வியாழன், 31 மே, 2018

இரண்டு 'ஆண் நண்பர்களுடன்' அறையை பகிர்ந்து கொண்டேன் ; கலங்கும் நடிகை

இரண்டு 'ஆண் நண்பர்களுடன்' அறையை பகிர்ந்து கொண்டேன் ; கலங்கும் நடிகை


அர்ஜுன் ரெட்டி எனும் தன் முதல் படத்தின் மூலம், தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் மிகப் பிரபலமடைந்த நடிகை ஷாலினி பாண்டே. மெகா ஹிட் ஆன அந்த படத்திற்கு பிறகு இவருக்கு ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகள் வந்து குவிய துவங்கியுள்ளது.

ஏற்கனவே தமிழ் சினிமாவில், G.V பிரகாஸ் உடன் 100% காதல், ஜீவாவுடன் கொரில்லா ஆகிய படங்களில் நடித்து வரும் இவர், சினிமா துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன் தான் அனுபவித்து கஷ்டங்கள் குறித்து அண்மையில் பகிர்ந்திருக்கிறார்.
அதில் சிறு வயது முதலே நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்த தனக்கு, பெற்றோர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை எனவும், தன்னை ஐடி துறையில் வேலை தேட நிர்பந்தித்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும் 'சினிமா துறைக்கு சென்றால், நீ ரோட்டில் பிச்சைதான் எடுப்பாய்' என தன் தந்தை கூறி இருந்ததை நினைவு கூர்ந்த சாலினி பாண்டே, அதன் பிறகு வீட்டை விட்டு வெளியேறி, பட்ட கஷ்டங்கள் குறித்தும் தெரிவித்திருந்தார்.



தனக்கு தோழிகள் இருந்தும் அவர்களுடன் தங்க வாய்ப்பே இல்லாத காரணத்தினால், ஒரு வாடகை வீட்டில் இரு இளைஞர்களோடு தங்கி இருந்ததாக சாலினி தெரிவித்திருந்தார்.


மேலும் அவர்கள் ஒரு போதும் தன்னை தவறான நோக்கத்தில் பார்த்ததில்லை எனவும், மாறாக தன்னை அவர்களது குடும்பத்தில் ஒருத்தியாக நினைத்து பாதுகாத்ததையும் கூறி நெகிழ்ந்தார். அவர்கள் இல்லையென்றால் தான் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது எனவும் அவர்களுக்கு கடமை பட்டிருப்பதாகவும் கலங்கி இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக