2.0 திரைப்படத்திலும் ஐஸ்வர்யா ராய்
இயக்குனர் சங்கர், நடிகர் ரஜினியின் கூட்டணியின் விரைவில் வெளியாக இருக்கும் பிரமாண்ட திரைப்படம் 2.0. இதன் படப்பிடிப்புகள் அனைத்தும் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், கிராபிக்ஸ் காட்சிப் பணிகள் இன்னும் முடியாத காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் நாயகியாக எமி ஜாக்சன் நடித்திருக்கிறார். என்றாலும் சமீபத்தில் வெளிவந்திருக்கும் தகவலின் படி, நடிகை ஐஸ்வர்யா ராயும் ஒரு சில நிமிடங்கள் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது.
ஆரம்பத்தில் 2.0 எந்திரன் திரைப்படத்தின் தொடர்ச்சி இல்லை என படக்குழுவினராலேயே கூறப்பட்டு வந்தது. என்றாலும் சமீபத்தில் எதிர்பாராதவிதமாக லீக் ஆன அப்படத்தின் டீசரில், எந்திரன் படத்தில் இடம் பெற்றிருந்த டாக்டர் வசீகரன், சிட்டி போன்ற கதாப்பாத்திரங்கள் இடம் பெற்றிருப்பதை பார்க்க முடிந்தது.
இதன் படியே நடிகை ஐஸ்வர்யா ராயின் சானா கதாபாத்திரத்தையும் 2.0 திரைப்படத்தில் எதிர்பார்க்கலாம் என்பதனை உறுதிப் படுத்தியிருக்கிறது இந்த தகவல். என்றாலும் 2.0 படத்திற்காக ஐஸ்வர்யா நடித்திருந்தாரா அல்லது எந்திரன் படத்தின் போது எடுக்கப் பட்ட காட்சிகள்தான் இடம் பெற்றுள்ளதா என்பது குறித்து தெரியவில்லை. Thanks Viralulagam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக