திங்கள், 26 மார்ச், 2018

வருங்கால கணவர் விக்கி முதன்முதலாக வெளிப்படையாக அறிவித்த நயன்தாரா

வருங்கால கணவர் விக்கி முதன்முதலாக வெளிப்படையாக அறிவித்த நயன்தாரா

சென்னை : தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா நேற்று ஒரு விருது விழாவில் கலந்துகொண்டார்.
நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், இருவரும் வெளிப்படையாக தங்களது காதல் பற்றி தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், விருதைப் பெற்ற நயன்தாரா, விக்னேஷ் சிவனை தனது வருங்கால கணவர் என வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதனால், ரசிகர்கள் செம குஷியாகியுள்ளனர்.
லேடி சூப்பர்ஸ்டார் 
நயன்தாரா
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. எல்லோராலும் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படுகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் அதிகளவில் நடித்து வருகிறார் நயன்.

காதல் 
விக்னேஷ் சிவன்
நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், இருவரும் வெளிப்படையாக தங்களது காதல் பற்றி தெரிவிக்கவில்லை. எனினும், இருவரும் நெருங்கியிருக்கும் புகைப்படங்கள், பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிப்பது போன்றவை மட்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

வெளிப்படையாக அறிவித்த நயன் 
பகிரங்க அறிவிப்பு
இந்த நிலையில், தற்போது காதலர் விக்னேஷ் சிவன் பற்றி முதன்முறையாக பொது மேடையில் நடிகை நயன்தாரா பகிரங்கமாக அறிவித்துள்ளார். நேற்று, நயன்தாரா சென்னையில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 'அம்மா, அப்பா, சகோதரர், வருங்கால கணவர் என்று அனைவருக்கும் முதலில் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.

கல்யாணம் சீக்கிரம் 
ரசிகர்கள் ஆச்சரியம்
விக்னேஷ் சிவனை தனது வருங்கால கணவர் என்று முதன்முதலாக நயன்தாரா கூறியதைக் கேட்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். நயன்தாரா விக்னேஷ் ஆகியோர் தொடர்பாக இதுவரை பரவி வந்த வதந்திக்கு இது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. Thanks Newsing.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக