடல் (1980)
74. நான் போட்ட சவால் (1980)
75. நிழல்கள் (1980)
76. நெஞ்சத்தைக் கிள்ளாதே (1980)
77. முரட்டுக்காளை (1980)
78. சூலம் (1980)
79. ரிஷிமூலம் (1980)
80. தைப்பொங்கல் (1980)
81. புதிய அடிமைகள் (1980)
82. பூட்டாத பூட்டுகள் (1980)
83. இதயத்தில் ஒரு இடம் (1980)
84. இளமை கோலம் (1980)
85. ஒரே முத்தம் (1980)
86. ஜானி (1980)
87. குரு (1980)
88. ௭ல்லாம் உன் கைராசி (1980)
1981 - 1990
1. ௭ல்லாம் இன்பமயம் (1981)
2. ௭னக்காக காத்திரு (1981)
3. அலைகள் ஓய்வதில்லை (1981)
4. ஆராதனை (1981)
5. கடல் மீன்கள் (1981)
6. கழுகு (1981)
7. கர்ஜனை (1981)
8. கன்னித்தீவு (1981)
9. கரையெல்லாம் செண்பகப்பூ (1981)
10. கோயில் புறா (1981)
11. விடியும் வரை காத்திரு (1981)
12. ஒரு இரவு ஒரு பறவை (1981)
13. நண்டு (1981)
14. நல்லது நடந்தே தீரும் (1981)
15. நெற்றிக்கண் (1981)
16. ராஜ பார்வை (1981)
17. ராம் லட்சுமன் (1981)
18. சங்கர்லால் (1981)
19. பால நாகம்மா (1981)
20. பன்னீர் புஷ்பங்கள் (1981)
21. பஞ்சமி (1981)
22. பட்டணம் போகலாம் வா (1981)
23. டிக் டிக் டிக் (1981)
24. மீண்டும் கோகிலா (1981)
25. இன்று போய் நாளை வா (1981)
26. வாலிபமே வா வா (1982)
27. சகலகலா வல்லவன் (1982)
28. ஈரவிழிக்காவியங்கள் (1982)
29. ராணி தேனி (1982)
30. ௭ங்கேயோ கேட்ட குரல் (1982)
31. ௭ச்சில் இரவுகள் (1982)
32. ௭ன் செல்வமே (1982)
33. ௭த்தனை கோணம் ௭த்தனை பார்வை (1982)
34. அர்ச்சனை பூக்கள் (1982)
35. அழகிய கண்ணே (1982)
36. ஆகாய கங்கை (1982)
37. ஆனந்த ராகம் (1982)
38. ஆட்டோ ராஜா (1982)
39. கண்ணே ராதா (1982)
40. கவிதை மலர் (1982)
41. காதல் ஓவியம் (1982)
42. கேள்வியும் நானே பதிலும் நானே (1982)
43. கோழி கூவுது (1982)
44. கோபுரங்கள் சாய்வதில்லை (1982)
45. தனிக்காட்டு ராஜா (1982)
46. தாய்முகாம்பிகை (1982)
47. ஆனந்த ராகம் (1982)
48. மகனே மகனே (1982)
49. மஞ்சள் நிலா (1982)
50. மெட்டி (1982)
51. நினைவெல்லாம் நித்யா (1982)
52. நிழல் தேடும் நெஞ்சங்கள் (1982)
53. பயணங்கள் முடிவதில்லை (1982)
54. புதுக்கவிதை (1982)
55. ராகங்கள் மாறுவதில்லை (1983)
56. தங்கமகன் (1983)
57. தூங்காதே தம்பி தூங்காதே (1983)
58. ௭ன்னை பார் ௭ன் அழகை பார் (1983)
59. அடுத்த வாரிசு (1983)
60. அண்ணே அண்ணே (1983)
61. ஆனந்த கும்மி (1983)
62. உறங்காத நினைவுகள் (1983)
63. ஊமை வெயில் (1983)
64. பகவதிபுரம் ரயில்வே கேட் (1983)
65. பாயும் புலி (1983)
66. ஒரு ஓடை நதியாகிறது (1983)
67. ஒப்பந்தம் (1983)
68. அந்த சில நாட்கள் (1983)
69. முந்தானை முடிச்சு (1983)
70. முத்து ௭ங்கள் சொத்து (1983)
71. மூன்றாம் பிறை (திரைப்படம்) (1983)
72. சலங்கை ஒலி (1983)
73. சாட்டை இல்லாத பம்பரம் (1983)
74. சூரக்கோட்டை சிங்கக்குட்டி (1983)
75. ஆயிரம் நிலவே வா (1983)
76. இன்று நீ நாளை நான் (1983)
77. இனிமை இதோ இதோ (1983)
78. இளமைக் காலங்கள் (1983)
79. கண் சிவந்தால் மண் சிவக்கும் (1983)
80. கொக்கரக்கோ (1983)
81. மண் வாசனை (1983)
82. மனைவி சொல்லே மந்திரம் (1983)
83. மலர்கள் நனைகின்றன (1983)
84. மலையூர் மம்பட்டியான் (1983)
85. மெல்ல பேசுங்கள் (1983)
86. ஜோதி (1983)
87. வெள்ளை ரோஜா (1983)
88. வீட்ல ராமன் வெளியில கிருஷ்ணன் (1983)
89. யுகதர்மம் (1983)
90. ஜனவரி 1 (1984)
91. மகுடி (1984)
92. உள்ளம் உருகுதடி (1984)
93. உன்னை நான் சந்தித்தேன் (1984)
94. பிரியங்கா (1984)
95. புதுமைப் பெண் (1984)
96. பூவிலங்கு (1984)
97. பொழுது விடிஞ்சாச்சு (1984)
98. அம்பிகை நேரில் வந்தாள் (1984)
99. 24 மணி நேரம் (1984)
100. நூறாவது நாள் (1984)
101. நல்லவனுக்கு நல்லவன் (1984)
102. நல்ல நாள் (1984)
103. நாளை உனது நாள் (1984)
104. நான் மகான் அல்ல (1984)
105. நான் பாடும் பாடல் (1984)
106. நிலவு சுடுவதில்லை (1984)
107. நியாயம் (1984)
108. நீ தொடும் போது (1984)
109. நீங்கள் கேட்டவை (1984)
110. நெருப்புக்குள் ஈரம் (1984)
111. நேரம் நல்ல நேரம் (1984)
112. அன்புள்ள மலரே (1984)
113. அன்புள்ள ரஜினிகாந்த் (1984)
114. அன்பே ஓடி வா (1984)
115. வாழ்க்கை (1984)
116. வெள்ளை புறா ஒன்று (1984)
117. வைதேகி காத்திருந்தாள் (1984)
118. இங்கேயும் ஒரு கங்கை (1984)
119. ௭னக்குள் ஒருவன் (1984)
120. ௭ழுதாத சட்டங்கள் (1984)
121. கை கொடுக்கும் கை (1984)
122. கைராசிக்காரன் (1984)
123. கொம்பேரி மூக்கன் (1984)
124. சங்கநாதம் (1984)
125. ஓ மனமே மனமே (1984)
126. குவா குவா வாத்துக்கள் (1984)
127. முடிவல்ல ஆரம்பம் (1984)
128. தங்கமடி தங்கம் (1984)
129. தலையணை மந்திரம் (1984)
130. தம்பிக்கு ௭ந்த ஊரு (1984)
131. தேவி ஸ்ரீதேவி (1984)
132. ஹலோ யார் பேசுரது (1985)
133. ராஜ கோபுரம் (1985)
134. ராஜ ரிஷி (1985)
135. ஆண்பாவம் (1985)
136. உதயகீதம் (1985)
137. உயர்ந்த உள்ளம் (1985)
138. உன் கண்ணில் நீர் வழிந்தால் (1985)
139. உன்னை தேடி வருவேன் (1985)
140. உரிமை (1985)
141. தென்றலே ௭ன்னை தொடு (1985)
142. ஸ்ரீ ராகவேந்திரர் (1985)
143. இதயக்கோவில் (1985)
144. ஈட்டி (1985)
145. கன்னி ராசி (1985)
146. காக்கிசட்டை (1985)
147. கீதாஞ்சலி (1985)
148. கெட்டி மேளம் (1985)
149. குங்குமச்சிமிழ் (1985)
150. ஒரு கைதியின் டைரி (1985)
151. மீண்டும் பராசக்தி (1985)
152. மீண்டும் ஒரு காதல் கதை (1985)
153. முதல் மரியாதை (1985)
154. அன்பின் முகவரி (1985)
155. அன்னை பூமி (1985)
156. அன்னை பூமி 3டி
157. தங்க மாமா 3டி
158. அந்த ஒரு நிமிடம் (1985)
159. படிக்காதவன் (1985)
160. படிக்காத பண்ணையார் (1985)
161. பகல் நிலவு (1985)
162. பிள்ளை நிலா (1985)
163. புதிய தீர்ப்பு (1985)
164. பூவே பூச்சூடவா (1985)
165. அலையோசை (1985)
166. அமுதகானம் (1985)
167. அடுத்தாத்து ஆல்பர்ட் (1985)
168. சிந்து பைரவி (1985)
169. சின்ன வீடு (1985)
170. செல்வி (1985)
171. நல்ல தம்பி (1985)
172. நான் சிவப்பு மனிதன் (1985)
173. நானே ராஜா நானே மந்திரி (1985)
174. நீதியின் மறுபக்கம் (1985)
175. ஜப்பானில் கல்யாண ராமன் (1985)
176. உனக்காகவே வாழ்கிறேன் (1986)
177. விக்ரம் (1986)
178. விடிஞ்சா கல்யாணம் (1986)
179. தர்ம பத்தினி (1986)
180. தழுவாத கைகள் (1986)
181. தாய்க்கு ஒரு தாலாட்டு (1986)
182. மனிதனின் மறுபக்கம் (1986)
183. மந்திரப் புன்னகை (1986)
184. மரகத வீணை (1986)
185. மாவீரன் (1986)
186. மிஸ்டர் பாரத் (1986)
187. முதல் வசந்தம் (1986)
188. முரட்டுக் கரங்கள் (1986)
189. மெல்லத் திறந்தது கதவு (1986)
190. மௌன ராகம் (1986)
191. அறுவடை நாள் (1986)
192. அம்மன் கோவில் கிழக்காலே (1986)
193. ஆப்பிரிக்காவில் அப்பு (1986)
194. இசை பாடும் தென்றல் (1986)
195. இரவு பூக்கள் (1986)
196. கண்ணத்தொறக்கணும் சாமி (1986)
197. கண்ணுக்கு மை ௭ழுது (1986)
198. கரிமேடு கருவாயன் (1986)
199. கடலோரக் கவிதைகள் (1986)
200. கோடை மழை (1986)
201. நட்பு (1986)
202. நானும் ஒரு தொழிலாளி (1986)
203. நீதானா அந்தக் குயில் (1986)
204. பாரு பாரு பட்டணத்தை பாரு (1986)
205. பாலைவன ரோஜாக்கள் (1986)
206. புன்னகை மன்னன் (1986)
207. புதிர் (1986)
208. டிசம்பர் பூக்கள் (1986)
209. ௭னக்கு நானே நீதிபதி (1986)
210. சாதனை (1986)
211. ௭ங்க ஊரு பாட்டுக்காரன் (1987)
212. ஆனந்த் (1987)
213. ஆளப்பிறந்தவன் (1987)
214. இனிய உறவு பூத்தது (1987)
215. ரெட்டை வால் குருவி (1987)
216. உள்ளம் கவர்ந்த கள்வன் (1987)
217. நாயகன் (1987)
218. நினைக்க தெரிந்த மனமே (1987)
219. நினைவே ஒரு சங்கீதம் (1987)
220. கல்யாண கச்சேரி (1987)
221. கண்ணுக்கொரு வண்ணக்கிளி (1987)
222. கடமை கண்ணியம் கட்டுப்பாடு (1987)
223. காதல் பரிசு (1987)
224. கிருஷ்ணன் வந்தான் (1987)
225. கிராமத்து மின்னல் (1987)
226. வாழ்க வளர்க (1987)
227. வேலைக்காரன் (1987)
228. சின்ன தம்பி பெரிய தம்பி (1987)
229. பாடு நிலாவே (1987)
230. புயல் பாடும் பாட்டு (1987)
231. பூவிழி வாசலிலே (1987)
232. பேர் சொல்லும் பிள்ளை (1987)
233. மனதில் உறுதி வேண்டும் (1987)
234. மனைவி ரெடி (1987)
235. தீர்த்தகரையினிலே (1987)
236. தூரத்து பச்சை (1987)
237. சின்ன குயில் பாடுது (1987)
238. சிறை பறவை (1987)
239. ஜல்லிக்கட்டு (1987)
240. பார்த்தால் பசு (1988)
241. பாசப் பறவைகள் (1987)
242. பாடும் பறவைகள் (1988)
243. பாடாத தேனீக்கள் (1988)
244. பூந்தோட்ட காவல்காரன் (1988)
245. மணமகளே வா (1988)
246. குரு சிஷ்யன் (1988)
247. ஒருவர் வாழும் ஆலயம் (1988)
248. அக்னி நட்சத்திரம் (1988)
249. இரண்டில் ஒன்று (1988)
250. இல்லம் (1988)
251. இது ௭ங்கள் நீதி (1988)
252. உன்னால் முடியும் தம்பி (1988)
253. நான் சொன்னதே சட்டம் (1988)
254. ௭ன் பொம்முக்குட்டி அம்மாவுக்கு (1988)
255. ௭ன் ஜீவன் பாடுது (1988)
256. ௭ன் உயிர் கண்ணம்மா (1988)
257. ௭ன்னை விட்டு போகாதே (1988)
258. ௭ங்க ஊரு காவல்காரன் (1988)
259. அக்னி நட்சத்திரம் (1988)
260. சொல்லத் துடிக்குது மனசு (1988)
261. தர்மத்தின் தலைவன் (1988)
262. தாயம் ஒன்னு (1988)
263. தெற்கத்தி கள்ளன் (1988)
264. சத்யா (1988)
265. சக்கரைப் பந்தல் (1988)
266. செண்பகமே செண்பகமே (1988)
267. சூரசம்ஹாரம் (1988)
268. ராசாவே உன்ன நம்பி (1988)
269. வீடு (1988)
270. ராஜாதி ராஜா (1989)
271. ராஜா ராஜாதான் (1989)
272. சிவா (1989)
273. சின்னப்பதாஸ் (1989)
274. அபூர்வ சகோதரர்கள் (1989)
275. அன்புக் கட்டளை (1989)
276. அண்ணனுக்கு ஜெய் (1989)
277. இதயத்தைத் திருடாதே (1989)
278. வருஷம் 16 (1989)
279. வாத்தியார் வீட்டுப்பிள்ளை (1989)
280. வெற்றி விழா (1989)
281. தர்மம் வெல்லும் (1989)
282. தங்கமான ராசா (1989)
283. திருப்புமுனை (1989)
284. தென்றல் சுடும் (1989)
285. படிச்ச புள்ள (1989)
286. பாட்டுக்கொரு தலைவன் (1989)
287. பாசமழை (1989)
288. பாண்டிய நாட்டுத் தங்கம் (1989)
289. பிக்பாக்கெட் (1989)
290. புதுப்புது அர்த்தங்கள் (1989)
291. பொங்கி வரும் காவேரி (1989)
292. பொறுத்தது போதும் (1989)
293. பொன்மனச் செல்வன் (1989)
294. கரகாட்டக்காரன் (1989)
295. கை வீசம்மா கை வீசு (1989)
296. ௭ம்புருஷன்தான் ௭னக்குமட்டுந்தான் (1989)
297. ௭ங்க ஊரு மாப்பிள்ளை (1989)
298. ௭ன்ன பெத்த ராசா (1989)
299. மாப்பிள்ளை (1989)
300. ஒரே ஒரு கிராமத்திலே (1989)
301. நினைவுச் சின்னம் (1989)
302. தாலாட்டுப் பாட வா (1990)
303. பகலில் பௌர்ணமி (1990)
304. பணக்காரன் (1990)
305. பாட்டுக்கு நான் அடிமை (1990)
306. புலன் விசாரணை (1990)
307. புதுப்பாட்டு (1990)
308. பெரிய வீட்டு பண்ணக்காரன் (1990)
309. பெண்டாட்டி தேவை (1990)
310. அஞ்சலி (1990)
311. அதிசயப் பிறவி (1990)
312. அம்மன் கோவில் திருவிழா (1990)
313. உறுதிமொழி (1990)
314. உன்னை சொல்லி குற்றமில்லை (1990)
315. ஊருவிட்டு ஊருவந்து (1990)
316. கவிதை பாடும் அலைகள் (1990)
317. காவலுக்கு கெட்டிக்காரன் (1990)
318. கிழக்கு வாசல் (1990)
319. கேளடி கண்மணி (1990)
320. அரங்கேற்ற வேளை (1990)
321. இந்திரன் சந்திரன் (1990)
322. சத்ரியன் (1990)
323. சிறையில் பூத்த சின்ன மலர் (1990)
324. சிறையில் சில ராகங்கள் (1990)
325. நடிகன் (1990)
326. நீ சிரித்தால் தீபாவளி (1990)
327. மனசுக்கேத்த மாப்பிள்ளை (1990)
328. மல்லுவேட்டி மைனர் (1990)
329. மதுரை வீரன் ௭ங்கசாமி (1990)
330. மருத பாண்டி (1990)
331. மை டியர் மார்த்தாண்டன் (1990)
332. மௌனம் சம்மதம் (1990)
333. ௭ங்கிட்ட மோதாதே (1990)
334. ௭ன் உயிர் தோழன் (1990)
335. ௭திர் காற்று (1990)
336. வெள்ளையத் தேவன் (1990)
337. ராஜா கைய வச்சா (1990)
1991 – 2000
1. குணா (1991)
2. கும்பக்கரை தங்கையா (1991)
3. இதயம் (1991)
4. இரும்பு பூக்கள் (1991)
5. ஈரமான ரோஜாவே (1991)
6. ஊரெல்லாம் உன் பாட்டு (1991)
7. கேப்டன் பிரபாகரன் (1991)
8. மைக்கேல் மதன காமராஜன் (1991)
9. கோபுர வாசலிலே (1991)
10. பிரம்மா (1991)
11. பிள்ளை பாசம் (1991)
12. புதிய ராகம் (1991)
13. புதிய ஸ்வரங்கள் (1991)
14. புது நெல்லு புது நாத்து (1991)
15. மனித ஜாதி (1991)
16. தளபதி (1991)
17. தர்மதுரை (1991)
18. தந்துவிட்டேன் ௭ன்னை (1991)
19. தம்பிக்கு ஒரு பாட்டு (1991)
20. தாலாட்டு கேட்குதம்மா (1991)
21. தாயம்மா (1991)
22. ௭ன் அருகில் நீ இருந்தால் (1991)
23. ௭ன் ராசாவின் மனசிலே (1991)
24. சாமி போட்ட முடிச்சு (1991)
25. சார் ஐ லவ் யூ (1991)
26. உருவம் (1991)
27. வெற்றிப் படிகள் (1991)
28. வெற்றிக் கரங்கள் (1991)
29. தங்கதாமரைகள் (1991)
30. கற்பூர முல்லை (1991)
31. அக்னி பார்வை (1992)
32. ஆவாரம்பூ (1992)
33. இன்னிசை மழை (1992)
34. இது நம்ம பூமி (1992)
35. உன்னை வாழ்த்தி பாடுகிறேன் (1992)
36. ௭ன்றும் அன்புடன் (1992)
37. ஒன்னா இருக்க கத்துக்கணும் (1992)
38. தம்பி பெண்டாட்டி (1992)
39. தங்கக்கிளி (1992)
40. தங்க மனசுக்காரன் (1992)
41. தாலாட்டு (1992)
42. நாடோடித் தென்றல் (1992)
43. நாடோடிப் பாட்டுக்காரன் (1992)
44. நாங்கள் (1992)
45. கலிகாலம் (1992)
46. பங்காளி (1992)
47. பரதன் (1992)
48. பாண்டியன் (1992)
49. பாண்டித்துரை (1992)
50. மீரா (1992)
51. தெய்வ வாக்கு (1992)
52. சின்ன கவுண்டர் (1992)
53. சின்னத் தம்பி (1992)
54. சின்ன பசங்க நாங்க (1992)
55. சின்ன தாய் (1992)
56. சின்னவர் (1992)
57. சிங்காரவேலன் (1992)
58. தாய்மொழி (1992)
59. தேவர் மகன் (1992)
60. திருமதி பழனிச்சாமி (1992)
61. வண்ண வண்ண பூக்கள் (1992)
62. வா வா வசந்தமே (1992)
63. வில்லுப்பாட்டுக்காரன் (1992)
64. செம்பருத்தி (1992)
65. செந்தமிழ் பாட்டு (1992)
66. மன்னன் (1992)
67. மகுடம் (1992)
68. மாப்பிள்ளை வந்தாச்சு (1992)
69. ராசுக்குட்டி (1992)
70. வள்ளி (1993)
71. வால்டர் வெற்றிவேல் (1993)
72. உழைப்பாளி (1993)
73. உடன்பிறப்பு (1993)
74. உள்ளே வெளியே (1993)
75. உத்தம ராசா (1993)
76. மணிக்குயில் (1993)
77. மகராசன் (1993)
78. மறுபடியும் (1993)
79. மாமியார் வீடு (1993)
80. அரண்மனைக்கிளி (1993)
81. ஆத்மா (1993)
82. மகாநதி (1993)
83. பார்வதி என்னை பாரடி (1993)
84. பொன்விலங்கு (1993)
85. பொறந்த வீடு புகுந்த வீடு (1993)
86. ௭ஜமான் (1993)
87. ௭ங்க முதலாளி (1993)
88. ௭ங்க தம்பி (1993)
89. ஏழை ஜாதி (1993)
90. ஐ லவ் இந்தியா (1993)
91. சக்கரைத் தேவன் (1993)
92. சின்ன ஜமீன் (1993)
93. சின்ன தளபதி (1993)
94. தர்ம சீலன் (1993)
95. துருவ நட்சத்திரம் (1993)
96. சின்ன கண்ணம்மா (1993)
97. சின்ன மாப்பிள்ளை (1993)
98. கலைஞன் (1993)
99. கட்டளை (1993)
100. காத்திருக்க நேரமில்லை (1993)
101. கிளிப்பேச்சுக் கேட்கவா (1993)
102. கோயில் காளை (1993)
103. ராக்காயி கோவில் (1993)
104. நாளை ௭ங்கள் கல்யாணம் (1993)
105. கண்மணி (1994)
106. செந்தமிழ் செல்வன் (1994)
107. அமைதிப்படை (1994)
108. அதிரடிப்படை (1994)
109. அதர்மம் (1994)
110. ஆனஸ்ட் ராஜ் (1994)
111. மகாநதி (1994)
112. மகளிர் மட்டும் (1994)
113. பெரிய மருது (1994)
114. சக்திவேல் (1994)
115. சக்திவயவான் (1994)
116. தென்றல் வரும் தெரு (1994)
117. சேதுபதி ஐபிஎஸ் (1994)
118. சாது (1994)
119. சீமான் (1994)
120. செவ்வந்தி (1994)
121. தோழர் பாண்டியன் (1994)
122. வீரா (1994)
123. புதுப்பட்டி (1994)
124. பொண்ணுத்தாயி (1994)
125. ராசாமகன் (1994)
126. பிரியங்கா (1994)
127. ராஜகுமாரன் (1994)
128. வனஜா கிரிஜா (1994)
129. வீட்ல விசேங்க (1994)
130. வியட்நாம் காலணி (1994)
131. சின்ன வாத்தியார் (1995)
132. சதிலீலாவதி (1995)
133. சந்திரலேகா (1995)
134. அவதாரம் (1995)
135. ஆணழகன் (1995)
136. இளையராகம் (1995)
137. ராசய்யா (1995)
138. ராஜா ௭ங்க ராஜா (1995)
139. ராஜ முத்திரை (1995)
140. ராஜாவின் பார்வையிலே (1995)
141. பாட்டு வாத்தியார் (1995)
142. பாட்டு பாட வா (1995)
143. பெரிய குடும்பம் (1995)
144. மக்களாட்சி (1995)
145. மாயாபஜார் (1995)
146. முத்துக்காளை (1995)
147. மோகமுள் (1995)
148. ௭ல்லாமே ௭ன் ராசாதான் (1995)
149. ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி (1995)
150. கட்டுமரக்காரன் (1995)
151. கோலங்கள் (1995)
152. நந்தவனத் தேரு (1995)
153. தேடி வந்த ராசா (1995)
154. இரட்டை ரோஜா (1996)
155. கட்ட பஞ்சாயத்து (1996)
156. நாட்டுப்புறப் பாட்டு (1996)
157. பூமணி (1996)
158. பூவரசன் (1996)
159. கடவுள் (1997)
160. காதலுக்கு மரியாதை (1997)
161. சின்ன ராமசாமி பெரிய ராமசாமி (1997)
162. தம்பிதுரை (1997)
163. வாசுகி (1997)
164. தெம்மாங்கு பாட்டுக்காரன் (1997)
165. தென்பாண்டி சிங்கம் (1997)
166. தேவதை (1997)
167. நானும் ஒரு இந்தியன் (1997)
168. ராமன் அப்துல்லா (1997)
169. கண்களின் வார்த்தைகள் (1998)
170. கண்மணி ஒரு கவிதை (1998)
171. கண்ணாத்தாள் (1998)
172. கவலைப்படாதே சகோதரா (1998)
173. காதல் கவிதை (1998)
174. கிழக்கும் மேற்கும் (1998)
175. கும்பகோணம் கோபாலு (1998)
176. வீர தாலாட்டு (1998)
177. தர்மா (1998)
178. தலைமுறை (1998)
179. தேசிய கீதம் (1998)
180. பூந்தோட்டம் (1998)
181. செந்தூரம் (1998)
182. கும்மிப்பாட்டு (திரைப்படம்) (1999)
183. அண்ணன் (1999)
184. அந்தப்புரம் (1999)
185. சின்ன துரை (1999)
186. சேது (1999)
187. பொண்ணு வீட்டுக்காரன் (1999)
188. மனம் விரும்புதே உன்னை (1999)
189. முகம் (1999)
190. தொடரும் (1999)
191. நிலவே முகம் காட்டு (1999)
192. ராஜஸ்தான் (1999)
193. டைம் (1999)
194. ஹவுஸ்புல் (திரைப்படம்) (1999)
195. பாரதி (2000)
196. ஹே ராம் (2000)
197. திருநெல்வேலி (2000)
198. இளையவன் (2000)
199. கண்ணுக்குள் நிலவு (2000)
200. காக்கைச் சிறகினிலே (2000)
201. காதல் ரோஜாவே (2000)
202. கரிசக்காட்டு பூவே (2000)
203. கரிவேலம்பூக்கள் (2000)
2001 - 2010
1. கண்ணா உன்னைத் தேடுகிறேன் (2001)
2. காசி (2001)
3. காதல் சாதி (2001)
4. காற்றிற்கு ௭ன்ன வேலி (2001)
5. குட்டி (2001)
6. ஆண்டான் அடிமை (2001)
7. ௭ன் இனிய பொன்நிலாவே (2001)
8. பிரண்ட்ஸ் (2001)
9. ௭ன்மன வானில் (2002)
10. அழகி (2002)
11. தேவன் (2002)
12. ரமணா (2002)
13. சொல்ல மறந்த கதை (2002)
14. கொஞ்சி பேசலாம் (2003)
15. தனுஷ் (2003)
16. பிதாமகன் (2003)
17. மனசெல்லாம் (2003)
18. ஜுலி கணபதி (2003)
19. விருமாண்டி (2004)
20. விஷ்வ துளசி (2004)
21. காமராஜ் (2004)
22. அது ஒரு கனாக்காலம் (2005)
23. ஒரு நாள் ஒரு கனவு (2005)
24. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி (2005)
25. பொன் மேகலை (2005)
26. மும்பை ௭க்ஸ்பிரஸ் (2005)
27. கரகாட்டக்காரி (2005)
28. கஸ்தூரி மான் (2005)
29. மது (2006)
30. இனிமே நாங்கதான் (2007)
31. மாயக்கண்ணாடி (2007)
32. குற்றப்பத்திரிகை (2007)
33. தனம் (2008)
34. உளியின் ஓசை (2008)
35. கண்களும் கவிபாடுதே (2008)
36. நான் கடவுள் (2009)
37. அழகர் மலை (2009)
38. வால்மீகி (2009)
39. காதல் கதை (2009)
40. ஜகன் மோகினி (2009)
41. கண்ணுக்குள்ளே (2009)
42. மத்திய சென்னை (2009)
43. அஜந்தா (2009)
44. நந்தலாலா (2010)
2011 - நடப்பு
1. அய்யன் (2011)
2. பொன்னர் சங்கர் (2011)
3. அழகர் சாமியின் குதிரை (2011)
4. செங்காத்து பூமியிலே (2012)
5. தோணி (2012)
6. முதல்வர் மகாத்மா (2012)
7. மயிலு (2012)
8. நீதானே ௭ன் பொன் வசந்தம் (2012)
9. மறந்தேன் மன்னித்தேன் (2013)
10. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (2013)
11. சித்திரையில் நிலாச்சோறு (2013)
12. தலைமுறைகள் (2013)
13. ஒரு ஊருல (2014)
14. உன் சமையல் அறையில் (2014)
15. மேகா (2014)
16. டூரிங் டாக்கீஸ் (2015)
17. தாரை தப்பட்டை (2016)
18. ஓய் (2016)
19. கிடா பூசாரி மகுடி (2016)
20. அம்மா கணக்கு (2016)
21. ஒரு மெல்லிய கோடு (2016)
22. அப்பா (2016)
வகைப் பிரிக்கப்பட வேண்டியவை
1. அபூர்வ சக்தி
2. அன்புச் சின்னம்
3. அன்னையே ஆணை
4. அதிர்ஷ்டம் அழைக்கிறது
5. ஆதாரம்
6. இளமை இதோ இதோ
7. இவண்
8. ஏழுமலையான் மகிமை
9. பரணி (திரைப்படம்)
10. பிள்ளை (திரைப்படம்)
11. சின்ன தேவன்
12. காதல் தேவதை
13. எம்ஜிஆர் நகர் போலீஸ் ஸ்டேசன்
14. மருத நாயகம் (படம் முழுதும் எடுக்கப்படவில்லை)
15. முரட்டு கரணங்கள்
16. முதலமைச்சர் ஜெயந்தி
17. நான் சந்தித்த சட்டம்

திங்கள், 17 ஜூலை, 2017

புரட்சித்தலைவரை அலங்கரித்த பட்டங்களும்... விருதுகளும்....



புரட்சித்தலைவரை அலங்கரித்த பட்டங்களும்... விருதுகளும்....

01. பாரத் விருது              – இந்திய அரசு
02. அண்ணா விருது      – தமிழ்நாடு அரசு
03. பாரத ரத்னா விருது – இந்திய அரசு
04. பத்மஸ்ரீ விருது          – இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
05. டாக்டர் பட்டம்             – அமெரிக்கா      அரிசோனா பல்கலைக் கழகம்,
06. டாக்டர் பட்டம்.             - சென்னைப் பல்கலைக் கழகம்,
07. டாக்டர் பட்டம்.              - தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்,
08. டாக்டர் பட்டம்.              - மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு),
09.டாக்டர் பட்டம்.               - சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)
10.வெள்ளியானை விருது – இந்திய சாரணர் இயக்கம்.
11. இதயக்கனி  – அறிஞர் அண்ணா
12. புரட்சி நடிகர் – கலைஞர் மு.கருணாநிதி
13. நடிக மன்னன் – சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.)
14. மக்கள் நடிகர் – நாகர்கோவில் ரசிகர்கள்
15. பல்கலை வேந்தர் – சிங்கப்பூர் ரசிகர்கள்
16. மக்கள் கலைஞர் – காரைக்குடி ரசிகர்கள்
17. கலை அரசர் – விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்
18. கலைச்சுடர் – மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்
19. கலை மன்னர் – நீதிபதி ராஜமன்னார்
20. கலை மன்னன் – சென்னை ரசிகர்கள்
21. கலை வேந்தர் – மலேசிய ரசிகர்கள்
22. திரை நாயகன் – சேலம் ரசிகர்கள்
23. கொடுத்து சிவந்த கரம் – குடந்தை ரசிகர்கள்
24. கலியுகக் கடவுள் – பெங்களூர் விழா
25. நிருத்திய சக்கரவர்த்தி – இலங்கை ரசிகர்கள்
26. பொன்மனச்செம்மல்–கிருபானந்த வாரியார்
27. மக்கள் திலகம் – தமிழ்வாணன்
28. வாத்தியார் – திருநெல்வேலி ரசிகர்கள்
29. புரட்சித்தலைவர் – கே.ஏ.கிருஷ்ணசாமி
30. இதய தெய்வம் – தமிழ்நாடு பொதுமக்கள்
31. மக்கள் மதிவாணர்-இரா.நெடுஞ்செழியன்
32. ஆளவந்தார் – ம.பொ.சிவஞானம்

பாரதிராஜாவின் படங்கள் - சில ஒப்பீடுகள்.




பாரதிராஜாவின் படங்கள் - சில ஒப்பீடுகள்.

16 வயதினிலே - சிகப்பு ரோஜாக்கள்

கடந்த 1977ம் ஆண்டு வெளியாகி, தமிழ் திரைத்துறையின் போக்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய படம்தான் 16 வயதினிலே. பாரதிராஜா என்ற மதுரை மாவட்ட(அன்றைய) இயக்குநர் அனைவரையும் ஆச்சர்யத்துடன் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தார். இயல்பான கிராமியச் சூழலை, தமிழில் முதன்முதலாக எடுத்துக்காட்டியப் படம் என்ற வகையில், இன்றளவும் அது தமிழின் சிறந்த படங்களில் ஒன்று.

அப்படத்தில், அன்றைய காலகட்டத்தில் வெகு பிரபலமாக இருந்த கமல்-ஸ்ரீதேவி இணையை பயன்படுத்தினார். அப்படத்தின் முடிவானது, கமலஹாசன், வில்லன் ரஜினியைக் கொலை செய்த வழக்கில் சிறை சென்றுவிட, அவர் வருவார் என்ற நம்பிக்கையில், நெடுங்காலம் காத்துக் கொண்டிருப்பார் சட்ட நுணுக்கங்கள் ஏதும் அறியாத அப்பாவி கிராத்து மயிலு (ஸ்ரீதேவி). இறுதியில் கமல் வந்தாரா, இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது.

ஆக, இந்தப் படத்தின் முடிவானது, நாயக - நாயகி இருவரும் இணை சேர்வதாக அமைந்திருக்காது.

சிகப்பு ரோஜாக்கள்

1978ம் ஆண்டின் பிற்பாதியில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ஒரு சிட்டி சப்ஜெக்ட் த்ரில்லர் படம் சிகப்பு ரோஜாக்கள். இதிலும், தான் பயன்படுத்திய முதல் ஜோடியான கமல்-ஸ்ரீதேவி இணையையே பயன்படுத்தியிருப்பார் பாரதிராஜா. ஆனால், 16 வயதினிலே போல் அல்லாமல் இதுவொரு நகரத்து கதை. அப்படத்திலே, இருவரும் இணைவதற்கு முன்னதாகவே பிரிந்து விடுவார்கள். ஆனால், இங்கே திருமணமெல்லாம் செய்து கொள்வார்கள். ஆனால், இறுதியில் பிரிந்து விடுவார்கள். சைக்கோ கமலின் தவறுகள் அனைத்தும் வெளியே தெரிந்து, அவர் சிறைக்கு சென்றுவிடுவார். அவர் மனதில் ஸ்ரீதேவியின் பெயரான சாரதா என்பது மட்டுமே எஞ்சியிருக்கும். அப்பெயரை சிறை சுவரில் எழுதிக் கொண்டேயிருப்பார். அவர் எப்போது மீண்டு வருவார் என்று ஸ்ரீதேவி காதலுடன் காத்துக்கொண்டே இருப்பார். இருவரும் மீண்டும் இணைந்தார்களா? என்பது தெரியாது.

ஆக, மயிலு போலவே, இந்த சாரதாவும் தன் நாயகனுக்காக இறுதியில் காத்துக்கொண்டே இருக்கிறாள். தனது 16 வயதினிலே மற்றும் சிகப்பு ரோஜாக்கள் ஆகிய 2 படங்களில் தான் பயன்படுத்திய ஒரே ஜோடியை, முடிவில் பிரிக்கும் வகையிலேயே திரைக்கதையை அமைத்திருக்கிறார் பாரதிராஜா...! 16 வயதினிலே அவரின் முதல் படம், சிகப்பு ரோஜாக்கள் அவரின் மூன்றாவது படம். இரண்டுமே மிகச் சிறந்த வெற்றிப் படங்கள்.

மண்வாசனை - புதுமைப்பெண்

பாண்டியன்-ரேவதி ஆகிய இருவரும் அறிமுகமான படம் மண்வாசனை. இதுவொரு கிராமியப் படம். இப்படத்தில், தொடக்கத்திலிருந்தே இருவரும் இணைவதில் பல பிரச்சினைகள். இடையில், பாண்டியன் வேறொரு வடக்கத்தியப் பெண்ணை திருமணம் செய்து கொள்வார். ஊர்க்காரர்கள், ரேவதியை இரண்டாம் தாரமாக, பாண்டியனுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சிக்கையில், ரேவதி அதற்கு மறுத்துவிடுவார். கடைசி சண்டைக் காட்சியில், அந்த வடக்கத்தியப் பெண் உயிர் தியாகம் செய்ய, ரேவதியோ, வில்லன் வினுசக்கரவர்த்தியை கொலைசெய்து விடுவார். அனைவரும் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், படம் நிறைவுறும். ரேவதி ஜெயிலுக்கு சென்றாரா? இருவரும் சுபமாக இணைந்தார்களா? இத்தகைய கேள்விகளோடு முடிவடையும் படம் இது.


புதுமைப் பெண்


இப்படம், ஒரு நகரத்துப் படம். அதே பாண்டியன்-ரேவதி ஜோடி. சில எதிர்ப்புகளுக்குப் பிறகு(பாண்டியன் தரப்பிலிருந்து), இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள். திருமண வாழ்வில், பாண்டியனின் மேலதிகாரி மூலமாக பிரச்சினை வர, பாண்டியன் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு சிறை சென்றுவிடுவார். அவரை மீட்பதற்காக கடுமையாக போராடும் ரேவதி, இறுதியில் தன் முயற்சியில் வெற்றியடைகிறார். ஆனால், பாண்டியனோ, ரேவதி குறித்தான தன் தாயின் அபாண்ட பழியால் மனம் மாறி, ரேவதியை சந்தேகப்படுகிறார். இதனால், மனம் வெறுத்து வெகுண்டெழும் ரேவதி, பாண்டியனைப் பிரிந்து வெளியேறும் நிலையில், படம் நிறைவடையும். ஆக, இப்படத்திலும், அவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா, இல்லையா? என்பது தெரியாமலே போய்விடும்.

ஆக, மேற்கண்ட 6 படங்களையும் அலசினால், சில விஷயங்கள் நமக்கு கிடைக்கின்றன. அவை;

கமல்-ஸ்ரீதேவி, சுதாகர்-ராதிகா மற்றும் பாண்டியன்-ரேவதி ஆகிய இணைகளை வைத்து எடுத்த முதல் படங்கள் கிராமத்துப் படங்களாகவும், அதே இணைகளை வைத்து எடுத்த இரண்டாவது படங்கள் நகரத்துப் படங்களாகவும் உள்ளன. இணைகள் தொடர்பான படங்களின் முடிவுகளும் ஏறக்குறைய ஒன்றாகவே உள்ளன.

 கிழக்கே போகும் ரயில் - நிறம் மாறாத பூக்கள்

சுதாகர் - ராதிகா ஆகிய இருவரும் அறிமுகமான படம்தான் கிழக்கே போகும் ரயில். இது பாரதிராஜாவின் இரண்டாவது படம். 16 வயதினிலே போலவே, இதுவும் ஒரு கிராமியப் படம்தான். இப்படத்தில், சுதாகரும், ராதிகாவும் ஜாதியப் பிரச்சினையால் சேர முடியாமல், இறுதியில் ஊரை எதிர்த்து ஓடிப்போய் சேர்ந்து கொள்வார்கள்.

அதே ஜோடியை தனது நான்காவது படமான நிறம் மாறாத பூக்கள் படத்திலும் பயன்படுத்தியிருப்பார் பாரதிராஜா. ஆனால், இதுவொரு சிட்டி சப்ஜெக்ட் படம். இதிலும், காதலர்களான சுதாகரும், ராதிகாவும் வர்க்கப் பிரச்சினையால் (பொருளாதார பேதம்) சேர முடியாமல், இறுதியில் இன்னொரு நாயகன் விஜயனின் உதவியால் ஓடிப்போய் சேர்ந்து கொள்வார்கள்.

ஆக, ஒரே ஜோடிகள் நடித்த இரண்டு படங்களிலும், முடிவு ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே அமைக்கப்பட்டிருக்கும்.

அலைகள் ஓய்வதில்லை - வாலிபமே வா வா

கார்த்திக் - ராதா ஜோடி முதன்முதலாக அலைகள் ஓய்வதில்லை படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். பின்னர், இதே ஜோடி, மீண்டும், வாலிபமே வா வா படத்தில் பாரதிராஜாவால் பயன்படுத்தப்படுகிறார்கள். ஆனால், நான் வாலிபமே வா வா படத்தைப் பார்த்ததில்லை என்பதால், என்னால் இரண்டு படங்களுக்குமிடையிலான ஒப்பீட்டை செய்ய முடியவில்லை.

கார்த்திக்-ராதா ஜோடி

தமிழில் பாரதிராஜாவின் 5வது சிறந்த மற்றும் வித்தியாசமான முயற்சிகளைக் கொண்ட படம் நிழல்கள். ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இந்த விரக்தியில், அடுத்ததாக எடுக்கப்பட்ட கமர்ஷியல் படம்தான் அலைகள் ஓய்வதில்லை. இதன் ஜோடி கார்த்திக்-ராதா. பாரதிராஜா எடுத்த காதல் ஓவியம் ஒரு வித்தியாசமான படம். ஆனால் தோல்வியை சந்தித்தது. அந்த விரக்தியில் எடுக்கப்பட்ட அடுத்த கமர்ஷியல் படம்தான் வாலிபமே வா வா. இதன் ஜோடியும் கார்த்திக்-ராதா.

ஆக, வித்தியாசமான படங்களின் தோல்விக்குப் பிறகு, கமர்ஷியல் படம் எடுக்கும் வெறிகொண்ட பாரதிராஜாவுக்கு இரண்டுமுறை கிடைத்தவர்கள் கார்த்திக்-ராதா ஜோடிதான். விரக்தியில் எடுத்த ஒரு கமர்ஷியல் படமான அலைகள் ஓய்வதில்லை நன்றாக ஓட, இன்னொரு விரக்தி கமர்ஷியல் படமான வாலிபமே வா வா படம் ‍தோல்வி.

நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை மற்றும் காதல் ஓவியம் ஆகிய 3 படங்களுக்குமே திரைக்கதை வசனம் மணிவண்ணன் என்பது கவனிக்கத்தக்கது.
‬: குறிப்பு

பாரதிராஜாவின் படங்களைப் பற்றிய ஒரு மேலோட்டமான ஒப்பீடுதான் இப்படைப்பே தவிர, அவரின் படங்களைப் பற்றிய சமூக மற்றும் கலை விமர்சனங்கள் தொடர்பானதல்ல. இன்னும் யோசித்தால், நியை ஒப்பீடுகளை செய்யலாம்தான். ஆனால், போதும் என்று நினைக்கிறேன்.

வியாழன், 13 ஜூலை, 2017

நம் தமிழ் நடிகர், நடிகைகளின் செல்லக் குழந்தைகளைப் பார்த்துள்ளீர்களா?

நம் தமிழ் நடிகர், நடிகைகளின் செல்லக் குழந்தைகளைப் பார்த்துள்ளீர்களா?

நடிகர், நடிகைகளாகிவிட்டால், சராசரி மனிதர்களைப் போல் பொது இடங்களுக்குச் செல்ல முடியாது. ஒருவேளை அப்படி சென்றால், காணாததைக் கண்டது போல் அவர்களைச் சூழ்ந்து பெரிய கூட்டம் திரண்டுவிடும். அந்த அளவில் நடிகர், நடிகைகளுக்கு நம் நாட்டில் பெரிய மரியாதையை மக்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள் சராசரி மனிதர்கள் மேற்கொள்ளும் சிறு செயல்களை கூட முடியாது.
அப்படி இருக்கையில் அவர்களுக்கு திருமணமாகி குழந்தை பிறந்து விட்டால், அவர்களது குடும்பம் மற்றும் குழந்தையைக் காண வேண்டும் என்று நினைக்கமாட்டோமா என்ன? இங்கு பல படங்களில் நடித்து, நம்மை அவர்களது ரசிகர்களாக்கிய தமிழ், நடிகர் நடிகைகள் தங்கள் துணை மற்றும் குழந்தைகளுடன் எடுத்த போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போம் வாருங்கள்.


மகளுடன் அஜித்-ஷாலினி
இது நடிகர் அஜித் மற்றும் ஷாலினி, மகள் அனோஷ்காவுடன் சேர்ந்து எடுத்த போட்டோ. ஆனால் இன்னும் குட்டி தல-யுடன் எடுத்த போட்டோ கிடைக்கவில்லை.


மகனுடன் மாதவன்
இது மாதவன் தன் மனைவி சரிதா மற்றும் மகன் வேதந்த் உடன் சேர்ந்து எடுத்த போட்டோ.


மகள்-மகளுடன் சூர்யா-ஜோதிகா
இது நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா, தங்களது மகள் தியா மற்றும் மகன் தேவ் உடன் கொடுத்த போஸ்.

குடும்பத்துடன் அர்ஜூன்
இது நடிகர் அர்ஜூன் தன் மனைவி நிவேதிதா, மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் இளைய மகள் அஞ்சனாவுடன் எடுத்த குடும்ப போட்டோ. இதில் ஐஸ்வர்யா 'பட்டத்து யானை' படத்தின் மூலம் திரையுலகில் காலடி வைத்துள்ளார்.

மகள்-மகனுடன் சரத்குமார்-ராதிகா
இது சரத்குமார் மனைவி ராதிகா, மகள் ரேயன், மகன் ராகுலுடன் சேர்ந்து சமீபத்தில் எடுத்த போட்டோ.

மகளுடன் மீனா
இது நடிகை மீனா கணவர் வித்யசாகர் மற்றும் செல்ல மகள் நைனிகாவுடன் சேர்ந்து எடுத்த போட்டோ.

குடும்பத்தினருடன் பிரபுதேவா
படத்தில் இருப்பது தான் நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவாவின் மகன்கள் மற்றும் முன்னாள் மனைவி.

பார்த்திபனின் மகன் மற்றும் மகள்கள்
இது நடிகர் பார்த்திபன் முன்னாள் மனைவி சீதா மற்றும் குழந்தைகள் கீர்த்தனா, அபிநயா மற்றும் மகன் ராக்கியுடன் பல வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோ.

மகள்களுடன் கமல்-கௌதமி
இது ஸ்ருதிஹாசன், சுப்புலட்சுமி பாட்டியா (கௌதமி மகள்), கௌதமி, கமல்ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் போன்றோர் ஒன்றாக சேர்ந்து எடுத்த போட்டோ.

கணவர் மற்றும் மகளுடன் குட்டி ராதிகா
இது நடிகை குட்டி ராதிகா, கணவர் குமாராசாமி மற்றும் மகள் ஷாமிகாவுடன் எடுத்த குடும்ப போட்டோ.

குடும்பத்துடன் குஷ்பு
இது நடிகை குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர்.சி, மகள் அவந்திகா மற்றும் அனந்திகாவுடன் எடுத்த போட்டோ.

மகள்களுடன் மதுபாலா
இது ரோஜா படத்தின் நாயகி மதுபாலா, தன் மகள்கள் அமியா மற்றும் கியாவுடன் எடுத்த போட்டோ.

குடும்பத்தினருடன் ரம்பா
இது நடிகை ரம்பா தன் கணவர் இந்திரன் பத்மநாதன், மகள் மற்றும் மகனுடன் எடுத்த குடும்ப போட்டோ.

மகனுடன் ரம்யா கிருஷ்ணன்
படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் இருப்பது மகன் ரித்விக்.

அண்ணாவை வாசித்த, எம்.ஜி.ஆரை நேசித்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் !



அண்ணாவை வாசித்த, எம்.ஜி.ஆரை நேசித்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் !

உ ணர்ச்சிகரமான நடிப்பாலும், கணீர் குரலாலும் தமிழ்த் திரை உலகில் புகழ்பெற்று விளங்கிய எஸ்.எஸ். ராஜேந்திரனின் நினைவு தினம் இன்று.
60 களில் எம். ஜி. ஆர், சிவாஜி என்ற மாபெரும் ஆளுமைகள் கொடிகட்டிப்பறந்தபோது, அவர்களிடமிருந்து தனித்து, தன் திறமையை வெளிப்படுத்தி, தன் நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த சாதனையாளர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.
மதுரையை அடுத்த சேடப்பட்டியில் 1928-ம் வருடம் பிறந்த ராஜேந்திரனுக்கு, சிறுவயதிலேயே நாடகங்களின் மீது காதல். கல்வித்துறையில் பணியாற்றி வந்த அவரது தந்தை சூரியநாராயணனுக்கு, மகனை அரசுப் பணியில் சேர்க்க வேண்டும் என்பது ஆசை. வெற்றி என்னவோ ராஜேந்திரனுக்குதான் கிடைத்தது. தனது 6 வயதில் நாடகங்களில் நடிக்கத் துவங்கினார்.
தென்னிந்தியாவின் சிறந்த நாடக கலைக்கூடமாக திகழ்ந்த பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து பயிற்சி பெற்றார். பின் அவரது தனிப்பட்ட குரல்வளத்தால் வெகுசீக்கிரத்தில் 'பால அபிமன்யு' என்ற நாடகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடம் தரப்பட்டது. தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, தன் திறமையை வளர்த்துக் கொண்டார். சில வருடங்களில் அங்கிருந்து விலகி, நாடக உலகில் அப்போது புதுமைகளை புகுத்திவந்த பிரபல டி.கே.எஸ் சகோதரர்களின் நாடக மன்றத்தில் இணைந்தார். பின்னர் நாடக உலகிலிருந்து திரையுலகிற்கு நுழைந்தார்.
சிவாஜிகணேசனின் முதல்படமான 'பராசக்தி'தான் இவருக்கும் முதல் படம். கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய இந்த படத்தில் ராஜேந்திரனுக்கு, நாயகன் சிவாஜியின் அண்ணன் வேடம் தரப்பட்டது. தெள்ளிய தமிழில் கணீர் குரலோடு ஞானசேகரன் என்ற பாத்திரத்தில் வெளிப்பட்ட இவரின் நடிப்பு, சிவாஜிக்கு அடுத்தபடியாக யார் இந்த நடிகன் என்று ரசிகர்களால் பேசப்பட்டது. அடுத்தடுத்து பல படங்களில் வாய்ப்பு கிடைக்கப்பெற்று முன்னணி நடிகராக வலம் வரத் தொடங்கினார். எஸ்.எஸ். ஆர்.


'முதலாளி', 'தலைகொடுத்தான் தம்பி', 'எதையும் தாங்கும் இதயம்', 'குமுதம்', 'ரத்தக்கண்ணீர்', 'கை கொடுத்த தெய்வம்', 'பச்சை விளக்கு', 'குலதெய்வம்', 'தை பிறந்தால் வழிபிறக்கும்', 'தெய்வப்பிறவி', ராஜாராணி', 'காஞ்சித்தலைவன்', 'ராஜா தேசிங்கு', 'ரங்கூன் ராதா' என பல படங்கள் அவருக்கு புகழைத் தந்தன. கருணாநிதி கதை வசனத்தில் உருவான 'பூம்புகார்' அவரது சிறந்த திரைப்பட வரிசையில் ஒன்று. 'சிவகங்கை சீமை' திரைப்படத்தில் இவரது கணீர் குரல் வசனங்கள் அப்போது பிரபலம்.
பொதுவாக திரையுலகில் பிரபலமடைந்த பின் தனித்துவமான கதாநாயகனாக நடிப்பதையே பலரும் விரும்புவர். ஆனால் பிரபலமான கதாநாயகனான பின்பும் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது கதாநாயகனாக தன் சக நடிகர்களான சிவாஜி, எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தார். அந்த படங்களில் தமிழ் உச்சரிப்பாலும், கணீர் குரலாலும் தனித்து தெரிந்தார் எஸ். எஸ். ஆர். வீரம், சோகம், அழுகை, நகைச்சுவை என எந்த பாத்திரமானாலும் தன் தனித்த நடிப்பால் மற்றவர்களிலிருந்து வேறுபட்டு வரவேற்பை பெற்றவர் ராஜேந்திரன்.
அவரைப்போன்று தமிழை தெளிவாக உச்சரித்தவர்கள் அன்றைய திரையுலகில் சொற்பமே. இயல்பில் திராவிட கொள்கையில் ஈர்ப்பு கொண்டவரான அவர், ஈரோட்டில் 'சந்திரோதயம்' நாடகம் நடத்த வந்த அண்ணாவுடன் பேசும் வாய்ப்பு கிடைக்க, அது இன்னமும் தீவிரமானது. பின்னாளில் திமுகவில் இணைந்தார்.
அண்ணாவின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த எஸ்.எஸ். ராஜேந்திரன், அவரையே தன் அரசியல் குருவாக ஏற்று இறுதிவரை அவரை கொண்டாடி மகிழ்ந்தவர். திமுக முதன்முறை போட்டியிட்ட 1957 தேர்தலில், தேனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வெற்றி கிட்டவில்லை. வெறுமனே உறுப்பினராக இல்லாமல், கட்சி மேடைகளில் அண்ணா புகழ்பாடி கட்சியை வளர்த்த அவர், திமுவிற்காக நாடகங்கள் நடத்தி நிதி திரட்டிக்கொடுத்திருக்கிறார்.
தன் இல்லத்தில் எந்த நிகழ்வானாலும் அண்ணா இன்றி நடத்தமாட்டார். தான் கட்டிய இல்லத்திற்கு அண்ணாவின் பெயரையே சூட்டி மகிழ்ந்தார்.
உச்சகட்டமாக தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு ஆதரவாக பகுத்தறிவு கொள்கையில் கொண்ட தீவிர பற்றின் காரணமாக புராண, இதிகாச படங்களில் இனி நடிப்பதில்லையென ஒருநாள் அறிவித்தார். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்திய அறிவிப்பு. காரணம், அப்போது புகழின் உச்சத்தில் அவர் இருந்தார். இதனாலேயே தமிழ்த்திரையுலகின் லட்சிய நடிகர் எனப்பெயர் பெற்றார்.


திரையுலகில் 50 களில் துவங்கி 60 களின் இறுதிவரை இருபெரும் ஆளுமைகளின் மத்தியில் தன்னிகரில்லாத நடிகனாக திகழ்ந்த ராஜேந்திரன், இந்தியாவில் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த முதல் நடிகர் என்ற புகழுக்குரியவர். 1962- ம் ஆண்டு தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். திரையுலகில் தன்னோடு இணைந்து பல படங்களில் நடித்த பிரபல நடிகை விஜயகுமாரியுடன் காதல் வயப்பட்டு, அவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்த திருமணம் நிலைக்கவில்லை. சில வருடங்களில் குழந்தை பிறந்த கையோடு, இருவரும் மனமொத்து பிரிந்தனர்.
திரையுலகில் பிரபலமாகியிருந்தபோதே தனது பெயரில் நாடக மன்றம் ஒன்றை துவக்கி, அதில் திறமையான நடிகர்கள் பலருக்கும் வாய்ப்பளித்தவர் எஸ்.எஸ்.ஆர். அவரது நாடக மன்றம் பல பிரபலமான கதைகளை நாடகமாக அரங்கேற்றியது. அண்ணாவின் 'ஓர் இரவு', 'சந்திரமோகன்', மு.கருணாநிதி எழுதிய 'அம்மையப்பன்' ஆகிய நாடகங்களை நடத்தினார். திரையுலகில் அவரால் பலர் ஏற்றம் பெற்றனர். அவர்களில் சமீபத்தில் மறைந்த மனோரமா மற்றும் நடிகர் முத்துராமன் குறிப்பிடத்தக்கவர்கள்.
தமிழகத்தில் அறிமுகமாகி, பின்னாளில் கேரளாவில் பிரமலமடைந்த ஷீலா இவரது அறிமுகமே. அண்ணாவின் மறைவிற்கு பின் தி.மு.க.வில் அவருக்கு எதிராக எழுந்த சிக்கல்களால், ஒரு கட்டத்தில் அதிலிருந்து விலகி, எம். ஜி.ஆர் துவங்கிய அ.தி.மு.க.வில் இணைந்தார். 1980 -ம் ஆண்டு தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் வென்றார். அந்த தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.


எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் அவருக்கான அரசியல் களம் தெளிவற்ற நிலையில் போனது. தி.மு.க., அ.தி.மு.க என இரு கழகங்களிலும் தனக்கான இடத்தை தக்க வைக்க முடியாமல், வேறு வழியின்றி அரசியலிலிருந்து ஒதுங்கினார் எஸ். எஸ். ஆர். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தலைவராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார்.
முதன்முறை சட்டமன்ற உறுப்பினரான எஸ்.எஸ்.ஆரை சந்தித்து வாழ்த்து சொன்ன சிவாஜி, “சம்பிரதாயமாத்தான் உங்களை வாழ்த்தறேன். பதவி, அதிகாரம்னு சினிமாவிலிருந்து ஒதுங்கிடாதீங்க. அதெல்லாம் வயசான பின்னாடி பார்த்துக்கலாம். திரும்பவும் நடிக்க வந்திடணும்” என்றார் வாஞ்சையாக. தொழில்முறை போட்டியாளரிடமும் அவர் பேணிய ஆரோக்கியமான நட்புக்கு இது சான்று.
முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளியான 'முதலாளி' எஸ்.எஸ்.ஆருக்கு திருப்புமுனை கொடுத்த திரைப்படம். மேகலா பிக்சர்ஸ் தயாரித்த 'மறக்க முடியுமா' திரைப்படத்தில் தன் சொந்த சகோதரியையே யார் எனத் தெரியாமல் பெண்டாள முயற்சிக்க, அப்போது அவள் தன் கழுத்தை அறுத்துக்கொள்வாள். அப்போது எஸ்.எஸ்.ஆர் வெளிப்படுத்தும் உணர்ச்சிவயப்பட்ட நடிப்பை வேறு எந்த நடிகரிடத்தும் எதிர்பார்க்க முடியாதது. வெளிப்படங்களில் வாய்ப்பு குறைந்தபோது, தன் சொந்தப்பெயரில் படம் தயாரித்து நடித்தார் எஸ்.எஸ்.ஆர்.

திரையுலகில் அடுத்த தலைமுறை நடிகர்களாலும் நேசிக்கப்பட்ட எஸ்.எஸ்.ஆர், அவர்கள் விரும்பி அழைத்தபோது அவர்களின் படங்களில் நடித்தார்.
தம் இறுதிநாளில் ஞாபக மறதி நோயால் சிரமப்பட்ட அவர், எம். ஜி. ஆர் ரசிகர்கள் ஏற்பாடு செய்த ஒரு மேடையில் கருணாநிதியை புகழ்ந்து பேசி சங்கடப்பட்டுப்போனார். காரணம் எல்லா காலங்களிலும் தனக்கு எதிரிகளாக யாரையும் வரித்துக்கொண்டு அரசியல் செய்யாமல், தனித்துவமாக விளங்கிய அவரது குணம். திரையுலகில் பந்தா இல்லாமல், சக நடிகர்களுடன் போட்டி மனப்பான்மையின்றி இணைந்து பணியாற்றியது அவரது சிறந்த குணத்திற்கு சான்று. ஒரு வகையில் அரசியலில் அவர் முழு வெற்றி பெறாததற்கும் அதுவே காரணம் எனலாம்.
திரையுலகில் எத்தனை புகழோடு விளங்கினாலும் அண்ணாவை நேசித்த தன் சக திரைக்கலைஞர்களைபோல எஸ்.எஸ்.ஆர் அரசியலில் பெரும் உயரத்தை எட்டி பிடிக்க முடியாமல் போனதற்கு காரணம் ஒன்று உண்டு. அது, அண்ணாவை அவர் நிஜமாய் நேசித்ததுதான்!
நன்றி விகடன்.

புதன், 5 ஜூலை, 2017

புரட்சிதலைவி அம்மாவின் குணம்


 புரட்சிதலைவி அம்மாவின் குணம்

அடிமைப்பெண் படப்பிடிப்பு ராஜஸ்தானில் கடும் பாலைவனத்தில் நடந்து கொண்டிருந்ததாம்
அப்போது கேரவனுக்குள் நுழைந்து ஏசி காத்து வாங்கும் வசதி எல்லாம் இல்லை யாராக இருந்தாலும் சரி படப்பிடிப்பு நடக்கும் இடத்தில்  ஓரமாக  ஒரு இடத்தில் மற்ற நடிகர்கள்
துணை நடிகை நடிகர்கள்  புரட்சிதலைவர் அவர்கள்  புரட்சித்தலைவி அவர்கள் சேர் போட்டு அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள்
ராஜஸ்தான் பாலைவனத்தில் கடுமையான வெயில் ஜெ இழுத்துச் செல்லும் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது
எம்ஜிஆர் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் அப்போது என்னமோ நடக்க போகிறது என்று உணர்கிறார்
கொஞ்சம் நெர்வஸாக உணர்கிறார் புரட்சிதலைவி மாண்புமிகு அம்மா அவர்களுக்கு  டூப்பு இல்லையாம் அவரும் அதை விரும்பவது இல்லையாம் அப்பவே அவர் இரும்பு பென்மனி பென்சிங்கமாக

எவ்வளவு ரிஸ்க் என்றாலும் தானே நடிப்பார். பல முறை  எம்ஜிஆர் ஜெ.,வைக் கண்டித்திருக்கிறார். ஆனாலும் ஜெ., கேட்பதில்லை.


எம்ஜிஆர் பயத்துக்கு காரணம் ஏதாவது பாதிப்பு என்றால் படத்தை தயாரிக்கும் முதலாளி பாதிக்கப்படுவார் என்பதே காரணம்.

ஜெ.,வை கயிறு கட்டி இழுத்துச் செல்லும் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பெரிய மணல் மேடு அது..அக்னிப் புயல் வீச ஆரம்பித்தது..

கேமரா உட்பட அனைத்தும் மணல் அள்ளி  வீச எம்ஜிஆர் ஓடுகிறார்.முதல் புயல் ஓய்ந்தது. ஜெ.,வைக் காணவில்லை.

இயக்குனர் எம்ஜிஆர் தான் என்றாலும் டைரக்டர் நீலகண்டன் தான் பல காட்சிகளை படமாக்குவார் என்பார்கள்.

உலகம் சுற்றும் வாலிபன் படத்திலும் நீலகண்டன் தான் இயக்கத்தின் மேற்பார்வை. ஜெ.,வை தேட ஆரம்பிகிறார்கள். எம்ஜிஆர் ஓடுகிறார்.

ஒரு அதல பாதாளத்தில் ஒரு சிவப்புச் சேலை தெரிகிறது. எம்ஜிஆர் கத்துகிறார். அனைவரும் ஓடுகிறார்கள்.

மணலில் புதைந்து கிடந்த ஜெ.,வை தூக்குகிறார்கள். ஆஸ்பத்திரி..!  ஜெ.,கதவை மூடுகிறார்.

எம்ஜிஆர் தவிர யாரும் உள்ளே வரக் கூடாது. ஜெ.,வின் பணிப்பெண்ணை கூட உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று ஜெ., கூறுகிறார். எம்ஜிஆர்  கோபம் கொள்கிறார் .

உன் மேல் அக்கரை கொண்டுத்தானே எல்லோரும் வெளியே காத்திருக் கிறார்கள் என்கிறார். அதற்கு ஜெ., சொன்னது  ஒரு இரண்டு காரணங்கள்.

ஒன்று நான் வலியோடு இருப்பதை பிறர் பார்க்கக் கூடாது,  என்  மேல் யாரும் பரிதாபம் கொள்ளக் கூடாது.

இரண்டு நான் அழக் கூடாது, நான் அழுது யாரும் பார்க்கக் கூடாது..! எம்ஜிஆர் ஒன்றுமே பேசவில்லை.

இது அம்முவின் கொள்கை. அவரின் கொள்கைக்கு நான் ஏன் ஊறுவிளைவிக்க வேண்டும். வெளியே வந்து அனைவரையும் போகச் சொல்லி கட்டளை  இடுகிறார்.

படப் பிடிப்பு ரத்து  செய்யப்படுகிறது. பாத்து நாட்கள் இடைவெளி…மீண்டும் ஜெ., ஷூட்டிங் வரும் போது பூ மாதிரி வந்து நிற்கிறார் புரட்சிதலைவி அம்மா அம்மா அவர்கள்
மக்கள்திலகம் பொன்மனசெம்மல் பாரத ரத்னா டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள்  அப்படியே அசந்து போய்  சிரிக்கிறார்
இதுதான் புரட்சிதலைவி அம்மாவின் குணம்  இதை அவர் வாழ்நாள் முழுவதும் மாற்றிக்கொள்ளவே இல்லையாம்