விடிஞ்சா… “அன்னக்கிளி’ படத் தோட பூஜை… சாங் ரெக்கார்டிங்கோட நடக்கப்போகுது.
நாங்க பட்டபாட்டுக்கெல்லாம் பாட்டாவே பலன் கிடைக்கப் போற நாள் அது.
“பாவலர் பிரதர்ஸ்’ சான எங்களுக்குள்ள பரபரப்பும், பதட்டமும் பரவிக் கிடந்துச்சு.
அன்னக்கி ராத்திரி… நாங்க தூங்கவே இல்ல.
நாங்க தூங்கலேங்கிறதுக்காக விடியாம இருக்குமா?
விடிஞ்சது.
'சாந்தோம்ல' இருக்கிற கனோஜராய மலையப்ப நாயக்கன் தெரு… சுருக்கமா சொல்லணும்னா கே.எம்.என். தெருவுலதான் நாங்க குடியிருந்தோம். அதிகாலைல நாலரை மணிக்கே எழுந்து, குளிச்சு மாங்காடு காமாட்சியம்மன் கோயிலுக்கு நான், பாஸ்கரண்ணன், அமர்சிங் மூணுபேரும் போனோம்.
அம்மாவ மனமுருக வேண்டிக்கிட்டு, அங்கிருந்து கிளம்பி ஆறரை மணிக்கெல்லாம் ஏ.வி.எம்.ல இருக்க ஆர்.ஆர்.தியேட்டருக்கு வந்திட்டோம்.
யப்பா… எத்தன எத்தன மியூ ஸிக் டைரக்டர்கள் மியூஸிக் பண்ணின இடம் அது. நாங்க கூட பல மியூஸிக் டைரக்டர்கள்கிட்ட, நெறைய பாட்டுக்கு வாத்தியக் கலைஞர்களா வேலை செஞ்ச ஒரு தெய்வீக இடமாச்சே.
எங்க மூணுபேருக்குமே அடி மனசுல ஒரு பயம். ஏன்னா… ஒரு பெரியஆளு எடுக்கிற படத்துக்கு, இசையமைப்பாளரா ஒரு புது ஆளு. பயம் வரத்தானே செய்யும்.
பந்தல் போட்டு, சாமி படங் களுக்கு அலங்காரம் பண்ணி, குருக்கள் வந்து மந்திரம் சொல்லி, பூஜை போட்டதும் படத்தோட ஸ்கிரிப்ட் ஃபைலை, டைரக்டர்கிட்டயும், பாட்டுப் பேப்பர் களை மியூஸிக் டைரக்டர்கிட்டயும் குடுப்பாங்க. இது வழக்கமான நடை முறை. ஏங்கிட்ட பாட்டு பேப்பர்களை கொடுத்தப்போ… பதட்டமா வாங்கிக்கிட்டேன்.
எங்ககூட இத்தனை வருஷமா ஒண்ணா டிராவலாகிக்கிட்டிருந்த வாத்தியக்காரர்கள்ல சிலபேருக்கு நெஜமாவே சந்தோஷம். கொஞ்சம் பெரியவங்களுக்கு… “இவனுங்க என்ன சாதாரண வாத்தியக்காரனுங்கதான… என்னத்த பெருசா பண்ணிடப் போறாங்க’ன்னு ஒரு எளக்காரப் பார்வ.
“அன்னக்கிளி’’படத்துக்காக ரெக்கார்டிங் வரை வந்தாச்சு. இதுக்கெல் லாம் என்னென்ன பாடுபட்டிருப்போம் இந்த சின்னாத்தாயி பெத்த மக்க.
ரெக்கார்டிங் ஹால்ல எல் லாரையும் வச்சு ரிகர்ஸல் பார்த் தாச்சு. எல்லாரும் பாராட்டி னாங்க. சில வாத்தியக்காரர்கள் நம்பிக்கையோடவும், சில வாத்தி யக்காரர்கள் “இது நூத்துல ஒண்ணுதான்’னும் நினைச்சு வாசிச்சாங்க.
படத்தின் இயக்குநர்களான தேவராஜ்-மோகன் ஆகியோர் ரொம்ப மனநிறைவோட காத்துக்கிட்டிருந்தாங்க. ஒலிப்பதிவுக் கூடத்துல எனக்கு உதவியா, இசைக்குழு நடத்துனரா ஆர்.கோவர் தனம் இருந்தார்.
ரிகர்ஸல் நடக்கும்போதே எனக்கு வயிறு சரியில்ல. பயத்துலயும், பதட்டத்துலயும் ரொம்ப கஷ்டப்பட்டேன்.
ஆர்க்கெஸ்ட்ரா வாசிச்சு, வாசிச்சுப் பழகினதும், பதினோரு மணி வாக்குல எஸ்.ஜானகி வந்தாங்க. அவங்க பாடின முழுப்பாடலோட ஒத்திகை பார்த்தப்ப… இன்னும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.
ஆர்க்கெஸ்ட்ராவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள்ல, ஒரு மைக்குக்கு நாலு தாள வாத்தியங்கள்… தபேலா… டோலக்… பேஸ் டோலக்… காங்கோ டிரம்ஸ்… வயலின்ஸ், பேஸ், ஃபுளூட்… நான்-ரிதம் கிடார்… இப்படி தனித்தனியாக மைக் முன்னால வாசிக்கணும். ஒவ்வொரு மைக்கும் செக்பண்ணி, பிறகு ஜானகியம்மாவோட சேந்து ரெண்டு, மூணு ரிகர்ஸல் பேலன்ஸிங்கா நடந்தது். அது முடிஞ்சதும்தான் நேரடி டேக். ஒத்திகை முடிஞ்சு, “டேக் போலாம்’னு ரெக்கார்டிங் சம்பத் சொன்னவுடனே தியேட்டருக்கு வெளியில் சைலன்ஸுக்காக ஒரு பெல் அடிக்கப்படும். ரெட்லைட்டும் எரியும். இந்த சிக்னல் ஸ்டாப் ஆகுறவரை தியேட்டருக்கு வெளியே கார் சத்தமோ, சைக்கிள் சத்தமோ எதுவுமே கேட்கக்கூடாது.
வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு புதுவாழ்க்கை ஓபனாகப் போகுது….
“”சைலன்ஸ்…”
“””என்ன ராஜா… டேக் போலாமா?”’’
“”ம்… தேங்கா ஒடச்சாச்சா?”’’
“”ஓ… ஒடச்சாச்சு”’’
“”ம்… அப்போ டேக் போலாம்… அமர் நீ அனவுன்ஸ் பண்ணு…’“ம்…ரோலிங்…”’’
“”அம்மா… அம்மா… அம்மா…”’என சொல்லிவிட்டு “””எஸ்.பி.டி ஃபிலிம்ஸ் அன்னக்கிளி… ஸாங் 1, டேக் 1 ரன்னிங்”’என நான் சொல்லி முடிச்சதுமே…
கோவர்தனம் மாஸ்டர் “”ரெடி… டிக்… டிக்… டிக்…” என சொடக்கிட்டு விட்டு “”ஒன்… ரெடி… ஒன்… டூ… த்ரி… ஃபோர்”’சொல்ல… பாடல் பதிவு நல்லபடியாக நடந்து முடிந்ததும் நானும் அண்ணனும் அமரும் மனதுக்குள்ளே சந்தோத்தில் அழுதோம்.
பாரதிராஜா "கிழக்கே போகும் ரெயில்'' என்று ஒரு கதையை தயார் செய்து, பூஜை பாடல், ரெக்கார்டிங் வைத்தார். அன்றைக்கென்று பார்த்து மூன்று பூஜைகள். அந்த பரபரப்பிலும் ஒரே நாளில் மூன்று பாடல்களை கிழக்கே போகும் ரெயில் படத்திற்காக பதிவு செய்தோம். இரண்டாவது பாடல் முடிய மதியம் 3 மணி ஆகிவிட்டது. மூன்றாவது பாடலை 4 மணிக்கு தொடங்கினோம். "கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ'' என்ற அந்த பாடல் முடிய இரவு 10 மணி ஆகிவிட்டது.
அப்போதெல்லாம் `சினி மியூசிசியன்ஸ் யூனியன்' இருந்தது. இரவு 9 மணிக்குள் ரெக்கார்டிங் முடிக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் விதிமுறையில் இருந்தது. இருந்தாலும் அவ்வப்போது இது மாதிரியான சந்தர்ப்பங்களில் அட்ஜஸ்ட் செய்து கொள்வது வழக்கமாக இருந்தது. "மாஞ்சோலைக் கிளிதானோ'' பாடலை கவிஞர் முத்துலிங்கமும், "பூவரசம்பூ பூத்தாச்சு'' பாடலை அமரும் எழுதியிருந்தார்கள்.
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய ஒரே திரைப்படப்பாடல் என்ற பெருமையை பெற்றது எனது இசையமைப்பில் இந்தப் படத்துக்காக உருவான "மலர்களே நாதஸ்வரங்கள்'' என்ற பாடல். ஆனால் பாரதிராஜா ஏனோ படத்தில் அந்தப் பாடலை வைக்கவில்லை.
"கிழக்கே போகும் ரெயில்'' ரிலீஸ் ஆன அன்றே படக்கம்பெனி பணியாளர்கள் தியேட்டர்களில் ரசிகர்களிடம் கருத்து கேட்கப் போயிருக்கிறார்கள். அவர்களிடம் சில ரசிகர்கள் "ராஜ்கண்ணு (படத்தின் தயாரிப்பாளர்) ரெயில் ஏறிட வேண்டியதுதான்'' என்று கிண்டல் அடித்திருக்கிறார்கள்.
ஒரு வாரத்திற்கு அப்புறம் படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடையே பேச்சு பரவி, படம் சூப்பர் ஹிட் ஆயிற்று. படல்களும் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்துக்கொண்டிருந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக