பகல் நிலவு -வைதேகி ராமன்...
பாடல் : வைதேகி ராமன்
படம் : பகல் நிலவு
இந்த வைதேகி ராமன் கைசேரும் சோபன நிகழ்வை பகல் நிலவு படத்தில் வரும் ஒரு பாடல் சித்தரிக்கிறது. படம் வெளியான ஆண்டு 1985. படத்தை இயக்கியவரோ பிரபல டைரக்டர் மணிரத்னம். அவரை ஒரு நல்ல டைரக்டர் என இனம் காண்பித்த படம் இது.
சரத்பாபு ராதிகாவிடம் சலங்கையைக் காட்டி இது சலங்கை அல்ல; இதுவே மாங்கல்யம் என்கிறார். அதைக் காலில் கட்டிக் கொண்டு ராதிகா நடனமாடுகிறார். ஒரு அபிநயத்துடன் கூடிய பாடலாக இது மலர்கிறது. இசை அமைத்தவர் இளையராஜா. பாடலைப் பாடியவர் எஸ்.ஜானகி. பாடலை இயற்றியவர் கங்கை அமரன். நல்ல கூட்டணி தானே இது!
கோவில் பிரகார மண்டபத்தில் பிரதானமாக ராதிகா நடனமாடும் காட்சியமைப்பில் அவர் மிகவும் கஷ்டப்பட்டு பரதநாட்டியக் கலையைக் கற்றுக் கொண்டு ஆடிக் காட்டுவதைப் படத்தில் பார்க்கலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக