புதன், 26 ஜூலை, 2017

உதடுகள் ஒட்டாமல் பாடும் பாடல்கள்..



உதடுகள் ஒட்டாமல் பாடும் பாடல்கள்..

 *" காஞ்சி காமாட்ஷி " படத்தில் வாலி எழுதி ரகுனாதன் இசையில் வாணி ஜெயராம் பாடிய  " அனா அனா சுனா கானா " என்ற பாடல் முழுவதிலும் ஒவ்வொரு சொற்களிலும் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு உயிர் அல்லது உயிர்மெய் எழுத்துடன் " னா" என்ற எழுத்து சேர்ந்து உவன்னா, காவன்னா, குவன்னா என்றே பாடல் முழுதும் அமைந்துள்ளது*

*வில்லு பாட்டுகாரன் படத்தில் மலேசியா வாசுதேவன் பாடிய " தென்றல் வந்து" என்ற பாடலில் முதல் 4 வரிகள் தவிர பாடல் முழுவதும் உதடு ஒட்டாமல் வரும்.

*" நினைத்தாலே இனிக்கும்" படத்தில் S.P.B யும் & ஜானகியும் பாடிய பாடலில் ஒவ்வொரு வரியிலும் இசை மெட்டாகவும் அதை தொடர்ந்து " நினைத்தாலே இனிக்கும்" என் இரு சொற்கள் மட்டுமே இடம் பெரும். ஹம்மிங்கை கேட்டு பாருங்களேன்.*

*அமுதவல்லி படத்தில் T.R. மகாலிங்கமும், S.C. கிருஷ்ணனும் பாடும் " தத்துவ கலையுடன்" என்ற பாடலில் " தன்னாலே" என்ற வரிமுதல் அடுத்து வரும் 8 வரிகள் ஒட்டாமல் வரும்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக