வியாழன், 12 ஜூலை, 2018

ஒரே நாளில் வெளியாகும் இரு முக்கியப் படங்கள்: தமிழ்த் திரையுலகம் அதிருப்தி!

ஒரே நாளில் வெளியாகும் இரு முக்கியப் படங்கள்: தமிழ்த் திரையுலகம் அதிருப்தி!

சிவகார்த்திகேயனின் புதிய படபூஜை விழா
இந்த வாரம் இரு முக்கியப் படங்கள் வெளியாகின்றன.
கடைக்குட்டி சிங்கம், தமிழ்ப்படம் 2.
இரு படங்களும் ஜூலை 12 அன்று வெளிவரவுள்ளன. தணிக்கைச் சான்றிதழ் கிடைத்தபிறகு அதிகாரபூர்வமாக தேதிகள் வெளியிடப்படவுள்ள நிலையில் ஒரே சமயத்தில் இவ்விரு படங்களும் வெளியாவது திரையுலகினரிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் இதுபற்றி ட்விட்டரில் கூறியதாவது: அதிகம் எதிர்பார்க்கும் இரு படங்கள் இந்த வார இறுதியில் வெளியாவதால் எந்த விதத்திலாவது வசூலை இரண்டாகப் பிரித்துக்கொள்ளும் என்பது என் கருத்து. இரு வாரங்களில் அடுத்தடுத்து வெளியானால், ஒவ்வொன்றுக்கும் கூடுதல் பார்வையாளர்கள் கிடைக்கக்கூடும் என்பது நிரூபிக்கப்பட்ட வரலாறு. ஜூலை 20 அன்று பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதை வைத்து ஒரே நாளில் இரு படங்களும் முட்டிக்கொள்வதைத் தடுக்கலாமே! எனினும் இவையெல்லாம் தயாரிப்பாளர்களின் தனிப்பட்ட முடிவு என்று கூறியுள்ளார்.
அதேபோல சென்னை - குரோம்பேட்டை வெற்றி திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் கெளதமன் ட்விட்டரில் கூறியதாவது: தமிழ்ப்படம் 2, கடைக்குட்டி சிங்கம், Ant-Man and the Wasp எனப் பெரிய படங்கள் மோதுகின்றன. என்னுடைய தனிப்பட்ட கருத்து: ஒரு கோலிவுட் படம்,  எல்லோருடைய நலனுக்காக வேறொரு நாளில் வெளியிடப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக