திங்கள், 26 மார்ச், 2018

போஸ்டரே இப்படி சர்ச்சையை சந்திக்குமா சிவா மனசுல புஷ்பா

போஸ்டரே இப்படி சர்ச்சையை சந்திக்குமா சிவா மனசுல புஷ்பா

பிரபல பத்திரிகையாளர், நடிகர், என பல்வேறு முகங்களை கொண்ட வாராகி, 'சிவா மனசுல புஷ்பா' என்கிற படத்தின் மூலம் கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளராகவும் அவதாரமெடுத்துள்ளார்.
முழுக்க முழுக்க அரசியல் படமான இந்த படத்தில் உண்மை சம்பவங்களை மையப்படுத்திய கதையை தயாரித்து அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவருடன் புதுமுகங்கள் ஷிவானி, நதியாஸ்ரீ, சுதா, டி சிவா, தவசி ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். திரைக்கதை எழுதி இயக்குகிறார் வாராகி.

ஏற்கனவே இந்த படம் குறித்து தெரிவித்துள்ள நடிகரும் தயாரிப்பாளருமான வாராகி “இந்தக் கதை நான் வாழ்க்கையில் சந்தித்த சம்பவங்களின், சர்ச்சைகளின் தொகுப்பு என்றும், இரு எதிர் துருவங்களாக இருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்கள் இந்தக் கதையில் இடம்பெறுகிறது என்றும் தெரிவித்திருந்தார். மேலும் படம் வெளியாகும்போது பல அதிர்வலைகளை தமிழக அரசியல் சந்திக்கும்,” என்றார்.

விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் ஒரு போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது இதில் நேற்று, இன்று, நாளை எழுத்துக்கள் குறிப்பிடப்பட்டு ஒரு பெண் மூன்று ஆண்களுடன் இருப்பது போல் உள்ளது... போஸ்டரே இப்படி என்றால் படம் பற்றி கூறவே வேண்டாம்.
படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் இந்த படத்தை ஸ்ரீவாராகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் வாராகி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக