அவனை எப்படியும் அடைந்தே தீருவேன்! எங்க வீட்டு மாப்பிளை போட்டியாளர் அபர்ணாதி!
சிலநாட்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீடு மாப்பிளை நிகழ்ச்சி மூலம் நடிகர் அறிவிற்கு பெண் பார்க்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் 3 பேரை தேர்வு செய்து, அதில் ஒருவரை திருமணம் செய்துகொள்ள போவதாக நடிகர் ஆர்யா தெரிவித்தார்.
இந்நிலையில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மேல் இருந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சம் ஆக குறைந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு கருத்தை பதிவு செய்து பிரபலமாகிவருகிறார் அந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான அபர்ணதி.
இறுதிப்போட்டிக்கு முன்னதாக போட்டியில் இருந்து விலக்கப்பட்டவர் அபர்ணதி. ஒரு வித்தியாசமான குண இயல்புகளைக் கொண்ட இவர், எதையும் நேருக்கு நேரே பேசும் குணம் கொண்டவர். ஆர்யா மேல் பைத்தியமே பிடிக்குமளவு காதல் வைத்திருந்தவர்.
இவரை போட்டியில் இருந்து விலக்கியவுடன் இவர் அந்தக் கவலையில் இருந்து மீள அபர்ணதி போராடி தன்னை தானே தேற்றி, தற்போது சந்தோசமாக பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், ஒரு பேட்டியில் ‘ இன்னும் ஆர்யாவை திருமணம் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருக்கீங்களா ?’ என்று கேட்டதற்கு
அவனை நான் எப்படியும் இம்பிரஸ் செய்து அவன் மனைவியாகிவிடுவேன். இது தான் என் கனவு. கண்டிப்பா இதை நான் நிறைவேற்றுவேன்!’ என்று முகத்தில் காதல் பொங்க கூறியிருக்கிறார் நம்ம அபர்ணாதி.
அவனை நான் எப்படியும் இம்பிரஸ் செய்து அவன் மனைவியாகிவிடுவேன். இது தான் என் கனவு. கண்டிப்பா இதை நான் நிறைவேற்றுவேன்!’ என்று முகத்தில் காதல் பொங்க கூறியிருக்கிறார் நம்ம அபர்ணாதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக