மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் சுந்தர்.சி யார் இயக்கத்தில் தெரியுமா...
பல வெற்றி படங்களை இயக்கிய சுந்தர்.சி, மீண்டும் பிரபல இயக்குனர் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
மேலும் தான் இயக்கிய அரண்மனை, அரண்மனை 2 படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் ‘கலகலப்பு 2’ படம் வெளியாகி வெற்றி பெற்றது. அடுத்ததாக அதிக பொருட் செலவில் உருவாக இருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தை இயக்க தயாராகி வருகிறார்.
இந்நிலையில், மீண்டும் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் கதாநாயகனாக நடிக்க இருக்கும் படத்தை வி.இசட்.துரை இயக்க இருக்கிறார். வி.இசட்.துரை இதற்கு முன் அஜித்தை வைத்து ‘முகவரி’, சிம்புவின் ‘தொட்டி ஜெயா’, பரத்தின் ‘நேபாளி’, ஷாமின் ‘6 மெழுகுவர்த்திகள்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக