செவ்வாய், 15 மே, 2018

தேவதைகள் போன்று காட்சியளித்த ஸ்ரீதேவி புத்திரிகள்! தந்தையை ஆரத்தழுவிய அர்ஜுன்.


தேவதைகள் போன்று காட்சியளித்த ஸ்ரீதேவி புத்திரிகள்! தந்தையை ஆரத்தழுவிய அர்ஜுன்.

இந்தி சினிமாவின் தவிர்க்க முடியாத பிரபலங்கள் என்றால் அது கபூர் குடும்பமாக தான் இருக்கும். அனில் கபூர், அர்ஜுன் கபூர், போனி கபூர், கரீனா கபூர், கரிஷ்மா கபூர், ஜான்வி கபூர் என்று இந்தி சினிமாவை ஆண்டுகொண்டிருக்கும் கபூர் குடும்பத்தில் மீண்டும் ஒரு திருமணத்தால் ஒட்டு மொத்த இந்தி சினிமாவும் சந்தோஷக் கொண்டாட்டத்தில் உள்ளன.
பிரபல நடிகை சோனம் கபூருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்றைய தினம் மஹேந்தி கொண்டாட்டம் நடைபெற்றிருந்தது. தனது பெரிய தாயாரான ஸ்ரீதேவி இறந்து மூன்று மாதம் கூட ஆகாததால் தனது திருமண நிகழ்ச்சியை ஆடம்பரமின்றி எளிமையாக நடாத்தத் திட்டமிட்டுள்ளார்.
அந்த வகையில் நெற்றியை தினம் மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் மஹேந்தி கொண்டாட்டம் குறிப்பிட்ட சில நெருங்கிய சொந்தங்களோடு பெரிய அளவில் ஆடம்பரம் ஏதுமின்றி நடந்து முடிந்துள்ளதுஇவ்வாறிருக்க, நேற்றைய கொண்டாட்டத்துக்கு ஸ்ரீதேவியின் மகள்கள் வெள்ளை உடையில் தேவதைகள் போல வந்திருந்தார்கள்.
முகத்தில் தாயை இழந்த சோகம் தெரிந்தாலும் அவர்களின் அக்கா முறையான சோனம் கபூரின் கொண்டாட்டத்துக்காக மிகவும் அழகாக வெள்ளை நிற சாராரா ஆடையில், ஆபரணங்கள் ஜொலிக்க ஜான்வி, குஷி இருவரும் தேவதைகள் போல வலம்வந்தனர்.
இவர்களின் அப்பாவும், சோனமின் பெரிய தந்தையாருமான போனி கபூர், நிகழ்ச்சிக்கு வந்திருந்த தனது முதல் மனைவியின் மகனான அர்ஜுன் கபூரை ஆரத் தழுவி தமது பாசத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக