பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தானா?: இருட்டு அறையில் முரட்டுக் குத்து நடிகையுமா?
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் யார், யார் எல்லாம் கலந்து கொள்ளக்கூடும் என்று கூறி பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஜூன் மாதம் 17ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. முதல் சீசனை போன்றே இரண்டாவது சீசனையும் கமல் ஹாஸன் தான் தொகுத்து வழங்குகிறார்.இந்நிலையில் போட்டியாளர்கள் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
நடிகைகள் இனியா, கஸ்தூரி, ராய் லட்சுமி, லட்சுமி மேனன், ஜனனி ஐயர், சுவர்ணமால்யா, பூனம் பாஜ்வா, ப்ரியா ஆனந்த், நந்திதா, ஆலியா மானசா, ரக்ஷிதா, கீர்த்தி சாந்தனு, எழுத்தாளர் சாரு நிவேதா, நடிகர்கள் பரத், ஷாம், சாந்தனு, அசோக் செல்வன், ஜித்தன் ரமேஷ், ஜான் விஜய், படவா கோபி, பவர் ஸ்டார், ப்ரேம்ஜி, யூகி சேது, விஜய் வசந்த், பால சரவணன், ப்ளாக் பாண்டி, தாடி பாலாஜி, டேனியல் ஆனி போப், அமித் பார்கவ், நாஞ்சில் சம்பத் ஆகியோரில் 15 பேர் தான்
அரசியலில் பரபரப்பை கிளப்பும் நாஞ்சில் சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்பது சந்தேகமே. படங்களில் பிசியாக இருக்கும் பரத் எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவார்?
பிக் பாஸ் 2வது சீசனில் கலந்து கொள்ள பவர் ஸ்டார் விருப்பம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் சீசனிலேயே பங்கேற்குமாறு நடிகை கஸ்தூரிக்கு அழைப்பு விடுக்கவே அவர் பிள்ளைகளை விட்டுவிட்டு 100 நாட்கள் இருக்க முடியாது என்றார்.
கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க. இதுபோன்ற செய்திகளை தொடர்ந்து பெற கீழேயுள்ள மஞ்சள் நிற FOLLOWபட்டனை அழுத்துங்கள். நன்றி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக