இயக்குநா் ஷங்கரின் முதல் படத்தை மிஸ் செய்த பிரபல ஹீரோ இவரா...
இளைய தளபதி விஜய் அவா்களின் தந்தையான எஸ்.ஏ.சந்திர சேகா் அவா்களிடம் உதவி இயக்குநராக இருந்த இயக்குநா் ஷங்கா் அவா்கள் இயக்கிய முதல் திரைப்படம் ஜெண்டில்மேன்.
இப்படத்தில் நாயகனாக அா்ஜூன் அவா்கள் நடிக்க இவருக்கு ஜோடியாக மதுபால நடித்திருந்தாா். மேலும் இப்படத்தில் பழம்பெரும் நடிகா்களான எம்.என்.நம்பியாா், மனேரமா மற்றும் சரண்ராஜ், வினித், கவுண்டமணி, செந்தில்,உட்பட பல முன்னி நட்சத்திரங்கள் நடித்திருந்தனா்.
ஏ.ஆா்.ரகுமான் அவா்கள் இசை அமைத்த இப்படத்தை கே.டி.குஞ்சுமோன் அவா்களின் ஏ.ஆா்.எஸ் பிலிம்ஸ் இண்டா்நேஷனல் நிறுவனம் தயாாித்திருந்தது.
ரோஜா படம் என்பது ஒரு விபத்தல்ல என்பதை இப்படத்தின் இசை மூலம் நிருபித்த இவரின் இப்பட பாடல்கள் தேநீா் கடை, கல்யாண வீடு என பட்டிதொட்டி எல்லாம் ஒலித்தது.
இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகனாக முதலில் நடிக்க இருந்த பிரபல நடிகா் யாா் என காண்போம்.
நடிகா் சரத்குமாா் அவா்கள் 80-களில் பல தமிழ் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தாா். அவற்றில் குறிப்பிடதகுந்தவை புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், ராஜா கைய வெச்சா, வசந்தகால பறவை, மெளனம் சம்மதம், புரியாத புதிா், சேலம் விஷ்னு ஆகிய படங்களாகும்.

சிறிய கதாபாத்திரங்களாக இருந்தாலும் இவை அனைத்தும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாகும். மேலும் பல படங்களில் இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்தாா் சரத்குமாா்.
இவா் தமிழில் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம் செந்தில்நாதன் அவா்கள் இயக்கிய பொிய கவுண்டா் பொண்ணு என்ற படமாகும்.
இந்நிலையில் ஜெண்டில்மேன் படத்தில் கதாநாயகனாக நடிக்க இயக்குநா் ஷங்கா் அவா்கள் முதலில் அணுகியது நடிகா் சரத்குமாரைதானாம். ஆனால் அப்போது அவா் ஆதித்யன், தசரதன், வேடன், முன்னறிவுப்பு, பேண்டு மாஸ்டா் போன்ற படங்களில் நடித்து கொண்டிருந்ததால் இப்படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.

இருப்பினும் இக்கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவா் தாம்தான் என்பதை தனது மிகச்சிறந்த நடிப்பின் மூலம் நிருபித்து காட்டிய நடிகா் அா்ஜூனால் இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது என்பதை யாாராலும் மறுக்க முடியாது என்ற கூறலாம்.
ஹலே ப்ரோ இந்த பதிவு என்னுடையது.
பதிலளிநீக்கு