செவ்வாய், 27 மார்ச், 2018

சாய் தன்ஷிகாவின் அடுத்த படம் குறித்த தகவல்

சாய் தன்ஷிகாவின் அடுத்த படம் குறித்த தகவல் 

ரஜினியின் மகளாக ‘கபாலி’ படத்தில் நடித்த சாய் தன்ஷிகா தற்போது தெலுங்கு திரையுலகில் முதன் முதலாக அறிமுகமாகவுள்ளார். ‘மேளா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படம் ஹோரர் படம் ஆகும். மேலும் இது தமிழிலும் உருவாகவுள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்து சாய் தன்ஷிகா கூறுகையில், ‘‘தெலுங்கு கதாசிரியர் கிரண் என்னைச் சந்தித்து, ‘உங்களை மனதில் வைத்து ‘மேளா’ என்ற ஒரு திரைக்கதையை உருவாக்கியுள்ளேன். மேலும் இது உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது’ என்று சொல்லி முழு கதையையும் சொன்னார்.
கதை எனக்கு பிடித்துப் போயிருந்தது. இந்தப் படத்தில் இரண்டு கேரக்டரில் நடிக்கிறேன். அதில் ஒரு கேரக்டரில் பேயாக நடிக்கிறேன். இந்த படத்தில் எனக்கு ஜோடியாக நடிகர் யாரும் கிடையாது. இந்தப் படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்கள் இதில் நடித்திருக்கிறார்கள். படத்தில் சண்டைக் காட்சிகளும் உண்டு. ‘மேளா’ நான் தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படம். தமிழிலும் வெளியாகிறது’’ என்று முக்கிய விவரங்களை தெரிவித்துள்ளார். Thanks thinasuvadu.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக