தமிழ்ப்படம் 2 படத்தின் விமர்சனம்
படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் முழுக்க முழுக்க சிவாவை மையப்படுத்தியே கதை நகர்கிறது. படத்தின் கதை என்று சொல்ல ஒன்றும் பெரிதாக இல்லை. முதல் பாகத்தில், டி என்ற வில்லனை தேடி செல்லும் சிவா இந்த முறை வில்லன் பி'யை தேடி செல்கின்றார்.
அந்த பி யை சிவா பிடித்தாரா⁉ என்பதை பல படங்களின் காட்சிகளை சேர்த்து எடுத்து கலாய்த்துள்ளார் இயக்குனர்.
படத்தின் முதல் காட்சியில் டிபேட்டில் தமிழிசையை காலை வாருவதில் இருந்து ஹெச்.ராஜாவை சோத்துக்கு வந்தேன் என சொல்ல வைப்பது, அதோடு சின்னம்மா சபதம் பன்னீர் செல்வம் சத்தியம் என அரசியல் நிகழ்வுகளையும் இயக்குனர் விட்டு வைக்கவில்லை.
சதீஷ் இதில் '2.0' படத்தில் வரும் அக்க்ஷைகுமார் குமார் கெட்அப் போட்டு மிரட்டையுள்ளார். படத்தின் பின்னணி இசை நன்றாக உள்ளது. ஆனால் பாடல்கள் திருப்தியடைய வைக்கும் விதத்தில் இல்லை. முதல் பாதி பொறுமையினை மிகவும் சோதிக்கிற வண்ணம் உள்ளது.
மற்ற படங்களில் இருந்து கலாய்க்க எடுக்கப்பட்ட காட்சி தேர்வுகள் படத்திற்கு மிக பெரிய பலமாக அமைந்துள்ளது. மொத்தத்தில் சிவா ஒன் மேன் ஆர்மியாக கலக்கியுள்ள இப்படத்தினை ஒரு முறை பார்த்து சிரிக்கலாம்.
மறுமுறை பார்த்தால் சிரிப்பு வருமா என்பது கேள்விக்குறி தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக