திங்கள், 26 மார்ச், 2018

அடையாளமே தெரியாமல் மாறிய இந்த நடிகையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா

அடையாளமே தெரியாமல் மாறிய இந்த நடிகையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா 

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி இன்றுவரை புதிய புதிய நிகழ்ச்சி தொடர்களை அறிமுகம் செய்து கொண்டே வருகிறது . இதில் புது புது முகங்களும் திறமையாளர்களும் தங்களை வெளிப்படுத்தி வருகின்றனர் , இப்படி விஜய் தொலைக்காட்சியில் இருந்து பல முகங்களை நாம் பார்த்து இருப்போம் ஆனால் அவற்றில் ஒரு சிலர் மட்டுமே நம் மனதில் இடம் பிடிப்பது மட்டுமல்லாது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரை பயணிக்கின்றனர்.


இப்படி விஜய் டீவியில் ஒளிபரப்பான பேமஸ் சீரியல் ‘கனா காணும் காலங்கள்’ மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றவர் நடிகர் யுதன் பாலாஜி. இந்த சீரியலில் ஜோ என்ற கேரக்டரில் நடித்திருப்பார் பாலாஜி. அந்த சீரியலுக்கு பிறகு இவர்க்கு நிறைய பட வாய்ப்புகள் வர தொடங்க்கியது. இப்படி 2010 ஆம் ஆண்டு இவர் நடித்த படம் தான் காதல் சொல்ல வந்தேன்.இப்படி இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை மேக்னா ராஜ். இவர் பெங்களூரில் சுந்தர் ராஜ் மற்றும் பிரமிளா இவருக்கு மகளாக பிறந்தார்.


இவர் சினிமாவிற்கு வந்ததற்கு காரணமே இவரது அப்பா தான். இவரது அப்பா கன்னடத்தில் பெரிய நடிகர் அங்கு 180 படங்களுக்கு மேல் நடித்தவர். இவர் சிறு வயதிலேயே தனது தந்தையுடன் குழந்தை வேடத்தில் கன்னட படம் ஒன்றில் நடித்திருக்கிறார் .


சிறு வயதில் தன் தந்தையையே பார்த்து வளர்ந்ததால் இவர்க்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. 2010 முதல் படங்களில் நடிக்க தொடங்கிய இவர் கவிஞர் சினேகன் ஹீரோவாக நடித்த உயர்திரு 420 மற்றும் 2011 ஆண்டு வெளிவந்த நந்தா நந்திதா படத்திலும் ஹீரோயினாக நடித்தார். அதன் பின்னர் பல பட வாய்ப்புகள் வந்தாலும் சரியான கதையம்சம் இல்லாததால் ஒதுக்கி தள்ளினார். அதனால் பின்னாளில் பட வாய்ப்புகளே இல்லாமல் போனது.


தமிழில் சரியான பட வைப்புகள் இவருக்கு இல்லை என்றாலும் மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் நடித்துவந்தார் . இவர் கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா என்பவரை 10 வருடங்களாக காதலித்து வந்தார் பின்னர் இவர் 2017இல் அவரை திருமணம் செய்து கொண்டார்.


திருமணதிற்கு பின்னும் இவர் படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போதும் 3 மலையாள படங்களிலும் 3 கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். முதலில் சற்று பருமனாக இருந்த இவர் தற்போது உடல் எடை குறைந்து ஒல்லியாக காணப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக