ஞாயிறு, 1 ஜூலை, 2018

உங்கள் மனம் கவர்ந்த '10' சீரியல் நடிகைகளின் சம்பள விவரம்! நாகினி நடிகைக்கு இவ்வளவு கிராக்கியா?

உங்கள் மனம் கவர்ந்த '10' சீரியல் நடிகைகளின் சம்பள விவரம்! நாகினி நடிகைக்கு இவ்வளவு கிராக்கியா?

முன்பெல்லாம் சினிமா துறையின் மேல் நம்பிக்கை இழந்த நாயகிகள் மட்டுமே சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தனர். மேலும் சின்னத்திரை நாயகிகளுக்கு சினிமாவில் வாய்ப்பு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. ஆனால் கால மாற்றத்தால், சீரியல் நடிகைகளை சினிமாவில் ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர்.  இதனால் பல சின்னத்திர நாயகிகள் இன்று சினிமாவிலும் ஜொலிக்கிறார்கள்.
மேலும் இப்பொழுது இளசுகளும் சீரியல் பார்க்க துவங்கி இருப்பதால் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதை ஒட்டி, சினிமா நடிகைகளுக்கு இணையான சம்பளமும் பெறுகிறார்கள் சின்னத்திரை நாயகிகள். 
அப்படி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் அதிக பிரபலத்துடன் வலம்வரும் நாயகிகள் பெரும் சம்பளம் எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நித்யா ராம் 
சுந்தர் C இயக்கத்தில் திரைப்படமாக உருவாக இருந்த நந்தினி, திடீரென டிவி தொடர் ஆனதன் காரணமாக, சீரியல் நடிகையாக அறிமுகமான நித்யா ராம்,  பதினைந்து லட்சத்தை சம்பளமாக பெற்றிருந்தார். அதாவது சுமார் ஐம்பத்தாயிரம் ரூபாயை ஒரு நாள் சம்பளமாக பெற்றிருக்கிறார்.
நிஷா கணேஷ்  
தலையணை பூக்கள், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற தொடர்களில் நடித்து பிரபலமான நிஷா, ஒரு எபிசோடுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.
தேவையாணி 
கோலங்கள் தொடர் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த தேவையாணி தமிழ் சீரியல் நடிகைகளில் அதிக பட்சமாக, ஒரு எபிசோடுக்கு ஒரு லட்ச ரூபாயை சம்பளமாக பெறுகிறார்.
சரண்யா
செய்தி வாசிப்பாளராக இருந்து தற்பொழுது சீரியல் நடிகை ஆகி இருக்கும் சரண்யா, ஒரு எபிசோடுக்கு பதினைந்தாயிரம் ரூபாயை சம்பளமாக பெறுகிறார்.
ராதிகா
சீரியல் உலகின் ராணியாக வலம்வரும் நடிகை ராதிகா, தேவையாணியை போலவே ஒரு லட்ச ரூபாயை தனக்கு சம்பளமாக நிர்ணயித்து இருக்கிறார். இவர் நடிக்கும் சீரியல்கள் பெரும்பாலும் இவர் தயாரிப்பவை என்பதும் குறிப்பிடத்ததக்கது.
வாணி போஜன் 
இளசுகள் பலரை விரும்பி சீரியல் பார்க்க வைத்த பெருமையை கொண்ட வாணிபோஜன், ஒரு எபிசோடுக்கு சுமார் இருபத்தைந்தாயிரம் ரூபாயை சம்பளமாக பெறுகிறார்.
ரம்யா கிருஷ்ணன் 
பாகுபலி படத்திற்கு பிறகு சினிமாவில் எக்கச்சக்க வாய்புகள் வருவதால் சீரியல்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கும் ரம்யா கிருஷ்ணன், கடைசியாக நடித்த வம்சம் சீரியலுக்கு, ஒரு நாளைக்கு சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளமாக பெற்றிருந்தார்.
இருமலர்கள் ஸ்ரிடி ஜா
ஹிந்தி டப் சீரியலான இனிய இருமலர்கள் தொடரின் மூலம் தமிழகத்திலும் பிரபலமாகி இருக்கும் ஸ்ரிடி ஜா, ஒரு நாள் எபிசோடுக்கு  ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.
ஆல்யா மானஸா 
அறிமுக சீரியலான ராஜா ராணி மூலம், சினிமா நாயகிகளுக்கு இணையான பிரபலத்தை அடைந்திருக்கும் ஆல்யா மானஸா, தனது ஒரு நாள் சம்பளமான பதினைந்தாயிரத்தை இப்பொழுது இருபத்தைந்தாயிரமாக உயர்த்தி இருக்கிறார். 
மௌனி ராய் 
சீரியலிலும் இவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமா என நாகினி தொடரின் மூலம் ரசிகர்களை வியக்க வைத்த மௌனி ராய், தமிழ் சீரியல் நடிகைகளை விட அதிக சம்பளம் பெறுகிறார். இவரது ஒரு நாள் சம்பளம் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த நாகினிக்கு இருக்கும் கிராக்கியை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக