பழைய நிலைக்கு திரும்பிய நடிகை லக்ஷ்மி மேனன்! இப்போ எப்படி இருகாங்க பாருங்க!
‘கும்கி’யின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடிக்க லக்ஷ்மி மேனனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ‘கொம்பன்’, ‘குட்டிப்புலி’, ‘மஞ்சப்பை’, ‘ஜிகர்தண்டா’, ‘வேதாளம்’ என ட்ராக் பக்காவாக ஏறிக் கொண்டிருக்க, கூடவே உடல் எடையும் ஏறியது.
‘வேதாளம்’ படத்தில் தங்கை கேரக்டர் ஓரளவுக்கு பேசப்பட்டாலும், ‘மிருதன்’, ‘ரெக்க’ படங்களில் இவரது ட்ராக் சரிந்து போனது. காரணமே உடல் எடை கூடியதுதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதன் பின் படங்கள் சரியாக அமையாத காரணத்தால் மீண்டும் சொந்த ஊரான கேரளாவுக்கே சென்றார் நம்ம லட்சுமி மேனன்.
விளம்பரப் படங்களில் கூட வாய்ப்பை இழந்தவர் இப்போது திடீரென தனது ரீசன்ட் போட்டோ ஒன்றை வெளியீட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மீண்டும் உடல் எடையை குறைத்து. ‘சுந்தரபாண்டியன்’ படத்தில் அறிமுகமானபோது எப்படி இருந்தாரோ அப்படியே மாறியிருக்கிறார் நம்ம லக்ஷ்மி மேனன்.
தற்போது ‘யங் மங் சங்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இனிமேல் தமிழ் சினிமா இயக்குநர்கள் மீண்டும் இவரது வீட்டுக் கதவை தட்டலாம் என கோடம்பாக்கம் பேசிக்கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக