20 படத்தில் நடித்த பிறகுதான்! அதுயெல்லாம் நடிகை ஸ்ரேயா ஓபன் டாக்!!
20 படத்தில் நடித்த பிறகுதான்! அதுயெல்லாம் நடிகை ஸ்ரேயா ஓபன் டாக்!!
20 படங்கள் நடித்த பின்புதான் குழந்தைப் பெற்றுக் கொள்வேன் என்று நடிகை ஸ்ரேயா கூறியிருக்கிறார்.
நடிகை ஸ்ரேயா "மழை" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்ததாக ஸ்ரேயா, ரஜினி, விஜய், தனுஷ் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தற்போது தமிழில் அரவிந்த்சாமியுடன் "நரகாசூரன்" படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலர் ஆண்ட்ரீவ் கோச்சேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து தெலுங்கில் "வீரபோக வசந்த ராயலு" மற்றும் ஒரு மல்டி ஹீரோ படத்திலும் நடித்து வருகின்றார்.
இந்நிலையில், நடிகை ஸ்ரேயா சமீபத்தில அளித்த பேட்டியில். திருமணம் செய்து கொண்டபோதும் இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை. இன்னும் 20 படங்களில் நடித்த பிறகே அதைப்பற்றி முடிவு செய்வேன். அந்த வகையில் எனது சினிமா வாழ்க்கைக்கு திருமணம் எந்தவொரு தடையையும் ஏற்படுத்தவில்லை என்றார் ஸ்ரேயா கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக