வரலட்சுமி எனக்கு கிடைத்த பொக்கிஷம் மனம் திறந்த விஷால்...
நடிகர் சங்க தேர்தலில் சரத்குமாரின் அணியை விஷாலின் பாண்டவர் அணி வென்றது. இதை தொடர்ந்து நடிகர் சங்க கட்டடம் தொடர்பாக நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவிலும் எதிரணியினரை அழைக்கவில்லை. விஷால் மற்றும் ராதாரவி ஆகியோர் நடிகர் சங்கத்தில் இருந்தும் நீக்கப்பட்டனர்.இதை தொடர்ந்து இரு தரப்புக்கும் இன்னும் சண்டை ஓயாமல் புகைந்து கொண்டே தான் இருக்கிறது.சரத்குமார் எவ்வளவு எதிரியாக கருதுகிறாரோ அதே அளவு வரலட்சுமியுடன் நட்பு பாராட்டிக் கொண்டு இருக்கிறார் விஷால். சிறுவயது நண்பர்களான இவர்கள் கோலிவுட்டில் கால் பதித்ததில் இருந்து காதல் என கிசுகிசுக்கள் அவ்வப்போது எழுந்து வருகிறது.
எனது வாழ்க்கையில் நண்பர்கள் முக்கியமானவர்கள். நமது நிறை குறைகளை எடுத்துச் சொல்வது நண்பர்கள் தான். எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றால் எனது நண்பர்களை தான் சொல்வேன்.
அந்த வகையில் வரலட்சுமி எனக்கு கிடைத்த பொக்கிஷம். அவரை 8 வயதில் இருந்தே எனக்கு தெரியும். நாங்கள் குடும்ப நண்பர்கள். வரலட்சுமி அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர் நல்ல தன்னம்பிக்கையான பெண். எனது தவறுகளைசுட்டிக்காட்டி, நல்வழிப்படுத்தி ஊக்கப்படுத்துவார். எனது வாழ்க்கையில் முக்கியமான நபர் அவர்.
எனது நெருங்கிய தோழி. நாங்கள் நல்ல நண்பர்கள். எனது குறிக்கோள் நடிகர் சங்க கட்டிடம் கட்டிடுவது தான். நல்லது, கெட்டது என அனைத்தையும் வரலட்சுமியுடன் பகிர்ந்து கொள்வேன் என்றார்
Image Copyright: www.google.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக