செவ்வாய், 15 மே, 2018

ஃபேஷன் உலகை பற்ற வைக்கும் சமந்தாவின் புடவை ஸ்டைல்கள்!

ஃபேஷன் உலகை பற்ற வைக்கும் சமந்தாவின் புடவை ஸ்டைல்கள்!

தமிழ் திரைப்பட நடிகைகளில் ஒரு சிலர் மட்டும்தான், ஃபேஷன் மூலம் தங்களின் தனித்துவத்தை வெளிப்படுத்துவார்கள். அந்தப் பட்டியலில் சமந்தாவிற்கும் பெரிய இடம் இருக்கிறது. இவர் அணியும் ஒவ்வொரு ஆடையும்  வித்தியாசத்தால் வியக்க வைக்கும். கைத்தறி ஆடைகள் தொடங்கி டிசைனர் ஆடைகள் வரை, இவர் அணிந்து பார்க்காத வகைகளே இல்லை. ஃபேஷன் ஷோக்கள் மற்றும் ஃபேஷன் அப்டேட்டுகளை கவனித்து, அதை எப்படியாவது தாமும் அணிந்துவிட வேண்டும் என நினைப்பார். அந்த ஆடையையும் அதேபோல் அணிந்து ஃபோட்டோ எடுத்து, இன்ஸ்டாவில் தன் ரசிகர்களுக்குப் பகிர்வார் சமந்தா.

சமந்தா, மாஸ்கோவின் காவேரியில் கதாநாயகியாக நடித்த போது, அவரது அழகு மற்றும் திறமை மீது அவ்வளவாக ஈர்ப்பு இல்லை. அவருக்கான சரியான வாய்ப்பும் அதன்பிறகு கிடைக்கவில்லை.  விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் செய்த கெஸ்ட் ரோல் சீன் தான், அவருக்கு சினிமாவில் பெரிய வாய்ப்புகளை அள்ளிக் குவித்தது. நான் ஈ, கத்தி, தெறி, மெர்சல் என பல மாஸ் படங்களில் தடம் பதித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இவர் சூப்பர் ஹிட் நடிகைதான். சினிமாவில் மட்டும் தன் திறமையை வெளிப்படுத்தினால் போதும் என இல்லாமல், கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தன்னை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் சமந்தா. இனி….
சமந்தா புடவை கட்டும் ஸ்டைலே தனி தான். இப்படியும் அணிய முடியுமா என ஆச்சர்யப்பட வைக்கிற  வகையில், பாரம்பரிய உடையை அத்தனை மாடர்னாக அணிகிறார்.  ஃபேஷன் மீதான தனது காதலை வெளிப்படுத்த புடவையையே கருவியாக கையாள்கிறார்.  பொதுவாக ஃபேஷனில் அப்டேட்டாகவும் போல்டாகவும் இருப்பது பாலிவுட் நடிகைகள் தான். ஆனால் சமந்தா அவர்களுக்கே சவால் விடுகிறார்.
நிலவிலிருந்து நீந்தி வந்த நீலப் பறவை

நீல நிறப் புடவையில் சமந்தாவின் இந்த தோற்றம், அவரின் வயதை 10 வருடம் குறைத்திருக்கிறது என்றே சொல்லலாம். இந்த ஆடை அனிதா டாங்ரேயின் கைவண்ணத்தில் உருவானது. ஹைநெக் ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் தான் புடவையின் ஹைலைட்டே.  ஆபரணங்களே தேவைப்படாமல் அத்தனை ரிச்சாகக் காட்டுவது அதுதான். அதோடு அந்த பாப் ஹேர் ஸ்டைல் சமந்தாவின் க்யூட்னெஸ்ஸை இரட்டிப்பாக்குகிறது. இந்த ஹேர் ஸ்டைல், 1950களில் புகழ்பெற்ற ஸ்டைலாகும். இந்த ஹேர்ஸ்டைல் மர்லின் மன்றோவை நினைவுப்படுத்துகிறது.  ஸ்டைலிஸ்ட் பிரீத்தம் ஜுகல்கர்  தான் சமந்தாவை இப்படி அலங்கரித்தவர். தெலுங்கு படமான ரகஸ்தலத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு, இந்த ஆடையை அணிந்து ஒய்யாரமாக நடந்து சென்றபோது, அத்தனை கண்களும் சமந்தாவை மொய்த்தன என்பதை சொல்லவும் வேண்டுமா?
கைத்தறியில் ஒரு காட்டுப் பூ!

சமந்தா கைத்தறி ஆடைகளிலும் தன் கைவண்ணத்தைக் காட்டுவார் என்பதற்கு இந்த ஃபோட்டோ சிறந்த சாட்சி. கைத்தறி ஆடையிலும் ஹை ஃபேஷனை வெளிபடுத்தியிருக்கிறார்.  அடர் நீல நிற எம்ப்ராய்டரி சேலைக்கு, கான்ட்ராஸ்ட்டாக சிவப்பு நிற எம்ப்ராய்டரி ப்ளவுஸ் அணிந்து அட்டாக் செய்கிறார்.  சமந்தா அணிந்திருக்கும் இந்த பிளவுஸ் ட்ரைபல் டிசைனில் ஜொலிக்கிறது.  அஜ்ரக் பிரின்ட்கள் கொண்ட கைத்தறி புடவை பார்க்க செம ரிச்சாக இருக்கிறது. கிராஃப்ட் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் கைத்தறி ஆடைக் கண்காட்சியில், இந்த புடவையை சமந்தா விரும்பி வாங்கியிருக்கிறார்.
இதை அணிந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் #iwearhandloom எனப் பெருமையாக ஹாஷ் டேக் செய்திருக்கிறார். அதற்கு ஏற்ற பழங்குடி அணிகலன்கள் அத்தனை அழகாக இருக்கிறது. பிரடே சில்வர் கலெக்‌ஷனில் இந்த நகைகளை வாங்கியிருக்கிறார். எப்போதும்போல் ஸ்டைல் பிரீத்தம்தான். புடவை, ப்ளவுஸ், ஜுவல்ஸ் என எல்லாமே ரிச்சாக இருப்பதால், ஹேர் ஸ்டைலை ஃப்ரீயாக விட்டிருக்கிறார். ப்ளவுஸுக்குப் பொருத்தமான சிவப்பு லிப்ஸிடிக், முகத்தின் பேரழகிற்கு நிறைவு தருகிறது.
வெள்ளைப் புறா ஒன்று…

நம்புங்கள் இதுவும் புடவை தான். தோத்தி ஸ்டைலில் எப்படி அசத்துகிறார் பாருங்கள்! இந்த ஆடை சமந்தாவின் க்யூட் லுக்கை வேற லெவலுக்கு உயர்த்துகிறது. போட் நெக் கொண்ட இந்த கிராப் டாப்பிற்கு மேட்சாக அதிக லேயர்கள் கொண்ட பஞ்சாபி பேன்ட் அணிந்திருக்கிறார். அந்த பேன்ட் தான் ஆடைக்கே அழகு. அதிலிருந்து பிரியும் லேயர்கள் புடவையின் மடிப்புகளைப் போன்று டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதைப் புடவையின் முந்தானையைப் போல தனது வலது தோள் பட்டையில் போட்டிருக்கிறார். ஹைதராபாத்தில் சாம்சங் கேலக்ஸி s9 ஃபோனின் திறப்பு விழாவிற்கு சென்றபோது இந்த ஆடையை அணிந்து சென்றிருக்கிறார்.
பாயல் கண்ட்வாலா, ஸ்டைல் செய்திருக்கிறார். இவர் பாலிவுட் பிரபலங்கள் பலருக்கும் ஸ்டைலிஸ்டாக இருக்கிறார். வலது பக்கம் பாக்கெட்டில் கைவைத்தபடி ஸ்டைலாக போஸ் அளித்து, எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆக்ஸிடைஸ்டு சில்வரில் காதணி மட்டும் அணிந்து ஸ்டேட்மென்ட் கொடுக்கிறார். ஹேர் ஸ்டைலை கவனித்தீர்களா? தனது குட்டை முடியை ஒன் சைடில் விட்டு, டிரெண்டி லுக்கை கெத்தாக அளிக்கிறார்.
கருப்பின் அழகு!

சமந்தா சினிமாவைத்தாண்டி அதிக நேரத்தை செலவிடுவது, ஃபேஷன் ஷோக்களில்தான். பட வாய்ப்புகள் வருவதற்கு முன் அவர் மாடலாகத்தான் இருந்தார். பேஷன் ஷோக்களில் அணிவகுத்து நடக்கும் போது அவரின் நடை அத்தனை ஃபுரொபஷனலாக இருக்கும். தற்போது அதிகமாக ஷோக்களில் அணிவகுப்பது இல்லை என்றாலும், கிடைக்கும் நேரங்களில் பங்கேற்பதுண்டு.  வாவன் பேஷன் ஷோவிற்கு நாக சைத்தன்யாவோடு சென்றிருந்த போதுதான், இந்த இக்கட் டிசைன் கொண்ட புடவையை அணிந்து சென்றார். மடிசார் ஸ்டைலில் மாடர்னாக அணியப்பட்ட இந்த புடவையில், ஹைஹீல்ஸ் அலங்கரித்த ஒரு பக்க கால் தெரிய அழகாகத் தெரிகிறர். இடுப்பில் சில்வர் ஸ்டிராப் பெல்ட், கனக்கச்சிதப் பொருத்தம். காலர்டு ப்ளவுஸும் ப்ளாக் மெட்டல் காதணியும், புடவைக்கும் சமந்தாவிற்கு அத்தனை பொருத்தம்!

நெசவாளர்களை மதியுங்கள் என்கிற வாசகத்தோடு இந்த ஃபோட்டோவை சமந்தா ஷேர் செய்திருந்தார். கூடவே iwearhandloom ஹாஷ்டேகும் சேர்த்திருந்தார். இப்படி நெசவாளர்களின் கை வண்ணங்களை விரும்புவதையும் அணிவதையுமே சமந்தா ஹை ஃபேஷனாகக் கருதுகிறார். ஸீப்ரா பேட்டர்ன் கொண்ட சாதாரண புடவை இது. கருப்பு வெள்ளை கோடுகள் மட்டுமே கொண்ட எளிமையானப் புடவையை எத்தனை கம்பீரமாக மாற்றி அணிந்திருக்கிறார் பாருங்கள்.
இடுப்பு வரையிலான முழுக்கை பிளவுஸ் புடவையின் அழகை பல மடங்கு கூட்டிவிட்டது. கறுப்புப் பட்டையுடன் சில்வர் வேலைப்பாடுகள் கொண்ட அடர்த்தியான கழுத்தணி ஆடையின் ஓர் அங்கமாகவே மின்னுகிறது.  அந்த டெம்பிள் நகைக்கு இணையான ஒட்டியானத்தை அணிந்து ஸ்டைலாக நிற்கிறார். இதற்கும் கிரெடிட் கோஸ் டூ ப்ரீத்தம் தான்.  பிஹைண்ட் வுட்ஸின் கோல்ட் மெடல் விருது நிகழ்ச்சிக்கு இந்த ஆடையைத் தேர்வு செய்திருந்தார் சமந்தா.
பச்சை நிறமே பச்சை நிறமே

சாதாரண சில்க் காட்டன் புடவையாகஇருந்தாலும், அதோடு ரஃபில்ட் கட்ஸ் கொண்ட பிளவுஸ் அணிந்து எத்தனை வித்தியாசப்படுத்தி இருக்கிறார் பாருங்கள். மிக்ஸ் அண்ட் மேட்ச் ஸ்டைல் இது. இந்த பிளவுஸை, ஜீன்ஸ் அல்லது ஸ்கர்ட்டுடன் மேட்ச் செய்யலாம். ஆனால் அதை தனது பச்சை நிறப் புடவையுடன் மேட்ச் செய்தது சமந்தாவின் ஸ்டைல். இந்த நெட்டட் புடவையை  டிசைன் செய்தவர் சைலேஷ் சிங்கானியா. வித்யாபாலனின் புடவைகள் இவருடைய கைவண்ணத்தில் உருவானவைதான்.  புடவைக்கு ஏற்ற சாண்டிலியர் காதணிகள் சரியான தேர்வு. ஃபிரீ ஹேர் ஸ்டைலும் செம்ம…
பளிச்சென மின்னும் பச்சை மின்னல்

இந்த புடவையில் ஒரு ஸ்பெஷல் இருக்கிறது. அதாவது இது சமந்தா அம்மாவின் புடவை. அம்மாவின் புடவைகளில் சமந்தாவிற்கு மிகவும் பிடித்த ஒன்று இந்த பச்சை நிற புடவை. எனவே அதை தனது ஸ்டைலில், அகன்ற காலர் கொண்ட பிளேர்ட் கட் பிளவுஸோடு மேட்ச் செய்திருக்கிறார். அதற்கு ஏற்ற சிம்பிள் ஸ்லிங் பேக் மற்றும் மினிமல் மேக் அப் சூப்பர்.  தெலங்கானாவின் நடைபெற்ற கைத்தறி நெசவாளர்களுக்கான ஒரு ஃபேஷன் ஷோவிற்கு, சமந்தா இந்த ஸ்டைலில் தான் சென்றார். அப்புறமென்ன? அந்த இடமே பச்சை மின்னலின் மினுமினுப்பில் ஜொலித்தது.

கருப்பு நிறப் புடவைக்கு ஏற்ற போல்ட் மேக்கப் சமந்தாவிற்கு பக்கா பொருத்தமாக இருக்கிறது. அதற்கு ஏற்ற ஆட்டிட்யூடில் தன்னை வெளிப்படுத்தி நிற்கிறார் சமந்தா. இந்த ஆடை AM PM கலெக்‌ஷனாகும். கருப்பு நிறப் புடவைக்கு ஏற்ப சில்வர் கிளிட்டரில்  ஜொலிக்கும் பிளேஸர் அட்டகாசமாக பொருந்தியிருக்கிறது. இந்த ஆடையை மெர்சல் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு அணிந்து சென்றார் சமந்தா. அந்த நிகழ்ச்சியிலும் சமந்தா போல்டாகவே இருந்தார். ஆடைக்கு ஏற்ற சிம்பிளான  வெள்ளைக் கற்கள் பதித்த ஸ்டட் சூப்பர் மேட்ச்.  சைடு வகிடு எடுத்து லோ- போனி அணிந்திருந்தார். ஸ்டைல் பிரீத்தம் ஜுகல்கர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக