வெள்ளி, 14 டிசம்பர், 2018

இளையராஜா ராயல்டி பஞ்சாயத்தை முழுவதுமாக கேட்டு முடித்தேன்.

அதன் பின்புலம் பின்வருமாறு:

1969ல் ஐ.பி.ஆர்.எஸ் எனும் அமைப்பு துவங்கபடுகிறது. கலைஞர்களின் படைப்புக்கு லைசென்ஸ் பெற்றுதருவதும், அதன்பின் ராயல்டி பெற்றுதருவதும் அதன் நோக்கம். ஒரு சினிமா பாட்டு வானொலி, தொலைகாட்சிகளில் ஒளிபரப்பானால் அதற்கு இந்த அமைப்புக்கு ராயல்டி செலுத்த வேண்டும்.  அந்த தொகை இசையமைப்பாளர், பாடகர், இசைதட்டு உரிமை பெற்றுள்ளவர் (பட தயாரிப்பாளர்) என பலருக்கும் செல்லும். ஆர்கெஸ்ட்ரா குழுக்களும் இவர்களுக்கு எல்லா பாடல்களுக்கும் ராயல்டி கட்டணம் செலுத்தவேண்டும்

ஆக இளையராஜா ஏதும் புதுசாக ராயல்டி கேட்கவில்லை. ஏற்கனவே எல்லாரும் 1969ல் இருந்து கொடுத்துவருவதுதான். அவரும் வாங்கிவருவதுதான். அவர் மட்டுமல்ல ஏ.ஆர்.ரஹ்மான், சந்திரபோஸ், எம்.எஸ்.வி, வடநாட்டு பப்பிலகிரி எல்லாருமே வாங்கிவருவதுதான்.

இதில் ஏன் திடீர் என பிரச்சனை முளைத்தது?

இந்த ஐ.பி.ஆர்.ஏஸ் அமைப்பு ஒட்டுமொத்த இந்தியாவுக்குமானது. அதன் தலைவர் ஜாவேத் அக்தர். அதில் வட இந்தியர்கள் ஆதிக்கம் அதிகம். அவர்கள் வடநாட்டு பாடகர்கள், இசையமைப்பாளர்கள் விசயத்தில் கண்ணும், கருத்துமாக இருந்து  ராய்லடியை வாங்கி கொடுப்பதால் ஒரே ஒரு ஹிட் கொடுக்கும் இந்தி இசையமைப்பாளர்களும் ஆயுள் முழுக்க நல்ல லாபத்தொகையை சம்பாதிக்கிறார்கள். ஆனால் இத்தனை ஆயிரம் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்தும் இளையராஜாவுக்கு பெரிதாக எந்த தொகையும் வரவில்லை.

அவருக்கு என இல்லை. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என எல்லா தென்னிந்திய மொழி இசையமைப்பாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் இதுதான் நிலை. அவர்கள் யாரும் வாயை திறந்து எதிர்க்குரல் கொடுக்காமல் கொடுப்பதை வாங்கிக்கொள்வோம் எனத்தான் இருந்து வருகிறார்கள். இளையராஜா மட்டும் தான் எதிர்க்குரல் கொடுத்து, நியாயம் கேட்டு, கிடைக்காமல் வெளியே வந்தார்

வெளியே வந்து தமிழ் இசைக்கலைஞர்கள் சங்கத்துடன் ஒப்பந்தம் போட்டு வரும் ராயல்டியில் 20% தொகை அவர்களுக்கு என்றும், 80% தனக்கு என்றும் முடிவெடுத்துள்ளார். இந்த சங்கத்தில் 1500 பேர் இருக்கிரார்கள். புல்லாங்குழல், வீனை, சிதார், வயலின் என பிண்னனி இசை வாசிக்கும் நலிந்த கலைஞர்கள் இவர்கள். இளையராஜாவுடன் பணியாற்றிய 600 பேர் இதில் இருக்கிறார்கள். இதுநாள் வரை இந்த ராயல்டியில் அவர்களுக்கு பங்கு இருந்ததே இல்லை. எந்த இசையமைப்பாளரும், ஐ.பி.ஆர்.எஸ் அமைப்பும் இவர்களுக்கு பத்து பைசாவையும் கொடுத்ததில்லை. இளையராஜா கொடுக்கும் இப்பணத்தால் இவர்களுக்கு மாதாமாதம் பல லட்சம் சேரும். மருத்துவ செலவு, கல்வி செலவு என பல செலவுகளுக்கு அது உதவும்.

பாட்டுக்கு எப்படி இளையராஜா உரிமை கோரமுடியும்? அவர் தான் பாட்டை விற்றுவிட்டாரே?பணம் போட்ட தயாரிப்பாளருக்கு அதில் பங்கு வேண்டாமா?

தயாரிப்பாளர் தன் படத்துக்காக இசையமைக்கப்ட்டு, எஸ்.பி.பி சித்ரா பாடிய பாடலுக்கு முழு உரிமையும் கொண்டவர் ஆகிறார். அதை படத்தில் பயன்படுத்தி, இசைத்தட்டு வெளியிட முழு உரிமையும் அவருக்கு உண்டு. ஆடியோ ரைட்ஸை அவர்கள் பெரும்பாலும் விற்றுவிடுகிறார்கள். அப்படி வாங்கும் கம்பனிகள் அந்த பாடல்கள் ரேடியோ, தொலைகாட்சியில் ஒலிபரப்பாகையில் ராயல்டி தொகையை ஐ.பி.ஆர்.எஸ் அமைப்பிடம் இருந்து பெறுகிறார்கள்.

ஆனால் இளையராஜா பயன்படுத்திய மெட்ட்டை வைத்து அதே பாடலை ஒரு ஆர்கெஸ்ட்ரா குழு நடத்துகிறது எனில் அந்த மெட்டை பயன்படுத்த அவர்கள் இளையராஜாவுக்கு தொகை கொடுக்கவேண்டும். தயாரிப்பாளருக்கு அதில் எந்த உரிமையும் கிடையாது. இசைத்தட்டில் உள்ள பாட்டை சன் டிவி போட்டால் காசு வேண்டும் என அவர் கேட்கலாமே ஒழிய இளையராஜாவின் மெட்டை பயன்படுத்த தயாரிப்பாலருக்கு ஏன் காசு தரவேண்டும்?

அதேபோலத்தான் அந்த பாடலை பாடிய எஸ்.பி.பி, சித்ரா ஆகியொருக்கும் ஆர்கெஸ்ட்ராகாரர்கள் பணம் தரவேண்டியது இல்லை. ஏனெனில் அந்த பாடலை ஆர்கெஸ்ட்ரா கலைஞர்கள் தானே பாடுகிறார்கள்?

சரி..பாட்டை எழுதிய வைரமுத்து, வாலிக்கு பங்கு வேண்டாமா?

அவர்களுக்கு ஐ.பி.ஆர்.எஸ்சில் இருந்து பணம் போய்க்கொண்டு தான் இருக்கிறது. இளையராஜா அதில் இருந்து பிரிந்து வந்து "எனக்கு கொடுக்கவேண்டிய பணத்தை நெரடியாக கொடு. ஐ.பி.ஆர்.எஸுக்கு கொடுப்பதை வழக்கம் போல கொடு" என கேட்கிறார். வைரமுத்து, வாலிக்கு வரவேன்டிய பணத்தை அவர்கள் தான் ஐ.பி.ஆர்,எஸ்ஸை நெருக்கி கேட்கவேன்டும். இளையராஜா எப்படி அவர்களுக்கு பணம் கொடு என ஆர்கெஸ்ட்ராகாரர்களிடம் கேட்கமுடியும்? அவர் என்ன வசூல் மன்னரா? இல்லை கலெக்சன் ஏஜண்டா? அதை ஐ.பி.ஆர்.எஸ் தான் வாங்கவேண்டும்.

மற்றபடி:

இதைப்பற்றி விடியோவில் பேசுகையில் கோபத்துடன் இளையராஜா பேசியதுதான் பலரையும் எதோ இத்தனை நாள் இல்லாத வழக்கத்தை இவர் உருவாக்கியுள்லார் என நினைக்க வைத்து, எரிச்சலடைய வைக்கிறது. உண்மையில் இதை இவர் செய்வது மிக, மிக நல்ல விசயம். தமிழ் கலைஞர்களின் உரிமைக்கு ஒரு 75 வயது முதிய கலைஞர் நடத்தும் போராட்டம். அவரது உதாரனத்தை பின்பற்றினால் வருமானம் இல்லாமல் நொடித்த நிலையில் இருக்கும் பல இசையமைப்பாளர்கள் பலன் பெறுவார்கள்.

பணம் வாங்காமல் நடத்தும் இசைகச்சேரி, பிறந்தநாள், கல்யானநாள், கோயில் திருவிழா...இதுக்கு எல்லாம் ராயல்டி வேண்டாம் என இளையராஜா தெளிவாக அறிவித்து உள்லார். பணம் வசூலித்து மிகபெரிய அளவில் நடத்தும், வெளிநாட்டு கச்சேரிகள், இசைக்குழுக்கள், இவர்களிடம் தான் ராயல்டி கேட்கிறார். அதுவும் தற்போது ஏற்கனவே அவர்கள் ஐ.பி.ஆர்.எஸுக்கு கொடுத்து வரும் ராயல்டிதான். புதிதாக எதையும் கேட்கவில்லை. என்ன சிக்கல் என்றால் ஐ.பி.ஆர்.எஸ் இதுநாள்வரை இதை தென்னிந்தியாவில் வசூலிப்பதில் எந்த முனைப்பும் காட்டாததால் பலரும் அதை சரியாக கொடுக்காமல் இருந்தார்கள். இனி அது நடக்காது என்பதால் தான் இத்தனை சண்டைகள், சர்ச்சைகள்...கூடவே சோஷியல் மீடியா அறசீற்றங்கள்.

(தெரிந்தது, கேள்விப்பட்டதை வைத்து எழுதியது. டெக்னிகல் தவறுகள் இருந்தால் சொல்லுங்கள். திருத்திகொள்கிறேன்)

வியாழன், 15 நவம்பர், 2018

பிர்சா முண்டா


பிர்சா முண்டா

இதே நவம்பர்15 ஆம் தேதியில்தான் இதே நள்ளிரவு வேளையில்தான் உலிகாட் வனப்பகுதியில், பிர்சா என்ற ஆண்குழந்தையை..
அந்த.
பழங்குடித்தம்பதிகள் பெற்றெடுத்தார்கள்.

பிர்சா பிறந்த அந்த 1875 ஆம் ஆண்டு மழை பொய்த்திருந்தது விளைச்சல் பட்டுப்போய் பஞ்சம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது. மக்கள் ஒருவேளை சோற்றுக்காக அல்லல்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

பிர்சா ஓயாமல் அழுதுகொண்டிருந்தான்

எடைகுறைவாகப்பிறந்த அழுதுகொண்டிருக்கும்இந்த நோஞ்சான் குழந்தைதான் இந்த மண்ணில் நாளை வெள்ளையர்களை எதிர்த்து ஒரு வீரஞ்செரிந்த விடுதலைப்போரை முன்நின்று நடத்தப்போகிறான் என்பதை அந்தத்தம்பதியினரோ முண்டாக்களோ அறிந்திருக்கவில்லை..

அதனால்தான்..

வறுமையின் கோரப்பிடியால் சிக்கியிருந்த சுகணாவும் - ஹர்மியும் பிர்சாவை வளர்க்கமுடியாமல்,ஹர்மியின் தம்பியிடம் ஒப்படைத்தார்கள்.

பிர்சா பிறக்கும் முன்பு அந்த மலைசூழ்ந்த மண் எப்படி இருந்தது ?

தொழிற்புரட்சிஎன்னும் கோரத்தாண்டவத்தால்
ஒரு..குச்சிக்கம்பைக்கூட விட்டுவைக்காமல், சொந்த நாட்டையே சூறையாடிவிட்ட ஆங்கிலேயர்கள், தங்களது ஆளுகைக்குட்பட்ட காலனி நாடுகளில் . தங்களுக்கு தோதான மரங்களையும் வளங்களையும் தேடியலைந்துகொண்டிருந்தார்கள் .

இரும்புக்கு நிகரான உறுதியுடைய மரங்களும், வாழ்வில் அவர்கள் பார்த்திராத விதவிதமான விலங்குகளும் தங்கமும் நிலக்கரியும் கொட்டிக்கிடக்கும் இந்திய வனங்களும் அவர்களுக்குள் பேராசையை மூட்டிவிட்டிருந்தது.

கொள்ளைக்கான முன் ஏற்பாடுகளை கனகச்சிதமாகத்திட்டமிட்டு சத்தமில்லாமல் புளூபிரிண்டாக்கி மேசைக்குள் வைத்துக்கொண்டார்கள்.

ஈவிரக்கமில்லாமல் எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் அவர்களின் அந்த சூறையாடல் திட்டத்தை பணியடர்ந்த வசந்தகாலத்தின் ஒரு அதிகாலையில்தான் செயல்படுத்தத்தொடங்கினார்கள்.

அன்றைக்கு இருந்ததில் எது அதி நவீன எந்திரமோ, அந்த எந்திரமும்.. எது அதி நவீன போக்குவரத்துமோட்டாரோ,அந்த போக்குவரத்துமோட்டார்களும் பச்சை உடையணிந்த வீரகளோடு,எங்கெல்லாம் வனம் இருக்கிறதோ, அங்கெல்லாம் வந்து சாரைசாரையாக அணிவகுத்து நின்றன.

என்ன நடக்கிறதென்று சுதாகரித்துக்கொள்ளும்முன்பே, பழங்குடிகளின் வனங்களை அவர்கள் இஞ்இஞ்சாக துளைக்கத்தொடங்கினார்கள் ,குறுக்கும் நெடுக்குமாக கீரீச்சிட்டுப்பறந்து தலைகுத்திப்போனது பறவைகள். அந்நியர்களின் உடல் வாசத்தால் அலர்ஜியான யானைகள் சக்தியுள்ளவரை பிளிரி ஓய்ந்த்து.

தேவைக்கு அதிகமாக ஒரு சுள்ளியைக்கூட உடைத்துபழக்கமில்லாத, தேவைக்கு அதிகமாக ஒரு பழத்தைக்கூடப்பறித்து உண்ணவிரும்பாத பழங்குடிகள்… தங்களுக்கு பாலூட்டிய தாய்போன்ற வனத்தின் மடி தங்களது கண்முன்னே ஈவிரக்கமில்லாது அறுக்கப்படுவதைக்காணச்சகிக்காது கொதித்தெழுந்து கூச்சலிட்டார்கள். என்ன வந்தாலும் சரியென்று கூடி நெருங்கி மூர்க்கமாக எதிர்த்து நின்றார்கள்

நிச்சய்மாய் இந்த எதிர்ப்பை ஆங்கிலேயர்கள் எதிர்பார்க்கவில்லை.
அவர்கள் துப்பாக்கியை நீட்டி வானத்தை நோக்கி சுட்டார்கள்
மக்கள் துப்பாக்கிக்கும் பீரங்கிக்கும் அஞ்சவில்லை மாறாக தங்களது உயிரணைய காட்டுக்காக் உரிமைக்காக தங்களை நெஞ்சை நிமிர்த்திநின்றனர்

தங்களால் எந்தெந்த வழிகளிலெல்லாம் எதிர்ப்பை காட்டமுடியுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் எதிர்ப்பைக்காட்டினர்

பூட்டுகள்சரசரக்கும் சத்தம் கேட்டால் ஓடி ஒளிந்துகொள்ளும், மேலடை அறியாத ‘நாகரீகம்’ அறியாத பழங்குடிகளை அவர்கள் அந்த நாள்வரை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை.,,

அப்படிப்பட்டவர்கள் இப்படி எதிர்த்து நிற்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை

நாளுக்கு நாள் இந்த போராட்டங்கள் பம்பாய் மாகாணமெங்கும் பற்றிப்பரவியது. கோபத்தீ கொளுந்துவிட்டு எரிந்த்து நிலமை கட்டுக்குள் அடங்காமல் போகவே, பதறிய அதிகாரிகள் மெற்கொண்டு நடக்கவேண்டியவை குறித்து ஆலோசனை செய்தனர் அது சதியாகத்தான் இருந்திருக்குமேதவிர வேறு எதுவுமாக இருந்திருக்கவாய்ப்பிலை

ஒரு இரவில் அந்த சதி அறிவிப்பு வந்தது
வனப்பகுதிலிருக்கும் எல்லா மரங்களும் எல்லா விலங்குகளும் எல்லா பறவைகளும் எல்லா வளங்களும் எல்லா நிலங்களும் ஆங்கில அரசுக்கு சொந்தமானது, இதில் தலையிடவோ இங்கே நடக்கும் பணிகளை தடுக்கவோ
யாருக்கும் எந்த உரிமையுமில்லை ஒரு குயில் கூட தங்களை கேட்காமல் கூவக்கூடாது என்று அறிவித்தது. திட்டமிட்டுத் தொடுக்கப்பட்ட வழக்கொன்றில் இந்த அறிவிப்பை ஒரு தீர்ப்பாக மாற்றி சட்டமாகவும் இயற்றினார்கள்
வனத்திற்கென்று ஒரு துறையைத்தொடங்கி எல்லா அதிகாரங்களையும் அந்ததுறையிடம் குவித்துக்கொண்டார்கள் ,அதற்கு தோதாக வனச்சட்டத்தை வகுத்துக்கொண்டார்கள்

அந்த வனச்சட்டத்தின்படி ஆதிவாசிகள் தாங்கள் தங்கியிருக்கும் வீடுகளுக்கு தாங்கள் உழுதுகொண்டிருக்கும் துண்டுதுக்கடா நிலங்களுக்கு, தாங்கள் ஆடுமாடு மேய்க்கும் மேய்ச்சல் நிலங்களுக்கு.. வனத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் அவர்கள் அனுமதி கொடுக்கவேண்டுமென்றால் ஒரு வரி செலுத்தவேண்டும் அப்படி வரி செலுத்தாவிட்டால் அந்த நிலங்களைவிட்டு வெளியேறவேண்டும் என்று எச்சரித்தது அதன்படி செயல்படவும் தொடங்கியது

வனத்துறையை மேலும் விரிவாக்கி பல்லாயிரம் பணியாளர்களை நியமித்து அதை ஒரு முறையான அமைப்பாக்கி பம்பரமாக செயல்பட ஆரம்பித்தார்கள்

நிற்க...

இந்த சூழலில்தான் வனத்தின் தென்கிழக்காக இருந்த தனது மாமாவின் கூரையில் கும்லா மலையின்அருவியும் அதன் காற்றும், பழங்களும் விலங்குகளின் இரைச்சியும் பிர்சாவுக்கு தேவையான ரத்தத்தையும் சதையையும் தந்துதவுகிறது

அவன் மெல்ல தவழத்தொடங்குகிறான்

ஆனால்
1880ம் ஆண்டின் இறுதிக்குள், ஆங்கில அரசு பல்வேறு தந்திரங்கள் மூலமாக கிட்டத்தட்ட எல்லா வனங்களையும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்துவிட்டது

அதே நாள் சோட்டா நாகபுரியில் இடத்தில் நிலச்சுவாந்தார்களையும் வட்டிக்காரர்களையும் அழைத்து ஆங்கில அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்

'வரியாக பணம் கட்ட நீங்க '?

"எவ்ளோ காசு வேணுமின்னாலும் கட்டறோம் நிலத்த நாங்க எடுத்துக்கறோம்"

போட்டிபோட்டுக்கொண்டு அந்த நிலங்களை வட்டிக்காரர்களும் வசதிபடைத்தவர்களும் வளைக்கத்தொடங்கினர்.
பழங்குடிகளின் கண்முன்னாலேயே நிலத்தில் இறங்கி எல்லைபிரித்து வேலி போடத்தொடங்கினர்
கரைகளில் உட்கார்ந்து கண்ணீரோடு பழங்குடிகள் குமுறிகுமுறி அழுதுகொண்டிருந்தார்கள் .

கிட்டத்தட்ட 50 சதவீதமான நிலம் இப்போது அவர்களின் கையைவிட்டு போயிருந்தது மீதி இருந்த நிலங்களுகும் கொஞ்சம் கொஞ்சமாக கைமாறிக்கொண்டிருந்தது

நிலமிழந்த ஆதிவாசிகள் உணவுக்காக உயிர்வாழ வட்டிக்காரர்களிடம் தங்கலை தாங்களே விற்றுக்கொண்டு அடிமைகளாக மாறிக்கொண்டிருந்தனர்.துப்பாக்கிமுனையில் அவர்கள் கசக்கிப்பிழியப்பட்டனர்
1894 ஆம் ஒரு சொட்டு மழையில்லை வீட்டில் ஒரு கைப்பிடி தானியமில்லை பட்டினிசாவுகள் ஆங்காங்கே நிகழத்தொடங்கியிருந்தது

இந்த துயரமான நிலையிலும் வரிக்கட்டாமலிருக்கும் ஆதிவாசிகளின் நிலங்களை கைய்யகப்படுத்த பிரிட்டீஸ் அதிகாரிகள் மூர்க்கமாக முயன்றுகொண்டிருந்தனர்.

முண்டாக்கள் கொதித்தெழுந்தார்கள்
அக்டோபர் 1 ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள் தங்களது நிலம் பறிபோகக்காரனமாக இருந்த வரிகளை தள்ளுபடிசெய்யக்கோரி வரலாறுகாணா ஆர்பாட்டத்தையும் பிரம்மாண்டமான பேரணியொன்றையும் நடத்தி பிரிட்டீசாரை ஆட்டம்காணவைத்தனர்

பேரணி சோட்டா நாக்பூர் பிரிட்டீஷ் தலைமைஅலுவலகத்தின் முன்னால் வந்து நின்றது. கூடியிருந்த ஆயிரக்கணக்கான முண்டாக்கள் யாரையோ எதிர்பார்த்து ஒருவொருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்
கூட்டத்தின் கடைசியிலிருந்து, ஆட்களை ஒதுக்கிகொண்டே நடுவே புகுந்து... ஒடிசலான தேகம்கொண்ட ஒரு இளைஞன் ஆவேசமாக முன்னேறி வந்துகொண்டிருந்தான்.

20 வயதுகூட நிரம்பாத அந்த இளைஞன்தான் துணிவோடு இந்தப்போரை முன்னின்று வழிநடத்தியவன் என்று பேசிக்கொண்டார்கள் கூட்டம் வழிவிட்டு ஒதுங்கி்... அவனது வாயசைவுக்காக காத்து நின்றது

முன்னால் வந்து அங்கே கிடந்த உயரமான பாறையின் மேலே ஏறி நின்று, அந்த இளைஞன் முழங்கத்தொடங்கினான்
ஜல் ஹமாரே (நீர் நமது)
ஜமீன் ஹமாரே( நிலம்நமது)
ஜங்கில் ஹமாரே (வனம் நமது )

அந்த இளைஞன் முழங்க முழங்க கூட்டமும் அந்த முழக்கத்தை திரும்பத்திரும்ப முழங்கி ஆர்பரித்தது.

அந்த இளைஞன்..வேறு யாருமல்ல உலிஹட்டில் பிறந்து கும்லாவில் வளர்ந்த நோஞ்சான் குழந்தைதான் அது.

நன்றாக வளர்ந்துவிட்டிருந்தான் அவனது குரலும் உடலும் ஏதோ தீர்க்கத்தை தின்று வளர்ந்ததுபோல் மாறிவிட்டிருந்தது.

வசீகரமான சத்திய ஆவேசமாக அவன் எழுப்பிய இந்த முழக்கம், முண்டாக்களுக்குள் புகைந்துகொண்டிருந்த நெருப்பை ஊதிபெருக்கி ஊழித்தீயாக்கியது.

அந்த முழக்கம் மலைகளின் இண்டு இடுக்கிலெல்லாம் இடிமுழக்கமாக ஒலிக்கத்தொடங்கியது.
அது எல்லைகளை கடந்து தடையுடைத்து எங்கும் பரவியது. அது ஒவ்வொரு முண்டாக்களின் இருதயத்துக்குள்ளும் இறங்கி, மாயங்களை நிகழ்த்தத்தொடங்கியது. சோட்டா நாகபுரி போர்கோலம் பூண்டு நின்றது.

இது அவனுக்கு இன்னும் உற்சாகமூட்டியது
பிரிட்டீஷ் படைகளை சமாளிக்க வெறும் முழக்கம் மட்டுமே போதாது என்று உணர்ந்திருந்த பிர்சா மறைந்து தாக்கவும் மூர்க்கமாகப் போரிடவும் கெரில்லாப் போர்ப்படையை தன் சொந்தப் பழங்குடிகளைவைத்தே கட்டத்தொடங்கினான்

நவீன எந்திரங்களை நவீன எந்திரங்களைக்கொண்டு எதிர்கொள்ளவேண்டியதில்லை.மரபார்ந்த போரை ஒரு மரபற்ற போரால்தான் வீழ்த்தமுடியும்.. அது ஒன்றைத்தான் பழங்குடிகள திறம்பட நடத்தமுடியும் என்பதில் பிர்சா உறுதியாக இருந்தான்.

தொடர்சியாக வெள்ளையர்களுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை திட்டமிட்டு அவன் நடத்திக்கொண்டே இருந்தான்.

எத்தனையோ தாக்குதல்களை அவன் நட்த்தியிருந்தாலும், ஆங்கிலேயர்களின் ஆணிவேரை அசைத்துப்பார்த்த அதிமுக்கியமான இரண்டு தாக்குதல்களாக இதையே பிர்சா நினைத்தான்

1900 ஜனவரி 4

முண்டாவின் முக்கிய தளபதியான கயா முண்டா செய்ல் மலையில் உள்ள எட்கடியில் இருந்தான் ,கயாவை கைதுசெய்துவிட்டால் குறிப்பிட்ட பல கிராமங்களில் பழங்குடிகளின் கிளர்சியை அடக்கிவிடலாம்.அதேநேரத்தில் பிர்சாவின் வலதுகையை உடைத்தமாதிரியும் இருக்கும் என்று ஆங்கில மூளை கணக்குபோட்டது. அந்தக்கணக்கைத்தீர்க்கும் வழிகளோடு போலீஸ் படையொன்று எட்கடி கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது.

பொலீஸ் நுழையப்போவதை முன்னமே அறிந்த பழங்குடி ஒற்றன் ஒருவன், பறவையைப்போல ஒர் சங்கேத ஒலியை கிழக்குதிசையை நோக்கி ஒலிக்கவிட்டிருந்தான்
அது இரண்டு குன்றுகளைத்தாண்டியிருந்த அணிக்கு சேர்ந்துவிட்டது. எப்படி இதை சமாளிக்கவேண்டும் என்பதற்கான எதிர்சங்கேத ஒலியையும் அவர்கள் அனுப்பிவிட்டார்கள்.

போலீஸ் கிராமத்துக்குள் நுழைந்துவிட்டது நாய்களும் கோழிகளும் அச்சத்தில் குலைத்துக்கொண்டு அங்குமிங்கும் ஓடியது நாய்களைத்தேடிக்கொண்டு சிறுத்தை ஒன்று கிராமத்தின் ஓரத்தில் பாய்ந்து விழுந்தது.. என்னதென்று யூகிப்பதற்க்குள் ஒட்டுமொத்த கிராமமும் அவர்கள் மேல் நாலப்புறங்களிலிருந்தும் பாய்ந்து குதறியது

அதில் ஏற்கனவே முண்டாக்கள் பலரையும் கொன்ற போலீஸ்கான்ஸ்டபுள் ஜய்ராம் கொல்லப்பட்டான்.இந்த செய்தி அறிந்த ராஞ்சியின் டெப்ட்டி கமிசனர் ஆயுதம்தாங்கிய போலீஸ் படையொன்றை எட்கடிக்கு அனுப்பிவைத்தான்.

ஆரவாரத்துடன் வந்த அந்தப்படை நீண்ட போராட்டத்துப்பின்பு கயாவை கைது செய்து வீடுகளுக்கு தீ வைத்துவிட்டு வெளியேறியது..
ஆனாலும் ஆயுதம்தாங்கிய போலீஸ்கார்ர்களிடமிருந்து தங்கள் கயாவை மீட்க, முண்டா ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் இணைந்து நடத்திய சமசரமில்லாத மயிற்கூச்செரியும் சண்டை அந்த படையினரிடம் ஒரு அச்சத்தை ஏற்படுத்திவிட்ட்து ஏனென்றால் அவ்வளவு தீர்க்கத்தையும் ராணுவம்போலான ஒரு ஒழுங்கையும் முன் அனுமானம் செய்யமுடியாத ஒரு எதிரியின் வியூகத்தையும் முதன்முதலாக அங்கேதான் அவர்கள் பார்த்தார்கள்
காடுகளுக்குள் சிதறிய முண்டாக்கள் கயா கைதுக்கு பழிவாங்க தயாகிக்கொண்டிருந்தார்கள்
1897ஆம் ஆண்டு காலை 10 மணி

குந்தி காவல் நிலையம் அந்த பகுதிக்கான முக்கியமான கேந்திரமாக இருந்த்து முண்டாக்களுக்கு எதிரான எல்லா திட்டங்களும் அங்கிருந்துதான் தீட்டப்பட்டது .எல்லா முண்டாப்பகுதிகளையும் கண்காணிக்கும் வசதிகளை இந்த காவல்நிலையம்தான் பெற்றிருந்தது இந்த அஸ்த்திவாரத்தை தகர்த்தால் ஆங்கிலேயர்களை ஆட்டம்கானவைக்கலாம் என்று திட்டமிட்ட பிர்சா 400 முண்டாக்களோடு டோம்பரி மலையைவிட்டு இறங்கி குந்தி காவல் நிலையத்தை நோக்கி கருமேகம்போல நகர்ந்தார்கள்

நேரம் 10.12 ஐ தொட்டுவிட்டது..
திட்டமிட்டபடி
சீறிப்பாய்கிற ஈட்டிகளும் அம்புகளும் சுழன்று பறக்கும் கோடாலிகளும்....அந்தக்காவல் நிலையம் ஒரு போர்களம்போல் காட்சியளித்தது

போலீஸ் அதிகாரிகளும் கான்ஸ்டபுள்களும் செய்வதறியாது தினறிப்போய் நாலப்புறமும் சிதறி ஓடுகிறார்கள்.கூட்டத்தை நோக்கி ரகுந்ராம் என்ற போலீஸ்காரன் சுட ஆரம்பிக்கிறான் அவன் குதிரையை இழுக்கும் முன்பு முண்டாவின் கையிலிருந்த அம்பு அவன் குரல்வளையை குத்தி நிற்கிறது.அவன் நின்றுநிதானித்து காவல் நிலையத்தின் வாசலில் வீழ்கிறான்

இப்படித்தான் ஆங்கிலேயர்களை அவன் உண்டு இல்லை என்று ஆக்கிவைத்தான்

1889 தொடங்கி -1895ஆம்ஆண்டுவரை இப்படியான ஒரு வீரஞ்செரிந்த யுத்தத்தைத்தான் அந்தப்பகுதியில் பிர்சா நிகழ்த்திக்கொண்டிருந்தான் இழப்புகளைக்கண்டு அஞ்சாது மேலும் மேலும் திடீர் திடீரென்று ஏறியடித்த பழங்குடிகளின் வீரத்துக்குமுன், கட்டற்ற போர்முறையின் கதிகலக்கும் வடிவத்துக்குமுன்….குகைகளுக்குள்ளிருந்து எழும் மாய வியூகங்களுக்குமுன் தாக்குப்பிடிக்கமுடியாமல்,பல இடங்களில் பிரிட்டீஷ் படைகள் தொடர்ந்து மண்டியிட்டது பல்லாயிரம் சிப்பாய்கள் படைகளைவிட்டு தப்பியோடினர்.

அவமானத்தால் கூனிக்குறுகிய அதிகாரிகள் பிர்சாவை எப்படியாவது பிடித்து இந்தபோரை தமமதாக்கிவிடவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தனர். "இது ஒரு ஆபத்தான சமிங்கை இதை இப்போதே முடிக்காவிட்டால் நமது அரசுக்கு மிகபெரிய ஆபத்தாக முடியும்" என்று அவ்வப்போது அரக்கபரக்க ஆலோசனைக்கூட்டங்களை நட்த்திக்கொண்டிருந்தார்கள்.

அப்படி ஒரு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆகஸ்ட் 23, 1895 அன்று சூழ்ச்சிசெய்து பிர்சாவை கைதுசெய்து சிறைக்கொட்டடியில் அடைக்கிறார்கள்

கொடூரமான சித்திரவதைக்குப் பின்பு 1897-ல் விடுதலையான பிர்சா மீண்டும் தீவிரமாக இயக்கப்பணிகளை முன்னெடுக்கிறார் .சினம்கொண்ட பிரிட்டீஷ் அரசு அவரை 1900-ல் மீண்டும் கைதுசெய்து சிறையில் அடைத்தது

1900 ஆம் வருடம் ஜீன் 8 ஆம் தேதி

நள்ளிரவு நெருங்கிக்கொண்டிருந்த்து

மெல்ல மெல்ல அடியெடுத்து நிழல்களைப்போல் நடந்துவந்தார்கள் வெள்ளைசிறையதிகாரிகள். கையில் இருந்து பொட்டலத்தைப்பிரித்து குடிக்கவைத்திருந்த தண்ணீரில் அதைக் கலந்துவிட்டு நிம்மதியாகத்தூங்கப்போனார்கள்

ஜூன் 9-ம் தேதி அதிகாலை

ஒரு மாபெரும் வரலாற்றை எழுதிக்காட்டிய, ஆதிவாசிகளின் நம்பிக்கை ஒளியாய்இருந்த, எதிரிகளின் செவிப்பறையில் ஓயாத பேரிடியாய் ஒலித்துக்கொண்டிருந்த மகோன்தமானவீரன், அடிபணியாத தலைவன், தனது 25 வது வயதில், மர்மமானமுறையில் ராஞ்சி சிறையின் 11 ஆம் அறையில் இறந்துகிடந்தார்.

நூறாண்டுகளுக்கும்மேலாகிவிட்டது, அப்போது எப்படியிருந்தார்களோ, என்னமாதிரியான துன்பங்களை அனுபவித்தார்களோ அதே நிலையில்தான் பழங்குடிகள் இன்னும் இருக்கிறார்கள்,அதே வகையான சுரண்டலைத்தான் இப்போதும் அனுபவிக்கிறார்கள் பெயர் அறியாத நோய்களால் ரத்த சோகையால் பட்டினியால் போதிய மருத்துவமின்னமையால், போதிய உணவின்மையால் காப்பகங்களால் வனத்துக்கு வெளியேயும் வனத்துக்கு உள்ளேயும் தினம்தினமும் ஆயிரக்கணக்கானோர் செத்துக்கொண்டிருக்கிறார்கள் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை அன்னியர்களிடம் இழந்துகொண்டிருக்கிறார்கள். தினம்தினம் தங்களது பெண்களை பலிகொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். துயரம் நிறைந்த தங்களதுவாழ்வை மெளனமாக கடந்துகொண்டிருக்கிறார்கள் அந்த மெளனம் பொருள் பொதிந்தது. அதுதான் இந்த மலைகளின் இண்டு இடுக்குகளெங்கும் பல்வேறு வடிவங்களில் போராடும், புதிய புதிய பிர்சாக்களை மீண்டும் மீண்டும் பிறக்கவைத்துக்கொண்டிருக்கிறது .


திங்கள், 8 அக்டோபர், 2018

நடிகர் ராமராஜன்


ராமராஜன் சிறந்த நடிகரா இல்லையா என்பது வேறு விஷயம்.

 அவருக்கு டான்ஸ் ஆட வருமா, வராதா என்பதும் வேறு விஷயம்... ஆனால் அவரது படங்கள், குறிப்பாக இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து கொடுத்த அத்தனை படங்களுமே மக்களின் மனதை மயக்கிப் போட்ட மாயாஜாலப் படங்கள் என்பது மட்டும் உண்மை.

மன பாரமா.. மனக் கஷ்டமா.. சந்தோஷமாக கிராமத்து நினைவுகளில் மூழ்க வேண்டுமா.. எடுத்துப் போட்டு ஒரே ஒரு ராமராஜன் பாட்டைக் கேட்டுப் பாருங்கள்.. முடிஞ்சா கரகாட்டக்காரன் படத்தைப் பாருங்கள்.. அத்தனையும் நொடிப் பொழுதில் பறந்து போவதை உணர்வீர்கள்.

சரி வாங்க ராமராஜனைப் பத்தி ஒரு ரவுண்டு பார்த்துவிட்டு வருவோம்...


மக்கள் நாயகனான மதுரைக்கார ராசா...
ஆரம்பத்தில், யாருமே பெரிதாக அறிந்திராத இயக்குநராக வலம் வந்தவர்தான் ராமராஜன்.

ஆனால் மக்கள் நாயகன் என்ற இமேஜ் அவர் மீது குறுகிய காலத்திற்குள் வந்து சேர்ந்தது பெரிய சாதனைதான்.

முன்னணி நடிகர்களைப் பின்னுக்குத் தள்ளி...
நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே முன்னணி நடிகர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்ததும் அந்தக் காலத்தில் மிகப் பெரிய சாதனைதான்.
கோடி வாங்கிய முதல் நடிகர்
தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிகப் பெரிய சாதனை இதுதான்.

ஒரு நடிகர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியது ராமராஜன் காலத்தில்தான் முதல் முறையாக நடந்தது.

 அந்த சாதனைக்குரியவர் ராமராஜன்தான்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட அப்போது அந்த அளவுக்கு சம்பளம் வாங்கவில்லை என்று அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது.


கிராமப்புற வசூல் ராஜா
ராமராஜன் படங்கள் அன்று மிகப் பெரிய ஹிட் படங்களாகவே அமைந்தன.

குறிப்பாக கிராமப்புறங்களில் ராமராஜன் படங்கள்தான் சூப்பர் ஹிட்டாக ஓடி வசூலில் சாதனை படைத்தன.

 இந்த சாதனையை வேறு எந்த நடிகரும் நிகழ்த்தினரா என்பது தெரியவில்லை - எம்.ஜி.ஆரை இந்த லிஸ்ட்டில் சேர்க்க முடியாது.. காரணம், அவர் தனி சகாப்தம்.
பாட்டும் - பட்டையைக் கிளப்பிய சட்டையும்
ராமராஜன் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது இளையாராஜவும், ராமராஜன் போட்ட கலர் கலரான சட்டைகளும்தான்.

 பாட்டுக்காகவே ஓடிய படங்கள் அவருடையது... அதேபோல அவர் போட்ட பச்சை, மஞ்சள், சிவப்பு, கருப்பு, நீலம் என விதம் விதமான கலர் சட்டைகளும் அப்போது டிரெண்ட் செட்டாக அமைந்தன.


'காடி' காஸ்ட்யூமாக இருந்தாலும் கலெக்ஷன் சூப்பரப்பு...
ராமராஜன் படங்களில் அவர் போட்ட டிரஸ்கள் படு காமெடியாக தெரிந்தாலும், ஓவர் மேக்கப் வெகுவாக நக்கல் செய்யப்பட்டாலும் கிராமப்புற மக்களை மட்டுமல்லாமல் நகர்ப்புறத்து மக்களிடமும் கிராமப்புறத்தின் தாக்கத்தை கொண்டு வந்து சேர்த்தது நிச்சயம் சாதனையான விஷயம்தான்.


கெட்ட வாடையே இல்லாத படம்
அதை விட ராமராஜன் படங்களின் ஸ்பெஷாலிட்டி என்று சொல்ல வேண்டுமானால், கெட்ட பழக்கங்களை, கெட்ட நடத்தைகளைக் கற்றுக் கொடுக்கும் படங்களாக இல்லாமல், நல்ல விஷயங்களைச் சொல்லும் பாடமாக அமைந்திருக்கின்றன என்பதுதான்.

 உண்மையிலேயே இது பாராட்ட வேண்டிய விஷயம்.. இந்த விஷயத்தில் எம்.ஜி.ஆரின் வாரிசு என்று ராமராஜனை தாராளமாக சொல்லலாம்.
கரகாட்ட ராஜா...
டான்ஸே ஆடத் தெரியாதவர் ராமராஜன் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் ஒரு கால் தேர்நத கரகாட்டக்கார நிபுணராக நடித்த படம்தான் கரகாட்டக்காரன்.

அந்தப் படம் தமிழ் சினிமாவின் வரலாற்றில் இடம் பெற்ற படம்.

படத்தின் வசனம், கேரக்டர்களின் அணிவகுப்பு, கதை சொன்ன விதம், அருமையான நடிப்பு .. முத்தாய்ப்பாக ராஜா இசை.

எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சிரிப்புக் களஞ்சியம் இது.. தில்லானா மோகனாம்பாள் போல.
கிராமங்களுக்கு கெளரவம் கொடுத்தவர்
எல்லாவற்றையும் விட ராமராஜனை நாம் பாராட்டியே ஆக வேண்டிய விஷயம் என்ன தெரியுமா.. கிராமங்களுக்கும், அந்த கிராமத்து மக்களின் வெள்ளந்தி வாழ்க்கைக்கும், அதன் பசுமையான சூழலுக்கும் கொடுத்த கெளரவம்தான்.

 ராமராஜன் நடித்துக் கொண்டிருந்த காலம் வரை கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் பல படங்கள் கிராமங்களைத்தான் சுற்றிச் சுற்றி வந்தன.

 கிராமத்து வாழ்க்கையை மிக அழகாக வெளிக்காட்டிய பல படங்களை நம் மக்கள் அந்தக் காலகட்டத்தில் காண முடிந்தது.


கை கொடுக்காத அரசியல்
ராமராஜனுக்கு சினிமா எந்த அளவுக்கு தூக்கி விட்டதோ அதை விடவேகமாக இறக்கி விட்டது இந்த அரசியல்தான்.

 புகழேணியின் உச்சியில் இருந்த அவர் அதிமுகவுக்குப் போனார்.

போன வேகத்தில் எம்.பியானார். அது அவரது வாழ்க்கையில் நிச்சயம் சாதனைதான். ஆனால் அதே வேகத்தி்ல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் மாஜி எம்.பியானார்.

 சினிமாவில் அவரது காலம் எப்படி குறுகியதாக இருந்ததோ, அதேபோல அரசியல் வாழ்க்கையும் குறுகியதாகப் போனது.
நிச்சயம் மறக்க முடியாது
ராமராஜனின் திரையுலக வாழ்க்கையும், அரசியல் வாழ்க்கையும் மிகக் குறுகியதாக இருந்தாலும் கூட எங்க ஊரு பாட்டுக்காரன்... கிராமத்து மின்னல்... செண்பகமே செண்பகமே... எங்க ஊரு காவக்காரன்... ராசாவே உன்னை நம்பி... பொங்கி வரும் காவேரி... கரகாட்டக்காரன்.. வில்லுப்பாட்டுக்காரன்... ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்.. இதுபோன்ற படங்களை நினைக்கும்போது கண்டிப்பாக ராமராஜனும் ஒரு சாதனையாளர்தான் என்று எண்ணவே தோன்றுகிறது.

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

கரீனா கபூரின் கவர்ச்சி போட்டோ போஸை கண்டு ரசிகர்கள் ஷாக்!


கரீனா கபூரின் கவர்ச்சி போட்டோ போஸை கண்டு ரசிகர்கள் ஷாக்!


39 வயதான கரீனா கபூரின் கவர்ச்சி போட்டோ போஸைக் கண்டு ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கரீனா கபூர். இவரை தமிழில் ரஜினிக்கும், கமலுக்கும் ஜோடியாக நடிக்க அழைத்தனர். ஆனால், அவர் நடிக்க மறுத்துவிட்டார்.
காரணம் கேட்டால், ஒரு மொழி முழுவதும் தெரிந்தால் தான் மட்டுமே அந்த மொழி படங்களில் நடிப்பேன் என்று உறுதியாக இருந்தார். அவர் திருமணத்துக்குப் பின்பும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். அத்துடன் தற்போது அவர் நடித்து வரும் படங்களில் படுக்கையறை காட்சிகள் மற்றும் ஹீரோவுடன் லிப் டு லிப் முத்தக் காட்சிகளும் இடம் பெற்றிருக்கும்.

இந்நிலையில் பிலிம்பேர் பத்திரிகைக்காக இவர் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார். இவருக்கு தற்போது 39 வயதாகிறது. இந்த வயதிலும் இவர் கொடுத்த போட்டோ போஸை கண்டு ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

Top Collection Marvel Movies வசூலில் பட்டய கெலப்பும் மார்வெல் சூப்பர் ஹீரோ படங்கள்!


Top Collection Marvel Movies வசூலில் பட்டய கெலப்பும் மார்வெல் சூப்பர் ஹீரோ படங்கள்!

மார்வெல் சூப்பர் ஹீரோ படங்களுக்கு உலகமெங்கும் நல்ல வரவேற்ப்புகள் இருக்கின்றன , அதுவும் தமிழ்நாட்டில் கூட பெரிய தமிழ் ஹீரோக்களின் படங்களுக்கு எப்படி விசில்பறக்குமோ அதே அளவிற்க்கு Avengers Infinity war படத்திற்க்கு ஒவ்வொரு சூப்பர் ஹீரோ அறிமுகமாகும் போதும் விசில் பறந்தது, அந்த அளவிற்க்கு இங்கும் அயன்மேன், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தோர், ஸ்பைடர்மேன், டாக்டர் ஸ்ட்ரேன்ஞ், ப்லாக் பாந்தர் என்று அனைத்து ஹீரோக்களுக்கும் தனி தனி ரசிகர்கள் இருக்கின்றார்கள்.


மார்வெல் படங்கள் உலக அளவில் வசூலில் பிடித்த இடங்கள்

1 Avatar ரூ 20,102 கோடி

2 Titanic ரூ 15,772 கோடி

3 Star Wars: The Force Awakens ரூ 14,912 கோடி

4 Avengers: Infinity War ரூ 14,755 கோடி

5 Jurassic World ரூ 12,053 கோடி

6 The Avengers ரூ 10,951 கோடி

7 Furious 7 ரூ 10,931 கோடி

8 Avengers: Age of Ultron ரூ 10,133 கோடி

9 Black Panther ரூ 9,711 கோடி

10 Harry Potter and the Deathly Hallows – Part 2 ரூ 9,672 கோடி

11 Star Wars: The Last Jedi ரூ 9,608 கோடி

12 Jurassic World: Fallen Kingdom ரூ 9,393 கோடி

13 Frozen ரூ 9,301 கோடி

14 Beauty and the Beast ரூ 9,110 கோடி

15 The Fate of the Furious ரூ 8,932 கோடி

16 Iron Man 3 : ரூ 8,759 கோடி

17 Incredibles 2 : ரூ 8,487 கோடி

18 Minions ரூ 8,359 கோடி

19 Captain America: Civil War ரூ 8,315 கோடி

20 Transformers: Dark of the Moon ரூ 8,103 கோடி

அதிக வசூல் செய்த படங்களில் 20க்குள் 6 மார்வெல் படங்கள் இருகின்றன, மார்வெலுக்கு போட்டியாக கருதபடும் DC படமான The Dark Knight Rises ரூ 7,822 கோடியுடன் 24வது இடத்தில் உள்ளது.

சனி, 1 செப்டம்பர், 2018

சிம்ம குரல் மலேசியா வாசுதேவன்


சிம்ம குரல் மலேசியா வாசுதேவன்

இளையராஜாவின் பாடல்களை மேம்போக்காக கேட்கும் சில விவரமில்லா இளசுகள், இளையராஜா எஸ்பிபிக்கும், ஜேசுதாஸுக்குமே பன்முக பாடல்களை அதிகம் கொடுத்ததாக நினைத்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் இவ்விருவரை விடவும் மலேசியா வாசுதேவனுக்கு தான் அத்தனை அட்டகாசமான பன்முக பாடல்கள் கொடுத்திருக்கிறார் ராஜா.

காரணம் எஸ்பிபியின் குரல் எப்பவும் மென்மையாகவே இருக்கும், ஜேசுதாஸ் குரல் ஒருவித கானத்தனமையோடு இருக்கும், ஆனால் வாசுதேவன் குரல் மட்டுமே பாட்டுக்கு தக்கவாறு மென்மையாகவும், சிம்ம குரலாகவும் மாறும், அதுக்கு சிறந்த உதாரணம் "பொதுவாக எம்மனசு தங்கம்" பாடலும், "கட்டி வெச்சுக்கோ எந்தன் அன்பு மனசை..." பாடலும்.

ஒரு வேளை மலேசியா வாசுதேவன் திரையில் நடிக்காமல் இருந்து இருந்தால்  "யார் அந்தக் காந்தர்வ வெண்கல குரலோன் !" என்று இன்றைய தலைமுறை அவரை வலைவீசித் தேடி இருக்குமோ என்னவோ.

எழுபதுகள், எண்பதுகள் என இரு தலைமுறை சாமானிய ஆண்களின் குரல் அவருடையது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஹிட் பாடல்களை வரிசைப்படுத்தினால் அதில் 50% வாசுதேவன் பாடல்களே இருக்கும், ரஜினியின் இத்தனை பெரும் வளர்ச்சிக்கு ஒருவகையில் அப்பாடல்களும் ஒரு காரணம் ஆனால் இளையராஜா போல இந்த திறமையாளனுக்கும் பெரிய அங்கீகாரம் ஏதுமில்லை என்பது யார் விட்ட சாபமோ...

இதோ என் இன்றைய வாசுதேவன் Playlist, எத்தனை பன்முக இசை பாருங்கள்.

இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது,
பொதுவாக என் மனசு தங்கம்,
வான்மேகங்களே,
ஊரு விட்டு ஊரு வந்து,
வா வா வசந்தமே ! சுகந்தரும் சுகந்தமே,
ஆசை நூறு வகை,
ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு,
அடி ஆடு பூங்கொடியே... விளையாடு பூங்கொடியே,
காதல் வைபோகமே காணும் நன்னாளிதே,
அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா,
அட உன்ன பார்த்த நேரம்,
பூங்காத்து திரும்புமா,
மாமாவுக்கு குடும்மா குடும்மா,
ஏய் வைச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்,
காதல் வந்துருச்சு ஆசையில் ஒடி வந்தேன்................

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

கோலமாவு கோகிலா திரைப்படம் பற்றி சில ஆதாரப் பூர்வமான உண்மைகள்...


கோலமாவு கோகிலா திரைப்படம் பற்றி சில ஆதாரப் பூர்வமான உண்மைகள்...

 #கோலமாவு கோகிலா
நாயகி ஒரு கேங்க் தலைவரிடம் மாட்டிக்கொள்கிறார். அவர் நாயகியை ரேப் செய்ய முயலுகிறார். அங்கு க்ளோஸ்  அப் ஷாட்டில் விஷ்ணுவின் தசாவதார புகைப்படம் வலிந்து திணித்துக் காட்டப்படுகிறது.

வில்லன்கள் போதைப்பொருள் கடத்தும் அறை முழுக்க சிவன் உள்ளிட்ட படங்களாகக் காட்சியளிக்கின்றன.

அவர்கள் வழக்கமாக போதைப்பொருள் டீல் பேசும் உணவக சுவர் முழுக்க சிவன் உள்ளிட்ட சாமி படங்கள்.

நாயகியின் குடும்பம் போதைப்பொருள் கடத்த ஆரம்பிக்கும்போது பக்தியுடன் முருகனை தீபாராதனைகளை காட்டி வழிபட்டு ஆரம்பிக்கிறார்கள்.

போனில் வாட்ஸ் அப்பில் இந்த மேசேஜை பார்வர்டு செய்தால் நன்மை நடக்கும் என காமெடியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அந்த புகைப்படம் சாய் பாபா புகைப்படம்.

நாயகி கடைசியில் கொள்ளையடித்துவிட்டு அனைவரிடமுமிருந்து வண்டியுடன்  தப்பிப்பதுபோல காட்சிவருகிறது. இடப்பக்கம் சம்பந்தமில்லாமல் பாதி ஸ்க்ரீனில் 'சிவ சிவ' என எழுதப்பட்ட பெரிய சிவ லிங்க பேனர் காட்டப்பட்டிருக்கிறது.

ஒரு கட்டத்தில் நாயகி அவரது குடும்பம் உட்பட வில்லனிடம் அறைக்குள் மாட்டிக்கொள்கிறார். ரேப் செய்யப்படப் போகிறார். அவர் தப்பித்துவிட வேண்டும் என ஆடியன்ஸ்களும்கூட நினைக்கின்றனர். திரையில் யோகிபாபுவும் அதையே நினைக்கிறார். நினைக்கிற அவர், இம்முறை "கர்த்தரே காப்பாற்று" என்கிறார். பிறகு "மாதாவே காப்பாற்று" என சொல்கிறார். நாயகியும் காப்பாற்றப்படுகிறார்.

(பொதுநலன் கருதி இன்னும் சில காட்சிகள் விவரிக்கப்படுவதிலிருந்து தவிர்க்கப்படுகிறது)

இத்தனை காட்சிகளும் பார்த்தபின்னர் கடைசியில் இயக்குனரின் பெயர் திரையில் காட்டப்படுகிறது; பெயர் 'நெல்சன்'. இவை தற்செயலாகத்தான் அமைந்திருக்கவேண்டும் எனக் கருதுவோமாக.

சனி, 25 ஆகஸ்ட், 2018

கருப்பு மனிதனின் கடுமையான பயணம்..


கருப்பு மனிதனின் கடுமையான பயணம்..

சிவப்பு தோல்தான் அழகு என்று தீர்மானிக்கப்பட்ட தமிழ் சினிமாவில் கன்னங்கரேல் தோற்றதுடன் நட்சத் திர கனவோடு மதுரையில் இருந்து சென்னை வந்த போது அவருக்கிருந்த தன்னம்பிக்கையை நினைத்துப் பார்த்தால் வியப்பாகவே இருக்கும்.

இவனெல்லாம் நடிக்க வந்துட்டான் என்று எத்தனை யோ பேர் அவமானப்படுத்தி கிண்டல் செய்தாலும் அதை கொஞ்சமும் காதில் போட்டுக்கொள்ளாமல் திரையில் தன்னை மட்டும் நம்பி முன்னேறிய வர்க ளில் முதன்மையானவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. அதற்கப்புறம் விஜயகாந்த்தான்.

கருப்பான ரஜினிக்காவது நகரத்து வாடை, வாட்ட சாட்ட மான உடல்வாகு போன்ற அம்சங்கள் இருந்தன. ஆனால் விஜயராஜ் என்ற விஜயகாந்த்திற்கோ, தன்னம் பிக்கை ஒன்றைத்தவிர எல்லாமே பின்னடைவுகள் தான்-
1979-ல் இனிக்கும் இளமை படத்தில் பெண்ணை அலங் கோலமாய் படமெடுத்து பிளாக்மெயில் செய்யும் சோட்டா வில்லனாக அறிமுகமாகி, பின்னர் கதாநாய கனாக மாறி, 80 களில் அவர் தொடர்ந்து வெற்றிக்கொடி யை  நாட்டியபோது வியக்காத ஆட்களே கிடையாது..

பெரிதும் பிரபலம் ஆகாத தூரத்து இடிமுழக்கம் படத் தில், ‘’உள்ளம் எல்லாம் தள்ளாடுதே’’ என்ற பாடல் விவிதபாரதியில் அவ்வளவு தெறி ஹிட்.. ரெக்கார்ட் பிளேயர்களிலும் தூள் கிளப்பும். ஆனால் படத்தில் கன்னங்கரேல் விஜயகாந்த் அந்த பாடலுக்கு தோன்றி யபோது ஒரு தரப்பு வியந்தது, இன்னொரு தரப்போ பெர்சனாலிட்டியை வைத்து கிண்டலடித்தது.

ஆனால் விஜயகாந்த் என்ற கருப்பு மனிதன் எதற்கும் கலங்கவில்லை. காலம் அந்த வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பனை கைவிடவில்லை.

சட்டம் ஒரு இருட்டறை என 1981ல் ஒரு படம் வந்தது. பெற்றோரை பக்கா பிளானோடு கொலை செய்தவர் களை, பதிலுக்கு பக்கா பிளான்களை தீட்டி வில்லன்கள் ஒவ்வொருத்தராய் போட்டுத்தள்ளுகிற விறுவிறுப் பான  படம். அட்டகாசமாய் செய்து முடித்தார் விஜய காந்த். ஹீரோ திரையில் வரும்போதெல்லாம் தியேட்டரில் கிளாப்ஸ் பறக்கிற ரகமான படம் அது.

அந்தப்படம் எந்த அளவுக்கு ஹிட் என்றால் அமிதாப், ஹேமாமாலினி ரஜினி போன்ற டாப் ஸ்டார்களை வைத்து ஹிந்தியில் ரீமேக் செய்கிற அளவுக்கு ஹிட்டோ ஹிட்..

அதன்பிறகு சாட்சி போன்ற படங்களால் அடித்தட்டு மக்களை ஆக்சன் காட்சிகள் மூலம் தன் வசப்ப டுத்திய விஜயகாந்த், கடுமையாக போராடி முன்னணி நடிகர்களுக்கு இணையாக 80-களின் மத்தியில் மாஸ் கமர்சியல் ஹீரோ என்ற அந்தஸ்த்தை பிடித்தவர்.

சாமான்யனாய் நடித்து வெற்றிகரமாய் ஜொலித்த னால்தான் முன்னணி கதாநாயகனாக ஒரே ஆண்டில் 18 படங்களை வெளிவரச்செய்து சாதனை படைக்கும் அளவுக்கு இருந்தது அவரது திரைப்பயண வேகம்.

வைதேகி காத்திருந்தாள், அம்மன்கோவில் கிழக் காலே, கேப்டன் பிரபாகன், வானத்தைபோல போன்ற படங்களின் பிரமாண்டமான வெற்றியின் முன்,, இன் றைய காலத்தில் வர்த்தகத்திற்காக கட்டமைப்பட்ட விளம்பர பின்னணி கொண்ட வெற்றிகள் நெருங்க முடியுமா என்பது சந்தேகமே.

சினிமா உலகில் மற்ற இரண்டாம் கலைஞர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதில் தனி அக்கறை காட்டியவர். அற்புதமான திறமைகள் இருந் தும் கைகொடுத்து ஆதரிக்க ஆள் இல்லாமல் தத்த ளித்த நவீன சிந்தனைகொண்ட இளைஞர்களுக்கு, ஊமைவிழிகள் படத்தின் மூலம் பெருங்கதவை திறந்துவிட்ட நல்ல மனதுக்காரர்.

அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு, வாய்ப்பு வழங்கப் பட்டு பின்னாளில் புகழின் உச்சியை எட்டிய நடிகர், நடிகை, நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியல் மிகப்பெரியது.

கடனில் தத்தளித்த நடிகர் சங்கத்தை அதனிலிருந்து மீட்டது அவருடைய செயல் திறனுக்கு என்றைக்கும் ஒரு அழிக்கமுடியாத சாட்சி,

மற்றவர்களின் பசியாற்றுவதில் அவருக்கிருந்த தாயுள் ளத்தை 80 களிலேயே அவரை கூர்ந்து கவனித்தவர் களுக்கு நன்கு தெரியும். கல்விக்காக ஏங்கியவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் ஆகியோருக்கு உதவுவதற்காக அவர் 30 ஆண்டுகளுக்கு முன்பே அவர் நீட்டிய கரங்கள், வியக்கத்தக்கவை. அப்போதெல்லாம் அவர் அரசியலுக்கு வரவில்லை என்பது நினைத்துப் பார்க்கவேண்டிய ஒன்று

அரசியல் கட்சியை ஆரம்பித்து தோற்றுப்போன ஏராள மான தமிழக நட்சத்திரங்கள் மத்தியில், எம்ஜிஆருக்கு பிறகு வெற்றிகண்ட ஒரே நட்சத்திரமும் விஜயகாந்த் தான்.

ஒரு கட்சியை தொடங்கி, கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகளுக்கு இடையே நடை போட்ட விதம் அலாதியானது. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற முக்கிய பொறுப்புவரை அவர் எட்டிய வேகம்,தமிழக அரசியலில் ஒரு விறுப்பான வரலாறு.

கம்பீர குரல் வளத்தால் சினிமாவிலும் அரசியல் மேடைகளிலும் வலம் வந்த அவருக்கு காலம் செய்த கோலம் உடல் நலம் விஷயத்தில் வேறுமாதிரியாக விளையாடிவிட்டது..

விரைவில்.பூரண நலம் பெற்று பழைய பன்னீர் செல்வமாய்.. விஜயகாந்தாய் வரவேண்டும்..

அபரிதமான அன்பு கொண்டவர்களால் கேப்டன் என்றழைக்கப்படும் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

-வெங்கி

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

உழவுக்கு மரியாதை செய்த நடிகைக்கு குவியும் பாராட்டு


#வீட்டுமனைகளை வாங்கி
#விவசாய_நிலமாக மாற்றிவரும் கலச்சாரநாயகி #தேவயானி …

உழவுக்கு மரியாதை செய்த நடிகைக்கு குவியும் பாராட்டு..

பொய்த்துப் போன மழை, தொடர்ந்து விவசாயத்தில் ஏற்பட்டு வரும் நஷ்டம், நகரமயமாக்கல் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் தமிழகத்தில் விவசாயம் பொய்த்துப் போய் வருகிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்.

இதையடுத்து பெரும்பாலான விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்கத் தொடங்கியுள்ளனர். ரியல் எஸ்டேட் முதலாளிகளும் விவசாய நிலங்களை கூறுபோட்டு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை தேவயானி ஈரோடு அருகே தனது தோட்டத்துக்கு அருகே மனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்த பிளாட்டுகளை வாங்கி அதில் விவசாயம் செய்து வருகிறார்.

நடிகை தேவயானியின் கணவர் இயக்குநர் ராஜகுமாரன், ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த சந்திப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். சொந்த ஊருக்கு அடிக்கடி செல்லும் தேவயானி தம்பதிகள், அருகில் உள்ள மாத்தூரில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.

இதனால் அடிக்கடி ஊருக்குச் சென்று தங்கள் விவசாய நிலங்களை குழந்தைகளுடன் பார்த்து வருவார்கள்.

இந்நிலையில் அவர்களது தோட்டத்துக்கு அருகே ஒருவர் 2 ஏக்கர் விவசாய நிலத்தை விற்பனை செய்தற்காக பிளாட்டுகளாக மாற்றியுள்ளார். இதையறிந்த தேவயானி அந் நபரிடம் 2 ஏக்கர் வீட்டு மனைகளையும் விலை கொடுத்து வாங்கியுள்ளார்.

பின்னர் அதை விவசாய நிலமாக மாற்றி தற்போது 2 ஏக்கரில் செண்டுமல்லி பயிரிட்டுள்ளார். இதற்காக சொட்டுநீர் பாசனம் வைத்து தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச ஏற்பாடு செய்துள்ளார். தற்போது அந்த விவசாய நிலம் முழுவதும் செண்டு மல்லி பூத்துக் குலுங்குகிறது. இந்த தோட்டத்தை திருவிழாவுக்காக சொந்த ஊர் வந்த தேவயானி குடும்பத்தினர் சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.

விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டு வரும் நிலையில், நடிகை தேவயானி, பிளாட்டுகளை விவசாய நிலங்களாக மாற்றி சாகுபடி செய்து வருவதை அப்பகுதி விவசாயிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

வாழ்த்துக்கள் சகோதரி ...

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

முன்றாவது முறையாக கர்ப்பமடைந்த நடிகை ரம்பா, கணவர் செய்த செயலால் ஷாக் ஆன ரசிகர்கள்.! புகைப்படம் உள்ளே.!

முன்றாவது முறையாக கர்ப்பமடைந்த நடிகை ரம்பா, கணவர் செய்த செயலால் ஷாக் ஆன ரசிகர்கள்.! புகைப்படம் உள்ளே.!

திரையுலகில் ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை ரம்பா.
மேலும் 2010ம் ஆண்டு இவர் கனடாவை சேர்ந்த இந்திரன் பத்மநாதன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்
 பின் இடையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து இருந்தனர்.பின்னர் சமாதானமாய் தற்போது ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். 
இந்நிலையில் ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மாவான ரம்பா தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார்.
இந்த நேரத்தில் ரம்பாவின் கணவர் இந்திரன் அவரது மனைவிக்கு சீமந்தம் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை கண்ட ரசிகர்கள் ரம்பாவுக்கு மீண்டும் ஒரு குழந்தையா என அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

ராய் லட்சுமியை இயக்கும் எஸ்.ஜே. சூர்யாவின் உதவியாளர்!

ராய் லட்சுமியை இயக்கும் எஸ்.ஜே. சூர்யாவின் உதவியாளர்!

ராய் லட்சுமி அடுத்ததாக சிண்ட்ரலா திரைப்படட்தில் நடிக்கிறார்.
ஹாலிவுட்டின் மிகப்புகழ்பெற்ற கற்பனை கதாப்பாத்திரம் சிண்ட்ரலா. இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க சரியான நடிகை தமிழில் யார் உள்ளார்கள் என யோசித்தால் அந்த அழகிய கதாப்பாத்திரத்திற்கு சிலர் மனதில் தோன்றலாம்.
ஆனால், அந்த யோசனையை ஓரமாக வைத்துவிட்டு நீங்கள் ராய் லட்சுமியை சிண்ட்ரலாவாக நினைத்துக்கொள்ளுங்கள் எனக் கூறுகிறார் இயக்குனர் வினோ வெங்கடேஷ்.

இசை திரைப்படதில் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர், இப்போது ஹாரர், த்ரில்லர், ம்யூசிகல், ஃபேண்டசி என எல்லா வகைகளையும் ஒன்றினைத்து சிண்ட்ரலா என்ற திரைப்படத்தை இயக்குகிறார்.
இதில் நடிகை, ராய் லட்சுமி நகர்புற கிதார் கலைஞியாக நடிக்கிறார்.
ராய் லட்சுமிக்கு யாரும் ஜோடி இல்லையாம். படத்தின் கதை சென்னை நகரிலும் ஒரு காட்டுக்குள்ளும் நடப்பதாக திட்டமிட்டுள்ளனராம். அதனால் சென்னை, ஊட்டி மற்றும் வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

த்ரிஷா, ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், நயன்தாரா, மனிஷா யாதவ் ஆகியோரிடம் இயக்குனர் கதை சொல்லி சில காரணங்களால் அவர்கள் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். இறுதியாக ராய் லட்சுமியை சிண்ட்ரலாவாக்க முடிவு செய்துவிட்டார்.
மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

சிகப்பு நிற சேலையில் கவர்ச்சி காட்டும் அழகி பவ்யா!

சிகப்பு நிற சேலையில் கவர்ச்சி காட்டும் அழகி பவ்யா!

நடிகைகள் மற்றும் மாடல் அழகிகள் போட்டோஷூட் நடத்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் புகைப்படங்கள் தான் அவர்கள் கையில் இருக்கும் ஒரு அத்தியாயம்.
தனக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இவர்கள் இப்படி புகைப்படங்களை எடுக்கிறார்கள்.
இப்படி செய்வது ஒன்றும் தவறில்லை, எளிதான ஒரு விஷயம் தான். பவ்யா என்னும் ஒரு மாடல் அழகியும் சிகப்பு நிற சேலையில் ஒரு போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.

புதன், 8 ஆகஸ்ட், 2018

மறக்க முடியாத நட்பு பறவைகள்.. காவிரி தந்த தவ புதல்வர்கள் கலைஞரும்- நடிகர் திலகமும்!



மறக்க முடியாத நட்பு பறவைகள்.. காவிரி தந்த தவ புதல்வர்கள் கலைஞரும்- நடிகர் திலகமும்!

சென்னை: காவிரி தந்த தலைதாயின் மகன்கள்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், கலைஞர் கருணாநிதியும்.
திராவிடர் கழக நடிகர்களில் ஒருவராக இருந்தபோதிலிருந்தே சிவாஜிக்கு கலைஞருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு சிவாஜியின் எதிர்கால வாழ்க்கையை ஒளிமயமாக மாற்றியது.
1952-ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் வீசிய புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக சார்பில் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக கலைஞர் எழுதிய "தூக்கு மேடை" நாடகம் நடத்தப்பட்டது. இதில் கலைஞரும் நடிகர் திலமுகம் இணைந்து நடித்தார்கள். அதே ஆண்டில் "பராசக்தி" படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதும் பொறுப்பை ஏற்றார் கலைஞர்.
பராசக்தி - அறிமுகம்
கலைஞரின் பங்கு
குணசேகரனாக நடிக்கும் வாய்ப்பு சிவாஜிக்கு வந்தது.

ஆனால் சிவாஜி கணேசன் நடித்த சில காட்சிகள் 'பராசக்தி'யின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏவிஎம் செட்டியாருக்கு திருப்தியளிக்கவில்லை. எனவே சிவாஜியை மாற்றி வேறு நடிகரை போட வேண்டும் என்று கண்டிப்பாய் சொல்லிவிட்டார். ஆனால் கலைஞரும், நேஷனல் பெருமாளும், இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சுவும் உறுதியாக நின்று சிவாஜியையே நடிக்க வைத்தார்கள். பராசக்தி படத்தின் தகவல்கள் அனைத்தும் கலைஞரின் 'நெஞ்சுக்கு நீதி'யில் அறிய முடிகிறது.
கூர்மையான வசனம்
திக்குமுக்காடிய ரசிகர்கள்
எனவே சிவாஜி கணேசனை திரையுலகில் அறிமுகம் செய்ததிலும், கதாநாயகனாக உயர்த்தியதிலும் கலைஞருக்கு பெரும் பங்கு உண்டு. கலைஞரின் கூர்மையான - ஆற்று நீரைப்போன்ற தெளிவான - மேகங்களை கிழித்து செல்லும் இடிமுழக்கமான வசனங்கள்தான் பராசக்தியின் வெற்றிக்கு அடிப்படை காரணமாக இருந்தது. அதற்கு பிறகு திரும்பிப்பார், பணம், மனோகரா, ரங்கோன்ராதா, புதையல், குறவஞ்சி என கலைஞர்-சிவாஜியின் கூட்டு உழைப்பால் உருவான படங்களை கண்டு தமிழ் ரசிகர்கள் திக்குமுக்காடி போய்விட்டனர்.
பரவசத்தில் இளைஞர்கள்
மயக்கிய மனோகரா
திரும்பிபார், மனோகரா இரண்டும் வெள்ளித்திரையை வசனமழையால் நனைத்த படங்கள் ஆகும். அழுத்தம் திருத்தமாக உரிய ஏற்ற இறக்கத்தோடு அதற்குரிய உணர்ச்சிப்பெருக்காடு சிவாஜி முழங்கிய வசனங்கள் ரசிகர்களை - குறிப்பாக இளைஞர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. அரசனை மயக்கி தன் பிடியில் வைத்திருக்கும் வசந்தசேனை பற்றி தன் தாயிடம் மகன் மனோகரன் குமுறுகிறான்:



கலைஞரின் வசனம்
தெறிக்க விட்ட சிவாஜி
"புரையோடி விட்ட புண்ணுக்குப் புனுகுப்பூச்சு, பொல்லாங்குக்காரியின் போலி வேடத்தை பொசுக்கப் பொறுமை! போதுமம்மா பொறுத்ததெல்லாம்- உத்திரவு கொடுங்கள்.. உருத்தெரியாமல் ஆக்குகிறேன் அந்த ஊர் கெடுப்பவளை!"
"பரம்பரைக்கேற்பட்ட களங்கம் பாண்டியன் முத்து விஜயனால் மட்டுமல்ல, பாதகி வசந்தசேனையாலும்தான்.. ஏமாந்த காலத்தில் வெற்றி முரசு கொட்டிய வெறியனை மட்டுமல்ல, உங்கள் இன்ப வாழ்வில் குறுக்கிட்ட வஞ்சகியையும் விட்டு வைக்காது இந்த வாள்!"-என்று கலைஞரின் வரிகளை வீரியத்தோடு தெறிக்கவிட்டார் சிவாஜி.
பொருத்தமான ஜோடி
நண்பனுக்கு சிலை
இதற்கு பிறகு கலைஞர் வசனங்களை பேசக்கூடிய பொருத்தமான நடிகர் சிவாஜிதான், சிவாஜிக்கு ஏற்ப பொருத்தமாக எழுதக்கூடியவர் கலைஞர் ஒருவர்தான் என்பது அனைத்து தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாயிற்று. சிவாஜியின் மீது கொண்டிருந்த தீராத அன்பினாலும், நட்பினாலும் 2006-ல் கருணாநிதி முதல்வர் ஆனதும் கடற்கரை சாலையில் சிவாஜி கணேசனுக்கு சிலையை வைத்து மகிழ்ந்தார்.
என் வயதை எடுத்துகொள்
நட்பு பறவைகள்
ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. அதில் கலைஞரும், சிவாஜியும் உட்கார்ந்திருக்கிறார்கள். கலைஞரை விட வயதில் சிறியவரான சிவாஜி இவ்வாறு பேசுகிறார்: "நீ இன்னும் நீண்ட நாட்கள் வாழ வேண்டும்.. நண்பனே, என் வயதில் இரண்டை நீ எடுத்துக் கொள். அதற்கு மேலும் என்னால் கொடுக்க முடியாது. ஏனெனில், அதுவரை நானே இருப்பேனோ இல்லையோ".... இதை சொன்ன 3 வருடங்களில் சிவாஜியின் உயிர் பிரிந்துவிட்டது.
மறக்க முடியாத நட்பு பறவைகள் கலைஞரும்- நடிகர் திலகமும்!

சனி, 4 ஆகஸ்ட், 2018

அந்த விசயத்துல என்னை எத்தனை பேர் ஏமாத்திருக்காங்க தெரியுமா? வருத்தத்தில் புலம்பும் நடிகை கஸ்தூரி.!

அந்த விசயத்துல என்னை எத்தனை பேர் ஏமாத்திருக்காங்க தெரியுமா? வருத்தத்தில் புலம்பும் நடிகை கஸ்தூரி.!

பண விவகாரத்தில் தன்னை பலரும் ஏமாற்றியுள்ளதாக நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகை கஸ்தூரி சமூக வலைதளத்தில் எப்பொழுதும் மனதில்பட்டதை பேசிக்கொண்டு ஆக்டிவாக இருப்பவர். மேலும் அவர் டிவிட்டரில் சமூகம், சினிமா, அரசியல் சார்ந்த பல விசயங்களுக்கு எதிராகவும்,ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார்.
அதுமட்டுமின்றி அரசியலில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும் துணிச்சலாக கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்.அதனால் அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது உண்டு.

மேலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் அவர் பங்கேற்று தைரியமாக பேசி வருகிறார்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் காஞ்சிபுரம் சிலை மோசடி விவகாரம் குறித்து அரசு துறைகள் என்றாலே லஞ்சம், மோசடி திருட்டு என்பது வாடிக்கையாகி விட்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.
நான் வரி ஏய்ச்சதில்லை;என்னை பலர் காசு விஷயத்துல ஏய்ச்சிருக்காங்க ! பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுக்கிட்டதுதான் அதிகம் ! காட்டுறாங்களே, வெயிலு மழையில கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசில மூணு ரூபா சம்பளம், அதுபோல தான் !
— Kasturi Shankar (@KasthuriShankar)


அதற்கு ரசிகர் ஒருவர் நீங்கள் நடித்து வாங்கிய ஊதியத்துக்கு உரிய வருமான வரி செலுத்தியிருக்கீங்களா?’ என அவரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். 
அதற்கு அவர் 'நான் வரி ஏய்ச்சதில்லை, என்னை பலர் காசு விஷயத்துல ஏய்ச்சிருக்காங்க! பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுக்கிட்டதுதான் அதிகம்! ’தமிழ்படம் 2’வில் காட்டுவது போல் மழையில் கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசியில மூணு ரூபா சம்பளம், அது போல தான்!' என பதிலளித்துள்ளார் .
இதையடுத்து ரசிகர்கள் பலரும் , அவருக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

செவ்வாய், 24 ஜூலை, 2018

உடலுறவுக்கு பின் உணவு கூட கொடுக்கவில்லை : ஸ்ரீரெட்டி கண்ணீர்

உடலுறவுக்கு பின் உணவு கூட கொடுக்கவில்லை : ஸ்ரீரெட்டி கண்ணீர்

தன்னை படுக்கையில் பயன்படுத்திய திரையுலகினர் தன்னை வெறுங்கையோடு அனுப்பினார்கள் என நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். 
 
முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சி பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார். 
 
அந்நிலையில், இயக்குனர் வாராகி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்துள்ளர். அதில், நடிகை ஸ்ரீரெட்டி தன்னை திரைத்துறையை சேர்ந்த பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும், இவரே சம்மதித்து பலரிடம் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக கூறியுள்ள இவர் மீது விபச்சார பிரிவின் கீழும், மிரட்டி பணம் பறிக்கும் பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இது ஸ்ரீரெட்டிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், தனது ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் “நான்  மிகவும் வருத்தத்துடன் இருக்கிறேன். எனக்கு இது பழக்கப்பட்டதுதான். பட புரமோஷனுக்காக இதை செய்துள்ளீர்கள். ஒரு பெண் தாங்கிக்கொள்ள முடியாத புகாரை என் மீது சுமத்துகிறீர்கள். நான் ஒருவரிடமிருந்தும் ஒரு பைசா பணம் கூட பெறவில்லை. உங்களை மறக்க மாட்டேன். நான் யாரையாவது மிரட்டி பணம் பறித்தேன் என்பதற்கான ஆதாரத்தை கொடுத்துவிட்டு, என் தலையை வெட்டி விடுங்கள். படுக்கையை பகிறும் விபச்சாரிகள் கூட பணத்தை பெறுவார்கள். ஆனால், என்னுடன் உடலுறவு வைத்துவிட்டு உணவு கூட வழங்காமல் என்னை வெறும் வயிற்றோடு அனுப்பினர். நான் நடிகர் சங்கத்தின் அப்பாயின்மெண்டுக்காக காத்திருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சனி, 21 ஜூலை, 2018

சர்வதேச அளவில் சிறந்த நடிகருக்கான விருது விஜய்க்கு..

சர்வதேச அளவில் சிறந்த நடிகருக்கான விருது விஜய்க்கு..







மெர்சல்’ படத்தில் நடித்ததற்காக சர்வதேச விருதான IARA-க்கு சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் என்கிற பிரிவுகளில் நடிகர் விஜய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் திரைப்பட நடிகர் விஜய் மூன்று வேடங்களில் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. உலகளவில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், வசூலையும் வாரிக் குவித்தது.
இந்நிலையில், இந்த படத்தில் நடித்ததற்காக IARA எனும் சர்வதேச விருதுக்கான பட்டியலில் நடிகர் விஜய்யின் பெயர் இடம்பெற்றுள்ளது. சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் ஆகிய பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
இந்த விருதுக்கான வாக்குப்பதிவு இணையதளத்தில் நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றி பெறுபவர் சிறந்த நடிகராக தெரிவு செய்யப்படுவார்.

ரூ 1000 கோடிக்கு மேல் அதிக வசூல் சாதனை படைத்த படம் எது?

ரூ 1000 கோடிக்கு மேல் அதிக வசூல் சாதனை படைத்த படம் எது?

தமிழ் சினிமாவின் மார்க்கெட் தற்போது தமிழகத்தில் மட்டுமில்லாது, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மலேசியா, சிங்கப்பூர், எமிரேட்ஸ், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என பெருகிக்கொண்டே போகிறது. அப்படி இருக்க பெரிய நடிகர்களின் படங்கள் எளிதாக ₹100 கோடிகள் வசூல் செய்துவிடுகிறது..
தற்போதைய சூழலில் தமிழ் சினிமாவில் பெரிய நடிகர் ரசிகர்களின் கெத்து என்னவென்றால், அவர்களது படத்தின் வசூல் மட்டுமே. அதன் பின்னர் தான் தியேட்டர் கட் அவுட், பாலபிஷேகம் மற்றவை எல்லாம். அதற்காக கூட நடிகர்கள் கடுமையாக நாளுக்கு நாள் உழைத்து காலத்திற்கேற்ப ட்ரெண்டில் படம் கொடுத்து ரசிகர்களை தக்க வைத்துக்கொள்கின்றனர். 
அப்படியாக, இது வரை தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

எந்திரன் – 289 கோடி

கபாலி – 286 கோடி
மெர்சல் – 254 கோடி

ஐ – 239 கோடி
விஸ்வரூபம் – 180 கோடி
லிங்கா – 152 கோடி

தெறி – 143 கோடி
பாகுபலி - 547 கோடி


பாகுபலி 2 - 1630 கோடி

இதில் உங்களுக்கு பிடித்த நடிகர் இருந்தால் கீலே உள்ள கமெண்ட்-ல் 
கமெண்ட் பண்ணுங்க...

வியாழன், 19 ஜூலை, 2018

வெளிநாட்டில் விபச்சாரம் செய்யும் தமிழ் நடிகைகள் : ஸ்ரீரெட்டி பகீர் தகவல்...

வெளிநாட்டில் விபச்சாரம் செய்யும் தமிழ் நடிகைகள் : ஸ்ரீரெட்டி பகீர் தகவல்...

Last Modified புதன், 18 ஜூலை 2018 (12:35 IST) தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகள் வெளிநாடுகளுக்கு சென்று விபச்சாரம் செய்து வருவதாக நடிகை ஸ்ரீரெட்டி அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.  
தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் “சமீபத்தில் அமெரிக்க காவல்துறையினர் சிகாகோவை சேர்ந்த பாலியல் தொழில் செய்யும் ஒரு கும்பலை கைது செய்துள்ளனர். அந்த வழக்கு விசாரணையில் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகைகள் அங்கு பாலியல் தொழில் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  
பல முன்னணி நடிகைகளும், நடிகர்களின் வாரிசுகளும் வெளிநாடு சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். இந்த விவகாரத்தில் அமெரிக்க போலீசாருக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்து விசாரணைக்கு உதவி வருகிறேன்” என அவர் தெரிவித்தார். 
 
மேலும், முன்னணி நடிகைகள் ஒரு வருடத்தில் இங்கு சம்பாதிப்பதை அங்கு சென்று ஒரு வாரத்திலேயே சம்பாதித்து விடுவார்கள் எனவும் அவர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் தனது  முகநூல் பக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள், தங்களின் வாயை திறந்தால் அதிர்ச்சியில் நீங்கள் மரணமடைந்து விடுவீர்கள் என ஒரு பதிவை ஸ்ரீரெட்டி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

2.O போஸ்டரில் ஓளிந்துள்ள படத்தின் மைய கதை!

2.O போஸ்டரில் ஓளிந்துள்ள படத்தின் மைய கதை!

இயக்குனர் ஷங்கரின் “ஐ” படத்திற்கு பிறகு பிரமாண்ட பொருட்ச் செலவிவில் உருவாகி வரும் படம் “2.O” எந்திரன் படத்தின் 2 ஆம் பாகம் என்று கூறப்படும் இந்த படத்தில் ஐ படத்தில் நடித்த எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துக்கள்ளர்.

அது போக முதன் முறையாக தமிழ் சினிமாவில் விஜயமாகியுள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இந்த படம் வரும் தீபாவளிக்கும் வெளியாகும் என்று ஏதிர்பார்க்கபட்டது.ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படம் அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Hollywood தரத்திற்கு இணையாக உருவாகியுள்ள இந்த படத்தில் அக்ஷய் குமார் ஒரு பறவை வேடத்தில் இருப்பதுபோல போஸ்டர்களும் வெளியானது. அதே போல இந்த படத்தின் கதையும் பறவைகளை சம்மந்தப்பட்ட கதை தான் என்று ஒரு சில தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த படத்தில் செல்போன் டவர்களால் சிட்டுக்குருவி போன்ற அறிய பறவை இனங்கள் அழிந்து வருகிறது என்று வன ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றாரனர். அப்போது திடீரென்று ஒரு பறவைக்கு மாபெரும் சக்தி கிடைத்து விடுகிறது. அந்த பறவை தான் அக்ஷய் குமார், அக்ஷய் குமாருக்கும் ரஜினிக்கும் இடையே நடக்கும் சண்டைதான் கதை கரு.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் மற்றுமொரு போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் நீங்கள் நன்றாக உற்று பார்த்தாள் பல செல்போன்களும், பறவைகளும் இருக்கும் உருவங்களை பயன்படுத்தி தான் இந்த போஸ்டரை உருவாக்கியுள்ளனர். எனவே, ஏற்கனவே வெளியான தகவலின்படி இந்த படம் வளர்ந்து வரும் விஞ்ஞானத்திற்கும், இயற்கைக்கும் நடக்கும் ஒரு யுத்தமாக இருக்கும் கதையாக தான் இருக்கும் என்று உறுதியாகியுள்ளது.