பத்மாவத்' படத்தில் நடித்த ரன்வீர்சிங்குக்கு தாதா சாகேப் விருது
கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி இந்தியா முழுவதும் சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் பத்மாவத். இந்த படத்தில் அலாவுதீன் கில்ஜி வேடத்தில் நடித்த ரன்வீர் சிங் சிறந்த நடிப்புக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.
பத்மாவதி படத்தில் பத்மாவதியை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறியுடன் சித்தூர் நாட்டின் மீது படை எடுத்த மொகலாய மன்னர் அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரத்தில் ரன்வீர் கபூர் மிக பிரமாதமாக நடித்திருந்தார். அவர் தனது கலக்கலான நடிப்பாலும் கொடூரமான வில்லத்தனத்தாலும் ரசிகர்களை மிரட்டியிருந்தார்.
இந்த நிலையில், பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜி வேடத்தில் நடித்த ரன்வீர் சிங் சிறந்த நடிப்புக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார். இதுகுறித்து தாதா சாகேப் பால்கே விருது கமிட்டி அவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
பத்மாவத் படத்தில் மிகச்சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்திய நீங்கள் 2018-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி Cinereporters
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக