புரட்சிதலைவி அம்மாவின் குணம்
அடிமைப்பெண் படப்பிடிப்பு ராஜஸ்தானில் கடும் பாலைவனத்தில் நடந்து கொண்டிருந்ததாம்
அப்போது கேரவனுக்குள் நுழைந்து ஏசி காத்து வாங்கும் வசதி எல்லாம் இல்லை யாராக இருந்தாலும் சரி படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் ஓரமாக ஒரு இடத்தில் மற்ற நடிகர்கள்
துணை நடிகை நடிகர்கள் புரட்சிதலைவர் அவர்கள் புரட்சித்தலைவி அவர்கள் சேர் போட்டு அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள்
ராஜஸ்தான் பாலைவனத்தில் கடுமையான வெயில் ஜெ இழுத்துச் செல்லும் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது
எம்ஜிஆர் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் அப்போது என்னமோ நடக்க போகிறது என்று உணர்கிறார்
கொஞ்சம் நெர்வஸாக உணர்கிறார் புரட்சிதலைவி மாண்புமிகு அம்மா அவர்களுக்கு டூப்பு இல்லையாம் அவரும் அதை விரும்பவது இல்லையாம் அப்பவே அவர் இரும்பு பென்மனி பென்சிங்கமாக
எவ்வளவு ரிஸ்க் என்றாலும் தானே நடிப்பார். பல முறை எம்ஜிஆர் ஜெ.,வைக் கண்டித்திருக்கிறார். ஆனாலும் ஜெ., கேட்பதில்லை.
எம்ஜிஆர் பயத்துக்கு காரணம் ஏதாவது பாதிப்பு என்றால் படத்தை தயாரிக்கும் முதலாளி பாதிக்கப்படுவார் என்பதே காரணம்.
ஜெ.,வை கயிறு கட்டி இழுத்துச் செல்லும் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பெரிய மணல் மேடு அது..அக்னிப் புயல் வீச ஆரம்பித்தது..
கேமரா உட்பட அனைத்தும் மணல் அள்ளி வீச எம்ஜிஆர் ஓடுகிறார்.முதல் புயல் ஓய்ந்தது. ஜெ.,வைக் காணவில்லை.
இயக்குனர் எம்ஜிஆர் தான் என்றாலும் டைரக்டர் நீலகண்டன் தான் பல காட்சிகளை படமாக்குவார் என்பார்கள்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்திலும் நீலகண்டன் தான் இயக்கத்தின் மேற்பார்வை. ஜெ.,வை தேட ஆரம்பிகிறார்கள். எம்ஜிஆர் ஓடுகிறார்.
ஒரு அதல பாதாளத்தில் ஒரு சிவப்புச் சேலை தெரிகிறது. எம்ஜிஆர் கத்துகிறார். அனைவரும் ஓடுகிறார்கள்.
மணலில் புதைந்து கிடந்த ஜெ.,வை தூக்குகிறார்கள். ஆஸ்பத்திரி..! ஜெ.,கதவை மூடுகிறார்.
எம்ஜிஆர் தவிர யாரும் உள்ளே வரக் கூடாது. ஜெ.,வின் பணிப்பெண்ணை கூட உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று ஜெ., கூறுகிறார். எம்ஜிஆர் கோபம் கொள்கிறார் .
உன் மேல் அக்கரை கொண்டுத்தானே எல்லோரும் வெளியே காத்திருக் கிறார்கள் என்கிறார். அதற்கு ஜெ., சொன்னது ஒரு இரண்டு காரணங்கள்.
ஒன்று நான் வலியோடு இருப்பதை பிறர் பார்க்கக் கூடாது, என் மேல் யாரும் பரிதாபம் கொள்ளக் கூடாது.
இரண்டு நான் அழக் கூடாது, நான் அழுது யாரும் பார்க்கக் கூடாது..! எம்ஜிஆர் ஒன்றுமே பேசவில்லை.
இது அம்முவின் கொள்கை. அவரின் கொள்கைக்கு நான் ஏன் ஊறுவிளைவிக்க வேண்டும். வெளியே வந்து அனைவரையும் போகச் சொல்லி கட்டளை இடுகிறார்.
படப் பிடிப்பு ரத்து செய்யப்படுகிறது. பாத்து நாட்கள் இடைவெளி…மீண்டும் ஜெ., ஷூட்டிங் வரும் போது பூ மாதிரி வந்து நிற்கிறார் புரட்சிதலைவி அம்மா அம்மா அவர்கள்
மக்கள்திலகம் பொன்மனசெம்மல் பாரத ரத்னா டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அப்படியே அசந்து போய் சிரிக்கிறார்
இதுதான் புரட்சிதலைவி அம்மாவின் குணம் இதை அவர் வாழ்நாள் முழுவதும் மாற்றிக்கொள்ளவே இல்லையாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக