செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017
சனி, 26 ஆகஸ்ட், 2017
திருமணம் செய்யாமல் வாழும் கோவை சரளாவின் நெகிழ வைக்கும் மறுபக்கம்..!
திருமணம் செய்யாமல் வாழும் கோவை சரளாவின் நெகிழ வைக்கும் மறுபக்கம்..!
சினிமாவில் ஆச்சி மனோரமாவுக்கு பிறகுகாமெடியில் கொடி கட்டி பறப்பவர் என்றால் அது கோவை சரளாதான்.காமெடி நடிகையாலும் கமல் போன்ற பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க முடியும் என்று நிரூபித்தவர்.1983ல் பக்கியராஜின் முந்தானை முடிச்சு படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். அதன் பின்பு பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தார்.இருந்தாலும் கரகாட்டக்காரன் படம் இவருக்கு பெரும் பெயரை பெற்று தந்தது. இதனை தொடர்ந்து வடிவேலுவுடன் இவர் நடித்த படங்கள் அனைத்தும் காமெடியின் உச்சமாக இன்றளவும் உள்ளது.சுமார் 750 படங்களுக்கு மேல் நடித்து இருக்கும் இவருக்கு 2008க்கு தமிழில் சரியான படவாய்ப்புகள் அமையவில்லை.பின்னர் 2011 முதல் காஞ்சனா படம் மூலம் இரண்டாவது ரவுண்டை தொடங்கி வலம் வருகிறார்.இப்போதும் தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக நடித்து கொண்டுள்ளார்.இவருடன் பிறந்தவர்கள் 4 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன். இவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்த கோவை சரளா, இவர் மட்டும் இன்னும் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. உடன் பிறந்தவர்களின் குழந்தைகளை தனது குழந்தைகளாக பாவித்து வளர்த்து வருகிறார்.பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். மேலும் பல வயதானவர்களின் நலனுக்காகவும் பாடுபட்டு வருகிறார்.*
புதன், 23 ஆகஸ்ட், 2017
விவேகம் விமர்சனம்
விவேகம் விமர்சனம்
ராணுவத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அஜித், தனக்கு கொடுக்கப்படும் எந்த ஒரு வேலையையும் தனி ஆளாக சென்று சமாளிக்கும் வல்லமை படைத்தவர். அஜித், விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் உள்ளிட்ட 4 பேர் ஒரு குழுவாக இருக்கின்றனர். இந்நிலையில் அஜித், காஜல் அகர்வால் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இராணுவத்தில் ரகசிய பொறுப்பில் இருக்கும் அஜித்தின் குழுவுக்கு ஒரு வேலை வருகிறது.
அதிநவீன ஆயுதம் ஒன்று பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்படுகிறது. இதனால் ஏற்படும் நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். அதேபோன்ற இரு ஆயுதங்கள் இந்தியாவில் பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் வர, அதனை கண்டுபிடிக்க ராணுவத்தின் சார்பாக அஜித்தின் குழு செல்கிறது. அவர்களது வேட்டையில் அந்த ஆயுதத்தை ஹேக் செய்து வெடிக்கச் செய்தது அக்ஷரா ஹாசன் என்பதும் தெரிய வருகிறது. அக்ஷராவை கண்டுபிடித்தால் தான் அந்த கருவியை செயலிழக்கச் செய்ய முடியும். இந்நிலையில் கருணாகரன் உதவியோடு அஜித் மற்றும் அவரது குழு அக்ஷராவை கண்டுபிடிக்கிறது. மேலும் அக்ஷராவிடம் அஜித் ரகசிய விசாரணை ஒன்றை நடத்துகிறார். அதில் அக்ஷரா அந்த ஆயுதத்தை வெடிக்க வைக்கவில்லை என்பதும், அக்ஷரா ஒரு ஹேக்கர் மட்டுமே என்பதும் தெரிய வருகிறது. சிலரின் தூண்டுதலால், தான் அக்ஷரா அந்த ஆயுதத்தை ஹேக் செய்து கொடுத்திருக்கிறார். அதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் தனக்கு பின்னால் தான் தெரிய வந்தது என்றும் அக்ஷரா கூறுகிறார்.
இந்நிலையில், அக்ஷராவை கொல்ல வேண்டும் என்றும், அந்த ஆயுதங்களை கைப்பற்ற வேண்டும் என்றும் விவேக் ஓபராய் கூற, அவரது யோசனைக்கு அஜித் மறுப்பு தெரிவித்து அவளை பாதுகாப்பாக அழைத்து செல்லும் போது, விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் உள்ளிட்ட அஜித்தின் மற்ற நண்பர்கள் அக்ஷராவை கொன்றுவிடுகின்றனர். மேலும் அஜித்தையும் சுட்டுவிட்டு அந்த ஆயுதங்களை கைப்பற்றி பல ஆயிரம் கோடிக்கு அதனை விற்க முடிவு செய்கின்றனர்.
அதேநேரத்தில் அந்த ஆயுதங்களை அஜித் கடத்திவிட்டதாக பழி சுமத்திவிடுகின்றனர். ஒரு மலைப்பகுதியில் நடக்கும் இந்த சண்டையில் குண்டு காயம் பட்ட அஜித் மரம் ஒன்றில் சிக்கிக் கொள்கிறார். இந்நிலயில் உயிருடன் திரும்ப வரும் அஜித் விவேக் ஓபராய் மற்றும் அவரது நண்பர்களை எப்படி பழிவாங்குகிறார்? தன் மீது சுமத்தப்பட்ட பழியை துடைக்க என்ன செய்தார்? உயிருடன் வரும் அஜித்துக்கு விவேக் ஓபராய் மற்றும் அவரது ழுகுவினர் என்னென்ன இடைஞ்சல் கொடுக்கின்றனர்? அவர்களால் வரும் பிரச்சனைகளை அஜித் எவ்வாறு முறியடிக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.
தனது 25-வது வருடத்தில் அடி எடுத்து வைத்துள்ள அஜித்தின் ஸ்டைலுக்கும், மாஸுக்கும் தீனி போடும் படமாக இது அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இராணுவ அதிகாரிக்கு உரிய தோரணையிலும், அதற்குண்டான தனித்தன்மையை வெளிப்படுத்துவதிலும் அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. படத்தில் அஜித்தின் மாஸ் காட்சிகள் ஏராளம். காட்சிக்கு காட்சி வியக்க வைக்குப்படி நடித்திருக்கிறார். படத்திற்காக அவர் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அதேபோல் அஜித் பேசும் வசனங்கள் அனைத்திற்கும் விசில் பறக்கிறது. ஒரு ஹாலிவுட் ஹீரோவுக்குண்டான ஸ்டைலில் அஜித் ராணுவ உடை, சாதாரண உடை, மண், புழுதி என அழுக்குப் படிந்திருந்தாலும் அது அவருக்கு அழகாகவே இருக்கிறது. காஜல் அகர்வால் இதுவரை ஏற்று நடிக்காத புதுமையான கதாபாத்திரத்தில் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அஜித்துடன் மனைவியாக வரும் காட்சியிலும், அவர் மீது அக்கறை கொள்ளும் காட்சியிலும் அவரது நடிப்பு சிலிர்க்க வைக்கும்படியாக இருக்கிறது. படம் முடியும் தருணத்தில் காஜல் அகர்வாலின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது.
விவேக் ஓபராய் ஒரு பாதியில் ஹீரோவாகவும், மறு பாதியில் வில்லனாகவும் மாறி ரசிக்க வைக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். பாகுபலி படத்தில் பிரபாசுக்கு குரல் கொடுத்தவரே இந்த படத்தில் விவேக் ஓபராய்க்கும் குரல் கொடுத்திருக்கிறார். அந்த கனீர் குரலில் அவர் பேசும் வசனங்கள் கேட்பதற்கு ரசிக்கும்படி இருக்கிறது. ஒரு ஹேக்கராக அக்ஷரா ஹாசன் சிறப்பாக நடித்திருக்கிறார். அக்ஷராவின் முதல் காட்சி ரசிக்கும்படி இருந்தது. அதேபோல் கருணாகரன் காமெடியில் ரசிக்க வைத்திருக்கிறார். செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக், ஆரவ் சவுத்ரி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
அஜித்தை வைத்து வீரம், வேதாளம் என்ற இரு படங்களை கொடுத்த சிவா, முற்றிலும் மாறுபட்டு ஒரு ஹாலிவுட் ஸ்டைலில் அஜித்தை மாஸாக காட்டியிருக்கிறார். முதல் பாகத்தில் பட்டாசு சத்தம் போல துப்பாக்கிக் குண்டுகள் வெடிக்க, அடுத்த பாதியில் அஜித்தின் மாஸ் காட்சிகள் அதிகளவில் காட்டப்பட்டிருப்பது சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக அஜித்தை எல்லா லுக்கிலும் அழகாக காட்டியிருப்பது சிறப்பு. வெற்றி, தோல்வி குறித்து அஜித் பேசும் வசனங்கள் உட்பட படத்தில் வரும் வசனங்கள் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. இது அஜித்தின் லுக்காக பார்க்க வேண்டிய படம். அதேபோல் விவேக் ஓபராய், அக்ஷரா கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார். ஒரு முழு அதிரடி படத்திலும் தனக்கே உரிய ஸ்டைலில் செண்டிமென்ட் காட்சிகளையும் வைத்திருப்பது சிவாவின் சிறப்பு. விவேகம் என்ற தலைப்புக்கு ஏற்ப படம் அதிவேகமாக இருக்கிறது.
அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கிறது. படத்தின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை அளித்திருக்கிறது. வெற்றியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருப்பதும் படத்திற்கு பலம்.
மொத்தத்தில் `விவேகம்' அதிவேகம்.
படத்தின் கதை:
வெளிநாட்டு சதியில் இருந்து இந்தியாவைக் காப்பாற்றும் உளவுத்துறை அதிகாரியாக அஜித் நடித்துள்ளார். பயங்கரவாதிகளால், இந்தியாவிற்கு மிகப்பெரிய அளவில் ஆபத்து வருவது உளவுத்துறையால் கண்டுபிடிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளால், இந்தியாவிற்கு எதிராக தாக்குதல்களும் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், எதிரிகளின் சதியை முறியடிப்பதற்காக ரா தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் அஜித் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுகிறது. இதில், அந்த குழு வெற்றி பெற்றதா? இல்லையா? என்பது தான் படத்தின் கதையாக கூறப்படுகிறது.
விவேகத்தின் பலம், பலவீனம், பயம்:
பலம்:
விவேகம் படத்திற்கு தல அஜித் கிடைத்தது மிகப்பெரிய பலம். படத்தில் உளவுத்துறையாக நடிப்பதற்கு தல அஜித் தான் பொருத்தமானவர் என்பதை புரிந்திருந்த இயக்குனர் சிவா.
அனிருத் இசையமைப்பாளராக கிடைத்துள்ளார். வேதாளத்தைப் போன்று விவேகம் படத்திலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள சர்வைவா, தலை விடுதலை, காதலாடா, ஏகே தீம் மியூசிக் போன்றவை அனைத்தும் சூப்பர் ஹிட் மாஸ் தான்.
டீசர் மற்றும் டிரைலர் போன்றவற்றை பார்க்கும் பொழுது படத்திற்கு ஒளிப்பதிவு மெருகூட்டியிருக்கிறது.
படம் முழுக்க வெளிநாட்டிலேயே எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் காண்பிக்கப்படும் இடங்கள் அனைத்தும் புதியவை போன்று இருக்கும்.
அஜித்தின் சிக்ஸ் பேக் வெளிப்பாடு, உடற்பயிற்சி தருணங்கள், கதாபாத்திரங்களை கையாளுதல் போன்றவை அஜித் ரசிகர்களுக்காக ஸ்பெஷலாக உருவாக்கப்பட்டுள்ளது.
பலவீனம்:
ஒரு குறிப்பிட்ட தொகுப்பாளருக்கு மட்டும் படம் பேசும்படி இருக்கும். மற்றபடி பி மற்றும் சி பிரிவு பார்வையாளர்களை இப்படத்துடன் இணைக்க முடியாது.
சர்வதேச தரம் கொண்ட படமாக உருவாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சிவா. பெரும்பாலான வசனங்களை ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறார். அதற்கு பதிலாக கொஞ்சம் தமிழில் கொடுத்திருக்கலாம்.
பயம்
ஒவ்வொரு படமும் வெளியாகும் போது இருக்கும் பொதுவான பிரச்சனை படம் திருட்டுத் தனமாக வெளியாகிவிடுமோ, திருட்டி விசிடி தயாரிக்கப்பட்டுவிடுமோ என்பது தான். ஆனால் மாஸ் ஹீரோ படத்திற்கு இது போன்ற எந்த பிரச்சனையும் ஏற்படாமல் பாதுகாப்பாக படம் திரையிடப்படுகிறது.
ஒரு சர்வதேச அரங்கில் உள்நாட்டின் யதார்த்தம் பாதிக்கப்படலாம். ஆனால், அது முற்றிலும் உணர்ச்சி, உரையாடல்கள் மற்றும் திரைக்கதை போன்றவற்றை சார்ந்ததாக உள்ளது.
படத்தின் உணர்ச்சிகரமான கதாபாத்திரங்கள் படத்தின் மையமாக கூறப்பட்டாலும், அந்த காட்சிகளின் அதிகப்படியான உணர்ச்சிகளின் காரணமாக படத்தின் யதார்த்தம் முற்றிலும் பாதிக்கப்படலாம்.
வாய்ப்பு
அக்ஷரா ஹாசனுக்கு இப்படம் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும், இப்படத்தில் தன்னுடைய திறமையான நடிப்பின் மூலம் கோலிவுட் சினிமாவில் தன்னை ஒரு நடிகையாக உருவாக்கிக் கொண்டுள்ளார்.
முதல் முறையாக அஜித்தின் விவேகம் படம் சர்வதேச தரம் கொண்ட படமாக உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்கு பிறகு அஜித் ஒரு வித்தியாசமான பரிமாணத்தை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக இது இருக்கலாம்.
பெரும்பான்மையான மாஸ் ஹீரோக்கள் வணிக் கதைகளில் நடிக்கும் நிலையில், முதல் முறையாக தல அஜித் ஒரு உளவுத்துறை ரா ஏஜெண்டாக த்ரில்லர் படத்தில் தன்னை நிரூபித்துக் காட்ட முயற்சித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட பிறகு பெரிய பட்ஜெட் கொண்ட மாஸ் ஹீரோவின் படம் வெளியாகிறது. இந்த 18-28 சதவீத கட்டண உயர்வு விவேகத்தை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதோடு பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையும் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி சமயம்.
செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017
அதிக திருமணம் செய்த தமிழ் நடிகர் நடிகைகள்!
அதிக திருமணம் செய்த தமிழ் நடிகர் நடிகைகள்!
நிறைய திருமணங்களை செய்து கொண்ட பிரபலங்களைப் பற்றி தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரபலங்கள் அனைவரும் மக்கள் மத்தியில் நல்ல பெயருடன் இருக்கும் அதே சமயம் அவர்களின் திருமண வாழ்க்கை பற்றிய கிசுகிசு இருந்து கொண்டு தான் இருக்கிறது.
ஸ்ரீதேவி
நடிகை ஸ்ரீதேவி, நடிகர் சக்ரவர்த்தியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். பின் தயாரிப்பாளர் போனி கபூரை இரண்டாவதாக மணந்து வாழ்ந்து வருகிறார்.
ராதிகா
நடிகை ராதிகா முதலில் 1985 ஆம் ஆண்டு இயக்குநர் பிரதாப்பை திருமணம் செய்து, 1986 இல் விவாகரத்து செய்துவிட்டார். பின் ரிச்சாட்டு ஹார்டி என்பவரை லண்டனில் 1990 ஆம் ஆண்டு திருமணம் புரிந்து, 1992 இல் விவாகரத்து செய்துவிட்டார். இறுதியில் நடிகர் சரத்குமாரை காதலித்து 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து, தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
லட்சுமி
நடிகை லட்சுமி 1969 இல் பாஸ்கர் என்பதை திருமணம் செய்தார். பின் அவரை விவாகரத்து செய்துவிட்டு, நடிகர் மோகன் சர்மாவை 1975 இல் திருமணம் செய்து, 1980 இல் விவாகரத்து செய்துவிட்டார். பிறகு நடிகரும், இயக்குநருமான கே.எஸ். சிவசந்திரனை காதலித்து 1989 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
கமல்ஹாசன்
உலக நாயகனான நடிகர் கமல்ஹாசன் தனது 24 வயதில் வாணி கணபதி என்பவரை மணந்து, பத்து வருடங்களுக்கு பின் விவாகரத்து செய்துவிட்டு, பின் நடிகை சரிகாவுடன் சில நாட்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தார். பின் ஸ்ருதிஹாசன் பிறந்த பின்னர் சரிகாவை மணந்தார். தற்போது கமல்ஹாசன் கௌதமியுடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.
கார்த்திக்
நவரச நாயகன் நடிகர் கார்த்திக் 1988 இல் நடிகை ராகினியை மணந்து, பின் ராகினியின் சகோதரியான ரதியை 1992 இல் திருமணம் புரிந்தார்.
எம்.ஜி.ஆர்
நடிப்பால் நிறைய மக்களைக் கவர்ந்ததோடு, தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மூன்று திருமணம் நடந்துள்ளது. அவர் முதலில் தங்கமணியை மணந்தார், பின் அவர் இறக்க இரண்டாவதாக சதானந்தவதியை மணந்தார். அவரும் நோய் காரணமாக இறந்தார். இறுதியாக தமிழ் நடிகையான வி.என். ஜானகி அவர்களை மணந்தார்.
பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ் லலிதா குமாரி என்பவரை 1994 ஆம் ஆண்டு மணந்தார். அவருக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். பின் அவர் தனது முதல் மனைவியை 2009 இல் விவாகரத்து செய்துவிட்டு, 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போனி வெர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சரத்குமார்
நடிகர் சரத்குமார் 1984 இல் சாயாவை மணந்து, 2000 இல் விவாகரத்து செய்துவிட்டார். பின் நடிகை ராதிகாவை பிப்ரவரி மாதம் 4 ஆம் நாள் 2001 ஆம் ஆண்டு மணந்தார்.
சனி, 12 ஆகஸ்ட், 2017
மக்கள் திலகத்தை நம்பாமல் கெட்டவர்கள் உண்டு. நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை.
மக்கள் திலகத்தை நம்பாமல் கெட்டவர்கள் உண்டு. நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை.
மக்கள் திலகத்தை வைத்து அன்று சிந்திய ரத்தம் என்ற பெயரில் டைரக்டர் ஸ்ரீதர் படம் தொடங்கினார். கருப்பு வெள்ளையில் எடுத்தார். அதே சமயம் இந்த பட பூஜை போட்டு விநியோகஸ்தர்களிடம் வாங்கிய பணத்தில் புதுமுகங்களைப் போட்டு காதலிக்க நேரமில்லை படத்தை கலரில் எடுத்தார்.
மக்கள் திலகம் அன்று சிந்திய ரத்தம் படத்தில் இருந்து விலகிக் கொண்டார். அந்தப் படத்தில் நடிக்க 25,000 அட்வான்ஸ் வாங்கினார். சில நாட்கள் நடித்ததற்கே அந்தத் தொகை குறைவுதான். ஸ்ரீதரும் அதைக் கேட்கவில்லை.
பின்னர், சிவாஜி கணேசனை வைத்து போட்டிக்காக சிவந்த மண் படத்தை கலரில் அதுவும் வெளிநாட்டில் ஸ்ரீதர் எடுத்து வெளியிட்டார். ஆனால், அந்த சமயத்தில் வெளியான நம்நாடு திரைப்படம்தான் சிவந்த மண்ணை விட அதிக வசூல் கொடுத்தது.
பின்னர், சில படங்களை எடுத்து ஸ்ரீதர் நஷ்டம் அடைந்தார். சிவாஜி கணேசனை வைத்து வைரநெஞ்சம் என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். பாதி படம் வளர்ந்த நிலையில், வியாபாரம் ஆகாததால் மேற்கொண்டு படம் வளரவில்லை. அந்தப் படம் பின்னர் வெளியாகி தோல்வி அடைந்தது வேறு விஷயம்.
அந்த சமயத்தில் சிவாஜி கணேசன் ஸ்ரீதருக்கு உதவி செய்யவில்லை. தன் கையில் இருந்து பணம் கொடுக்கவோ, பாதி நின்றிருந்த வைரநெஞ்சம் படத்தில் மேற்கொண்டு நடிக்கவோ இல்லை.
வேறு வழி தெரியாத நிலையில், மக்கள் திலகத்திடம் ஸ்ரீதர் தஞ்சமடைந்தார். அவருக்கு உதவ மக்கள் திலகம் நடித்துக் கொடுத்து ஸ்ரீதரை கைதூக்கி விட்ட படம்தான் வெள்ளிவிழா படமான உரிமைக்குரல். அதன் பின்னர்தான் ஸ்ரீதர் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு மறுபடியும் படத்தயாரிப்புகளை தொடங்கினார். மக்கள் திலகத்தின் மீனவ நண்பன் வெற்றிப் படத்தையும் ஸ்ரீதர் பின்னர் இயக்கினார்.
மறுபடியும் மோகனப் புன்னகை என்ற சிவாஜி கணேசன் நடித்த படத்தின் மூலம் ஸ்ரீதர் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டார் என்பது தனிக்கதை.
மக்கள் திலகத்தின் மாண்புக்கு ஒரு உதாரணம். உரிமைக்குரல் படத்தில் பேசிய சம்பளத்தில் இருந்து அன்று சிந்திய ரத்தம் படத்துக்காக வாங்கிய அட்வான்ஸ் தொகை 25,000 –த்தை புரட்சித் தலைவர் கழித்துக் கொண்டார். பின்னர், ஸ்ரீதரே இதை தெரிவித்தார்.
இந்தப் படத்தில் மக்கள் திலகம் நடித்திருந்தால் ஸ்ரீதருக்கு இடையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே வந்திருக்காது.
மக்கள் திலகத்தை நம்பாமல் கெட்டவர்கள் உண்டு. நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை.
வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017
தர்மம் தலை காக்கும்...
தர்மம் தலை காக்கும்...
மக்கள்திலகத்தின் நெருங்கிய நண்பரும், தலைவரை வைத்து அதிக படங்களை இயக்கியவர் சாண்டோ சின்னப்பாதேவர். எம்ஜிஆரை ஆண்டவரே என்றும் முருகா என்றும்தான் பெரும்பாலும் அழைப்பார். முருகன் என் இஷ்ட தெய்வம். எம்ஜியார் என் கண் கண்ட தெய்வம் என்றும் கூறுவார். இவரால் ஏற்றம் பெற்ற நடிகர்கள் ஏராளம்! தேவர் தனது 64ஆம் வயதில் 1978 செப்டம்பரில் மாரடைப்பு காரணமாக இறந்தார். கோவையில் அவரது இல்லத்திற்கு திரையுலகமே திரண்டுவந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் எம்ஜிஆர் தனது பால்ய நண்பருக்கு நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். தேவரின் இல்லத்திலிருந்து நஞ்சுண்டாபுரம் மயானம் வரை 3 கிலோ மீட்டர் நடந்தே வந்து தேவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார். அனைத்து திரை நட்சத்திரங்களும் நடந்தே சென்றனர். அந்த காட்சியே இது!
பலருக்கும் எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறார். ஆனால், அவருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் குடும்பச் சொத்துக்களை விற்க முனைந்த தாய்மார்கள் உண்டு. எம்.ஜி.ஆரை தங்கள் மகனாகவே கருதிய மூதாட்டிகள், தங்கள் விவசாய நிலத்தில் அவர் காலடி பட்டால் மண்ணெல்லாம் பொன்னாய் விளையும் என்று நம்பினர்!
வரி பாக்கிகளுக்காக எம்.ஜி.ஆரின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட லாம் என்று வதந்திகள் பரவிய நேரம். திண்டிவனத்தில் ஆசிரியராக பணி யாற்றி வந்த இரா.ஷெரீப் என்பவர், எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதினார். ‘‘தங்கள் சொத்துக்கள் ஜப்தி செய்யப் படலாம் என்று வரும் செய்திகள் அறிந்து என்னைப் போலவே தங்களையும் தனது மகனாகக் கருதும் எனது தாய் மிகுந்த வருத்தமடைந்திருக்கிறார். குடும்பச் சொத்துக்களை விற்று தங்களுக்கு உதவச் சொன்னார். என் வீடு, மனை ரூ.40 ஆயிரம் விலைபோகும். அதை தங் களுக்கு அளிக்கிறேன். என் தாய் தங் களுக்காக உயிரைக்கூட தர சித்தமாக இருக்கிறார்’’ என்று கடிதத்தில் ஷெரீப் கூறியிருந்தார்.
எம்.ஜி.ஆர். தனது தாய் சத்யா அம்மையாரை தெய்வமாக மதிப்பவர். ராமாவரம் தோட்டத்து வீட்டில் தாய்க்கு சிறிய கோயிலே கட்டியிருந்தார். வெளியே புறப்படும் முன் தாயை வணங்கி விட்டுத்தான் புறப்படுவார். மற்ற தாய்மார் களையும் சொந்தத் தாய் போலவே கருதினார். ஷெரீப் எழுதிய கடித விவரங் களைப் பற்றியும் அந்தத் தாயைப் பற்றியும் ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளிவந்த தனது சுயசரிதையான ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
‘‘வயதான காலத்தில் அந்தத் தாய் தன் மக்களுடைய எதிர்காலத்துக்கு என் பதைப் பற்றி சிறிதேனும் கவலைப்படா மல் என்னுடைய கடனைத் தீர்க்க, தங் களின் சொத்துக்களை விற்க முடிவெடுத் தார்களே, அந்த மனித தெய்வத்தை நான் வணங்காதிருப்பது எப்படி? அந்தத் தாய் எனக்காக உயிரைத் தரவும் துணிந்து விட்ட நிலையில், நான் அவர்களுக்காக என் உயிரைத் தராவிடினும் உழைப்பை யாவது தரவேண்டாமா?’’ என்று எம்.ஜி.ஆர். எழுதியுள்ளார்.
தனக்காக அவர்கள் சொத்துக் களை விற்பதை ஏற்க எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார். பின்னர், அந்தத் தாயார் உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ளார் என்பதை கடிதம் மூலம் அறிந்து, திண்டிவனம் சென்றார். ஷெரீப்பின் வீட்டுக்குச் செல்வதற்காக சிறிய சந்துகளின் வழியே எம்.ஜி.ஆர். நடந்து சென்றார். தங்கள் சந்தில் எம்.ஜி.ஆர். நடந்து வருவதை நம்பமுடி யாத மக்கள் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று, ஓட்டமும் நடையுமாய் கூடவே சென்றனர். ஷெரீப்பின் வீட்டை அடைந்த எம்.ஜி.ஆரை, மூத்த மகனை கண்ட மகிழ்ச்சியுடன் படுக்கையில் இருந்தவாறே கண்ணீருடன் வரவேற் றார் அந்தத் தாய். அவரது கரங்களை ஆதரவாகப் பிடித்தபடி நலம் விசாரித்தார் எம்.ஜி.ஆர்.!
தர்மம் தலை காக்கும்’ படத்தில் எம்.ஆர்.ராதாவின் மகள் சரோஜாதேவி. அவர்களது வீட்டுக்கு வரும் எம்.ஜி.ஆரின் தலைக்கு மேல் இருக்கும் அலங்கார விளக்கு விழும்போது அவரை சரோஜாதேவி காப்பாற்றுவார். அப்போது, எம்.ஜி.ஆரைப் பார்த்து எம்.ஆர். ராதா, ‘‘தர்மம் ஒருமுறைதான் தலை காக்கும்’’ என்று எச்சரிப்பார். புன்னகையை மட்டுமே பதிலாக அளித்து விட்டு, காரை ஓட்டியபடி எம்.ஜி.ஆர் திரும்பும்போது இந்தப் பாடல்…
‘தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிற்கும்...’
திரையுலகில் வி.சாந்தாராமை தனது ஆசான்களுள் ஒருவராக எம்.ஜி.ஆர் கருதினார். இந்தியில் ‘தோ ஆங்க்கே பாரா(ஹ்) ஹாத்’ என்ற பெயரில் வி. சாந்தாராம் தயாரித்து இயக்கிய படம்தான் தமிழில் உதயம் புரொடக் ஷன்ஸ் சார்பில் எம்.ஜி.ஆர். நடித்த வெற்றிப் படமான ‘பல்லாண்டு வாழ்க’ ஆனது.
சந்தர்ப்பவசத்தால் குற்றம் செய்துவிட்டு தண்டனை அடைந்த கைதிகளும் மனிதர்கள்தான் என்பதை விளக்கும் வகையில், கொடும் குற்றங்கள் செய்த கைதிகள் 6 பேரை மனம் திருந்தியவர்களாக மாற்றும் ‘ஜெயிலர் ராஜன்’ பாத்திரத்தில் அப்படத்தில் எம்.ஜி.ஆர். சிறப்பாக நடித்திருந்தார்.
நடிகர் ஸ்ரீகாந்த், ஆகஸ்டு (3-ந் தேதி) சதாபிசேக விழா
நடிகர் ஸ்ரீகாந்த், ஆகஸ்டு (3-ந் தேதி) சதாபிசேக விழா
மேற்கண்ட படத்தில் இருப்பவரை தெரிகிறதா? "தங்கப்பதக்கம்" படத்தில் சிவாஜிக்கு அடங்காத மகனாக நடித்தாரே ஸ்ரீகாந்த் அவர்தான் இது. "வெண்ணிற ஆடை"யில் அறிமுகமாகி "சில நேரங்களில் சில மனிதர்கள்" "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" "வியட்நாம் வீடு சுந்தரம்" உள்ளிட்ட பல படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த், இன்று (3-ந் தேதி) சதாபிசேக விழாவை மனைவியுடன் கொண்டாடினார். காலம் மறந்துவிட்ட எத்தனையோ அற்புதமான கலைஞர்களில் இவரும் ஒருவர்.
கமல்ஹாசன் - சில சாதனைகள், சில தகவல்கள்!
கமல்ஹாசன் - சில சாதனைகள், சில தகவல்கள்!
• நான்கு முறை தேசிய விருதும், மூன்று முறை சர்வதேச விருதும் பெற்ற ஒரே இந்திய நடிகர். களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக தேசிய விருது பெற்றார்.- விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் விருதுகள் சிறந்த படத்திற்கான விருதுகள் தரப்பட்டது.
• இதுவரை இந்திய நடிகர்களிலேயே இவர் நடித்த படங்கள் தான் அதிக முறை (7 முறை) ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.- இந்திய சினிமா வரலாற்றிலேயே 18 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஒரே நடிகர். திலீப் குமாரே 14 பிலிம்பேர் விருதுகள் தான் வாங்கியிருக்கிறார்.
• இதுவரை உலகிலேயே அதிக விருதுகள் (170க்கும் அதிகம்) பெற்ற ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.
• கமல்ஹாசன் இந்தியாவில் குடிமகன்களுக்கு வழங்கப்படும் விருதுகளிலேயே 4வது சிறந்த விருதான பத்மஸ்ரீ பெற்றிருக்கிறார்.
• கமல்ஹாசனுக்கு அவர் செய்யும் கலைசேவைகளுக்காக சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் "டாக்டர்" பட்டம் கையளிக்கப் பட்டது.
• கமல்ஹாசனின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இதுவரை 450 மில்லியனுக்கும் மேற்பட்ட வர்த்தகம் செய்திருக்கிறது.
• கமல்ஹாசனின் கனவுப்படைப்பான மருதநாயகம் இங்கிலாந்து மகாரானி எலிஸபெத்-2 அவர்களால் துவக்கப்பட்டது.
• உலகிலேயே ரசிகர் மன்றங்களை மக்களுக்கு சேவை செய்யும் நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசன்.
• கமல்ஹாசன் மற்றும் அவரது நற்பணி இயக்கத்தினர் இதுவரை 10000 ஜோடி கண்களை தானம் செய்திருக்கிறார்கள். 10000 கிலோ அரிசியை மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
• 100 கோடி ரூபாய் தருகிறோம் என ஒரு அரசியல் கட்சி அழைத்தும் அதை துச்சமாக மதித்தவர் கமல்ஹாசன்.
• இரண்டுமுறை ஆந்திர அரசின் மாநில விருதைப் பெற்றவர் டாக்டர் கமல்ஹாசன்.
• 8 முறை தமிழக அரசின் மாநில விருதைப் பெற்று மாபெரும் சாதனை புரிந்தவர் கமல்ஹாசன்.
• கமல்ஹாசனுக்கு தமிழக அரசு கலைமாமணி பட்டமும் வழங்கி கவுரவித்திருக்கிறது.
• கமல்ஹாசனுக்கு மற்ற கலையுலக வித்தகர்களால் வழங்கப்பட்ட பட்டங்கள் "காதல் இளவரசன்" - ஜெமினி கணேசன், "புரட்சி மன்னன்" - கே. பாலச்சந்தர், "சூப்பர் ஆக்டர்" - பஞ்சு அருணாசலம், "கலைஞானி" - டாக்டர் கலைஞர், "உலக நாயகன்" - கே.எஸ். ரவிக்குமார்.
• The Fuel Instrument Engineers (FIE) Foundation, (Ichalkaranji, Maharashtra ) எனும் அமைப்பு நம் காலத்தில் வாழும் சிறந்த இந்தியர் எனும் விருதை கமல்ஹாசனுக்கு வழங்கி இருக்கிறது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள் 5 பேர் மட்டுமே (டாடா உட்பட)
• சென்னை ரோட்டரி சங்கமும் கமல்ஹாசனுக்கு "சிறந்த மனிதர்" விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
• டாக்டர் ஏ.டி. கோவூர் தேசிய விருது சிறந்த மனிதாபிமானம் மற்றும் சமூகசேவைகளுக்காக கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை வழங்கியவர்கள் Bharatheeya Yukthivadi Sangham (Rationalist Association of India ).
• மதுரையில் திரைப்படத் துவக்க விழா செய்த ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே. விருமாண்டிப் படத்துக்கான துவக்க விழா மதுரையில் நடைபெற்றது.
• கமல்ஹாசனுடன் இன்டெல் நிறுவனம் இணைந்து இந்தியாவில் டிஜிட்டல் எண்டெர்டெயிண்ட்மெண்டை அறிமுகப்படுத்த பணியாற்றி வருகிறது. அந்த நிறுவனம் இந்தியாவில் கமல்ஹாசன் ஒருவருடன் மட்டுமே இதுபோல ஒரு பார்ட்னர்ஷிப் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
• ஒரே ஆண்டில் 5 சில்வர்ஜூப்ளி திரைப்படங்களை அளித்தவர் கமல்ஹாசன் மட்டுமே. எந்த ஒரு நடிகராலும் இந்த சாதனையைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. அந்தப் படங்கள் : 1982 - ஜன. 26 - வாழ்வே மாயம் (200 நாள்), பிப். 19 - மூன்றாம் பிறை (329 நாள்), மே 15 - சனம் தேரி கஸம் (175 நாள்), ஆக. 14 - சகலகலா வல்லவன் (175 நாள்), அக். 29 - ஹே தோ கமல் ஹோகயா (175 நாள்)
• கமல்ஹாசன் நடித்த மரோசரித்திரா பெங்களூரின் கவிதா தியேட்டரில் 1000 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இதே படம் சென்னை சபையர் திரையரங்கில் 600 நாள் ஓடியது. மரோசரித்திரா இந்தியில் "ஏக் துஜே கலியே" என்ற பெயரில் எடுக்கப்பட்டு அங்கும் 350 நாள் ஓடியது.
• அகில இந்திய ரசிகர் மன்ற மாநாட்டினை இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு நடிகர் நடத்தியது என்றால் அந்தப் பெருமை கமல்ஹாசனையே சாரும். இவர் 1985ல் கோவையில் இந்த மாநாட்டினை நடத்தினார்.
• கமலுக்கு தனது பிறந்தநாளான நவம்பர் 7ஐ கொண்டாடுவதில் ஒரு சங்கடம் உண்டு. ஏனெனில் இதே தேதியில்தான் அவரது தந்தையார் மறைந்தார்.
• இவரது நூறாவது படமான ராஜபார்வையில் நடிக்கும்போது இவரது வயது 27.
• டைம்ஸ் பத்திரிகை இவர் நடித்த நாயகன் திரைப்படத்தை உலகின் சிறந்த 100 படங்களுக்குள் வகைப்படுத்தியிருக்கிறது.
• உடல்தானம் செய்த முதல் நடிகர் டாக்டர் கமல்ஹாசன் தான். சென்னை மருத்துவக்கல்லூரியில் ஆகஸ்டு 15, 2002 அன்று இதைச் செய்தார்.
• இந்தியத் திரைப்படங்களிலேயே முதன்முறையாக அனிமேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசனின் 100வது படமான ராஜபார்வையில் தான்.
• தமிழில் மார்பிங் தொழில்நுட்பம் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது கமல்ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜனில் தான்.
• ஹாலிவுட்டில் இருந்து மேக்கப் மேன் வரவழைத்து மேக்கப் போடப்பட்ட முதல் இந்தியப்படம் "இந்தியன்"
• கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முதன்முதலாக ஒரு இந்தியத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது என்றால் அது கமல்ஹாசன் நடித்த மங்கம்மா சபதம் திரைப்படத்தில் தான்.
• ஹாலிவுட் படமொன்றில் மேக்கப் அசிஸ்டண்டாகப் பணிபுரிந்து அந்தப் படத்தின் டைட்டிலிலும் கமல்ஹாசனின் பெயர் வந்திருக்கிறது.
• சென்னையில் முதன்முதலாக ஆயிரம் காட்சிகள் தொடர்ந்து அரங்குநிறைந்து ஓடிய படம் சகலகலா வல்லவன்.
• கொடைக்கானலில் இருக்கும் ஒரு குகையை கண்டுபிடித்து அதில் குணா படத்தின் படப்பிடிப்பை நடத்தியதால் அந்த குகைக்கே "குணா குகை" என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
• கமல்ஹாசனுக்கு இதுவரை 34 முறை படப்பிடிப்புகளில் எலும்புமுறிவு ஏற்பட்டிருக்கிறது. டூப் போட்டு கும்மி அடிக்கும் மற்ற நடிகர்களில் வித்தியாசமானவர் நம் கமல்.
• தமிழ் திரையுலக சகாப்தங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மூன்று பேருடனும் நடித்தவர் கமல்ஹாசன்.
வியாழன், 3 ஆகஸ்ட், 2017
ஜல்லிக்கட்டு அரசியலைப் பற்றிய படம்தான் 'மதுரவீரன்'..!’’ - இயக்குநர் பி.ஜி.முத்தையா அவர்களின் சிறப்பு பேட்டி
ஜல்லிக்கட்டு அரசியலைப் பற்றிய படம்தான் 'மதுரவீரன்'..!’’ - இயக்குநர் பி.ஜி.முத்தையா அவர்களின் சிறப்பு பேட்டி
*************
ஒளிப்பதிவாளராக இருந்து தமிழ் சினிமாவுக்கு இயக்குநர் அவதாரம் எடுத்திருப்பவர் பி.ஜி.முத்தையா. இவரது ஒளிப்பதிவில் 'பூ', 'கண்டேன் காதலை', 'சகுனி' என பல படங்கள் திரைக்கு வந்துள்ளன.
தற்போது இவர் இயக்கும் முதல் படமான 'மதுரவீரன்' படத்தை, விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியனை வைத்து எடுத்துக்கொண்டிருக்கிறார். இவர் ஏற்கெனவே 'சகாப்தம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜயகாந்த் வெளியிட்டார். இரண்டாம் கட்டப் படப்பிடிப்பைத் தொடங்க இருக்கும் இயக்குநர் பி.ஜி.முத்தையாவைப் படத்தின் அப்டேட்ஸ்காகத் தொடர்புகொண்டோம்.
''என்னுடைய ஒளிப்பதிவில் நிறைய படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், நான் யார் என்பதை நான் இயக்கும் படங்களின் மூலமாகவே இந்த உலகுக்குச் சொல்ல முடியும். அதனால்தான் நான் இயக்குநர் அவதாரம் எடுத்தேன். 'ஜல்லிக்கட்டு' போராட்டம் தமிழகமெங்கும் தொடங்குவதற்கு முன்பாகவே 'ஜல்லிக்கட்டு' பற்றிய இந்த ஸ்க்ரிப்ட்
நான் ரெடியாக எழுதி வைத்திருத்தேன். படத்தில் நடிக்க பல ஹீரோக்களிடம் கதை சொல்லியிருந்தேன். எல்லோருக்கும் பிடித்திருந்தது. ஆனால், கால்ஷீட் பிரச்னை காரணமாக இந்தப் படத்தில் அவர்களால் நடிக்க முடியவில்லை.
அப்போதுதான் இந்தக் கதை சண்முகபாண்டியனிடம் சென்றது. முதலில் இந்தக் கதையை பிரேமலதா கேட்டார். அவருக்குப் பிடித்திருந்தது. அடுத்த நாள் விஜயகாந்த், சண்முக பாண்டியன், பிரேமலதா மூவரும் ஒன்றாக அமர்ந்து கதை கேட்டார்கள். ஒரு இரண்டு மணிநேரம் ஸ்க்ரிப்ட் முழுவதையும் விஜயகாந்த் அமைதியாகக் கேட்டார். கதை கேட்டவுடன், கதையில் எந்தவொரு குறுக்கீடும் அவர் செய்யவில்லை. 'தம்பி உங்கள் படத்தில் நடிப்பார்' என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால் இந்தக் கதையில் நல்ல கம்பீரமான ஒருவர் நடித்தால் நன்றாகயிருக்கும் என்று நினைத்தேன். சண்முகபாண்டியன் நல்ல உயரமான மனிதர். தமிழ் சினிமாவில் சமீபத்தில் இவர் உயரத்துக்குச் சமமான மனிதர் யாரும் இல்லை. அவரது உயரம் 6.4.
இந்தப் படத்தில் ஜல்லிக்கட்டு பற்றிய ஒரு அரசியல் இருக்கும். ''அப்பனுக்குப் பிறகு பிள்ளை என்பது அரசியலில் வேண்டுமானால் ஒத்து வரலாம் தம்பி, அம்புட்டுக்கும் ஒத்து வராது'' என்று படத்தில் வசனம் வரும். ஆனா, இதற்கெல்லாம் விஜயகாந்த் எதுவும் சொல்லவில்லை. படத்தோட கதையை விஜயகாந்த்திடம் சொல்லப்போறேன்னு சொன்னபோது, கதையில் நிறைய குறுக்கீடு இருக்கும்னு நிறைய பேர் பயமுறுத்துனாங்க. ஆனால், அப்படியெல்லாம் எதுவும் அவர் செய்யவில்லை.
படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். மதுரையைச் சுற்றி படத்தோட படப்பிடிப்பு நடந்தது. தினமும் நூறு பேராவது வந்து உங்கள் அப்பா எங்களுக்குச் சொந்தக்காரர் என்று பேசுவார்கள். படப்பிடிப்பு நடக்கும்போதுகூட பக்கத்தில் இருக்கும் கோயில்கள், டீ கடையில் விஜயகாந்த் சார் நடித்த படங்களின் பாடல்களைத்தான் அந்த ஊர் மக்கள் போடுவார்கள். நாளை படத்தின் டீசரை 'சென்னை 28 ' டீம்
ட்விட்டரில் வெளியிடவுள்ளனர்’’ என்று முடித்தார் இயக்குநர் பி.ஜி.முத்தையா.
சாருகேசி இராகத்தில் அமைந்த்துள்ள தமிழ்த் திரையிசைப் பாடல்கள்.
சாருகேசி இராகத்தில் அமைந்த்துள்ள தமிழ்த் திரையிசைப் பாடல்கள்.
அந்தக் காலத்தில் அரிதாக ஒலித்துக் கொண்டிருந்த "சாருகேசி" ராகத்தில், ஜி.ராமநாதன் அமைத்த அழகான பாடல்தான் "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" (படம் ஹரிதாஸ்).
*ஜி.ராமநாதனது அபாரக் கற்பனையில் உதித்த இந்த மெட்டு கர்நாடக சங்கீததிற்கே ஒரு முன்னுதாரணமாக் இருந்தது.*
செம்மங்குடி ஸ்ரீநிவாஸ ஐயர் ராமநாதனை இந்தச் சங்கீதக் கொடைக்காக நேரே சென்று வாழ்த்தினாராம்.
ஸ்வாதித் திருநாளின் "க்ருபையா பாலய" செம்மங்குடி அவர்களின் மூலம் ப்கழ் பெற்றதற்குப் பெரிதும் காரணமாக அமைந்தது "மன்மத லீலையை வென்றார் உண்டோ" என்ற மெட்டே காரணமாகும்.
இதன் பின்னரே சாருகேசி ராகம் கர்நாடக இசையிலும், த்மிழ்த் திரையிசையிலும் பெரிதும் இடம் பெற ஆரம்பித்தது.
இந்த இராகத்தின் விபரங்கள் வருமாறு:-
இராகம்:சாருகேசி
26ஆவது மேளகர்த்தா இராகம்
ஆரோகணம்: ஸ ரி2 க3 ம1 ப த1 நி2 ஸ்
அவரோகணம்: ஸ நி2 த1 ப ம1 க3 ரி2 ஸ
மேலே உள்ள 26ஆவது மேளகர்த்தா ராகமாகிய இந்த சாருகேசி ராகத்தின் ஆரோகணத்தினையும், அவரோகணத்தி
னையும் கூர்ந்து பார்த்தால், பூர்வாங்கம் சங்கராபரணத்தினைப் போலவும், உத்தராங்கம் தோடியினைப் போலவும் இருப்பதனைக் கவனிக்கலாம்.
இப்போது சாருகேசி இராகத்தில் அமைந்த்துள்ள தமிழ்த் திரையிசைப் பாடல்களைப் பார்ப்போமா?
பாடல் - திரைப்படம்
01. ஆடல் கலையே தேவன் தந்தது - ஸ்ரீராகவேந்திரர்
02. ஆடல் காணீரோ - மதுரை வீரன்
03. அம்மா நீ சுமந்த பிள்ளை - அன்னை ஓர் ஆலயம்
04. அம்மம்மா தம்பி என்று - ராஜபார்ட் ரங்கதுரை
05. அரும்பாகி மொட்டாகி - எங்க ஊரு காவக்காரன்
06. சின்னத் தாயவள் - தளபதி
07. எங்கெங்கே எங்கெங்கே - நேருக்கு நேர்
08. காதலி காதலி - அவ்வை ஷண்முகி
09. மலரே குறிஞ்சி மலரே - Dr.சிவா
10. மணமாலையும் மஞ்சளும் - வாத்தியார் வீட்டுப் பிள்ளை
11. மன்மத லீலையை வென்றார் உண்டோ - ஹரிதாஸ்
12. மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா - அரங்கேற்றம்
13. மாறன் அவதாரம் - ராஜகுமாரி
14. மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் - நானே ராஜா நானே மந்திரி
15. மொட்டு விட்ட முல்லக் கொடி - அறுவடை நாள்
16. நடந்தாய் வாழி காவேரி - அகத்தியர்
17. நாடு பார்த்ததுண்டா - காமராஜ்
18. நடு ரோடு - எச்சில் இரவுகள்
19. நீயே கதி ஈஸ்வரி - அன்னையின் ஆணை
20. நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் - ராணி சம்யுக்தா
21. நோயற்றே வாழ்வே - வேலைக்காரி
22. ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன் - தேனிலவு
23. பெத்த மனசு - என்னப் பெத்த ராசா
24. ரத்தினகிரி வாழும் சத்தியமே - பாட்டும் பரதமும்
25. சக்கர கட்டி சக்கர கட்டி - உள்ளே வெளியே
26. செந்தூரப்பாண்டிக்கொரு ஜோடி - செந்தூரப்பாண்டி
27. சிறிய பறவை உலகை - அந்த ஒரு நிமிடம்
28. தூது செல்வதாரடி - சிங்கார வேலன்
29. தூங்காத கண்ணின்று ஒன்று - குங்குமம்
30. உன்னை நம்பி நெத்தியிலே - சிட்டுக்குருவி
31. உயிரே உயிரின் ஒலியே - என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
32 வசந்த முல்லைப் போலே வந்து - சாரங்கதாரா
ஜி.ராமநாதன் அமைத்து எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிப் பெரும் புகழ் பெற்ற "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" (படம் ஹரிதாஸ்) பாடலை முதலில் கேட்போம்.
"இந்தப் புறா ஆடவேண்டுமென்றால் இளவரசர் பாடவேண்டும்" என்ற புகழ்பெற்ற வசனத்துடன் துவங்கும் "வசந்தமுல்லைப் போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே" என்ற பாடல் சாருகேசியில் அமைந்த புகழ்பெற்ற பாடலாகும். இடம் பெற்ற படம் 1957ல் வந்த சிவாஜி கணேசன் நடித்த 'சாரங்கதாரா".
செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017
எஸ்.ஜானகி அம்மாவை கண்ணீர் விட வைத்த இசைஞானி இளையராஜா !
எஸ்.ஜானகி அம்மாவை கண்ணீர் விட வைத்த இசைஞானி இளையராஜா !
இசைஞானி இளையராஜா இசையில் பாடிக்கொண்டிருந்த
எஸ்.ஜானகி அம்மா திடீரென பாட முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். இசைக்குழுவினர் திகைத்துப் போனார்கள்.
இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-
காரைக்குடி நாராயணன் கதை வசனம் எழுதிய படங்கள் அப்போது நன்றாக ஓடிக்கொண்டிருந்தன. இதனால் அவரே ஒரு படம் தயாரிக்க முன்வந்தார். படத்துக்கு "அச்சாணி'' என்று பெயர் வைத்தார். படத்துக்கு இசையமைக்க என்னைக் கேட்டுக்கொண்டார்.
கதை சொன்னார். எனக்குப் பிடித்திருந்தது. பூஜையன்றே பாடல் பதிவு.
பாடல்களை கவிஞர் வாலி எழுதினார். கம்போசிங்கும் நடந்து முடிந்தது. இதில் "மாதா உன் கோவிலில் மணித்தீபம் ஏற்றினேன்'' என்ற பாடல், படத்தின் அச்சாணி போல. ஆனால் பூஜைக்கு முதல் பாடலாக வேறு பாடலை தேர்வு செய்திருந்தேன். பிரசாத் ஸ்டூடியோவில் பூஜை என்று முடிவானது. பூஜை தினத்தில் சவுண்டு என்ஜினீயர் எஸ்.பி.ராமநாதன் ஒரு சிறிய தவறு செய்ய, அது குழப்பமாகி பூஜையன்று எல்லாருக்குமே டென்ஷன்.
எங்களுக்கு கொடுத்த பூஜை தினத்திலேயே உபேந்திரகுமார் என்ற கன்னட இசையமைப்பாளருக்கும் பூஜை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார். அதாவது இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில். பூஜைக்காக காலை 7 மணிக்கு பிரசாத் ஸ்டூடியோ போனால் அங்கே வேறு ஆர்க்கெஸ்ட்ரா (இசைக்குழு) இருந்தது. "இதென்ன! இவர்கள் எங்கள் ரெக்கார்டிங்கில் வாசிப்பவர்கள் இல்லையே?'' என்று கேட்டால், அப்புறம்தான் உண்மை தெரிந்தது.
எஸ்.பி.ராமநாதன் இரண்டு பூஜைகளுக்கும் ஸ்டூடியோவை கொடுத்து இருப்பது! ஞாபக மறதியாலோ அல்லது காலை 10 மணிக்குள் ஒரு பாடலை யாராவது முடித்து விட்டால், அடுத்த பாடலை மதியம் ஒரு மணிக்குள் எடுத்து விடலாமே என்று அவரே ஒரு தப்புக்கணக்குப் போட்டிருந்தாரோ என்னவோ தெரியவில்லை.
இப்போது யார் ரெக்கார்டிங் வைத்துக் கொள்வது என்று நான் எஸ்.பி.ராமநாதனைக் கேட்க, அவர் சமாளித்துப் பார்த்தார். பதில் சொல்ல முடியவில்லை.
இதற்குள் நேரம் மதியம் ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. இதே நேரம் பிரசாத் ஸ்டூடியோவில் நடந்த 'ரெக்கார்டிங்' முடிந்து எல்லாரும் போய்விட்டார்கள். அங்கே மாலையில் வேறு ரெக்கார்டிங் இல்லாததால் 2 மணிக்கு மறுபடியுமாக அங்கேயே போனோம். ஆர்க்கெஸ்ட்ரா தயாரானது.
ஜானகி வந்தார். 'மாதா உன் கோவிலில்' பாடலையே எடுத்துவிட, ஒத்திகை பார்த்து 'டேக்' போகலாம் என்று தொடங்கினோம். இரண்டு மூன்று டேக் சரியாக வரவில்லை. நானோ இந்தப்பாடல் முடிந்து இன்னும் ஒரு பாடல் எடுக்க வேண்டும் என்ற டென்ஷனில் இருந்தேன்.
இந்தப் பாடலை எடுத்துக் கொண்டிருக்கும்போதே நிறைய சங்கதிகள் கற்பனையில் வர, ஜானகியிடம் அவ்வப்போது சென்று மாற்றிக்கொண்டே இருந்தேன். ஒரு டேக் நன்றாக வந்து கொண்டிருந்தது. அடுத்து மூன்றாவது பின்னணி இசை சேர்ப்பு தொடங்கவேண்டும். ஆனால் யாரும் வாசிக்கவில்லை. காரணம், 'கண்டக்ட்' செய்த கோவர்த்தன் சார் கைகாட்ட மறந்துவிட்டார்.
எனக்கு கோபம். "என்னண்ணே! டேக் நன்றாக வந்து கொண்டிருக்கிறது. பேக்ரவுண்டு மியூசிக்கிற்கு ஏன் கை காட்டவில்லை?'' என்று கேட்டேன். அவரோ, "பாட்டில் மெய் மறந்துட்டேன்யா'' என்றார், கூலாக. எனக்கோ, அடடா! இவ்வளவு ஒன்றிய நிலையில் கண்டக்ட் செய்பவரை திட்டிவிட்டோமே என்று வருத்தம் ஆனது.
அடுத்த டேக். மூன்றாவது சரணத்தில் ஜானகி பாடும்போது,
"பிள்ளை பெறாத பெண்மை தாயானது
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது''
- என்ற வார்த்தைகளை அழகாகப் பாடியவர் அதற்கப்புறம் தொடர்ந்து பாடாமல் விட்டு விட்டார். "ஐயோ நன்றாக இருந்ததே! ஏன் அடுத்த அடியை விட்டு விட்டீர்கள்?'' என்று ஜானகியை கேட்டேன். ஆர்க்கெஸ்ட்ராவிலோ யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.
பொதுவாக 'டேக்' கட் ஆனாலே "பேன் போடு'' என்று சத்தம் போடுபவர்கள், சத்தமே இல்லாமல் இருக்கிறார்களே என்று பார்த்தால், கோவர்த்தன் சார் 'வாய்ஸ் ரூமை' கைகாட்டி ஏதோ சொன்னார். என்னவென்று புரியாமல் 'வாய்ஸ் ரூமை' பார்த்தால், கண்ணாடி வழியே ஜானகி கர்ச்சிப்பால் கண்களை துடைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
விஷயம் என்னவென்று பார்த்தால், ஜானகி இப்படிச் சொன்னார்: "டியூனும் வார்த்தையும் கலந்து 'பாவத்தில்' ஏதோ ஒன்றை உணர்த்திவிட, அழுகை வந்துவிட்டது. அழுகையோடு பாடவும் முடியாமல், அழுகையை நிறுத்தவும் முடியாமல் விட்டுவிட்டேன்.'' ஜானகி இப்படிச் சொல்லி முடித்ததும் எல்லாரும் உருகி விட்டார்கள்.
https://www.youtube.com/watch?v=ZU44WTr0aeo
மாதா உன் கோவிலில்
மணிதீபம் ஏற்றினேன்
தாய் என்று உன்னைத் தான்
மாதா உன் கோவிலில்
மணிதீபம் ஏற்றினேன்
தாய் என்று உன்னைத் தான்
தாய் என்று உன்னைத் தான்
பிள்ளைக்குக் காட்டினேன் மாதா
மாதா உன் கோவிலில்
மணிதீபம் ஏற்றினேன்
மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே
மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே
மேரி உன் ஜோதி கொண்டால் விதிமாறுமே
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா - மாதா
மாதா உன் கோவிலில்
மணிதீபம் ஏற்றினேன்
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
கரை கண்டிலாத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை மணியோசை கேட்குமோ - மாதா
பிள்ளை பெறாத பெண்மை தாயானது
பிள்ளை பெறாத பெண்மை தாயானது
அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது - மாதா
மாதா உன் கோவிலில்
மணிதீபம் ஏற்றினேன் .
ருத்ரையா இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த படம் `அவள் அப்படித்தான்.' இதில் என் இசையில் கமல் ஒரு பாட்டு பாடியிருப்பார். கமல் அப்போது மலையாளப்படம் ஒன்றில் நடித்து வந்தார்.
ரெக்கார்டிங்கின்போது ஸ்டூடியோவுக்கு வந்தார். பாடலை பாடிக்காட்டினேன். கேட்டு அவரும் பாடிப்பார்த்தார். நன்றாக வந்தது. அப்படியே பாடவைத்து ரெக்கார்டு செய்து விட்டோம். அது `பன்னீர் புஷ்பங்களே' என்ற பாடல். அமர் (கங்கை அமரன்) எழுதியது.
கோவையில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் இந்தப் பாடலுக்கான மெட்டு உதயமானது.
அந்த விழா மேடையில் பஞ்சு சாரும், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சாரும் மேடையிலேயே வந்து பாடலுக்கான `சிச்சுவேஷன்' சொல்ல, மேடையிலேயே கம்போஸ் செய்து ஆர்க்கெஸ்ட்ராவோடு பாடியது.
அந்தப் பாடலுக்கு வேறு வார்த்தைகளை போட்டு அமர் எழுதியதுதான் `பன்னீர் புஷ்பங்களே' பாட்டு.
இந்தப் பாடலை கமல் பாடி முடித்து ரொம்ப நாள் கழித்துத்தான் அதில் இருந்த தவறு ஒன்று எனக்குத் தெரிந்தது.
கமல் `பன்னீர் புஷ்பங்களே' என்ற வார்த்தையை `பன்னீர் புஷ்பங்ஙளே' என்று பாடிவிட்டார். இதுபற்றி அவர் கூறும்போது, "அப்போது மலையாளப் படத்தில் நடித்து வந்ததால் தமிழை மலையாளம் போல பாடிவிட்டேன்'' என்றார்.
ஒருநாள் டைரக்டர் ஸ்ரீதர் என்னைப் பார்க்க வந்தார்.
யார் மேல் எங்களுக்கு பிரியம் அதிகமோ, யாரை நாங்கள் ஹீரோவாக நினைத்தோமோ, யாரை `தென்னாட்டு சாந்தாராம்' என்று மக்கள் அழைத்தார்களோ, அந்த ஸ்ரீதர் என்னைப் பார்க்க வந்ததில் அளவு கடந்த மகிழ்ச்சி எனக்கு.
ஸ்ரீதர் சார் இயக்கிய 48 படங்களுக்கு மேல் அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருக்கிறார். ஒரு படத்தில் கூட அவர் இசையமைத்த பாடல் சோடை என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட அவரையே விட்டு விட்டு, ஸ்ரீதர் சார் நம்மிடம் வருகிறாரே, இதுதான் சினிமா உலகமா? இவரும் சாதாரண சினிமாக்காரர்தானா? இந்த சினிமா உலகம் நாளைக்கு இதுபோல் தான் நம்மையும் விட்டு விடுமோ என்ற எண்ணமும் ஒரு கணம் மனதில் ஓடியது.
ஸ்ரீதர் தனது படத்துக்கு "இளமை ஊஞ்சலாடுகிறது'' என்று பெயர் வைத்திருந்தார்.
அப்போது காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரு படத்தின் பின்னணி இசை வேலை நடந்து கொண்டிருந்தது. அதனால் கம்போசிங் காலை 7 மணியில் இருந்து 9 மணி வரைக்கும், இரவு 10 மணியில் இருந்து விடியும் வரைக்கும் நடந்தது.
"ஒரே நாள் உனை நான்நிலாவில் பார்த்தது''
- என்ற பாடல் படத்தின் "தீம் ஸாங்.''
"நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா?'' என்ற இரண்டு பாடல்களையும் முதலில் பதிவு செய்தோம்.
மூன்றாவதாக "தண்ணி கருத்திருச்சு'' என்ற கிராமியப்பாடல் வார்த்தையை வைத்து இசையமைத்தேன். தொடக்கம் மட்டும் அதை வைத்துக்கொண்டு மற்ற வரிகளை கவிஞர் வாலி மாற்றிவிட்டார்.
இந்தப் பாடலை யாரைப் பாட வைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தபோது, சட்டென ஜி.கே.வெங்கடேஷ் நினைவுக்கு வந்தார். அவரையே பாட வைக்கலாம் என முடிவு செய்தோம்.
அடுத்த நாள் ஏவி.எம்.மில் ரெக்கார்டிங்.
ஜி.கே.வி. பாடலை கற்றுக்கொண்டார். டைரக்டர் ஸ்ரீதர், உதவி டைரக்டர்கள் கோபு, வாசு, சந்தானபாரதி என எல்லோரும் இருந்தார்கள். பல ஒத்திகைகள் நடந்தது. பாடுவதற்கு மைக் முன்னால் போனால், ஒரு அடி பாட, அடுத்த அடியின் டிïன் மறந்து போகும். மறுபடி நினைவுபடுத்திப்பாட, இரண்டாவது ரிகர்சலில் வேறு ஒரு இடத்தில் மறந்து போகும்.
இப்படியே பஸ் ஒவ்வொரு அடி நகரும்போதும் பிரேக் போட்டு பிரேக் போட்டு போவது போல ஆயிற்று. அங்கேயே நின்று கொண்டிருந்தது பாட்டு.
"சரி டேக்கில் வந்து விடும். டேக்கில் `ட்ரை' பண்ணலாம்யா'' என்று கோவர்த்தன் சார் சொல்ல, டேக் தொடங்கினோம். அது பல்லவியோடு கட் ஆகிவிட்டது!
இப்படியே ஒரு லைன் - பாதி வரி - அடுத்த லைன் - இன் னொரு பாதி வரி என்று 62 டேக்குகளுக்கும் மேலாகிவிட்டது. மணியோ மதியம் இரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது.
மதியம் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணன் ரெக்கார்டிங். அவர் வேறு வந்துவிட்டார். வந்தவர் ஜி.கே.வி. பாடுவதைக் கேட்டு, "டேய் வெங்கடேசா! நல்லாப் பாடுடா!'' என்று தான் வந்திருக்கிறதையும் அறிவித்து உற்சாகப்படுத்தவும் செய்தார்.
ஜி.கே.வி. இன்னும் டென்ஷனாகி விட்டார். `டேக்' தொடக்கத்தில் ஏற்கனவே அவருக்கு டென்ஷன்.
அப்போது டைரக்டர் ஸ்ரீதர், "இவ்வளவு கஷ்டமாக இருந் தால் இந்தப் பாடல் எதற்கு? வேண்டாம், ராஜா! கேன்சல் செய்து விடுவோம். வேறு டிïன் போட்டுக் கொள்ளலாம்'' என்றார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)