வியாழன், 3 மே, 2018

ராஜா ராஜா தான்


ராஜா ராஜா தான்

ரஜினியின்  ( கதாநாயகன்)முதல் படம் பைரவி படத்தை தயாரிச்ச கலைஞானம் பணப்பிரச்சனையில் இருந்த போது  அந்த காலத்தில்  அட்வான்ஸ் 15 ஆயிரம் கொடுத்த பைரவி படத்தை வளர வைக்க  உறுதுணையா இருந்தவர் இதே டிஸ்ரிபியூட்டர்   காதர்தான்...

கமலின் 16 வயதினிலே படம் பார்த்த வினியோகஸ்தர்கள்  எல்லாம் லஞ்ச்  சாப்பிட்டு விட்டு சப்பானி  கேரக்டர் போல வெற்றிலை பாக்கு போட்டு புளிச் புளிச் என்று துப்பி  படம் தேறாது என்று சிவப்பு உதட்டை பிதுக்கிய போது ,படம் இயக்கிய பாரதிராஜா மிரண்டுதான் போனார்...

வழக்கத்துக்கு மாறாக வித்தியாசமாகதானே படத்தை எடுத்து இருக்கோம் ஏன் படத்தை  வினியோகஸ்தர்கள் வாங்க மறுக்கின்றார்கள் என்று குழப்பத்தில் தவித்த போது வினியோகஸ்தர்கள் சொன்ன காரணம்.. டிப் டாப் ஆசாமியா... நடிச்ச கமலுக்கு கோமணம் கட்டி நடிக்க வச்ச ஒரு பய இந்த படத்தை பார்ப்பானா?  என்று ஒட்டு  மொத்த வினியோகஸ்தர்களும் பாரதிராஜா காதில் கோரஸ் பாட...
செய்வதறியாது திகைத்து  போனார் பாரதிராஜா...

ஏன்டா படம்  ஒரு ஆளுக்கு கூடவாயா? பிடிக்கலை என்று  நொந்து உட்கார்ந்துக்கொண்டு  இருந்த போது  இந்த படத்தை நாங்க வாங்கி ரிலிஸ் செய்யறேன் என்று  நெஞ்சை நிமிர்த்தி நின்ற வினியோகஸ்தர்  காதர் மொய்தீன்தான்..

.அழகை  பார்க்காதே மனசை பாரு என்று அற்புதமான கான்செப்ட் நிச்சயம் ஜெயிக்கும் என்று சொல்லி பாரதி ராஜா வயிற்றில் பதினாறு  வயதினிலே படத்தின் போது பால்  வார்த்தவர் காதர் மொய்தீன்தான்...

 இந்த காதர் மொய்தீன் வேறு யாருமல்ல...  பாண்டவர் பூமி தவமாய் தவமிருந்து படங்கள் மூலம் தனது அற்புமான குணச்சித்திர  நடிப்பை வழங்கி தமிழ் சினிமா வரலாற்று பங்கங்களில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகர்  ராஜ்கிரண்தான்

ராஜ்கிரண்     1954 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரையில்  பிறந்தவர்... முதலில் வினியோகஸ்தராக தமிழ் சினிமாவில் கால் பதித்து மெல்ல மெல்ல  தயாரிப்பாளராக உயர்ந்தார்... எப்படி மோகன் 1978 இல் இருந்து 1988 வரை ரஜினி கமலுக்கு டப் பைட் கொடுததாரோ...?? அதே போல 1988 இல் ராமராஜன்  ரஜினி கமலுக்கு டப் பைட் கொடுத்துக்கொண்டு இருந்தார் எனலாம். அவரை வைத்து  ராஜ்கிரன் வெற்றிப்படங்களை தயாரித்தார்.

1991 ஆம் ஆண்டு நாயகனாக அரிதாரம் பூசி என் ராசாவின் மனசிலே... படம் மூலம் தமிழ் திரையுலகில் மயாண்டி கேரக்டர் மூலம் காலடி வைத்தார்.. பிற்காலத்தில் வைகைபுயல் வடிவேலு என்று நாமகாரணம் சூட்டிக்கொண்ட வடிவேலு நடித்த முதல் படமும்  இதுதான்...   ஒரு  குட்டி பிளாஷ் பேக்... மதுரையில் நடந்த படபிடிப்பில் ராஜ்கிரண்  கலந்துக்கொள்ள அப்போது ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக சென்னைக்கு வடிவேலுவை அழைத்து வந்து தனது சினிமா அலுவலகத்தில் ஆபிஸ் பாயாக வேலைக்கு சேர்த்துக்கொண்டவர்  ராஜ்கிரண் என்பது குறிப்பிடதக்கது...

 அதன் பின் தானே இயக்கி நடிக்க ஆரம்பித்தார்... அந்த  படம் அரண்மைனை கிளி.... ராசாவே உன்னை விட மாட்டேன் என்ற  பாடல் 1993 களில் கிராமத்து ளின் தேசிய கீதமாக  பிரகடனப்படுத்த பட்டது.. அடி பூங்கயிலே பூங்குயிலே கேளு...                                                                                                
--  நந்தா படத்தின் மூலம் குணச்சித்திர நடிகராக அறியப்பட்டு மீண்டும் சினிமா பரமத விளையாட்டில் இருக்கும்   ஏணியில் ஏறி வெற்றிக்கோட்டையே தொட்டு விட்டார்...

பாண்டவர் பூமி மற்றும்  தவமாய் தவமிருந்து படங்களின் மூலம் தனது சிறப்பான நடிப்பை வழங்கினார்...

தவமாய் தவம் இருந்து திரைப்படத்தில்  தமிழ்நாட்டு கிராமத்து அப்பாவின் வாழ்க்கைகயை யாதாத்ததோடு மிகைபடுத்தாம்ல் பதிவு  செய்தார்....

 ராஜ்கிரண் நடித்த படங்களில் என் ஆல் டைம் பேவரைட்,.  சண்டக்கோழிதான்... ஒரு பேட்டியில் அந்த படத்தின் இயக்குனர் லிங்குசாமியே... விஷால் அப்பா கேரக்டர் என்று சொன்னாலும் அந்த கேரக்டரை தனக்கு தானே  நடை உடை பாவனைகள் மூலம்  வெறி ஏற்றி மாற்றி அமைத்து அந்த துரை  கேரக்டருக்கு வலு சேர்த்தார்....

திரைப்பட துறையில் கூட ராஜ்கிரணுக்கு நல்ல பெயர் இருக்கின்றது.. சரியான நேரத்துக்கு வந்து  டெடிக்கேஷனாக நடித்து  கொடுப்பவர் என்ற பெயரை  சம்பாதித்து இருக்கின்றார்....

  திரைப்பட வினியோகஸ்தராக இருந்து , தயாரிப்பளாராக அவதாரம் எடுத்து, இயக்குனராக பரிமளித்து, நாயகனாக அரிதாரம் பூசி, எல்லவற்றிலும் ஜெயித்து, பாம்பில் சருக்கி, தன்னம்பிக்கையுடன்  மீண்டும் குணச்சித்திர கதாபாத்திரங்கள் மூலம் வெற்றி ஏணியில் ஏறி இருக்கும் ராஜ்கிரணுக்கு வாழ்த்துக்கள்.

62 வருடத்திலும்  தன் இயல்பான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ள மண்ணின் மைந்தன் ராஜ்கிரண்

என் ராசாவின் மனசிலே படம் வெற்றிகரமாக ஓடி முடித்த பின்பு ராஜ்கிரண் ஒரு நாள் இசைஞானி யை சந்திக்க செல்கிறார்

வாப்பா என்று நலம் விசாரித்த இசைஞானி
அடுத்தப்படம் எப்போது என்றார்? ?

நிறைய கதைகள் வருகிறது அப்பா எதுவும் மனநிறைவை தரவில்லை என்கிறார் ராஜ்கிரண்

ஓ சரி என்னிடம் ஒரு ஏழு பாடல்கள் அடங்கிய ஒரு இசைத்தட்டு இருக்கிறது கேள்! அதை வைத்து கதை எழுத முயன்றால் எழுது என்கிறார்! !

அப்பா மிக்க நன்றி அப்பா என்று இசைத்தட்டை வாங்கிச் சென்ற ராஜ்கிரண் தன் கதை விவாதக் குழுவினரோடு இணைந்து அப்பாடல்களுக்கு எழுதிய கதை தான் அரண்மனைக்கிளி

ஏழு பாடல்களும் ஹிட்

ராசாவே உன்னை விட மாட்டேன்
பாட்டோ மெகா மகா ஹிட்

படமும் அதிரி புதிரி ஹிட்

ராஜா ராஜா தான்
மீள்பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக