தமிழ்த் திரையுலக "பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்.
தமிழ் திரைப்படங்களில் காதலைப் போலவே நட்பும் முக்கிய அம்சமாகும். கட்டாயமாக ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் நண்பர்கள் மற்றும் தோழிகள் இருப்பார்கள். நட்புக்காக உயிரைக் கூட விடக் கூடிய அளவிற்கு அவர்களது நட்பு இருக்கும்.
இதேபோல், சில தமிழ் படங்களில் ஆண் - பெண் நட்பும் அழகாக காட்டப் பட்டிருக்கும். ஆணும், பெண்ணும் பழகிக் கொண்டாலே அது காதலாகத் தான் மாறும் என்ற கருத்தை உடைத்து, ‘ஆணும் பெண்ணும் காதலில்லாமல் பழகிக்கலாம், அது காலம் முழுதும் களங்கப் படாமல் காத்துக்கலாம்' என காட்டிய படங்களும் உண்டு.
அந்த வகையில் நண்பர்கள் தினமான இன்று அத்தகைய படங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
பாலைவனச் சோலை
ரொம்பப் பழைய படம் என்று ஒதுக்கி விட முடியாத அற்புதமான நட்புப் படம் இது. எப்படி பழைய சோறுக்கு மகத்துவம் அதிகமோ இந்தப் படத்திலும் ஆண், பெண் நட்பு அவ்வளவு சத்தாக இருக்கும். வேலையில்லாத வாலிபப் பசங்க மத்தியில் ஒரு பெண் எப்படி நட்போடு பழக முடியும், நலமாக இருக்க முடியும் என்பதை காவியமாக காட்டிய படம் இது.
ஆட்டோகிராப்...
‘கிழக்கே பார்த்தேன் விடியலாய் தெரிந்தாய் அன்புத் தோழி' என தங்களது நட்பின் ஆழத்தைப் பாடல் வரிகளிலேயே அழகாகக் காட்டி இருப்பார் செரன். இந்தப் படத்தில் சேரன், சினேகா நட்பு அழகாக காட்டப் பட்டிருக்கும்.
புதிய பாதை போட்ட படம்
பாலைவனச்சோலை புதிய பாதை போட்ட படமும் கூட. நட்புப் படங்களுக்கு டிரெண்ட் செட்டர். சுஹாசினி, சந்திரசேகர், தியாகு, ஜனகராஜ், ராஜீவ் என ரகளையான நடிகர்கள் இதில் உண்மையான நண்பர்களாக மாறிப் போயிருப்பார்கள் நடிப்பில். ஜனகராஜுக்கு இதுதான் முதல் படமும் கூட.
அழகான பக்கங்கள்...
ஆண் -பெண் நட்பின் அழகான பக்கங்கள் இந்தப் படத்தில் விரிவாக பேசப்பட்டது. ஒரு ஆணும், பெண்ணும் நெருங்கிப் பழகினால் நிச்சயம் அது காதலில் தான் முடிய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதை அழகாக விளக்கியிருப்பார் சேரன்.
காதல் தேசம்...
இதேபோல், காதல் தேசம் படத்தில் நாயகிக்கு இரண்டு ஆண் நண்பர்கள். இருவருமே நாயகியை விழுந்து, விழுந்து காதலிப்பார்கள். ஆனால், நாயகியோ நண்பர்களில் ஒருவரை காதலராக்கி, மற்றொருவரைக் காயப்படுத்த விரும்பாமல் வாழ்நாள் முழுவதும் நாம் நண்பர்களாகவே இருப்போம் என வித்தியாசமான முடிவை எடுப்பார்.
புது வசந்தம்:
விக்ரமன் இயக்கிய இப்படத்தில் காதலனைத் தேடி வரும் நாயகிக்கு நண்பர்கள் சிலர் அடைக்கலம் கொடுப்பார்கள். ஒரு இரவு மற்றொரு ஆணுடன் தங்கினாலே தவறாகப் பார்க்கப் படும் சமுதாயத்தில் பல ஆண்களுடன் சேர்ந்து தங்குயிருக்கும் நாயகியை அனைவரும் ஏளனமாகப் பேசுவார்கள்.
காதல் தியாகம்...
நாயகியின் காதலனும் இதே காரணத்தால் அவரைச் சந்தேகப் படுவார். ஆனால், இவர்கள் அனைவருக்கும் தங்களது நட்பு மூலம் பதில் சொல்வார் நாயகி. நாயகியை அவரது காதலருடன் சேர்த்து வைக்க நண்பர்கள் படும் பாடும், நண்பர்களை வாழ்க்கையில் முன்னேறச் செய்ய காதலைத் தியாகம் செய்யும் காதலி என அழகிய கவிதையாக வெளியான இப்படம் வெற்றிப்படமாக நடைபோட்டது.
பிரியாத வரம் வேண்டும்...
இதுவும் நட்பை வித்தியாசமாகச் சொன்ன படங்களில் ஒன்று. சிறுவயது முதல் பழகி வரும் இருவர், வெவ்வேறு நபர்களைக் காதலிப்பர். பின்னர் தங்களது நட்பில் இருந்த காதலை அவர்கள் அடையாளம் காண்பர்.
பிரியமான தோழி...
மாதவன், ஜோதிகா நடித்திருந்த இப்படத்தில், மாதவனின் நெருங்கிய தோழியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். இவர்களது நட்பை மாதவனின் மனைவியான ஜோதிகாவும் புரிந்து கொள்வார். இப்படத்தில் தனது தோழிக்காக தனது எதிர்காலம், லட்சியம் ஆகியவற்றைத் தியாகம் செய்வார் மாதவன்.
பாண்டவர் பூமி...
இப்படத்தில் அருண்குமார் நாயகியைக் காதலித்தாலும், தன் தாய்மாமனைத் திருமணம் செய்து கொள்ள காத்திருக்கும் நாயகி அவருடன் நட்புடனே இருப்பார். தோழா, தோழா என்ற பிரபலப் பாடம் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக