இந்த கேள்வியை விஜய், அஜித், விக்ரமிடம் கேளுங்கள் நடிகை அமலாபால் காட்டம்...
என்னிடம் கேட்ட இதே கேள்வியை முன்னணி நடிகர்களான விஜய், விஜய்சேதுபதி, சூர்யா ஆகியோரிடம் கேட்பீர்களா என்று கோபத்துடன் பதிலளித்தார் நடிகை அமலா பால்.
நடிகை அமலாபால் தமிழில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் திருமணத்துக்குப் பின்பும் பல படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகி வெளியாகவுள்ள படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல்.
இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக அரவிந்தசாமி நடித்துள்ளார். படத்தில் இவர் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்த அம்மா கேரக்டர் பற்றி அமலா பாலிடம் கேட்டதற்கு அவருக்கு கோபத்தை வரவழைத்துள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தால் உங்களின் ஹீரோயின் இமேஜ் பாதிக்கப்படாதா என்ற கேள்விக்கு அமலா பால் அளித்த பதில்.
என்னைப் போன்ற நடிகைகளிடம் மட்டும் ஏன் இந்த கேள்வியை கேட்கிறீர்கள்.
என்னைப் போன்ற நடிகைகளிடம் மட்டும் ஏன் இந்த கேள்வியை கேட்கிறீர்கள்.
இந்தக் கேள்வியை முன்னணி நடிகர்களா விஜய், அஜீத், அரவிந்த் சாமி, சூர்யா, விஜய் சேதுபதி ஆகியோரிடம் உங்களால் கேட்க முடியுமா நடிகைகளிடம் மட்டும் ஏன் இப்படி ஒரு கேள்வி அவர்கள் அப்பாவாக நடித்தால் இமேஜ் குறையாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக