காலாவில் உள்ள முக்கிய அரசியல் குறியீடுகள்!
காலா டீசரில் பல தீவிரமான அரசியல் விஷயங்களை குறியீடாக இயக்குநர் ரஞ்சித் கையாண்டுள்ளது குறித்து இணையத்தில் சூடுபறக்க விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன.
த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை அரசியலை சினிமா எனும் மாஸ் மீடியம் வழியாக உரக்கப் பேசக்கூடிய கலைஞராக இயக்குநர் ரஞ்சித் கருதப்படுகிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் பேசிய “அட்டக்கத்தி” இன்றுவரை ரஞ்சித்தின் சிறந்தப் படமாக பேசப்படுகிறது. அடுத்தப்படமான, ‘மெட்ராஸ்’ ரஜினியை ஈர்த்து, தனக்கு படம் பண்ணித் தாருங்கள் என்று அழைப்பு விடுக்கும் வகையில் பெரிய ஹிட்டானது.
மெட்ராஸ் படம் பேசிய குறியீடுகள் பெரும் பேசுபொருளாகின. மக்களை பிரிக்கும், பிரிவினையை தூண்டும், அரசியல் சதிக்கு பலிகளமாகும் “சுவர்” மீது நீலத்தை ஊற்றும் இறுதிக் காட்சிகளாட்டும், படம் முழுக்க விரவிக்கிடந்த நீல நிறமாகட்டும் தலித் விடியலை சுட்டி நிற்பதாக சமூக வலைதளங்களில் பொதுவாக பேசப்பட்டது. நாயகன் குழந்தைகளுக்கு அரசியல் கற்பிப்பதாய் முடியும் மெட்ராஸ் படத்தின் இறுதிக்காட்சியின் பின்னணியில் நவீன இந்தியாவை வடிவமைத்த சிற்பிகளில் முக்கியமானவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியுமான அம்பேத்கர் படம் ஒளிரும். இப்படி பொதுவாக குறியீடுகளால் நிரம்பியவை ரஞ்சித் படங்கள்.
“கால் மேல கால் போடுவேன்டா” என சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான வலுவான குரலாக கபாலியில் ரஜினியை வைத்து முழங்கிய ரஞ்சித், அதேபாணியை சமரசமின்றி, காலாவிலும் மேற்கொண்டிருப்பார் என்றே பொதுவாக அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
ரஞ்சித் மீதான விமர்சனமாக பொதுவாக முன்வைக்கப்படுவது அவர், பெரியாரையும் திராவிட அரசியலையும் புறக்கணிக்கிறார் என்பது. காலா படத்தின் பெயர் அறிவிப்பே அக்கேள்விக்கு ஒருவகையில் மறைமுக பதிலாய் அமைந்ததாகவே கருதமுடியும். காலா என்றால் கறுப்பு. கருமை என்பது திராவிட அரசியலின் குறியீடு. டீசர் முழுக்க ரஜினி கறுப்பு வண்ணத்தில் ஆடை அணிந்துள்ளதுடன், கறுப்பு பொடியும் தூவப்படுகிறது. தேர்தல் அரசியல் பாதையில் நம்பிக்கைக் கொள்ளாமல் போராட்ட அரசியலை கையில் எடுத்து கடைசி வரை போராடிய பெரியார். காலா டீசர் “போராடுவோம்... போராடுவோம்...” என்ற முழக்கத்தோடே தொடங்குகிறது.
“காலா என்ன பேரு இது?” என்ற அரசியல்வாதியான நானாபட்கரின் கேள்விக்கு, “காலான்னா கறுப்பு... காலன் - கரிகாலன்... சண்டைப் போட்டு காப்பவன்...” இப்படிதான் சொல்கிறது டீசர். “காலா - கரிகாலன்” என்று படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டபோதே, மாமன்னன் கரிகாலனின் பட்டப்பெயரான “திருமாவளவன்” என்பது பொதுவாக இணையவெளியில் பேசப்பட்டது.
“i want make this clean & pure” என்று பேசும் அரசியல்வாதி கேரக்டர் சமகாலத்தை பிரதிபலிக்கிறதோ என்ற எண்ணத்தை தவிர்க்கவே முடியவில்லை. தலித் - முஸ்லீம் ஒற்றுமையை உணர்த்தும் குறியீடாய் சமுத்திரக்கனியின் கேரக்டரையும், தலையில் ரஜினி குல்லா அணிந்திருக்கும் படங்கள் வெளியானதையும் இங்கு நினைவில் கொள்ளலாம். டீசரில் இஸ்லாமியர்களுடன் குடும்பத்துடன் அமர்ந்து சிரித்து மகிழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
“கறுப்பு - உழைப்போட வண்ணம்!” எனும் வசனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பில் உழைப்பு என்பதை “Proletariat” என்று மொழியாக்கம் செய்துள்ளனர். உழைப்பு என்பதை Work, Labour என பல சொற்களில் எளிமையாக புரியும்படி சொல்லியிருக்க முடியும் என்றாலும், Proletariat என பொதுவாக மார்க்சிய இலக்கியங்களில் கையாளப்படக் கூடிய சொல்லையே பயன்படுத்தியுள்ளது படத்தின் சிவப்பு வண்ணத்தை எடுத்துக்காட்டுவதாக திகழ்கிறது. காலா என்ற படத்தின் பெயர் தொடங்கி உற்றுநோக்கினால் சிவப்பும் ஆங்காங்கே விரவிக் கிடக்கிறது.
ரஜினியின் முத்து படத்தில் வரும் “ஒருவன் ஒருவன் முதலாளி” பாடல், “மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம் தான் உணர மறுக்கிறது” என மனித முயற்சிக்கு எதிராய் மண்ணை (இயற்கையை) பெரிதாய் போற்றும் வரிகளின் கருத்தியலுக்கு முற்றிலும் மாறாக, யோகிபீ குரலில் “வா உன்னையும், மண்ணையும் வென்று வா!” என தொடங்குகிறது டீசரின் பாடல்! நிலத்துடன் சாதியத்தை தொடர்புபடுத்திப் பார்ப்பதும், நிலத்தின் மீதான ஆதிக்க சாதிகளின் ஆதிக்கத்தை முடிவுக் கொண்டு வருவது சாதி ஒழிப்பிற்கான மிக முக்கியமான படிக்கல்லாக பார்ப்பது பொதுவுடமை தத்துவத்தின் வழமைகளில் ஒன்று.
டீசரில் வரும் சண்டைக் காட்சியில் பின்னணியில் உள்ள ஜூப்பின் எண் “PR 1931” என்று காணப்படுகிறது. இதை குறியீடு என்று சிலர் எழுதி வருகின்றனர். 1931-ல் பெரியார் சிவப்பின் நாடான ரஷ்யா பயணம் மேற்கொண்ட ஆண்டு என சிலர் எழுதுகின்றனர்.
இவ்வேளையில், தமிழகத்தில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடியவரும், “பறையன்” இதழை நடத்தியவருமான ராவ் பகதூர் ரெட்டைமலை சீனிவாசனுக்கு ராவ் பகதூர் பட்டம் வழங்கப்பட்டது இதே 1931ல் தான். அதே ஆண்டு அம்பேத்கருடன் இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்றதுடன், ஒடுக்கப்பட்ட மக்கள் பல்வேறு உரிமைகளை சட்டப்பூர்வமாக வெல்வதற்கு காரணமாக இருந்தார்..
அவரது செயல்களை நினைவுக்கூறும் வகையில் இதனைக் கொள்ளலாம் என சிலர் கூறுகின்றனர்.
இதேபோல், டீசரின் இறுதியில் கென்யாவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும், கிரீன் பெல்ட் இயக்கத்தை தோற்றுவித்தவரும், பெண்ணுரிமை போராளியும், நோபல் பரிசு பெற்ற முதல் ஆப்ரிக்க பெண்ணுமான வாங்கரி மாதாயின் படமும் இடம்பெற்றுள்ளது.
சமீபத்தில் இதழொன்றில் வெளியான காலா படத்தில் ரஜினி, மேஜையில் அமர்ந்தபடி மற்றொரு மேஜை மீது கால் போட்டு சிரிக்க சுற்றி அரசியல் குறியீடுகள் நிரம்பி வழிந்தது. முதலாவதும், முக்கியமானதும் சுவற்றில் காணப்பட்ட மார்க்சிய தத்துவாசிரியர் கார்ல் மார்க்ஸ் படம். பின்னால் இருக்கும் நூல் அலமாரியில் மார்க்ஸ் எழுதிய முக்கிய அரசியல்-பொருளாதார நூல் தொகுப்பான “மூலதனம்”, சீன கம்யூனிஸ்ட் தலைவர் மாவோவின் தொகுப்பு நூல்கள், ரஷ்ய கம்யூனிஸ்ட் புரட்சியாளர் டிராட்ஸ்கியின் சுய சரிதையான “என் வாழ்க்கை” என கம்யூனிச நூல்கள் நிரம்பிக் கிடப்பது ஒருபுறம்.
மறுபுறம் மேஜையின் மீது இலங்கை தலித் இலக்கியமான 'கே.டானியல் படைப்புகள்' காணப்படுகிறது. ஈழத்தமிழர்கள் மத்தியில் இருந்த சாதியம் தலித் மக்களை ஒடுக்கியது தொடர்பான மிக முக்கிய பதிவு இந்நூல். இதேபோல், திராவிட அரசியல் கருத்தீனம் ஆரிய இலக்கிய பண்பாட்டுக்கு எதிராக தீவிரமாக இயங்கிய காலத்தில் எழுதப்பட்ட இராவணக் காவியமும் மேஜையில் இருக்கிறது.
ராமபிரானை மையப்படுத்தி நாயகத்தன்மையுடன் ராமாயணம் எழுதப்பட்ட நிலையில், அதற்கு எதிராக திராவிட அரசியல் கருத்தியலை மையமாகக் கொண்டு ராவணனை நாயகத்தன்மையில் சித்தரிக்கும் நூல் இராவணக் காவியம். மொத்தத்தில் கறுப்பு + சிவப்பு + நீலம் என அரசியல் குறியீடாய் காலா திகழ்கிறதோ என்ற எண்ணத்தையே டீசரும், படத்தில் இருந்து கசிந்த படங்களும் அறிவுறுத்துகின்றன. இந்த கரிகாலனின் முழு ரவுடித் தனத்தையும் திரையில் ஏப்ரல் 27ம் தேதி பார்த்தால்தான் மிச்சம் தெரியும்.
'கபாலி' இயக்குனரின் சாதி தெரியுமா?
ஐயா,
மருது,
எஜமான்,
கொம்பன்,
படையப்பா,
குட்டிப் புலி,
நாட்டாமை,
மேட்டுக்குடி,
மறுமலர்ச்சி,
தேவர்மகன்,
சேனாதிபதி,
கொடி வீரன்,
விருமாண்டி,
ஜெண்டில்மேன்,
முத்துராமலிங்கம்,
சின்னக் கவுண்டர்,
பாரதிக்கண்ணம்மா,
புது நெல்லு புதுநாத்து,
மாப்பிள்ளை கவுண்டர்,
தேவர் வீட்டு பொண்ணு,
குங்கும பொட்டு கவுண்டர்,
மற்றும்
பல படங்களை
பார்த்திருப்போம்.
இந்த படங்கள்
நாயுடு,
தேவன்,
நாயக்கன்,
கவுண்டன்,
முதலியான்,
என திராவிட
சூத்திர ஆதிக்க
ஜாதி பெருமை
பேசிய படங்கள்.
நாம் யாரும்
அப்படங்களின்
இயக்குனரின்
ஜாதியைத்
தேடவில்லை.
ஏன் தெரியுமா?
இப்படங்களில்
ஹீரோ,
ஊர் தெருவில் பிறந்து
நல்லது செய்வார்,
தானம் செய்வார்,
எந்த சாதியிலும்
காதல் செய்வார்,
கல்யாணம் செய்வார்,
அல்லது
தாதாவாக மாறுவார்.
நாட்டைத் திருத்த
பக்கம் பக்கமாக
வசனம் பேசுவார்,
அதுவும்
சுபாஷ்,
முத்துராமலிங்கம்,
காந்தி,
ஈவெரா
எடுத்துகாட்டாக!
அதனால் யாரும்
இயக்குனரின்
ஜாதியை
தேடவில்லை.
ரஜினியும்
கன்னடராகத்
தெரியவில்லை,
அவரின்
ஜாதியைப் பற்றி
ஆராயவுமில்லை.
ஆனால்...
கபாலி, படத்தில்
ஹீரோ சாதாரண
ஒடுக்கப்பட்ட
குடும்பத்தில் பிறந்து
கேங்க்ஷ்டராவார்.
அம்பேத்காரை
உதாரணமாக
சொல்லுவார்.
ஆரம்ப கால
ரஞ்சித் படங்களில்,
தமிழர்களுக்கு
தெரியாத
இரட்டைமலையாரையும்,
பண்டிதரையும்,
மாட்டுக் கரியையும்
சாதி ஆதிக்கத்தை
எதிர்க்கும் குறியீடாக
காட்டியிருப்பார்.
(மாட்டுக் கரி என்றால்
அது சேரிகள் மட்டுமே
என்ற மட்டமான சிந்தனையை
தமிழ்நாட்டில் உருவாக்கிய
திராவிட சூத்திர,
தமிழ் சாதி தேசிய கும்பலை
செருப்பால் அடிக்க வேண்டும்!)
அதனால்,
பா.ரஞ்சித்தை
ஜாதியை வைத்து
திட்டினார்கள்.
ரஜினி, சிவாஜிராவ்
ஆகிப்போனார்.
படத்திற்கு
எதிர்மறையான
விமர்சனங்களை
கொடுத்தார்கள்.
வெளிவந்த அன்றே
சோசியல் மீடியா முதல்
அனைத்து மூவி
இணையத்திலும்
வெளியிட்டார்கள்.
கேட்டால்
டிக்கெட் விலை அதிகம்
என சொன்னார்கள்.
அதே நிலையை
காலா படத்திற்கும்
உருவாக்க
முயற்சிக்கிறார்கள்.
கேட்டால்
தமிழன் ஒற்றுமை,
திராவிடன் ஒற்றுமை,
ஹிண்டு ஒற்றுமை
என்று பக்கம் பக்கமாக
வசனம் பேசுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக