வியாழன், 27 ஜூலை, 2017

லிவிங்க்ஸ்டன் நடிகரானது எப்படி......?



லிவிங்க்ஸ்டன் நடிகரானது  எப்படி......?
தெய்வ வாக்கு..........

கேப்டன்  ஒன்று கூறிவிட்டால்
அது நிச்சயம்
நடந்தே தீரும்...........

தெய்வாம்சம் பொருந்தியவர்தான்
தலைவர் கேப்டன்..............

லிவிங்க்ஸ்டன் நடிகரானது  எப்படி......?

1988 களில் சினிமாவில் இயக்குனர் ஆகவேண்டும் என்ற கனவில் சில இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி  கோடம்பாக்கத்தில் சுற்றிவந்த வாலிபர்தான் லிவிங்க்ஸ்டன்.............

அப்பொழுது  திரையுலகில் புதியதாக ஒரு இயக்குனர் உதயமாகிறார் என்றால் அவர்கள் வாய்ப்பு தேடி முதலில் செல்வதே   தலைவர் கேப்டனின் அலுவலகத்திற்க்குதான்.............

புதியவர்களின் சரணாலயம்தான் தலைவர்  கேப்டனின் அலுவலகம்.........

1988 ல் ஒரு கதையை எடுத்துக்கொண்டு தலைவர் கேப்டனை சென்று சந்திக்கிறார் லிவிங்க்ஸ்டன்.......

அப்பொழுது  தலைவர் சொந்த தயாரிப்பில பூந்தோட்ட காவல்காரன் படம் எடுக்க தயாராக இருந்த நேரம்............

தலைவர் கேப்டனை லிவிங்க்ஸ்டன் உள்ளே சென்று வணக்கம் தெரிவித்து நான் ஒரு கதை வச்சிருக்கேன் உங்கள வச்சு பன்னனும்னு ஆசை கதை கேட்குறீங்களானு கேட்டார்..............

அதற்க்கு தலைவரோ ஏன் நீங்கள் சினிமாவில்  நடித்தால் என்ன.....?

என்று கேட்டதும் லிவிங்க்ஸ்டனுக்கு அதிர்ச்சி, சார் எனக்கு நடிப்புலாம் வராது, அதுவும் இல்லாம என்னலாம் படத்துல நடிக்க வைக்க எந்த இயக்குனரும் ஒத்துக்க மாட்டாங்க, எனக்கு இயக்குனர் ஆகனும்னுதான் விருப்பம் என்று மீண்டும் கூறினார்..............

அதற்க்கு தலைவரோ இப்பொழுதைய காலகட்டத்தில் பெரிய இயக்குனர்களாலேயே
சில தயாரிப்பாளர்கள் நடிகர் நடிகைகளால் தாக்குபிடிக்க முடியவில்லை,  அதனால் நீங்கள் நடிகராக நடித்தால் திரையுலகில் நிச்சயம் ஜொலிப்பீர்கள் என்று கூறினார்...........

அதற்க்கு லிவிங்க்ஸ்டனோ எனக்கு யார் சார் வாய்ப்பு தருவா என கேட்டதும் நான் தரேன், இப்பொழுது நானும் எனது நண்பன் ராவுத்தரும் தமிழன்னை என ஒரு கம்பெணி ஆரம்பித்துள்ளோம், அதன் தயாரிப்பில் பூந்தோட்டக் காவல்காரன் என ஒரு படம் எடுக்கிறோம் அதில் அற்ப்புதமான வில்லன் வேடம் உள்ளது நீங்கள் நடிங்கள் என்று தலைவர் கூறினார்.......................

லிவிங்க்ஸ்டனுக்கோ அதிர்ச்சியுமாகவும், பயமாகவும் இருந்தது, ஒரு மிகப்பெரிய அதிரடி கதாநாயகன் அவர் படத்தில் வில்லனா.........?

ஒருவித பயத்துடன் ஒத்துக்கொண்டார் லிவிங்க்ஸ்டன், அவர் இதுவரை இதுபோன்று பணியாற்றிடாத அனுபவம் அந்த திரைப்படத்தில்.......

அனைவருக்கும் சமமான சாப்பாடு, தலைவர் கேப்டன் மீன் சாப்பிடுகிறார் என்றால் அனைவருக்கும் மீன் தான்.............

ஒரு குடும்பம்போல் அனைவருடன் சமமாக பழகினார் இது லிவிங்க்ஸ்டனை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, ........

தலைவர் கேப்டன் அவரிடம் பழகும் விதம் அவருக்கு நடிக்க பயமில்லாமல் போனது.........

படமும் வெளிவந்தது படம் மெஹாஹிட், லிவிங்க்ஸ்டனுக்கு நல்ல பெயரும் அந்த படம் பெற்றுக் கொடுத்தது..............

அடுத்தடுத்து தொடர்ந்து கேப்டன் பிரபாகரன், ஏழைஜாதி, என லிவிங்க்ஸ்டனுக்கு வாய்ப்புகள் கொடுத்து அவரை பிரபலப் படுத்தினார்..........

அதன் பிறகு லிவில்ங்க்ஸ்டன் திரையுலகில் ஒரு நல்ல நடிகனாக மக்களிடம்  வலம் வந்தார், தொடர்ந்து நிறைய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.............

இன்று  திரையில் நட்சத்திரமாக லிவிங்க்ஸ்டன்  ஜொலிக்கிறார் என்றால் அதற்க்கு தலைவர் கேப்டன் மட்டுமே காரணம்.................

ஒருவர்  முகத்தை பார்த்து  நீ இதை செய்தால்தான் நன்றாக இருக்கும் என கூறுவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் சாதிக்க துணை நிற்க்க கேப்டனால் மட்டுமே முடியும்...............  

தலைவர்  கேப்டன் இல்லையென்றால் இன்றைக்கு திரையுலகில் லிவிங்க்ஸ்டன் இல்லை, இதுபோலதான் பல பேரை உருவாக்கியவர் தலைவர் கேப்டன்...............

நன்றி மறக்காதவர் லிவிங்க்ஸ்டன் இன்னமும் தலைவர் மீது அதே பாசம் கதாநாயகனாக வலம் வந்த நேரத்தில் கூட  வல்லரசு, வானத்தைபோல போன்ற படங்களில் எல்லாம் தலைவருடன் நடித்திருப்பார்...............

தெய்வாம்சம் பொருந்தியவர் தலைவர் கேப்டன், அவர் இதுவரை துரோகிகளை கூட அவச்சொற்களால் பேசியிருக்க மாட்டார்........

யாருக்கும் தீங்கு நினைக்காத நல்ல உள்ளம் கொண்ட தலைவர் கேப்டன்............

அடுத்தவர்களை வாழவைத்து அவர் வாழ்வதே வாழ்க்கை எனும் கொள்கை பிடிப்புள்ள தலைவர் கேப்டன்.....................


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக