எம்.ஜி.ஆர் முதல்வரான சமயம் ' உன்னை விட மாட்டேன் ' என்ற படத்தில்
இசையமைக்கும் பொறுப்பு இளைய ராஜாவுக்குத் தரப்பட்டது.
between the cup and the lips...!
எம்.ஜி.ஆர் முதல்வரான சமயம்
' உன்னை விட மாட்டேன் ' என்ற படத்தில்
அவர் நடிப்பதற்காகப் பூஜை போடப்
பட்டது.
இசையமைக்கும் பொறுப்பு இளைய
ராஜாவுக்குத் தரப்பட்டது. பாடலை வாலி
எழுதி டி.எம்.எஸ்ஸைப் பாடவைத்து,பதிவு
செய்யப்பட்டது.
கேசட்டில் அனுப்பப் பட்ட பாடலைக்
கேட்ட எம்.ஜி.ஆர், ' இது ராஜா பாடினது
போல் இல்லை ' என்று கூற...இன்னொரு
முறை, டி.எம்.எஸ் குரலில் பதிவு செய்து
அனுப்பினார் ராஜா.
அதிலும் அவருக்குத் திருப்தியில்லை.
" வேற வாய்ஸை வைத்து ரெக்கார்ட்
பண்ணு " என உத்திரவு போட்டுவிட்டார்.
அவர் பேச்சை யார் மீற முடியும். பிறகு
மலேசியா வாசுதேவனைப் பாட வைத்து
போட்டுக் காட்டினார்.
' இதுவும் நீ பாடியது போல் இல்லை.
பேசாமல் நீயே பாடி விடு ' என்றார்.
எம்.ஜி.ஆருக்கு நான் பாடுவதா என்று
ஓரே குழப்பமும் தயக்கமும்...ராஜாவுக்கு.
" அண்ணா உங்களுக்கு நான் பாடுறது
நல்லா இருக்காதுண்ணா " என்றேன்.
" இல்லே நீ பாடு நான் பார்த்துக்கறேன் "
என்று கூறி எம்.ஜி.ஆர் என்னையே பாட
வைத்தார்.
பிறகு என்ன நடந்ததோ அந்தப் படமே
நிறுத்தப் பட்டுவிட்டது.அந்த வாய்ப்பு
பூஜையோடு நின்று விட்டது.
தனக்கு ராஜா பாடவேண்டும் என்ற
எம்.ஜி.ஆரின் விருப்பமும், எம்.ஜி.ஆர்
படத்துக்கு ராஜா இசையமைக்கும்
வாய்ப்பும் தவறிப் போனது துரதிர்ஷ்ட
மானது என்று தான் சொல்லவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக