விக்னேஷ் சிவன் - நயன்தாரா விரைவில் திருமணம், உறுதி படுத்திய நயன்தாரா
விக்னேஷ் சிவன், நயன்தாரா தற்போது கோலிவுட் வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் அதிகம் பேசப்படும் காதல் ஜோடிகளில் ஒன்று. இருவரும் 'ரானும் ரௌடிதான்' படம் உருவான காலகட்டத்தில் காதலிக்க தொடங்கியதாக தகவல்கள் வெளியாகின.
பெரும்பாலும் ஒன்றாகவே நிகழ்ச்சிகளில் தென்படும் இவர்கள், அவ்வப்போது ஜோடியாக வெளிநாடுகளை சுற்றியபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். என்றாலும் இன்றுவரை தங்களுக்குள்ளான காதலைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் நடிகை நயன்தாரா விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருக்கிறார்.
உங்களுடைய வெற்றிக்கு யார் காரணம் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், 'தன்னுடைய அப்பா, அம்மா, சகோதர் மற்றும் தன்னை திருமணம் செய்துகொள்ள போகும் நபர் ஆகியோர் தான்' எனக் கூறி இருந்தார்.
'திருமணம் செய்து கொள்ளப் போகும் நபர்' என குறிப்பிட்டிருக்கும் நிலையில், நயன்தாரா திருமணம் குறித்த முடிவுகளை எடுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் இயக்குனர் விக்னேஷ் சிவன்- நயனதாராவின் அதிகாரப் பூர்வ திருமண அறிவிப்பை விரைவில் எதிர் பார்க்கலாம். Thanks viralulagam.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக